வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, July 31, 2025

முஆத் பின் ஜபல் (ரலி) எனும் துருவ நட்சத்திரம்

يَرْفَعِ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ

வாழ்க்கையில் மிகச் சிறப்பான பருவம் இளமை பருவம். வாழ்வின் அதிக காலத்தை கொண்டதும் கூட. 15 வயதிலிருந்து 40 வயது வரை சுமார் 25 ஆண்டுகள் இளமைக்காலமாகும். தற்காலத்தில் 50 வயது வரை கூட மக்கள் தம்மை இளயவர்களாக நினைத்துக் கொள்கிறார்கள்.

2K தலைமூறை என்று கூறிக் கொள்கிற இன்றைய இளைய சமுதாயம் திக்கற்றதாக சென்று கொண்டிருக்கிறது. வாழ்க்கை என்பது இஷ்டப்படி வாழ்வது என்பது அவர்களது கோட்பாடாக ஆகியிருக்கிறது. எப்படியவது சம்பாதித்து விடுவது, எப்படியும் காலத்தை களிப்பாக கழித்து விடுவது என்பதே அவர்களில் பெரும்பாலோனொரின் நடை முறையாக மாறியிருக்கிறது. ஆபாசம், கட்டுப்பாடுகளை தகர்த்தல் யாரையும் மதிக்க தயாராக இல்லாத மனோநிலை குழுவாக சேர்ந்து எந்த அக்கிரமத்தையும் துணிந்து செய்தல் ஆகிய தீமைகளின் கூடாராமாக இன்றைய இளைய சமூகம் மாறிவிட்டது.

சில மாதங்களுக்கு முன் சென்னையில் 25 வயது ஆட்டோ ஒட்டுபரையும் அவரது அண்ணனையும் 16 முதல் 22 வயது வரையான 7 பேர் கத்தி, அரிவாள் கொண்டு மக்கள் மத்தியில் வெட்டி கொன்றுள்ளனர்.

என்ன காரணம்? நடு ரோட்டில் கேக் வெட்டிக் பிறந்தநாள் கொண்டாடி உள்ளனர். வழி விடுமாறு கூறியதால் ஏற்பட்ட வாய் தகராறு..

பப்ஜி விளையாடுவதில் ஆர்வம் காட்டுகிற இளைஞர்களுக்கு தனது ரெஸ்யூம் (பயோடேட்டா) வை ஒழுங்காக தயாரிக்க தெரிவதில்லை என்று ஒரு சமூக ஆர்வலர் எழுதுகிறார். 

கல்வியிலிருந்து ரசியலில் ஈடுபடுவது வரை அனைத்திலும் கேளிக்கை தலை தூக்கியிருக்கிறது.

ஒரு இளைஞனிடம் இருக்க வேண்டிய தெளிவான பார்வை துல்லியமான இலக்கு பயன்பட வாழ்தல் சமூக மாற்றத்திற்காக உழைத்தல் என்கிற சிந்தனை அரிதாகி வருகிறது.

இந்த சூழ்நிலை ஒரு உன்னதமான இளைஞரின் வரலாற்றை பார்க்க இருக்கிறோம்.

அவர் தான் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள்.  ஒரு சிறப்பான வாழ்க்கையை சிந்திக்கிற எந்த ஒரு இளைஞனும் முஆத் பின் ஜபல ரலி அவர்களின் வாழ்க்கையை போல மதிப்பு மிக்க வாழ்க்கைகு ஆசைப்பட வேண்டும் .

முஹம்மது நபி (ஸல்)அவர்கள் தனது மகத்தான இஸ்லாமிய புரட்சியில். இளைஞர்களை சிறப்பாக உருவாக்கி அவர்களால் அரும் பயனை அடைந்தவர் ஆவார்கள்.

