வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, June 09, 2011

பெண்களின் சொத்துரிமையை மறுக்கக் கூடாது


பெண்களின்  சொத்துரிமையை மறுக்கக் கூடாது
{يُوصِيكُمُ اللّهُ فِي أَوْلاَدِكُمْ لِلذَّكَرِ مِثْلُ حَظِّ الأُنثَيَيْنِ فَإِن كُنَّ نِسَاء فَوْقَ اثْنَتَيْنِ فَلَهُنَّ ثُلُثَا مَا تَرَكَ وَإِن كَانَتْ وَاحِدَةً فَلَهَا النِّصْفُ وَلأَبَوَيْهِ لِكُلِّ وَاحِدٍ مِّنْهُمَا السُّدُسُ مِمَّا تَرَكَ إِن كَانَ لَهُ وَلَدٌ فَإِن لَّمْ يَكُن لَّهُ وَلَدٌ وَوَرِثَهُ أَبَوَاهُ فَلأُمِّهِ الثُّلُثُ فَإِن كَانَ لَهُ إِخْوَةٌ فَلأُمِّهِ السُّدُسُ مِن بَعْدِ وَصِيَّةٍ يُوصِي بِهَا أَوْ دَيْنٍ آبَآؤُكُمْ وَأَبناؤُكُمْ لاَ تَدْرُونَ أَيُّهُمْ أَقْرَبُ لَكُمْ نَفْعاً فَرِيضَةً مِّنَ اللّهِ إِنَّ اللّهَ كَانَ عَلِيما وَلَكُمْ نِصْفُ مَا تَرَكَ أَزْوَاجُكُمْ إِن لَّمْ يَكُن لَّهُنَّ وَلَدٌ فَإِن كَانَ لَهُنَّ وَلَدٌ فَلَكُمُ الرُّبُعُ مِمَّا تَرَكْنَ مِن بَعْدِ وَصِيَّةٍ يُوصِينَ بِهَا أَوْ دَيْنٍ وَلَهُنَّ الرُّبُعُ مِمَّا تَرَكْتُمْ إِن لَّمْ يَكُن لَّكُمْ وَلَدٌ فَإِن كَانَ لَكُمْ وَلَدٌ فَلَهُنَّ الثُّمُنُ مِمَّا تَرَكْتُم مِّن بَعْدِ وَصِيَّةٍ تُوصُونَ بِهَا أَوْ دَيْنٍ وَإِن كَانَ رَجُلٌ يُورَثُ كَلاَلَةً أَو امْرَأَةٌ وَلَهُ أَخٌ أَوْ أُخْتٌ فَلِكُلِّ وَاحِدٍ مِّنْهُمَا السُّدُسُ فَإِن كَانُوَاْ أَكْثَرَ مِن ذَلِكَ فَهُمْ شُرَكَاء فِي الثُّلُثِ مِن بَعْدِ وَصِيَّةٍ يُوصَى بِهَآ أَوْ دَيْنٍ غَيْرَ مُضَآرٍّ وَصِيَّةً مِّنَ اللّهِ وَاللّهُ عَلِيمٌ حَلِيمٌ }.
தமிழகத்தில் முஸ்லிம்கள் பெருவாரியாக வசிக்கும் சில நகரங்களிலும், பல சிற்றூர்களிலும் குடும்பச் சொத்திலிருந்து பெண்களுக்கு பங்கு கொடுக்கப் படுவதில்லை.

திருச்சிக்கு பக்கத்தில் உள்ள ஒரு ஊரைச் சேர்ந்த ஒரு மௌலவி தங்கள் குடும்பத்தில் பெண்களுக்கு சொத்தில் பங்கு கொடுக்கவில்லை அது குறித்து தான் இப்போது வருந்துவதாக  துபாயில் வைத்து என்னிடம் கூறினார். அவர்களுடைய பங்கிலிருந்து உங்களுக்கு வந்ததை திருப்பி கொடுத்து விடுங்கள் என்று கூறி அவரை சமாதானப்படுத்தினேன்.

இஸ்லாத்தின் மிக உன்னதமான ஒரு சட்டமும், இஸ்லாம் வலியுறுத்தும் ஆண் பெண் சமத்துவமும் ஒரு சிறு பகுதி மக்களின் செயல்பாடுகளால் கேள்விக்குள்ளாக்கப் படுவது சகித்துக் கொள்ளத்தக்கதல்ல.

உன்னதமான இஸ்லம் நம் காரணமாக களங்கப் படுத்தப்படலாமா? என்று முஸ்லிம்கள் யோசிக்க வேண்டும்.

இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள சொத்துரிமையின் தரத்தையும் தன்மைகளையும் சமுதாயம் விளங்கிக் கொண்டாக  வேண்டும்.

