அரபுக்கல்லூரிகளில் பட்டமளிப்பு விழாக்கள் நடை பெற்று வருகின்றன.
நூற்றுக்கணக்கான புதிய ஆலிம்கள் சமுதாயத்திற்கு கிடைக்கிறார்கள்.
இவர்களை உச்சி முகர்ந்து நல் வாழ்த்துக்கள் கூறி வரவேற்க வேண்டியது சமுதாயத்தின் கடமை.
காரணம் அவர்கள் மார்க்கத்தின் சேவகர்கள்.
மார்க்கத்தின் மீது உங்களுக்கு இருக்கிற மரியாதையின் பொருட்டு நீங்கள் அவர்களை நேசியுங்கள். அவர்களுக்கான் மரியாதையை தெரிவியுங்கள். அவர்களுக்கான சரியான வாய்ப்புக்களை ஏற்படுத்துங்கள்.
சமுதாயம் எப்படி பயன்படுத்திக் கொள்கிறதோ அப்படி அவர்கள் பயன்படுவார்கள்.
ஒரு மனிதர் பேனாவை முதுகு சொறிவதற்கு மட்டுமே பயன்படுத்தினால் அவருக்கு அது தார் குச்சியின் வேலையை மட்டுமே செய்யும்.
இன்றைய கால கட்டத்தில்
அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கும் உயர் கல்வி படிப்பவர்களுக்கும் உதவித்தொகைகளும்
பரிசுகளும் தாரளமாக வழங்கப் படுகின்றன. வரவேற்கப்பட வேண்டிய செய்திதான். அதே
நேரத்தில் தீனின் சேவர்கள் கண்டு கொள்ளப்படாமல் இருப்பது கவலைக்குரிய ஒரு
அம்சமாகும்.
பொதுவாக முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு ஆலிமின் தொடர்பில் வாழ்வதற்கு பழகிக் கொள்ள வேண்டும். தீனைப் பின்பற்றி வாழ்வதற்கு இது உதவிகரமானது. ஊக்கம் தரக்கூடியது.
ياأيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين التوبة /119
"وكونوا مع الصادقين" أي مع الذين خرجوا مع النبي صلى الله
عليه وسلم لا مع المنافقين. أي كونوا على مذهب الصادقين وسبيلهم.. وقيل: هم الذين استوت
ظواهرهم وبواطنهم. قال ابن العربي: وهذا القول هو الحقيقة والغاية التي إليها المنتهى
فإن هذه الصفة يرتفع بها النفاق في العقيدة والمخالفة في الفعل, وصاحبها يقال له الصديق
كأبي بكر وعمر وعثمان ومن دونهم على منازلهم وأزمانهم.
சகவாசம் விளைவை ஏற்படுத்தக் கூடியது. விலங்குகளின் சகவாசம் கூட
·
வேகமாக நடக்கிற ஒருவருடன் நடந்தேன்
– வேகமாக நடக்க முடிந்தது
·
சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமா? சுறுசுறுபானவர்களுடன் இருங்கள்
·
அறிவாளியாக இருக்க வேண்டுமா அறிவாளிகளுடன் பழகுங்கள்
·
பக்தியாக வாழ பக்தியுள்ளவர்களுடன் பழகுங்கள்
நல்ல தொடர்புக்கு நமக்கு ஒரு ஆள் தேவைதான்!
ஆய்வுத் தேர்வு எழுதுபவர்கள் ( Mphil Phd போல) எவ்வளவு திறமையானவர்களாக இருந்தாலும் அவர்களுக்கும் கைடு அவசியம். அது
போல மக்களுக்கு ஒரு மார்க்க ஆலோசகரின் துணை அவசியமே!
تفصيل لكل شيء என்று பாராட்டப்பட்ட வேதம் தவ்ராத். அத்தகைய வேதம் கொடுக்கப் பட்ட மக்களுக்கு மூஸா (அலை) அவர்களைப் பின்பற்றுங்கள் என்று சொல்லப் பட்டது,
·
تبيانا
لكل شيء பாராட்டப்பட்ட வேதம் குர்ஆன்.
அத்தகைய வேதம் கொடுக்கப் பட்ட சமுதாயத்திற்கு முஹம்மது
(ஸல்) பின்பற்றுமாறு சொல்லப் பட்டது.
·
சஹாபாக்களுக்கு குர்ஆன் அருளப் பட்டது- அதே நேரத்தில்
அவர்களைப் பரிசுத்தப் படுத்தும் பணியை பெருமானார் செய்வார் என்று சொல்லப் பட்டது. ويزكيهم
வேதம் மட்டுமே போதாது. வேத்த்தை செயல் படுத்திக் காட்ட ஒரு வழி காட்டி அவசியம்.
பரீட்சை எழுதிய மாணவன் எல்லாம் சரியாக எழுதிய்ருப்பதாகத்தான் சொல்லுவாநன் திருத்துபவருக்குத்தான் உண்மை தெரியும்
ஒரு வழிகாட்டி தான சரியான
திருத்தத்தை நமக்கு கற்றுத்தர முடியும்.
سفيان الثوري மிஅகப் பெரிய அறிஞர். நான்கு மதஹபுகளின் இமாம்களுக்கு நிகரான கருத்துச் செல்வாக்கு மிக்கவர்.
