இப்போது நாடு முழுவதும் மரண தண்டனையைப் பற்றிய விவாதம் நடந்து வருகிறது.
இஸ்லாம் மரண தண்டனையை ஆதரிக்கிறது. ஆனால் அதற்கான நிபந்தனைகளை கடுமையாக்கி உள்ளது.
பொதுவாகவே இஸ்லாம் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதில் திட்டவட்டமான போக்கை கையாள்கிறது. குழப்பமான தடுமாற்றமான போக்கு இஸ்லாத்தில் இல்லை.
தண்டனை வழங்குவதில் இஸ்லாத்தின் கோட்பாடு ஆழமானது.
ஒரே ஒரு வசனத்தில் தண்டனையும், அதற்குரிய இரண்டு நியதிகளும் கூறப்பட்டுள்ளன.
وَالسَّارِقُ وَالسَّارِقَةُ فَاقْطَعُوا أَيْدِيَهُمَا جَزَاءً بِمَا كَسَبَا نَكَالًا مِنْ اللَّهِ وَاللَّهُ عَزِيزٌ حَكِيمٌ
1. குற்றங்களுக்கு தகுந்த தண்டனை தரப்பட வேண்டும் : جَزَاءً بِمَا كَسَبَا
இலகுவான தண்டனைகள் குற்றவாளிகளை பெருக்கவே உதவுகிறது. சில வேளைகளில் குற்றவாளிகள் தலைவர்களாகி விடுகின்றனனர்.
நான்கு முறை திருடியவனை ஜெயலில் போட்டார்கள். அங்கே அவன் துப்பாக்கியை திருடினான். நீதிபதி யோசித்தார். இவனை என்ன செய்வது. ஒரு ஆள் சொன்னார். இவனை சட்டசபையில் போடுங்கள்.
தண்டனை குறைவாக இருப்பதனாலேயே கூலிக்கு குற்றம் செய்வோர் பெறுகிவிட்டனர்.
அரபு நாடுகளிலும் சட்டம் கடுமையாக இருக்கிற நாடுகளிலும் குற்றங்கள் குறைவு.
இந்த வகையில் இஸ்லாம் மரண தண்டனையை ஆதரிக்கிறது.
மரண தண்டனை குற்றவாளிக்கு துயரம் என்றாலும் சமுதாயத்திற்கு அது தேவை
என்பதை குர் ஆன் அற்புதமாக கூறுகிறது.
ولَكُمْ فِي الْقِصَاصِ حَيَاةٌ يَاأُوْلِي الْأَلْبَابِ لَعَلَّكُمْ تَتَّقُونَ - البقرة 179
குற்றவாளிகள் கடுமையாக தண்ண்டிக்கப்படுகிற போது அவனது அக்கிரமத்திற்க்கு ஆளாவதிலிருந்து மற்ற மக்கள் பாதுகாக்கப்படுகிறார்கள்.
இஸ்லாமிய தண்டனையை பொத்தம் பொதுவாக சிலர் குறை கூறுவதுண்டு. அத்தகைய நபர்களே மிகக் கொடூரமான குற்றங்களை காண்கிற போது அரபு நாட்டு தண்டனை வேண்டும் என்று பேசுவதை நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம்.
சமீபத்தில் கோவையில் பள்ளிக் குழந்தைகளை கடத்திச் சென்ற வேன் டிரைவர் சிறுமியை கற்பழித் கொன்று சிறுனை கைகழுவ அழைத்துச் செல்வதாக கூறி வாய்க்காலில் அமுக்கி கொன்றதை கண்டு நகரமே பதறியது. குற்றவாளியை போலீஸார் என்கவுண்டரில் கொன்றதை நகரமே பாராட்டி போலீஸாரை வாழ்த்தியது.
இதே மனோ நிலை. எல்லா குற்றவாளிகளிடம் வெளிப்பட வேண்டும். அப்போது தான் சமூகம் பாதுகாக்கபடும்.
