தயங்கி நிற்பதல்ல இறங்கிப் பணி செய்வதே சீர்திருத்தம்!
وَالْعَصْرِ(1)إِنَّ الْإِنسَانَ لَفِي خُسْرٍ(2)إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ(3
சீர்திருத்தம் செய்ய முயற் செய்வதும், நல்ல விசயங்களை எடுத்துச் சொல்வதும் மனித இனத்தின் தார்மீக கடமை என்ற நிலை மாறி அதை தேவையற்ற தலையீடாக கருதுகிற சூழ்நிலை உருவாகி இருக்கிறது.
மதுவினால் சமுதாயம் சகதியில் விழுந்து கிடக்கிறதா? பரவாயில்லை அது கிடந்து விட்டு போகட்டும். மதுக்குடிக்காதே! என்று நீ சட்டம் போடாதே! இது போல இன்னும் பல..
சக மனிதன் மதி கெட்டுச் சீரழிந்தாலும் சரி. அது அவனது உரிமை. அந்த உரிமையில் தலையிடுவது அநாகரீகம்.
சிறிய எழுத்தில் குடி குடியை கெடுக்கும் என்று எழுதி வைத்து விடுவதுதான் இன்றைய நாகரீகம்.
இதனால் மக்களிடம் அறிவுரை சொல்வதோ சீர்திருத்தும் முயற்சியோ நன்மை பெறுவதற்கான ஒரு வழி என்ற மரியாதையை இழந்து விட்டது. ஒரு கட்டத்தில் சீர்திருத்தம் பேசுவது, மனித உரிமை மீறலாகவும் பிற்போகுத்தனமாகவும் காட்டுமிராண்டித்தனமாகவும் கூட சித்திரிக்கப்படுகிறது.
இதனால் தங்களது சொந்தக் குழந்தைகளை கூட வழிப்படுத்த முடியாத சூழ்நிலை மேலை நாட்டு பெற்றோர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் ஒரு தந்தை தன்னுடைய மகளை கண்டித்தார். தந்தை தன்னை துன்புறுத்துவதாக நீதிமன்றத்தில் வழக்குத் ஆந்தப் பெண் தொடர்நது தனியாக வாழ அனுமதி பெற்றேதோடு தந்தையிடமிருந்தே மாதச் செலவுக்கான தொகையும் பெற்றுக் கொண்டிருக்கிறாள்.
.
காலப் போக்கில் தீமை தடுக்க வேண்டும் என்ற எண்ணமே காணாமல் போய்விட்ட்து.
இதை இஸ்லாம் ஏற்கவில்லை. .நபிகள் நாயகம் (ஸல்) அவர்கல் மதம் மார்க்கம் என்றால் என்ன என்பதற்கு கொடுத்த விளக்கமே என்ன தெரியுமா.
الدين النصيحة
தேவையான நேரத்தில் தகுந்த அறிவுறைகளை வழங்குவதே மார்க்கத்தின் அடையாளமாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ عَجِبَ اللَّهُ مِنْ قَوْمٍ يَدْخُلُونَ الْجَنَّةَ فِي السَّلَاسِلِ
“ஓரு மக்கள் கூட்டத்தைப் பார்த்து அல்லாஹ் ஆச்சரிய மடைகிறான். கைவிலங்கோடு அவர்கள் சுவர்கத்துக்குள் நுழைவார்கள். (புகாரி 3010)
விலங்கிடப்பட்ட நிலையில் சொர்க்கத்தில் நுழைபவர்கள் என்ற வார்த்தை, வேறு வழியில்லாத நிர்பந்த சூழ்நிலையில் இஸ்லாத்தை ஏற்பவர்களை குறிக்கிறது. முஸ்லிம்களோடு சண்டையிட்டு தோற்றுப் போனவர்கள் கைதிகளாக பிடிக்கபட்டு கைவிலங்கிட்டு அழைத்துச் செல்லப்படுகிற போது அந்த தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காக இஸ்லாமை தழுவினால் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள். அத்தகையோர் நிர்பந்த சூழ்நிலையில் இஸ்லாமை தழுவினாலும் இஸ்லாமை ஏற்குதல் என்கிற அபரிமிதமாகன நன்மையின் விளைவாக சொர்க்கத்திற்குள்ளே நுழையும் வாய்ப்பை பெற்றுவிடுகிறார்கள். அதை கண்டு தான் அல்லாஹ் ஆச்சரியமடைவதாக பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
