இஸ்லாம் இந்த உலகில் நிலை நிறுத்திய கோட்பாடுகளில் பிரதானமான ஒன்று மறுமைச்
சிந்தனையாகும்.
அதாவது இந்த உலகம் நிரந்தரமல்ல, நாளை மறுமை தான் நிலையானது. அதில் கேள்விக கணக்கு
உண்டு. நன்மைகளுக்கு பரிசும் தீமைகளுக்கு தண்டனையும் உண்டு என்பது.
இது ஆரம்ப கால அரபு மக்களால் மிகவும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக இருந்த்து.
வாழ்க்கை இவ்வளவு தான். இதன் பிறகு வேறொன்றும் கிடையாது என்கிற சிந்தனை தான்
அப்போது மேலோங்கியிருந்தது.
பெருமானாரிடம் அவர்கள் அதிகம் ஆட்சேபித்த்து இதைத்தான்.
வாகிஆ அத்தியாயம் அவர்களது கேள்வியை அதற்கான முஸ்லிம்களின்
நம்பிக்க்கயையும் உறுதி படக் கூறுகிறது/
وَكَانُوا يَقُولُونَ أَئِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَامًا أَإِنَّا لَمَبْعُوثُونَ (47) أَوَآبَاؤُنَا الْأَوَّلُونَ (48) قُلْ إِنَّ الْأَوَّلِينَ وَالْآخِرِينَ (49) لَمَجْمُوعُونَ إِلَىٰ مِيقَاتِ يَوْمٍ مَّعْلُومٍ (50)
இது ஒன்றும் அல்லாஹ்விற்கு முடியாத்து அல்ல என்பதையும் திருக்குர்
ஆன் நிலைநாட்டியது.
ஹஜ் அத்தியாயத்தின் வசனங்கள் உங்களை ஆரம்பத்தில் படைத்தது
போல திருப்பியும் படைக்க அல்லாஹ்வால் முடியும் என்று எடுத்துக் கூறியது.
يَا أَيُّهَا النَّاسُ إِن كُنتُمْ فِي
رَيْبٍ مِّنَ الْبَعْثِ فَإِنَّا خَلَقْنَاكُم مِّن تُرَابٍ ثُمَّ مِن نُّطْفَةٍ
ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ مِن مُّضْغَةٍ مُّخَلَّقَةٍ وَغَيْرِ مُخَلَّقَةٍ
لِّنُبَيِّنَ لَكُمْ ۚ وَنُقِرُّ فِي الْأَرْحَامِ مَا نَشَاءُ إِلَىٰ أَجَلٍ
مُّسَمًّى ثُمَّ نُخْرِجُكُمْ طِفْلًا ثُمَّ لِتَبْلُغُوا أَشُدَّكُمْ ۖ وَمِنكُم
مَّن يُتَوَفَّىٰ وَمِنكُم مَّن يُرَدُّ إِلَىٰ أَرْذَلِ الْعُمُرِ لِكَيْلَا يَعْلَمَ
مِن بَعْدِ عِلْمٍ شَيْئًا ۚ وَتَرَى الْأَرْضَ هَامِدَةً فَإِذَا أَنزَلْنَا
عَلَيْهَا الْمَاءَ اهْتَزَّتْ وَرَبَتْ وَأَنبَتَتْ مِن كُلِّ زَوْجٍ بَهِيجٍ () ذَٰلِكَ بِأَنَّ اللَّهَ هُوَ الْحَقُّ وَأَنَّهُ يُحْيِي
الْمَوْتَىٰ وَأَنَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ (6) وَأَنَّ السَّاعَةَ آتِيَةٌ لَّا رَيْبَ فِيهَا
وَأَنَّ اللَّهَ يَبْعَثُ مَن فِي الْقُبُورِ (7)
அல் கியாமா அத்தியாயம் உங்களது கை விரல் நுனிகளை
கூட
அல்லாஹ் சரி செய்து விடுவான் என்று கூறியது,
بَلَىٰ قَادِرِينَ عَلَىٰ أَن نُّسَوِّيَ بَنَانَهُ (4
கை விரல்களில் இருக்கிற கை
ரேகை தான் இப்போது மக்களை துல்லியமாக அடையாளம் காண உதவுகிறது. உலகில் பல நூறு கோடி மக்கள் வாழ்ந்தாலும் ஒரு மனிதருடைய கை ரேகையை போல மற்றொன்று இருப்பது இல்லை.
