2024 நவம்பர் 5 ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. அங்கு இரண்டு கட்சிகள் பிரதானமானவை. ஒன்று தற்போது அதிகாரத்தில் இருக்கும் ஜனநாயக கட்சி, மற்றது குடியரசுக் கட்சி. ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிட்டார். குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் போட்டியிட்டார். அங்குள்ள நடைமுறைப்படி நமது ஊரில் உள்ளது போது அதிக எம்.பி க்களை யார் பெறுகிறார்களோ அவர்கள் வெற்றி பெற்றவர்கள் ஆவார்கள். அங்குள்ள 636 தேர்வாளர்களில் 295 இடங்களை வென்று அமெரிக்காவின் புதிய அதிபராக டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். 226 இடங்களை மட்டுமே வென்று கமலா ஹாரிஸ் தோல்வியடைந்தார்.
இந்த தேர்தல் முடிவு
உலக அளவில் சில மாற்றங்களை அடுத்து வருகிற ஆண்டுகளில் ஏற்படுத்தும் என்று பலரும் கூறுகிறார்கள்.
உண்மையில், உலகின் மிக மோசமனான சுயநலம் கொண்ட நாடான அமெரிக்காவில் எல்லா மட்டைகளும்
ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள் தான் என்பதால் முஸ்லிம்களைப் பொறுத்து இந்த அரசியல் மாற்றம்
எந்த நன்மையையும் தரப்போவதில்லை.
இன்று நாம் கவனிக்க
இருப்பது அமெரிக்க மக்கள் மீண்டும் ஒரு முறை ஒரு பெண்ணை தங்களது தலைவராக ஏற்றுக் கொள்ள
முடியாது என்பதை அப்பட்டமாக தெரிவித்திருக்கிறார்கள்.
குடியரசுக் கட்சி
வெள்ளை இனவாத கட்சியாகும் அமெரிக்காவின் அதிகார பலத்தை வெளிப்படுத்தும் ஆணவப் போக்குடைய
ஒரு கட்சியாகும். ஜனநாயக கட்சி சுதந்திர கருத்தோட்டதிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிற
கட்சி, ஜனநாயக நடைமுறைகளில் அக்கறை கொண்ட கட்சியுமாகும். தற்போதைய அதிபர் பிடன் நிர்வாகத்தில்
அந்த கட்சியின் மீது பெரிய குற்றச் சாட்டுகள் ஒன்றும் கிடையாது. டிரம்பின் மீது நிறைய
அதிருப்திகள் உண்டு. அவருடைய ஆணவப் பேச்சுக்கள் நாகரீகமற்ற வாழ்க்கை முறை என பல பலவீன்ங்கள்
அவரிடம் இருக்கின்றன. அவர் வெற்றி பெறுவதற்கான சூழல் மிக குறைவாகவே இருந்தது. எனினும்
இந்த தேர்தலில் அவரை வெற்றி பெறவைத்த்து ஜனநாயக கட்சி தன்னுடைய சார்பில் ஒரு பெண்மணியை
நிறுத்தியது ஆகும். இதற்கு முன்பும் இதே போலத்தான் ஜன்நாயக் கட்சி ஹிலாரி கிளிண்டன்
என்ற பெண்மணியை வேட்பாளராக நிறுத்திய போது அவரை எதிர்த்து போட்டியிட்ட டிரம்ப் வெற்றி
பெற்றார்.
அமெரிக்க மக்கள்
பெண்ணினத்தின் மரியாதை செல்வாக்கு அதிகாரம் என வாய் கிழிய பேசுவார்கள். பிரதான கட்டத்தில்
பெண்களின் பலவீனத்தை மிக வெளிப்படையாக காட்டியும் விடுவார்கள். இந்த தேர்தலில் இது
தான் நடந்திருக்கிறது.
சந்தேகமே
இல்லாமல் கமலா ஹாரிஸ் ஒரு பெண் என்பதாலேயே அமெரிக்க மக்கள் அவரை புறக்கணித்திருக்கிறார்கள்.
