வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, April 04, 2013

விருப்பும் வெறுப்பும் அளவோடு


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு தடவை சொன்னார்கள்.

عَنْ أَبِي هُرَيْرَةَ أُرَاهُ رَفَعَهُ قَالَ أَحْبِبْ حَبِيبَكَ هَوْنًا مَا عَسَى أَنْ يَكُونَ بَغِيضَكَ يَوْمًا مَا وَأَبْغِضْ بَغِيضَكَ هَوْنًا مَا عَسَى أَنْ يَكُونَ حَبِيبَكَ يَوْمًا مَا – الترمذي  1920

இது ஒரு வாழ்வியல் பாடம்
நாம் இந்த உலகில் ஆயிரமாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து விடப் போவதில்லை.
நமக்கான காலம் சொற்பமே!
இந்த காலகட்ட்த்திற்குள் நமது வாழ்க்கையை பயனுள்ளதாக மகிழ்ச்சிகரமானதாக வைத்துக் கொள்வதற்கான அற்புதமான ஒரு வழிமுறையை இந்நபி மொழி கற்றுத்தருகிறது.

அன்போ வெறுப்போ அளவோடு இருக்க வேண்டும். இரண்டிலும் மனதை கட்டுக்குள் வைக்க பழகிக் கொள்ள வேண்டும்.

குடும்பத்தை நண்பர்களை தொழிலை நேசிக்கிறோம். எல்லாவற்றிலும் ஒரு எல்லை இருக்கிறது.

எல்லை கடப்பது என்பது இந்த நேசத்திற்காக தப்பானவற்றையும் செய்யத்துணிவதாகும்

இன்றைய நம்முடைய விருப்பமும் நேசமும் அது குடும்பமாக இயக்கமாக நடபாக எதுவாகவும் இருக்கட்டும் எல்லை கடந்த்தாகவே இருக்கிறது.

மனைவிக்கு பிரசவம் பார்க்க காசில்லை என்பதற்காக கடந்த வாரம் காரமடையில் மூன்று நபர்களை கொன்றான ஒருவன்.

இயக்கத்தலைவன் சொன்னால் எதையும் ஏற்றுக் கொள்கிற தொண்டர்கள்.

நமது வெறுப்பும் எல்லை கடந்து தான் வாழ்கிறது.

ஜனாஸாவைக் கூட பார்க்காத உறவுகள்.
போட்டியாளர்களைகளையும் எதிர்ப்பாளர்களையும் கூண்டோடு வெறுக்கிறோம்.

இந்தப் போக்கினால் நமது வாழ்கையின் மரியாதையும் மகிழ்ச்சியும் குறைந்து விடும்.

இந்த உலகில் நாம் எல்லை கடந்து நேசிக்கத்தக்கது ஒன்றே ஒன்று மட்டுமே
அது தான் அல்லாஹ்

முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் அபூபக்கர் சித்தீக ரலி அவர்களுக்கும் இடையே உள்ள நட்பு . உலகறிந்த்து.
இளமை முதல் முதுமை வரை இணைபிரியாத நட்பு

لما كانت الهجرة جاء رسول الله صلى الله عليه وسلم إلى أبي بكر وهو نائم فأيقظه فقال رسول الله صلى الله عليه وسلم «قد أذِنَ لي في الخروج»، قالت عائشة: فلقد رَأيت أبا بكر يبكي من الفرح، ثم خرجا حتى دخلا الغار فأقاما فيه ثلاثة أيام، قال تعالى: {إِلاَّ تَنصُرُوهُ فَقَدْ نَصَرَهُ اللَّهُ إِذْ أَخْرَجَهُ الَّذِينَ كَفَرُواْ ثَانِيَ اثْنَيْنِ إِذْ هُمَا فِى الْغَارِ إِذْ يَقُولُ لِصَاحِبِهِ لاَ تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا} (التوبة: 40).
وقد دلت هذه الآية على فضيلة أبي بكر لأن رسول الله لولا ثقته التامة بأبي بكر لما استصحبه في هجرته واستخلصه لنفسه وكل من سوى أبي بكر فارق رسول الله وأنه تعالى سماه ثاني اثنين، وكان النبي صلى الله عليه وسلم يكرمه ويجله ويعرّف أصحابه مكانه ويثني عليه في وجهه، واستخلفه في الصلاة وشهد مع رسول الله صلى الله عليه وسلم بدراً وأُحُداً والخندق وبيعة الرضوان بالحديبية وخيبر وفتح مكة وحنيناً والطائف وتبوك وحجة الوداع.

