ரமலான் விடுமுறைக்குப் பின் பள்ளி வாசல்களில் மக்தப் மதரஸாக்கள் திறக்கும் நேரம் இது.
ஜூன் மாத்த்தில் பொதுப் பள்ளிக் கூடங்கள் திறக்கப் படுகிற போது காட்டப்படுகிற அக்கறையில் ஒரு சிறு பங்கையாவது மதரஸா திறப்பு விசயத்தில் சமுதாயம் காட்ட வேண்டும்.
பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாகியிருக்கிற முஸ்லிம் சமுதாயம் தன்னை சீர்படுத்திக் கொள்ள வேண்டிய விச்யங்களில் மதரஸா வும் ஒன்று.
முஸ்லிம் சமய விவகாரங்களில் குழப்பத்தை ஏற்படுத்தவும், முஸ்லிம்களின் கலாச்சாரம் பண்பாட்டை சிதைக்கவும் பிரான்ஸ் அதிபர் சர்கோஸி, போன்ற சக்திகளும் மீடியா உலகின் ஜாம்ப்வான்களும் ஒன்று திரண்டு முயற்சிக்கிற இன்றைய கால கட்ட்த்தில் மதரஸாக்கள் மட்டுமே லாயிலாக இல்ல்லஹ் வின் ஓசையை, திருக்குர் ஆனின் பாஷையை மங்காமல் காப்பாற்றி வருகின்றன.
இஸ்லாம் இந்த உலகிற்கு கொடுத்த அற்புதமான பரிசு மதரஸா.
இறைவனை வணங்குவதற்கான ஆலயம் எங்கே இருக்கிறதோ அங்கே ஒரு மதரஸாவை உருவாக்கி முதலில் அறிமுகப்படுத்தியவர் முஹம்மது (ஸல்) அவர்கள்.
இஸ்லாமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் நம்பிக்கையை ஒரு கண்ணாக கருதினார்கள் என்றால் கல்வியை மறுகண்ணாக கருதினார்கள்.
ஒளுவில் தொடங்கி வக்பு வரை இஸ்லாமின் ஒவ்வொரு அம்சமும் அதுபற்றிய சட்ட அறிவோடு ச்மபந்தப் பட்டிருக்கிறது. போதுமான அறிவு இல்லாவிட்டால் இவற்றை சரியாக செயல்படுத்த முடியாது.
இதனால் முஸ்லிம் உம்மத் எழுத்தறிவு பெற்றதாக இருப்பது தவிர்க்க முடியாத்தாக ஆனது.
எழுதப் படிக்கத் தெரியாத மக்கள் நிறைந்திருந்த காலத்தில் அரபி படித்தவர்கள் தமிழை அரபி லிபியில் எழுதினார்கள்.
அரபுத்தமிழ் என்ற ஒரு மொழி வந்த காரணம் இது.
உலகம் முழுவதிலும் இதுபோல மதரஸாக்கள் தான் அடிப்படைக் கல்வியை மக்களுக்கு போதித்தன.
ஒரு கால கட்ட்த்தில் மகதப் மதரஸாக்களில் மொழி, கணக்கு, அறிவியல் பாடங்களும் நட்த்தப்பட்டன.
இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு நாட்டின் பல பகுதிகளிலும் மதரஸாக்கள் தான் தொடக்கப் பள்ளிகளாக இருந்தன.
அனைத்து சமுதாயத்து மாணவர்களும் அங்கிருந்து அறிவை கற்றனர்.
இந்தியாவின் மூன்றாவது பிரதமரும், உலகத் தலைவர்களால் போற்றப்பட்டவருமான லால்பகதூர் சாஸ்திரி மதரஸாவில் க்ல்வி பெற்றவராவார். இவர் போல் சுதந்திர இந்தியாவின் பல தலைவர்கள், . குறிப்பாக உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம், பஞ்சாப் பகுதியைச் சார்ந்த பலரும் மதரஸாக்களில் கல்வி பெற்றவர்களாவர்.
நாடு சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகளை கடந்து விட்ட இன்றையை சூழ்நிலையிலும் கூட உத்த்ர பிரதேசம் பீகார் மேற்கு வங்கத்தின் பல பகுதிகல் மதரஸாக்கள் தான் தொடக்கப் பள்ளிகளாக இருக்கின்றன. அதனால் தான் அங்கு மதரஸா கல்வி தொடக்க கல்விக்கு ஈடாக அரசாங்கத்தால் கருதப் படுகிறது.
