வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Tuesday, August 30, 2011

பெருநாள் சிந்தனை உட்பூசலை ஒழிப்போம்.

அனைவருக்கும் இனிய ஈதுல் பித்ர் நல்வாழ்த்துக்கள்.

நன்மையான வழிகளில் கிடைக்கிற எல்ல மகிழ்ச்சியையும் அல்லாஹ் நம் அனைவருக்கும் நிறைவாக தந்தருள்வானக!  

இன்று பொங்கும் மகிழ்ச்சியை அல்லாஹ் என்றும் தங்கச் செய்வானாக!   

تقبل الله طاعتكم، ، نسأل الله تبارك وتعالى أن يهل هلال هذا العيد علينا وعلى المسلمين بالأمن والإيمان، والسلامة والإسلام، والتوفيق لما يحب ويرضى، وأن يجعل هذا العيد بشير خير وبركة على الأمة الإسلامية، وأن يجعله نذير وبال وحسرة على أعداء هذه الأمة
மழிழ்ச்சி பொங்க இங்கே குழுமியிருக்கிற நம் அனைவருக்கும் அல்லாஹ் சொர்க்கத்தை வாக்களிக்கிறான்.
قَدْ أَفْلَحَ مَنْ تَزَكَّى(14)وَذَكَرَ اسْمَ رَبِّهِ فَصَلَّى
(قال القرطبي :
روي عن أبي سعيد الخدري وابن عمر: أن ذلك في صدقة الفطر, وصلاة العيد. وكذلك قال أبو العالية, وقال: إن أهل المدينة لا يرون صدقة أفضل منها, ومن سقاية الماء. وروى كثير بن عبد اللّه عن أبيه عن جده, عن النبي صلى اللّه عليه وسلم في قوله تعالى: "قد أفلح من تزكى" قال: [أخرج زكاة الفطر], "وذكر اسم ربه فصلى" قال: [صلاة العيد].)

فلاح  எனும் வெற்றிசிரமம் இல்லாமல் நாம் நாடியது நிறை வேறுவதையும், அது தீர்ந்து அழிந்து போகாமல் நிலைத்து நிற்கிற வெற்றியையும் குறிக்கும்

உலகத்தின் எந்த வெற்றிக்கும் இந்த வார்த்தையை பயன் படுத்த முடியாது. எனவே فلاح எனும்  வெற்றி சொர்க்கத்தையே குறிக்கிறது.

فعن سعد بن أوس الأنصاري عن أبيه رضي الله عنه قال: قال رسول الله -صلى الله عليه وسلم-: (إذا كان يوم عيد الفطر وقفت الملائكة على أبواب الطرق، فنادوا: اغدوا يا معشر المسلمين إلى رب كريم، يمنّ بالخير، ثم يثيب عليه الجزيل، لقد أمرتم بقيام الليل فقمتم، وأمرتم بصيام النهار فصمتم، وأطعتم ربكم فاقبضوا جوائزكم، فإذا صلوا نادى مناد: ألا إن ربكم قد غفر لكم فارجعوا راشدين إلى رحالكم، فهو يوم الجائزة، ويسمى ذلك اليوم في السماء يوم الجائزة -  ابن رجب-رحمه الله- في لطائف المعارف


 சிந்திக்க வேண்டிய ஒரு முக்கிய அம்சம் நமது அமல்கள் ஏற்கப்பட்ட்தா?

مَن المقبول منا؟
·        كان الإمام علي -رضي الله عنه- ينادي في آخر ليلة من شهر رمضان: يا ليت شعري! مَن هذا المقبول فنهنيه؟ ومن هذا المحروم فنعزيه؟
·        وكان سيدنا ابن مسعود -رضي الله عنه- يقول: مَن هذا المقبول منا فنهنيه، ومن هذا المحروم منا فنعزيه، أيها المقبول هنيئاً لك، أيها المردود جبر الله مصيبتك

நாம்  கவலையில் தோய்ந்து போக தேவையில்லை. நமது அமல்களை அல்லாஹ் ஏற்றுக் கொண்டிருப்பான் என நம்பிக்கையோடு இருப்போம். அதற்காக பிரார்த்தனை செய்வோம். இறைவனை அஞ்சிக் கொள்கிற அந்த மனோ உணர்வை கைவிடாமல் இருப்போம். அல்லாஹ் நமது நம்பிக்கையை நிறைவேற்றுவான்.

