َقَالَ
الَّذِينَ لَا يَعْلَمُونَ لَوْلَا يُكَلِّمُنَا اللَّهُ أَوْ تَأْتِينَا آيَةٌ ۗ
كَذَٰلِكَ قَالَ الَّذِينَ مِن قَبْلِهِم مِّثْلَ قَوْلِهِمْ ۘ تَشَابَهَتْ
قُلُوبُهُمْ ۗ قَدْ بَيَّنَّا الْآيَاتِ لِقَوْمٍ يُوقِنُونَ (118)
நேற்றைய தினம்
நமது மாநிலத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இன்று இதே aபோன்றதொரு பண்டிகை வட
மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது.
தீபாவளி என்பது
இந்துக்களால் மட்டும் கொண்டாடப்படுகிற பண்டிகை அல்ல. சீக்கியர்கள், பொளத்தர்கள் (புத்த
மதம்), ஜைனர்களும் இப்பண்டிகையை கொண்டாடுகிறார்கள். ஒவ்வொருவரும் இந்த திருநாளுக்காக
வெவ்வேறு வகையான காரணத்தை சொல்கிறார்கள்.
நமது தமிழகத்தில்
ஐப்பசி மாத அமாவாசை தினத்தன்று தீபாவளி கொண்டாடப்படுகிறது. மற்ற பகுதிகளில் அடுத்தடுத்த
சில நாட்களாக 5 நாட்கள் இந்த விழா நடக்கிறது.
குளித்து, புத்தாடை
அணிந்து, பட்டாசு வெடித்து இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்த பட்டாசுக்காக
ஏராளமான பணம் செலவழிக்கப்படுகிறது.
இந்த ஆண்டில்
தமிழ்நாட்டில் மட்டும் 6 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கான பட்டாசுகள் விற்பனை ஆனதாக சிவகாசி
பட்டாசி தொழில் துறையினர் கூறியுள்ளனர். கடந்த் ஆண்டு விற்பனை ஆகாமல் இருந்த ஆயிரம்
கோடி ரூபாய் பட்டாசும் இந்த ஆற்று விற்றுத் தீர்ந்து விட்டதாக அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
மக்களுக்கு
சந்தோசம் தருகிறது என்ற வகையிலும் சிவகாசியில் 4 இலட்சம் தொழிலாளர்கள் இதனால் பயனைடைகிறார்கள்
என்ற வகையிலும் இந்த பட்டாசு பிரயோகம் பாராட்டப் படுகிறது என்றாலும் அதிலுள்ள பண விரயம்
மற்று சுற்று சூழல் மாசுபாடு காரணமாக இது பெரிதும் விமர்ச்சிக்கப்பட்டும் வருகிறது.
தில்லியில்
மாசு கட்டுப்பாடு காரணமாக பொதுவாக பட்டாசு விற்பனைக்கு அனுமதிக்கப்பட வில்லை.
இதில் வீணாக்கப்படுகிற
பணத்தின் அளவு குறைக்கப்பட்டு, வேறு தர்ம காரியங்களுக்கு பயன்படுத்தினால் நல்லது என்ற
அறிவுரை தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது.
இஸ்லாமிய கண்ணோட்டத்தில்
பட்டாசு வீண் விரயமாகும். வீண் விரயம் ஹராம் ஆகும்.
முஸ்லிம் சமூகத்திலும்
இப்போது இந்த பட்டாசு கலாச்சாரம் திருமணம் மற்ற விழாக்களில் பட்டாசு வெடிக்கும் பழக்கம்
அதிகரித்து வருகிறது.
இது நிச்சயம்
தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். நாம் நினைத்தால் மிக எளிதாக தடுத்து விட முடிந்த ஒரு
தீமையாகும்.
தீபாவளி தினத்தன்று
இந்துக்களும் மற்றவர்களும் ஒரு வணக்கமாகவே பட்டாசுகளை வெடிக்கிறார்கள். அதே நாள் அன்று
நாம் பட்டாசு வெடித்தால் அந்த கொள்கயை பின்பற்றுவதாகவே அமைந்து விடும். அல்லாஹ் பாதுகாப்பானாக!