சாதாரண திருட்டுக்கு இவ்வளவு கடுமையான தண்டனையா என்று சிலர் கேட்பதுண்டு. ஒரு பாஸ்போர்ட் திருட்டுப் போனதால் பல குடும்பங்களின் வாழ்வு ஒடிந்து போன பின்னணியை யோசித்துப்பார்த்தால் , திருட்டுக் கொடுத்தவர்கள் சிலரின் வாழ்வில் அதை தொடர்ந்து நிகழ்ந்த விபரீதங்களை யோசித்துப் பார்த்தால் தண்டனை சரியானது தான் என்பதை தாமாகவே அனைவரும் ஏற்பார்.
ஒரு முஸ்லிம் எழுத்தாளர் என்னிடம் ஒரு முறை பேச்சுவாக்கில் கல்லெறி தண்டனையை காட்டு மிராண்டித்தனமானது என்றார். ஒரு ரவுடி நான்கு பேர் பார்க்க நடுத்தெருவில் ஒரு பெண்ணை கதறக் கதறக் கற்பழித்தால் என்ன செய்வது என்று அவரிடம் கேட்டேன். ராஸ்கல் அவனை நடுத்தெருவில் சுட்டுக் கொல்ல வேண்டும் என்றார். அதைதான் இஸ்லாம் செய்திருக்கிறது என்று சொன்னேன்.
உங்களுக்கு கோபம் வருகிற போது கடுமையான தண்டனை வேண்டும். இல்லை என்றால் குற்றவாளிகளிடம் இரக்கம் காட்டவேண்டும் என்று பேசுவது சரியான அக்கறை அல்லவே! என்று நான் கூறினேன.
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன். கருணை மிக்கவன் அவனது தண்டனை முறையை ஏற்பதே மனித சமூகத்திற்கு நன்மையானது.
2. ஒரு குற்றவாளிக்கு தரப்படுகிற தண்டனை சமூகத்தில் புதிய குற்றவாளிகள் உருவாவதை தடுக்கும் வகையில் அமைய வேண்டும். மற்றவர்கள் இது போல தவறு செய்ய பயப்பட வேண்டு என்பது இஸ்லாமின் இரண்டாவது கோட்பாடாகும்.
نَكَالًا مِنْ اللَّهِ
نَكَالًاபாடிப்பினை:
எனவேதான் குற்றவாளிகளுக்கான தண்டனை விசயத்தில் கருணை மனிதாபிமானம் பார்க்க கூடாது என குர் ஆன் கூறுகிறது.
وَلَا تَأْخُذْكُمْ بِهِمَا رَأْفَةٌ فِي دِينِ اللَّهِ إِنْ كُنتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ
எந்த தண்டனை பற்றி யோசிக்கும் போது இந்தச் சிந்தனை அவசியம். இரக்கப் பட்டு ஒரு குற்றவாளியை மன்னித்தால் புதிய குற்றவாளிகள் உருவாவதை தடுக்க முடியாது.
கல்லூரிகளின் வாசலில் போதைப் பொருள் விற்பவனின் மீது கருணை காட்டினால் சமுதாயம் என்னாவது?
பெருமானார் (ஸல்) அவர்கள காலத்தில் தானே முன் வந்து குற்றத்தை ஒப்புக் கொண்டவர்களுக்கு கூட கடுமையான தண்டனை நிறைவேற்றப்பட்டது.
عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ،عَنْ أَبِيهِ،قَالَ:جَاءَ مَاعِزُ بْنُ مَالِكٍ إِلَى النَّبِيِّ r،فَقَالَ:يَا رَسُولَ اللهِ،طَهِّرْنِي،فَقَالَ:«وَيْحَكَ،ارْجِعْ فَاسْتَغْفِرِ اللهَ وَتُبْ إِلَيْهِ»،قَالَ:فَرَجَعَ غَيْرَ بَعِيدٍ،ثُمَّ جَاءَ،فَقَالَ:يَا رَسُولَ اللهِ،طَهِّرْنِي،فَقَالَ رَسُولُ اللهِ r:«وَيْحَكَ،ارْجِعْ فَاسْتَغْفِرِ اللهَ وَتُبْ إِلَيْهِ»،قَالَ:فَرَجَعَ غَيْرَ بَعِيدٍ،ثُمَّ جَاءَ،فَقَالَ:يَا رَسُولَ اللهِ،طَهِّرْنِي،فَقَالَ النَّبِيُّ r:مِثْلَ ذَلِكَ حَتَّى إِذَا كَانَتِ الرَّابِعَةُ،قَالَ لَهُ رَسُولُ اللهِ:«فِيمَ أُطَهِّرُكَ؟» فَقَالَ:مِنَ الزِّنَى،فَسَأَلَ رَسُولُ اللهِ r:«أَبِهِ جُنُونٌ؟» فَأُخْبِرَ أَنَّهُ لَيْسَ بِمَجْنُونٍ،فَقَالَ:«أَشَرِبَ خَمْرًا؟» فَقَامَ رَجُلٌ فَاسْتَنْكَهَهُ،فَلَمْ يَجِدْ مِنْهُ رِيحَ خَمْرٍ،قَالَ،فَقَالَ رَسُولُ اللهِ r:«أَزَنَيْتَ؟» فَقَالَ:نَعَمْ،فَأَمَرَ بِهِ فَرُجِمَ،فَكَانَ النَّاسُ فِيهِ فِرْقَتَيْنِ،قَائِلٌ يَقُولُ:لَقَدْ هَلَكَ،لَقَدْ أَحَاطَتْ بِهِ خَطِيئَتُهُ،وَقَائِلٌ يَقُولُ:مَا تَوْبَةٌ أَفْضَلَ مِنْ تَوْبَةِ مَاعِزٍ،أَنَّهُ جَاءَ إِلَى النَّبِيِّ r فَوَضَعَ يَدَهُ فِي يَدِهِ،ثُمَّ قَالَ:اقْتُلْنِي بِالْحِجَارَةِ،قَالَ:فَلَبِثُوا بِذَلِكَ يَوْمَيْنِ أَوْ ثَلَاثَةً،ثُمَّ جَاءَ رَسُولُ اللهِ r وَهُمْ جُلُوسٌ،فَسَلَّمَ ثُمَّ جَلَسَ،فَقَالَ:«اسْتَغْفِرُوا لِمَاعِزِ بْنِ مَالِكٍ»،قَالَ:فَقَالُوا:غَفَرَ اللهُ لِمَاعِزِ بْنِ مَالِكٍ،قَالَ،فَقَالَ رَسُولُ اللهِ r:«لَقَدْ تَابَ تَوْبَةً لَوْ قُسِمَتْ بَيْنَ أُمَّةٍ لَوَسِعَتْهُمْ»،قَالَ:ثُمَّ جَاءَتْهُ امْرَأَةٌ مِنْ غَامِدٍ مِنَ الْأَزْدِ،فَقَالَتْ:يَا رَسُولَ اللهِ،طَهِّرْنِي،فَقَالَ:«وَيْحَكِ ارْجِعِي فَاسْتَغْفِرِي اللهَ وَتُوبِي إِلَيْهِ» فَقَالَتْ:أَرَاكَ تُرِيدُ أَنْ تُرَدِّدَنِي كَمَا رَدَّدْتَ مَاعِزَ بْنَ مَالِكٍ،قَالَ:«وَمَا ذَاكِ؟» قَالَتْ:إِنَّهَا حُبْلَى مِنَ الزِّنَى،فَقَالَ:«آنْتِ؟» قَالَتْ:نَعَمْ،فَقَالَ لَهَا:«حَتَّى تَضَعِي مَا فِي بَطْنِكِ»،قَالَ:فَكَفَلَهَا رَجُلٌ مِنَ الْأَنْصَارِ حَتَّى وَضَعَتْ،قَالَ:فَأَتَى النَّبِيَّ r،فَقَالَ:«قَدْ وَضَعَتِ الْغَامِدِيَّةُ»،فَقَالَ:«إِذًا لَا نَرْجُمُهَا وَنَدَعُ وَلَدَهَا صَغِيرًا لَيْسَ لَهُ مَنْ يُرْضِعُهُ»،فَقَامَ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ،فَقَالَ:إِلَيَّ رَضَاعُهُ يَا نَبِيَّ اللهِ،قَالَ:فَرَجَمَهَا".( أخرجه مسلم
ஒரு மனிதன் கிடைத்து விட்டால் அவனை தீர்த்துக் கட்டிவிட்டுத்தான் மறு வேளை பார்ப்பது என்ற நிலைப்பாடு நீதிக்கு அழகல்ல. அதே நேரத்தில் குற்றம் நிருபணமாகி விடுமென்றால் நீதி தடுமறவும் கூடாது.
