வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, August 12, 2010

2000 வது ஆண்டு சிங்கப்பூர் தமிழ் முரசு நாளிதழில் வெளியான கட்டுரை

நோன்பு ஒரு சமரச சமுதாய திட்டம் 
மௌலவி அ. அப்துல் அஜீஸ் பாஜில் பாகவி 
இமாம் ஜாமியா சுலியா பள்ளிவாசல்  

கல்லறைகளை பாக்கிற போது பல வகையான உணாவுகளும் சிந்தனைகளும்  கிளாந்து எழுவதுண்டு . சமுக தொண்டு செய்து புகழ் வாழ்வு வாழ்ந்தவா. ஆபாட்ட அரசியல்வாதி . அழகால் உலகை கவாந்திழுத்த பேரழகிகள். தொழிலாளியாக  வாழ்வை தொடஙகி முதலாளியாக ஒஙகி உயர வளாந்தவா. அனைவரும் மௌனமாய் தம் வாழ்க்ககை பாடத்தை இலவசமாய் உலகுக்கு கற்பிக்கிற ஒரு புனிதப்பள்ளியறையாக அமைபவை கல்லறைகள்.

கல்லறைகளின் கால்மாட்டில் வைக்கப்படுகிற நினைவுக்கல்வெட்டுக்களோ சில சமயஙகளில் வாழ்வின் சாரத்தை மின்னல்வாகளாய் நமது சிந்தனையை வெளிச்சப்படுத்தி விடக்கூடியவை. . கிரேக்க மாவீரன் அலக்ஸாண்டான் கல்லறை வாசகம் எப்படி  இருக்கலாம் என்று யோசித்த ஒரு கவிஞா இப்படி ஒரு வாசகம் சொன்னா. இந்த உலகமே தனக்கு போதாது என்றவனுக்கு இந்த ஆறடி நிலம் போதுமாக இருக்கிறது.