عن ابن عمر قال رسول الله - صلى الله عليه وسلم : " من تشبه بقوم فهو منهم " رواه أحمد ، وأبو داود
நமது
பிள்ளைகள் ஆசைப்படுகிறார்கள்,. அல்லது ஃபிரியாக கிடைத்த்து
என்றெல்லாம் அற்ப காரணம் கூறி
இந்த ஈமானுக்கு முரணான செயலை நாம் செய்யக் கூடாது.
துணை நிற்கவும் கூடாது.
நல்ல காரியங்களில்
பிறர் செய்கிறவற்றை போன்று செய்ய நாமும் முயற்சி செய்ய வேண்டும். அப்போது நாம் சிறப்படையலாம்.
நபி மூஸா அலை
அவர்கள் மந்திரவாதிகளோடு நடந்த போட்டியில் வெற்றியடைந்த போது மந்திர வாதிகள் ஈமான்
கொண்டனர். ஆனால் பிர் அவ்ன் ஈமான் கொள்ள வில்லை. மூஸா அலை அல்லாஹ்விடம் கேட்டார்கள்
“இறைவா! என்னை நீ பிர் அவ்னிடம் தான் அனுப்பினாய்! அவனுக்கு ஹிதாயத்தை தரவில்லையே!
இந்த மந்திரவாதிகளுக்கு ஹிதாயத்தை கொடுத்தாயே ஏன் ?
அல்லாஹ் கூறினான்.
மந்திரவாதிகள் அந்த களத்தில் உன்னைப் போலவே ஆடை உடுத்தியிருந்தார்கள். அதனால் அவர்களுக்கு
ஹிதாயத் கிடைத்தது என்றான்.
இதே செய்தி
மிர்காத்தில் இன்னொரு விதமாகவும் வந்திருக்கிறது.
பிர் அவ்னின்
சபையில் ஒரு ஜோக்கர் இருந்தான். அவன் மூஸா அலை அவர்களைப் பற்றி கேலியாக பல விசயங்களை
சொல்லி சபையோர்களை சிரிக்க வைப்பான். பிர் அவ்னை அல்லாஹ் அழித்த போது அந்த ஜோக்கரை
மட்டும் அவனுடைய தவ்பாவால் அல்லாஹ் காப்பாற்றினான். மூஸா அலை அவர்கள் “ இறைவா! இவன்
எனக்கு அதிக துன்பம் இழைத்தவன் அல்லவா என்று கேட்டார். அதற்கு அல்லாஹ் இவன் உன்னைப்
போல ஆடை அணிந்திருந்தான் அதனால் காப்பாற்றினேன் என்றான்
فتضرع موسى إلى ربه : يا رب ! هذا كان يؤذي أكثر من بقية آل فرعون ، فقال الرب تعالى : ما أغرقناه ; فإنه
كان لابسا مثل لباسك ، والحبيب لا يعذب من كان على صورة الحبيب .
ஆனால் இன்றைய
வாழ்க்கை போங்கில் நாம் அப்படிச் செய்கிறோமா ? நன்மை செய்பவர்களை அலட்சியமாக பார்க்கிறோம்.
அவர்களது நடைமுறைகளை நாம் கவனிப்பதும் இல்லை. பின்பற்று வது குறித்து சிந்திப்பதும்
இல்லை.
ஆனால் தீய –
பொறுத்த மற்ற செயல்களை மிக வேகமாக நாம் பின்பற்றி விடுகிறோம்.
தீய காரியங்களில்
பிறரை பின்பற்றுவது மிக தவறான போக்கிற்கு நம்மை கொண்டு சென்று விடும் ஆபத்து இருக்கிறது.
(அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக!)
முஹம்மது நபி
(ஸல்) அவர்களை எதிர்த்துப் பேசிய ராபிஃ பின் ஹுரைமலா என்பவன் எங்களிடம் அல்லாஹ்வை பேச
சொல்! என்று ஏளனம் செய்தான். அது பற்றி அல்லாஹ்
கூறியது “ மார்க்க விவகாரத்தில் போதிய விவரமற்ற இவர்கள் விதண்டாவாதம் செய்த யூதர்களை
போல பேசி பெரும் பழியை அடைந்து கொள்கிறார்கள். ஹிதாயத்தை தவற விடுகிறார்கள் என்றான்.
