வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, August 22, 2013

உஹது யுத்தம் பாடங்களின் புதையல்


வரலாறு

ஹிஜ்ரி 3 ம் வருடம் ஷவ்வால் மாதம் பிறை 15 சனிக்கிழமை அன்று
உஹது யுத்தம் நடந்த்து.

غزوة أُحُديوم السبت 15 شوال سنة 3 هـ - يناير سنة 625 م -
أُحُد جبل مشهور بالمدينة في شماليها الغربي بينه وبين المدينة ثلاثة أميال، سُمي بذلك لتوحده وانفراده عن غيره من الجبال التي هناك وهو الموضع الذي دُفن فيه هارون أخو موسى عليهما السلام.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய வாழ்க்கையிலும் முஸ்லிம்களுடைய வரலாற்றிலும் உஹது யுத்தம் மிகவும் முக்கியம் வாந்த ஒரு நிகழ்வாகும்,

பத்ரு யுத்த்த்தில் எப்படி முஸ்லிம்களுக்கு ஒரு மாபெரிய வெற்றி விரைவாக கிடைத்த்தோ அதே போன்ற ஒரு வெற்றி உஹதிலும் முதலில் முஸ்லிம்களுக்கு கிடைத்த்து, ஆனால் முஸ்லிம்களில் ஒரு சிலர் பெருமானார் (ஸல்) அவர்களை உத்தரவை சரியாக புரிந்து கொண்டு செயல்படாத காரணத்தினால் சற்று நேரத்தில் யுத்த்த்தின் போக்கு மாறியது. முஸ்லிம்களின் வெற்றி பறி போனது.

தனது வாழ்வில் எந்த யுத்த்திலும் காயம்டையாத முஹம்மது நபி (ஸல்) அவர்கள் உஹது யுத்த்தில் காயமடைந்தார்கள். அவர்களது கண்ணத்தில் காயம் பட்ட்து, முன்பற்கள் ஷஹீதாயின. பதுரு யுத்த்த்தில் காபிர்களுக்கு ஏற்பட்ட அளவுக்கான உயிர்சேதம் உஹது யுத்த்தில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட்து 70 முஸ்லிம்கள் ஷஹீதாயினர். அதில் ஹம்ஸா, முஸ் அப் (ரலி) போன்ற பல முக்கிய சஹாபாக்கள் ஷஹீதானார்கள்.

முஸ்லிம்கள் திகைத்தும் தடுமாறிப்போனார்கள். அல்லாஹ்விற்காக போரிடுகிற நாம் எப்படி தோற்றுப் போனோம். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் நம்மோடு இருக்கும் போது எப்படி நமக்கு தோல்வி ஏற்படும்? என்ற கேள்விகள் அவர்களுடையை மனதை குடைந்தெடுத்த்தன.

ஆலு இம்ரான் அத்தியாயத்தின் 121 முதல் 179 வரையான 58 வசன்ங்களில் அல்லாஹ் முஸ்லிம்களுக்கு ஆறுதலைச் சொன்னான். அது மட்டுமல்ல பத்ரில் வெற்றியை கொடுத்த இறைவன் உஹதில் ஏன் தோல்வியை தந்தான் என்பதற்கான காரணத்தையும் விவரித்தான்.

அந்த வகையில் முஸ்லிம்கள் நினைவு கூர்ந்து பார்க்க வேண்டிய பல செய்திகள் உஹது யுத்த்தின்  வரலாற்றில் இருக்கின்றன. அத்னால் இன்று உஹது யுத்தம் பற்றியும் அதன படிப்பினைகளை பற்றீயும் பார்க்க இருகிறோம்.

உஹது யுத்த்திற்கான காரணம்
யுத்த்திலிருந்து தான் யுத்தங்கள் பிறக்கிறது என்பார்கள், அதற்கொப்ப பத்ரு யுத்திலிருந்து உஹது யுத்தம் பிற்ந்த்து,

பதிரில் ஏற்பட்ட தோல்விக்கு பழி வாங்கு வதற்காக மக்காவின் காபிர்கள் தயாரானார்கள்.

