வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, March 12, 2026

குர்ஆனுடைய வழி காட்டுதல்களுக்கு செவி சாயுங்கள்

وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنْصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ}

திருக்குர்ஆன் மகத்தான பல சாதனைகளுக்கு சொந்தமானது.

குர் ஆன் மிகப் பெரிய அரசை உருவாக்கியது.

கீபீ 630 க்குள் முழு அரபு ராஜ்ஜியமும் அதன் கைவசமானது.

கலீபாக்கள் காலத்தில் இஸ்லாமிய அரசு 64 இலட்சம் கீமீகளுக்கு பரவி இருந்த்து.

638 ல் பாரசீகம்

642 ல்எகிப்து

646 ல் லிபியா

656 ல் துனீசிய

662 ல் மொரொடானியா என தொடர்ந்த வெற்றிகள்

670 ல் அட்லான்டிக் சமுத்திரத்தின் கரையை அடைந்த போது ஒரு நிறைவை கண்டது.

அதன் பிறகு இன்னொரு திசையில் அதன் பயணம் தொடங்கியது. முற்றிலும் புதிய நிலப்பரப்புகளான உஸ்பெகிஸ்தான் தஜ்கிஸ்தான் கிர்கிஸ்தான் துருக்மெனிஸ்தான் சுமார் 68 இலட்சம் கீமி நிலப்பரப்பில் அதன் அதிகாரம் படர்ந்தது.

இன்று கிருத்துவ நாடுகள் அதிகமாக இருக்கலாம். அவை பைபிளினால் உருவானவை என்று சொல்ல முடியாது. அல்லது பைபிளை சார்ந்து நிற்பவை என்று சொல்ல முடியாது.

ஆனால் திருக்குர் ஆனை சார்ந்து நின்று அன்றும் நாடுகள் நிலை பெற்றன. இன்றும் நாடுகள் நிலை பெற்று வருகின்றன.   

உலகில் மக்கள் கைகளில் தவழும் வேறு எந்த வேத நூலுக்கும் இந்த சிறப்பு கிடையாது. 

அது வெற்றி கொண்ட பல நாடுகளில் மக்கள் தமது தாய் மொழியை விட்டுக் கொடுத்து குர் ஆனின் மொழியை தாய் மொழியாக ஏற்றுக் கொண்டனர்.

இராக்கின் தாய் மொழி அரபியல்ல; எகிப்தின் தாய் மொழி அரபியல்ல, மொரோக்கோவின் தாய் மொழி அரபியல்ல ஆனால் இன்று அவை அரபு நாடுகளாக இருக்கின்றன என்றால் அந்த பெருமை முழுவதும் திருக்குர் ஆனுக்கே சாரும்.

இன்று திருக்குர்ஆனை முழுமையாக ஏற்றுக் கொண்ட 220 கோடி மக்கள் இருக்கிறார்கள். உலக மக்கள் தொகை 800 என்றால் நாலில் ஒருவர் முஸ்லிமாக இருக்கிறார்.

புதிய நிலப்பகுதிகளிலும் திருக்குர் ஆனின் செல்வாக்கு வேகமாக வளர்ந்து வருகிறது. அமெரிக்காவில் 60 இலட்சம் முஸ்லிம்கள் இருக்கிறார்கள்.

அங்குள்ள 11 மாநிலங்களில் மூஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். பல நகரங்களிலும் மேயர்களாக மூஸ்லிம்கள் இருக்கிறார்கள்.

இலண்டன் மாநகர மேயராக ஒரு முஸ்லிம் இருக்கிறார்.

திருக்குர் ஆனின் அரசியல் செல்வாக்கிற்கு இன்னும் ஏராளமான சான்றுகள் உண்டு.

இத்தகைய பெருமை மிகு குர் ஆனை அல்லாஹ் இறக்கிய மாதம் இந்த திரு ரமலான் மாதம்.

இந்த வேத்த்தை நான் இறக்கினேன் என்று தன்னோடு இதை சேர்த்து அல்லாஹ் கூறுகிறான்.

குர் ஆன் என்று கூறாமல் இதை என்று கூறியது அதன் மதிப்பை கூட்டும் ஒரு ஏற்பாடாகும்.