தனது தோழர்களைப் பற்றி முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறிய அளவிற்கு பெருமையாக வேறு எந்த தலைவரும் சொன்னதில்லை. சொல்வதற்கேற்ற தைரியமான சூழலும் இருந்ததில்லை

முஹம்மது நபி (ஸல்) சொன்னார்கள்.

 أصحابي كالنُّجومِ، بأيِّهم اقتَدَيتم اهتَدَيتُم

முஆத் பின் ஜபால் ரலி துருவ நட்சம் ஆவார்.

துருவ நடசத்திரம் வானில் பிரகாசமாகத் தெரியக்கூடியது

வானத்தின் வடக்கு பகுதியில் ஒரே இடத்தில் நிற்பது போல இருக்கும்.

அதனால் கடல்பயணிகளுக்கு இரவில் திசை அறிய  பெரிதும் உதவியாக இருக்கும்.

முஆத் ரலி அவர்கள் மதிப்பு மிகு வாழ்க்கைய வாழ்ந்தார். இளைஞர்களுக்கு இன்று வரை முன்னோடியாக திகழ்கிறார்.

முஆத் ரலி அவர்கள் மதீனாவின் கஜ்ரஜ் குடும்பத்தில் பிறந்தவர்.

18 வது வயதில் இஸ்லாமை தழுவினார்.

அதுவும் மதீனாவிற்கு பெருமானார் (ஸல்) அவர்கள் செல்வதற்கு முன்னதாக மதீனாவிலிருந்து மக்காவிற்கு வந்து இஸ்லாமை ஏற்ற இரண்டாம் அகபா உடன்படிக்கையில் பெருமானாரை சந்தித்து இஸ்லாமை ஏற்றார்

அப்போது அவருக்கு மீசை தாடி முடி கூட முளைத்திருக்க வில்லை என்று வரலாறு கூறுகிறது.

தெளிவான சிந்தனை – நேர் கொண்ட பார்வை

நன்றாக சிந்தித்து வாழும் நடவடிக்கையை நாற்பது வயதுக்கு மேல் வைத்துக் கொள்ளலாம் என்று இன்றைய  தல்லமுறை நினைக்கிறது.

அது சரியானது அல்ல; இளம் பருவத்திலேயே வாழ்க்கையின் இலக்கு குறித்த குழப்பமற்ற சரியான தீர்மாணம் அவசியம்.

1.   மார்க்கத்தில் தான் செல்லும் வழி குறித்த தெளிவு அவரிடம் இருக்க வேண்டும்.

2.   வாழ்க்கையில் எப்படி உழைத்து  வெற்றி பெறப் போகிறோம் என்பது தெளிவு அவரிடம் இருக்க வேண்டும்.

ஜவஹர்லால் நேருவிற்குப் பிறகு லால் பக்தூர் சாஸ்திரி இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்றார். 1964 ஆகஸ்ட் 15 ம் தேதி செங்கோட்டையில் அவர் சுதந்திர கொடியை ஏற்றி விட்டு பேசி உரை சிறப்பானது. அதில் அவர் கூறினார். இது 40 ஆண்டு கனவு. 40 ஆண்டுகளுக்கு முன் தேசிய இயக்கத்தில் இணைந்த நாங்கள் செங்கோட்டையில் தெசிய கொடு ஏற்றுவோம் என்று கனவு கண்டோம். நேரு அந்த கனவை விதைத்தார். இதோ இப்போது அது நிறைவேறிக் கொண்டிருக்கிறது

சாஸ்திரியும் அவரை ஒத்த நண்பர்களும் வாழ்வின் இலக்கில் தெளிவு கொண்ட போது அவர்களுடைய வயது 20.

18 வயதிற்குள் ஒரு சரியான மார்க்கத்தை தேர்ந்தெடுத்துக் கொள்கிற தெளிவு முஆத் ரலி அவர்களிடம் இருந்த்து.