அல்லாஹ் ஆச்சரியமடைகிறான் என்ற வார்ததை அல்லாஹ் திருப்தியடைகிறான் என்ற பொருள் கொண்டது என ஹாபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
குறும்புக்கார மாணவர் ஒருவர் ஆசிரியரிமிருந்து தண்டனை பெற்ற பிறகு சரியாக நடந்து கொண்டால் அதைப்பார்த்து ஆசிரியருக்கு ஏற்படுமே ஒரு திருப்தி கலந்த ஆச்சரியம் அத்ததைகய திருப்தி , நிர்பந்த சூழ்நிலையில் இஸ்லாமை ஏற்றுக் கொண்டு சொர்க்கத்திற்கு சொந்தக்காரர்களாகிறவர்களைப் பார்த்து அல்லாஹ்வுக்கு ஏற்படுகிறது.
மக்கா வெற்றியடைந்தவுடன் இஸ்லாமைத் தழுவியோர் பலரும், தாயிப் நகரிலிருந்து இஸ்லாமைத் தழுவியோர் பலரும் இத்தைகய மனோ நிலையில் தான் இஸ்லாமைத் தழுவினார்கள். ஆயினும் இஸ்லாமின் பலாபலன்களை உணர்ந்த பிறகு மிக உண்ணதமான முஸ்லிமாக அவர்கள் மாறினார்கள்.
சீர்திருத்தத்திற்கான முயற்சியை எந்த எல்லை வரை கொண்டு செல்ல வேண்டும் என்பதையும் இந்நபி மொழி உணர்த்துகிறது.
ஓரு சீர்திருத்வாதி நிர்பந்தப்படுத்தக் கூடாது தான் என்றாலும் நிர்பந்த சூழ்நிலையை உருவாக்கி அவரை தன் பக்கத்திற்கு ஈர்ப்பது தவறாகாது. அத்தகைய நிர்பந்த சூழ்நிலைகளை உருவாக்க்குவதில் அவர் அக்கறை எடுத்தக் கொள்ள வேண்டும்.
இஸ்லாமின் இரண்டாம் ஜனாதிபதி உமர் (ரலி) தமது ஆட்சிக்காலத்தில் ஒரு வயதான பெண்மணியை அணுகி இஸ்லாமை எடுத்துச் சொன்னார். அந்தப் பெண்மணி மறுத்துவிட்டார்.
أنا عجوز كبيؤة والموت إلي قريب
“நான் முதிர்ந்தவள்.மரணத்தின் பக்கத்திலிருப்பவள். இந்த சமயத்தில் என்னை விட்டு விடுங்கள்” என்று சொன்னார். “மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை” என்ற குர்ஆனிய வசனங்களை முனுமுனுத்தபடி உமர் (ரலி) அந்த இடத்தை விட்டு அகன்று விட்டார்.
இந்த நிகழ்வில் ஒரு சீர்திருத்த வாதியின் அக்கறைக்கான அளவும் அதன் எல்லையும் மிகத்துல்லியமாக வரையரைக்கு உட்பட்டிருப்பதை காணலாம்.
ஒரு ஜனாதிபதி தனது சமூக கடமையை எந்த நிலையிலும் மறக்கவில்லை. ஓரு கிழவியொடு பேசுகிற அளவுக்கு கீழே இறங்கி வரவும் அவர் தயங்கவில்லை. ஓரு ஆட்சித் தலைவர் இறங்கி வந்து ஒரு குடியானவனிடம் பேசினால் அது ஒருவகை நிர்பந்தமாகி விடாதா என்று அவர் கவலைப் படவும் இல்லை. ஆனால் அந்த பெண் மறுத்த போது அவளை அவர் நிர்பந்தப்படுத்தவும் இல்லை.