பதிரில் கொல்லப்பட்ட காபிர் தலைவர்களின் உறவினர்களின் தூண்டுதல

وسببها أن قريشاً لما أصابهم يوم بدر ما أصابهم مشى عبد الله بن أبي ربيعة، وعكرمة بن أبي جهل وصفوان بن أمية، ومشى رجال آخرون من أشراف قريش ممن أصيب آباؤهم وأبناؤهم وإخوانهم، فكلموا أبا سفيان وكل من له تجارة في تلك العير التي كانت سبباً في وقعة بدر،.

பத்று யுத்த்திற்கு காரணமான அபூசுப்யானின் வியாபாரக் கூட்ட்த்தின் சரக்குகள்  அது வரை பங்கு வைக்கப் படாமல் தாருன்னத்வாவில் வைக்கப்பட்டிருந்த்து.

وكانت تلك العير موقوفة بدار الندوة ولم تعط لأربابها،

فقالوا: إن محمداً قد وتركم وقتل خياركم فأعينونا بهذا المال على حربه لعلنا ندرك منه ثأراً عمن أصاب منا ونحن طيبو النفس أن تجهزوا بربح هذه العير جيشنا إلى محمد.
فقال أبو سفيان: وأنا أول من أجاب إلى ذلك وبنو عبد مناف معي فجعلوا لذلك ربح المال فسلم لأهل العير رؤوس أموالهم وكانت 50.000 دينار وأخرجوا أرباحها وكان الربح ديناراً لكل دينار

முதல் போட்டவர்களுக்கு மூலதனம்  மட்டும் வழங்கப்பட்ட்து. இலாப்ப் பணம் மொத்த்த்தையும் பெருமானாருக்கு எதிராக யுத்தம் செய்ய திரட்டப்பட்ட்து.

காபிர்கள் ஒவ்வொருவரும் அவரவர்களது சக்திக்கும் தரத்திற்கும் ஏற்ப சபதம் எடுத்துக் கொண்டனர்,

பழிதீர்க்கும் வரை மனைவியோடு உறவு கொல்லப் போவதில்லை என  அபூசுப்யான்  உறுதி எடுத்துக் கொண்டார்.
அவரது மனைவி ஹிந்தாவோ அதுவரை எண்ணை பூசிக் கொள்ளப் போவதில்லை என்று சபதம் எடுத்துக் கொண்டார்.
கவிஞ்ர்கள் தம் கவிதையால் மக்களை தூண்டிவிட சபதம் பூண்டனர்
பணக்கார்ரர்கள் தம அடிமைகளுக்கு முஸ்லிம் தலைவர்களின் பெயர்களை குறிப்பிட்டு இன்னவரை கொன்றால் உனக்கு விடுதலை என்று வாக்களித்தனர்.

خرج أبو عزة ومسافع يستفزان الناس بأشعارهما، ودعا جبير بن مطعم غلاماً له حبشياً يقذف بالحربة قلما يخطىء بها، فقال له: اخرج مع الناس فإن أنت قتلت حمزة بن عبد المطلب بعمّي طعيمة بن عدي فأنت حر، لأن حمزة هو الذي قتل طعيمة يوم بدر،

இவ்வாறு தயாரான் காபிர்களின் படை ஷவ்வால் 5 அன்று மக்காவை விட்டு புறப்பட்ட்து .

وكان أبو سفيان بن حرب قائدهم وكانت عدتهم 3000 فيهم 700 دارع ومعهم 200 فرس،

மக்காவின் காபிர்கள் புறப்பட்ட செய்தியை அங்கிருந்த அப்பாஸ் (ரலி) அவர்கள் ஒரு ஆள் மூலம் பெருமானாருக்கு தெரிவித்தார்.

பெருமானார் (ஸல்) அவர்கள் மதீனாவின் அருகில் குபாவில் இருந்த போது இந்த செய்தி வந்து சேர்ந்த்து,

பெருமானார் (ஸல்) அவர்கள் அதற்கு முன்னதாக ஒரு கனவு கண்டிருந்தார்கள்,

சில மாடுகள் கொல்லப்படுவதாகவும், பெருமானாருடைய வாளில் ஒரு ஓட்டை விழுவதாகவும். ஒரு பாதுகாப்பான கோட்டையில் அவர்கள் கை விடுவதாகவும், சில ஆடுகள் அவர்களை பின் தொடர்வதாகவும் கனவு கண்டிருந்தார்கள். தனது தோழ்ர்ர்கள் சிலர் கொல்லப்படுவார்கள் என்றும் தனது குடும்பத்தை சார்ந்த ஒருவர் கொல்லப்படுவார் என்றும் பாதுகாப்பான கோட்டை மதீனா என்றும் பின் தொடரும் ஆடுகள் என்பது எதிர் அணியினரின் கொடி வீர்ர்கள் கொல்லப்படுவார்கள் என்றும் தனது கனவுக்கு பெருமானார் விளக்கமும் சொல்லியிருந்தார்கள்.