வெற்றி பெற்ற வரலாற்றுக்கு சொந்தக் கார்ர்களில் பெரும்பாலோர் இளைமைக் காலத்திலேயே தமது இலக்கில் தெளிவாக இருந்தவர்கள் ஆவார்கள்.

துணிச்சல் மிக்க நடவடிக்கைகள்

இளைமை காலம் என்பது துணிச்சலுக்கானது. அந்த துணிச்சல் தற்காலத்தில் தீய வழிமுறைகளுக்கு பயன்படுகிறது.

ஒவ்வொரு இளைஞனும் நினைவில் கொள்ளட்டும்.

எந்த தீய துணிச்சலும் அல்லது அசட்டு துணிச்சலும் வாழ்க்கைய ஒரு போதும் வெளிச்சமாக்காது.

நல்ல காரியங்களில் துணிச்சல் காட்டுவது தொடக்கத்தில் சில சிரமங்களை கொடுத்தாலும் பின்னாட்களில் வளமான எதிர்காலத்திற்கு வழி வகுக்கும்.

குகைத் தோழர்கள் என்று குர் ஆன் குறிப்பிடும் இளைஞர்கள் ஓரிறைக் கோட்பாட்டிற்காக துணிச்சலாக தம் ஊரை விட்டு வெளியேற முடிவு செய்தனர். அல்லாஹ் அவர்களை வரலாற்றின் ஒரு பேர் அதிசயமாக மாற்றினான்.

முஆத் பின் ஜபல் ரலி அவரக்ள் இஸ்லாமை ஏற்றதும் ثعلبة بن عنمة

  عبد الله بن أنيس  ஆகிய தனது வயதொத்த நண்பர்களுடன் சேர்ந்து தனது பனூசலமா குடும்பத்தில் இருந்த தீய நடவடிக்கைகளை மாற்றுவதில் அக்கறையோடு செயல்பட்டார்கள். அதன் காரணமாக அவர்களுடைய குடும்பம் சீர்டைந்தது.

கல்வி

இஸ்லாமை ஏற்றுக் கொண்ட பிறகு இளைஞர் முஆத்  ரலி அவர்களின் பிரதான ஈடுபாடு திருக்குர் ஆனுடனானதாக இருந்தது. சீக்கிரமே குர் ஆனை மனனம் செய்தார்.

உஸுதுல் காபாவில் இப்னு ஹஜ்ர் அல் அஸ்கலானி எழுதுகிறார்.

  جمع القرآن في زمن النبي  خمسة من الأنصار: معاذ وعبادة وأُبيّ وأبو أيوب وأبو الدرداء،

 இந்தப் பட்டியலில் முதல் பெயராக முஆத் ரலி அவர்களீன் பெயர் இருந்தது.

 எந்த அளவுக்கு அன்றைய புதிய சமூகத்தில் முஆத் ரலி அவர்களின் திறமை புகழுக்குரியதாக இருந்த்து என்றால் நீங்கள் முஆதிடமிருந்து குர் ஆனை கற்றுக் கொள்ளுங்கள் என்று பெருமானார் (ஸல்) அவர்கள் முஸ்லிம் உம்மத்திற்கு சொன்னார்கள்.

 روى عبد الله بن عمرو بن العاص عن النبي محمد قوله: «خذوا القرآن من أربعة: من ابن مسعود وأبي ومعاذ بن جبل وسالم مولى أبي حذيفة».

 இளைய சமுதாயமே !

உங்களது வாழ்நாளில் நீங்கள் தினமும் எதையாவது கற்றுக் கொள்கிறீர்களா என்பதில் கவனமாக இருங்கள்.

 

கற்றுக் கொள்வதற்கான பருவம் இதைவிடச் சிறந்த்து வெறில்லை.

இளமையில் கேளிக்கைகள் கொஞ்சம் இருக்கலாம். இளமையே கேளிக்கைகானது அல்ல

இளமையில் கற்காமல் போகிறவர்கள் நிச்சயம் பிற்காலத்தில் அதற்காக வருத்தப்படவே செய்வார்கள்.

