வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, August 08, 2013

ஈதுல் பித்ர் சிந்தனை 2013 - இறைவா எங்களை காபிர்களின் சதிக்களமாக ஆக்கிவிடாதே!


رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِلَّذِينَ كَفَرُوا وَاغْفِرْ لَنَا رَبَّنَا إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ
 
அனைவருக்கும் இனிய ஈகைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்

تقبل الله طاعتكم، ، نسأل الله تبارك وتعالى أن يهل هلال هذا العيد علينا وعلى المسلمين بالأمن والإيمان، والسلامة والإسلام، والتوفيق لما يحب ويرضى، وأن يجعل هذا العيد بشير خير وبركة على الأمة الإسلامية، وأن يجعله نذير وبال وحسرة على أعداء هذه الأمة

அல்லாஹ் நமக்கு ஹிதாயத் செய்தான். இஸ்லாமிய வாழ்வு நமக்கு கிடைத்திருக்கிறது.

வாழ்க்கையில் கிடைப்பதற்கரிய பெரிய நி`மத் இது. இதை கடைசி மூச்சு வரை பாதுகாக வேண்டும்.

இன்றைய பெருநாளின் மகிழ்ச்சியான பொழுதில் நாம் நினைவில் நிறுத்த வேண்டிய செய்தி இது.   

இந்த தீனில் சந்தேகமோ சஞ்சலோ ஏற்படாமல் அல்லாஹ் நம்மை காபானாக! குழப்பத்திற்கோ பிரிவினைக்கோ ஆளாகாமலும் அல்லாஹ் நம்மை காப்பானாக்!

முஹம்மது நபி (ஸ்ல்) வர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்திப்பார்கள்.

للهم إني أعوذ بك من الشك والشرك والشقاق والنفاق والسمعة والرياء وسوء الأخلاق وسوء المنظر والمنقلب في الأهل والمال والولد.

அல்லாஹ் ஹிதாயத்தை தன்வசம் வைத்துக் கொண்டான். அவன் விரும்பியவர்களுக்கு மட்டுமே ஹிதாயத் கிடைக்கிறது.

பிலால் (ரலி) இவ்வாறு  பிரார்த்தனை செய்வார்கள்

இறைவா! உனக்கே புகழனைத்தும்.  ஹிதாயத்தை உன்னிடம் வைத்துக் கொண்டாய்!. ஹிதாயத் கொடுக்கும் உரிமை மக்களிடம் இருந்திருக்குமானால் என்னைப் போன்ற தோற்றமுடையவர்கள் ஹிதாயத்தைப் பெற்றிருக்க முடியாது,

அல்லாஹ் தான் வழி காட்டி என்று உறுதியாக நம்புகிறவக்ர்களுக்கு அல்லாஹ்வ்ன் எந்த நிலையிலுன் வழி காட்டுவான்

பஞ்சம் வாட்டிய போது அடுத்தவன் விளை நிலத்தில் திருடலாம் என  நினைத்த ஒரு  தந்தை நாலாபுறமும் பார்த்து விட்டு திருட்டுத்தனமாக கதிர்களை அறுக்க ஆரம்பித்தான். அவனைச் சுரண்டி மகன் சொன்னான். அத்தா நீ மேலே பார்க்கவில்லையே!
மகனை உச்சி முகர்ந்து வாழ்த்திய தந்தை திருட்டை விட்டு விட்டு வீடு திரும்பினான்.

அல்லாஹ் ஆச்சரியமளிக்கும் வகையில் ஹிதாயத்தை வழங்குகிறான்

·         நூஹ் நபியின் மனைவிக்கு ஹிதாயத்தை தரவில்லை. பிர் அவ்னின் மனைவிக்கு கிடைத்தது
·         அபூஜஹ்லை அல்லாஹ் தேர்ந்தெடுக்கவில்லை இக்ரிமாவை(ரலி) தேர்ந்தெடுத்தான்.
இக்ரிமாவின் ஈமான் ஆச்சரியமானது. யர்மூக யுத்த்த்தில் தீரத்துடன் போரிட்டார்.
போர்க்களத்தில் உயிர் ஊசலாடிக்கொண்டிருந்த நிலையில் தண்ணீர் தாகம் எடுத்த நிலையில் அடுத்த சஹாபிக்கு கொடுக்குமாறு நபித்தோழர்கள் சொன்னார்கள் என்று நாம் பேசுகிறோமா அந்த சஹாபி வேறு யாருமில்லை இக்ரிமா தான்,

·         உத்பாவை தேர்ந்தெடுக்கவில்லை அவருடை மகன் அபூஹுதைபா (ரலி) அவர்களுக்கு ஹிதாயத் கிடைத்த்து.
·         உகப்து பின் அபீ மூஈத் தை தேந்தெடுக்கவில்லை அவருடை மகள் உம்மு குல்சூம் (ரலி) அவர்களை ஈமானுக்கு அல்லாஹ் தேர்ந்தெடுத்தான்.
உம்மு குல்சூம் (ரலி) அவர்களுடை ஈமானும் ஆச்சரியமானது.
ஹுதைபிய்யா உடன்படிக்கைப் பிந்தைய அமைதியின் காலத்தில் ம்க்கா காபிர்களிடமிருந்து தப்பி தனியாகவே மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத செய்தார்.

