வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, September 30, 2010


فَإِنْ تَوَلَّوْا فَقُلْ حَسْبِي اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ(129)  التوبة
قُلْ حَسْبِي اللَّهُ عَلَيْهِ يَتَوَكَّلُ الْمُتَوَكِّلُونَ(38)  الزمر
الَّذِينَ قَالَ لَهُمْ النَّاسُ إِنَّ النَّاسَ قَدْ جَمَعُوا لَكُمْ فَاخْشَوْهُمْ فَزَادَهُمْ إِيمَانًا وَقَالُوا حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ(173) آل عمران

இந்திய முஸ்லிம்கள் சோதனை மிக்க ஒரு கால கட்ட்த்தை கடந்து கொண்டிருக்கிறார்கள்.
                                                                         
பாபர் பள்ளிவாசல் நிலவிவகாரம் தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்ச் வழங்கிய தீர்ப்பும் முஸ்லிம்களுக்கு ஒரு சோதனையாகவே அமைந்து விட்ட்து

61 நீண்ட ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு தீர்ப்பு முஸ்லிம்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப வரவில்லை.

உண்மையில் அது நீதியின் எதிர்பார்ப்புக்கு ஏற்பவும் வழங்கப் படவில்லை.

(இது காங்கிரஸ் பார்முலாசப்போர்டிங் இந்துத்துவா அட்ஜெஸ்டிங் முஸ்லிம்)

நிலம் யாருக்கு சொந்தம் என்ற விவகாரத்தில் நட்டில் நடைமுறையில் உள்ள சட்டவிதிகளின் படியும் ஆதாரங்களின் படியும் தீர்ப்பு வழங்கப்பட வில்லை.
நம்பிக்கையின் அடிப்ப்டையில் வழங்கப் பட்டுள்ளது.

முஸ்லிம்கள் உட்பட அனைவரும் முதலில்  புரிந்து கொள்ள வேண்டிய விசயம்
·         பள்ளிவாசல் இட்க்கப்பட்ட சூழ்நிலைய்ல் தீர்ப்பு வந்திருக்கிறது.
·         பாரதீய ஜனதா தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக சொல்லப் பட்ட்து போல காட்டிக் கொள்கிறது இந்த மாய்மாலத்திற்கு யாரும் பலியாகிவிடக்கூடாது.
·         இராமர் கோயில் இடிக்கப் பட்ட்து என்பதை கோர்ட் ஒத்துக் கொள்ளவில்லை
·         பள்ளிவாசல் இருந்த்து என்பதை கோர்ட் ஒத்த்துக் கொண்டுள்ளது
·         இந்துக்களுக்கு அவமானம் தேசிய அவமானம் பாரதீய ஜனதாவின் கொட்டங்கள் ஏற்கப்படவில்லை. இதைச் சொல்லித்தானே நாட்டிலுள்ள இந்துக்களை அக்கட்சி தூண்டிவிட்ட்து.
·         மூன்றில் ஒரு பங்கு முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டிருப்பது இதிலுள்ள அவர்களுக்கான உரிமையை நிலை நாட்டியுள்ளது.

நீதிபதிகள் ஒரு தீர்ப்புச் சொல்லாமக் ஒரு சமரச தீர்வை எட்ட முயற்சி செய்திருக்கிறார்கள்.
ராஜீவ் தவன் உள்ளிட்ட சுப்ரீம் கோர்டின் நீதிபதிகள் பலரும் தீர்ப்பே அல்ல என்றனர்
 
நீதிபதி கான் வரலாற்று ஆதாரங்களின் அடிப்ப்டையில் ஒரு தீர்வை எட்ட முய்ற்சி செய்துள்ளார். ஆனால் உறுதியாக செயல்படவில்லை. அவரும் ஒரு சமரசம் காணும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.
நீதிபதி ஷர்மா முழுக்க இந்துக்களின் சார்பாக தீர்ப்பளித்துள்ளார்.
நீதிபதி அகர்வால இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக தடுமாறி உள்ளார்.
இராமர் இங்குதான்  பிறந்தார் என்று இந்துக்கள் நம்புவதாகவும்  அதை ஏற்பதாகவும் நீதிபதி சர்மா கூறியுள்ளார். இதை நீதிபதி அகர்வாலும் ஏற்றுள்ளார்.

