வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, June 02, 2011

பருவ மழைக்கு நன்றி!


இந்த வாரம் இரண்டு  செய்திகளை பரிமாறிக் கொள்ள இருக்கிறோம்,

(முதலாவது இந்திய புவியியலோடு சம்பந்தப் பட்ட்து. இரண்டாவது இந்திய அரசியலோடு தொடர்புடையது.  முதலில் புவியியல் சம்பந்தப் பட்ட் தகவலைப் பார்த்து விடுவோம்.)

தென்கிழக்குப் பருவ மழை குறித்த் நேரத்தில் தொடங்கியுள்ளது. அல்ஹம்து லில்லாஹ்

குறித்த நேரத்தில் மழைக்காலம் தொடங்குவது அல்லாஹ்வின் மாபெரிய அருள்

குறித்த காலத்தில் மழை பொழியாவிட்டால் நீர்நிலைகள் வறண்டு விடும். குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும். விவ்சாயம் பாதிப்படையும். நிலத்தடி நீர் குறையும்.

குடிநீர் வழங்கல்துறை அதிகாரிகள் அணைகளில் தண்ணீர் தீர்ந்து விட்ட்து என எச்சரித்துக் கொண்டிருந்தனர். காலியான அணைகளின் புகைப் படங்களைப் பத்ரிகைகளில் பார்த்து இந்த ஆண்டு தண்ணீர்ப் பஞ்சம் வந்து விடுமோ என மக்கள் பரிதவித்தனர்.

அல்லாஹ் அனைவரது மனதிலும் நிம்மதியை படரச் செய்துள்ளான்.

பருவ மழை குறித்த நேரத்தில் பொழிவது அல்லாஹ்வின் ஆற்றலுக்கான அடையாளமாகும்.

இஸ்லாம் கடவுளுக்கு இரண்டு இலக்கணங்களை சொல்கிறது.
படைத்தவன் ( الخالق (  நிர்வகிப்பவன் சொந்தக்காரன் ((مالك
இந்த இரண்டு சொற்களையும் உள்ளடக்கிய ஒரு சொல் தான் رب

رب  என்ற வார்த்தையை முன்னோர்கள் அழகாக மொழிபெயர்த்தனர் படைத்து பரிபாலிப்பவன்,
திருக்குர் ஆன் இந்த விளக்கத்தை தருகிறது.

إِنَّ رَبَّكُمْ اللَّهُ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ يُغْشِي اللَّيْلَ النَّهَارَ يَطْلُبُهُ حَثِيثًا وَالشَّمْسَ وَالْقَمَرَ وَالنُّجُومَ مُسَخَّرَاتٍ بِأَمْرِهِ أَلَا لَهُ الْخَلْقُ وَالْأَمْرُ تَبَارَكَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ(54)
وَهُوَ الَّذِي يُرْسِلُ الرِّيَاحَ بُشْرًا بَيْنَ يَدَيْ رَحْمَتِهِ حَتَّى إِذَا أَقَلَّتْ سَحَابًا ثِقَالًا سُقْنَاهُ لِبَلَدٍ مَيِّتٍ فَأَنزَلْنَا بِهِ الْمَاءَ فَأَخْرَجْنَا بِهِ مِنْ كُلِّ الثَّمَرَاتِ كَذَلِكَ نُخْرِجُ الْمَوْتَى لَعَلَّكُمْ تَذَكَّرُونَ
إِنَّ رَبَّكُمْ اللَّهُ உங்களுடை ரப்பு அல்லாஹ் என்று சொல்லி விட்டு
الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ என்ற வாசகம் அல்லாஹ்வின் படைப்பாற்றலை குறிப்ப்டுகிறது.
ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ என்ற வார்த்தையும் அதை தொடர்ந்து வருகிற வாசகங்களும் அல்லாஹ்வின் நிர்வாகத்திறனை குறிப்பிடுகின்றன.
துல்லியமான கால மாற்றம், பழைய நோட்டுப்புத்தகத்தைப் பார்த்து மோதினார் வக்துக்களை எழுதிப் போடுகிறார். நிமிடம் தவறாமல் அப்படியே நிகழ்கிறது.

கோள்களின் சுழற்சியும் இயக்கமும் மிகத்துல்லியமானவை.

பருவ மழையும் அல்லாஹ்வின் நிர்வாகத்திறனுக்குச் சாட்சி.