தங்களது நாட்டின் அதிகார செல்வாக்கு என்ன என்பது அம்மக்களுக்கு நன்றாக தெரியும் அதன்
தலைமை பீடத்தின் அதிகார வரம்புகள் எவ்வளவு தூரம் தாக்கம் செலுத்தக் கூடியது என்பது
அவர்களுக்கு தெரியும் இந்த வலிமை மிகு பொறுப்பிற்கு ஒரு பெண் சரிப்பட மாட்டார் என்பது
அம்மக்களின் நீண்ட கால தீர்மாணமாகும். இது இன்றல்ல நேற்றல்ல அமெரிக்கா உருவான காலத்திலிருந்தே
வெளிப்படுகிற அம்மக்களின் குணமாகும்.
உலகுக்கெல்லாம்
பெண்களின் அதிகாரம் பற்றி உபதேசம் செய்வார்கள். பல நாடுகளிலும் அரசியல் தலைமையில் பெண்களை
உட்கார வைத்ததில் அவர்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. இன்றும் உலக அளவில் நாடாளுமன்றங்களில்
அதிக பெண்கள் இருப்பது பங்களா தேஷ் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் தான் என்பது கவனிக்க
வெண்டிய ஒரு புள்ளிவிவரமாகும். இப்படி மற்ற நாடுகளில் அரசின் உயர் பீடங்களுக்கு பெண்களை
ஏற்றி விடுகிறவர்கள். தங்களது சொந்த நாட்டில் அதற்கு ஒரு போதும் இடமளித்ததில்லை
Women empowerment
வுமன் எம்பவர்மெண்ட என்று சொல்லி போலித்தனமாக பேசி, பெண்களை தூண்டி விட்டு அவர்களை
விபரீதங்களின் பள்ளத்தாக்கில் தள்ளியும் விடுகிற போலி நாகரீகப் பேர்வழிகளின் முகத்திரை
கிழிக்கப் பட்டிருக்கிறது. இதை உலகிற்கு உணர்த்துகிற ஒரு வாய்ப்பை இது முஸ்லிம்களுக்கு
கொடுத்திருக்கிறது.
பெண்கள் தலைமை பதவிகளுக்கு வருவதை இஸ்லாம் பொதுவாக ஏற்பதில்லை.
முஹம்மது
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய வார்த்தைகள் நெஞ்சில் அறைந்தார் போல பேசுகின்றன.
அபூபக்ரா
ரலி கூறுகிறார்.
பாரசீக
மக்கள் ஒரு பெண்ணை தங்களுடைய அரசியாக தேர்ந்தெடுத்துக் கொண்டனர் என்ற செய்தி வந்த போது
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். “ பெண்ணிடம் தமது அதிகாரப் பொறுப்பை ஒப்படைக்கும்
ஒரு சமுதாயம் வெற்றி பெற முடியாது,
عَنْ أَبِي بَكْرَةَ رضي الله عنه قَالَ مَّا بَلَغَ
رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ أَهْلَ فَارِسَ قَدْ
مَلَّكُوا عَلَيْهِمْ بِنْتَ كِسْرَى قَالَ : لَنْ يُفْلِحَ قَوْمٌ وَلَّوْا
أَمْرَهُمْ امْرَأَةً )رواه البخاري
இன்றைய
21 ம் நூற்றாண்டிலும் இந்த வாசகம் கவனத்திற்குரியதாக இருக்கிறது என்பதை அமெரிக்க தேர்தல்
முடிவு நமக்கு காட்டுகிறது.
இந்த
வாசகம் பெண்ணினத்தை அவமதிக்கும் சொல் அல்ல; அவர்களுக்குரிய சரியான அந்தஸ்தில் அவர்களை
நிற்க வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிற சொல்லாகும்.
பொறுத்தமற்ற
இடங்களில் பெண்களை நிறுத்துவது சமுதாயத்திற்கும் வெற்றியாக அமையாது அது போல அந்த பெண்களுக்கும்
அது நன்மையாக இருக்காது என்பதே முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றின் உறுதியான
கருத்தாகும்.
