வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, April 11, 2013

உமர் பின் அப்துல் அஜீஸ் (ரஹ்) – முதலாம் நூற்றாண்டின் முஜத்தித்


تِلْكَ الدَّارُ الْآَخِرَةُ نَجْعَلُهَا لِلَّذِينَ لَا يُرِيدُونَ  عُلُوًّا فِي الْأَرْضِ وَلَا فَسَادًا وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِينَ
முஸ்லிம் சமூகத்தின் சமீபத்திய வாழ்வியல் போக்கில் முன்னோர்கள என்ற வார்த்தையை அசூசையான ஒரு சொல்லாக சிலர் மாற்றி விட்டனர்.

ஆனால், தங்களது தற்போதைய தலைவர்களின் பேச்சை ரசிக்கலாம் வாதாடும் திறனை பாராட்டலாம். ஆனால் ஈமானுக்கும் இஸ்லாமிற்கும் அவர்களை முன்னுதாரமாக கருத முடியாது என்ற நிலையிக்கு இயக்கம் அமைப்புக்களை சார்ந்தவர்களே முன்னோர்கள் நல்லோர்களின் வரலாறுகளை நாடி வந்து விட்டார்கள்.

முன்னோர்களின் வாழ்க்கையும் வரலாறும் நமது ஈமானிய வாழ்க்கைகும் இவ்வுலக வாழ்க்கைகும் முன்னுதாரனமாக திகழக்கூடியது. அதிலுள்ள பாடங்களும் படிப்பினைகளும் நம்மை கரை சேர்க்க கூடியவை.

கடலில் த்த்தளிக்க கூடியவ்னுக்கும் ஒரு கட்டுமரம் கிடைப்பது எப்படியோ அது போல வாழ்க்கை கடலில் நம்மை கரை சேர்க்க உதவும் கட்டுமரங்களாக் முன்னோர்களின் வரலாறுகள் அமைந்திருக்கிற்ன்றன்.

அவர்களை மதிக்கவும் அந்த வரலாறுகளை படிக்கவும் நாம் அக்கறை செலுத்த வேண்டும் அந்த வகையில் ஒரு வரலாற்றுக் குச் சொந்தக் கார்ர்க் உமர் பின் அப்துல் அஜீஸ் (ரஹ்)

அன்றைய உலகின் மிகப்பெரிய வல்லரசை 2 ½ வருடங்கள் தான் ஆட்சி செய்தார் ஆனால் வரலாற்றில் ஆழமாகவும் அழுத்தமாகவும் தடம் பதித்தார்.

அவருக்கு கிட்த்த சிறப்பு பெயர்கள்
·         இரண்டாம் உமர்
·         ஐந்தாவது கலீபா
·         முதல் நூற்றாண்டின் முஜத்தித்

உமர் பின் அப்துல் அஜீஸ் அவர்களோடு ஒப்பிடுகையில் நாமெல்லாம் மிகச் சாதாரண நிலையில் வாழ்கிறோம்.  - நாம் சுல்தான்களாக இருந்தால் கூட –அவரைப் போன்ற சுல்தானாக இருக்க முடியாது.

ஒரு கோடியே முப்பத்தியிரண்டு இலட்சம் சதுர கிலோ மீட்டர் கொண்ட உமைய்யா ஆட்சியின் சக்ரவர்த்தி அவர். இன்றைய 37 நாடுகள் அவரது ஆட்சியின் குடையின் கீழ் இருந்தனா. ஆனால் மான்புக்கும் மகத்தான பெருமைக்கும் சொந்தக்கார்ர் அவர்.
அவர் காலத்தில் மக்கள் மிகுந்த செழிப்போடு வாழ்ந்தார்கள் என்று வரலாறு சொல்கிறது. ஜகாத்தை பெறுவதற்கு ஆளில்லை
عن يحيى بن سعيد قوله (بعثني عمر بن عبد العزيز على صدقات افريقيا فاقتضيتها وطلبت فقراء نعطيها ايها لهم فلم نجد فيها فقيرا ولم نجد من يا خذها منا وقد اغنى عمر بن عبد العزيز الناس فاشتريت بها رقابا فأعتقتهم

அவரது பெறுமைகளுக்கு ஒரு முக்கிய காரணம் முஸ்லிம் அரசாங்கத்தின் ஆட்சியதிகாம் மிக மோசமான ஒரு சூழ்நிலைக்கு போயிருந்த நிலையில் அதை மிகச் சிறந்த நிலைக்கு மீட்டு வந்தார்.