ருஷ்யாவில் லெனின் ஸ்டாலின் போன்றோர் கம்யூனிஸத்தை பரப்பியதற்கும், முஸ்லிம்கள் வெற்றி கண்ட நாடுகளில் கலீபாக்கள் இஸ்லாமைப் பரவச் செய்தத்தற்கும் இடையே உள்ள மிக முக்கியமான வேறுபாடு இது.
ஓரு நிர்பந்த சூழ்நிலைக்கு உட்படுத்துவது வரை சீர்திருத்தவாதி கவனம் செலுத்த வேண்டும். ஆனால் நியாயம் இன்றி எவரையும் நிர்பந்தப்படுத்தக் கூடாது.
சிறுவரை நோய் விசாரிக்கச் சென்ற இட்த்தில் இஸ்லாமை போதித்த பெருமானார்
عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَانَ غُلَامٌ يَهُودِيٌّ يَخْدُمُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَرِضَ فَأَتَاهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُودُهُ فَقَعَدَ عِنْدَ رَأْسِهِ فَقَالَ لَهُ أَسْلِمْ فَنَظَرَ إِلَى أَبِيهِ وَهُوَ عِنْدَهُ فَقَالَ لَهُ أَطِعْ أَبَا الْقَاسِمِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَسْلَمَ فَخَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَقُولُ الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَنْقَذَهُ مِنْ النَّارِ (புகாரி 1356)
இது தான் கொள்கை வாதிக்கான அடையாளம்
.
மது அருந்துகிற ஒருவரை நாம் தடுத்து திருத்துகிற போது, அல்லது கிடைக்கிற சமயத்தை பயன்படுத்திக் கொண்டு அதைப்பறிறி பிரச்சாரம் செய்கிற போது தான் நாம் அந்தக் கொள்கையுடைவர் என்பது நிஜப்படும்.
ஓரு சீர்திருத்தவாதியின் அடையாளம் அந்தக் கொள்கையை நடைமுறைப் படுத்துவதற்காக ஒரு சூழ்நிலையை உருவாக்குவதில் அவர் எவ்வளவு தூரம் ஈடுபடுகிறார் என்பதை பொறுத்தும்,அதில் எந்த அளவு வெற்றி பெறுகிறார் என்பதை பொறுத்துமே அமைகிறது.
திருக்குர்ஆன் குடும்பத்தை சீர்திருத்துவது குறித்து பேசுகிற போது. (66:6)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا
சீர்திருத்தம் செய்ய முயற்சித்தல் என்ற களத்தின் கணபரிமாணத்தை மிகச் சரியாகவும் பக்குவமாகவும் விண்டுரைக்கிறது.
ஓருவரை நெருப்பிலிருந்து காப்பாற்றுதல் என்றால் அவர் விழுந்த பிறகு காப்பாற்றுதல் என்று அதற்கு பொருளாகாது. “விழாதே ! இறந்துவிடுவாய் என்று ஊதுகுழல் வைத்து உபதேசித்துக் கொண்டிருப்பது அவரைக் காப்பாற்றுவதாகாது. இதையே ஒரு பதாகையில் எழதிக் காட்டி எச்சரிக்கை செய்வதும அவரை காப்பாற்றியதாகாது. அவரது கையைப் பிடித்துத் தடுக்க முயற்சி செய்ய வேண்டும். அப்படித் தடுக்கிற போது தன்சக்தி முழவதையும் பிரயோகித்தால் கூட அது தவறாகிவிடாது.
ஒரு பொறுப்புள்ள மனிதன் இப்படித்தான் செய்யவேண்டும்.சமூக அக்கறை குறித்த இஸ்லாத்தின் கருத்து இந்த அளவு வரை நீண்டு செல்கிறது.
உலகின் மிகச் சிறந்த சீர்திருத்தவாதிகளின் முயற்சிகள் சீர்திருத்தத்தின் எல்லை வரை நீண்டு விடுவதை காணலாம்.