وعندما بلغت المدينة، ولم تكن تعلم أن أخويها: الوليد وعمار قد انطلقا من مكة خلفها، فلم يمض يوم على استقرارها في المدينة حتى وصلا إلى المدينة وتقدما إلى النبي ليقولا له "أوف لنا بشرطنا وما عاهدتنا عليه"، فوقفت أم كلثوم بجرأة لتقول: " يا رسول الله أنا امرأة وحال النساء إلى الضعف ما قد علمت، أفتردني إلى الكفار يفتنونني في ديني ولا صبر لي" فجاءت فيها وفي النساء من مثل حالتها، سورة الممتحنة "إذا جاءكم المؤمنات مهاجرات فامتحنوهن" قال النبي صل الله عليه وسلم " قد أبطل الله العهد في النساء بما قد علمتاه"



ஹிதாயத் என்பது தீனை பெற்றுக் கொள்வதில் மட்டுமல்ல. வாழ்வின் அனைத்து பகுதிகளிலும் தீனின் பண்பாடுகளை கடைபிடிப்பதிலும் கிடைக்க வேண்டும்

சஹாபாக்களின் ஒரு வாழ்வை பாருங்கள்

அலி (ரலி) க்கும் முஆவியா (ரலி) க்கும் போர் நடந்து கொண்டிருந்த நிலையிக் ரோம் சக்ரவர்த்தி ஹிர்கல் முஆவியா (ரலி)க்கு ஒரு கடிதம் எழுதினான்


من قيصر الروم لمعاوية :
علمنا بما وقع بينكم و بين علي بن أبي طالب ، و إنّا لنرى أنكم أحق منه بالخلافة ، فلو أمرتني أرسلت لك جيشاً يأتون إليك برأس علي ..

முஆவியா ரலி அவர்கள்
பைஜாந்திய நாயிக்கு என்று விழித்து (to the  baizantin dog )
பின் வருமாறு  எழுதினார்கள்.

من معاوية لهرقل :
أخّان و تشاجرا فما بالك تدخل فيما بينهما !
إن لم تخرس أرسلت إليك بجيش أوله عندك و آخره عندي يأتونني برأسك أُقدِّمه لعلي
இரண்டு சகோதர்ர்களின் சண்டைக்குள் நீ ஏன் நுழைகிறாய்? நீ மொளனமாக இருக்காவிட்டால் இங்கிருந்து அது வரை நீளும் ஒரு படையை நான் அனுப்பு வேன். அவர்கள் உனது த்லையை என்னிடம் கொண்டு வருவார்கள். நான் அதை அலி (ரலி)க்கு அனுப்பி வைப்பேன்.

சஹ்பாக்களிடமிருந்து ஹிதாயத் அவர்கள் கருத்து வேறு பாடுபட்டு மோதிக் கொண்ட போதும் தீனின் விரோதிகளுக்கு இடம் கொடுக்காமல் காப்பற்றியது. எந்த நிலையிலும் தீனும் முஸ்லிம்களும் வளர்ந்தார்கள்.

ஆனால் இன்றுள்ள் நிலையை ஒப்பிட்டு பார்க்கிறோம்

முஸ்லிம்களின் வாழ்க்கையில் ஹிதாயத்தின் வெளிச்சம் குறைவாக இருக்கிறது.

1980 களுக்கு முன் சவூதியின் அரச குடும்பம் அமெரிக்க அதிபர் ட்ரூமனிடம் தங்களது க்டும்பத்தை பாதுகாப்பதற்காக ஒரு ஒப்பந்தம் போட்டுள்ளது. அமெரிக்கா சவூது குடும்பத்தை பாதுகாக்கும். அதற்கு பதிலாக அமெரிக்க்ர்களுக்கு பணமும் சவூதியில் சகல் உரிமைகளும் அமெரிக்காவிற்கு கிடைக்கும்.

எகிப்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட்டுள்ள ஒரு அரசை அது இஸ்லாமிய சார்பு அரசாக இருந்த்தால் அதை அமெரிக்காவிடமிருந்து பல பில்லியன் உதவி பெற்ற இராணுவம் கவிழ்த்து – அங்கு போராடிய மக்களை ரமலான் மாத்த்தில் நூற்றுக்கணக்கில் கொன்று குவித்துள்ளது.

துருக்கியில் இஸ்லாமிய நடை முறைகளை அமுல் படுத்த நினைக்கும் அரசுக்கு எதிராக முஸ்லிம்களையே தூண்டி விட்டு மேற்குலக நாடுகள் குளீர்காய்கின்றன.

என்னதான் நடக்கிறது முஸ்லிம்களின் உலகத்தில் ? வேறொனறும் இல்லை. அல்லாஹ்வின் ஹிதாயத்திலிருந்து ஒவ்வோரு வித்த்திலும் நாம் விலகிச் சென்று கொண்டிருக்கிறோம்.