அலி ரலி அவர்களுக்குப்பிறகு இஸ்லாமிய ஆட்சி தடம் மாறியது. மக்களாட்சி மன்னராட்சியாக மாறியது. உமய்யா அரச்வம் ஆட்சி செய்த்தது. மன்னர்கள் மக்களை அடக்குமுறை ஆட்சி செய்பவர்களானார்கள். மன்னரது குடும்பம் மக்களது சொத்துக்களையும் நாட்டின் பொதுச் சொத்துக்களையும் சுரண்டி  சுகவாழ்வில் திழைத்த்து.

ஹிஜ்ரி 61 ம் ஆண்டு உமர் பின் அப்துல் அஜீஸ் (ரஹ்) மதீனாவில் பிறந்தார். இவருடைய தாய் லைலா அம்மையார் உமர் பின் கத்தாப் (ரலி) யின் மகன் ஆஸிமின் மக்ளாவார்.
، ويرجع نسبه من أمه إلى عمر بن الخطاب حيث كانت أمه هي أم عاصم ليلى بنت عاصم بن عمر بن الخطاب وبذلك يصبح الخليفة عمر بن الخطاب جد الخليفة عمر بن عبد العزيز

மதீனத்து அறிஞர்களிடம் கல்வி கற்று மிகச் சிற்ப்பாக வளர்ந்தார்.  அவரது அறிவும் திறனும் ஒழுக்கமும் பாராட்டிற்குரியதாக இருந்த்து.

. وقد تلقى علومه وأصول الدين على يد صالح بن كيسان في المدينة المنورة واستفاد كثيراً من علماءها

அப்போதைய இஸ்லாமிய அரசாங்கத்தின் தலை நகராக திமஸ்க் டமாஸ்கஸ் இருந்த்து. உமர் பின் அப்துல் அஜீஸின் சிறிய தந்தை அப்துல் மலிக் பின் மர்வான் மன்னராக இருந்தார். மன்னர் தனது சகோதர்ர் மகானான உமரை டமாஸ்கஸுக்கு அழைத்து தனது மகளை திருமணம் செய்து வைத்தார்.

மனவியை சந்தித்த முதல் நிமிட்த்திலேயே அவரது ஆப்ரணங்கள் கலைந்து விடுமாறு சொன்னார். அது பொதுச் சொத்து நமக்கு தேவையில்லை என்றார். ஒரு மன்னரின் மகளாக இரண்டு அரசர்களின் சகோதரியாக இருந்த அந்த அம்மையார் தனது நகைகளை பைத்துல் மாலுக்கு வழங்கினார்.

ஹிஜிர் 89 ல் மதீனாவின் கவர்னராக நியமிக்கப்பட்டார். 91 ல் முழு ஹிஜாஸின் பொறுப்பும் சேர்த்து தரப்பட்ட்து.
மதீனாவின் ஆளுநராக பொறுப்பேற்க மூன்று நிபந்தனைளை விதித்தார்

1.   மக்களிடம் நீதமாகவே நடந்து கொள்வேன். பைத்துல் மாலுக்காக மக்களிடமிருந்து அநீதமாக பணம் பறிக்க மாட்டேன். இதனால் மதீனாவிலிருந்து அரசருக்கு வர வேண்டிய தொகை குறைய வாய்ப்பு உணடு.
2.   இதுவரை ஹஜ்ஜு செய்யாத காரணத்தால் பொறுப்பேற்ற முதல் வருடம் ஹஜ்ஜு செய்ய அனுமதிக்க வேண்டும்
3.   மக்களுக்காக  செலவிடும் தொகைகளை அனுமதிக்க வேண்டும்.  
அவருக்கு அனுமதி தரப்பட்ட்து. அதன் பிறகே பொறுப்பேற்றுக் கொண்டார்.

மதீனாவின் பொறுப்பை ஏற்றதுமே சட்ட அறிஞர்களின் பத்து பேரை தேர்ந்தெடுத்து மஜ்லிஸ் ஷூரா அமைத்தார்.

அவரே பெரிய சட்ட அறிஞராக பக்தியாளராக இருந்தார்.