இந்தியாவில் இரண்டு பருவக்காற்றுக்கள் பருவ மழையை கொண்டுவருகின்றன. தென்மேற்குப் பருவக் காற்று ஜுன முதல் வாரத்தில் தொடங்கி செபடம்பரில் முடிகிறது. வடகிழக்குப் பருவக்காற்று அக்டோபரில் தொடங்கி டிஸம்பரி முடிகிறது.

தமிழகத்திற்கு வடகிழக்குப் பருவக்காற்றின் மூலம் தான் போதுமான மழை கிடைக்கும். என்றாலும் தென்மேற்குப் பருவக்காற்றினால்  கேரளத்தின் எல்லையை ஒட்டிய மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஓரளவு மழை கிடைக்கும். பொதுவாக கோடையின் வெப்பம் குறையும். கேராளாவை ஒட்டியுள்ள தமிழகத்தின் அணைகளான சிறுவாணி சோலையாறு அணைகள் நிரம்பி தமிழகத்தின் தண்ணீர் தேவையை ஓரளவு பூர்த்தி செய்யும்.

பிவியியல் புத்தகங்களில் கூறப்படும் இத்தகவல்கள் அச்சுப்பிறழாமல் அப்ப்டியே நிகழ்கிறது இது அல்லாஹ்வின் மாபெரிய ஆற்றலாகும்.

மனித சக்தியில் உருவாகும் எந்த ஏசியும் தரமுடியாத சுகமான் ஒரு குளிரை பருவக்காற்று ஒரு வருடலில் தந்துவிடுகிறது,
அல்லாஹ்வுடைய படைப்புக்கும் மனிதனின் உருவாக்கத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் அது.
அல்லாஹ்வுடைய அருள் இலவசமாக கிடைப்பது மனிதனது தயாரிப்பு அதிக பொருட் செலவில் கிடைக்க்க் கூடியது.
மனித முயற்சி எல்லைக்குட்பட்ட்து. அல்லாஹ்வின் அருள் எல்லைகளை கடந்தது.
கேரளாவில் தொடங்குகிற தென்மேற்குப் பருவக் காற்று அப்படியே கர்நாடாகவுக்கு சென்று அங்கிருந்து மும்பை குஜராத் என்று பயணித்து மேலும் வடக்கே சென்று அங்கே இமய மலையில் மோதி அங்கிருந்து திரும்பி  கல்கத்தா வரை மழையை கொண்டு சேர்க்கிறது.

இந்த அருளைப் பெறுகிற மனிதர்கள் அல்லாஹ்வை உணர்ந்து கொள்ள வேண்டும்,அதனுடைய அடையாளமாக அவர்களது நாவிலிருந்து அல்ஹம்து லில்லாஹ் என்ற துதி வெளிப்பட வேண்டும்.

அத்தகைய மனிதர்கள் குறித்து அல்லாஹ் திருப்தியடைகிறான்

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ لَيَرْضَى عَنْ الْعَبْدِ أَنْ يَأْكُلَ الْأَكْلَةَ فَيَحْمَدَهُ عَلَيْهَا أَوْ يَشْرَبَ الشَّرْبَةَ فَيَحْمَدَهُ عَلَيْهَا  - مسلم 4915
சக மனிதர்களை திருப்திப்படுத்த காலம் முழுக்க உழைத்தாலும் முடியாது ஆனால் ஒரு அல்ஹம்து லில்லாஹ்வில் அல்லாஹ்வின் திருப்தி கிடைக்கிறது.

இது வெறும் வார்த்தைக்கு கிடைக்கிற மரியாதை அல்ல. எல்லா நன்மைகளுக்கும் அல்லாஹ்வே காரணம் என்று அல்லாஹ்வை புரிந்து கொண்ட்தற்கு கிடைக்கிற மரியாதையாகும்
அல்லாஹ்வை உணர்தலும் புரிதலுமே இங்கு முக்கியம்.

என்னை புரிந்து கொண்டாயல்லவா அது போதும்.. என்று சொல்லுகிற பழக்கம் மக்களிடமும் உண்டு.

காற்றும் மழையும் உரிய பலனை தர அல்லாஹ்வின் துணை வேண்டும்.