إن الإسلام دين الله القويم، والناسخ لما قبله من الأديان، فهو لم يجعل لأحد فضلاً على أحد إلا بالتقوى، وبما خص الله به بعض الأفراد من الخصائص، وذلك وفق الحكمة الإلهية، ولقد راعى وأعطى الإسلام كل ذي حق حقه، وأولى النساء بالعناية، ففي القرآن الكريم سورة سميت باسم امرأة ، وهي سورة مريم، والمجادلة والممتحنة، بل إنّ في القرآن سورة أطلق عليها اسم /سورة النساء.
 وقال نبي الإنسانية، وهادي البشرية، ومحطم الوثنية، :" إنما النساء شقائق الرجال".
وفي السنة المطهرة كتباً وأبواباً في ذكر النساء وما يتعلق بهن من أحكام، وما لهن من حقوق وواجبات، وما عليهن من حقوق وواجبات.
كل هذا يدل على عناية الإسلام بالمرأة، ورفعاً لقدرها، وصوناً لكرامتها وعرضها وعفتها.
தந்தை தாய் கணவன் ஆகியோரின் சொத்திலிருந்து பங்கு பெறும் உரிமையை பெண்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ளது.
ومن هذه الحقوق التي اعتنى بها الإسلام حق المرأة في الميراث، فهي له حق من الميراث، من زوجها، ومن أبيها وأمها، وممن تستحق الميراث منهم من أقاربها؛ بدليل قوله تعالى: {للرجال نصيبٌ مما ترك الوالدان والأقربون وللنساء نصيبٌ مما ترك الوالدان والأقربون مما قل منه أكثر نصيباً مفروضاً}.
·         கணவனின் சொத்திலிருந்து நாலில் ஒரு பங்கு ¼  அல்லது எட்டில் ஒரு பங்கும்  1/8 – ( குழந்தை இருந்தால் 1/8  இல்லாவிட்டால் ¼)
·         பிள்ளைகளின்  சொத்திலிருந்து மூன்றில் ஒரு பங்கு 1/3 அல்லது ஆறில் ஒரு பங்கு  1/6
·         பெற்றோரின் சொத்திலிருந்து அரைப் பங்கு அல்லது ஆணுக்கு கிடைப்பதில் பாதி என்ற வகையில் பெண்களுக்கான சொத்துப் பங்கீட்டை இஸ்லாம் செய்துள்ளது.

இஸ்லாமிய பாகப்பிரிவினைச் சட்டம் உலக சட்ட அமைப்பில் மிக நுட்பமானதாகவும், சிறப்பானதாகவும் இருக்கிறது.
1400 வருடங்களுக்கு முன்னரே பெண்களின் பிறப்புரிமையாக சொத்துரிமையை அது வழங்கியிருக்கிறது என்பது மேலும் சிறப்பாகும்

கிருத்துவத்திற்கு என்று தனியாக சொத்துரிமை விவரம் இல்லை. நாடுகளுக்கேற்ப வேறுபடுகிறது.
இங்கிலாந்து நாட்டில் 150 வருடங்களுக்கு முன்னர் தான், அதாவது  கி.பி.1871ம் ஆண்டில் தான் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப் பட்ட்து.

இந்து மத்த்தில்
ஒரு இந்து ஆண் அவன் பிறந்ததுமே கூட்டுக் குடும்பத்தில் சொத்துரிமையைப் பிறப்பால் அடைகிறான். ஆனால் இந்துப்-பெண் அடைய முடியாது. தான் வளர்க்கப்படவும், வயது வந்தவுடன் திருமணம் செய்துவைக்கப்படவும் அவளுக்கு  உரிமைகள் உண்டு. தனது தமையர்களைப்போல தந்தையின் சொத்தில் அவளுக்குப் பங்கு கிடையாது. பிறப்பால் சொத்துரிமையும் கிடையாது. இந்த நிலைமை 1956இல் நிறைவேற்றப்-பட்ட இந்து வழிமுறைச் சட்டத்தின் வாயிலாக நீக்கப்பட்டது.

அரபுகள்
இஸ்லாத்திற்கு முன் அரபுகளிடையே நிலைமை வேறுவிதமாக இருந்தது. ஒருவர் இறந்து போனால், அவருடைய வாரிசுகளாகக் குடும்ப அங்கத்தினர்களோ, உறவினர்களோ ஆக முடியாது. போர்க்களங்களில் அவருடன் பங்கு பெறுபவர்களே அவருடைய வாரிசுகளாகக் கருதப்பட்டு வந்தனர். பெண்களும், சிறுவர்களும் ஆயுதம் ஏந்தி போர்க்களம் செல்ல முடியாது என்பதால் அவர்கள் தகுதி இல்லாதவர்களாக கருதப்பட்டனர்.
மனைவி கணவன் விட்டுச் செல்லும் சொத்தில் ஒரு பங்காக கருதப்பட்டாலே தவிர சொத்துக்குரியவளாக கருதப் படவில்லை.