எனவே மக்கி மண்ணாகிப் போனானாலும் அவனை திருப்பி எழுப்பிக் கொண்டு
வர அல்லாஹ்வால் முடியும் அவன் கொண்டு வருவான்
என உறுதிபட இஸ்லாம் எடுத்துரைத்த்து.
இந்த
நம்பிக்கை முஸ்லிம்களிடம் மிக உறுதியாக இருக்கும் என்றும் திருக்குர் எடுத்துக் கூறியது.
وَهُم بِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ (4)
இந்த
ஆயத் இரண்டு செய்திகளை சொல்கிறது.
முஸ்லிம்கள்
மறுமை நாள் நம்பிக்கையில் மிக உறுதியானவர்களாக இருப்பார்கள்.
தங்களிடமுள்ள
கல்வி, தங்களிடமுள்ள காசு, தங்களிமுள்ள செல்வாக்கு ஆகியவற்றின் மீது எந்த அளவு நம்பிக்கை
இருக்குமோ அதே அளவு உறுதி நாளை மறுமை என்று ஒன்று இருக்கிறது என்பதிலும் அவர்களிடம்
இருக்கும்.
இந்த
உலகம் சிறியது. அழிந்து போக கூடியது. ஆனால்
மறுமை பெறியது அழிவில்லாதது.
எனவே
வாழ்க்கையில் மறுமை வாழ்க்கை தான் உண்மையானதும் நிலையானதுமாகும் என்று இஸ்லாம் மக்களுக்கு கற்பித்திருக்கிறது.
இஸ்லாமிய
அறிஞர்கள் ஒரு உதாரணம் சொல்வார்கள்.
இந்த
பூமியிலிருந்து வானம் வரை உள்ல பகுதியை ஒரு குடோனாக கறபனை செய்து கொள்ளுங்கள். இதற்கிடையே
கடுகு மணியளவுள்ள தானியங்களை நிரப்பி வைத்துக் கொள்ளுங்கள். அந்த தானியங்களை ஒரு பறவை
ஆயிரம் ஆண்டுக்கு ஒரு தானியம் என்ற வீதம் உண்னுமானால் அந்த தானியங்கள் காலியாவதற்கு
எத்தனை நாட்கள் ஆகும் என்று கற்பனை செய்கிறீர்களோ அதை விட அதிக காலத்தை கொண்ட்து மறுமை
நாள் ஆகும்.
இது
ஒரு உதாரணத்திற்கு சொல்லப் பட்டது, மறுமை நாளுக்கு முடிவே கிடையாது.
அடுத்த்து
உண்மையான சுகமும் துக்கமும் மறுமையில் தான் இருக்கிறது.
எந்த
சுகம் முடிந்து போக கூடியதோ அது சுகமே அல்ல; அது போல எந்த துக்கம் தீர்ந்து போக கூடியதோ
அது துக்கமே அல்ல;
மறுமை
அப்படி அல்ல.
உலகில்
பெரிய துயரம் தீக்காயம் படுவது. ஆனால் இங்கு அது சீக்கிரம் சரி செய்யப்படும்.
மறுமையின்
காயம் எப்படி இருக்கும் என்று குர் ஆன் கூறுகிறது
كُلَّمَا نَضِجَتْ جُلُودُهُم بَدَّلْنَاهُمْ جُلُودًا غَيْرَهَا
لِيَذُوقُوا الْعَذَابَ ۗ
மறுமையை பற்றிய இந்த நம்பிக்கை முஸ்லிம்களிடம் உறுதியாக இருக்கும் என்று சொல்கிற وَهُم بِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ (4) இந்த வசனம் இன்னொரு செய்தியையும் சொல்கிறது.
இந்த
நம்பிக்கை முஸ்லிம்களிடம் மட்டும் தான் இருக்குக்.
ஒரு
எதார்த்த்தில் உலகில் இப்படி ஒரு நம்பிக்கை கொள்கிற சூழ்நில வேதக் கார சமுதாயமான யூதர்கள்
கிருத்துவர்களிடம் கூட இப்போது அழுத்தமாக வெளிப்படுவதில்லை.
இந்த
சிந்தனை மக்களிடையா இரண்டு பெரிய விளைவுகள்ள ஏற்படுத்தியிருக்கிறது.