عن ابن عباس ، قال : قال رافع بن حريملة لرسول
الله صلى الله عليه وسلم : يا محمد ، إن كنت رسولا من الله كما تقول ، فقل لله
فليكلمنا حتى نسمع كلامه . فأنزل الله
وَقَالَ الَّذِينَ لَا يَعْلَمُونَ لَوْلَا
يُكَلِّمُنَا اللَّهُ أَوْ تَأْتِينَا آيَةٌ ۗ كَذَٰلِكَ قَالَ الَّذِينَ مِن
قَبْلِهِم مِّثْلَ قَوْلِهِمْ ۘ تَشَابَهَتْ قُلُوبُهُمْ ۗ قَدْ بَيَّنَّا
الْآيَاتِ لِقَوْمٍ يُوقِنُونَ (118)
நாம் அறியாமல் செய்கிற செயல்களால் அல்லது விளையாட்டான
நடைமுறைகளால் மற்றவர்களைப் போன்று நடந்து கொள்கிற போது இதயங்கள் அது போல ஒன்று பட்டு
விடுகிற ஆபத்து இருக்கிறது என்று இந்த வசனம் எச்சரிக்கிறது.
அல்லாஹ் எங்களிடம் பேசினால் தான் தவ்ராத்தை ஏற்றுக்
கொள்வோம் என்று சொன்ன யூதர்களை அல்லாஹ் மரணிக்கச் செய்தான் அவர்களை ஒரு பூகம்பம் தாக்கியது என்ற விளைவை நாம்
எண்ணிப் பார்க்க வேண்டும்.
إِذْ
قُلْتُمْ يَا مُوسَىٰ لَن نُّؤْمِنَ لَكَ حَتَّىٰ نَرَى اللَّهَ جَهْرَةً
فَأَخَذَتْكُمُ الصَّاعِقَةُ وَأَنتُمْ تَنظُرُونَ (55
எனவே விளையாட்டாகவோ அல்லது இதிலெல்லம் தப்பொன்று இல்லை என்ற அலட்சியமாகவோ பட்டாசு வெடித்தல் போன்ற காரியங்களில் ஈடுபடுவதை நாம்
தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
நம்முடைய்
குழந்தைகள் அதிகம் ஆசைப்படுகிறார்கள் அவர்களுக்கு வளர வளர புரிய வைத்து விடலாம் என்று
நினைத்தால் கூட இந்த நாட்களை தவிர்த்துக் கொள்வது நல்லது. பிற மத்த்தின் வழிபாட்டுக்கு
ஒப்பாகும் செயல் என்ற தீமையிலிருந்து விலகிக் கொள்ள முடியும்.
அதே போல மற்றவர்களுக்கு
துன்பம் தராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அது வேற்று ஒரு பாவமாக வந்து சேர்ந்து விட
வேண்டாம். பக்கத்து வீடுகளில் முதியவர்கள் நோயாளிகள் இருக்கலாம் அவர்களது பழிச் சொல்லுக்கு
ஆளாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பட்டாசின்
அடுத்த பெரும் தீமை அது காசை கரியாக்குவதாகும். பணத்தை மிக மோசமாக செலவு செய்வதை தான்
காசை கரியாக்குதல் என்று சொல்வார்கள். பட்டாசு சந்தேகம் இல்லாமல் காசை உண்மையாகவே கரியாக்கும்
வேலையாகும்.
எங்களுக்கு
அதில் மகிழ்ச்சியான அனுபவம் கிடைக்கிறது என்று சிலர் வாதிடுகிறார்கள். உண்மையில் இது
சிறுபிள்ளைத்தனமான மகிழ்ச்சியாகும்.
இந்த கொஞ்ச
நேர மகிழ்ச்சி உங்களுக்கு போதுமா என்று கேட்டால் பதில் இருக்காது.
வீணடிப்பதிலும்
விரையம் செய்வதிலும் மகிழ்ச்சியடைகிறோம் என்று சொன்னால் அது புத்திசாலித்தனமாகுமா என்று
திருப்பிக் கேட்டால் பதில் இருக்காது.
