ஹஜ் மீண்டும் மீண்டும்
وإذ جعلنا البيت مثابة للناس
ஒருவரது ஹஜ் அங்கீகரிக்கப் பட்ட்து என்பதற்கான அடையாளம் மீண்டும் ஹஜ்ஜுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை அவருக்குள் எழுவதாகும்.
தமிழகத்தில் ஓரு சிலர் இரண்டாவது தடைவயாக அல்லது அதற்கு மேற்பட்டு ஹஜ்ஜுக்கு செல்வதை குறை கூறிவருகினறனர். அதிகப்பிரசங்கித் தனமும் முட்டாள்தனமும் சேருகிற போது சிலருக்கு இத்தகைய அசட்டுத்துணிச்சல் பிறக்கும்.
அத்தைக்கு மீசை முளைத்த்து போல அவர்களுக்குள் தீடீரென்று முளைத்த்‘சமூக அக்கறை”யின் காரணமாக இவ்வாறு அதிமேதாவித்தனமாக பேசுகிறார்கள்.
இந்தப் பிரச்சாரம் இஸ்லாத்திற்கு எதிரானதாகும்.
கலவிக்காக அல்லது மற்ற சமூகப் பணிகளாக பாடுபடுவதாக பெயர் சொல்லிக் கொண்டு இஸ்லாமிய விழிமியங்களுக்கு எதிராக இவ்வாறு பிரச்சாரம் செய்வது இஸ்லாத்திற்கு எதிரான ஒரு பகிரங்க கலகமாகவே கருதப்பட வேண்டும்.
ஒரு உம்ராவைத் தொடர்ந்து மற்றொரு உம்ரா செய்வதையும். ஹஜ்ஜுக்கு மேல் ஹஜ்ஜுச் செல்வதும். மக்கா மதீனாவை அடிக்கடி தரிசிப்பதும் ஈமானிய இயல்பு என்பதே இஸ்லாமின் அறிவுறுத்தலாகும்.
روى البخاري ومسلم عن أبي هريرة - رضي الله عنه - أن النبي - صلى الله عليه وسلم - قال: ((العمرة إلى العمرة كفارة لما بينهما، والحج المبرور ليس له جزاء إلا الجنة))
عن عبد الله بن مسعود قال قال رسول الله صلى اللهم عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكير خبث الحديد والذهب والفضة وليس للحجة المبرورة ثواب إلا الجنة
கஃபாவை மக்கள் திரும்பத் திரும்ப வந்து தரிசிக்கும் தலமாக ஆக்கியிருப்பதாக அல்லாஹ் கூறுகிறான். :
وإذ جعلنا البيت مثابة للناس
عن ابن عباس قوله تعالى "وإذ جعلنا البيت مثابة للناس" يقول لا يقضون منه وطرا يأتونه ثم يرجعون إلى أهليهم ثم يعودون إليه:
மக்கள் மீண்டும் மீண்டும் அங்கு வர்வேடும் என்பது இபுறாகீம் நபியின் துஆ வாகும்
இந்த வசனத்தின் கீழ் இப்னு கஸீர் :
ومضمون ما فسر به هؤلاء الأئمة هذه الآية أن الله تعالى يذكر شرف البيت وما جعله موصوفا به شرعا وقدرا من كونه مثابه للناس أي جعله محلا تشتاق إليه الأرواح وتحن إليه ولا تقضي منه وطرا ولو ترددت إليه كل عام استجابة من اللّه تعالى لدعاء خليله إبراهيم عليه السلام في قوله فاجعل أفئدة من الناس تهوي إليهم
நபிகள் நாய்கம் (ஸல்) அவார்கள் ஒரு ஹஜ்ஜு மட்டுமே செய்தார்கள்.
· காரணம். அதற்குப்பிறகு அவர்கள் உயிர்வாழவில்லை.
· ஹஜ் - ஹிஜ்ரி 9 ஆண்டுதான் அமுலுக்கு வந்த்து. அப்போது காபிர்களும் ஹஜ்ஜுக்கு வந்தார்கள். அந்த வருட்த்தில் இனி மேல் காபிர்கள் வரக்கூடாது என்று பிரகடணம் செய்யப்பட்ட்து.
· அடுத்த் ஆண்டு ஹிஜ்ரி 10 ல் முஸ்லிம்கள் மட்டுமே ஹஜ் செய்தனர். பெருமானாருடன்..
· அதற்கடுத்த ஆண்டு பெருமானார் வபாத்தாகிவிட்டார்கள்.
· ஆனால் பெருமானார் 4 உம்ரா செய்திருக்கிறார்கள்
عن ابن عباس أن النبي صلى اللهم عليه وسلم اعتمر أربع عمر عمرة الحديبية وعمرة الثانية من قابل وعمرة القضاء في ذي القعدة وعمرة الثالثة من الجعرانة والرابعة التي مع حجته
நபிமார்கள், கலீபாக்கள், பெருமானாரின் மனைவியர், சஹாபாக்கள், மார்க்க முன்னோடிகள் ஆகியோர் பல முறை ஹஜ்ஜுக்கு சென்றுள்ளனர்.