மறுமை நம்பிக்கையின் விளைவுகள்
நன்மைகளை அதிகம் செய்ய ஆர்வமூட்டுகிறது
உலக
சுகங்களை பெரிதாக கருதாமல் மகத்தான காரியங்களை செய்யத் தூண்டுகிறது.
பத்று
யுத்த்தின் போது சொர்க்கத்தை சொல்லி சஹாபாக்களை தூண்டிக்
கொண்டிருந்தார்கள். பேரீத்தம் பழங்களை சாப்பிட்டுக் கொண்டு சாதாரணமாக இருந்த ஒரு
நபித்தோழர் இதில் நான் ஷஹீதானால் சொர்க்கம் கிடைக்குமா என்று கேட்டார். சொர்க்கம் கிடைக்கும் என்று பெருமானார்
(ஸல்) அவர்கள் கூறினார்கள். பேரீத்தம் பழ பையை சட்டென்று அப்புறமாக வீசிய அந்த நபித்தோழர் தீவிரமாக போரில்
ஈடுபட்டு ஷஹீதானார்.
فقَال رسُول اللَّه ﷺ: قُومُوا
إلى جَنَّةٍ عَرْضُهَا السَّمواتُ وَالأَرْضُ قَالَ:
يَقولُ عُمَيْرُ بنُ الحُمَامِ الأنْصَارِيُّ t: يَا رسولَ اللَّه جَنَّةٌ عَرْضُهَا
السَّمواتُ والأرضُ؟ قالَ :نَعم قالَ: بَخٍ
بَخٍ، فقالَ رَسُولُ اللَّه ﷺ: مَا يَحْمِلُكَ عَلَى
قَولِكَ بَخٍ بخٍ؟ قالَ: لاَ
وَاللَّهِ يَا رسُول اللَّه إلاَّ رَجاءَ أَنْ أكُونَ مِنْ أهْلِها، قَالَ: فَإنَّكَ مِنْ أهْلِهَا فَأخْرج
تَمَرَاتٍ مِنْ قَرَنِهِ، فَجَعَل يَأْكُلُ منْهُنَّ، ثُمَّ قَال لَئِنْ أنَا
حَييتُ حَتَّى آكُل تَمَراتي هذِهِ إنَّهَا لحَيَاةٌ طَويلَةٌ، فَرَمَى بمَا كَانَ
مَعَهُ مَنَ التَّمْرِ. ثُمَّ قَاتَلَهُمْ حَتَّى قُتِلَ. رواهُ مسلمٌ
தாயிப் யுத்த்த்தில் அபூசுப்யான் ரலி அவர்களின் கண் பறி போனது அந்த கண்ணை கையில் வைத்துக் கொண்டு பெருமானாரிம் வந்தார். நி பொறுத்துக் கொண்டால் இதற்கு பதில் சொர்க்கத்தில் கிடைக்கும் என்று பெருமானார் ஸல் கூறினார்கள் . அவர் அது போதும் என்று சொல்லி கையில் வைத்திருந்த கண்னை தூகி வீசினார்.
أصيبت عين أبي سفيان (رضي الله عنه)
بسهم في هذه الغزوة، فأتى النبي ﷺ وعينه في يده، وقال: يا رسول الله، هذه عيني
أصيبت في سبيل الله، فقال: «إن شئت دعوت فرُدَّت عليك، وإن شئت فعين في الجنة»،
قال: في الجنة، ورمى بها من يده،
மறுமை நம்பிக்கையின்
மற்றொரு முக்கிய விளவு ரெஸ்பான்ஸ்பிலிட்டி
பொறுப்புணர்வை
தருகிறது.
எனது ஒவ்வொரு
செயலுக்கும் நான் பெறூப்பேற்க வேண்டும்,
தப்பி ஓட முடியாது. .
மறுமையில் சிறிய
நன்மைக்கும் பெரிய கூலி கிடைக்கும்.
·
லைலத்துல் கத்ரு இரவின் இரண்டு ரகாஅத் தொழுகைக்கு
ஆயிரம் மாத்த்திலும் அதிக நன்மை செய்த கூலி கிடைக்கும்.
·
பள்ளி வாசல் கட்ட உதவி செய்தால் ஒரு மாளிகை
கிடைக்கும்.