தவ்ர் குகையிலிருந்த ஓட்டைகளை தனது துணியை கிழித்து அடைத்த அபூபக்கர் ரலி அவர்கள் ஒரு ஓட்டையை அடைக்க துணி கிடைக்காத நிலையில் தனது கால் பாத்த்தை வைத்து அந்த ஓட்டை அடைத்தார்.

ஹிஜ்ரத்தின் போது பெருமானாரின் பசியை போக்க வெளியே சென்று பால கறந்து வந்து கொடுத்தார் அபூபக்கர் (ரலி) பெருமானார் (ஸல்) குடித்தார்கள்,
அபூபக்கர் (ரலி) சொன்னார் : பெருமானார்(ஸல்) குடித்தார்கள், என்னுடைய தாகம் தணிந்த்து.

பெருமானாருக்கு அபூபக்கர் (ரலி அவர்கள் மீது அதிக பாசம் இருந்த்து. எனினும் பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்,

قال رسول الله صلى الله عليه وسلم «لو كنت متخذاً خليلاً لاتخذت أبا بكر خليلاً»،.
கலீல் எனில் இதயத்தில் வெறெவருக்கும் இடம் கொடாத நட்பு என்று பொருள்.

மனிதர்கள் அத்தகைய நட்பை செலுத்துவதற்கு தகுதி படைத்தவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே!

அல்லாஹ்வை தவிர வேறு எந்த நட்பும் எல்லை கடக்க அனுமதிக்கப் பட்டதல்ல.
                                      
நாம் .அறவே வெறுக்கத்தக்கது ஷிர்க்
நெருப்பில் விழுவதை விடவும் கடுமையாக ஷிர்கை கருத வேண்டும்.

இந்த இரண்டை தவிர மற்ற விருப்பும் வெறுப்பும் ஒரு நிதனத்தோடுதான் இருக்க வேண்டும்.

அதற்கான இரண்டு காரணங்களை அல்லாஹ் சொல்கிறான்.

1.   காலம் மாறக்கூடும். கால ஓட்ட்த்தில் என்னவும் நிகழலாம். 

كُتِبَ عَلَيْكُمْ الْقِتَالُ وَهُوَ كُرْهٌ لَكُمْ وَعَسى أَنْ تَكْرَهُوا شَيْئًا وَهُوَ خَيْرٌ لَكُمْ وَعَسَى أَنْ تُحِبُّوا شَيْئًا وَهُوَ شَرٌّ لَكُمْ وَاللَّهُ يَعْلَمُ وَأَنْتُمْ لَا تَعْلَمُونَ(216)  البقرة

2.      நாம் வெறுப்பதில் அல்லாஹ் நன்மையை வைத்திருக்க வாய்ப்புண்டு.

وَعَاشِرُوهُنَّ بِالْمَعْرُوفِ فَإِنْ كَرِهْتُمُوهُنَّ فَعَسَى أَنْ تَكْرَهُوا شَيْئًا وَيَجْعَلَ اللَّهُ فِيهِ خَيْرًا كَثِيرًا(19) النساء



அன்பிலும் நிதானம் தேவை. வெறுப்பிலும் நிதானம் தேவை
இன்றைய வாழ்க்கை முறையில் அன்பிலாவது ஓரளவு நிதானம் தெரிகிறது.

வெறுப்பில் நிதானம் அறவே இருப்பதில்லை. பல மோசமான விளைவுகளை இது ஏற்படுத்தி வாழ்க்கையை வெறுமையாக்கி விரக்தியும் கோபமும் அடையச் செய்கிறது. வாழ்க்கை பகை மயமாகிவிடுகிறது.

நட்போடு இருக்கிற வரை அவரை விட்டால் இவர் இல்லை என்று வாழ்கிறார்கள். பிரிந்து விட்டால பெயரை சொன்னால் கூட கோப்ப் படுகிறார்கள்.