இன்று உலகம் முழுவதிலும் கல்விக் கூடங்களுக்கு நிகராக மதரஸாக்கள் இருக்கின்றன. அமெரிக்காவானாலும் இலண்டன் ஆனாலும் எங்கு பள்ளி வாசல் இருக்கிறதோ. அதன் ஒரு மூளையில் மதரஸாவும் இருக்கிறது.
இந்த பெருமைக்கெல்லாம் மூல காரணம் பெருமானார் உருவாக்கிய திண்ணைப் பள்ளிதான்.
மஸ்ஜிதுன்னபியின் ஒருபுறம் பள்ளி வாசல் என்றால் அதன் மற்றொருபுரத்தில் பள்ளித்திண்ணை இருந்த்து.
இப்போதும் அந்த திண்ணை இருக்கிறது. மதீனாவிற்கு செல்பவர்கள் அதைப் பார்க்கலாம். அங்கே இரண்டு ரகஅத் தொழலாம்.
அந்த திண்ணை தான் இஸ்லாத்தின் முதல் போர்டிங்க் ஸ்கூல். ஆனால் சாப்பாட்டிற்கு உத்தரவாதம் கிடையாது. ஏதாவது கிடைத்தால் அதை சாப்பிட்டுக் கொண்டு ஒரு குழு உட்கார்ந்து மார்க்கத்தை கற்றது. அந்தக் குழு தான் இன்று வரை வாழ்ந்து கொண்டிருக்கிற இஸ்லாமிய சமுதாயத்திற்கு நபித்துவ அறிவை போற்றிப்பாதுகாத்து கொண்டு வந்து சேர்த்த்த்து..
இந்து சமயம் உட்பட, முன்னாள் வேதம் கொடுக்கப் பட்ட பல சமயங்களும் தங்களது இறையியல் கோட்பாட்டையும் - அடிப்படை சமய நம்பிக்கையையும் - உண்மையான சட்ட அமைப்பையும் தொலைத்து விட்டன. இஸ்லாத்தில் அந்த விபத்து நடக்கவில்லை. அதற்கு காரணம் அந்த திண்ணைக் மதரஸா தான்.
அங்கிருந்து நபித்துவ அறிவை பெற்றவர்கள் உலக்ம முழுமைக்கும் இஸ்லாமிய ஒளியை தரம் குறையாமல் கொண்டு சென்றார்கள்.
· وأُطلق عليه اسم "الصفة" أو "الظلة". وقد أُعدت الصفة لنـزول الغرباء العزاب من المهاجرين والوافدين الذين لا مأوى لهم ولا أهل فكان يقل عددهم حيناً، ويكثر أحياناً.
திண்ணைப் பள்ளி மாணவர்களுடன் பெருமானார்.
وكان النبي –صلى الله عليه وسلم- كثيراً ما يجالسهم، ويأنس بهم، ويناديهم إلى طعامه، ويشركهم في شرابه؛ فكانوا معدودين في عياله.
திண்ணைத் தோழர்களுக்கு உதவி
كان الصحابة -رضي الله عنهم- يأخذ الواحد منهم الاثنين والثلاثة من أهل الصفة فيطعمهم في بيته، كما كانوا يأتون بأقناء الرطب ويعلقونها في السقف لأهل الصفة حتى يأكلوا منها،
وفيهم نزل قوله تعالى: "لِلْفُقَرَاءِ الَّذِينَ أُحصِرُوا فِي سَبِيلِ اللهِ لاَ يَسْتَطِيعُونَ ضَرْبًا فِي الأَرْضِ يَحْسَبُهُمُ الْجَاهِلُ أَغْنِيَاءَ مِنَ التَّعَفُّفِ تَعْرِفُهُم بِسِيمَاهُمْ لاَ يَسْأَلُونَ النَّاسَ إِلْحَافًا وَمَا تُنفِقُوا مِنْ خَيْرٍ فَإِنَّ اللهَ بِهِ عَلِيمٌ" (البقرة: آية 273 ).