நபி இபுறாகீம் (அலை) அவர்கள் சிலைகளை உடைத்துப் போட்டர்ரக்ள். அது மக்களை யோசிக்க வைக்க மேற்கொண்ட சீர்திருத்தத்தின் ஒரு எல்லையை தொடுகிற முயற்சிதான். சாக்ரடீஸ் ஆட்களை கண்டால் விடமாட்டார். ஏன் எதற்கு என்று சிந்திக்கும் படி தூண்டிக் கொண்டே இருப்பார். பொது இடங்கள் ச்நந்தி முனைகளில் அவரது சத்தம் ஒலித்துக் கொண்டிருக்கும். அதுவும் சீர்திருத்த வேட்கயின் எல்லைலக்ளே!
தமிழகத்தின் தலை சிறந்த சிந்தனாவாதியான பெரியார் சிலைகளுக்கு செருப்பு மாலை அணிவித்ததும் அந்த எல்லை தொடுகிற முயற்சியே.
மூஸா அலை தன்னை எதிர்த்து களத்திற்கு வந்து விட்ட சூனியக்கார்ர்களைப் பார்த்து கடைசி நிமிட்த்திலும் உப்தேசித்தார். அது அவர்களது உள்ளத்தில் ஒரு தடுமாற்றத்தை உண்டு பண்ணியது. (20: 60,62)
فَتَوَلَّى فِرْعَوْنُ فَجَمَعَ كَيْدَهُ ثُمَّ أَتَى(60)قَالَ لَهُمْ مُوسَى وَيْلَكُمْ لَا تَفْتَرُوا عَلَى اللَّهِ كَذِبًا فَيُسْحِتَكُمْ بِعَذَابٍ وَقَدْ خَابَ مَنْ افْتَرَى(61)فَتَنَازَعُوا أَمْرَهُمْ بَيْنَهُمْ وَأَسَرُّوا النَّجْوَى(62)
அதிர்ஷட் வசமாக முஸ்லிம் சமுதாயத்தின் சீர்திருத்த சிந்தனை முழுமையாக மழுங்கி வ்டவில்லை.
மது ஆபாசம் வட்டி வெட்கமினமை ஆகிய கலாச்சார சீரழிவுகள் சர்வசாதாராண விசயங்களாக ஆகிவிட்ட இன்றை கலாச்சார சூழலில் கூட அதற்கு எதிராக இஸ்லாமின் சீர்திருத்தப் பிரச்சாரம் வலுவாக்வே இருக்கிறது. மேற்குலக அரசுகளும் மீடியாக்களும் அதை கண்டுதான் அச்சம் கொள்கின்றன,
ஆனாலும் சீர்திருத்த முயற்சியின் வேகமும் பரப்பளவும் முஸ்லிம் சமுகத்திடம் குறைந்து போயிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.
சீர்திருத்துதல் என்பது வாழ்வின் ஒரு பிரதான கடமை என்பதை நாம் மறந்து விடக் கூடாது. நம்மிடம் சீர்திருத்தச் சிந்தனை மல்ர்ச்சியாக தெளிவாகவு உறுதியாகவும் இருக்கிற வரை தான் நாம் வெற்றிகரமான சமுதாயமாக இருக்க முடியும்.
மிகச் சிறிய அத்தியாயமான அல் அஸ்ர் மிக அழுத்தமாக் நமக்கு இந்த ரகசியத்தை சொல்லித்தருகிறது.
وَالْعَصْرِ(1)إِنَّ الْإِنسَانَ لَفِي خُسْرٍ(2)إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ(3)
வெற்றி கரமான குடும்பத்தலைவராக வெற்றிகரமான வியாபாரியாக வெற்றிகரமான தலைவராக திகழ் விரும்புகிற எவரும் தமது சீர்திருத்தச் முயற்சியின் அளவு குறித்து விழிப்போடு இருக்க வேண்டும்.