இஸ்லாம் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கி பெரும் புரசி செய்த்து.
فقد جاء أن سبب نزول قوله تعالى: {لِّلرِّجَالِ نَصيِبٌ مِّمَّا تَرَكَ الْوَالِدَانِ وَالأَقْرَبُونَ وَلِلنِّسَاء نَصِيبٌ مِّمَّا تَرَكَ الْوَالِدَانِ وَالأَقْرَبُونَ مِمَّا قَلَّ مِنْهُ أَوْ كَثُرَ نَصِيبًا مَّفْرُوضًا} في أوس بن ثابت الأنصاري، توفي وترك امرأة يقال لها: أم كجة وثلاث بنات له منها، فقام رجلان هما ابنا عم الميت ووصياه يقال لهما: سويد وعرفجة فأخذ ماله ولم يعطيا امرأته وبناته شيئاً، وكانوا في الجاهلية لا يرثون النساء ولا الصغير وإن كان ذكراً، ويقولون: لا يُعطى إلا من قاتل على ظهور الخيول، وطاعن بالرمح، وضارب بالسيف، وحاز الغنيمة، فذكرت أم كجة ذلك لرسول الله - صلى الله عليه وسلم - فدعاهما فقالا: يا رسول الله! ولدها لا يركب فرساً، ولا يحمل كلاً، ولا يتكأ عدواً، فقال عليه الصلاة والسلام: " انصرفا حتى أنظر ما يحدث الله لي فيهنّ" فأنزل الله هذه الآية رداً عليهم، وإبطالاً لقولهم، وتصرفاتهم بجهلهم، فإن الورثة الصغار كان ينبغي أن يكونوا أحق بالمال من الكبار، لعدم تصرفهم والنظر في مصالحهم، فعكسوا الحكم، وأبطلوا الحكمة، فضلوا بأهوائهم، وأخطئوا في آرائهم وتصرفاتهم -  الجامع للقرطبي 5/46.
பாட்டன் சொத்தில் பேரன் மட்டுமே வாரிசு என்ற நடைமுறை எல்லாம் இஸ்லாத்தில் இல்லை.
இஸ்லாமிய பாகப்பிரிவினைச் சட்டப்படி மூதாதையர் சொத்து, சுயமாகச் சேர்த்த சொத்து, கூட்டுக் குடும்பச் சொத்து, அசையும் சொத்து, அசையாச் சொத்து ஆகிய அனைத்து வகைச் சொத்துக்களுக்கும் வாரிசு ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அனைவருக்கும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விழுக்காடுப்படி பகிர்ந்தளித்தல் வேண்டும்.

فالأنثى في الإسلام ثرت من القعار والدار، ومن المال النقدي والعيني، ومن المنقول والثابت، و لا فرق بينها وبين الرجل في وجوب إعطائها ما لها من الحقوق المالية وغير ذلك.
·         கொஞ்சமாக இருந்தாலும் ((ممّا قلّ منه أو كثر))
·         ஒரு தரப்பாக விஷேச ஒதுக்கீடு கூடாது.
·         தன்னிஷ்ட்த்திற்கு பொத்தம் பொதுவாகவும் பிரித்துக் கொடுக்க கூடாது.
كما أوصى نزار بن معَّد ابن عدنان لأبنائه: مضر، وربيعة، وإياد، وأنمار، فجعل لمضر الحمراء كلّها، وجعل لربيعة الفرس، وجعل لأياد الخادم، وجعل لأنمار الحمار
·         கால தாமதம் செய்யக் கூடாது-
ஒரு பெரியவர் ஒருநோயாளியை விசாரிக்கச் சென்றார். நோயாளிக்குப் பக்கத்தில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. சற்று நேரத்தில் அவரது உயிர் பிரிந்தது. பெரியவர் உடனே விளக்கை அணைத்தார்.   இது வரை விளக்கில் எரிந்த எண்ணை நோயாளிக்குச் சொந்தமாக இருந்த்து. அவர் மௌத்தான கனத்தில் அது வாரிசுதாரர்களுக்கு உரியதாகிவிட்ட்து. அவர்களது சம்மதமில்லாமல் இதை எரிக்க்க் கூடாது என்று பெரியவர் காரணம் சொன்னார்.  (மஆரிபுல் குர் ஆன் )

பல குடும்பங்களிலும் மூத்தவர்கள் – அல்லது ஆண்கள் குடும்பச் சொத்தை கையில் வைத்துக் கொண்டு – உரியவர்களுக்கு பிரித்துக் கொடுக்காமல் - சுயமாக அனுபவித்து வருகின்றனர். சில இடங்களில் பெண்கள் போராட வேண்டியதாகிறது. இது தவறு அநீதி.

