வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, April 25, 2013

பிரச்சினைகளிலிருந்து விடுபட


பிரச்சினைகள் வாழ்க்கையில் ஒரு அம்சம்.
பணம், குணம். மனம். உடல், உழைப்பு மரியாதை  என அனைத்து வாழ்வியல் அம்சங்களிலும் பிரச்சினைகள் சகஜமே!

எந்த வெற்றியும் பிரச்சினைகளிலிருந்து காப்பாற்றிவிடாது. சொர்க்கத்தை தவிர.

இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் இரண்டாம் உலக யுத்த்தில் இங்கிலாந்துக்கு வெற்றி தேடித் தந்தார். மகத்தான வெற்றி,.
ஆனால் தொடர்ந்து நடந்த தேர்தலில் தோற்றுப் போனார்.

எனவே பணம் சம்பாதித்து விட்டல் பிரச்சினைகளிலிருந்து தப்பி விடலாம். பதவிக்கு வந்து விட்டால் பிரச்சினைகளிலிருந்து  தப்பி விடலாம். தொழில் அமைந்து விட்டால் பிரச்சினைகளிலிருந்து தப்பி விடலாம் என்று நினைப்பது சரியல்ல. ஒவ்வொன்றிலும் பிரச்சினைகளுக்கான இடம் இருக்கவே செய்கிறது.

நபிமார்கள் மக்களுக்கு நன்மை செய்வதை தவிர வேறு எதையுமே விரும்பாதவர்கள்,
وَمَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ إِنْ أَجْرِي إِلَّا عَلَى رَبِّ الْعَالَمِينَ(109)

إِنْ أُرِيدُ إِلَّا الْإِصْلَاحَ مَا اسْتَطَعْتُ وَمَا تَوْفِيقِي إِلَّا بِاللَّهِ عَلَيْهِ تَوَكَّلْتُ وَإِلَيْهِ أُنِيبُ(88) 11;

அவர்களே பெரும் பிரச்சினைகளை சந்தித்தார்கள்.

ஹஜ்ரத் உமர் (ரலி) எத்தகைய பெருந்தகை? 22 ½ இலட்சம் சதுர மைல்களை சர்வ அதிகாரத்தோடு – ஒட்டுப்போட்ட ஆடையோடு  ஆட்சி செய்தவர்.  அவர் ஏன் கொல்லப்பட்டா?
உமர் (ரலி) அவர்களின் வரலாற்றை வாசித்து விட்டு வந்து ஒருத்தர் இவ்வளவு பெரிய மனிதருக்கு ஏன் இப்படி ஒரு முடிவு என்று கேட்டார் மிக்க வருத்த்த்தோடு.
உங்களுடைய பார்வையிலிருந்து சற்று தள்ளி நின்று. இந்தக் கொலையினால் அவருக்கு கிடைத்த நன்மையை எண்ணிப் பாருங்கள். ஒட்டகை மேய்க்க கூட தெரியாதவர் என்று தந்தை கத்தாப் அவர்களால் ஏசப்பட்ட உமர் (ரலி) முஃமின் களின் தலைவரானார். அவருக்கு அல்லாஹ் க்டைசியில் சஹீத் என்ற அந்தஸ்தையும் கொடுதுதுவிட்டான் அல்லவா?
இப்படி யோசித்தால் உமர் (ரலி) அவர்கள் கொல்லப்பட்ட வேதனை குறைந்து போகும்.

எல்லோருக்கும் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கிறது என்பதை நினைத்துக் கொள்வது பிர்ச்சினைகளில் துவண்டு போய் விடாமல் காக்கும்.  

பிரச்சினைகளால் எதிர்பாராத நன்மைகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்பதை நினைத்தால் பிரச்சினைகளை எதிர்க் கொள்ளும் துணிச்சல் பிறக்கும்.

இஸ்லாம் பிரச்சினைகளை நன்மையாக எடுத்துக் கொள்ள கற்பிக்கிறது. அது துணிச்சலையும் பொறுமையும் தரும் என்பதில் சந்தேகமில்லை.