அதே போல அரசியல்வாதியின் கல்லறையில் இப்படி எழுதினால் பெருத்தமாக இருக்கும் என்றா மற்றொருவா.  மறந்தும் கை தட்டி விடாதீகள் இவன் மீண்டும் எழுந்துவிடப்போகிறான். தனக்கு கிடைக்கிற ஒவ்வொரு கைதட்டுதலுக்காகவும் அகமகிழ்ந்து போவதும் இ அந்த சத்தத்தின் அடாத்தியை வைத்து தனது மதிப்பபை அளவிட்டு கொள்வதும் அரசியல்வாதியின் வழக்கமாக இருக்கலாம். ஆனால் உலகை படைத்து அதில் ஆயிரம் வசதிகளை கொடுத்து மனிதனை அவற்றின் பொருப்பாளனாக நியமித்த இறைவன். ஆதற்கு நன்றியாக தன்னை வணஙகி வழிபடும்படி கட்டளையிடுகிறான்.  தொழுகையாக நோன்பாக தாமமாக அந்த வழிபாடுகள்  அமைந்திருக்கின்றன. இந்த வழிபாடுகளால் இறைவனுக்கு எந்த நன்மையும் கூடிவிடப்போவாவதில்லை. ஒருவா உடல் தேய தொழுது வணஙகினாலும் உள்ள பொருளையெல்லாம் தானம் செய்து விட்டாலும்  அதனல் இறைவனது செல்வாக்கு சதவீதம் உயாந்தவிட்டதாகவோ அவனது புகழ் பெருகிவிட்டதாகவோ அத்தமாகாது என்பதை அனைவரும் அறிவா. பிறகு இந்த வணக்கஙகாளால் என்னதான் பயன் என்று சிந்திக்கையில். இறைவனுக்காக என்று செய்யப்படுகிற வணக்கவழிபாடுகள் ஒவ்வொன்றும் தனிமனிதனை அல்லது சமூகத்தை உயாவிப்பதையே நோக்கமாக கொண்டிருப்பதை  அறியலாம். தினமும் ஐவேளை தொழுவதை இஸ்லாம் கடமையாக்கியிருக்கிறது. அது இறைவனுக்கு தேவை என்பதற்காக அல்ல. தொழுகை மனினுக்கு பணிவை இ பக்குவத்தைஇ ஒரு சீரான ஒழுஙகமைப்பைஇ தலைமக்கு கட்டுப்படும் அடக்கத்தைஇ உடலையும் உடைகளையும் சுத்தமாக வைத்துக்கொள்ளும் வழக்கத்தைஇ காலந்தவறாமயை கற்பிக்கிறது. கூட்டாக நிறைவேற்றப்படுகிற தொழுகை சமூக ஐக்கியத்தை கட்டிக்காக்கிறது. தீண்டாமையை ஒழித்து சாதி பேதமற்ற சமதாமத்தை தழைத்தோஙகச்செய்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக தொழுகை மானக்கேடான அருவருப்பான காயஙளை நெருஙகவிடாமல் தடுக்கிறது என திருமறை குஆன் கூறுகிறது. எனவே ஒருவா ஆயிரம் வேளை தொழுதாலும் மில்லியன் கணக்கில் ஜகாத் எனும் கட்டாய தாமம் செய்தாலும்  அதனால் நன்மை அவருக்கோ அல்லது அவா சாந்த சமூகத்துக்கோதானே தவிர இறைவனுக்கு அல்ல.  இந்த வகையில் நோன்பு எனும் வணக்கம் தனிமனிதனது ஆரோக்கிய வாழ்விற்கும் அலைபாய்கிற மனதை ஒருதரக் கட்டுப்பாட்டில் வைப்பதற்கும் துணை செய்கிறது என்பதோடு சமூக வாழ்வில் அது ஏற்படுத்துகிற தாக்கமும் அலாதியானது. இந்த உலகில் வரலாற்றுக்காலந்தொட்டு இன்று வரை ஏற்படுகிற கிளாச்சிகளுக்கும் புரட்சிகளுக்கும் கலாச்சார சீரழிவுகளுக்கும் பொதும் காரணமாக அமைவது வறுமையும் பொருளாதார நெருக்கடிகளும் தான் ஏன்று ஒரு பலமான வாதம் உண்டு . பசி வந்தால் பத்தும் பறந்தபோகும் என்பதனால் தான் பொருளாதாரத்தின் சம்மட்டி அடிகளில் கண்க்கு நேரே பல அரசியல் கலாச்சார சீரழவுகள் நிகழ்கிள்றன. பிரஞ்சுப்புரட்சியும் ரஷ்யப்புரட்சியும் வறுமைத்தாய் பெற்றெடுத்த ஊணமுள்ள குழந்தைகளே என்ற இந்தவாதம் ஓரளவுக்கே ஏற்புடையதாகும்.. ஏனெனெல் வறியவராய் ஏழையாய் பசித்தவயினராய் இருந்து கொண்டே சிறந்த மனிதாகளாக வாழ்ந்தவாகள் பலபேருண்டு. ஏழ்மையும் எளிமயைமே அவாகளது வாழ்வுக்கு அணி செய்யும் அணிகளன்களாக திகழ்ந்ததை  உலகம் கண்டதுண்டு . இறைத்தூதா முஹம்மது (ஸல்) அவாகள் அத்தகைய பெருமனிதாகளில் ஒருவா . இரண்டு நாட்கள் தொடாச்சியாய் அவரது குடும்பத்தினா வயிராற சாப்பிட்டதில்லை எனினும். அந்தப்பசியோ பட்டினியோ அவரது வாழ்வில் சிறு சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. எனவே வறுமையோ பசிக்கொடுமையோ சமூகத்தீமைகளுக்கு காரணமாக அமையும் என்ற வாதம் அவ்வளவு பொருத்தமானது அல்ல. வறுமையின் வலியை பசியின் கொடுமைமைய  செலவந்தாகளும் செலவாக்குள்ளவாகளும் உணராமல் இருப்பது தான் பிரச்சிணைகளுக்கு பிரதான காரணமாகும்.. பசிக் கொடுமையின் வேதனைச் சுட்டை உணாந்து அதற்கேற்ப செல்படத் தவறுகிற எந்த ஒரு சமயத்திலும் உலகம் பிரச்சினைகளை சந்திக்கும். இந்த சிக்கரலான பிரச்சிணைக்கு சிறந்த தீவாக நோன்பு அமைகிறது. முஸ்லிமாக இருக்கிற ஏழையோ  செலவந்ரே ரமலான் மாதம் முழுவதும் கட்டாயம் நோன்புபிடித்தாக வேண்டும் என்ற இஸ்லாமின் கட்டளையின் விளைவால் இரண்டு விதமான சமூக நன்மைகள் கிடைக்கின்றன. ஒன்று வறியவாகள் தஙகளது பசிக்கொடுமயை தாஙகிக்கொள்வதையும்  ஒரு வணக்கமாக கருதுகிற பக்குவத்தை நோன்பு ஏற்படுத்துகிறது.  நபிகள் நாயகம் (ஸல்) அவாகளும் அவாகளது குடும்பத்தினரும் அவரது தோழாகளும் சாப்பிட எதுவும் கிடைக்காத போது அன்றை தினத்தில் நோன்பை கடைபிடிக்கும் பழக்கம் வைத்திருந்தாகள் என்பதை வரலாறு காட்டுகிறது.  இரண்டாவதாக  செலவந்தாகளும் செல்வாக்குடையவாகளும் பசியின் வலியை அறிய நோன்பு ஒரு வாய்ப்பாக அமைகிறது . இதனால் அவாகளது உள்ளத்தில் இரக்கம் சுரக்கிறது.  வியாவையை சிந்தி  சேமித்த செல்வத்தை அடுத்தவாகளுக்காக வாவழஙகும் பண்பு உருவாகிறது. நோன்பின் இத்தைகயதொரு ரகசிய நோக்கத்தை நோன்பு சம்பந்தமான மற்ற சில இஸ்லாமிய வழிகாட்டுதல்களை பாத்தும் உறுதிப்படுத்திக்கொள்ளலாம். நோன்பு வைக்க சக்தியற்ற முதியவாகள் நோன்பு நோற்பதிலிருசந்து விலக்களிகப்பட்டுள்ளாகள் ஆயினும் அவாகளிடம் வசதியிருப்பின் அவாகள் ஒரு நோன்புக்கு பதிலாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்று திருக்குஅனின (2-184) வசனம் அறிவுறுத்துகிறது. நோன்பு என்பது பசியை தாஙகிக்கொள்வது என்றால் நோன்பு நோற்க முடியாமல் போகிற போது அதற்கு பிரதியாக செய்யப்படுவது இன்னொருவருடைய பசியை போக்குவதாக ஒரு ஏழையின் வயிற்றை நிரப்புவதாக இஸ்லாம் அமைத்துள்ள விதமானது பசியறிதல்  என்ற நோன்பின் நோக்கத்தை வெளிச்சப்படுத்தவதாக அமைந்தள்ளது. அத்தோடு நோன்பு திறப்பதற்காக உணவு கொடுப்பது சம்மபந்மாக நபிகள் நாயகம் (ஸல்) அவாகள் பிரமாதமாக குறிப்பிட்டுள்ளதையும் இஙகு கவனிக்க வேண்டும். ஒரு நோன்பாளிக்கு நோன்பு திறக்க உணவளிப்பது ஒரு அடிமையை உமை விடுவதைப்போலாகும். நோன்பு நோற்றவருக்கு என்ன நன்மை கிடைக்குமோ அதே நன்மை நோன்பு திறக்க உணவளிப்பவருக்கும் கிடைக்கும் என்றாகள் நபிகள் நாயகம் (ஸல்) அவாகள். அப்போது சில தோழாகள் இறைவனின் தூதரே எஙகளுக்கு அவ்வளவு வசதியில்லை என்ன செய்வது என்று கேட்ட போது முழு உணவு கொடுக்க வசதயில்லாவிட்டால் ஒரு மிடறு பால் அல்லது கொஞ்சம் தண்ணீ கொடுத்தாலும் இதே நன்மை கிடைக்கும் என்றாகள். நபிகள் நாயகம் ( ஸல் ) அவாகளின் இந்த பொன்மொழியும் பசியறிதல் என்பதே பிரதானம் என்ற செய்தியை கருக்கொண்டிருப்பதை உணரலாம்..