நீங்கள் பிற்காலத்தில் எந்த பெரிய உயரத்திற்கும் செல்ல்லாம். ஆனால் அப்போது உங்களிடம் அறிவுத்திறன் இல்லை எனில் பெரிதும் ஏமாற்றத்திற்கு உள்ளாவீர்கள்

அதனால் தான் உமர் ரலி அவர்கள் சொன்னார்கள்.

தலைவராக ஆவதற்கு முன் கல்வி கற்றுக் கொள்ளுங்கள்.  تَفَقَّهُوا قَبْلَ أَنْ تُسَوَّدُوا

 சரியான மார்க்கத்தை கற்றுக் கொள்ளுங்கள்.

 இஸ்லாமின் கொள்கை , மார்க்க சட்டங்களில் தேவையானவை – பெருமானாரைப் பற்றிய வரலாறு இஸ்லாமிய வரலாறு கலாச்சாரம் இவை பற்றி தெளிவு பெற்றுக் கொள்வதற்கு கொஞ்சம் அக்கறை இருந்தால் போதும் கற்றுக் கொள்ளலாம்.

 அறிவு பெறாமல் மார்க்கத்தில் விதண்டாவாதம் செய்கிற எண்ணிக்கை பெருகி இருக்கிற காலம் இது. நீங்கள் முறையாக அறிவை பெற முயற்சி செய்யுங்கள்.

 எனக்குத் தேவையான மார்க்கம் எனக்கு தெரியும் என்ற உறுதி உங்களிடம் இருக்க வேண்டும்.

 தாய் தகப்பனுக்கு ஜனாஸா தொழும் போது என்ன செய்ய வேண்டும் என்று தெரியாதவராக இருந்தால் அது அர்த்தமுள்ள் இளைஞனுக்கு அடையாளமாகுமா என்று யோசிக்க வேண்டும்.

 அடுத்து உங்களது தொழில் வாழ்க்கையை பற்றிய தெளிவான அறிவை தேடிக் கொள்ளுங்கள்.

 அடுத்து நிகழ்கால அரசியலில் ஒரு தெளிவான நிலைப்பாட்டிற்கு செல்வதற்கான அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.

 இவை அனைத்தை பற்றிய அப்டேட்டான அறிவும் ஒவ்வொரு இளைஞனையும் வாழ்க்கையில் உயர்த்தும்

 திறமை

முஆத் பின் ஜபல் ரலி அவர்கள் கல்வில் சிறந்தவராக திருக்குர் ஆனை மன்னம் செய்தவராக மட்டும் இருக்கவில்லை.

குர் ஆனில் ஆராய்ச்சி செய்பவராக அதிலிருந்து சட்டங்களை புரிந்து கொள்பவராகவும் தனது திறனை வளர்த்துக் கொண்டிருந்தார்கள்.

பெருமானார் (ஸல்) அவர்கள் வாழ்கிற போதே மார்க்க தீர்ப்பளிக்கும் அதிகாரம் பெற்றவர்களில் ஒருவராக முஆத் ரலி இருந்தார்.

வரலாறு சொல்கிறது.

   ان معاذ بن جبل من قلة ممن سُمح لهم الفتيا على عهد النبي محمد ،

فقال سهل بن أبي حثمة: «كان الذين يفتون على عهد رسول الله  ثلاثة من لمهاجرين

عمر وعثمان وعلي، وثلاثة من الأنصارأبي بن كعب ومعاذ وزيد

 பெரும் சஹாபாக்களிடம் தனது மரியாதையை அவர் நிலை நாட்டியிருந்தார்.

 سير أعلام النبلاء  வில் ஒரு செய்தி வருகிறது.

