வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, April 18, 2013

சமூக அமைதிக்கு என்ன தேவை?

 
வாழ்க்கைகான வசதிகள் ஏராளமா வளர்ச்சியடைந்திருக்கிற இன்றைய நவீன விஞ்ஞான உலகத்தில் நகரத்தில் நாட்டில் உலக அளவில் அமைதி இல்லை

சிறிய அளவில் அமைதிக்குழுக்களும் பெரிய அளவில் ஐக்கிய நாடுகள் சபைகளும் இருக்கிற அமைதியை தக்கவைப்பதற்கு  போராட கொண்டிருக்கின்றன.

இதில் முஸ்லிம்களது நிலை இன்னும் பரிதாபகரமானது.

சமூக அமைதியின் முக்கியத்துவம் அதில் நமது கடமை என்ன என்பதை இன்றைய ஜும் ஆவில் சிந்திக்கிறோம்.

அமைதியான வாழ்வு அல்லாஹ் வழங்கும் பெரிய அருள் என இஸ்லாம் கூறுகிறது.

وَضَرَبَ اللَّهُ مَثَلًا قَرْيَةً كَانَتْ آمِنَةً مُطْمَئِنَّةً
ஒரு நகரம் அமைதியாக இருப்பது அல்லாஹ்வின் அருள் என்று இவ்வசனம் கூறுகிறது.

நபி இபுறாகீம் (அலை) மக்காவின் அமைதிக்காக பிரார்த்தனை செய்தார்கள்
وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا الْبَلَدَ آمِنًا

மக்கா நகரின் சிறப்புக்கு ஒரு காரணம்
الَّذِي أَطْعَمَهُمْ مِنْ جُوعٍ وَآمَنَهُمْ مِنْ خَوْفٍ(4)

முஃமின் என்பவருக்கு பெருமானார் (ஸல்) சொன்ன விளக்கம்

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ وَالْمُؤْمِنُ مَنْ أَمِنَهُ النَّاسُ عَلَى دِمَائِهِمْ وَأَمْوَالِهِمْ -   ترمذي -2551


அமைதியை நேசிப்பதும் அமைதியான சூழலுக்கான எல்ல முய்றசிகளை செய்வதும் இஸ்லாம் கடமை என வலியுறுத்துகிறது.

பிரச்சினைகளை உருவாக்குவதையும் குழப்பங்களுக்கு காரணமாக அமைவதையும் இஸ்லாம் வன்மையாக எதிர்க்கிறது.

وَاللَّهُ لَا يُحِبُّ الْفَسَاد  
وَالْفِتْنَةُ أَكْبَرُ مِنْ الْقَتْلِ

வீட்டிலும் நாட்டிலும் சமூகத்திலும் அமைதி தவழ மிக முக்கியமானது நீதி

எங்கு நீதி வழுவுமோ அங்கு அமைதி குலையும்

வீட்டில் குழந்தைகள் சகோதர்ர்கள் மாமியார் மருமகள் நாத்தனார்களிடையே நீதியுணர்வு குறைகிற போது கலகலப்பு காணாமல் போய கைகலப்பு வந்து விடும்

நீதி தவறுவோர் தங்களது சந்ததிகளை எண்ணிப்பார்த்துக் கொள்ளட்டும். என குர் ஆன் எச்சரிக்கிறது.
وَلْيَخْشَ الَّذِينَ لَوْ تَرَكُوا مِنْ خَلْفِهِمْ ذُرِّيَّةً ضِعَافًا خَافُوا عَلَيْهِمْ فَلْيَتَّقُوا اللَّهَ وَلْيَقُولُوا قَوْلًا سَدِيدًا(9

ரோட்டிலும் நாட்டுலும் அப்படித்தான் எந்த ஒரு மனிதன் நீதியை குறை படுத்தினாலும் சமூகம் சிக்கலுக்குள்ளாகும்.

ஆப்ரஹா கட்டிய ஆல்யத்திற்கு சென்ற ஒருத்தன அசிங்கம் செய்தான். யானை படையெடுப்பு நிகழ்ந்தது.