ஆகவே தீர்ப்பு குழப்பமானது . நீதிமன்றம் பஞ்சாயத்து செய்துள்ளது என தினமணி தினகரன் உள்ளிட்ட பத்ரிகைகள் கூறியுள்ளன.

 முஸ்லிம்களின் மனோ நிலை  :  
 இரண்டுவிதமான  மனோநிலையில் இருக்கிறார்கள்

ஒரு சாரார் : தீர்ப்பை ஏற்க முடியாது இது அநீதி, காரணம்
·         500 ஆண்டுகளாக தொழுகை நடந்த இடம் –  பள்ளிவாசல்
·         சிலை முன்னர் அங்கு இருக்க வில்லை 
·         1940 ல்  சிலை இரவோடிராவக வைக்கப் பட்டிருக்கிறது.
நீதிபதிகள் ஒத்துக் கொண்ட உண்மை இது
·         இரவோடிரவாக சிலை வைப்ப்வர்களுக்கும் பள்ளிவாசல்களை சொந்தம் கொண்டாட நினைப்பவர்களும் முஸ்லிம்களை அச்சுறுத்த நினைக்கிற சக்திகளுக்கும் இது வாசலை திற்ந்து விட்டுவிடும்

The verdict could be viewed  as partially rewarding those who placed the idol overnight under the center part of  moque.       ஹிண்டு   

இன்னொரு சாரார்

நீண்ட காலமாக இழுத்துச் செல்லப் ப்டும் வழக்கு எப்படியாவ்து ஒரு முடிவுக்கு வரட்டும்
இனிமேல் இந்தியாவில் ஒரு புதிய சூழ்நிலை பிறக்கட்டும் என்று ஆசைப் படுகிற ஒரு நிலை

இந்தியா என்ற இந்தப் பரந்த தேசம் ஒரு 2.7 ஏக்கர் நிலப் பிரச்சினையில் இவ்வளவு இழப்புகளுக்கு ஆளாக வேண்டுமா?
நமக்கும் ஒரு இடம் கிடைத்து இருக்கிறது தானே

இரண்டாவது மனோ நிலையே அதிகம் காணப்படுகிறது, ஆனால்

சரியான நிலைப்பாடு எது?


முஸ்லிம்கள் எந்த நிலைப்பாட்டை மேற்கொள்வது என்பதை தீர்மானிப்பது இந்துப் பெருமக்கள் எடுக்கும் தீர்மானத்தை பொறுத்தே அமையும். அரசின் நிலைப்பாட்டை பொறுத்தும் இது அமையும்.

மாவோ சொன்னது போல : நமது ஆயுதங்களை நாம் தீர்மாணிப்பதில்லை எதிரிகள் தீர்மாணிக்கிறார்கள்  

முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலங்களுக்கான் பாதுகாப்பு உறுதி செய்யப்படுமானால்
வழிபாட்டுத் தலம் விசயத்தில் தொல்லைகள் நிறுத்தப் படுமானால்
உரிய உரிமைகள் வழங்கப் படுமெனில் நீதிமன்றத்தின் நல்லெண்ணத்திற்கு அவர்கள் உடன் படுவார்கள் இல்லை எனில் அவர்கள் போராடுவார்கள் அது இறுதி வரை தொடரும்.

1 comment:

  1. dear hajrath,insha allah it is very usu full for all ulamas best of luck&donot stop this plz continive by urs abdul alim J.M.E.C tutycorin

    ReplyDelete