இஸ்லாம் பணத்தை
வீணடிப்பதை வண்மையாக கண்டிக்கிறது.
وَلا تُبَذِّرْ تَبْذِيراً إِنَّ الْمُبَذِّرِينَ
كَانُوا إِخْوَانَ الشَّيَاطِينِ وَكَانَ الشَّيْطَانُ لِرَبِّهِ كَفُوراً [الإسراء: 26-27]
தப்தீர் என்ற
சொல்லுக்கு பொறுத்தமற்ற வழியில் காசுபணத்தை செலவழிப்பது என அப்துல்லாஹ் பின் அப்பாஸ்
ரலி அவர்கள் விளக்கமளிக்கிறார்கள்.
عن ابن عباس، قوله (وَلا تُبَذّرْ تَبْذِيرًا) قال: المبذّر: المنفق في غير حقه.
அப்படிச் செய்வோரை சாத்தானின் சகோதரர்கள் என்று அல்லாஹ்வே ஏசுகிறான் அது மட்டுமல்ல. அது நன்றி கெட்ட செயல் என்றும் அல்லாஹ் எச்சரிக்கிறான்.
அல்லாஹ் பாதுகாப்பானாக!
நபிகள் நாயகம்
(ஸல்) மிக கண்டிப்பாக எச்சரிக்கை செய்த காரியங்களில் காசு பணத்தை வீண் விரயம் செய்வதும்
ஒன்றாகும்.
نْ أبي هُريْرةَ قَالَ: قَال رَسُولُ اللَّهِ ﷺ: إنَّ اللَّه تَعَالى
يَرضى لَكُمْ ثَلاَثًا، وَيَكْرَه لَكُمْ ثَلاثًا: فَيَرضى لَكُمْ أنْ تَعْبُدوه،
وَلا تُشركُوا بِهِ شَيْئًا، وَأنْ تَعْتَصِموا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلا
تَفَرَّقُوا، ويَكْرهُ لَكُمْ: قِيلَ وَقَالَ، وَكَثْرَةَ السُّؤالِ، وإضَاعَةَ
المَالِ رواه مسلم
அல்லாஹ் வெறுக்கிற காரியங்களை செய்கிற போது நமது நிம்மதி குறையும்
அல்லது பறி போகும் என்று மார்க்க அறிஞர்கள் அனுப பூர்வமாக எச்சரிக்கிறார்கள்.
நாம் அற்ப சந்தோஷத்திற்காக பட்டாசு வெடிக்கிறோம். அல்லது வீணான
வழிகளில் செலவு செய்கிறோம். அதனால் ஏற்படும் மறைமுக பின் விளைவுகளைப் பற்றி சிந்திப்பதில்லை.
ஒரு பெரிய ஹழ்ரத் கூறிய அனுபவம் இது.
ஒரு பெரிய தொழிலதிபரின் மனைவி என்னிடம் வந்து தனது பிரச்சனையை கூறினார்.
எங்களுக்கு திருமணமாகி 7 வருடங்கள் ஆகிவிட்டது. குழந்தைகள் இல்லை. அதனால் எங்களுக்குள்
சச்சரவு எதுவும் இல்லை, ஏனெனில் நாங்கள் ஒருவரை ஒருவர் சரியாக புரிந்து வைத்திருக்கிறோம்.
எனது கணவர் எனது செலவிற்காக மாதம் இலட்சம் ரூபாய் தருகிறார். எனது கவலை என்ன வென்றால்
எனக்கு அது போதுமாவதில்லை. அதனால் எனக்கு தூக்கம்
வருவதில்லை.
ஹழரத் கூறினார் என்னகு ஏற்பட்ட ஆச்சரியம். அந்தப் பெண்ணின் கணவரும்
சில நாட்களுக்கு முன்னாள் வந்து தனக்கு தூக்கம்
வருவதில்லை என்று கூறியிருந்தார்.
காசு பணம் ஏராளமாக இருந்தும் நிம்மதி கிடைப்பதில்லை என்பது பலருடை
குறையாக இருக்கிறது.