இந்த வேதம் இறங்கிய நேரத்தை அல்லாஹ் ஆயிரம் ஆண்டுகளை விட பெருமைக்குரியதாக அறிவிக்கிறான்.

இத்தகை மூன்று நிலை பெருமைக்குரிய வேதத்தை நாம் எந்த சூழ்நிலையிலும் முதல் நிலையில் வைக்க கடமைப் பட்டிருக்கிறோம்.

திருக்குர் ஆன் மிக உன்னதமான வாழ்வியலுக்கு வழிகாட்டுகிறது.

நீதியும் கருணையும் அதன் பிரமாதமான வழிகாட்டுதல்களாகும்.

நீதி செய்யுங்கள் அதுவே இறையச்சத்தின் மிக நெருக்கமான வழி என்று கூறுகிறது.

இஸ்லாமிய அரசுகள் திருக்குர் ஆன் கற்றுத்தரும்  நீதியின் அடிப்படையிலேயே செயல்பட்டன.

சிரியாவின் மக்கள் அங்கிருந்து அபூஉபைதா ரலி அவர்கள் வெளியேறிய போது கண்ணீரோடு வழி அனுப்பி வைத்தாரக்ள் என்று வரலாறு சொல்கிறது.

முஹம்மது பின் காஸீம் சிந்து பகுதியில் இஸ்லாமிய அரசை நிறுவினார்.

அவர் மத்திய  அரசுக்கு திரும்பி சென்ற போது சிந்து பகுதி மக்கள் அழுதார்கள் அவருடைய உருவத்தை வரைந்து வைத்துக் கொண்டார்கள் என்கிறது வரலாறு,

பல நாடுகளிலும் இருந்த மக்கள் நீதி தவழும் ஒரு ஆட்சியை விரும்பியே தங்களது நாடுகளுக்கு இஸ்லாமிய அரசர்களை தங்களாது நாட்டுக்கு படை எடுத்து வருமாறு கோரிக்கை வைத்தார்கள்

அவுரங்கசீப் இந்தியாவை பரந்து பட்ட அளவில் காபூலில் இருந்து செங்கல்பட்டு வரை 50 வருடம் ஆட்சி செய்தார். அவர் கடை பிடித்த நீதிதான் அரைநூற்றாண்டுகளாக அவரது ஆதிக்கம் இங்கு நிலவ காரணமாக இருந்தது.

முஸ்லிம்களுடைய நீதி உணர்வு தான இப்போதைய பாலஸ்தீனில் யூதர்கள் குடியேற காரணமாக அமைந்த்து.

1919 முதல் உலக யுத்தம் முடிந்த போது பாலஸ்தீனில் 32 ஆயிரம் யூதர்கள் மட்டுமே இருந்தனர்.

அதன் பிறகு ஐரோப்பாவிலிருந்த யூதர்கள் கொத்துக் கொத்தால கொல்லப் பட்டனர். நாடுகளை விரட்டு விரட்டப்பட்டனர்.

அப்போது துருக்கிய மன்னர்கள் உதவி கேட்ட அவர்களை ஆதரித்து பாலஸ்தீனில் குடியேற அனுமதித்தார்.

இரண்டாம் உலக யுத்தம் நடை பெற்ற போது அதாவது சுமார் 20 வருடங்களில் பாலஸ்தீனில் இருந்த யூதரக்ளின் எண்ணிக்கை 1  இலட்சத்து 62 ஆயிரமாக உயர்ந்தது.

முஸ்லிம் பேர்ரசள் வெளிப்படுத்திய நீதி அது.

ஹழ்ரத் உமர் ரலி அவரகள் காலத்தில் பால்ஸதீனை முஸ்லிம்கள் வெற்றீ கொண்ட போது அதை உமர் ரலி அவர்களிடம் ஒப்படைத்த கிருத்துவர்கள் யூதர்களுக்கு பாலஸ்தீனில் இடம் அளிக்க வேண்டாம் என்று கேடுக் கொண்டனர்.