மார்க்கத்திற்காக – உயர்பண்பாட்டிற்காக குடும்பத்தை பக்குவப்படுத்துவதில் எந்த அளவு முயற்சி செய்தீர்கள்?
என் பையன் எதச் சொன்னாலும் கேட்க மாட்டேன்கறான் என்று சிலர் புலம்புவார்கள் அது பொய் அக்கறை.
தவறான வழியில் செல்லும் குடும்பத்தினரை வெத்து மிரட்டல் விடுப்பது அல்லது புலம்பித் தீர்ப்பது என்று மட்டுமிராமல் அவர்களுக்கு காசு கொடுக்காமல் கட்டுப்படுத்தி வைத்து அல்லது வசதி வாய்ப்புக்களை முடக்கி வைத்து நெறிப்படுத்த முடியாதா? ஆந்த அளவுக்கு நாம் சென்றோமா?
பணியாளர்களை நெறிப்படுத்துவதில் எவ்வளவு தூரம் நமது செல்வாக்கை செலுத்தினோம்?
தவறு செய்பவர்களை திருத்துவதில் எந்த அளவு அக்கறை செலத்துகிறீர்கள்? உறவுகளோ நண்பர்களோ தவறு செய்கிற போது உறவு அல்லது நட்புப் பாலத்தை நெருக்கியும் இறுக்கியும் அவர்களை வழிதிரும்பச் செய்ய முடியாதா?
உன்னுடன் சுற்றுலா வருவதற்கு எனக்கு சம்மதம்.ஆனால் நீ இப்ப்டி இப்படி நடந்து கொள்ளக் கூடாது. இப்படி இப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்வது குறும்புக்கார நணபையும் காப்பாற்றும் நம்மையும் காப்பாற்றும்.
இளைஞர்கள் தங்களது நண்பை சீர்திருத்திக் கொள்ள சிறந்த வழி தம்மால் இயன்ற நிர்பந்த்த்தை ஏற்படுத்துவது. குடித்து விட்டு வருகிற நணபனிடம் உரையாடீனீர்கள் என்றால் அவன் நாளை உங்களுக்கு முன்னாலேயே குடிப்பான்.
சமூகத் தீமைகளுக்கு எதிரான போராட்டத்தில் எந்த அளவு பங்கு செலுத்துகிறீர்கள்? மேடைப் பேச்சு மட்டும் தானா? ஆக்ககரமான மற்ற நடவடிக்கைகள் எதுவும் இல்லையா??
அறிவுரைகளை யார் கேட்கிறார்கள்? இந்தக் காலத்தில் அதற்கெல்லாம் இடமில்லை என்று த்த்துவம் பேசி ஒதுங்கி விடக்கூடாது.
காரணம் :
· அது இஸ்லாமிய மார்க்கம் கற்றுத்தந்த வழிமுறை அல்ல!
· அதுவும் நன்மைகளை சம்பாதித்துக் கொள்ளும் ஒரு வழி!
· நமது கடமையை நாம் செய்தாக வேண்டும்.
· எந்த அறிவுறையும் பயனின்றி போகாது மூஸா. (அலை) சூனியக்காரர்களுக்கு செய்த அறிவுறை அதற்கு ஒரு உதாரணம்.
· எங்க அத்தா/ உஸ்தாது சொன்ன போது இது வெல்லாம் எங்களுக்கு புரியலே இப்போது தான் புரிகிறது என்று பலரும் சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அறிவுறை பயன்பட சிறிது காலதாமதமாகி இருக்கிறது என்றே அதற்கு பொருள். தந்தையும் உஸ்தாதும் தங்களது க்டமையை செய்து் விட்டார்கள் என்பதும் நிரூபணமாகிவிடும்.
· அறிவுரைகளை தொடர்ந்து தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் அறிவுரைகள் கட்டாயமாக தகுந்த பலனை த்ரும்.
· அறிவுரைகளும் சீர்திருத்த்தையும் கவனத்தில் கொள்கிற போதுதான் நாம் வெற்றியடைய முடிய்ம். சமுதாயமும் நலம் பெறும்.