தடுமாற்றமில்லாத நீதி எங்கே இருக்கிறதோ அங்கேதான் அமைதி தவழும்.
குற்றவாளிக்கு தரப்படுகிற தண்டனை சமூகத்துக்கு படிப்பினையாக அமைய வேண்டும் என்ற நோக்கில் தான் தண்டனை பலர் பார்க்க பொது இட்த்தில் வழங்கப்பட வேண்டும் என்கிறது குர் ஆன்.
وَلْيَشْهَدْ عَذَابَهُمَا طَائِفَةٌ مِنْ الْمُؤْمِنِينَ
இப்போதும் அரபு நாடுகளில் இந்த நடைமுறையை பார்க்கலாம்.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநில அட்டர்னி ஜெனரல் கவர்னருக்கும் மத்திய அரசுக்கும் 1980 களில் ஒரு கடிதம் எழுதினார். மின்சார நாற்காலியில் வைத்து நிறைவேற்றப்ப்டுகிற மரண தண்டனையை வீடியோவில் பதிவு செய்து அதை ஓளிபரப்ப அனுமதி கோரினார்.
அந்த மாநிலத்தில் போதை மருந்துக் விற்பனை செய்ப்வர்களின் அக்கிரமத்தை குறைக்க யோசித்த அவருக்கு இந்த ஒரு வழிதான் தோன்றியது.
இதையே இஸ்லாம் அனைத்துக் குறங்களுக்கும் வலியுறுத்துகிறது.
குற்றச் செயல்களை தடுப்பதில் உண்மையான அக்க்றை இருக்கும் எனில் சமூகம் கவனிக்க வேண்டிய மூன்றாவது நியதி.
தவறு யார் செய்தாலும் தண்டனை கிடைக்கவேண்டும்.
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمْ الْقِصَاصُ فِي الْقَتْلَى الْحُرُّ بِالْحُرِّ وَالْعَبْدُ بِالْعَبْدِ وَالْأُنثَى بِالْأُنثَى فَمَنْ عُفِيَ لَهُ مِنْ أَخِيهِ شَيْءٌ فَاتِّبَاعٌ بِالْمَعْرُوفِ وَأَدَاءٌ إِلَيْهِ بِإِحْسَانٍ ذَلِكَ تَخْفِيفٌ مِنْ رَبِّكُمْ وَرَحْمَةٌ فَمَنْ اعْتَدَى بَعْدَ ذَلِكَ فَلَهُ عَذَابٌ أَلِيمٌ
அன்றைய சமூக அமைப்பில் உயர்குடியினர் அல்லது வேண்டப்பட்டவர்களுக்கு சலுகை காட்டப்பட்ட்து. பலகீனமானவர்கள் ஆதரவற்றவர்களுக்கு மட்டும் கடும் தண்டனை நிறவேற்றப்பட்ட்து. ஆணகளுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதி வழங்கப் பட்ட்து. திருக்குர் ஆன் இந்த வசனத்தின் மூலம் அந்த பாகுபாட்டை ஒழித்த்து. நீதி வழங்குவதில் மிக அத்தியாவசியமான அணுகுமுறை இது. இதில் நெகிழ்வு ஏற்படும் எனில் எந்தச் சட்டமும் பயன் தராது, அதனால் தான் நபி (ஸல்) அவர்கள்
لوسرقت فاطمة بنت محمد لقطعت يدها
இப்படிக்கு யோசிக்கவே தனி தைரியம் வேண்டும். பாசத்திற்குரிய ஒரு தந்தைக்கு தன்னுடைய பிள்ளகளை இப்படி கற்பனை செய்து பார்க்கவே சகிக்காது. இத்தகைய வார்த்தைகளை தம் பிள்ளைகளோடு இணைத்துப் பேசவே தயங்குவர். ஆனால் அல்லாஹ்வின் நீதியை நிலைநாட்டுவதில் பெருமானாருக்கு இருந்த ஆர்வம் இவ்வளவு கடுமைகாக பேசவைத்த்து.