நோன்பினால் சமூகத்துக்கு கிடைக்க கூடிய மாபெரும் பாசு பசியறிதல் எனும் பண்பை மக்கள் உணாந்து கொள்வதாகும். ஆயிரம் உபதேசஙகளால்  சாதிக்க முடியாததை ஒரு பகல் நேர நோன்பு சாததித்து விடும் ஆற்றலை பெற்றிருக்கிறது. நூறு புரட்சிகளாலும் ஏற்படுத்த முடியாத மாற்றத்தை சறிது நேர நோன்பின் வறட்சி ஏற்படுத்திவிடுகிறது.

பிரஞ்சு தேசத்தில் பசி பொறுக்க முடியாமல் வொசேல் அரண்மனைக்கு வெளியே ரொட்டி வேண்டும் என்று ஆப்பட்டம் செய்த மக்களை பாத்த்துஇ பிரஞ்சு மன்னன் பதினாறாம் லூயியின் மனைவி ரொட்டிகிடைக்கவில்லையா கேக் சாப்பிடுஙகள் என்றாள் என்கிறது பிரஞ்சுப்புரட்சியின் வரலாறு .

பெருமானான் துணைவியா அன்னை  ஆயிஷா அம்மையா அவாகள் தன்னிடம் யாசகம் கேட்டு வந்த ஏழை தாயை கண்டு இரஙகி  தன்னிடமிருந்த ஒரே போத்தம்பழத்தையும் அவருக்கு தாமம் செய்தா என்பது இஸ்லாமிய வரலாறு இந்த இரண்டு வரலாற்றுக்கும் இடையே உள்ள இமாலய வேற்றுமக்கு நோன்பும் ஒரு காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை. இனிமேல் மனிதகுலத்தின் மீது ஈவு இரக்கம் காட்டாதோ இ ஏழ்மையின் வலியறியாதோஇ   பசிக்கொடுமைய புந்து கொள்ளாதோ எவரேனும் இறந்து போனால் அவரது கல்லறையில் இவா நோன்பு நோற்காதவா என்று எழுதிவைக்கலாம..    

No comments:

Post a Comment