·        وقف عمر بن عبد العزيز -رحمه الله تعالى- خطيبًا في يوم عيد الفطر فقال: أيها الناس: إنكم صمتم لله ثلاثين يوماً، وقمتم ثلاثين ليلة، وخرجتم اليوم تطلبون من الله أن يتقبل منكم. فأسال الله أن يتقبل منا جميعا صيامنا وقيامنا، وأن يغفر ذنوبنا و زلاتنا.
அல்லாஹ் நமக்கு சொர்க்கத்தை தருவதாக வாக்களிக்கிறானே அந்த சொர்க்கம் எப்படி இருக்கும்.
وعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ،عَنْ رَسُولِ اللَّهِ r قَالَ:" قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى:أَعْدَدْتُ لِعِبَادِي الصَّالِحِينَ،مَا لاَ عَيْنٌ رَأَتْ،وَلاَ أُذُنٌ سَمِعَتْ،وَلاَ خَطَرَ عَلَى قَلْبِ بَشَرٍ " قَالَ أَبُو هُرَيْرَةَ:" اقْرَءُوا إِنْ شِئْتُمْ:{فَلاَ تَعْلَمُ نَفْسٌ مَا أُخْفِيَ لَهُمْ مِنْ قُرَّةِ أَعْيُنٍ} [السجدة:17] ".- البخاري

وعَنْ أَبِي هُرَيْرَةَ  :  قُلْتُ يَا رَسُولَ اللهِ الْجَنَّةُ مَا بِنَاؤُهَا؟ قَالَ:لَبِنَةٌ مِنْ فِضَّةٍ وَلَبِنَةٌ مِنْ ذَهَبٍ،وَمِلاَطُهَا الْمِسْكُ الأَذْفَرُ،وَحَصْبَاؤُهَا اللُّؤْلُؤُ وَاليَاقُوتُ،وَتُرْبَتُهَا الزَّعْفَرَانُ مَنْ دَخَلَهَا يَنْعَمُ وَلاَ يَبْأَسُ،وَيَخْلُدُ وَلاَ يَمُوتُ،لاَ تَبْلَى ثِيَابُهُمْ،وَلاَ يَفْنَى شَبَابُهُمْ
(ஒரு  செங்கல் தங்கம், மற்றது வெள்ளி, இடையில் வைக்கப்படும் கலவை வாசனை மிக்க கஸ்தூரி, அதன் கற்கள் வைரங்கள் மாணிக்கங்களும், அதன் மண் குங்குமப்பூ, உள்ளே நுழைந்தவர்கள் இன்பமுறுவர். துண்பமே இல்லை. அங்கே நிரந்தரமாக இருப்பர். மரணம் இல்லை. அவர்களது ஆடைகள் அழுக்காகாது கிழியாது. அவர்களது இளமை அழியாது.)

இந்த சொர்க்கம் யாருக்குரியது ?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்
" حفت الجنة بالمكاره وحفت النار بالشهوات
கஷ்டமான காரியங்களாக சொர்க்கம் சூழப்பட்டுள்ளது ஆசைகளால் நரகம் சூழப்பட்டுள்ளது.

குறைந்த வார்த்தையில் சொர்க்கத்தை அடைய வழி சொல்லும் அற்புதமான பொன்மொழி இது.

இன்னொரு நபி மொழி இதை விளக்குகிறது.

