வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Wednesday, November 06, 2013

ஆசூரா

காலண்டரில் முஹர்ரம் பிறை 5 ம் தேதி பிறப்பதாக போடப்பட்டிருக்கிறது. ஆனால் 4 ம் தேதி இரவு பிறை தென்படாததால் , முஹர்ரம் முதல் பிறை 6 ம் தேதி தொடங்குவதாக கோவை மாநகர ஜமாத்துல் உலமா அறிவித்துள்ளது. அதனால் 9 10 ஆகிய இரு நோன்புகளை 14 15 தேதிகளில் வியாழன் வெள்ளியன்று நோன்பை கடை பிடிக்கவும்.

முஹர்ரம் மாதத்தின் ஒன்பது பத்தாம் நாட்களில் நோன்பு பிடிக்க்க இஸ்லாம் அறிவுறுத்தியுள்ளது.

முஹர்ரம் நோன்பிற்கும் கர்பலாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

முஹர்ரம் நோன்பின் காரணமும் முக்கியத்துவமும்



عن ابن عباس رضي اللهم عنهمما قال لما قدم النبي صلى اللهم عليه وسلم المدينة وجد اليهود يصومون عاشوراء فسئلوا عن ذلك فقالوا هذا اليوم الذي أظفر الله فيه موسى وبني إسرائيل على فرعون ونحن نصومه تعظيما له فقال رسول الله صلى اللهم عليه وسلم نحن أولى بموسى منكم ثم أمر بصومه * بخ 

روى عبد الله بن عباس رضي الله عنهما قال : حين صام رسول الله صلى الله عليه وسلم يوم عاشوراء وأمر بصيامه قالوا : يا رسول الله، إنه يوم تعظمه اليهود والنصارى، فقال رسول الله صلى الله عليه وسلم : "فإذا كان العام المقبل إن شاء الله صمنا اليوم التاسع" . قال : فلم يأتِ العام المقبل حتى توفي رسول الله صلى الله عليه وسلم . رواه مسلم



وقال أبو قتادة: قال رسول الله: ((صوم يوم عاشوراء أحتسبُ على الله أن يكفر سنةً ماضية)).


قال رسول الله صلى الله عليه وسلم: ((ليس ليوم فضل على يوم في الصيام إلا شهر رمضان ويوم عاشوراء)) [رواه الطبراني في الكبير بسند رجاله ثقات 



அறியாமைக்காலத்திலேயே ஆஷூரா நோன்பு கடைபிடிக்கப்பட்டது. பெருமானாரும் அந்நாளில் நோன்பு நோற்றுள்ளார்கள். மதீனாவிற்கு வந்த பிறகுசஹாபாக்களுக்கு கட்டளையிட்டார்கள் .

عن عائشة رضي الله عنها قالت: "كانت قريش تصوم عاشوراء في الجاهلية، وكان رسول الله صلى الله عليه وسلم يصومه، فلما هاجر إلى المدينة صامه وأمر الناس بصيامه، فلما فرض شهر رمضان قال: "فمن شاء صامه، ومن شاء تركه" (رواه البخاري/2002 ومسلم /112 واللفظ لمسلم).
 
சிறு குழந்தைகளையும் நோன்பு பிடிக்கச் செய்கிற சஹாபாக்களின் பழக்கம்.

كان الصحابة رضي الله عنهم يصوّمون فيه صبيانهم تعويداً لهم على الفضل، فعن الربيع بنت معوذ قالت أرسل النبي صلى الله عليه وسلم غداة عاشوراء إلى قرى الأنصار: ((من أصبح مفطراً فليتم بقية يومه، ومن أصبح صائماً فليصم)) قالت: فكنا نصومه بعد ونصوّم صبياننا ونجعل لهم اللعبة من العهن، فإذا بكى أحدهم على الطعام أعطيناه ذاك حتى يكون عند الإفطار. [البخاري:1960].