திண்ணை மாணவர்களின் எண்ணிக்கை
ولم يكن جميع أهل الصفة يجتمعون في وقت واحد بل منهم من يتأهل أو ينتقل إلى مكان آخر يتيسر له ويجيء ناس بعد ناس وكانوا تارة يكثرون وتارة يقلون، فتارة يكونون عشرة أو أقل وتارة يكونون عشرين وثلاثين وأكثر وتارة يكونون ستين وسبعين.وأما جملة من آوى إلى الصفة مع تفرقهم فقد كانوا نحو أربعمائة من الصحابة وقد قيل كانوا أكثر من ذلك.
திண்ணைத் தோழர்களின் பணி
وكان عمل أهل الصفة تعلم القرآن والأحكام الشرعية من رسول الله -صلى الله عليه وسلم- أو ممن يأمره رسول الله -صلى الله عليه وسلم- بذلك، فإذا جاءت غزوة خرج القادر منهم للجهاد فيها.
பிரபல திண்ணை மாணவர்கள்
العرباض بن سارية صحابي كان من أهل الصفة
واثلة بن الأسقع بن كعب بن عامر كان من أهل الصفة
سعد بن أبي وقاص وهو أفضل من نزل بالصفة ثم انتقل عنها
ومن أشهر أهل الصفة أبو هريرة
و تلقي الكثير من أحاديث الرسول -صلى الله عليه وسلم- كما قال عن نفسه عندما سمع الناس يقولون: أكثر أبو هريرة عن رسول الله -صلى الله عليه وسلم- فقال: "أما أنتم يا معشر المهاجرين فقد شغلتكم التجارة، وأما أنتم يا معشر الأنصار فقد شغلتكم الحقول والمزارع، وأما أنا فقد لازمت رسول الله -صلى الله عليه وسلم- على ملء بطني فكنت أتعلم من العلم؛ فكيف تقولون: أكثر أبو هريرة.. أكثر أبو هريرة؟".
திண்ணைத் தோழர்களின் நிலை
عن أبي هريرة رَضِيَ اللَّهُ عَنهُ قال:" لقد رأيت سبعين من أهل الصفة ما منهم رجل عليه رداء. إما إزار وإما كساء قد ربطوا في أعناقهم منها ما يبلغ نصف الساقين، ومنها ما يبلغ الكعبين فيجمعه بيده كراهية أن ترى عورته". رَوَاهُ البُخَارِيُّ.
தின்னைத் தோழர்கள் பட்ட பாடு
وقد صور أبو هريرة ما كان أهل الصفة يصبرون عليه من الجوع، وشدة الحال في قصة وقعت له في يوم من الأيام:
قال أبو هريرة –رضي الله عنه- إنه كان يمضي عليه اليوم واليومان لم يذق طعامًا، وكان يشد الحجر على بطنه من الجوع، وجلس يومًا في طريق الذين يخرجون من المسجد لعل أحدًا منهم يكشف ما به من الجوع، فمر عليه أبو بكر الصديق فسأله أبو هريرة عن معنى آية من كتاب الله، وقال: ما سألته إلا لكي ينتبه لحالي، فمر ولم ينتبه بعد أن أجابه عن معنى الآية، ثم مر عمر بن الخطاب رضي الله عنه كذلك، فلما مر رسول الله محمد –صلى الله عليه وسلم- نظر إلى أبي هريرة وابتسم حين رآه، وعرف ما في وجهه من الجوع، ثم قال: يا أبا هريرة. فقال: أبو هريرة: لبيك يا رسول الله. قال: الْحَق. فتبِعه ودخَل معه في بيته، فوجد النبي -صلى الله عليه وسلم- في بيته لبنًا في قدح، فقال: من أين هذا اللبن؟ فقالوا: أهداه لك فلان، فقال رسول الله –صلى الله عليه وسلم-: يا أبا هريرة، فقال: لبيك يا رسول الله، فقال: اذهب فادع أهل الصفة، فقال أبو هريرة في نفسه: وما يُغني هذا اللبن عن أهل الصفة، وضعف أمله في إصابة ما يتقوى به من ذلك اللبن. فلما دعاهم أمره النبي –صلى الله عليه وسلم- أن يباشر سقيهم فضعف أمله أكثر؛ لأن ساقي القوم آخرهم شرباً فسقى الجميع، وأمر النبي –صلى الله عليه وسلم- أن يعطي كل واحد ليشرب حتى يشبع، وكان أبو هريرة يقول في نفسه: ليته لم يأمرني بفعل ذلك حتى أشرب ولو الشيء اليسير، وظل يعطيهم حتى شبع أهل الصفة جميعاً، وكان عددهم في هذه الحادثة يبلغ ثلاثمائة رجل حتى وصل اللبن إلى أبي هريرة –رضي الله عنه-، ولم ينقص شيئاً، فتبسم النبي –صلى الله عليه وسلم-: يا أبا هريرة بقيت أنا وأنت فاقعد واشرب، فقعد أبو هريرة وشرب حتى روي، فما زال النبي –صلى الله عليه وسلم- يطلب منه أن يشرب حتى قال أبو هريرة: "والذي بعثك بالحق ما أجد له مسلكاً في بطني"، ثم أخذ النبي -صلى الله عليه وسلم- وسمَّى الله وشرِب الفضلة. البخاري
திண்ணைத் தோழர்களின் எண்னிக்கை
اتفقت معظم الأقوال على أن ما يقرب من أربعمائة صحابي تواردوا على الصفة، في قرابة تسعة أعوام إلى أن جاء الله بالغنى، وذلك قبيل وفاة النبي -صلى الله عليه وسلم-.