இமாம் மாலிக் சுப்யான் பின் உயையானா போன்ற அறிஞர்களே அவரை இமாம் என்று குறிப்பிடுகிறார்கள்.
. اتفقت كلمة المترجمين على أنه من أئمة زمانه، فقد أطلق عليه كل من الإمامين: مالك وسفيان بن عيينه وصف إمام،
 அவருக்கு நாங்கள் கல்வி கறிபிக்க செல்வோம்; ஆனால் நாங்கள் தான் அவரிடமிருந்து கற்று வருவோம் என்று முஜாஹித் கூறுகிறார்.
وقال مجاهد: أتيناه نعلمه فما برحنا حتى تعلمنا منه،
وقال ميمون بن مهران: كان عمر بن عبد العزيز معلم العلماء،
நீதியை நிலை நாட்டுவதில் உமர் (ரலி) யோடும் பக்தியில் ஹஸனுல் பஸரி அவர்களோடும் கல்வியில் ஜுஹரி அவர்களோடும் ஒப்பிட்ட்த்தகுந்தவர் என்று தகபி கூறுகிறார்.
قال فيه الذهبي: يعد في حسن السيرة والقيام بالقسط مع جده لأمه عمر، وفي الزهد مع الحسن البصري وفي العلم مع الزهري.

மதீனாவின் ஆளுநராக் இருந்த அவரை மன்னர் சுலைமான் பின் அப்துல் மலிக் தனது அரசில் அமைச்சராக உயர்த்தினார். பக்கத்தில் வைத்துக் கொண்டார். மன்னர் சுலைமானுக்கு அவர் மீது தனி மரியாதை இருந்த்து. ஒரு தலை சிறந்த அமைச்சராக மன்னரை நெறிப்படுத்துவராக உமர் இருந்தார்.

மன்னர் சுலைமான் ஹஜ்ஜுக்குச் சென்ற போது உமரும் உடன் சென்றார். அரபாவின் கூட்ட்த்தை பார்த்த மன்னர் எவ்வளவு கூட்டம்! அல்லாஹ்வுக்குத்தான் இதன் எண்னிக்கை தெரியும் என்று சொன்னார். உமர் சொன்னார் இன்று உங்களது மக்களாக இருக்கிற இவர்கள் நாளை உங்களுக்கு எதிராக வழக்குத் தொடுப்பவர்களாக அல்லஹ்வின் முன்னிலையில் நிற்கக் கூடும் என்றார். திடுக்கிட்ட மன்னர் சுலைமான் அழுதார். அரசர்கள் மக்களை நினைத்து அழுவதெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத காலம் அது.
قيل إن سليمان بن عبد الملك حج فرأى الخلائق بالموقف فقال لعمر: أما ترى هذا الخلق لا يحصي عددهم إلا الله ؟ قال: هؤلاء اليوم رعيتك، وهم غداً خصماؤك. فبكى بكاءً شديداً  

மன்னர் சுலைமான் மரணப்படுக்கையிலிருந்த போது தனக்கு அடுத்த ஆட்சித்தலைவரைப் பற்றிய செய்தியை (வஸிய்யத்) ஜும் ஆவில் படிக்க ஏற்பாடு செய்திருந்தார். அவரது மகன் வலீது அடுத்த ஆட்சியாளராக அறிவிக்கப்படுவதுதான் வாடிக்கை

ஆனால் வஸிய்யத் வாசிக்கப்பட்ட்து. தொழுகையாளியாக வந்திருந்த உமர் பின் அப்துல் அஜீஸின் பெயரை வாசிக்கப் பட்ட்து,

அப்போது உமர் பின் அப்துல் அஜீஸீன் வாயிலிருந்து வந்த வார்த்தை ; إنا لله وإنا أليه راجعون

(பதவிகளுக்காக இன்று நாம் எப்படி எல்லாம் சண்டையிட்டுக் கொள்கிறோம். வரலாறு யாரை நினைவில் வைத்திருக்கிறது பாருங்கள்!

உம்ர் பின் அப்துல் அஜீஸ் சொன்னார். எனது வாகனமே எனக்கு போதுமானது. எனது கூடாரமே எனக்கு மேல். دابتي كفايتي ، وفسطاطي اوسع لي

இது எனது ஆலோசனை இல்லாமல் முடிவு செய்யப்பட்டிருக்கிறது,. மக்களே உங்களுகு பிரியமானவரை நீங்கள்  தேர்வு செய்து கொள்ளுங்கள்.

மக்கள் சத்தமிட்டனர் எங்களுக்கு நீங்கள் தான் வெண்டும்.

قام فيهم خطيبًا، فحمد الله ثم أثنى عليه وصلى على نبيه ثم قال: أيها الناس إني قد ابتليت بهذا الأمر على غير رأي مني فيه ولا طلب له... ولا مشورة من المسلمين، وإني خلعت ما في أعناقكم من بيعتي، فاختاروا لأنفسكم خليفة ترضونه. فصاح الناس صيحة واحدة: قد اخترناك يا أمير المؤمنين ورضينا بك، فَوَّلِ أمرنا باليمن والبركة.  

அமைச்சராக இருந்த போது மன்னர் சுலைமானை அழ வைத்தவர். தான் அரசரானவுடன் மாறிவிட்வில்லை.