·         மார்க்கத்தை கடைபிடிப்பதில் சத்தியத்தின் வழியில் அன்றி நமக்கு பிடித்தமான வழிமுறையை தேர்ந்தெடுக்கிறோம்.முன்னோர்களின் வழியை சந்தேகப்பட்டு புதிய புதிய பாதைகளை ஒருவாக்கி கொண்டோம்.

·         வாழ்வியல் போங்கில் மார்க்கத்தின் நல்லியல்புகளை ஒதுக்கி வைத்து விட்டோம்.கொளை போராட்டம் என்ற பெயரில் மார்க்கத்தின் அத்தனை நல்ல பண்புகளை தூக்கி எறிந்தோம். நிதானம் மரியாதை என்பதெல்லாம் நமக்குத் தெரியாத சொற்களாகி விட்டன.

·         இதனால் முஸ்லிம் சமீகத்திற்குள் நிறைய சிக்கல்கள். நோட்டீஸ் வால்போஸ்டர் அடிதடி யுத்தங்கள் வேணுமென்றே முஸ்லிம்களை குழுப்புவதற்கான உத்திகள் கையாளப்படுகின்றன்

·         முஸ்லிம்கள் 6.53 க்கு நோன்பு திறக்கிறார்களா? நாங்கள் மைகை கட்டி 6.50 க்கு பாஙகு சொல்வோம். ஜாக் 6.50 க்கு  பாங்கு சொன்னால் டி என் டி ஜே  6.48 க்கு பாங்கு சொல்வோம். என்ற அளவில் நமது சமுதாயத்தின் மரியாதை சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது.

·         நமது இளைஞர்களும் இளம் பெண்களும் மார்க்கத்தின் தீவிர பற்றாளர்களாக காட்டிக் கொண்டு சமூகத்தை கூறு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

கொள்கை ரீதியான பிரச்சினையில் மட்டுமல்ல. மற்ற தனிப்பட்ட சமூகம் சார்ந்த பிரச்சினைகளிலும் கூட மார்ர்க்கம் கற்றுத்தருகிற சிறந்த வழிகாட்டுதல்களை தூர எறிந்து விட்டு , சுயநலத்தின் அடிப்படையிலான தாந்தோன்றித்தனமான கருத்த்துக்களையும் செயல்களையும் சரி என்றும் நீதியானது என்றும் வாதிடடு சர்ச்சைகளை பெரிது படுத்துகிறோம். 

இதற்கு உதாரணம் சொல்வதானால் ஒவ்வொரு மஹல்லாவிலும் ஜமாத்திலும் அமைப்பிலும் நூற்றூக்கணக்கான உதாரணங்களை சொல்ல முடியும். 

ஒரு நல்ல நாளில் கசப்பான விஷங்களை குறிப்பிட வேண்டாம் என விட்டு விடுகிறேன், 

அன்பானவர்களே! நாம் பேசுகிற ஒவ்வொரு வார்த்தைய்ம். செய்கிற ஒவ்வொடு செயலும் ஹிதாயத்தின் அடிப்ப்டையிலானது தானா என்று யோசித்து பேசுவோம். காரியமாற்றுவோம். இது விச்யத்தில் நம்மில் ஒவ்வொரு வரும் அவருடைய பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். 


இவ்வாறு செய்யத்தவறினால் நம்மை அறியாமலே நாமே எதிரிகளின் ஆவலை பூர்த்தி செய்தவர்கள் ஆகிவிடுவோம். 

இப்போது அப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது. 

நமது சமூகத்தை குழப்பத்தில் ஆழ்த்த அவர்கள் நினைக்கிறார்கள். அல்லது எதிர்ப்பார்க்கிறார்கள்.

நாமோ அதற்கு வலிந்து இடம் கொடுக்கிறோம்.

என் வே இந்த தருணத்தில் அல்லாஹ்விடம் அதிகம் பிரார்த்தனை செய்வேம்

رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِلَّذِينَ كَفَرُوا وَاغْفِرْ لَنَا رَبَّنَا إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ(5)
இறைவா! எங்களை காபிர்களின் ச்திக்களமாக் ஆக்கிவிடாதே!

முஸ்லிம்களான நாம் நம்க்கிடையேயான பிரச்சினைகளை குடும்ப அளவில் – மஹல்லாக்கள் அளவில்- ஊரளவில் – குறைத்துக் கொள்ள முயற்சி செய்வோம்.

என்னால் முஸ்லிம் சமூகத்தில் ஒரு பிரச்சினை வரவோ வளரவோ காரணமாக இருக்க மாட்டேன் என நாம் உறுதி ஏற்போம்.

அது அல்லாஹ் நமக்கு ஹிதாயத்தை வழங்கியதற்கு அடையாளமாக அமையும்.

1 comment:

  1. maasha allah. very good article based reality.it is most important & wanted for ummath. baarakkallah

    ReplyDelete