ஆனால் நம்மோடு உடன்பாடுடையவர்களுக்கு நாம் பாதுகாப்பளிக்க வேன்Dஉம் என்று நபிகள் நாயம (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த நீதியின் படி தான் அவர்களை வெளியேற்ற முடியாது என்றார் உமர் ரலி அவர்கள்

கடசியில் கிருத்துவர்கள் வசித்தும் தொருக்களில் யூதர்கள் வசிக்க அனுமதிக்கப் பட மாட்டார்கள் என்று உமர் ரலி எழுதிக் கொடுத்தார்கள்.

அந்த ஒப்பந்தம் தான்  நீண்ட காலம் பாலஸ்தீனில் யூதர்கள் மரியாதையோடு வாழ காரணமாக அமைந்த்து.

திருக்குர் ஆன் கற்பிதத நீதியின் காரண்மாகத்தான் இன்றளவும் பாலஸ்தீனில் குறீப்பாக ஜெரூசலம் நகரில் கிருத்துவ தேவாலயங்கள் பலதும் இப்போதும் இருக்கின்றன.

இல்லை எனில் அவை என்றோ அடையாளமில்லாமல் செய்யப் பட்டிருக்கும்.

பிற சமய மக்களோடு நீதி பாராட்டும் படி கற்றுக் கொடுக்கிற திருக்குர் ஆன் அதே நேரத்தில் அவர்களோடும் மிகவும் அணுக்கமாகி விட வேண்டாம் என்றும் எச்சரிக்கிறது.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا الْيَهُودَ وَالنَّصَارَىٰ أَوْلِيَاءَ ۘ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ ۚ وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ فَإِنَّهُ مِنْهُمْ ۗ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ (51فَتَرَى الَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ يُسَارِعُونَ فِيهِمْ يَقُولُونَ نَخْشَىٰ أَن تُصِيبَنَا دَائِرَةٌ ۚ فَعَسَى اللَّهُ أَن يَأْتِيَ بِالْفَتْحِ أَوْ أَمْرٍ مِّنْ عِندِهِ فَيُصْبِحُوا عَلَىٰ مَا أَسَرُّوا فِي أَنفُسِهِمْ نَادِمِينَ (52)

 

என்ன தெளிவான வழிகாட்டுதல்கள் !

 

வலி என்றால் நமது முடிவுகளை தீர்மாணிக்கிற அளவில் இருக்கிற நட்பாளர் என்று பொருள்.

 

இரண்டாம் உலக யுத்த்திற்கு பிறகு அரபு நாடுகளில் அரபு என்ற எழுச்சி ஏற்பட்த் தொடங்கிய போது அவர்கள் இஸ்லாம் என்கிற சகோதரத்துவ சிந்தனையை கைவிட்டார்கள்.

 

யூத கிருத்துவர்களோடு கை கோர்ப்பது தான் அவர்களுடைய பாதுகாப்பிற்கும் வளர்ச்சிக்கும் ஏற்றது என்று கருதினார்கள்.

 

அதற்காக அமெரிக்க இஸ்ரேலோடு வெளிப்படையாகவும் ரகசியமாகவும் கூட்டணி அமைத்துக் கொண்டார்கள். குறிப்பாக ஐக்கிய அமீரக நாடு யூதர்களின் காசு பணத்திற்காக தங்களது நாட்டின் எதையும் விட்டுக் கொடுக்க தயாரானார்கள்.

 

முஹம்மது நபி (ஸல் அவர்களோ தம் வாழ்நாளில் ஒரு நாளைக்கு அதிகமாக  முஸ்ரிக்களின் ஆதரவில் வாழ விரும்பியதில்லை.

 

தாயிபில் இருந்து திரும்பிய போது முத் இம் பின் அதீ என்பவருடைய பாதுகாப்பி ல் மக்காவிற்குள் நுழைந்தார்கள். சூழ் நிலை மக்காவின் குடிமகனான முஹம்மது ரஸீல் அவர்களுக்கே அவ்வளவு கடுமையானதாக இருந்த்து.