திண்ணைக் கல்வி பெற்றவர்கள் பிறகு தலைவர்களாக உயர்ந்தார்கள்.
يقول أبو هريرة -رضي الله عنه-: "لقد رأيت معي في الصفة ما يزيد على ثلاثمائة، ثم رأيت بعد ذلك كل واحد منهم والياً أو أميراً، والنبي -صلى الله عليه وسلم- قال لهم ذلك حين مر بهم يوماً ورأى ما هم عليه.
அவர்கள்தான் உலகம் முழுமைக்கும் தீனை அதன் மெருகு குலையாமல் கொண்டு சென்றார்கள்.
இன்றைக்கும் மதரஸாக்களின் பங்களிப்பு சாமானய மானதல்ல ..
ஒரு முஸ்லிம் இளம் தம்பதியர் தம் குழந்தையை பற்றி பெறுமை பொங்க பேசினார்கள். “டி வி யில் பாட்டுப் போட்டால் இவன் அற்புதமாக ஆடுவான் என்றார்கள். அவர்களாக டி வியை ஆன் செய்ய இரண்டரை வயதுப் பையன் இசைக்கு ஏதுவாக நடன மாடினான். எல்லோரும் மகிழ்ச்சியில் ஆராவரம் செய்து கைகொட்டி மகிழ்ந்தனர்.
நம்முடைய வீடுகளில் இன்றைய சூழ்நிலையில் இதைத்தான் சொல்லிக் கொடுக்க முடிகிறது. பள்ளிக் கூடங்களிலும் இதை தான் சொல்லிக் கொடுக்கிறார்கள்.
மதரஸாக்கள் தான் இந்தக் குழந்தகளுக்கு அல்லாஹ்வை ரஸூலை கலிமாவை தீனை சொல்லிக் கொடுக்கின்றன.
இந்த மதரஸாக்களின் வாய்ப்பு பள்ளிவாசலுக்கு அருகே இருப்பவர்களுக்கே கிடைக்கிறது.
புறநகர் பகுதி ஒன்றில் குடியிருப்பவர் “ஹஜரத நான் மாதம் 1500 ரூபாய் கொடுக்கத்தயார் யாராவது ஹஜரத் இருந்தால் அனுப்பி வையுங்கள் என்கிறார். அனுப்ப முடிவதில்லை.
ஆனால் அருகே கிடைக்கிற நிஃமத்தின் அருமை தெரியாதவர்கள் அலட்சியப் படுத்துகிறார்கள்.
குரான் மதரஸாக்களை நாம் அலட்சியப் படுத்துவது தீனை அலட்சியப் படுத்துவதற்கு சம்ம்.
நமது குழந்தைகளுக்கு அல்லாஹ் ரஸூலை சொல்லிக் கொடுக்கிற
· மதரஸாக்களை சமுதாயம் சரியாக மதிக்க வேண்டும்
· குரான் மதரஸா உஸ்தாதுகளுக்கு தகுந்த கண்ணியத்தை தரவேண்டும்.
