وَأَقِيمُوا
الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَمَا تُقَدِّمُوا لِأَنفُسِكُمْ مِنْ
خَيْرٍ تَجِدُوهُ عِنْدَ اللَّهِ إِنَّ اللَّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ
إِنَّ
الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَأَقَامُوا الصَّلَاةَ
وَآتَوْا الزَّكَاةَ لَهُمْ أَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ
عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
இஸ்லாமின் சிறப்புக்களில் முக்கியமானது.
வசதி படைத்தவர்களின் மீது தர்மத்தை கடமையாக்கியது.
வல்மபுரிஜான் : எல்லா சமயங்களும் தர்மத்தை பேசியுள்ளன தர்மத்தை கடமையாக்கிய சமயம் இஸ்லாம் மட்டுமே!
முஸ்லிம் உம்மத்தின் சிறப்பு
தங்களது உழைப்பில் கிடைத்த பணத்தில் ஏழைகளுக்கு இருக்கிற பங்கை மனம் கோனாமல் கொடுப்பது.
ஈந்துவத்தலில் இன்பம் காணுகிற இயல்பு முஸ்லிம்களிடம் அதிகம்
இஸ்லாத்தின் தொடக்க காலத்தில் அரபியருக்கு இந்த கட்டளை தான் சற்று சிரமாமக இருந்த்து.
ஹிஜ்ரி 9 க்குப் பிறகு, தாயிப் நகர மக்கள் நாங்கள் இஸ்லாத்தை ஏற்கிறோம் ஆனால் ஜகாத் கொடுக்க முடியாது என்றனர். அவர்கள் வரட்டும் ஜ்காத்தை கொடுத்து விடுவார்கள் என்றார் பெருமானார் (ஸல்)
வந்தார்கள். வந்தவர்கள் எல்லோரும் வாரி வழங்கினார்கள்
பெருமானாரின் அறிவுரைகளும் நடைமுறைகளும் இந்த மாற்றத்தை நிகழ்த்தின.
عن
أَبَي أُمَامَةَ َقُالُ سَمِعْتَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ يَخْطُبُ فِي حَجَّةِ الْوَدَاعِ فَقَالَ اتَّقُوا اللَّهَ
رَبَّكُمْ وَصَلُّوا خَمْسَكُمْ وَصُومُوا شَهْرَكُمْ وَأَدُّوا زَكَاةَ
أَمْوَالِكُمْ وَأَطِيعُوا ذَا أَمْرِكُمْ تَدْخُلُوا جَنَّةَ رَبِّكُمْ ق - ترمذي
நாங்கள் இன்னும் அதிகமாக தரவேண்டுமா என்று சஹாபாக்கள் கேட்டார்கள்
عَنْ
أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
قَالَ إِذَا أَدَّيْتَ زَكَاةَ مَالِكَ فَقَدْ قَضَيْتَ مَا عَلَيْكَ
وَقَدْ
رُوِيَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ غَيْرِ
وَجْهٍ أَنَّهُ ذَكَرَ الزَّكَاةَ فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ هَلْ
عَلَيَّ غَيْرُهَا فَقَالَ لَا إِلَّا أَنْ تَتَطَوَّعَ
ஜகாத் வசூலிப்பவர்களிடம் நடுத்தரமானதை எடுங்கள என பெருமானார் சொல்லியனுப்ப கொடுத்தவர்களோ உயர்தரமானதை கொடுத்தார்கள்.
ஜகாத் கொடுத்தாவர்களிடம் கண்டிப்பு.