 

ஆனால் உயிருக்கு நேரடியாக ஆபத்து சூழ்ந்திருந்த நிலையிலும் ஒரு நாளைக்கு மேல் அந்த பாதுகாப்பு தனக்கு தேவை இல்லை உதறித்தள்ளினார்கள் பெருமானார் (ஸ்ல)


பாரசீக படைத்தளபதி ஹுர்முஸான் கைது செய்யப்பட்டு உமர் ரலி அவரகளிடம் கொண்டு வரப்பட்ட போது அவரிடம் உமர் ரலி அவரக்ள் பாரசீகத்தை பற்றி விவரிக்குமாறு கேட்டுக் கொண்டார்கள். அவர் சொன்னார். அது ஒரு பறவை போல இஸ்பஹான் அதன் தலை என்றால் ஈரானும் அஜர்பைனும் அதன் இறகுகள் என்று கூறியதோடு நில்லாமல் நீங்கள் அதன் இறக்கைகளை தாக்கினால் அது பலவீனமாகிவிடும் என்றார். சட்டென்று உமர் ரலி அவர்கள் சொன்னர்  நீங்கள் சொன்ன படி நான் செய்ய மாட்டேன் நான் அதன் தலையை தாக்கி கொல்வேன் அதன் இறகுகள் தானே பயனற்றவை ஆகிவிடும் என்றார்.

 

இவ்வாறு சொல்லக்காரணம் அவர்கள் எப்போதும் தங்களுக்கு விசுவாசமாக இருப்பார்களே தவிர இஸ்லாமிற்கு உதவிகரமாக இருக்க மட்டார்கள் என்பதே ஆகும்.

 

இரண்டாம் உலக யுத்த்த்தின் பின் அமெரிக்காவும் பிரிட்டனும் இணைந்து யூதர்களுக்கான தேசத்தை பாலஸ்தீனில் உருவாக்கினர்.

காரணம் இந்த யூதர்கள் தமது நாட்டுக்கு ஒரு தொல்லையாகி விடக் கூடாது என்பதற்காக.

 

அப்போது ரஷ்யா உக்ரைனின் ஒரு பகுதியை யூதர்களுக்காக ஒதுக்கியது. அப்படி வந்து உக்ரைனுக்குள் குடியேறிவர் தான் இப்போதைய உக்ரைனிய அதிபர் ஜெலன்ஸ்கீ

 

யூதரான அவர் இன்று அடைக்கலம் கொடுத்த ரஷ்யாவிற்கே எதிராக இருப்பதை பார்க்கிறோம்.

 

அர்ஜெண்டீனா 50 ஆயிரம் ஏக்கர் நிலத்தை யூதர்களுக்காக கொடுப்பதாக கூறியது.

ஆனால் அமெரிக்காவும் பிரிட்டனும் முஸ்லிம்களின் தொண்டை குழிக்குள் ஒரு ஆணியை சொருகி வைக்க வேண்டும் என்று நினைத்தனர்.

அதனாலேயே பாலஸ்தீனில் ஒரு பகுதியை இஸ்ரேல் என்று அறிவித்தனர்.

இந்த அமெரிக்க சதியை தெரிந்திருந்தும் கூட அரபு நாடுகள் அமெரிக்காவை நம்பின. காசு பணத்தை கொட்டிக் கொடுத்து தங்களது பாதுகாவர்களாக ஆக்கினர்.  

அப்படி கொடுக்க பட்ட ஆதரவு இன்று உலகிற்கு எவ்வளவு பாரதூரமான முடிவை எற்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை உலகம் கண்டு வருகிறது.

திட்டமிட்டு எந்த நியாயமும் இன்றி இஸ்ரேல் தொடங்கிய ஒரு யுத்த்த்தை அமெரிக்கா ஆதரித்தால் இன்று உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் துயரை அனுபவித்து வருகிறார்கள்.

அமெரிக்கவை தங்களுடைய நெருங்கிய கூட்டாளியாக பாதுகாப்பு அரணாக கருதி சவூதி கத்தார் குவைத் அரபு அமீரகம் போன்ற நாடுகள் மிகப் பெரிய ஆபத்தை சந்தித்து வருகின்றன.

பத்று யுத்த்த்தில் இப்லீஸ் காபிர்களை கைவிட்ட்து போல அமெரிக்கா இந்த யுத்த்தில் அவர்களை கைவிட்டு விட்டு விட்டது

அரபுகள் காசு கொடுத்தார்கள். அமெரிக்க அந்த காசை இஸ்ரேலுக்காகவும் அதனை பாதுகாப்பதற்காகவும் செல்விட்டது.