ஆஸ்திரியாவின் இளவரசனையும் இளவரசியை போஸ்னியாவின் சரஜிவோ நகரில் ஒருமாணவன் கொலை செய்தான் முதல் உலக யுத்தம் தொடங்கியது. 1561 நாட்கள் சண்டை நடந்தது. 2 கோடிப்பேர் இறந்தனர்.

(ஆஸ்திரியா நாட்டுப் பட்டத்து இளவரசரான பிரான்சிஸ் பெர்டினாண்டும், அவருடைய மனைவியும் காரில் சென்ற போது (1914 ஜுன் 28) சுட்டுக் கொல்லப்பட்டது போர் தொடங்குவதற்கான உடனடிக் காரணம் ஆயிற்று. சுட்டவன், காவ்ரீலோ பிரின்சிப்,செர்பியா நாட்டைச்சேர்ந்தவன்.)

பல குழப்பங்களும் பல கொலைகளும் பல சட்ட வீரோதச் செயல்களும் சாதாரணமாக முடிந்து போய்விடலாம். ஆனால் ஏதாவது ஒன்று பெரும் தீமைக்கு காரணமாகிவிடும். அது எது என்பதை நம்மால் அடையாளம் காண முடியாது. அதனால் எப்போதும் குழப்பங்கள் – நீதி தவறும் நடவடிக்கைகளிலிருந்து விலகியே இருக்க வேண்டும்.

நாட்டில் அமைதியை பேண

1.   உயிர் உடமை மானம் அறிவு  பாதுகாக்கப்படனும்

مَنْ قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍ فِي الْأَرْضِ فَكَأَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيعًا -  المائدة
وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا(93) النساء

2.   சமயச் சுதந்திரம் பாதுகாக்கப்படனும்
      இஸ்லாம் சமயச் சுதந்திரத்திற்கு உத்தரவாதம் தந்துள்ளது.

لَا إِكْرَاهَ فِي الدِّينِ

وَلَوْ شَاءَ رَبُّكَ لَآمَنَ مَنْ فِي الْأَرْضِ كُلُّهُمْ جَمِيعًا أَفَأَنْتَ تُكْرِهُ النَّاسَ حَتَّى يَكُونُوا مُؤْمِنِينَ(99) يونس

3.       மக்களிடையே சமத்துவம் நிலைநாட்டப்பட வேண்டும்

يَاأَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُمْ مِنْ ذَكَرٍ وَأُنثَى وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ عِنْدَ اللَّهِ أَتْقَاكُمْ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ(13)الحجرات

4.       இன மதவெறி ஒழிக்கப்படனும்
இது விசயத்தில் நியாயமான அணுகுமுறை தேவை

நம்முடைய நாட்டை பொறுத்தவரை அமைதிக்கு பெரும் ஆபத்தாக இருப்பது,. இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து இன்று வரை பெரும் சவாலாக இருப்பது மதவெறி.
தேசத் தந்தை காந்தியடிகளில் தொடங்கி குஜராத கலவரங்கள் வரை மதவெறி நாட்டை பெரும் இழுவுக்கு கொண்டு சென்றுள்ளது.
மதவெறிக்கு எதிரான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.

தீவிரவாத்தைப் பற்றி பேசுகிற பிரதமர் அமைச்சர்கள் பிரமுகர்கள் எவரும் மதவெறியை பற்றி வாய்திறப்பதில்லை.
இது விச்யத்தில் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை.
அதன் எதிர் விளைவாக நாட்டில் அமைதி பாழ்படுகிறது.

கடும் கோடையில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து கொண்டிருக்கிற உட்டி இப்போது சூடாகியிருக்கிறது.

காரணம் இந்து முன்னணி பிரமுகர் மஞ்சுநாத்தின் வெறுப்பூட்டும் பேச்சு.
காவல் துறை அப்போது நடவடிக்கை எடுப்பதில்லை. அது எதிர் விளைவை ஏற்படுத்தியதும் முஸ்லிம்கள் மீது தாராளமாக நடவடிக்கையில் இறங்குகிறது.