 

فعندما خطب عمر بن الخطاب الناس بالجابية، قال: «من أراد الفقه، فليأت معاذ بن جبل

 الطبقات الكبرى لابن سعد வில் முதல் முஸ்லிம் சமூகத்தில் தனது தோழர்களுக்கிடையே முஆத் ரலி அவரக்ளின் மரியாதை எந்த அளவுக்கு இருந்த்து என்பது பற்றி ஒரு செய்தி வருகிறது.

 قال أبو إدريس الخولاني: «دخلت مسجد حمص، فإذا فيه نحو من ثلاثين كهلاً من الصحابة، فإذا فيهم شاب أكحل العينين، براق الثنايا ساكت، فإذا امترى القوم، أقبلوا عليه، فسألوه، فقلت: «من هذا؟» قيل: «معاذ بن جبل». فوقعت محبته في قلبي

 அபு இத்ரிஸ் அல்-கவ்லானி கூறினார்: நான் ஹிம்மஸ் பள்ளிவாசலுக்குள் நுழைந்தேன், அதில் சுமார் இளம் நபித்தோழர்கள் 30 பேர் இருந்தனர். அவர்களில் கருப்பு கண்கள் மற்றும் பளபளப்பான பற்கள் கொண்ட ஒரு இளைஞர் அமைதியாக இருந்தார். மக்கள் சந்தேகம் ஏற்படும் போது அவரை அணுகி அவரிடம் ஐயம் கேட்ட்டார்கள் நான்: இவர் யார்?’ என்று கேட்டேன். அவர்கள்: முஆத் இப்னு ஜபல்என்றார்கள். அதிலிருந்து அவர் மீது என் அன்பு ஏற்பட்டது.

 முஆத் பின் ஜபல் ரலி அவர்கள் வளர்த்துக் கொண்ட திறமையை பெருமானார் (ஸல்) அவர்கள் பாராட்டினார்கள். என் சமூகத்தில் ஹலால் ஹராமை பற்றி மிக அறிந்தவர் முஆத் என்றார்கள்.

 

فقد روى أنس بن مالك عن النبي محمد  قوله: «أرحم أمتي بأمتي أبو بكر، وأشدها في دين الله عمر، وأصدقها حياء عثمان، وأعلمهم بالحلال والحرام معاذ

 வாழ்க்கையில் உயர நினைக்கிற எந்த இளைஞனும் தனது திறமையை வளர்த்துக் கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும்.

 இளமை

அதற்காகன ஆரோக்கியத்தை கொண்டது.  

அதற்காக உழைக்கிற துணிச்சல் மிக்கது. 

அதற்கான கூரான சிந்தனைகளை தரக் கூடியது.  

 சமூகத்திற்கான சேவையும்  அர்ப்பணிப்பு

 முஆத் ரலி அவர்கள் அறிவிற்சிறந்தவராக  சட்டத்துறையில் தேர்ச்சி பெற்றவராக இருந்த போதும் கூட தன்னுடசமூக கடமைகளை  அவர் மறந்த்தில்லை. சமூகத்திற்காக எந்த அர்ப்பணிப்புக்கும் அவர் தயங்கியதில்லை.

 சிரியா வெற்றி கொள்ளப் பட்ட போது பெரும் நிலப்பரப்பு முஸ்லிமானது. அவர்களுக்கு குர் ஆனை கற்றுக் கொடுப்பதையே வாழ்வாக கொண்ட ஆட்கள் தேவை பட்டார்கள். சிரியா படைகளின் தலைவர் யஜீத் பின் அபீ சுப்யான் உமர் ரலி அவர்களுக்கு இந்த பிரச்சனையை கூறி கடிதம் எழுதினார். அப்போது எங்களுக்கு உதவுங்கள் என்று கூறி உமர் ரலி அனுப்பி வைத்து மூன்று சஹாபாக்களில் முதலாமவராக முஆத் பின் ஜபல் ரலி அவர்கள் இருந்தார்கள். மற்ற இருவர் உபாதா பின் சாபித் ரலி அவரகளும்  அபுத்தர்தா ரலி ஆகிய இருவார் ஆவர்.