ஆட்சிப்பொறுப்பேற்ற அன்று அழுதவர்
மக்களுக்காக என்னிடம் வழக்காடுபவராக பெருமானார் (ஸ்ல) அவர்களை கான்பேனே! என்ன பதில் சொல்வேன்.

وعن عطاء بن أبي رباح قال: حدثتني فاطمة امرأة عمر بن عبد العزيز: أنها دخلت عليه فإذا هو في مصلاه، سائلة دموعه، فقالت: يا أمير المؤمنين، ألشئ حدث؟ قال: يا فاطمة إني تقلدت أمر أمة محمد صلى الله عليه وسلّم فتفكرت في الفقير الجائع، والمريض الضائع، والعاري المجهود، والمظلوم المقهور، والغريب المأسور، وذي العيال في اقطار الأرض، فعلمت أن ربي سيسألني عنهم، وأن خصمي دونهم محمد صلى الله عليه وسلم، فخشيت أن لا تثبت لي حجة عن خصومته، فرحمت نفسي فبكيت.

ஆட்சியில் அமர்ந்த்தும் முதல் நடவடிக்கை
பொதுச் சொத்துக்கள் அனைத்தையும் அரசு கஜானாவிற்கு அனுப்பினார். முதலில் தனது குடும்பத்திலிருது ஆரம்பித்தார். தனக்கு தரப்பட்ட சாரட் வண்டியை மாளிகை உதறினார்ன்.
மன்னர் குடும்பத்தினர் வைத்திருந்த சொத்துக்களை திருப்பி அளிக்க உத்தரவிட்டார். மக்களிடமிருந்து பறீக்கப்பட்ட சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டால் உரியவர்களுக்கும் இல்லை எனில் கருவூலத்திற்கும் கொடுக்க உத்த்ரவிட்டார்.
அரச் குடும்பத்திற்கான மானியங்களை நிறுத்தினார்.
அரச பணியில் உள்ளவர்கள் வேலை செய்தால் மட்டுமே சம்பள பெற முடிய்ம் என்றார்,

أهم أعماله
·        بدأ بنفسه فجردها من كل نعيم زائل, وأعاد الأراضي والأموال التي وهبت له ولزوجته و أولاده إالى بيت مال المسلمين ,وطلب من بني أمية إرجاع ما أخذه من بيت مال المسلمين بدون وجه حق.
·        عزل الولاة الظالمين , وعين بدلا منهم ولاة عرفوا بالتقوى والصلاح وحسن السيرة
·        أسقاط الجزية عمن أسلم من أهل البلدان المفتوحة, فكتب أحد عمّاله أن هذا يض بخزينة الدولة فقال له عمر"ارفع الجزية عمن أسلم فإن الله بعث محمداً هادياً ولم يبعثه جابياً"
·         أهتم بالنواحي الأقتصادية مثل أصلاح كثير من الأراضي الزراعية, وأقراض المزارعين ,وحفر الأبار ,وشق الطرق ,وتوحيد المكاييل و الموازين في جميع أنحاء الدولة الأموية.


அவரது ஆட்சியின் விளைவாக எதிரிகள் குறைந்தனர். இஸ்லாம் வளர்ந்த்து.

نتائج سياساته
  • اعتناق كثير من الناس الأسلام , لما عرفوا عدله بين الناس, وإيقافة الكثير من الحروب, ومكاتبته الملوك والدعوة إلى الأسلام بالحكمة والموعظة الحسنة]
  • قل نفوذ المعارضين للحكم الأموي.
·         تحسنت احوال المسلمين وارتفع مستواهم المعيشي وانعدام وجود الفقراء

வாழ்க்கையில் நீதி
சமுதாயத்திற்காக ஒரு செய்தியை எழுதும் போது பைத்துல் மாலின் விளக்கையும்; தனது சொந்த விவகாரங்களை எழுதும் போது சொந்த விளக்கையும் பய்னப்டுத்தினார்.
عندما كان يكتب للشعب كان يضيء شمعة من بيت المسلمين وعندما كان يكتب أمورا خاصة به كان يضيء شمعة من ماله.
குடும்பத்தை அதிகாரத்திலிருந்து  ஒதுக்கி வைத்தவர்.
அரசுக்கு சொந்தமான பழக்கூடையிலிருந்து சிறுவயது மகன் ஒரு பழத்தை எடுத்துச் சாப்பிட்ட போது அதை பறித்துப் போட்டார்.