ஒன்றை இது தெளிவுபடுத்துகிறது. காசு பணம் என்பது நிம்மதியை விட
பெரிய விசயமல்ல,
அருமையானவர்களே பணம் என்பது அல்லாஹ் தருகிற மிகச் சிற்ந்த நிஃமத்தாகும்.
ஒரு தேவைக்கான பணம் இல்லாதவர்கள் என்ன வெல்லாம் சிரமத்தை அனுபவிக்கிறார்கள். மனக் கஷ்ட்த்திற்கும்
மரியாதை நஷ்ட்த்திற்கும் உள்ளாகிறார்கள் என்பதை சிந்தித்துப் பார்த்தால் நம்மிடம் இருக்கிற
பணம் எவ்வளவு பெரிய நிஃமத் என்பது புரிய வரும்.
நம்மில் ஒவ்வொருவருக்குமான பணத்தின் அளவை அல்லாஹ் தீர்மாணித்து
வைத்திருக்கிறான். அது நிச்சயம் நம்மை தேடி வரும். உங்களது மரணத்தை போலவே உங்களது பணமும்
உங்களை தேடி வந்து கொண்டிருக்கிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
عَنْ أُمِّ الدَّرْدَاءِ عَنْ أَبِي
الدَّرْدَاءِ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:"إِنَّ
الرِّزْقَ لَيَطْلُبُ الْعَبْدَ كَمَا يَطْلُبُهُ أَجَلُهُ".
ஒருவர்
காசே வேண்டாம் என்று ஓடினாலும் அவருக்கான
பணம் அவரை துரத்திக் கொண்டு
வந்து சேரும் என மற்றொரு
வகையாகவும் பெருமானார் இதை கூறினார்கள்
عن جابر مرفوعا : لو أن ابن آدم هرب من رزقه كما يهرب من الموت لأدركه رزقه كما يدركه
الموت
பெருமானார்
(ஸல்) அவர்களுக்கு ஒரு அவர்களது பயணப்பாதையில்
கேட்பாரில்லாத பேரீத்தம் பழங்கள் கிடைத்தன. சற்று
நேரத்தில் ஒரு யாசகர் அங்கு
வந்தார். அவருக்கு அதை கொடுத்த (ஸல்)
அவர்கள் கூறினார்கள். நீ இங்கு வரவில்லை
என்றாலும் இது உன்னை வந்து
சேர்ந்திருக்கும் என்றார்கள்
عَنِ
ابْنِ عُمَرَ قَالَ: كُنَّا مع رسول الله فَرَأَى تَمْرَةً عَائِرَةً فَأَعْطَاهَا سَائِلا
وَقَالَ:"لَوْ لَمْ تَأْتِهَا لأَتَتْكَ".
எனவே
நமக்குள்ள பணம் அல்லாஹ் நம்மிடம்
கொண்டு வந்து சேர்த்துள்ள பணமாகும்
அதில் ஒவ்வொரு பைசாவுக்கும் நாம்
கடமைப்பட்டிருக்கிறோம்.
وعن أبي بَرْزَةَ الأسْلمي - رضِي الله
عنه - قال: قال رسول الله - صلَّى الله عليه وسلَّم -: ((لا تزولُ قَدَمَا عبدٍ
يوم القيامة حتى يُسأل عن عُمره فيم أفْناه، وعن عِلمه فيمَ فعل، وعن ماله من أين
اكتسَبَه وفِيمَ أنفَقَه، وعن جِسمه فِيمَ أبلاه))؛ رواه الترمذ
அதை உரிய வழியில்
செலவழிக்கும் போது அல்லாஹ் அதில் நமக்கு நிம்மதியை தருவான்.
அதை நாம் தவறாக
பயன்படுத்தும் போது அது நமக்கு பிரச்சனைகளையே தரும். தற்காலிக சந்தோசத்தை கொடுத்தாலும்
கூட .
ஒரு தாபியீ
சொன்னார்.
நான் எப்போது
அல்லாஹ்வுக்கு கட்டுப்படாமல் போகிறேனே அப்போதெல்லாம் என் மனைவி, அல்லது பிள்ளைகள்,
அல்லது தொழிலாளர்கள், அல்லது எனது வாகனம் என் பேச்சை கேட்க வில்லை
பணம் மட்டுமே
போதும். அதில் நான் என்னமும் செய்வேன் என்று நினைப்பவர்களுக்கு இது பெரிய பாடம்.