இவர்களது மகத்தான பயனால் தான் பாலஸ்தீன் திமஸ்க் நாட்டு மக்கள் இஸ்லாமை அறிந்து கொண்டார்கள்.

 போர்களில் பங்கு

பத்று யுத்த்த்தில் அவர் பங்கேற்றார். அப்போது அவருக்கு வயது 20.

 அதன் பிறகு பொருமானார் (ஸல்) அவர்கள் தலைமையேற்ற அனைத்து யுத்தங்களிலும் அவர் பங்கேற்றார். ஒன்றில் கூட பிந்தங்க வில்லை.

 

அது மட்டுமல்ல சஹாபாக்கள் காலத்தில் ஷாம் தேசத்திற்கான படை புறப்பட்ட போது அதில் விரும்பி தன்னை இணைத்துக் கொண்டார்.

 பரிவு

இத்தனை சிறப்பம்சங்களை கொண்ட முஆத் ரலி அவர்கள் மீது பெருமானார் எப்போதும் கவனிப்பார்கள். அவர் மீது பரிவு காட்டுவார்கள் . அவரது கடன் தீர் துஆ கற்றுக் கொடுத்தார்கள்.  இன்று நம் எல்லோருக்கும் பயன்படும் துஆ அது. (ஆலு இம்ரான் 26)

 وفي معجم الطبراني الكبير عن معاذ بن جبل : أن رسول الله صلى الله عليه وسلم افتقده يوم الجمعة، فلما صلى رسول الله صلى الله عليه وسلم أتى معاذا فقال له يا معاذ: ما لي لم أرك؟ قال يا رسول الله ليهودي علي أوقية من تبر فخرجت إليك فحبسني عنك: فقال له رسول الله صلى الله عليه وسلم: يا معاذ ألا أعلمك دعاء تدعو به فلو كان عليك من الدين مثل جبل صبر أداه الله عنك -وصبر جبل باليمن- فادع به، يا معاذ قل: اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير، تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب، رحمن الدنيا والآخرة ورحيمهما تعطي من تشاء منهما وتمنع من تشاء، ارحمني رحمة تغنيني بها عن رحمة من سواك

 பாராட்டு

 அறிவும் திறனும் மிக்கவர்களை சமுதாயம் கொண்டாடும்.  அப்துல் கலாமை இன்றைய தலைமுறை கொண்டாடுவது போல

அன்று முஹம்மது நபி (ஸ்ல) அவர்கள் முஆத் ரலி அவர்களை வாழ்த்தினார்கள். நேசித்தார்கள். சமுதாயத்திற்கு அடையாளம் காட்டினார்கள்.

 முஆத் ரலி அவர்களே ஒரு முறை சொன்னார்கள்

பெருமானார் (ஸல்) கூறினார்கள். முஆத் நான் உன்னை நேசிக்கிறேன்.

لقيني النبي  فقال: «يا معاذ، إني لأحبك في الله». قلت: «وأنا والله يا رسول الله أحبك في الله )»سير أعلام النبلاء

 இன்னொரு முறை பெருமானார் (ஸல்) சொன்னார்கள். கியாமத் நாளில் முஆத் உலக அறிஞர்களுக்கு ஒரு படி அல்லது இரு படி முன்னே இருப்பார்.

وقال النبي محمد: «معاذ أمام العلماء يوم القيامة برتوة أو رتوتين -أسد الغابة في معرفة الصحابة

 இன்னொரு முறை பெருமானார் இப்படி கூறினார் முஆத் நல்லவர்.