عَنْ
أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ آتَاهُ اللَّهُ مَالًا فَلَمْ
يُؤَدِّ زَكَاتَهُ مُثِّلَ لَهُ مَالُهُ يَوْمَ الْقِيَامَةِ شُجَاعًا
أَقْرَعَ لَهُ زَبِيبَتَانِ يُطَوَّقُهُ يَوْمَ الْقِيَامَةِ ثُمَّ
يَأْخُذُ بِلِهْزِمَتَيْهِ يَعْنِي بِشِدْقَيْهِ ثُمَّ يَقُولُ أَنَا
مَالُكَ أَنَا كَنْزُكَ ثُمَّ تَلَا لَا يَحْسِبَنَّ الَّذِينَ يَبْخَلُونَ
الْآيَةَ بخاري
عَنْ
عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ أَتَتْ النَّبِيَّ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ امْرَأَتَانِ فِي أَيْدِيهِمَا
أَسَاوِرُ مِنْ ذَهَبٍ فَقَالَ لَهُمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ أَتُحِبَّانِ أَنْ يُسَوِّرَكُمَا اللَّهُ يَوْمَ
الْقِيَامَةِ أَسَاوِرَ مِنْ نَارٍ قَالَتَا لَا قَالَ فَأَدِّيَا حَقَّ
هَذَا الَّذِي فِي أَيْدِيكُمَا- احمد
عَنْ أَبَي هُرَيْرَةَ
رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ
وَاللَّهِ لَوْ مَنَعُونِي عَنَاقًا كَانُوا يُؤَدُّونَهَا إِلَى رَسُولِ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَقَاتَلْتُهُمْ عَلَى
مَنْعِهَا قَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ فَمَا هُوَ إِلَّا أَنْ
رَأَيْتُ أَنَّ اللَّهَ شَرَحَ صَدْرَ أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ
بِالْقِتَالِ فَعَرَفْتُ أَنَّهُ الْحَقُّ
ஜ்காத் யார் மீது கடமை ? எப்போது கடமை? எப்படி நிறைவேற்றப்பட வேண்டும்? யாருக்கு தரவேண்டும்? என ஜகாத்திற்கு திட்டமிட்ட வரையரைகளை மார்க்கம் விதித்துள்ளது.
ஜகாத் வழங்கும் முஸ்லிம்கள் இந்த விதிமுறைகளை கவனித்து வழங்க வேண்டும்.
ஜகாத் பண வசதி படைத்தவர்கள் மீதே கடமையாகும். ஏழைகள் ஜகாத் கொடுக்கும் நிலையை எட்டாத நடுத்தர வர்க்கத்தினர் மீது ஜகாத் கடமையில்லை
ஏழைகளும் ஓரளவு தன்னிறைவு பெற்றோரும் முடிந்த அளவு தர்ம்ம் செய்யலாம்.
யார் மீது கடமை
அடிப்ப்டை
தேவைகள், கடன், எல்லாம் போக மேலதிகமாக 599 கிராம் வெள்ளிக்கு நிகரான தொகை சுமார் 40 ஆயிரம் ரூபாய் கையிருப்பில் வைத்திருப்பவர் கணக்கிட்டு ஜகாத் வழங்கினால் அது பேணுதலாக அமையும்
ஒரு வருடம் முழுவதும் வைத்திருப்பவர் மீது ஜகாத் கடமையாகும். ( 85 கிராம் தங்கத்தின் மதிப்பு)
ஒரு வருடம் முழுவதும் வைத்திருப்பவர் மீது ஜகாத் கடமையாகும். ( 85 கிராம் தங்கத்தின் மதிப்பு)
இந்தக் கையிருப்பு தொகையாக இருந்தாலும் அல்லது வியாபார பொருளாக இருந்தாலும் ஜகாத் கடமையாகி விடும்.
பிக்செட் டெபாசிட்டுகள், முதலீடுகள், சேமிப்புத் தொகைகள், வாடகை வருமானம் கணக்கில் கொள்ளப்படவேண்டும.
கடனாக
கொடுத்த பணம் திரும்பி வரும் என்ற உத்தரவாதமிருப்பின் அதுவும் கணக்கில்
கணக்கில் கொள்ளப்படும். ஆயினும் பணம் கைக்கு வந்த பிறகு அதற்குரிய ஜகாத்தை
வருடக் கணக்கிட்டு நிறைவேற்றினால் போதுமானது.
வீடு கடைகளுக்கு அட்வான்ஸாக கொடுத்திருக்கிற தொகை கணக்கில் வராது.
வாடகைக்கு விடப்பட்டுள்ள வீடு, கார் ஆட்டோ போன்ற பொருட்களின் மதிப்பு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது.
சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் ஒரு ஆண்டிற்கான பரிமாற்றத்தில் மிக குறைந்த அளவாக ஆண்டு முழுவதும் வைத்திருந்த தொகைக்கு ஜகாத் செலுத்தினால் போதுமானது.
உதராணத்திற்கு
தொடக்கத்தில் 5 லட்சமாக இருந்து அது இடையில் 2 லட்சமாக குறைந்து இறுதியில்
அது 7 லட்சமாக உயர்ந்திருக்குமெனில் 2 லட்சம் தான் வருடம் முழுவதும்
இருந்த தொகை என்ற வகையில் அதற்கு மட்டுமே ஜகாத் கொடுத்தால் போதுமானது. மற்ற
வியாபார பரிமாற்றத்திலும் இதே போன்ற அளவீட்டை கை கொள்ள வேண்டும்.
பெண்கள் அணிந்திருக்கிற அத்தியவசிய நகைகளில் ஜகாத் கடமையாகாது.
அதிகப்படியான சேமிப்பு நோக்கிலான நகைகளுக்கு ஜகாத் கொடுக்க வேண்டும்.
தங்கம் வெள்ளிக் கட்டிகள் பாத்திரங்களுக்கு ஜகாத் கொடுக்க வேண்டும். வைரக்கற்களுக்கு ஜகாத் இல்லை.
வியாபார
நோக்க மின்றி வீட்டு மனையாக தரிசி நிலமாக வைத்திருக்கிற சொத்துக்களுக்கு
ஜகாத் இல்லை. அதன் சந்தை மதிப்பு அதிகமாக இருந்தாலும் சரி.
ரியல் எஸ்டேட் – வியாபார நோக்கில் வாங்கிப் போட்டிருக்கிற நிலத்தின் மதிப்புக்கு ஜகாத் கொடுக்க வேண்டும்.
வங்கிகள்
மற்ற நிதி அமைப்புக்க்களில் இருந்து நீண்ட கால தவனை திட்ட்த்தில்
பெறப்படும் கடன தொகை வருமாணக் கணக்கில் சேர்ர்கப்படும். அந்த வருடம்
கட்டும் தவனை தொகை மட்டும் கழித்து விட்டு எஞ்சிய தொகைக்கு ஜகாத் வழங்க
வேண்டும்
எப்படி ஜகாத்தை கொடுப்பது, ஜகாத் கொடிப்பவர்கள் கவனிக்க வேண்டியது
அருள் கூர்ந்து ஏனோ தானோ வென்று ஜகாத் கொடுப்பதை நிறுத்துங்கள்.
நம்மிடமிருக்கிற பணம் சந்திர ஆண்டில் ஒரு வருடம் பூர்த்தியாவிட்டால் ஜகாத் கடமையாகி விடும்.
ஒவ்வொரு
செல்வந்தரும் ஜகாத்தை கணக்கிடுவதற்காக ஒரு பிறைத் தேதியை உதாரணத்திற்கு
ரமலான் 11 அல்லது ரஜப் 5 என்று முடிவு செய்து கொள்ள வேண்டும்.
அன்றைய தினத்தில் தனது ஜகாத்தின் அளவை அவர் முடிவு செய்திட வேண்டும்.
அப்போதே
தன்னுடையை கடமையை அவர் நிறைவேற்றி விட வேண்டும். ஜகாத் கடமையான பிற்கு
காலம் தாழ்த்துவது, அல்லது வருடம் முழுவதும் கொஞ்சம் கொஞ்டமாம ஜகாத்தை
கொடுக்க நினைப்பது மார்க்க அடிப்படையில் பொருத்தமானது அல்ல. பின்னால் ஜகாத்
கொடுக்க முடியாமல் போய்விடலாம். ஜகாத்தை கொடுத்து நம்முடை சொத்தை சுத்தப்
படுத்தி விட்டோம் என்ற அந்தஸ்தும் கிடைக்காது.