وعَنْ أَبِي هُرَيْرَةَ،أَنَّ رَسُولَ اللَّهِ r قَالَ:" لَمَّا خَلَقَ اللَّهُ الْجَنَّةَ قَالَ لِجِبْرِيلَ:اذْهَبْ فَانْظُرْ إِلَيْهَا،فَذَهَبَ فَنَظَرَ إِلَيْهَا،ثُمَّ جَاءَ،فَقَالَ:أَيْ رَبِّ وَعِزَّتِكَ لَا يَسْمَعُ بِهَا أَحَدٌ إِلَّا دَخَلَهَا،ثُمَّ حَفَّهَا بِالْمَكَارِهِ،ثُمَّ قَالَ:يَا جِبْرِيلُ اذْهَبْ فَانْظُرْ إِلَيْهَا،فَذَهَبَ فَنَظَرَ إِلَيْهَا،ثُمَّ جَاءَ فَقَالَ:أَيْ رَبِّ وَعِزَّتِكَ لَقَدْ خَشِيتُ أَنْ لَا يَدْخُلَهَا أَحَدٌ " قَالَ:" فَلَمَّا خَلَقَ اللَّهُ النَّارَ قَالَ:يَا جِبْرِيلُ اذْهَبْ فَانْظُرْ إِلَيْهَا،فَذَهَبَ فَنَظَرَ إِلَيْهَا،ثُمَّ جَاءَ فَقَالَ:أَيْ رَبِّ وَعِزَّتِكَ لَا يَسْمَعُ بِهَا أَحَدٌ فَيَدْخُلُهَا،فَحَفَّهَا بِالشَّهَوَاتِ ثُمَّ قَالَ:يَا جِبْرِيلُ اذْهَبْ فَانْظُرْ إِلَيْهَا،فَذَهَبَ فَنَظَرَ إِلَيْهَا،ثُمَّ جَاءَ فَقَالَ:أَيْ رَبِّ وَعِزَّتِكَ لَقَدْ خَشِيتُ أَنْ لَا يَبْقَى أَحَدٌ إِلَّا دَخَلَهَا ".(أخرجه أبوداود

இஸ்லாம் சில கட்டுப்பாடுமிக்க வரையறைகளை நமக்கு வழங்கியிருக்கிறது. பல சமயத்திலும் அது நம் மனதுக்கு சுமையாக உடலுக்கு பாரமாக ஆசைகளுக்கு இடையூறாக தெரிகிறது.

மறந்து விடாதீர்கள். இந்த தடைகளை கடந்தால் தான் சொர்க்கத்தை அடைய முடியும்.?

மனம் போன போக்கில் சென்றால் அது நரகத்தின் வட்டத்திற்கு நம்மை இழுத்து விடும் என்பதையும் மறந்து விடக்கூடாது.

ரமலானை வழி அனுப்பி வைத்திருக்கிற இந்த தருணத்தில் இந்த மாதம் முழுக்க அல்லாஹ் நம்மை பழக்கப் படுத்தியிருக்கிற உண்ணதமான பண்பாடுகளை வாழ்வு முழுவதும் கைகொள்வதாக உறுதி ஏற்போம்.

·         நபிலான வணக்கங்களை அதிகமாக செய்வேன் என உறுதி ஏற்போம்.
قَالَ رَسُول اللَّهِr    مَنْ ثَابَرَ عَلَى ثِنْتَيْ عَشْرَةَ رَكْعَةً مِنْ السُّنَّةِ بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ أَرْبَعِ رَكَعَاتٍ قَبْلَ الظُّهْرِ وَرَكْعَتَيْنِ بَعْدَهَا وَرَكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ وَرَكْعَتَيْنِ بَعْدَ الْعِشَاءِ وَرَكْعَتَيْنِ قَبْلَ الْفَجْرِ

·         ஏழைகளிடம் கருணை காட்டுவதிலும் அவர்களது தேவைகளை நிறைவேற்றுவதையும் ஆயுள்முழுக்க அக்கறை செலுத்துவோம்

قَدْ أَفْلَحَ مَنْ تَزَكَّى  வசனத்தின் தப்ஸீரில் குர்துபி ஒரு நிகழ்ச்சியை எழுதுகிறார்