காற்று வீசுகிற போது பெருமானார் (ஸல்) பயப்படுவார்கள்
عَنْ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ يَوْمُ الرِّيحِ وَالْغَيْمِ عُرِفَ ذَلِكَ فِي وَجْهِهِ وَأَقْبَلَ وَأَدْبَرَ فَإِذَا مَطَرَتْ سُرَّ بِهِ وَذَهَبَ عَنْهُ ذَلِكَ قَالَتْ عَائِشَةُ فَسَأَلْتُهُ فَقَالَ إِنِّي خَشِيتُ أَنْ يَكُونَ عَذَابًا سُلِّطَ عَلَى أُمَّتِي وَيَقُولُ إِذَا رَأَى الْمَطَرَ رَحْمَةٌ  - مسلم - 1495

பஞ்சத்திற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்ன புது விளக்கம்
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ السَّنَةَ لَيْسَ بِأَنْ لَا يَكُونَ فِيهَا مَطَرٌ وَلَكِنَّ السَّنَةَ أَنْ تُمْطِرَ السَّمَاءُ وَلَا تُنْبِتَ الْأَرْضُ  - احمد 8155

நன்றி செலுத்துகிறவர்களுக்கு அல்லாஹ் மேலும் அதிகமாக தருகிறான்.

لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ(7)

நன்றி செலுத்தாதவர்கள் எந்த உயர்ந்த நிலயில் இருந்தாலும் அல்லாஹ் நாடினால் ஒரு நொடியில் அனைத்தையும் பறித்துக் கொள்வான்

சபா வாசிகள்

لَقَدْ كَانَ لِسَبَإٍ فِي مَسْكَنِهِمْ آيَةٌ جَنَّتَانِ عَنْ يَمِينٍ وَشِمَالٍ كُلُوا مِنْ رِزْقِ رَبِّكُمْ وَاشْكُرُوا لَهُ بَلْدَةٌ طَيِّبَةٌ وَرَبٌّ غَفُورٌ(15)فَأَعْرَضُوا فَأَرْسَلْنَا عَلَيْهِمْ سَيْلَ الْعَرِمِ وَبَدَّلْنَاهُمْ بِجَنَّتَيْهِمْ جَنَّتَيْنِ ذَوَاتَى أُكُلٍ خَمْطٍ وَأَثْلٍ وَشَيْءٍ مِنْ سِدْرٍ قَلِيلٍ(16)ذَلِكَ جَزَيْنَاهُمْ بِمَا كَفَرُوا وَهَلْ نُجَازِي إِلَّا الْكَفُورَ(17)  سبا

இப்பருவ காலத்தில்  அல்லாஹ்விடம் பாதுகாப்பான் பயனுள்ள மழையை கேட்போம். அது சுன்னத்.
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ أَتَتْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَوَاكِي فَقَالَ اللَّهُمَّ اسْقِنَا غَيْثًا مُغِيثًا مَرِيئًا مَرِيعًا نَافِعًا غَيْرَ ضَارٍّ عَاجِلًا غَيْرَ آجِلٍ قَالَ فَأَطْبَقَتْ عَلَيْهِمْ السَّمَاءُ  - ابوداوود 988

أَنَسَ بْنَ مَالِكٍ يَذْكُرُ  -أَنَّ رَجُلًا دَخَلَ يَوْمَ الْجُمُعَةِ مِنْ بَابٍ كَانَ وِجَاهَ الْمِنْبَرِ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَائِمٌ يَخْطُبُ فَاسْتَقْبَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَائِمًا فَقَالَ يَا رَسُولَ اللَّهِ هَلَكَتْ الْمَوَاشِي وَانْقَطَعَتْ السُّبُلُ فَادْعُ اللَّهَ يُغِيثُنَا قَالَ فَرَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَيْهِ فَقَالَ اللَّهُمَّ اسْقِنَا اللَّهُمَّ اسْقِنَا اللَّهُمَّ اسْقِنَا قَالَ أَنَسُ وَلَا وَاللَّهِ مَا نَرَى فِي السَّمَاءِ مِنْ سَحَابٍ وَلَا قَزَعَةً وَلَا شَيْئًا وَمَا بَيْنَنَا وَبَيْنَ سَلْعٍ مِنْ بَيْتٍ وَلَا دَارٍ قَالَ فَطَلَعَتْ مِنْ وَرَائِهِ سَحَابَةٌ مِثْلُ التُّرْسِ فَلَمَّا تَوَسَّطَتْ السَّمَاءَ انْتَشَرَتْ ثُمَّ أَمْطَرَتْ قَالَ وَاللَّهِ مَا رَأَيْنَا الشَّمْسَ سِتًّا ثُمَّ دَخَلَ رَجُلٌ مِنْ ذَلِكَ الْبَابِ فِي الْجُمُعَةِ الْمُقْبِلَةِ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَائِمٌ يَخْطُبُ فَاسْتَقْبَلَهُ قَائِمًا فَقَالَ يَا رَسُولَ اللَّهِ هَلَكَتْ الْأَمْوَالُ وَانْقَطَعَتْ السُّبُلُ فَادْعُ اللَّهَ يُمْسِكْهَا قَالَ فَرَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَيْهِ ثُمَّ قَالَ اللَّهُمَّ حَوَالَيْنَا وَلَا عَلَيْنَا اللَّهُمَّ عَلَى الْآكَامِ وَالْجِبَالِ وَالْآجَامِ وَالظِّرَابِ وَالْأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ قَالَ فَانْقَطَعَتْ وَخَرَجْنَا نَمْشِي فِي الشَّمْسِ قَالَ شَرِيكٌ فَسَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ أَهُوَ الرَّجُلُ الْأَوَّلُ قَالَ لَا أَدْرِي   - البخاري 1013 