அல்லாஹ் கூறுகிறான் .
வெறுப்பில் நீதி தவறிவிடாதீர்.

وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ عَلَى أَلَّا تَعْدِلُوا اعْدِلُوا هُوَ أَقْرَبُ لِلتَّقْوَى وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ(8)

ஹஜ்ஜாஜ் பின் யூசுப் எப்படிப்ப்பட்டவர் என்பது உலகறியும். ஏராளமான சஹாபாக்களை கொன்றவர்.

ஒரு முறை அவரைப் பற்றி அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) யிடம் ஒரு புறங்கூறினார்.
அப்துல்லாஹ் (ரலி சொன்னார்: ஹஜ்ஜாஜ் அக்கிரமக்கார்ர் என்பதால் அவரைப் பற்றி புறங்கூறுவது ஹலால் என்று நினைத்துக் கொள்ளாதே!

இன்றைய நமது சமூகத்தின் நிலை வெறுப்பின் உச்சத்தில் வாழ்கிற மக்கள் எதிர்ப்பாளர்களை என்னவும் பேசவும் ஏசவும் எப்படியும் ஊறு விளைவிக்கவும் செய்து விடுகிறார்கள்.

எச்சரிக்கை அன்பும் வெறுப்பும் நிலையானது அல்ல, அல்லாஹ் கூறுவது போல மாறிவிடக்கூடியது.

இதை புரிந்து வைத்திருப்பவர்களே புத்திசாலிகள்

இமாம் தாஹாவியினுடைய உஸ்தாது قاضي بكار بن قتيبة    அவர் காலத்து அரசருக்கு மிக நெருக்கமானவராக இருந்தார். அரசரின் எல்லா சபையிலும் அவர் இருப்பார். நாட்டின் தலைமை நீதிபதியாகவும் ஆனார்.
ஒரு முறை ஒரு தீர்ப்பை அரசருக்கு மாற்றமாக கூறினார். பதவி பறி போனது. அரசர் அவர் வீட்டுக்கு ஆள் அனுப்பி அரச்ரிடமிருந்து  பெற்ற வெகுமதிகளை திருப்பி தருமாறு கேட்டார். காஜி பக்கார் பின் குதைபா பதறிப்போவார், பணிந்து விடுவார் என்று அரசர் நினைத்தார்.
காஜி பணியாளரை வீட்டின் உள் அழைத்துச் சென்று ஒரு அறையின் கதவை திறந்தார். அரசர் கொடுத்த வெகுமதிகள் அனைத்தும் பொட்டலங்களாக அவ்வறையில் இருந்தன.  அவற்றை எடுத்தும் போகும் படி சொன்னார்.
என்று அரசரின் தொடர்பு ஏற்பட்ட்தோ அன்று பெருமானாரின் பொன் மொழி
أَحْبِبْ حَبِيبَكَ هَوْنًا مَا عَسَى أَنْ يَكُونَ بَغِيضَكَ يَوْمًا مَا وَأَبْغِضْ بَغِيضَكَ هَوْنًا مَا عَسَى أَنْ يَكُونَ حَبِيبَكَ يَوْمًا مَا  நாபகத்திற்கு வந்த்து. அல்ஹம்துலில்லாஹ் என்றார் காழி பக்கார்

நட்பின் தூண்டுதலால் பாவமான காரியங்களில் ஈடுபடுவதும் .வெறுப்பின் உச்சத்தில் நீதி தவறுவதும் இன்று சகஜமாகி இருக்கிறது.

இந்த இரண்டு இயல்புகளும் வாழ்க்கையில் நிம்மதியை பறித்து விடக்கூடியவை மறுமையில் சொர்க்கத்தை தடுத்து விடக்கூடியவை.

அல்லாஹ் ரஸூலின் வழி காட்டுதலின் அடிப்படையில் ஒன்றின் மீது நேசமும் அதே அடிப்படையில் இன்னொன்றின் மீது வெறுப்பும் வைத்தால் நட்பும் வெறுப்பும் தடம் புரளாது.

No comments:

Post a Comment