 وقد رأى النبي صلى الله عليه وسلم رؤيا قبل خروجه، وكانت ليلة الجمعة، فلما أصبح قال: «والله إني قد رأيت خيراً رأيت بَقَراً تُذبح ورأيت في ذباب سيفي - طرفة - ثلماً ورأيت أني أدخلت يدي في درع حصينة وكأني مردف كبشاً، فأما البقر فناس من أصحابي يقتلون، وأما الثلم الذي رأيت في سيفي فهو رجل من أهل بيتي يُقتل، وأولت الدرع الحصينة المدينة، وأولت الكبش بأني أقتل صاحب الكتيبة»، وقد صدق الله رؤياه صلى الله عليه وسلم فكان الرجل الذي من أهل بيته «حمزة» سيد الشهداء، وقتل عليّ رضي الله عنه «طلحة بن عثمان العبدري» صاحب لواء المشركين، فهو صاحب الكتيبة وكبش القوم سيدهم وكان الذي بسيفه ما أصاب وجهه الشريف في الغزوة كما سيأتي ذكره.
மக்காவிலிருந்து  வந்த செய்தியை கேட்ட்தும் தோழ்ரகளை திரட்டி ஆலோசனை செய்த முஹம்மது (ஸல்) அவர்கள் மதீனாவிற்குள்ளிருந்தே நாம் எதிர்களை எதிர் கொள்வோம் தரையில் அவர்களோடு சண்டையிடுகிற அதே நேரத்தில் வீடுகளின் மேலிருந்தும் அவர்கள் மீது தாக்குதல் தொடுக்கலாம் என்றார்கள்,

எதிரிகள் வாசல் வரை வந்து விட்ட நிலையில் நாம் ஊருக்குள் உட்கார்ந்திருப்பது கோழைத்தனம் என சில தோழர்கள் கருதினர். அவர்கள் உணர்ச்சி வசப்பட்டனர்.


وقال حمزة بن عبد المطلب وسعد بن عبادة والنعمان بن مالك وطائفة من الأنصار: إنا نخشى يا رسول الله أن يظن عدونا أنا كرهنا الخروج جبناً عن لقائهم: فيكون هذا جرأة منهم علينا، وزاد حمزة فقال: والذي أنزل عليك الكتاب، لا أطعم اليوم طعاماً حتى أجالدهم بسيفي خارج المدينة، وقال النعمان: يا رسول الله لا تحرمنا الجنة، فوالذي نفسي بيده لأدخلنها.

வெள்ளிக்கிழமை ஜும் ஆ தொழுகையை முடித்துக் கொண்ட பெருமானார் (ஸல்) அவர்கள் தோழரகளின் ஆர்வத்திற்கேற்ப வெளியே புறப்பட் ஆயுதங்களை அணிந்து தயாராக வெளியே வந்த போது பெருமானாரின் விருப்பத்திற்கு மாறாக பேசி விட்டோமே என அத்தோழர்கள் வருந்தினர். முடிவை மாற்றிக் கொள்ளலாமே என்று கேட்டனர். ஒரு நபி ஆயுதம் தரித்து விட்ட நிலையில் முடிவை மாற்ற முடியாது என பெருமானார் அறிவித்தார்கள்

ولما خرج رسول الله متقلداً سيفه، ندم الطالبون لخروجه على ما صنعوا وقالوا ما كان ينبغي لنا أن نخالفك، فاصنع ما شئت، فقال: ما ينبغي لنبي إذا لبس لأمته أن يضعها حتى يحكم الله بينه وبين عدوه

·       فخرج يوم الجمعة وأصبح بالشعب من أُحد يوم السبت للنصف من شوال ومشى على رجليه