·        عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا يُصِيبُ الْمُؤْمِنَ مِنْ شَوْكَةٍ فَمَا فَوْقَهَا إِلَّا رَفَعَهُ اللَّهُ بِهَا دَرَجَةً أَوْ حَطَّ عَنْهُ بِهَا خَطِيئَةً  - مسلم 4665
·        قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْ مُسْلِمٍ يُصِيبُهُ أَذًى مِنْ مَرَضٍ فَمَا سِوَاهُ إِلَّا حَطَّ اللَّهُ بِهِ سَيِّئَاتِهِ كَمَا تَحُطُّ الشَّجَرَةُ وَرَقَهَا -  مُسْلِمٌ 4663

·        جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ عَلَى أُمِّ السَّائِبِ أَوْ أُمِّ الْمُسَيَّبِ فَقَالَ مَا لَكِ يَا أُمَّ السَّائِبِ أَوْ يَا أُمَّ الْمُسَيَّبِ تُزَفْزِفِينَ قَالَتْ الْحُمَّى لَا بَارَكَ اللَّهُ فِيهَا فَقَالَ لَا تَسُبِّي الْحُمَّى فَإِنَّهَا تُذْهِبُ خَطَايَا بَنِي آدَمَ كَمَا يُذْهِبُ الْكِيرُ خَبَثَ الْحَدِيدِ

·        حَدَّثَنِي عَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ قَالَ قَالَ لِي ابْنُ عَبَّاسٍ أَلَا أُرِيكَ امْرَأَةً مِنْ أَهْلِ الْجَنَّةِ قُلْتُ بَلَى قَالَ هَذِهِ الْمَرْأَةُ السَّوْدَاءُ أَتَتْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ إِنِّي أُصْرَعُ وَإِنِّي أَتَكَشَّفُ فَادْعُ اللَّهَ لِي قَالَ إِنْ شِئْتِ صَبَرْتِ وَلَكِ الْجَنَّةُ وَإِنْ شِئْتِ دَعَوْتُ اللَّهَ أَنْ يُعَافِيَكِ قَالَتْ أَصْبِرُ قَالَتْ فَإِنِّي أَتَكَشَّفُ فَادْعُ اللَّهَ أَنْ لَا أَتَكَشَّفَ فَدَعَا لَهَا
பிரச்சினைகளுக்கான காரணிகளை ஆராய்வது.
·         உடல் நலப்பிரச்சினைக்கு சாப்பாடு தான் காரணம் என்று அறிந்தால் அதை குறைத்துக் கொள்ளவேண்டும்.
·         பணப்பிரச்சினைக்கு காரணம் ஆடம்பரம் தான்  காரணம் என்று அறிந்தால் அதை தவிர்த்துக் கொள்ளவேண்டும்.
·         தோல்விக்கு காரணம் பதட்டம் தான் என்று அறிந்தால் நிதானமாக செயல்பட பயிற்சி எடுத்துக் கொள்ளவேண்டும்.

இவ்வாறு செயல்படுவது அறிவுடமை. இதைத்தான் சுய முன்னேற்ற பயிற்சியாளர்களும் சொல்லிக் கொடுக்கிறார்கள்.

பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இது முக்கியமான ஒருவழி முறைதான்.

இதில் ஒரு பெரிய பிரச்சினை என்னவென்றால் காரணிகளை அறிவது எளிதல்ல. அறிந்தாலும் அதை பலரும் ஒத்துக் கொள்வதில்லை.

ஊருக்குள் ஒரு பிரச்சினை ஏற்படுகிற போது அதற்கான காரணிகளை கண்டு பிடிக்க ஒரு கூட்ட்த்தை நடத்திப் பாருங்கள். அது பெரிய பிரச்சினையாகிவிடும்.

சரி! அதற்குமேல்  சரிசெய்ய முடியாத காரணிகளை என்ன செய்வது?

எனவே பிரச்சினைகள் ஏறபடுகிற போது – பிரச்சினைகளை ஏற்படுத்துகிறவனை புரிந்து கொள்ளுங்கள் என்று இஸ்லாம் கூறுகிறது.

