வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, October 07, 2010


நமது நாட்டில் காமென்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன. 

காமென்வெல்த் போட்டி என்பது பிரிட்டிஷ் கார்ர்களிடம் அடிமையாக இருந்த நாடுகள் ஒன்று சேர்ந்து தங்களுக்குள் நட்த்திக் கொள்ளும் போட்டியாகும்.

இந்தப் போட்டியை பிரிட்டிஷ் ராணீதான் தொடங்கி வைப்பார். இந்த முறை போட்டிக்கான ஏற்பாடுகளில் காணப்பட்ட குளறுபடிகள் காரணமாக அவர் வரவில்லை. பதிலாக இளவரசர் சார்லஸ் கலந்து கொண்டார்

இது 19 வது போட்டி  ,
71 நாடுகள் ,
17 வகையான விளையாட்டுக்கள்.
இது தான் இதுவரை நடை பெற்ற போட்டிகளிலேயா அதிக செலவு கொண்டதாகும் ( 300 பில்லியன்) 3000 ஆயிரம் கோடி ரூபாய் செல்வு (பிஸினெஸ் டுடே)

இந்திய வீர்ர் வீராங்கணைகள் பதக்கங்களை குவித்து வ்ருகின்றனர்.

கிரிக்கெட் என்ற விளையாட்டில் ஒரு ஐம்பது அடித்தால் கிடைக்கிற மரியாதை தங்கப் பதக்கம் வென்ற வீருக்கு இல்லை

காமென்வெல்தில் தங்கம் வென்ற எத்தனை பேரின் போட்டோக்கள் பத்ரிகையில் பார்த்தீர்கள்?

விளையாட்டில் சீனாவு இந்தியாவும் உள்ள வித்தியாசம்  
ஹிந்து பதிரிகையில் ஒரு கட்டுரை ஆகஸ்ட் 8 ம் தேதி

பிரம்மாண்டமான நிகழ்ச்சிகள் விளையாட்டுத்திறமையை பெருக்க உதவும் என்று சொல்லப் படுகிறது. இது எவ்வளவு தூரம் உண்மை? என்பதை இனிவரும் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

இதுவரை மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை. 

சீனா இன்றைக்கு விளையாட்டு உலகில் முதலிட்த்தில் இருக்கிறது,

விளையாட்டுப் போட்டிகள் நட்த்துவதில் இந்திய அரசியல்வாதிகளுக்கு உள்ள ஆர்வம் விளையாடு வீர்ர்களை உருவாக்குவதில் இல்லை.

சீனா தனது திறமைகளை கட்டமைத்துக் கொண்ட பிறகு போட்டிகளை நட்த்த தொடங்கியது. அதற்கு பிற அது பின் தங்கவே இல்லை,

முதல் ஆசிய விளையாட்டுப் போட்டியை இந்தியா 1951ல்  நட்த்தியது.  அதில் சீனா பங்கேற்க வில்லை. இரண்டாவது போட்டியில் 1954 6 பதக்கங்களை பெற்று இந்தியாவுக்கு கீழே இருந்த்து.

போட்டியை நட்த்துவதில் முந்தி இருந்த இந்தியா பதக்கப் பட்டியலில் முந்த்த்தவறியது. சைனா பின் தங்கவே இல்லை.
74 ல்  தெஹ்ரானில் சைனாவுக்கு 3 வது இடம்
1978 ல் பேங்காக்கில் இரண்டாவது இடம்
1982 ல் டெல்லியில் முதலிடம் 

சைனா 1990 நட்த்தியது.

சீனாவின் வெற்றிக்கு காரணம்

எதிலும் முன்னிலை பெற அதன் துடிப்பு
1995 ல் சீனாவில் Physical Health Law போடப் பட்ட்து.
7 முதல் 70 வயதுடைய்வர்களில் 60 சதவீதம் பேர், மாணவர்களில் 95 சதவீதம் பேர் தேசிய உடற்திறன் தகுத்யை எட்டியுள்ளனர்.
6 லட்சம் ஸ்டேடியங்கள்
2 லட்சம் டிரைனிங்க் செண்டர்கள்
1995 அனைத்து மக்களுக்கும் விளையாட்டை கட்டாயமாக்கியது.

இதனால் சீனா இன்றைக்கு விளையாட்டு உலகில் முதலிட்த்தில் இருக்கிறது,
  
நம்முடைய நாட்டில் 12 லட்சம் பள்ளிக் கூடங்களுக்கு மைதான்ங்கள் இல்லை,


சீனா தேர்தெடுத்த விளையாடுக்களில் - குறிப்பாக தங்களுடைய பாரம்பரிய விளையாட்டுக்களில் - மட்டுமே அதிக அக்கறை செலுத்துகிறது.


இந்திய விளையாடுத்த்துறை உழலில் திழைக்கிறது.
·         கிரிக்கெட்டில் ஊழ்லோ ஊழல்
·         மகளிர் ஹாக்கியில் வீராங்கனைகளுக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்த்தாக சமீபத்தில் அதன் கோட்ச் வெளியேற்றப் பட்டார்.
·         பலரையும் பல வித்த்திலும் திருப்திப் படுத்தினால் தான் அணியில் இடம் பெற முடியும் என்ற கேவலமான நிலமை அப்பட்டமாக நிலவுகிறது.
·         போதுமான பயிற்சியாளர்கள் மைதான்ங்கள் பயிற்சிக்கான சாதனக்கள் ஊக்குவிப்புகள் இல்லை.
·         இந்தியாவுக்கு தங்கம் வென்ற பி,டி உஷாவுக்கு ஒரு நிகழ்சியின் போது தனியான அறை ஒதுக்கப் படவில்லை.

No comments:

Post a Comment