ஆயிரம் பேர் பெருமானாருடன் புறப்பட்டனர். இடைவழியில் அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் தனது ஆத்ரவாளர்கள் 300 பேருடன் பின்வாங்கிச் சென்று விடவே 700 பேருடன் பெருமானார் (ஸல்) சனிக்கிழமை அதிகாலை உஹது மலையடிவாரத்திற்கு வந்து சேர்ந்தார்கள். உஹது மலை மதீனாவின் எல்லையில் ஊரிலிருந்து மூன்று மைல் தொலைவில் இருந்த்து,
وكان في المسلمين مائة دارع
எதிரிகளின் வலது பக்க குதிரை அணியில் காலித் பின் வலீத் இருந்தார். இட்து பக்க அணியில் இக்ரிமா பின் அபீஜஹ்ல் இருந்தார்.
காலிதை கண்கானிக்க சுபைர் (ரலி) அவர்களை நியமித்திருந்தார்கள்.
وقال النبي صلى الله عليه وسلم للزبير بن العوام: «استقبل خالداً وكن بإزائه»،

காலிதின் நடவடிக்கைகளை கவனமாக கவனிக்க வேண்டும் என்பதற்கு பெருமானார் (ஸல்)செய்த ஏற்பாடு இது,

முஸ்லிம் வில்லாளிகள் 50 பேருக்கு தலைவராக அப்துல்லாஹ் பின் ஜுபைர் ரலி அவர்களை நியமித்திருந்தார்கள், அவர்களை மைதானத்திலிருந்த உயரமான ஒரு சிறு மலையின் மீது நிறக வைத்து விட்டு நாங்க வெற்றி பெற்றாலும் தோற்றாலும் நம்முடைய உத்தரவு வராத வரை அந்த இட்த்தை விட்டு அகல வேண்டாம் என்று தெளிவாக அவர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்கள்

وجعل النبي صلى الله عليه وسلم على الرماة عبد الله بن جبير بن النعمان الأوسي وهو أخو خوات بن جبير، وكان الرماة خمسين رجلاً، فأقامهم النبي صلى الله عليه وسلم على جبل صغير مرتفع، وقال لهم:
«إن رأيتمونا تخطفنا الطير، فلا تبرحوا مكانكم هذا حتى أرسل إليكم، وإن رأيتمونا هزمنا القوم أو ظاهرناهم وهم قتلى فلا تبرحوا حتى أرسل إليكم».
யுத்தம் தொடங்கியது பெருமானார் (ஸல்) அவர்கள் கனவு கண்ட்து போல எதிரணியினரில் கொடி ஏந்தி நின்ற வீர்ர்கள் ஒருவர் பின் ஒருவராக 11 பேர் வெட்டி வீழ்த்தப்பட்டார்கள்.

قد كان لواء المشركين شؤماً عليهم، فكلما حمله أحد قُتل وهكذا قُتل أحد عشر رجلاً حملوا اللواء بالتوالي

யுத்தம் சூடு பிடித்த்து, காபிர்கள் தாங்கள் கொண்டு வந்தவைகளை களத்திலே போட்டு விட்டு ஓட்த்தொடங்கினார்கள்.

முஸ்லிம்கள் சீக்கிரத்திலேயே வெற்றியடைந்தனர்.
மலையின் மேல்புறத்திலிருந்து முஸ்லிம் வில்லாளிகள் சிலர் நாம் தான் வெற்றிய்டைந்து  விட்டோமே , இனி ஏன் இங்கு நிற்க வேண்டும். நாமும் சென்று எதிர்களின் பொருட்களை எடுப்பதில் உதவுவோம் என்று கூறினர், அவர்களுடை தலைவர் பெருமானாருடையை உத்தரவின் வாசகத்தை எடுத்துச் சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. மலையிலிருந்து  கீழே இறங்கினர்.

யுத்த்த்திலிந்து திரும்பி ஓடிக்கொண்டிருந்த காலித் பின் வலீத் மலைப் பகுதி காலியாவதை கவனித்தார். சாமார்த்தியமாக ஆட்களை திரட்டி அந்த வழியாக மேடேறி முஸ்லிம்களின் மீது திடீர் தாக்குதல் தொடுத்தார். பின்னாலிருந்து முஸ்லிம்களின் அணிக்குள் ஊடுறுவினார். என்ன நடக்கிறது என்று யூகிப்பதற்குள்ளாக மூஸ்லிம்களின் அணி பிர்ந்த்து. யார் நம்முடைய ஆள் என்று தொரிந்து கொள்ள முடியாத குழப்பம் ஏற்பட்ட்து. அந்தக் குழப்பத்தில் முஸ்லிம்களீல் சிலர் சில முஸ்லிம்களையே கொன்றனர்

முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் காயம் பட்டது, .எதிர்களிடமிருந்து பறந்து வந்த கல பெருமானார் மீது பட்ட்து. அவர்களது கன்னம் காயமடைந்த்து, பெருமானாரின் தலைக்கவசம் உடைந்து அவர்களது முகத்தில் அதன் கன்னிகள் குத்தியிருந்தன. அதனால் அவர்களது முன் பற்கள் உடைந்தன. உதடு கிழிந்த்து., பெருமானார்ன் மயக்க மானார்கள் சரிந்த அவர்களை தல்ஹா பின் உபைதுல்லாஹ் அலீ (ரலி) ஆகியோர் தாங்கிப் பிடித்து நிற்கவைத்தனர்.

பெருமானார் தான் நின்று கொண்டிருந்த மேட்டின் மீது ஏறி நிறக முயனறார்கள், முடியவில்லை.

இதற்கிடையே இப்னு கமிஆ அல்லைஸீ என்கிற எதிரி முஸ்லிம்களின் கொடிவீரரான முஸ் அப் (ரலி) யை கொன்றான். அவர் பெருமானாரைப் போலவே இருந்த்தாலும். அன்றை தினம் பெருமானாருடைய தலைக்கவசத்தை அவர் அணிந்திருந்த்தாலும் பெருமானரையே கொன்று விட்ட்தாக இப்னு கமி ஆ நினைத்தான். முஹ்மத்தை கொன்று விட்டேன் என்று சப்தமிட்டான். பெருமானார் (ஸல்) நின்று கொண்டிருந்த இட்த்தில் தேடினார்கள் அது காலியாக இருக்கவே செய்தி உண்மை என்று நினைத்த முஸ்லிம்கள் அதிர்ந்து போனார்கள், செய்வதறியாது நின்றார்கள் .சிலர் போர்க்களத்திலிருந்து வெளியேறினார்கள். போர்க்களத்தின் போக்கு மாறியது முஸ்லிம்களின் 70 பேர் கொல்லப்பட்டார்கள்.

பெருமானார் (ஸல்) யுத்த களத்திலிருந்து ஒரு அடி கூட நகரவில்லை. அந்த நிலையிலும் போராடிக் கொண்டிருந்தார்கள், போராடுபவர்களுக்கு உதவிக் கொண்டிருந்தார்கள்/

அந்த நிலையிலும் சில நபித்தோழ்ரகள அற்புதமான் தெளிவுடன் இருந்தார்கள்.  

قال موسى بن عقبة: لما غاب النبي صلى الله عليه وسلم عن أعين بعض القوم واختلط بعضهم ببعض وسمعوا الصارخ، قال رجال من المنافقين: لو كان لنا من الأمر شيء ما قتلنا ها هنا، وقال بعض منهم: لو كان نبياً ما قُتل فارجعوا إلى دينكم الأول،

 فقال أنس بن النضر عم أنس بن مالك رضي الله عنهما: يا قوم إن كان محمد قد قُتل فإن رب محمد لم يُقتل، فقاتلوا عليه، وشهد له بهذه المقالة عند النبي صلى الله عليه وسلم سعد بن معاذ رضي الله عنه ووافق أنس بن النضر جماعة كثيرون على هذه المقالة وهم المؤمنون أهل الصدق واليقين الذين تمكن الإيمان من قلوبهم.

وروى ابن إسحاق أن أنس بن النضر، عم أنس بن مالك رضي الله عنهما جاء إلى عمر بن الخطاب وطلحة بن عبيد الله في رجال من المهاجرين والأنصار رضي الله عنهم، فقال: إن كان قد قُتل - يعني محمداً - فما تصنعون بالحياة بعده؟ قوموا فموتوا على ما مات عليه.ثم استقبل العدو فقاتل حتى قُتل رضي الله عنه، قال أنس: ولقد وجدنا بأنس بن النضر يومئذ سبعين ضربة، فما عرفه إلا أخته، عرفته ببنانه - أي بأصابعه -.