 وقال أبو هريرة أنه سمع النبي محمد  يقول: نعم الرجل معاذ بن جبل )-تهذيب الكمال للمزي(

 இந்த பாராட்டுரைகளை வழங்குவது யார் என்பதை கவனியுங்கள்! ஒரு இளைஞருக்கு இது எத்தகைய பரிசு என்பதை சிந்தியுங்கள்;

 பரிசு

முஆத் ரலி அவர்களின் அறிவுக்கு திறமைக்கு சேவைக்கும் வெறும் பாராட்டு மட்டும் கிடைக்க வில்லை. உரிய அந்தஸ்த்தும் கிடைத்த்து.

 மக்காவை வெற்றி கொண்ட  போது ஹிஜ்ரீ 8 வருடத்தில் முஹம்மது நபி (ஸ்ல) அவர்கள் முஆத் ரலி அவர்களை மக்காவின் சட்ட்த்துறை அதிகாரியாக நியமித்தார்கள்

அப்போது அவருக்கு வய்து 26 .

 ولما فتح النبي محمد  مكة في رمضان سنة 8 هـ، استخلف عليها عتاب بن أسيد يصلي بهم، وخلف معاذًا يُقرئهم القرآن، ويفقههم في دينهم

 அதற்கடுத்த ஹிஜ்ரீ 9ம் ஆண்டில் முஆத் ரலி அவர்களை பெருமானார் (ஸல்) அவர்கள் எமன் நாட்டின் ஆளுரானராக நியமித்தார்கள்

வரலாறு பல ஆளுநர்களை கண்டிருக்கலாம். ஆனால் பெருமானாரால் நியமிக்கப் பட்ட ஆளுநராக முஆத் ரலி அவர்கள் இருந்தார்கள்.

 அப்போது அவருக்கு வயது 27

வியப்பாக இருக்கிறதல்லவா ?  18 வயதில் இஸ்லாமை ஏற்றுக் கொண்ட அந்த இளைஞர் 9 வருடங்களுக்குள்ளாக நபியால் நியமிக்கப்படுகிற ஒரு பெரும் ஆளுமையாக மாறியிருந்தார்.

 இதற்கு அவருடைய தகுதியும் உழைப்புமே காரணமாகும்.

 அவரை எமனுக்கு அனுப்பிவைத்த போது அவரது ஒட்டகத்தை பிடித்துக் கொண்டு பெருமானார் (ஸல்) அவர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வரலாற்று சிறப்பு மிக்கவை. இஸ்லாமிய சட்ட்த்துறைக்கு அடிப்படையாக அமைந்தவை

.அது மட்டுமல்ல  முஆத் ரலி அவர்களின் திறமைக்கு சான்றாக அமைந்தவை. அவருக்கு பெருமானாரின் துஆ வை பெற்றுக் கொடுத்தவை .

 أنَّ رسولَ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم لَمَّا أرادَ أنْ يَبعَثَ مُعاذًا إلى اليَمنِ، قال: كيف تَقضي إذا عرَضَ لكَ قَضاءٌ؟ قال: أقْضي بكِتابِ اللهِ عزَّ وجلَّ، قال: فإنْ لمْ تَجِدْ في كِتابِ اللهِ عزَّ وجلَّ؟ قال: فبِسُنَّةِ رسولِ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم، قال: فإنْ لمْ تَجِدْ في سُنَّةِ رسولِ اللهِ ولا في كِتابِ اللهِ؟ قالأجْتَهِدُ رَأْيي ولا آلُو. قال: فضرَبَ رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم في صَدْرِه، وقال: الحمْدُ للهِ الَّذي وَفَّقَ رسولَ رسولِ اللهِ لِمَا يُرْضي رسولَ اللهِ.  أخرجه أبو داود 

 நிதானமும் நற்குணமும்

இவ்வளவு திறமை வாய்ந்த முஆத் ரலி அவர்களை எமன் நாட்டுக்கு அனுப்பி வைக்கிற போது சொன்ன அறிவுரைகளில் மிக பிரதானமானவை சிலதுண்டு. ஒவ்வொரு வெற்றிகரமான இளைஞனும் கவ்னிக்க வேண்டியவை

 அடுத்தவர்களின் பொருளுக்கு ஆசைப்படாதே! யாருக்கும் அநீதி இழைத்து விடாதே

  فَإِيَّاكَ وكَرَائِمَ أمْوَالِهِمْ، واتَّقِ دَعْوَةَ المَظْلُومِ؛ فإنَّه ليسَ بيْنَهُ وبيْنَ اللَّهِ حِجَابٌ.