இந்த
நபி மொழிக்கு விளக்கம் அளிக்கும் ஷவ்கானி ரஹ் வெற்றி பெற முடியாது என்ற பெருமானாரின்
வார்த்தை அவ்வாறு நியமிக் கூடாது என எச்சரிப்பதாகும் என கூறுகிறார்.
قال الشوكاني رحمه الله" فليس بعد نفي الفلاح شيء من الوعيد الشديد ,
இதன்
அடிப்படையிலேயே இஸ்லாமின் முதல் மூன்று பொற்காலங்களிலும் அதிகாரம் மிக்க தலைமை பதவிகள்
எதுவும் பெண்களுக்கு தரப்பட வில்லை.
ويشهد لذلك أيضا إجماع الأمة في عصر الخلفاء
الراشدين وأئمة القرون الثلاثة المشهود لها بالخير إجماعاً عملياً على عدم إسناد
الإمارة والقضاء إلى امرأة
ذهب جمهور العلماء إلى أنه لا يجوز للمرأة أن تتولى القضاء , ولو ولِّيت أثم المولي , وتكون ولايتها باطلة , وحكمها غير نافذ في جميع الأحكام , وهو مذهب المالكية والشافعية والحنابلة , وبعض الحنفية.
انظر : "بداية المجتهد" (2/531) , "المجموع" (20/127) , "المغني" (11/350) .
அல் அஸ்ஹர் பல்கலைக் கழகம்
வழங்கிய ஒரு பத்வாவில் இந்த
தை எக்காலத்திற்குமானது என்று கூறுகிறது.
وقالت لجنة الفتوى بالأزهر
ولا شك أن النهي المستفاد من الحديث يمنع كل امرأة في أي عصر من العصور أن تتولى أي شيء من الولايات العامة , وهذا العموم تفيده صيغ الحديث وأسلوبه
எனவே அதிகாரப் பொறுப்புகளுக்கு பெண்கள் நியமிக்கப்படுவது சரியானது அல்ல; என்பதே இஸ்லாமின் உறுதியான தீர்வாகும்.
ஏன் பெண்கள் அதிகார பதவிகளுக்கு பொறுத்தமானவர்கள் அல்ல;?
தஅப்புதீ அல்ல! தஸப்புபீ தான்.
இதற்கு
முன் வேறொரு கேள்வியை கவனிக்கலாம் ஏன் பெண்களில் யாரையும் அல்லாஹ் நபியாக தேர்வு செய்யவில்லை?
இந்த
கேள்விக்கான சரியான பதில், நபி என்பது அல்லாஹ்வின் தேர்வு. அல்லாஹ் பெண்களை அதற்கு
தேர்வு செய்யவில்லை. எப்படி குழந்தை பெற்றெடுக்க அல்லாஹ் ஆண்களை தேர்வு செய்யவில்லையோ
அது போல நபியாக அல்லாஹ் பெண்களை தேர்வு செய்யவில்லை.
இதை
தஅப்புதீ என்பார்கள். அதாவது இது அல்லாஹ்வின் முடிவு. இதில் நாம் கேள்வி எழுப்புவதற்கு
எதுவும் இல்லை என்பதாகும். லுஹர் தொழுகைக்கு ஏன் 4 ரகாஅத்துகள் என நாம் கேள்வி கேட்க
முடியாதோ அது போல.
பெண்களின்
தலைமை பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறிய வார்த்தைகள் இப்படி தஅப்புதீ அதாவது காரணங்களை
புரிந்து கொள்ள முடியாத இறைவனின் தீர்ப்பு அல்ல. காரணங்களை விளங்கிகிக் கொள்ள முடிந்த
உத்தரவு என அல் அஸ்ஹர் பல்கலைக் கழகம் கூறியிருக்கிறது.
முதல்
காரணம் அதிகாரம் என்பது பலம் சார்ந்தது.
பெண்கள் உடல் ரீதியாக பலவீனமானவர்கள். அதனால் ஆண்களைப் போல அவர்களால வலிமையான
வேலைகளை செய்ய முடியாது.