·
ஒரு கபன் துணி வாங்கிக் கொடுத்தால் பச்சை
பட்டாடை கிடைக்கும்.
அதே போல
மறுமையில் எந்த சிறிய தீமைக்கும் விசாரணை உண்டு.
இந்த சிந்தனையை
முஸ்லிம்களிடம் இஸ்லாம் அழுத்த்தமாக விததைத்த்தன் பலனை உலகம் மிக சிற்ப்பான
முறையில் கண்டிருக்கிறது.
அதன் ஒரு உதாரணம்
உமர் ரலி அவர்கள். இருபத்தி இரண்டரை இலட்சம் கிலோ மீட்டரை ஆட்சி செய்தவர் பயந்து
பயந்து அதிகாரத்தில் இருந்தார்.
என நிர்வாகத்தில்
இராக்கிலுள்ள யூப்ரடீஸ் நதிக் கரையில் ஒரு ஒட்டக்க பசியால் இறந்து கிடக்குமானால்
அதற்கு நான் பதில் சொல்ல கடமைப் பட்டவன் என்று உணர்ந்து நடத்தார்.
أنه قال: "لو مات جمل ضياعاً على شط الفرات لخشيت أن يسألني
الله عنه"
பாலஸ்தீனத்தை
வெற்றி கொண்ட பிறகு அங்கு சென்ற உமர் ரலி அவரகள் ஒரு சிறிய இடைவெளிக்கு பிற்கு
மதீனாவிற்கு திரும்பினார்கள். மக்களின் நிலையை அற்ந்து கொள்ள நினைத்தார்கள்.
அப்துர் ரஹ்மான பின் அவ்ப் ரலி அவர்களோடு ஊரை சுற்றி பார்க்க கிளம்பினார்,
ஒரு கூடாரத்தில்
விளக்கு எரிந்து கொண்டிருந்த்து. குழந்தைகளின் அழுகை சத்தம் கேட்டது. அந்த
இட்த்திற்கு சென்ற போது ஒரு பெண்மணி அடுப்பில் வெறும் தண்ணீரை வைத்து விட்டு அதை
கிண்டுவது போல நடித்துக் கொண்டிருந்தார். அவரை சுற்றி குழந்தைகள் அழுது
கொண்டிருந்தார்கள். அனுமதி பெற்று உள்ளே சென்ற அவ்விருவரும். என்ன செய்கிறாய்
என்று கேட்டார்கள். அந்த பெண் மணி கூறினார்.
என்
குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு என்னிடம் எதுவும் இல்லை. வெறும் தண்ணீரை ஊற்றி உணவு
தயார் ஆவது போல நடித்துக் கொண்டிருக்கிறேன். அழுது அழுது அசதியில் குழந்தைகள்
தூங்கி விடுவார்கள் என்று நினைக்கிறேன் என்று கூறினார்.
கலங்கிக் போன
உமர் ரலி அவர்கள் உடனடியாக அரச களஞ்சியத்தின் காவலரை அந்த நள்ளிரவில் எழுப்பில்
என் முதுகின் மீது மாவு மூட்டைகளை ஏற்று என்று கூறினார்.
அலுவலர்
தயங்கினார். நான் சுமந்து வருகிறேன் என்றார். என் மக்களுக்கு நான் செய்த பாவச்
சுமைகளை நீ ஏற்பாயா என்று கேட்டார்கள் .
உமர் ரல் கூறிய
வரலாற்று சிறப்பு மிக்க வாசகம் இது
احمل عليّ..أتحمل عني
أوزاري يوم القيامة؟.
உமர் ரலி அவர்கள்
தன் முதுகில் மூட்டைகளை சுமந்து கொண்டு அந்த கூடாரத்தில் இறக்கினார். தானே அடுப்பின் அருகே சென்று ஊதி
ஊதி அடுப்பை மூட்டி சமைக்க தொடங்கினார்.
அப்துர் ரஹ்மான்
பின் அவ்ப் ரலி கூறுகிறார். உமர் ரலி அவர்களின் தாடியின் வழியாக புகை வருவதை நான்
பார்த்தேன்.
இந்த காட்சியை
பார்த்துக் கொண்டிருந்த அந்த பெண் மணி யார் வந்திருக்கிறார் என்பதை அறியாமல்
கலீபா உமரை விடநீர் சிறந்தவர் என்று கூறினார்.