الراويعبدالله بن عباس | المحدثالبخاري 

முஆத் ரலி அவர்கள் எமன் நாடுக்கு புறப்படும் போது ஒரு காலை ஒட்டகத்தின் மீது வைத்து ஏறிக் கொண்டிருந்த நிலையில் பெருமானார் அவருக்கு சொன்னார்கள்.

 عن معاذ أن رسول الله صلى الله عليه وسلم قال : " يا معاذ ، أتبع السيئة الحسنة ، تمحها وخالق الناس بخلق حسن

 முஆத் ரலி அவர்கள் ஒட்டகத்தின் மீது ஏறி விட்ட நிலையில் அவரது ஒட்டகைக்கு கீழே நடந்து கொண்டு பெருமானர் (ஸல்) அவரிடம் சொன்ன வார்த்தைகள் எந்த முஃமினின் இதயத்தையும் கலங்க செய்யக் கூடியவை

 وقال الإمام أحمد : عن معاذ بن جبل قاللما بعثه رسول الله صلى الله عليه وسلم إلى اليمن خرج معه يوصيه ، ومعاذ راكب ورسول الله صلى الله عليه وسلم يمشي تحت راحلته ، فلما فرغ قال : " يا معاذ ، إنك عسى ألا تلقاني بعد عامي هذا ، ولعلك أن تمر بمسجدي هذا وقبري " . فبكى معاذ جشعا لفراق رسول الله صلى الله عليه وسلم ، ثم التفت بوجهه نحو المدينة فقال : " إن أولى الناس بي المتقون من كانوا وحيث كانوا 

  அந்த நேரத்திலும் உயர் குனத்தின் மரியாதையை நினைவூட்டி அல்லாஹ்வை பயந்து கொண்டவர்கள் தனக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்று கூறினார்கள்.

 முஆத் ரலி அவர்கள் பிற்காலத்தில் எமனிலிருந்த் திரும்பி சிரியாவுக்கு இஸ்லாமை பரப்பச் சென்றவர்களுடன் இணைந்து கொண்டார்கள்.

 சிரியாவில் அவர் தங்கியிருக்கிற போது ஒரு பெரும் காலரா நோய் ஏற்பட்டது. ஹிஜ்ரீ 18 ம் வருட்த்தில் ஏற்பட்ட அந்த காலராவில் சிரியாவின் ஆளுநர் அபூ உபைதா ரலி மரணித்த போது அவருக்கு அடுத்து அந்த பொறுப்பை முஆத் ரலி ஏற்றுக் கொண்டார்கள்.

 அந்த பொறுப்பில் அவர் இருக்கிற போது அவருடைய இரண்டு மனைவிகளும் அவருடைய இரண்டு குழந்தைகளும் அதில் ஷஹீதானார்கள். முஆத் ரலி அவர்களும் அந்த காலாலராவிலேயே ஷஹீத் ஆனார்கள். அப்போது அவருக்கு வயது 37.

அவர்களுடைய மண்னரை இப்போது ஜோர்டானில் இருக்கிறது.

 வரலாற்றில் பெரு வாழ்வு வாழ்ந்த முஆத் ரலி அவர்கள் இன்றைய இளைஞர்கள் ஒவ்வொருவருக்கும் துருவ நட்சத்திரமாக வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

அன்னாரைப் போன்ற சஹாபாக்களை மதித்து வாழவும் பின்பற்றிச் செல்லவும் அல்ல்லாஹ் கிருபை செய்வானாக!

  

No comments:

Post a Comment