திருக்குர் ஆன் இதை உறுதிப்படுத்துகிறது.
لرِّجَالُ قَوَّامُونَ عَلَى النِّسَاءِ بِمَا
فَضَّلَ اللَّهُ بَعْضَهُمْ عَلَى بَعْضٍ وَبِمَا أَنْفَقُوا مِنْ أَمْوَالِهِمْ )
النساء/34
அமெரிக்காவிலும் அது போல நாகரீகம் சுதந்திரம் பெண்களின் அதிகாரம் என்று உலகில் இன்று மார் தட்டிக் கொண்டிருக்கிற பல நாடுகளிலும் உள்ள ஒரு எதார்த்தம் என்ன வெனில்? சில துறைகளில் பெண்களை அனுமதிக்க முடியாது என்பது தான். அமெரிக்காவில் 68 துறைகளில் பெண்களை இன்று வரை அனுமதிப்பதில்லை.
நம்முடைய தமிழ் நாட்டில் பெண்கள் காவல் துறை பணிகளில் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
தீர விசாரித்துப் பார்த்தால் சில வேலைகளுக்கு பெண்கள் தேர்வு செய்யப்பட மாட்டார்கள்.
பெரும்பாலும் பெண்கள் துணை பணிகளுக்கு தேர்வு செய்யபடுவார்களே அன்றி பிரதான
வேலைகள் ஒப்படைக்கப்படாது.
ஓரு இடத்தில் இரண்டு ஆண்கள் காவலர்கள் நின்று கொண்டிருந்தார்கள். காரணம் விசாரித்த போது பெண் காவலர்களுக்கு பாதுகாப்பிற்காக வந்திருப்பதாக கூறினார்கள்.
இதற்கான வெளிப்படையான காரணம் பெண்கள் உடல் ரீதியாக வலுவற்றவர்கள் என்பதேயாகும்.
நமது
நாட்டில் உள்ளாட்சி தேர்தல்களில் பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீட்டை நடை முறை படுத்தி ஏராளமான பெண்கள் நகராட்சி ஊராட்சிகளின் தலைவர்களாகவும் வார்டு கவுன்சிலர்களாகவும்
ஆக்கினார்கள். இந்தியா டுடே ஒரு கருத்துக் கணிப்பு நடத்தியது. அதில் வெளிப்பட்ட உண்மை
என்ன தெரியுமா ?
அந்த பெண்களின் கணவர், அல்லது தந்தை அல்லது சகோதரர் தான் அந்த பதவிக்குரிரிய வேலைகளை கவனிக்கிறார் என்பதாகும்
பெண்களின் இரண்டாவது பலவீனம் அவர்கள் உணர்ச்சிப் பூர்வமானவர்கள்
கண்டிப்பிற்கு
இடையூறாகும் கருணை
அல் அஸ்ஹர் பல்கலைக் கழகம். بِ مَا فَضَّلَ اللَّهُ بَعْضَهُمْ عَلَى بَعْضٍ என்ற வசனத்தின் அடிப்படையில் அல்லாஹ் பெண்களுக்கு தாய்மையின் சிறப்பை வழங்கியிருக்கிறான். அந்த தாய்மையின் குணம் கருனையை அடிப்படையாக கொண்டது. எனவே பெண்களுக்கு கண்டிப்பாக நடந்து கொள்வது என்பது சிரமமானது. அது அதிகாரப் பதவிக்கு ஒத்துவராது என்று கூறுகிறது.
இதுவும் மிக எதார்த்தமான ஒரு உண்மையாகும்.
இப்போதும் நம்முடைய வீடுகளில் நமது பிள்ளைகள் கெட்டுப் போவதற்கான ஒரு முக்கிய காரணமாக இருப்பது தாய்மார்களின் கருணையே என்பது தெரிந்ததே
முஹம்மது நபி (ஸ்ல) அவர்கள் உலகின் மாபெரும் கருணையாக இருந்தார்கள் என்ற போதும் அவர்கள் சில காரியங்களில் மிக கண்டிப்பானவர்களாக நடந்து கொண்டது அவர்கள் ஒரு ஆணாக இருந்ததாலே நடந்தது.