இது போன்ற வழக்குகளில் ஜமாத்துகள் விரைவாக தீர்வு காண வேண்டும்.

வரதட்சனை சொத்தல்ல அன்பளிப்பே!
பெண்களின் திருமணச் செலவை பாகப்பிரிவினையில் கழித்துக் கொள்ள முடியாது.
ஆண் பிள்ளைகளின் கல்லூரிப் படிப்புக்கு செலவிடும் தொகையை எப்ப்டி பாகப்பிரிவினைச் சொத்திலிருந்து கழித்துக்கொள்ள முடியாதோ அது போல
அது பெற்றோர் சகோதர்களின் கடமையாகும்.
வரதடசனைக்கு இஸ்லாத்தில் இடமில்லை. என்ற போதும் சமூகத்தில் திருமணத்தின் போது பெண்களுக்கு கனிசமாக பணம் நகை தரப்படுகிறது. அதை  அன்பளிப்பாகவே கருத முடியும்.
அதே நேரத்தில் அன்பளிப்பு வழங்குவதில்  குழந்தைகளிடையே நீதமாக நடந்து கொள்ள வேண்டும் என்ற நபி மொழியை பெற்றோர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு மகளுக்கு அதிகப்ப்டியான பணம் அல்லது நகை வழங்கப் படுமென்றால் அது போன்ற அன்பளிப்பை மகன்களுக்கு கொடுக்க ஒரு தந்தை முடிவு செய்தால் அது தவறாகாது. மகனுக்கு அன்பளிப்பாக ஒரு வீடு அல்லது ஒரு காரை தந்தை வாங்கிக் கொடுக்கலாம். அல்லது பணமாக ஒரு தொகை கொடுக்கலாம்.

அன்பளிப்புக்கும் அதன் அளவுக்கும் யாரும் கட்டாய உரிமை கோர முடியாது. ஆனால் நீதியாக நடந்து கொள்ளாதவர்கள் அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டும்.

இதை விடுத்து , எந்த வடிவத்தில் பெண்களின் சொத்துரிமையை மறுத்தாலும் அது ஜாஹிலிய்யா குணமே!

இஸ்லாமிய பாகப்பிரிவினைச் சட்ட்த்தில் சில இடங்களில் ஆணுக்கு நிகராக பெண்ணுக்கு சொத்து வழங்கப்பட்டுள்ளது.

உதாரணமாக் தாயிக்கும் தந்தைக்கும் மகனது சொத்திலிருந்து ஆறில் ஒரு பங்கு وَلأَبَوَيْهِ لِكُلِّ وَاحِدٍ مِّنْهُمَا السُّدُسُ مِمَّا تَرَكَ إِن كَانَ لَهُ وَلَدٌ

சில இடங்களில் ஆண்களுக்கு சமமாக  பெண்களுக்கு சொத்து வழங்கப் படவில்லை.  لِلذَّكَرِ مِثْلُ حَظِّ الأُنثَيَيْنِ

காரணம் : அது தான் நீதி .  ஏனெனில் பெற்றோர் சகோதரிகள் குடும்பம் ஆகியவற்றை பராமரிக்கும் கடமை முழுவதும் ஆண்களுடையதே! குடும்பச் செலவுக்கு பணம் கொடுக்க மனவி அம்மா சகோதரிகளை எந்த ஆணும் வறுபுறுத்த முடியாது. (நிர்பந்த நிலையில் தவிர)
செலவு அதிகம் ஆணுக்கே! அதனால் அவனுக்கு இரண்டு பங்கு தரப்பட்டுள்ளது.
ஒரு தந்தை கல்லூரியில் படிக்கிற பையனுக்கு தினசரி 50 ரூபாயும் பள்ளிக்கூட்த்தில் படிக்கிற பையனுக்கு 5 ரூபாயும் கொடுக்கிற அதே நியாயத்தின் படியே இஸ்லாமிய பங்கீடு அமைந்துள்ளது,

இவை எல்லாவற்றிற்கு மேல் . இது இறைவனின் பங்கீடு
முஃமினான ஆன்களும் முஃமினான பெண்களும் அல்லாஹ்வின் பங்கீட்டை ஏற்றுக் கொள்ள வேண்டும்.


No comments:

Post a Comment