ஆய்வாளர்கள்
ஒரு செய்தியை கூறுகிறாகள்
உலகின் பணக்கார
நாடுகளில் ஒன்று ஸ்வீடன். இருக்கிற பணத்தை என்ன செய்வது என்று யோசிக்கிற நாடு. தன்னுடைய
மக்களுக்கு கல்வி, வீடு, மருத்துவம் அனைத்தையும் இலவசமாக கொடுக்கிற நாடு. வேலை இல்லாதவர்களுக்கும்
சும்மாவே மாதச் சம்பளம் கொடுக்கிற நாடு. இது மாத்திரம் அல்ல செக்ஸ் ஃபீரீ கண்ட்ரீ என்று
அறிவித்துள்ள நாடு. விபச்சாரம் அங்கு குற்றமல்ல.
அங்குதான் உலகில்
அதிகமாக தற்கொலை நடக்கிறது என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. நான் ரிடயர்டு ஆன
பிறகு என்னை கொலை செய்து விடுங்கள் என ஏராளமானோர் அங்குள்ள மருத்துவர்களிடம் அப்ளிகேசன்
கொடுக்கிறார்கள்.
காசுள்ளவர்களுக்கெல்லாம்
பெரிய பாடம் இது.
நாம் அல்லாஹ்
நமக்கு தருகிற காசை அல்லாஹுவுக்கு மாற்றமான வழிகளில் செலவழித்தால், வீண் விரையம் செய்தால்
அதன் விளைவு ஒவ்வொரு பைசாவிலும் தெரிந்து விடும்
தன்னுடை கணவர்
போதுமான காசு பணத்தை கொடுத்தும் தனது தேவைகள் தீர வில்லை நிம்மதி இல்லை. தூக்கம் வருவதில்லை என்று கூறிய
அந்தப் பெண்ணுக்கும் அந்த பெரிய ஹழரத் கூறினார்.
நீங்கள் அதிகம்
இஸ்திக்பார் செய்யுங்கள், ஆடம்பர செலவை முற்றிலுமக தவிர்த்துக் கொள்ளுங்கள், உங்களது
வாழ்க்கை தர்தீப் ஆக வைத்துக் கொள்ளுங்கள். முடிந்த வரை தான தர்மங்கள் செய்யுங்கள்.
நிச்சயமாக வெகு சீக்கிரம் நீங்கள் நிம்மதியான தூக்கத்தை பெறுவீர்கள் என்றார்.
அந்த பெண்மணி
6 மாதம் கழித்து ஹழரத்திற்கு போன் செய்தார். ஹழ்ரத் நான் என் தேவைகளை அளவிட்டேன். முன்பை
விட மூன்றில் ஒரு பங்கு மட்டுமே செலவிடுகிறேன். மீதமாகிற பணத்தில் ஏழைகள் விதவைகளுக்கு
கொடுக்கிறேன். இப்போது மிக நிம்மதியாக இருக்கிறேன். நன்றாக தூங்குகிறேன் என்றார்.
நம்மைச் சுற்றி
அன்றாடம் நிகழ்ந்து கொண்டிருக்கிற இது போன்ற நிகழ்வுகள் மிக அழுத்தமான சாட்சியாக இருக்கின்றன.
நமது காசால் அல்லாஹ்வை
சந்தோசப்படுத்தும் காரியங்களில் ஈடுபடுவோம் குறைந்த பட்சம் அவனை கோப்படுத்தி விட வேண்டாம்.
அல்லாஹ் நிச்சயம்
நமது காசு பணத்தை பாதுகாப்பான். நிம்மதி தருவான். ஆமீன்.
மாஷா அல்லாஹ் தேவையான நேரத்தில் அற்புதமாக ஆணித்தரமாக பதிவு செய்தீர்கள் அல்லாஹ் அருள் புரியட்டும் ஆமீன்
ReplyDeleteஅல்ஹம்துலில்லாஹ் ஹழ்ரத் அருமையான பதிவு
ReplyDeleteMashaallah barakallahu feekkum hazrath
ReplyDelete