அஸதுத்தீன் உவைஸீயின் மீது நடவ்டிக்கை எடுத்த காவல் துறை பிரவீன் தொக்காடியாவின் மீது என்ன நடவ்டிக்கை எடுத்தது.

பள்ளிவாசல் சுவற்றில் போஸ்டர் வந்த்தனால் தகறாறு. போஸ்டர் ஒட்ட வந்தவர்களை விட்டு விட்டது. அடிதடி என்ற பெயரில் 12 பேரை கைது செய்தது.  

இன்னொரு மத்த்த்தை இழுபடுத்துவது இன்னொரு சமூகத்தை கேவலப்படுத்துவதும் அழிக்க முயற்சி செய்வதும் சமூக அமைதியை வெகு சீக்கிரம் பாதித்துவிடும்.

முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும்
·         சட்டத்தின் உதவியை நாட வேண்டும். பதில் நடவடிக்கை பிரச்சினையை பெரிது படுத்துகிறது. நம்மை குற்றவாளியாக்குகிறது. ஒரு உன்னதமான சமுதாயம் இன்று தலைகுனிவுக்கு உள்ளாக்கப் பட்டிருப்பது. முறையற்ற பதில் நடவடிக்கையினால் ஆகும்.
·         உண்மையான போராளிகளுக்கு பொறுமையும் நிதானமும் நேர்மையும் அவசியம். தன் முகத்தில் துப்பிய எதிரியின் நெஞ்சிலிருந்து அலி (ரல்) எழுந்திருத்தார்கள் எனில் அதில் எவ்வளவு நிதானம் தெரிகிறது.
·         முஸ்லிம்களுக்கு நிகராக இந்துக்களுக்கு தண்டனை கிடைக்கிறதா என்ற கேள்வி நியாயமானதாக இருந்தாலும். எதார்த்தம் அப்படி இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த நிலையை மாற்ற சட்டப் போராட்டமே பலன் தரும்.
·         ஒவ்வொரு சமூக விரோத பேச்சையும் பகிரங்கப்படுத்த அரசின் கவனத்திற்கு கொண்டு வர முயற்சி செய்ய வேண்டும்.
·         சமூக அமைதியை குலைக்கிற பேச்சை நீதிமன்றங்களுக்கு எடுத்துச் சென்று குறைந்த பட்சம் காவல் துறை என்ன நடவடிக்கை எடுத்த்து என்று கேட்க வேண்டும்
·         முஸ்லிம்கள் நீதி தவறக் கூடாது. பெருமானார் (ஸ்ல) அவர்கள் சொன்னார்கள்.
من مشي ظالما ليعنه وهو يعلم انه ظالم فقد خرج من الإسلام – جامع الأحاديث  
·         சமூக அமைதியை பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

அமைதியாக இருக்கிற தமிழகத்தில் சமூக பதற்றத்தை உருவாக்க சில சக்திகள் முயற்சி செய்கின்றன.

காவல் துறைக்கு முஸ்லிம் அமைப்புக்கள் மேலிருக்கிற அதிருப்தியினால் முஸ்லிம்களுக்கு எதிராக செயல்பட வேண்டாம் நீதி தவற வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க எங்களால் இயன்ற ஒத்துழைப்பை வழங்குவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

ஒரு நகரம் அமைதியாக இருப்பது அல்லாஹ்வின் அருள் என்று கூறுகிற திருக்குர் ஆன் அந்த அருளை புரிந்து கொள்ளாமல் நடக்கிற மக்கள் பசியையும் பயத்தையும் சுவைக்க நேரிடும் என்று எச்சரிக்கிறது. .
وَضَرَبَ اللَّهُ مَثَلًا قَرْيَةً كَانَتْ آمِنَةً مُطْمَئِنَّةً يَأْتِيهَا رِزْقُهَا رَغَدًا مِنْ كُلِّ مَكَانٍ فَكَفَرَتْ بِأَنْعُمِ اللَّهِ فَأَذَاقَهَا اللَّهُ لِبَاسَ الْجُوعِ وَالْخَوْفِ بِمَا كَانُوا يَصْنَعُونَ(112)



No comments:

Post a Comment