இரண்டாவது  முக்கியச் செய்தி

·         இந்தியாவில் தேடப் படும் 50 பெரும்  குற்றாவளிகள் பாகிஸ்தானில் பதுங்கி இருப்பதாக கூறி அவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு ஒரு பட்டியலை இந்திய அரசு பாகிஸ்தானிடம் வழங்கியது. அந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள பலர் இந்தியாவில் சாதாரணமாக வாழ்ந்து வருவது இப்போது வெளிப்பட்டுள்ளது.
·         குறிப்பாக 50 பேரில் ஒருவரான வஜ்ஹுல் கமர் கான் ஒரு வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப் பட்டு ஜாமீனில் வெளிவந்து தற்போது மும்பைக்கு அருகில் உள்ள தானேவில் ஜவுளி வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்.   
·         இந்திய பாதுக்காப்பு அமைப்புக்கள் முஸ்லிம்கள் விசயத்தில் எவ்வளவு அலட்சியமாக இருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரண்ம்.
·         இந்தியாவின் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இது போல பாதுகாப்பு படையினரின் வேட்டைக்கு இலக்காகி பன்னூற்றுக் கணக்கானோர் இன்னமும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உண்டான சிறைகளில் வாடிக் கொண்டிருக்கின்றனர்.
·         மத்த்தீவிர வாத குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப் பட்டு சிறைகளில் விசாரனைக்கைதிகளாக வாடிக்கொண்டிருப்போரைப் பற்றி விசாரித்து அவர்களில் நிரபராதிகளை கண்டறிந்து விடுதலை செய்வதற்கு மத்திய மாநில அரசுகள் நடவ்டிக்கை எடுக்க வேண்டும்.
·         தீவிரவாத்த்தை ஒடுக்குவதில் அக்கறை காட்டுகிற அரசு தன்னுடைய தீவிரவாதப் போக்கினால் அப்பாவிகள் தீவிரவாதிகள் ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
·         முஸ்லிம்கள் மீது குற்றம் சுமத்துவது என்பது இப்போது ஒரு டீ குடிப்பதை விட சாதாரணாமாகிவிட்ட்து.
·         பாதுகாப்பு படையினரின் அராஜகத்தை எடுத்துக்காட்ட முஸ்லிம்களுக்கு கிடைத்த ஒரு அருமையான சந்தர்ப்பம் இது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இந்தியச்  சிறைகளில் உள்ள முஸ்லிம் கைதிகளைப் பற்றி ஆராய ஒரு கமிஷனை அரசு ஏற்படுத்த வேண்டும் என் முஸ்லிம்கள் மத்திய மாநில அரசுகளை வற்புறுத்த வேண்டும். மீடியாக்கள் வழியாக இந்த செய்தியை அனைத்து தரப்பு நியாயவான்களிடமும் கொண்டு செல்ல முயற்சி செய்ய வேண்டும்.  
·         இந்தியாவில் படர்ந்து இந்த இஸ்லாமிய எதிர்ப்பு மனோ நிலை அல்லாஹ் உதவி செய் வானாக! உண்மைகளை வெளிப்படை அல்லாஹ் உதவி செய்வானாக!

விரிவான தகவலுக்கு  பார்க்க! இந்த மாத  சமநிலைச்  சமுதாயம் (ஜூன் 2011) தலையங்கம் இது சாதாரண 'தவறு அல்ல

  

No comments:

Post a Comment