· பிள்ளைகளை சரியாகவும் அழகாகவும் அனுப்ப வேண்டும்
· இன்று என்ன ஓதினாய என்று விசாரிக்க வேண்டும்,
· வீட்டிக் கொஞ்ச நேரம் மதரஸா பாடம் படிக்க வற்புறுத்த வேண்டும்.
· திருக்குர்ஆன், ஒழுக்க பண்புகள், துஆக்கள், மார்க்க சட்டங்கள் என மதரஸாக்களில் கற்றுக்க் கொடுக்கப்படுபவை அனைத்தும் – ஒரு எக்ஸாம் வரை மட்டுமல்ல- வாழ்வு முழுமைக்கு தேவையானவை என்பதை பிள்ளைகளுக்கு புரிய வைப்பது தொடர்ந்து பழக்கப் படுத்துவதும் பெற்றோர்களின் கடமை.
குரான் மதரஸா மற்றும் பள்ளி வாசல் நிர்வாகிகள் மதரஸாக்களின் தரத்தை மேம்படுத்த முயற்சி செய்ய வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.. நிர்வாகிகள் ஆலிம்களோடு சேர்ந்து இவற்றிற்கு தீர்வுகாண வேண்டும்
பல இடங்களிலும் ஏனோ தானோ வென்று மதரஸா நடக்கிறது. இமாமின் தலைவிதியாக அது விடப்படுகிறது. இமாமின் சொந்த அக்கறையினால் மட்டுமே பல இடங்களில் மதரஸாக்கள் நடக்கிறது. நிர்வாகிகளின் ஒத்துழைப்பும் அக்கறையும் எங்கே கிடைக்கிறதோ அங்கே மதரஸாக்கள் சிறப்பாக நடக்கின்றன.
மதரஸாக்கள் சீரமைப்பில் கவனிக்கப் பட வேண்டிய சில முக்கிய விசயங்கள்.
· தகுந்த வசதிகள்
· போதுமான ஆசிரியர்கள்
· ஆசிரியர்களுக்கு தகுந்த சம்பளம்
· இன்றைய சூழ்நிலையில் மதரஸாக்களை பற்றிப் போற்ற வேண்டியது நமது கடமை என்ற உணர்வோடு செயல்பட வேண்டும்.
· குரான் ஒதப்பழகுவதற்கே மூன்று வருடங்கள் ஆகிற நடைமுறையை மாற்றி இன்றுள்ள முறைகளை பயன்படுத்தி விரைவாக பாடங்களை புரிய வைக்க முயற்சி செய்யப் பட வேண்டும்.
· குர் ஆன் ஓதும் முறையில் திக்கி திக்கி ஓதுகிற நடைமுறைக்கு மாற்றமாக கிராஅத்தாக ஓதுகிற நடைமுறை வளர வேண்டும்.
· ஒரு முஸ்லிமுக்கு தேவையான அளவுக்குண்டான இஸ்லாமிய சட்டங்களையும் வரலாற்றையும் பண்பாட்டையும் முழுமையாக சொல்லிக்கொடுக்கும் அமைப்பிலான பாட திட்டங்களை கண்டறிய வேண்டும்.
இன்று தொலைக்காட்சி மீடியாக்கள், மதராஸாக்களில் அழகாக வரிசையாக குர் ஆன் ஓதிக்கொண்டிருக்கிற மாணவர்களின் படக்காட்சிகளை காட்டி உலகை அச்சுறுத்துகிறார்கள். இங்கிருந்து தீவிரவாதம் வளர்கிறது என்கிறார்கள். உணமையில் அங்கிருந்து தீவிரவாதம் வளர்வதில்லை இஸ்லாம் தான் வளர்கிறது. இந்த உண்மை அவர்களுக்கும் தெரியும். அவர்கள் இஸ்லாத்தை கண்டுதான் பயப்படுகிறார்கள். அது வளர்ந்து விடக்கூடாது என்று நினைக்கிறார்கள்.
இந்தச் சூழ்நிலையில் குர்ஆன் மதரஸாக்களின் மதிப்பை உணர்ந்து செயல்படுவதும், அதன் சீர்திருத்த்திற்காக உழைக்க வேண்டியதும் முஸ்லிம் உம்மத்தின் தலையாய கடமைகளில் ஒன்றாகும்.
அதற்காக பாடுபட அல்லாஹ் நம் அனைவருக்கும் கிருபை செய்வானாக!
No comments:
Post a Comment