பயணத்திலும் ஆஷூரா நோன்பை கடைபிடித்த முன்னோர்கள்


كان بعض السلف يصومون يوم عاشوراء في السفر، 
 ومنهم ابن عباس وأبو إسحاق السبيعي والزهري، 
وكان الزهري يقول: (( رمضان له عدة من أيام أخر، وعاشوراء يفوت ))، 
ونص أحمد على أنه يصام عاشوراء في السفر

யூதர்கள்  6 லட்சம் பேர் மூசா (அலை) அவர்கள் மூலமாகபிர் அவ்னிடமிருந்து பாதுகாக்கப்பட்ட நாள் ஆஷூரா நாள் என்பதால் நாம் நோன்பு  நோற்கிறோம். காரணம் முஃமின்களின் ஈமானிய வாழ்விற்கு மிகப்பெரிய உத்வேகத்தை தரும் செய்தி அது.


மூஸா (அலை) அவர்கள் பிர் அவ்னிடமிருந்து பாதுகாக்கப் பட்ட வரலாறு ஒரு முஃஜிஸா என்பதற்கு அப்பால், மனித வரலாற்றின் மிக முக்கியமான ஒரு அத்தியாய மாகும். ஆச்சரியங்கள் நிறைந்த உலக நடப்புக்களில் அது மகா ஆச்சரியாமான நிகழ்வு.

மூஸா (அலை) அவர்களை நம்பி அவரது சொல்லுக்கு கட்டுப்பட்டதற்காக மரணத்தின் விளிம்பில் நின்று கொண்டுருந்த 6 லட்சம் யூதர்கள் சில மணித்துளிகளில் இன்றுவரை வாழ்கிற மனிதர்கள் வாய் பிளந்து ஆச்சரியப் படும் வகையில் கடல் பிளந்து காப்பாற்றப் பட்டார்கள். அவர்கள் காப்பாற்றப் பட்ட அதே வேகத்தில் எகிப்து நாட்டு கொடுங்கோல் மன்னன் பிர அவ்னும் அவனது லட்சக்கணக்கான் படையினரும் கண்மூடித்திறப் பதற்குள் நீரல் மூழ்கடித்து அழிக்கப் பட்டார்கள்.

கீ.மு 1447 ம் ஆண்டு நடந்த்தாக ஆய்வாளர்கள் கனித்துச் சொல்கிற இந்நிகழ்சி , (ஜவாஹிருல் குரான் – தமிழ் தப்ஸீர். முதல் பாகம் பக்கம் 197. - வேலூர், அல் பாகியாதுஸ் ஸாலிஹாத் வெல்ளியீடு) 3500 வருடங்களுக்கு முந்தியதாக இருந்தாலும், இன்றளவும் வாழ்கிற இறை நம்பிக்கையாளர்களுக்கும், இனி யுக முடிவு நாள் வரைக்கும் பிறக்கப் போகிற அனைத்து இறை நம்பிக்கையாளர்களுக்கும், ஒடுக்கப் படுவோருக்கும், சிறுபான்மையினருக்கும் உறுதியையும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் மகிழ்சியையு தருகிற செய்தியாகும்.

இறைவனை நம்பக் கூடியவர்கள் சோதனையின் விளிம்பில் கூட எவ்வாரெல்லாம் காப்பாற்றப் படக்கூடும் என்ற பாடத்த தருகிற அதே சமயத்தில் அக்கிரமக்காரர்கள் எத்தகைய வலிமையாயிருக்கிற நிலையிலும் ஒரு நாள் வீழ்த்தப் படுவார்கள் என்ற எச்சரிக்கையையும் இந்த நிகழ்சி தருவது போல இன்னொரு நிகழ்சி தரமுடியாது.

மேலதிக தகவல்களுக்கு கீழே சொடுக்கி வாசிக்கவும்

ஆஷூரா - அக்கிரம அரசியலின் முடிவு 

No comments:

Post a Comment