حج عثمان بالناس سنوات خلافته كلها إلا آخر حجة وحج بأزواج النبي صلى الله عليه وسلم كما كان يصنع عمر – محمد رضا
· பெருமானாரின் துணைவியர் பெருமானாரின் வபாத்திற்கு பின்னர் பல முறை ஹஜ்ஜுக்கு சென்றுள்ளனர். குறிப்பாக ஆயிஷா (ரலி).
· அப்துர்ரஹ்மான்ன் பின் அவ்பு (ரலி) உம்ராவிற்கு சென்று விட்டு மதீனாவில் அவரது வீட்டுக்கு வந்து சேருவார். வாசல்படியை தாண்டியிருக் மாட்டார். அவரது சாமாண்கள் ஒட்டகையிலிருந்து இறக்கவைக்கப் பட்டிருக்காது. அதற்குள் அவருக்கு கஃபாவை காணும் ஏக்கம் வந்துவிடும் உடனே மக்காவிற்கு உமரா செய்ய அப்படியே கிளம்பி விடுவார்.
· ஒருவர் தனக்காக மட்டுமல்லாமல் தனைப் பெற்ற்வர்களுக்காகவும் மற்றவர்களுக்காகவும் ஹஜ் செய்ய பெருமானார் அனுமதித்துள்ளார்கள்
· عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ كَانَ الْفَضْلُ رَدِيفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَاءَتْ امْرَأَةٌ مِنْ خَشْعَمَ ... فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ فَرِيضَةَ اللَّهِ عَلَى عِبَادِهِ فِي الْحَجِّ أَدْرَكَتْ أَبِي شَيْخًا كَبِيرًا لَا يَثْبُتُ عَلَى الرَّاحِلَةِ أَفَأَحُجُّ عَنْهُ قَالَ نَعَمْ وَذَلِكَ فِي حَجَّةِ الْوَدَاعِ – البخاري
· عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ امْرَأَةً مِنْ جُهَيْنَةَ جَاءَتْ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ إِنَّ أُمِّي نَذَرَتْ أَنْ تَحُجَّ فَلَمْ تَحُجَّ حَتَّى مَاتَتْ أَفَأَحُجُّ عَنْهَا قَالَ نَعَمْ حُجِّي عَنْهَا أَرَأَيْتِ لَوْ كَانَ عَلَى أُمِّكِ دَيْنٌ أَكُنْتِ قَاضِيَةً اقْضُوا اللَّهَ فَاللَّهُ أَحَقُّ بِالْوَفَاءِ- البخاري
· ஆண்டு தோறும் ஹஜ் கடமையாகுமா என்று அக்ரஃ பின் ஹானிஸ் (ரலி) அவர்கள் கேட்ட போது வாழ்நாளில் ஒரு தடவை தான் ஹஜ் கடமையாகும் என்ற கருத்தில் பெருமானார் பதிலளித்தார்கள் என்ற நபி மொழியை சுட்டிக் காட்டி இரண்டாம் முறை ஹஜ் கிடையாது என்று சிலர் எழுதுவதும் பேசுவதும் வழிப்பறிக்கு ஒப்பானதாகும்.
· ஒரு தடவை நிறைவேற்றினால் ஹஜ் கடமை முடிந்து விடும். இரண்டாவது தடவை அது க்டமையல்ல என்று மட்டுமே அந்த ஹதீஸிக்கு பொருள் கொள்ளவேண்டும். போதிய விவரம் இல்லாமல் ஹதீஸ்களை பயன்படுத்தக் கூடாது!
· ஒரு தடவை சாப்பிட்டால் பிரியாணியின் சுவை தெரிந்து விடுகிறதே! பிறகு ஏன் அதை இவர்கள் போகிற இடமெல்லாம் கேட்டு வாங்கிச் சாப்பிடுகிறார்க்ள் என்பதை இத்தக்யோர் யோசித்துப் பார்க்க வேண்டாமா?. நான் இனிமேல் பிரியாணி சாப்பிடாமல் அந்த காசை “பைத்துல் மாலு”க்கு கொடுத்து விடுகிறேன் என்று யாராவது சொல்கிறார்களா?
ஒரு மனிதர் மற்ற கடமைகள மறந்து விட்டு ஹ்ஜ் மட்டுமே செய்து கொண்டிருப்பாராயின் அவரது கடமைகளை அவருக்கு நினைவூட்ட வேண்டுமே தவிர அவருடை ஹ்ஜ் ஈடுபாட்ட்டை குறை சொல்லக் கூடாது.
ஹஜ் ஒரு புறம் நமது நன்மையின் தட்டை தாழச் செய்கிற போது மறு புறம் நாம் கவனிக்க மறந்த கடமைகளின் கனம் அதிகமாகி ஹஜ்ஜின் மதிப்பை குறைத்து விடக் கூடாது என்று அவர்களுக்கு அறிவுறுத்தலாம்.
அதே போல ஒரு மனிதர் உலகின் மொத்த கவலையும் தனது தலை மீது சுமக்க முடியாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இது பெருமானாருக்கு அல்லாஹ் சொன்ன அறிவுரைஇது . وَلَوْ شِئْنَا لَآتَيْنَا كُلَّ نَفْسٍ هُدَاهَا
No comments:
Post a Comment