பாதுகாப்பிற்காக என்று காசு கொடுத்த அரபுகளை நட்டாற்றில் விட்டு விட்டது.

 .

அல்லாஹ் தெளிவாக சொல்கிறான். ஒரு போதும் உங்களுடைய நலனை அவர்கள் சிந்திக்க மட்டார்கள். மத ரீதியாக உங்களுக்கு எதிராகத்தான் சிந்திப்பார்கள். செயல்படுவார்கள். இப்போதைய அமெரிக்க அதிபர் தனது சொல்லாலும் செயலாலும் அதை தினந்தோறும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்

சர்வதே அரசியல் விவகாரம் என்று மட்டுமல்ல முஸ்லிம்களின் ஒவ்வொரு வாழ்நாள் பிரச்சனைகளிலும் திருக்குர் ஆன் மிக தெளிவான உன்னதமான வழிகாட்டுதல்களை கொடுத்துக் கொண்டே இருக்கிறது.

உங்களது எந்த வெற்றிக்கும் அல்லாஹ்வே காரணம் என்று நம்புங்கள்

நன்மையான காரியங்களில் நீங்கள் செய்தவை நீங்கள் செய்தவை அல்ல அல்லா செய்ய வைத்தவை

وما رميت إذ رميت ولكن الله رمى "

எறிவது மட்டும் ம்னிதனால் முடிந்த  செயல். அதை உரிய இட்த்திற்கு கொண்டு சேர்ப்பது அல்லாஹ்வே

وقيل : معنى الآية وما بلغت إذ رميت ولكن الله بلغ

இந்த ஆயத்தின் பொருள் நீங்கள் எறிந்த்தை நானே கொண்டு சேர்த்தேன் என்பதாகும்.

வணக்க வழிபாடுகளில் எச்சரிக்கையாக இருங்கள். அலட்சியமாக நடந்து கொள்ளாதீர்கள்

எச்சரிக்கைகள் மிக ஜாக்கிரைதையாக

     فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون

நல்ல வேளை அல்லாஅஹ் தொழுகையில் அலட்சியமாக இருப்பவர்கள் என்று சொல்லவில்லை . தொழுகை பற்றி அலட்சியமாக இருப்பவர்கள் என்று சொன்னான்.

وقال عطاء بن دينار: والحمد لله الذي قال: عَنْ صَلاتِهِمْ سَاهُونَ. ولم يقل: في صلاتهم ساهون

சராசரியானதை விட சிறப்பானதற்கு ஆசைப்படுங்கள் என்று குர் ஆன் கூறுகிறது .!

 

وَاجْعَل لِّي لِسَانَ صِدْقٍ فِي الْآخِرِينَ (84وَاجْعَلْنِي مِن وَرَثَةِ جَنَّةِ النَّعِيمِ (85

 

وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا

அல்லாஹ் உங்களுக்கு கொடூத்த அருட்கொடைகளுக்கு நன்றியோடு நடந்து கொள்ளுங்கள் என்று குர் ஆன் கூறுகிறது.

وَاشْكُرُوا لَهُ ۖ إِلَيْهِ تُرْجَعُونَ (17

 

அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த சிறந்த நேரம் இரவு நேரம். உலகம் உற்ங்கிக் கொண்டிருக்கிற அந்த நேரத்தில் அவனுக்கு நன்றி செலுத்தும் காரியங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

 

உலகின் பெரும் அரசர் சுலைமான நபிக்கு அவரது தாயார் அறிவுரை கூறுவார்

 

 أن أم سليمان بن داود قالت لابنها: "يا بني إياك وكثرة النوم بالليل، فإن كثرة النوم بالليل تترك العبد فقيراً يوم القيامة

அல்லாஹ் நமக்கு வழங்கிய பேரர்புதம் ரம்லான் மாதம் அதை அல்லாஹ்வுக்கு நன்றி சொல்ல பயன்படுத்திக் கொள்வோம்.

திருக்குர் ஆனிய வழிகாட்டுதலுக்கு  செவிசாய்ப்போம் என்று தீர்மாணிப்போம்.

நிச்சயம் நாம் வெற்றிபெறுவோம்

அல்லாஹ் தவ்பீக் செய்வானாக

No comments:

Post a Comment