பிரச்சினைகளை ஏற்படுத்துகிறவனும் அதை தீர்க்க சக்தி படைத்தவனும் அல்லாஹ் ஒருவனே!

அல்லாஹ்வே பிரச்சினைகளை ஏற்படுத்துகிறான்.
முப்தி ஷபீ சாஹிப் சொல்வார் ;  كوئي كام إنفاقي نهين
எதுவும் إتقااقا    அல்ல!  ர்துவும் திடீரென்று எதிர்பாராமல் ஏற்படுவதிலை. எல்லாம் இறைவனது திட்டம் சார்ந்ததே!


அல்லாஹ் நாடாமல் என்ன ந்டந்து விடப்போகிறது.

வரலாறு ஒரு ஆச்சரியமான நிகழ்வை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறது.

காலித் பின் வலீத் (ரலி) சிரியாவில் ஒரு கோட்டையை முற்றுகையிட்டிருந்த போதுஅதை தாக்குப்பிடிக்க முடியாது எதிரிகள் தவித்தனர். அங்கிருந்து ஒருவர் உடன்படிக்கை பேச வந்தார். அவரது கையில் ஒரு கண்ணாடிக் குப்பி இருந்த்து.
அதைப் பற்றி காலித் (ரல்) விசாரித்தார்கள். பேச்சுவார்த்தை வெற்றி பெறாவிட்டால் இந்த விஷத்தை குடித்து இறப்பேன்.  தோல்வியோடு என சமூகத்தை சந்திக்க விரும்பவில்லை என்றார் அவர்.
ஆதிக்கம் செய்வதை அல்ல. மக்களின் சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தி நேர்வழி காட்ட நினைத்த காலித (ரலி) அவர்கள் .
அந்த மனிதரிடம் நீ மிக உறுதியாக இறப்பை தரும் என்று நம்புகிற அந்த விஷத்தை என்னிடம் கொடு என்றார். அந்த மனிதர் கொடுத்தார்.

அதை வாங்கிக் கொண்ட காலித் (ரலி) அல்லாஹ் விளைவை உண்டு பண்ணாவிட்டால் இந்த உலகில் எந்தப் பொருளுக்கும் எந்தச் சக்தியும் இல்லை
بسم الله الذي لا يضر مع إسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العظيم
என்று சொல்லி விட்டு அந்த் விஷத்தை குடித்தார்கள்,
காலித் (ரலி) உறுதியான நம்பிக்கைகு முன் – அந்த விஷம் தோற்றுப் போனது.

பிரச்சினையை விஷம் தீர்க்கும் என்று நினைத்துக் கொண்டு அந்த நபர் இஸ்லாமை தழுவினார்

الإصابة ج: 2 ص: 254
وقال يونس بن أبي إسحاق عن أبي السفر لما قدم خالد بن الوليد الحرة أتى بسم فوضعه في راحته ثم سمى وشربه رواه أبو يعلى ورواه ابن سعد من وجهين آخرين
எனவே பிரச்சினைகள் ஏற்படுகிற போது முதலில் அல்லாஹ்வை நோக்கி திருமப வேண்டும் 