وروى عطاء عن ابن عباس قال: نزلت في عثمان بن عفان رضي اللّه عنه. قال: كان بالمدينة منافق كانت له نخلة بالمدينة, مائلة في دار رجل من الأنصار, إذا هبت الرياح أسقطت البسر والرطب إلى دار الأنصاري, فيأكل هو وعياله, فخاصمه المنافق; فشكا ذلك إلى رسول اللّه صلى اللّه عليه وسلم, فأرسل إلى المنافق وهو لا يعلم نفاقه, فقال: [إن أخاك الأنصاري ذكر أن بسرك ورطبك يقع إلى منزل, فيأكل هو وعياله, فهل لك أن أعطيك نخلة في الجنة بدلها]؟ فقال: أبيع عاجلا بآجل لا أفعل. فذكروا أن عثمان بن عفان أعطاه حائطا من نخل بدل نخلته; ففيه نزلت "قد أفلح من تزكى". ونزلت في المنافق "ويتجنبها الأشقى".
 சொர்க்கத்தை வாங்கும் ஆர்வம் ஒரு ஏழைக்கு உதவுவதில் எத்தகைய பங்கை ஆற்றியிருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

·         ரமலான் நம்மை இணைத்தது. வணக்க வழிபாடுகள் தான தர்மங்களின் வழியே நாம் ஒருவருக்கொருவர் நெருங்கிப் பழக முடிந்தது. புதிய நட்புகள் மலர்ந்தன. பழைய உறவுகள் வளர்ந்தன. இன்றைய சூழலில் நமது பிரதான கடமை  உட்கட்சி பூசலை குறைக்க நம்மில் ஒவ்வொரு வரும் தம்மால் இயன்ற அளவு முயற்சிக்க வேண்டும்.   

வரலாற்றின் ஒரு சிக்கலான காலகட்டத்தில் முஸ்லிம்கள் இந்த பெருநாளை சந்திக்கிறார்கள்.

கடந்த சில பெருநாட்களின் போது முஸ்லிம் உலகம் மற்ற புறச் சக்திகளின் கடுமையான தாக்குதல்களுக்கு ஆளாகி இருந்தது. தீவிரவாத பயங்கர வாத முத்திரைக்கு சமூகம் இலக்காகி இருந்தது.  

இப்போது அது குறைந்துவிட்டபோதும் முஸ்லிம் சமூகத்தின் உள்ளுக்குள் நடை பெறுகிற போராட்டங்களால் முஸ்லிம் உலகம் தடுமாறிக் கொண்டிருக்கிறது. இராக், துனூசியா, எகிப்து, எமன், லிபியா,சிரியா, பஹ்ரைன்.இப்போது லிபியா என்று தொடர்ச்சியாக முஸ்லிம் நாடுகளில் பதற்றம் நிலவுகிறது. பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் நாடுகளிலும் ஸ்திரத்தன்மை இல்லை. உலகில் கனிசமாக முஸ்லிம்கள் வாழ்கிற நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் மக்களை பஞ்சம் வாட்டிக் கொல்கிறது.

உலகின் ஒரு பகுதி முஸ்லிம்கள் இந்த பெருநாளை முழு மகிழ்ச்சியோடு கொண்டாடுகிற சூழ்நிலையில் இல்லை.

வளமான பூமி பெருக்கெடுக்கும் ஆறுகள், ஏராளமான இயற்கை வளங்கள் என பொருளாதார வளத்ததிற்கு எந்த குறையும் இல்லாத முஸ்லிம் நாடுகளில் சொல்லணா துயறங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. சூடானில் பட்டினிச் சாவுகள்,   எகிப்தில் உணவுப் பற்றாக்குறை , எண்ணை விலை அதிகரித்திருக்கிற சூழ்நிலையில் எண்ணை வளமிக்க நாடான லிபியாவில் சூப்பர் மார்க்கெட்டுகள் காலியாகக் கிடக்கின்றன.

இத்தனைக்கும் காரணம் அங்கு நிகழும் உட்பூசல்கள்.