·        فتناول ابن له صغير تفاحة، فأخذها من فمه، وأوجع فمه فبكى الطفل الصغي وقال: والله لقد انتزعتها من فم ابني وكأنما أنتزعها من قلبي، لكني كرهت أن أضيع نفسي بتفاحة من فيْء المسلمين قبل أن يُقَسَّم الفَيءُ
 
இத்தகைய நீதிமிக்க ஆட்சி கலீபாக்களின் ஆட்சிக்குப் பிறகு உமர் பின் அப்துல் அஜீஸ் அவர்களின் ஆட்சிக்காலத்தில் தான் நிலவியது என்பதால் அவர் ஐந்தாம் கலீபா என்று அழைக்கப்படுகிறார். (உணமையில் அலி (ரலி) க்குப் பிறகு 8 வது ஆட்சித்தலைவர் ஆவார்)  

மார்க்கத்திற்கு ஆற்றிய பணி
·         கல்வி வளர்ச்சி பெருகியது. நிறைய பள்ளிவாசல்கள் கட்டப்பட்டன.
·         திருக்குர் ஆன் மன்னத்திற்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்ட்து.
·         அவரது காலத்தில் ஷியாக்களை எதிர்ப்பதாக் நினைத்துக் கொண்டு அலி (ரலி) அவர்களை திட்டும் வழக்கம் இருந்த்து. அதை அறவே தடை செய்தார்.
·         ஜும் ஆ குத்பாவில் நான்கு கலீபாக்களது பெயரையும் கூற முதன் முதலாக ஏற்பாடு செய்தவர் இவரே
·         ஜும் குத்பாவின் முடிவில் إن الله يأمر بالعدل والإحسان    ஓதுவதற்கு உத்தரவிட்டவர் இவரே!
·         இவரது உத்தரவின் படி தான் ஹதீஸ் முதன் முதலாக் தொகுக்கப் பட்டது. . أبو بكر بن محمد بن حزم - ابن شهاب الزهري ஆகிய இருவரையும் ஹதீஸ்களை தொகுக்குமாறு பணித்தார். இதன் பின் தொடர்ச்சியாக ஹதீஸ் நூல்கள் தொகுக்கப்பட்டன. தப்ஸீர் நூல்கள் எழுதப்பட்டன.
·         இந்த அற்புதமான பணிகளுக்கு இவர் காரண கர்த்தாவாக இருந்த்தால் ஹ்ஜிரி முதலாம் நூற்றாண்டின் முஜத்தித் சீர்திருத்தவாதி என்று போற்றப்படுகிறார்.

·        عمر بن عبد العزيز هو المجدد الأول للأمة مصداقاً لحديث رسول الله ((إن الله يبعث لهذه الأمة على رأس كل مائة سنة من يجدد لها دينها

உமர் பின் அப்துல் அஜீஸ் (ரஹ்) 21 தீனார் விட்டுச் சென்றார். அடக்கச் செலவுக்கு போக 11 தீனார் மிச்சமானது அது அவ்ருடைய 11 ஆண்மக்களுக்கு பங்கு வைக்கப் பட்டது.
உங்களது பிள்ளைகளுக்கு என்ன வைத்துச் செல்கிறீர்கள் என்று அவரிடம் கேட்கப்பட்ட்து.
அவர்கள் நல்லவர்களாக இருப்பின் அவர்களுக்கு அல்லாஹ் போதுமானவன்
கெட்டவர்களாக இருப்பின் அவர்களைப் பற்றி நான் கவலைப்பட்த் தேவையில்லை என்று சொல்லி விட்டு இந்த ஆயட்த்தை ஓதினார்,

إِنَّ وَلِيِّي اللَّهُ الَّذِي نَزَّلَ الْكِتَابَ وَهُوَ يَتَوَلَّى الصَّالِحِينَ
உமர் பின் அப்துல் அஜீஸி (ரஹ்) அவர்களை தொடர்ந்து இரண்டாவதாக ஆட்சிக்கு வந்த ஹிஷாம் பின் அப்துல் மலிக் தன் 11 மக்களுக்கு தலா 10 இலட்சம் வீதம் விட்டுச் சென்றார்.

அப்துர ரஹ்மான் பின் காஸிம்  என்பவர் கூறுகிறார்.
உமர் பின் அப்துல் அஜீஸின் மக்கள் ஒரு ஜிஹாதுக்கு 100 குதிரைகளை கொடுத்தனர்.  அப்பொது  ஹிஷாமின் மக்கள் பிச்சை எடுத்து திரிந்தனர்.

அல்லாஹ் நல்லவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் மறு உலகத்தில் மட்டுமல்ல இந்த உலகத்திலும் மரியாதையை கொடுக்கிறான்.

No comments:

Post a Comment