முஸ்லிம்களின் ஒரு பெரும் தோல்விக்கு இடையிலும் இஸ்லாம் தோற்காது என்பதற்கான சான்று  அனஸ் பின் நுழர் (ரலி) யின் வழியாக வெளிப்பட்ட்து.

ஒரு பெண்மணியின் வீரம்
பெருமானாரை தேடி இப்னு கமிஆ வந்த போது அவனை உம்ம அம்மாரா (ரலி) எதிர் கொண்டார்கள்

لما انكشف المسلمون واختلط أمرهم، ثبتت أم عمارة المازنية واسمها نسيبة وهي زوج زيد بن عاصم قالت: خرجت يوم أُحد لأنظر ما يصنع الناس ومعي سقاء فيه ماء أسقي به الجرحى فانتهيت إلى رسول الله صلى الله عليه وسلم وهو في أصحابه والريح للمسلمين، فلما انهزم المسلمون، انحزت إلى رسول الله صلى الله عليه وسلم فقمت أباشر القتال دونه وأذب عنه بالسيف وأرمي عن القوس حتى خلصت الجراحة إليّ،
لما ولي الناس عن رسول الله صلى الله عليه وسلم أقبل ابن قمئة يقول: دلوني على محمد فلا نجوت إن نجا فاعترضت له أنا ومصعب بن عمير رضي الله عنه فضربني هذه الضربة وضربته ضربات ولكن عدو الله كان عليه درعان.
وجاء في رواية: خرجت نسيبة يوم أُحد وزوجها زيد بن عاصم وابناها حبيب وعبد الله وقال لهم رسول الله صلى الله عليه وسلم بارك الله عليكم أهل بيت، فقالت له نسيبة رضي الله عنها: ادع الله أن نرافقك في الجنة، فقال: اللهم اجعلم رفقائي في الجنة، وعند ذلك قالت رضي الله عنها: ما أبالي ما أصابني من أمر الدنيا.
وقال صلى الله عليه وسلم في حقها: «ما التفت يميناً وشمالاً يوم أُحد إلا ورأيتها تقاتل دوني»، وقد جُرحت رضي الله عنها اثني عشر جرحاً ما بين طعنة برمح وضربة بسيف.

வேதனையின் உச்சத்திலும் பெருமானாரை பாதுகாத்த சஹாபாக்களின் அக்கறை உம்மு அம்மாரா அம்மையாரில் வெளிப்பட்ட்து.

எனினும் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட சோகம் அதிகமாக இருந்த்து, அல்லாஹ் ஆலும் இம்ரானிம் 58 வசன்ங்களில் ஆறுதல் சொன்னார்ன்.

அதில் இந்த் தோல்விக்கான காரணத்த்தையும் சொன்னார்ன்




உஹது யுத்த்தின் தோல்வி ஆழமான வடுவாக இருந்தாலும் அதனால் முஸ்லிம்களுக்கு கிடைத்த பாடமும் படிப்பினைகளும் இஸ்லாமின் வெற்றி வரலாற்றுகு பெரிதும் உதவியாக இருந்த்து.


1.   வெற்றி அல்லாஹ் தீர்மாணிப்பது என்பதை அழுத்தமாக உணர வழிவகுத்த்து;

َوَلَمَّا أَصَابَتْكُمْ مُصِيبَةٌ قَدْ أَصَبْتُمْ مِثْلَيْهَا قُلْتُمْ أَنَّى هَذَا قُلْ هُوَ مِنْ عِنْدِ أَنْفُسِكُمْ إِنَّ اللهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ * وَمَا أَصَابَكُمْ يَوْمَ التَقَى الجَمْعَانِ فَبِإِذْنِ اللهِ وَلِيَعْلَمَ المُؤْمِنِينَ * وَلِيَعْلَمَ الَّذِينَ نَافَقُوا) [آل عمران:165-167].
2.   நல்ல முஸ்லிம்களையும் நயவஞ்சகர்களையும் அடையாளம் கான உதவியது.

مَا كَانَ اللهُ لِيَذَرَ المُؤْمِنِينَ عَلَى مَا أَنْتُمْ عَلَيْهِ حَتَّى يَمِيزَ الخَبِيثَ مِنَ الطَّيِّبِ) [آل عمران:179].