அதே நேரத்தில் இந்த வார்த்தை முஸ்லிம் சமுதாயத்தில் சட்டம் எவ்வளவு சரியாக பயன்படுத்தப்பட வேண்டும் என்பதையும் உறுதிப்படுத்த்தியது.
பெருமானாரின் மகளாக இருந்தாலும் சட்டம் சட்டம் தான் என்று சொல்லும் போது மற்றவர்க்ள் எம்மாத்திரம்?
ஆளுக்கு ஒரு நீதி என சட்டம் பேசுமானால் அந்த நாட்டில் நீதி செத்துப் போய்விடும்.
. فذهب أبو حنيفة إلى أن المسلم يقتل بالكافر لعموم آية المائدة.
ومذهب الأئمة الأربعة والجمهور أن الجماعة يقتلون بالواحد:
قال عمر في غلام قتله سبعة فقتلهم وقال لو تمالأ عليه أهل صنعاء لقتلتهم ولا يعرف له في زمانه مخالف من الصحابة وذلك كالإجماع
கடுமையான தண்டனைகள் நியாயமானதாக அமைய நீதி விசாரனை மிகச் சரியாக அமைய வேண்டியது மிக முக்கியமாகும்..
இஸ்லாம் கடுமையான தண்டனைகளுக்கு கடுமையான் துல்லியமான சாட்சிகளை கேட்கிறது
விபச்சாரக் குற்றத்திற்கு மரண தண்டனை வழங்க நான்கு சாட்சிகள் வேண்டும் என்கிறது குர் ஆன் அந்த நான்கு பேரும் விபச்சாரத்தை நேராக தம் கண்ணால் பார்த்திருந்தால் மட்டுமே இந்த தண்டனை. அப்படி இல்லை எனில் வேறு தண்டனையே வழங்கப்ப்டும் என இஸ்லாமிய சட்ட அறிஞர்கள் கூறுகிறார்கள்.
பொத்தம் பொதுவாக குற்றம் சுமத்துவது, ஒரு நிர்பந்த்த்திற்காக எவரையாவது பிடித்துப் போட்டு விட்டு அவர் மீது பழி போடுவது ஒரு விசாரணை அமைப்பின் பழக்கமாக இருக்குமானால் எந்தக் கொடிய மிருகத்திற்கும் சரியான தண்டனையை பரிந்துரைக்க முடியாது.
துரதிஷட வ்சமாக நம்முடைய நாட்டின் புலன் விசார்னை அமைப்புக்கள் சரியாக இல்லை. எவரையாவது பிடித்து போட்டு வழக்கை முடிக்க நினைப்பது, அல்லது குற்றத்தில் எங்காவது ஒரு சன்ன இழையில் தொடர்புடையவர் மீது கடுமையான குற்றத்தை சுமத்துவது அதிகமாக நிகழ்கிறது.
பயங்கரவாத அல்லது தீவிரவாத தடுப்புச் சட்டம் என்ற பெயரில் மிக சாதாரண தொடர்பை கூட கடுமையானதாக இந்திய புலனாய்வு அமைப்புக்கள் சித்தரித்து விடுகின்றன.
இந்த நிலையில் அதிகப் பட்ச தண்ட்னையான மரண த்ண்டனை கேள்விக்குரியாவதை தடுக்க முடியாது.