நடுக்கமுற்ற உமர்
ரலி அவர்கள் அம்மா உங்களது நிலை அவருக்கு எப்படி தெரியும் என்று கேட்டார். அதற்கு
அந்த பெண் பதிலளித்தார்.
அப்படியானால்
அவர் என்ன கலீபா ?
அதிர்ச்சிய்டைந்த
உமர் ரலி அவர்கள் மறு நாள் கலீபாவை பார்க்க் வருமாறு கூறினார்.
மறு நாள் அந்தப்
பெண்மணி மஸ்ஜிதுன்னபவிக்கு வந்து பார்த்தார்.
உமர் ரலி அவர்கள்
அலி ரலி அவர்களுக்கும் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் ரலி அவர்களுக்கும் இடையே
அமர்ந்திருந்தார்கள்.
உனக்கு நான்
செய்தி அநீயை நீ என்ன செய்தால் திருப்தி கொள்வாய் என்று அந்த பெண்ணுக்கு ஆறு நூறு
திர்ஹம்களை வழங்கினார்கள். பின்னர் இதை அப்துல்லாஹ் பின் மஸ்வூத் ரலி அவர்களிடம்
ஒரு ஏட்டில் எழுதுமாறு கூறினார்கள். அப்படியே எழுதப் பட்டது.
அந்த ஏட்டை தனது
மகன் இப்னு உமர் ரலி அவர்களிடம் ஒப்படைத்த உமர் ரலி அவர்கள் நான் மரணிக்கும் போது
எனது கப்ரில் இந்த ஏட்டையும் வைத்து அடக்கம் செய்யுங்கள். நான் இந்த ஏட்டுடன்
அல்லாஹ்வை சந்திக்க் வேண்டும் என்று கூறினார்கள்.
قام عمر من فوره وذهب إلى خازن المال وأيقظه
من نومه ثم قال احمل علي من أكياس الدقيق والزيت، فنظر الرجل من الدهشة وقال أحمل
عليك أم عنك يا أمير المؤمنين فصاح به عمر وقال: بل احمل عليّ فكررها ثلاثا
والغلام لم يتمالك نفسه ولسانه من الدهشة وصار يردد أحمل عنك أم عليك يا أمير
المؤمنين، فقال عمر الفاروق: احمل عليّ أتحمل عني أوزاري يوم القيامة؟ ثم حملها
عمر الفاروق على كتفيه وذهب مسرعا إلى خيمة العجوز …
أوقد النار ونفخ فيها حتى تستعر .
يقول عبدا لرحمن بن عوف: والله إني أرى
الدخان يخرج من خلال لحيته، ووضع القدر على النار ثم وضع الدقيق والزيت وصنع
الطعام والمرأة تنظر بعين الدهشة، فلم تتمالك نفسها إلا أن قالت: والله إنك أحق
بالخلافة من عمر، ثم تولى إلى طرف الخيمة وقد ازداد البرد فقال له عبد الرحمن بن
عوف، لنذهب يا أمير المؤمنين، فقال ولله لا أذهب عنهم حتى أراهم يضحكون كما جئتهم
يبكون، وبعد أن شبع العيال وذهب عنهم الجوع وسمع ضحكاتهم تتعالى قال للمرأة تعالي
إلى عمر غدا حتى ينظر في حالك. ثم ذهب إلى المسجد؛ فقد حان وقت الفجر، ويقول عبد
الرحمن بن عوف: والله لم نستطع أن نسمع صوته في الصلاة من شدة بكائه .
ثم جاءت المرأة من الغد ورأت عمر الفاروق
جالسا وعن يمينه علي بن أبي طالب وعن يساره عبدالله بن مسعود وكلاهما يقول له: يا
أمير المؤمنين، فتملك الصمت المرأة ولم تقدر على الكلام، فقال لها عمر: تعالي يا
أمة الله، بكم تشتري مظلمتك التي ظلمتك بها، فلم تقدر على الكلام، ثم نظر إلى عبد
الله بن مسعود وقال له أكتب: هذا كتاب من عبد الله عمر بن الخطاب بأنه قد اشترى
مظلمة المرأة بستمائة درهم، وشهد بذلك علي بن أبي طالب وعبد الله بن مسعود، ثم قال
لابنه: عبدالله إذا مت فضعوا الكتاب في قبري حتى ألقى به الله تعالى .