3.   முஸ்லிம்களின் ஈமானிய வீரமும் தீரமும் வெளிப்பட காரணமாகியது. பலருக்கும் ஷஹாத்த் கிடைத்த்து.

وَلِيَعْلَمَ اللهُ الَّذِينَ آَمَنُوا وَيَتَّخِذَ مِنْكُمْ شُهَدَاءَ وَاللهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ ) [آل عمران:140].
( وَلِيُمَحِّصَ اللهُ الَّذِينَ آَمَنُوا وَيَمْحَقَ الكَافِرِينَ أَمْ حَسِبْتُمْ أَنْ تَدْخُلُوا الجَنَّةَ وَلَمَّا يَعْلَمِ اللهُ الَّذِينَ جَاهَدُوا مِنْكُمْ وَيَعْلَمَ الصَّابِرِينَ ) [آل عمران:141-142].

4.  எல்லாவற்றீற்கும் மேலாக உஹது யுத்தம் பெருமானாரின் மரணத்தை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற பாட்த்தை வழங்கியது.

وَمَا مُحَمَّدٌ إِلا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ أَفَإِنْ مَاتَ أَوْ قُتِلَ انْقَلَبْتُمْ عَلَى أَعْقَابِكُمْ وَمَنْ يَنْقَلِبْ عَلَى عَقِبَيْهِ فَلَنْ يَضُرَّ اللهَ شَيْئًا وَسَيَجْزِي اللهُ الشَّاكِرِينَ) [آل عمران:144]


பெருமானார் (ஸல்) அவர்கள் வபாத்தான போது இந்த ஆயத்தை சொல்லித்தான் அபூபக்கர் (ரலி) அவர்கள் முஸ்லிம்களை நிதானப்படுத்தினார்கள்.

5.   உஹது யுத்த்தின் பிரதான பாடம்,, பெருமானா (ஸ்ல) அவர்களது உத்தரவை ஒரு பகுதி அளவில் மீறி தன்னிஷ்ட்த்திற்கு சமுதாயம் நடக்குமானால் அது எத்தகைய விபரீத்த்தை ச்ந்திக்க நேரிடும் என்ற எச்சரிக்கயையை உம்மத்திற்கு இந்நிகழ்வு வழங்கியது. இதை திருக்குர் ஆன் பலமாக எச்சரிக்கிறது.
وَلَقَدْ صَدَقَكُمْ اللَّهُ وَعْدَهُ إِذْ تَحُسُّونَهُمْ بِإِذْنِهِ حَتَّى إِذَا فَشِلْتُمْ حَتَّى إِذَا فَشِلْتُمْ وَتَنَازَعْتُمْ فِي الأَمْرِ وَعَصَيْتُمْ مِنْ بَعْدِ مَا أَرَاكُمْ مَا تُحِبُّونَ مِنْكُمْ مَنْ يُرِيدُ الدُّنْيَا وَمِنْكُمْ مَنْ يُرِيدُ الآخِرَةَ ثُمَّ صَرَفَكُمْ عَنْهُمْ لِيَبْتَلِيَكُمْ وَلَقَدْ عَفَا عَنْكُمْ وَاللَّهُ ذُو فَضْلٍ عَلَى الْمُؤْمِنِينَ) [آل عمران: 152]،
وَمَا آتَاكُمْ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا) [الحشر: 7]
 فَلْيَحْذَرْ الَّذِينَ يُخَالِفُونَ عَنْ أَمْرِهِ أَنْ تُصِيبَهُمْ فِتْنَةٌ أَوْ يُصِيبَهُمْ عَذَابٌ أَلِيمٌ) [النور: 63]،

முஸ்லிம் சமுதாயம் வீழ்ச்சியிலிருந்து மீட்சியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற நிலையில் இந்த பாட்த்தை நினைவில் வைத்துக் கொண்டால் பத்ரு யுத்த்தை போல வெற்றி எளிதாகும்.

4 comments:

  1. சமுதாயத்திற்கு தேவையான கருத்து .மிக்க நன்றி

    ReplyDelete
  2. சமுதாயத்திற்கு தேவையான கருத்து .மிக்க நன்றி

    ReplyDelete
  3. அல்ஹம்துலில்லா

    ReplyDelete
  4. உங்களுக்கே உரித்தான பாணியில் சரியான நேரத்தில் தரப்பட்ட தேவையான குறிப்புகள்

    ReplyDelete