சீர்திருத்த வாதி கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான செய்தி
முந்தையை நிலையை அடியோடு மாற்றிப் போடுவது அல்ல சீர்திருத்தம்
சரியான சீர் திருத்தின் அடையாளம்
· தேவையான அளவில் மாற்றம் செய்வது.
· மக்களிடம் சஞ்சலம் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்வது
மக்கா வெற்றிக்குப் பின் கஃபாவிலிருந்த சிலைகளை அகற்றிய பெருமானார் (ஸல்) காபிர்கள் அணிவித்திருந்த திரைச் சீல்யை மாற்றவில்லை.
لم يكسُ رسول الله صلى الله عليه وسلم وصحابته الكعبة قبل الفتح ، لأن الكفار ما كانوا يسمحون بذلك ، وعندما تَّم فتح مكة لم يغير رسول الله صلى الله عليه وسلم كسوة الكعبة حتى احترقت على يد امرأة تريد تبخيرها ، فكساها الثياب اليمانية ، ثم كساها أبو بكر وعمر وعثمان القُباطي
க்ஃபாவை இடித்து விட்டு இபுறாகீம் (அலை) காலத்திலிருந்த்து போல பெரிதாக கட்ட விரும்பிய போதும் மக்கள் சஞ்சலப் படக்கூடும் என்பதனால் நபி (ஸல்) அதை செய்ய வில்லை.
தேவையற்ற மாற்றங்களை செய்வது அளவு கடந்த தற்பெறுமையாகும் அல்லது வீண்வேலையாகும்
பிரிட்டிஷ்கார்களை எதிர்த்த பிரான்ஸ் மக்கள் போக்குவரத்தில் வலது புறம் செல்லும் நடைமுறையை கடை பிடித்தன்ர் Keep Right – சுவிட்ச் ஆன் செய்வதில் மேல் நோக்கி அழுத்தும் நடைமுறையை கையாண்டனர்.
இது புரட்சியாகாது. மக்களின் பாராட்டை பெற்றுத் தராது. நன்மையாகவும அமையாது.
தற்போதைய தமிழகழகத்தில் 500 கோடி ரூபாய் செலவு பிடித்த சமச்சீர் கல்வித்திட்ட்த்தை புதிய அரசு இரத்து செய்துள்ளது.
இது புதிய அரசுக்கு புகழ் சேர்க்காது.
நல்லாட்சியின் இலக்கணம்
அபூபக்கர் (ரலி) அவர்கள் பொறுப்பேற்றதும் சொன் முதல் வார்த்தை
إنما أنا متبع لا مبتدع
ஒரு அரசு மாறும் போது என்னெ வெல்லாம் மாற்றம் வருமோ என்று மக்கள் சஞ்சலம்டையும் நிலை இருக்க்க் கூடாது.
இது அரசுக்கு மட்டுமல்ல அனைத்து நிர்வாக அமைப்புக்களுக்கும் பொறுந்தும்.
ஒரு பொறுப்புக்கு புதிதாக வருகிற அனைவரின் மேஜைமேலும் நினைவூட்ட வைக்கப் பட வேண்டிய அற்புதமான வாசகம் இது
إن أريد إلا الإصلاح ما استطعت
ஒரு பள்ளிவாசலில் முந்தையை நிர்வாகம் கட்டிய சுவருக்கு புதிய நிர்வாகம் சிமெண்ட் பூச மறுத்து விட்ட்து.
அந்தப் பள்ளிவாசலின் திறப்பு விழாவிற்கு சென்ற பேச்சாளர் ஒருவர் இதைய நயமாக குறிப்பிட்டார்
உங்களுடைய பள்ளிவாசல் தான் பூசல் இல்லாத பள்ளிவாசல்
நம்மையும் நம்மை ஆள்ப்வர்களையும் உண்மையான சீர்திருத்தத்தில் அக்கறை கொண்டவர்களாக அல்லாஹ் ஆக்கியருள்வானாக
No comments:
Post a Comment