நான் பதிலளிக்க கடமை பட்டவன் என்கிற சிந்தனை
மனிதர்களை மகத்தான மனிதர்களாக்க கூடியதாகும்.
என்னிடம் கேள்வி கேட்க யார்
இருக்கிறார் என்பது தான் இன்றைய அரசியல் தலைவர்கலை அக்கிரம்ம் செய்ய தூண்டு கிறது.
அமெரிக்க அதிபர் சமீபத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். அதில்
அவர் ஐரோப்பிய தலைவர்களோடு அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். அவருக்கு பின்னே ஒரு காட்சி இருக்கிறது.
அந்த காட்சியில் அவரது தலைக்கு பின்னே தெரிகிற வரை படத்தில் கண்டா நாடு
அமெரிக்காவின் ஒரு பகுதியாக சேர்த்து காட்டப் பட்டுள்ளது.
அதே போல அமெரிக்க அதிபர் டென்மார்க்கிற்கு சொந்தமான கிரீன் லாண்டை தனக்கு
வேண்டும் என்று சிறுபிள்ளை போல கேட்கிறார்.
உலகின் பெரும் போர்க் குற்றவாளியான இஸ்ரேலின் அதிபர் நெதன்யாகுவை அவர் புதிதாக
அமித்துள்ள Board of Peace போர்ட் ஆப் பீஸ் அமைதிக் குழுவில் ஒரு உறுப்பினராக சேர்க்கிறார்.
இப்படி எல்லாம் செய்ய என்ன காரணம்.
என்னை யார் கேள்வி கேட்க முடியும் என்ற நினைப்பு தான் காரணம் ‘
இதை யோசித்துப் பார்க்கிற போது இஸ்லாம் கட்டமைத்த மறுமை சிந்தனை என்பது
எவ்வளவு மத்தானது என்பதை நாம் புரிந்து கொள்ல முடியும்.
நமது பொறுப்பை நாம் உணர்ந்து கொள்வது மறுமை சிந்தனையின் அடிப்படை
வெளிப்பாடாகும்.
ஒரு குடும்பத் தலைவனாக நான் செய்ய வேண்டும் ?
ஒரு இளைஞ்னாக நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் ?
ஒரு தொழிலாளியாக எனது
பொறுப்பு என்ன என்று யோசித்து செயல்படுகிற எவரும் சிறப்பன வாழ்க்கையும் இங்கும்
பெறுவார்கள். நாளையும் பெறுவார்கள்.
இன்னொரு ரகசியமும் இருக்கிறது.
மறுமை சிந்தன்னயோடு வாழும் போது அது பரக்கத்திற்கு காரணமாக மையும்.
நபி ஸல் அவர்கள் தினசரி மஃரிபு தொழுகைக்குப் பின் சூரா வாகிஆ வை ஓதி வந்தால்
வருமை தீண்டாது என்றார்கள்.
வாகி ஆ சூரா முழ்வதுமே மறுமையை பற்றி பேசுகிற செய்திகளை கொண்ட்தாகும்.
மறுமை சிந்தனைக்கும் பரக்கத்திற்கும் இடையே உள்ள ரகசிய தொடர்பை இது புரிய
வைக்கிறது.
இன்றைய முஸ்லிம்களின் தலைமுறையில் மறுமை சிந்தனை குறைந்து வருகிறது.
அது நம்மிடம் மறுமை சிந்தனை குறைந்து இருந்த்தின் அடையாளமாகும்.
நாளை மறுமை இருக்கிறது, அதில நாம் பதில் சொல்ல கடமைப் பாட்டிருக்கிறோம். நல்லது
செய்தால் நிம்மதில் தீமை அதிகரித்தால் அதோ கதிதான் என்ற சிந்தனை சிறுவயதிலிருந்த்து
நமது பிள்ளைகளுக்கு மிக எதார்த்தமாக போதிக்க பட வேண்டும்.
இறைவா எங்களையும் எங்களது பிள்ளைகளையும் மறுமை சிந்தனை கொண்டவர்களாக ஆக்கு என்று
பிரார்த்திபோம் .
பொறுப்புக்களை உணர்ந்து நடப்போம்.
அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!
(நாகப்பட்டினம்
டூ கோவை பேருந்து பயணத்தில்)
No comments:
Post a Comment