சோமாலியா ஆப்ரிக்காவின் மிக நீண்ட கடற்பகுதியை  கொண்ட நாடு, உலகின் கிழக்கையும் மேற்கையும் இணைக்கிற மதிப்பு மிக்க நிலப்பகுதியில் அமைந்த நாடு, ஒரு காலத்தில் விவசாயத்தில் கொழித்த நாடு. 1990 வரைக்கும் ஆப்ரிக்காவிலும் உலக அளவிலும் தலை நிமிர்ந்து நின்ற நாடு. இப்போது சீரழிந்து கிடக்கிறது. எலும்பை மட்டுமே உடலாக கொண்ட குழந்தைகள், கடுமையான நோயின் பிடியில் சிக்கி அழியும் தாய்மார்கள் என அந்த நாடு இப்போது ஆபத்தான நாடுகளின் பட்டியலில் சேர்ந்திருக்கிறது. உதவி வழங்க சவூதி அரேபியா உட்ப்ட பல நாடுகள் முன் வருகின்றன. ஆனாலும் பலனில்லை. காரணம் 1990 க்குப்பிறகு தொடங்கிய உள்நாட்டுச் சண்டை ஒரு முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. உதவியாக கிடைக்கிற காசிற்கு ஆயுதம்  வாங்கி ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு முஸ்லிம் நாடுகளில் நிலவும் வருந்தத்தக்க சூழ்நிலைகள் அகல்வதற்காக அல்லாஹ்விடம் கையேந்திக் கேட்கிற கடமை நமக்கு இருக்கிறது. நேற்றைய முன் தினம் மக்காவில் இமாம் அப்துர ரஹ்மன் சுதைசி அவர்கள் இவற்றுக்காக மனமுருக பிரார்த்தனை செய்த்தை நீங்கள் பார்த்திருக்கலாம்.

அதற்கு மேலாக நாம் பாடம் பெற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமான செய்தி உட்பூசல்கள் இல்லாத சமுதாயம்மாக நாம் வாழ்கிற சமுதாயம் அமைய நம்மால் முடிந்த வகையில் ஒத்துழைக்க வேண்டும்.அப்படி அமைந்தால் நாம் வாழும் பூமி சொர்க்கமாக ஆகும்.

சுய நலம் கொண்டு சமூகத்திற்குள் பிரச்சினை செய்பவர்களாக நம்மில் எவரும் ஆகி விடக்கூடாது.

நான் வாழும் சமூகத்தில் பொறுமை இல்லாமலும் பொறுப்பில்லாமலும் பிரச்சினையை ஏற்ப்டுத்துகிற வகையில் நான் நடந்து கொள்ள மாட்டேன் என்ற உறுதி மொழியை நம்மில் ஒவ்வொருவரும் ஏற்க வேண்டும்.

ஒரு எழுத்தாளர் சொல்கிறார்:
  
والله لو كبرت قلوب المسلمين كما كبرت ألسنتهم، لغيروا وجه التاريخ، ولو اجتمعوا دائما كما يجتمعون لصلاة العيد لهزموا جحافل الأعداء، ولو تصافحت قلوبهم كما تتصافح أيديهم لقضوا على عوامل الفرقة، ولو تبسمت أرواحهم كما تبسمت شفاههم لكانوا مع أهل السماء، ولو لبسوا أكمل الأخلاق كما يلبسون افخر الثياب لكانوا أجمل أمة على الأرض.

அல்லாஹ் நமக்கும்  உலகம் முழுவதிலும் வாழ்கிற முஸ்லிம்களுக்கும்  நிம்மதியான கவுரமான செழிப்பான பக்திமிக்க வாழ்வை தந்தருள்வானாக! நம்மை சொர்க்கத்திற்கு சொந்தக்கார்ர்களாக ஆக்கியருள்வானாக!

1 comment:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் கண்ணியத்திற்குரியவர்கள் அனைவருக்கும் ஈகைத்திருநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete