வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, May 02, 2013

ஒரு அறிவிப்பு

அன்பு நிறைந்த நண்பர்களே!
அஸ்ஸலாமு அலைக்கும் .
இந்த வார ஜும் ஆ விற்கான உரை " பிரேதங்கள் மதிக்கப்பட வேண்டியவை" என்ற தலைப்பில் தயாராகிஎவருகிறது. இன்ஷா அல்லாஹ் . காலை 7 மணிக்குள் பதிவாகிவிடும்.

பல நணபர்களும் வெள்ளி மேடை உரைகள் புத்தகமாக வேண்டும் என்று தொடர்ந்து கேட்டு  வருகின்றனர்.

புத்தகம் வெளியிடுவது அதை சேமித்து வைத்து விறபனை செய்வது உள்ளிட்ட நடைமுறைகளில் எனக்குள்ள அசௌகரியங்கள் காரணமாக இத்தனை நாட்களாக அந்தப் பணியில் இறங்கவில்லை. தற்போது பல ஆலிம்களும் ஹதீஸிற்கான மொழி பெயர்ப்பு ,  இன்னும் சற்று விரிவான தகவல்கள் வேண்டும் என்று கோருகின்றனர். என்னைச் சந்திக்கிற நணபர்களில் சுமார் 80 சதவீதம் பேர் இந்தக் கோரிக்கையை வைக்கின்றனர். இந்த தளத்தில் அவ்வாறு விரிவாக தருவதற்கான வாய்ப்பு இல்லை, அதனால் புத்தகமாக வெளியிடுகிற போது இன்னும் சற்று விரிவாக ஹதீஸ்களுக்கான மொழி பெயர்ப்புடன் வெளியிடலாம் என்றும் அதை உலமாக்களுக்கானதாக் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். ஆகையால் வெள்ளிமேடை உரைகள் இன்ஷா அல்லாஹ் விரைவில புத்தகமாக வெளிவர இருக்கிறது. குறைந்த அளவில் அச்சிட நினைத்திருக்கிறோம், உங்களுக்கும் உங்களைச் சார்ந்தவர்களுக்கும் எத்தனை பிரதிகள் தேவை என்பதை சகோதரர் ஜாபிர் கான் பாகவி அவர்களின் எண்களுக்கு
 9677254045
உங்களது பெயர் மற்றும் மொபைல் எண்ணுடன் sms செய்யுங்கள் . இன்ஷா அல்லாஹ் புத்தகம் வெளியானதும் தெரிவிக்கிறோம். 
வஸ்ஸ்லாம்.
அன்புடன்
அப்துல் அஜீஸ் பாகவி


No comments:

Post a Comment