பெருமானார் (ஸல்) கற்றுக் கொடுத்த பிரார்த்தனை

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ كَانَتْ لَهُ إِلَى اللَّهِ حَاجَةٌ أَوْ إِلَى أَحَدٍ مِنْ بَنِي آدَمَ فَلْيَتَوَضَّأْ فَلْيُحْسِنْ الْوُضُوءَ ثُمَّ لِيُصَلِّ رَكْعَتَيْنِ ثُمَّ لِيُثْنِ عَلَى اللَّهِ وَلْيُصَلِّ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ لِيَقُلْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ الْحَلِيمُ الْكَرِيمُ سُبْحَانَ اللَّهِ رَبِّ الْعَرْشِ الْعَظِيمِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ أَسْأَلُكَ مُوجِبَاتِ رَحْمَتِكَ وَعَزَائِمَ مَغْفِرَتِكَ وَالْغَنِيمَةَ مِنْ كُلِّ بِرٍّ وَالسَّلَامَةَ مِنْ كُلِّ إِثْمٍ لَا تَدَعْ لِي ذَنْبًا إِلَّا غَفَرْتَهُ وَلَا هَمًّا إِلَّا فَرَّجْتَهُ وَلَا حَاجَةً هِيَ لَكَ رِضًا إِلَّا قَضَيْتَهَا يَا أَرْحَمَ الرَّاحِمِينَ ترمذي 441 
إستغفار  அதிகம்செய்தால் பிரச்சினைகளிலிருது விடுபடலாம்.
وَيَاقَوْمِ اسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ يُرْسِلْ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيَزِدْكُمْ قُوَّةً إِلَى قُوَّتِكُمْ وَلَا تَتَوَلَّوْا مُجْرِمِينَ(52)

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَعِيلَ حَدَّثَنَا حَمَّادٌ أَخْبَرَنَا ثَابِتٌ عَنْ ابْنِ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ عَنْ أَبِيهِ عَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَصَابَتْ أَحَدَكُمْ مُصِيبَةٌ فَلْيَقُلْ إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ اللَّهُمَّ عِنْدَكَ أَحْتَسِبُ مُصِيبَتِي فَآجِرْنِي فِيهَا وَأَبْدِلْ لِي بِهَا خَيْرًا مِنْهَا ابوداوود 2712

முதலில் பிரார்த்தனை பிறகு திட்டம்
பிரச்சினைகள் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான திட்டங்களை வகுத்துச் செயலபட வேண்டும். அதில் பதற்றத்தை தவிர்க்க வேண்டும்.
அல்லாஹ்விடம் முறையிட்டு விட்டு தீர்வை தேடினால் தானே பதட்டம் குறைந்து விடும்.
وكان النبي ـ صلى الله عليه وسلم ـ إذا حزبه أمر فزع إلى الصلاة أخرجه أحمد وأبو داود 1319

தேர்வில் தோல்வி, வியாபாரத்தில் சிக்கல். பொதுவாழ்வில் பிரச்சினை, அவமானம், அதிகாரவர்க்கத்தின் நசுக்குதல் அனைத்தையும் திட்டமிட்ட வழியில் நிதானத்தோடு எதிர் கொள்ள வேண்டும்.
இன்றைய முஸ்லிம் சமுதாயத்தின் பிரச்சினைகளில் பிரதானமானது அதிகார வர்க்கம் மீடியாக்களும் செய்கிற அவதூறுப் பிரச்சாரம்.

அல்லாஹ் நாடிவிட்டான் இப்படி நடக்கிறது என்ற நிதானத்தோடு நடந்து கொண்டால் பிரச்சினைக்கு தீர்வை சிரித்துக் கொண்டே அடைந்து விடலாம்.
ஷேக்ஸ்பியர் சொன்னார்.
தோற்றவன் சிரித்து விட்டால்;
ஜெயித்தவன் வெற்றியின் சுவையை ருசிக்க முடியாது. 


பிறருடையை உதவியை நாடுதல்

பிரச்சினைக்குள்ளாகிற சம்யத்தில் தீர்வை தேடும் போது பிறரிடம் ஆலோசனைக் கலக்கவோ உதவிகளை கேட்கவோ தயங்க கூடாது. என்னுடைய பிரச்சினையை நானே கவனித்துக் கொள்வேன் என்று நினைப்பதோ, மரியாதைக்கு குறைவு ஏற்படும் என்று கருதியே பிறரின் உதவியை தேடாமல் இருப்பது பிரச்சினையை பெரிதாக்கி விடும். உதவி என்பதே பிரச்சினைக்குரிய நேரத்தில் செய்யப்படுவதுதான்.