எனது போனுக்கு வந்த ஒரு sms
காட்டுக்கு போய் புலியை பிடித்துவா என அதிகாரி சொல்ல, கேரள போலீஸ் பத்து நிமிட்த்தில் 2 புலியை பிடித்து வந்த்து. பஞ்சாப் போலீஸ் அரை மணி நேரத்தில் 4 புலியை பிடித்து வந்த்து. நெடு நேரமாகியும் தமிழ் நாட்டு போலீஸை கானோம். அதிகாரி காட்டுக்குள் அவரை தேடிப் போன போது அவர் ஒரு நாயை தலை கீழாக தொங்கவிட்டு புலின்னு ஒத்துக்க் கொள்! புலின்னு ஒத்துக்க் கொள்! என்று மிரட்டிக் கொண்டிருந்தாராம்.
இராஜீவ் காந்தி கொலை காரர்கள் விசயத்தில் கருனை என்ற பேச்சுக்கே இடமிருக்க கூடாது. அது ஒரு தனிமனிதரின் கொலை அல்ல. அவருடம் சுமார் 57 பேர் கொல்லப்பட்டர்கள். மட்டுமல்ல இந்திய மக்களையே கலங்கடித்த கொடுரம் அது.
தமிழ் இனம் என்ற அடிப்படையில் அந்தக் கொலை கார்ர்களுக்காக சிலர் வாதிடுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.
விடுதலைப்புலிகளை பொறுத்தவரை அவர்கள் தமிழ் இனம் என்று பார்ப்பது தவறு.இலங்கையில் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் பல்வேறு அக்கிரம்ங்களை அவர்க்கள் புரிந்திருக்கிறார்கள். உலகம் முழுக்க போதை பொருட்களை கட்த்துவதில் அவர்களது கை இருந்திருக்கிறது என்பது பரவலான குற்றச் சாட்டாகும். தங்களுக்கு பிடிக்க்காதவர்களை அவர்கள் கொன்றொழிக்கத் தயங்கியதில்லை. இலங்களை தமிழின விடுதலைப் போராளிகளாக அவர்களைப் பார்ப்பது தவறு. அவர்களால் தான் இலங்கை தமிழி மக்களின் வாழ்கை இவ்வளவு சிரம்மாகியது என்பதே உண்மை.
இனத்தில்ன் பெயரைச் சொல்லி ஒரு குற்றத்தை நியாயப்படுத்துவதை தமிழக மக்கள் ஏற்க் கூடாது.
அதே நேரம் நீதி சரியாகவே வழங்கப் பட்டிருக்கிறது என்பதை நிரூபிப்பதற்காக இன்னொரு முறை குற்ற அறிக்கையை பரிசீலிப்பது தவ்றாகாது.
இன்னொன்றையும் இங்கே நினைவூட்ட விரும்புகிறேன்.
ஒரு குற்றச் செயலை பொறுத்த வரைக்கும் அதை மானசீகமாக ஒத்துக் கொள்பவர்களும் தார்மீக குற்றவாளிகளே என்பது குர் ஆனின் கோட்பாடு.
கடந்த கால யூதர்களின் குற்றச்செயல்களை நிகழ்கால யூதர்களை முன்னோக்கி குர் ஆன் பேசுகிறது.
நீங்கள் சனிக்கிழமைகளில் எல்லை மீறீனீர்கள், உங்களை இறைவன் காப்பாற்றினான் என்பது போல..
விரிவுரையாளர்கள் சொல்வார்கள் : தமது முன்னோர்களின் குற்றத்தை தற்போதைய யூதர்கள் சரி என்று கருதிய காரணத்தால் அவர்களும் குற்றம் செய்த்தவர்களே!
தமிழ்ச் சமுதாயம் இனத்தின் அடிப்படையில் ஒரு குற்றத்தை நியாயப்படுத்தும் மனோ நிலைக்கு சென்று விடக்கூடாது/
அல்லாஹ் எல்லா விதமான குற்றச் செயல்களிலிருந்தும் நம்மை பாதுகாபானாக். நிரபாராதிகளை தண்டித்து விடுவதிலிருந்தும், குற்றவாளிகளை காப்பாற்றுவதிலிருந்தும் இந்திய சமுதாயத்தை அல்லாஹ் பாதுகாபானாக! இந்திய நீதி அமைப்பிலும் குற்றவிசாரானை அமைப்புக்களிலும் அல்லாஹ் நேர்மையை தந்தருளவானாக!
No comments:
Post a Comment