அதிகாரத்தை சுமந்து செல்கையில் உணர்ச்சிகளை கட்டியாள்வது மிக அவசியமானதாகும்.
பதறு யுத்த்திற்காக அவர்கள் புறப்பட்ட போது அவர்களது மகள் ருகைய்யா ரலி அவர்கள் கடுமையாக நோயுற்றிருந்தார்கள். எனினும் காலத்தின் அவசியம் கருதி அவருடைய கணவர் உஸ்மான் ரலி அவர்களை பொறுப்பிற்கு நியமித்து விட்டு பெருமானார் (ஸல்) அவர்கள் சென்றார்கள். இதுவே ஒரு தாயால் இப்படி விட்டுச் செல்ல முடியுமா என்று சிந்திக்க வேண்டும்.
பெண்களால்
தங்களை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத பல்வேறு சந்தர்ப்பங்கள் உண்டு. அவமானத்தை தாங்கிக்
கொள்ள முடியாது. யுத்த சூழ்நிலைகளை எதிர் கொள்ள முடியாது. சகஜமாக ஆண்களுடன் தொடர்பு
கொள்ள முடியாது என அந்த பலவீனங்கள் தொடரும்.
நிறைய
உதாரணங்கள் உண்டு. என்றாலும் இந்த அழுத்தமான இரண்டு காரணங்கள் இன்றளவும் ஏற்றுக் கொள்ளப்படுகிற
காரணங்கள் என்பதால் இவற்றோடு நிறுத்துகிறோம்.
பெண்கள்
தலைமைப் பீடத்த்திற்கு வர முடியாது என்பது அவர்களது சுதந்திரத்தையும் உரிமையைகளையும்
எந்த அளவிலு எந்த துறையிலும் பாதித்து விட இஸ்லாம் விட்டு விடவில்லை.
பெண்கள்
அரசியலில் பங்கேற்க முடியும்.
யுத்தங்களில்
பெண்களின் பங்களிப்பை சில நேரங்களில் ஏற்றுக் கொண்டிருப்பதை சட்ட அறிஞர்கள் இதற்கு
காரணமாக காட்டுகிறார்கள். .
உம்மு
அம்மாரார ரலி அவர்களின் ஒரு உதாரணம் அதற்கு போதுமானாது.
صحابيةٌ من الخزرج، شاركت في عدد من غزَوات النبي محمد ﷺ، وبعض معارك حروب الردَّة، في القتال وإسعاف الجَرحى. اشتَهَرت بشجاعتها وبراعتها بالرمي.
كانت أم عمارة من المخلصات في نشر الدين، فشاركت في غزوة أحد مع زوجها غزية بن عمرو وابنيها، لتسقى الجرحى وتطبّبهم، لكنها بعد أن دارت الدائرة على المسلمين قاتلت هي وزوجها وابناها دفاعًا عن النبي محمد، وأبلت بلاء حسنًا وجُرحت ثلاثة عشر جُرحاً بين طعنة برمح أو ضربة بسيف، فدعا لهم النبي محمد أن يكونوا رفقائه في الجنة
وحين نادى النبي محمد في أصحابه صبيحة يوم أُحد للخروج لمطاردة قريش، همّت أم عمارة للخروج معهم، لكنها لم تقو على المشاركة في تلك الغزوة بعد أن أثقلتها جراح يوم أحد. وحين عاد المسلمون من تلك الغزوة، أرسل أخاها عبد الله بن كعب ليُطمئنه على أم عمارة لما أبلته من بلاء في أحد، فطمئنه على سلامتها، فسُر النبي بذلك
وبعد فتح مكة، بلغ النبي محمد أن هوازن قد جمعت لقتاله، فقرر الخروج لقتالهم بكامل الجيش الذي فتح مكة، وكان قوامه عشرة آلاف مقاتل. تقابل الفريقان في حنين ووقع المسلمون في بداية المعركة في كمين نصبته هوازن، ففر معظم جيش المسلمين. يومئذ، وقفت أم عمارة وفي يدها سيف تصيح في الأنصار: «أيَّة عادة هذه؟! ما لكم وللفِرار؟!» ووقفت تقاتل، ثم عاد المسلمون للقتال لمّا رأوا ثبات النبي محمد في قلة معه
ي خلافة أبي بكر الصديق. شاركت أم عمارة ومعها ابنها عبد الله بن زيد في قتال معركة اليمامة أعتى معارك حروب الردة وأبلت فيها بلاءً حسنًا، ونجح ابنها عبد الله في الثأر لأخيه، وقتل بسيفه مسيلمة. أصيبت أم عمارة في تلك المعركة بأحد عشر جرحًا، وقُطعت يدها
அன்னை ஆயிஷா ரலி அவர்கள் உஸ்மான் ரலி அவர்கள்
கொல்லப்பட்ட பிறகு அதற்கு நீதி கேட்கும் போராட்ட்த்தில் ஈடுபட்டார்கள் என்பதும்
இஸ்லாமிய வரலாறாகும்.