இந்த
ஆண்டு கொடுக்க வேண்டிய தொகையை முன்னதாகவே கணக்கிட்டு கொடுக்கலாம்.
கொடுக்கிற போது ஜகாத் என்ற எண்ணம் இருக்க வேண்டும். கொடுத்த தொகையைப்
பற்றிய விவரக்குறிப்பையும் வைத்துக் கொள்ள வேண்டும்.
ஜகாத் கொடுப்பவர்கள் முக்கியமாக கவனிக்க வேண்டியது,
ஜகாத்
என்பது ஒரு அமல். நான் கொடுக்கிறேன் என்ற எண்ணத்தை விட நான்
நிறைவேற்றுகிறேன். இதை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற மனோநிலையில்
ஜகாத்தை நிறைவேற்ற வேண்டும்.
தற்பெறுமை ஏற்படாமல் இந்த எண்ணம் காக்கும்.
عَنْ
أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ إِذَا أَعْطَيْتُمْ الزَّكَاةَ فَلَا تَنْسَوْا ثَوَابَهَا أَنْ
تَقُولُوا اللَّهُمَّ اجْعَلْهَا مَغْنَمًا وَلَا تَجْعَلْهَا مَغْرَمًا –
إبن ماجة
யாருக்கு ஜகாத்
إِنَّمَا
الصَّدَقَاتُ لِلْفُقَرَاءِ وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ عَلَيْهَا
وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَارِمِينَ وَفِي
سَبِيلِ اللَّهِ وَاِبْنِ السَّبِيلِ فَرِيضَةً مِنْ اللَّهِ وَاللَّهُ
عَلِيمٌ حَكِيمٌ
ஜ்காத்
யாருக்கு கொடுக்கப் பட வேண்டும் என்பதை மார்க்கம் அறுதியிட்டு
கூறியுள்ளது. உரிய நபர்களுக்குத்தன் ஜகாத் வழங்க வேண்டும். நமது
அவசரத்திற்கு அல்லது முகஸ்துதிக்காக தகுதி அற்றவர்களுக்கு கொடுத்தால் ஜகாத்
கொடுத்த்தாதாகாது.
தாய
தந்தை மனைவி மக்கள் போன்ற உறவுகளை தவிர மற்ற சகோதர சகோதரிகள் பெரியத்தா
சின்னதாக்கள் மற்ற நெருங்கிய உறவுக்கார்ர்களுக்கு ஜகாத்தை கொடுக்கலாம்.
உறவினர்களுக்கு ஜகாத் கொடுத்தால் தர்ம்ம் செய்த நன்மையும் உறவுகளை பேணிய
இரட்டை நன்மை கிடைக்குக்ம்
அடுத்த்தாக நமக்கு பக்கத்தில்/ நமது ஊரில் இருக்கிற தேவையுடையவர்களுக்கு கொடுக்க வேண்டும்.
நமக்கு அருகிலேயே தேவைய்டையவர்கள் இருக்கும் போது வெளியூர்களுக்கு தூரத்திலிருப்பவர்களுக்கு ஜகாத்தை எடுத்துச் செல்லக் கூடாது.
அமைப்புக்கள்
இயக்கங்களுக்கு ஜகாத் பணத்தை கொடுப்பவர்கள் முதலில் தங்களது
உறவினர்களையும் அருகிலிருப்போரையும் கவனித்து விட்டார்களா? என்பதை
யோசித்துப் பார்க்க வேண்டும்.
அஸ்ஸலாமு அழைக்கும் ஹசரத், எளிமையான முறையில் புரியும்படி உள்ளது
ReplyDeleteஅருமை ஹஜ்ரத்! ஆனால் முப்தாபிஹியான கருத்துக்கள் இருந்தால் மிகவும் நல்லது. தற்கால அறிஞர்கள் எனும்போது மக்கள் குழம்பி விடுகிறார்கள். நானும்தான். ஜஸாகல்லாஹ்.
ReplyDelete