وقال علي بن الحسن بن
شقيق عن عبد الله قال: ما أعلم على الأرض أعلم من سفيان. وقال بشر الحافي: كان
الثوري عندنا إمام الناس. وعنه قال: سفيان في زمانه كأبي بكر وعمر في زمانهما
அவர் சொல்கிறார்.
அபுஹாஷிம் அஸ்ஸூபி இல்லை என்றால் முகஸ்துதியின் மெல்லிய இழைகளை என்னால் அடையாளம் கண்டுகொண்டிருக்க முடியாது.
ஆலிம்களுடன் தொடர்பு என்பது அவர்களுடன் நட்பு வைத்துக் கொள்வது மட்டுமல்ல. அவர்களிடமிருந்து علم ஐ தேடிக் கொள்வதாகும். அவர்களைப் பயன்படுத்தி தீனை தெரிந்து கொள்வதற்கு கூடுமானவரை முயற்சிப்பதாகும்.
தென்னாட்டுப் பேரொளி வேலூர் அல்பாக்கியாதுஸ் ஸாலிஹாத் அரபுக்கல்லூரியின் நிறுவனர் அண்ணல் அஃலா ஹஜ்ரத அவர்கள் அவர்களைப் பார்ப்பதற்கு செல்கிறவர்கள் சும்மா பார்த்து விட்டு திரும்பினால் கடிந்து கொள்வார். நான் என்ன பொருட்காட்சியா? பார்த்து விட்டு திரும்புவதற்கு என்று கேட்பார். ஆலிம்களைச் சந்திக்கிற போது அவர்களிடமிருந்து மார்க்க விளக்கங்களை அறிந்து கொள்வதற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறுவார்.
இன்றுள்ள சூழ்நிலையில் ஆலிம்களை மிகுந்த இரக்கத்தோடும் மக்கள் அனுக வேண்டும்.
அவர்களுடை பொருளாதார நிலையில் ஒரு தினசரி பேப்பர் வாங்குவது கூட சிரம்மானது.
நாட்டு நடப்புகளை இயல்பாக ஆலிம்களிடம் எடுத்துச் பேசினால மார்க்கத்தின் கருத்தை அவர்கள் சொல்வதற்கான சூழல் தாமாக ஏற்படும்.
உங்களுக்கு வாய்ப்பு இருக்குமெனில் நீங்கள் ஒரு பள்ளி வாசலின் பொறுப்பாளராக இருப்பீர்கள் எனில் தயவு கூர்ந்து உங்களது ஆலிம் அறிவு ரீதியாக தன்னை வளர்த்துக் கொள்வதற்கு உதவுங்கள்.
ஒரு ஆலிமுடன் தொடர்பு வைத்துக் கொள்ள இல்மீ அடிப்படையில் முயற்சிக்கும் போது பெரும்பாலும் அந்த தொடர்பு நன்மையாகவே இருக்கும்.
நீங்கள் தேர்ந்த்டுக்கும் ஆலிம் விளம்பரத்திற்காக வேலை
செய்பவரா? குழப்பத்தை உண்டு பண்ணுகிறவரா? என்பதை நீங்கள் கவனிக்க தவறக்கூடாது. அவர்
உங்களுக்கு நன்மை செய்வதை விடுத்து உங்களை தன்னுடைய தீய வழிகளுக்கு பயன்படுத்திக்
கொள்வார்.
ஆலிம் என்ற பெயரில் அல்லது ஷைகு என்ற போர்வையில் பந்தாவுக்கும் பகட்டுக்கும் ஆட்பட்டு இயங்குபவர்களிடமிருந்து வெகு தூரம் நாம் விலகி இருக்க வெண்டும். ஷைத்தான் இந்த வழியிலும் நம்மை வழி கெடுத்து விட வாய்ப்பு இருக்கிறது.
இன்றைய ஒரு சில ஷைகுகளின் கவனம் சீடர்களின் பணத்தின் மீதே
படர்ந்திருக்கிறது. ஒரு சீடர்
கனவு கண்டார். அதை குருவிடம்
கூறினார்.
குருவே உங்களது கையில் தேன். எனது கையில் அசிங்கம்
குரு சட்டென்று இடை மறித்தார்
நீங்கள் செல்வத்தை வைத்திருப்பவர்கள் நாங்கள் பக்தியை
வைத்திருக்கிறோம். அது தான்
அப்படி தோன்றியிருக்கிறது என்றார்.
சீடன் சொன்னான் நான் கனவை முழுமையாகச் சொல்லிவிடுகிறேன்
நீங்கள் என் கையை நக்குகிறீர்கள் நான் உங்களது கையை
சப்புகிறேன்.
எனவே தேர்வு செய்து ஆலிம்களுடம்
தொடர்பை வைத்துக் கொள்ளுங்கள். ஆலிம்களின்
தொடர்பு நம் வாழ்வை தீன் மயப்படுத்தும்.
عَنْ أَبِي الدَّرْدَاءِ قَالَ وَمَا نَحْنُ لَوْلَا
كَلِمَاتُ الْعُلَمَاءِ
GOOD MESSAGE
ReplyDeleteMASHA ALLAH