எனவே அரசியலில் உயர் அதிகார தலைமை பொறுப்பிற்கு
பெண்களை இஸ்லாம் ஏற்றுக் கொள்ல வில்லை என்றாலும் அரசியல் ரீதியான அவர்களது
உரிமைகளுக்கு எந்த தடையும் இல்லை
இஸ்லாமின் இந்த நிலைப்பாட்டை ஒரு சின்ன
உதாரணத்தில் புரிந்து கொள்ளலாம் . பெண்கள் மார்க்க தீப்பை சொல்லும் அளவிற்கான
முப்திகளாக ஆக முடியும். ஆனால் அதை நடை முறைப்படுத்தும் காஜியாக ஆக முடியாது.
சில நேரங்களில் விதி விலக்குகளாக பெண்கள் தலைமைப்
பொறுப்பேற்க நேர்வதையும் இஸ்லாம் தடுக்க வில்லை.
பல்கீஸ் அம்மையாரின் அதிகாரத்தை பற்றி குர் ஆன்
பேசுகிறது அவரது அதிகாரத்தை தவ்றானது என்று அப்போது குர் ஆன் சொல்வதில்லை. அவர்களது
வழிபாடு தவறாக இருந்த்து என்பதை மட்டுமே அது காட்டுகிறது.
إِنِّي وَجَدْتُ امْرَأَةً تَمْلِكُهُمْ وَأُوتِيَتْ مِنْ كُلِّ شَيْءٍ وَلَهَا عَرْشٌ عَظِيمٌ ٢٣ وَجَدْتُهَا وَقَوْمَهَا يَسْجُدُونَ لِلشَّمْسِ مِنْ دُونِ اللَّهِ وَزَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ فَصَدَّهُمْ عَنِ السَّبِيلِ فَهُمْ لَا يَهْتَدُونَ
நம்முடைய நாட்டில் ரஜியா சுல்தானா போன்ற சில பெண்கள் அதிகாரத்திற்கு வந்த்தும் அப்படி ஒரு நிர்பந்த நிலையில் தான்.
இவை சில விதிவிலக்குகள் ஆகும். இந்திரா காந்தி மார்க்கரெட் தாட்சர் போன்ற சில விதி விலக்குகளை வைத்து பொது விதியை கூறுவது பொருத்தமானது அல்ல.
பொதுவாக பெண்கள் அரசியல் தலைமைக்கு வருவது நல்ல தல்ல. என பெருமானார் (ஸ்ல) அவர்கள்
கூறினார்கள்.
அதைதான் இப்போதைய் அமெரிக்க தேர்தலும் நிரூபித்திருக்கிறது.
டிரம்ப் அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டிருப்பதில் இஸ்லாமிய உலகு சில கடுமையான
சூழல்களை சந்திக்க வேண்டியது வரலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
அல்லாஹ் நம்மீது கருணை காட்டாதவர்களை நமக்கு பொறுப்பாக ஆக்கிவிடாமல் பாதுகாப்பானாக!
மாஷா அல்லாஹ் பாரகல்லாஹ்
ReplyDelete