நபி (ஸல்) அவர்கள் ஹிஜிரி 5 ம் ஆண்டு மதீனா சுற்றி எதிரிகள் முற்றுகையிட வந்த போது அகழி வெட்டிக் கொள்ளுமாறு சல்மான் (ரலி) சொன்ன யோசனையை ஏற்றார்கள். அகழி வெட்டு வதற்காக பக்கத்திலிருந்த பனீ குறைழா யூதர்களிடம் கடப்பாரை சட்டி போன்ற உபகரணங்களை இரவலாக வாங்கிக் கொண்டார்கள்.

தமிழகத்தில் முஸ்லிம்கள் சந்திக்கிற அவதூறு பிரச்சாரம் போலீஸாரின் பொய்வழக்குகள் அடக்கு முறைகளை எதிர்த்து நாமே தன்னந்தனியாக போராடிக் கொண்டிருக்கிறோம். முஸ்லிம்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் திமுக அதிமுக போன்ற கட்சிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன. வாயை பொத்திக் கொள்கின்றன நியாயம் பேசுவதில்லை. அதற்கு காரணம் நாம் நமக்கு ஒரு பிரச்சினை ஏற்படும் போது அவர்களை நாடுவதில்லை.
தமிழகத்திலும் சரி இந்திய் அளவிலும் சரி முஸ்லிம் சமுதாயம் இந்துத்துவ சக்திகளின் தாக்குதல்களை சந்திக்கிற போதுமுஸ்லிம்கள் கொத்துக் கொத்தாக கைது செய்யப்படுகிற போது அது முஸ்லிம்களின் பிரச்சினை என்ற அளவில் பார்க்கப்படுகிறது ,மக்கள் பிரச்சினையாக பார்க்கப்படுவதில்லை.
இரண்டு நாட்களுக்கு முன் கோவை ஒரு தகறாறு. அதில் சம்பந்தப்பட்ட ஒரு இந்து கைது செய்யப்படுகிறார். 5 முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

பிரச்சினை செய்பவர்களை கைது செய்வதில் யாருக்கும் மறுப்பில்லை. ஆனால் இதில் பாகுபாடு பார்க்கப்படுகிறது,
இதில் நாம் எவ்வளவுதான் சத்தமிட்டாலும் அரங்கேறுவதில்லை.
இதை பொதுவான அரசியல் கட்சிகளின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல நாம் முய்றசி எடுக்க வேண்டும்.
இன்றைய இந்திய முஸ்லிம்களின் பிரச்சினையை தீர்க்க பொது மனிதர்களின் உதவியை தேடுவது இன்றியமையாத தேவை.

பிரச்சினைகளுக்கான தீர்வை நிதானமாக திட்டமிட்ட பிறகு அல்லாஹ்வின் மீதே தவக்குல் வைக்க வேண்டும்.
பாலை வனத்தில் ஒட்டகை மேய்க்கும் சஹாபி தொழும் போது ஒட்டகைகளை என்ன செய்வது என்று கேட்டார்
إعقل ساقها وتوكل
ஒட்டகத்தை கட்டிவை அல்லாஹ்வின் மீது தவக்குல் வை என்றார்கள் பெருமானார் (ஸல்) அவர்கள்.

நிறைவாக ஒரு செய்தி ;ஒரு அறிஞர் சொன்னார்.

ستة أشياء إذا ذكرتها هانت عليك مصيبتك
1.    أن تذكر أن كل شيء بقضاء وقدر
2.    ,وأن الجزع لا يرد القضاء
3.    وأن ما أنت فيه أخف مما هو أكبر منه,
4.    وأن ما بقي لك أكثر مما أخذ منك ,
5.    وأن لكل قدر حكمة لو علمتها لرأيت المصيبة هي عين النعمة ,
6.     وأن كل مصيبة للمؤمن لا تخلو من ثواب ومغفرة أو تمحيص أو رفعة شأن أو دفع بلاء وما عند الله خير وأبقى 


2 comments:

  1. ألله يجزاك ألف ألف خيرا وافيا
    يا فصيح العلماء جزاك الله خيرا

    ReplyDelete
  2. ஜஸாகல்லாஹு கைரா அருமையான பதிவு சகோதரா

    ReplyDelete