வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, January 30, 2014

பிள்ளைகள் எதற்கு ?



·         நாம் பிள்ளைகள் பெற்றுக் கொள்கிறோம்
·         என்ன நிய்யத்தில் பெற்றெடுக்கிறோம். நம்மிடம் நிய்யத் இருக்கிறதா?
·         எதற்கும் ஒரு நிய்யத் வேண்டுமல்லவா?
·         நிய்யத்தை பொறுத்துத்தானே வாழ்க்கை மதிப்புப் பெறும்

பிள்ளைகள் எதற்கு ?
அந்தஸ்திற்கான அடையாளமா ?
நமக்கு உதவுவார்கள் என்பதற்காகவா?

இரண்டு எண்ணமும் தப்பில்லை

ஆம்! பிள்ளைகளால் மதிப்பும் மரியாதையும் உண்டுதான்.

الْمَالُ وَالْبَنُونَ زِينَةُ الْحَيَاةِ الدُّنْيَا

அல்லாஹ் இந்த கருத்தை மறுக்கவில்லை

அதே போல பிள்ளைகளால் உதவிகள் கிடைக்கும் தான் – 
கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கவும் வேண்டும். 

இபுறாகீம் நபியின் வாழ்வை மதிப்புடையதாக்கியதில் இஸ்மாயீல் அலை) அவர்களின் பங்கை மறுக்க முடியாதே!

தனது மகன் தனக்கு உதவ வேண்டும் என்று இபுறாகீம் என்று எதிர்பார்த்தார்.
அறுத்துப் பலியிடுதல் கஃபாவை கட்டுதல் போன்ற மகத்தான காரியங்களுக்கு மகன் உதவியாக இருத்தார்.

ஆகவே! பிள்ளைகள் விசயத்தில் அவநம்பிக்கையோ விரக்தியோ வர்களுடைய உதவி எல்லாம் தேவையில்லை என்ற ஆங்காரமோ கூடாது.

பல சந்தர்ப்பங்களிலும் பிள்ளைகளை நம்பாமல்அல்லது சட்டை செய்யாமல் அவமதிப்து தான் பிள்ளைகள் சீர் கெடுவதற்கு காரணமாகிறது .

யாகூப் (அலை) அவர்கள் யூசுப் நபி யின் விசயத்தில் அவர்களுடைய சகோதரர்கள் பொறுப்பற்று நடந்து கொள்வார்கள் என்று நினைத்தார். அப்படியே அவர்கள் நடந்து கொண்டார்கள்.
யூசுப் (அலை) ச்கோதர்ர்கள் போட்ட ஓநாய் நாடகம் யாகூப் அலை அவர்களின் நாவிலிருந்தே வந்த்தாகும்.
وَأَخَافُ أَنْ يَأْكُلَهُ الذِّئْبُ وَأَنْتُمْ عَنْهُ غَافِلُونَ(13)

பெண் பிள்ளைகளையும் நியாயமின்றி சந்தேக்க் கண் கொண்டு பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.

பெற்றோரின் சந்தேகம் குழந்தைகளை மன ரீதியாக பாதிக்கிறது என்று மனோத்த்துவ அறிஞர்கள் சொல்கிறார்கள்.

நாம் நல்ல நம்பிக்கையோடு சரியாக பிள்ளைகளை வளர்த்தால் அவர்களது நமது பெயரை விளங்கச் செய்வார்கள். நமக்கு உதவியாக இருப்பார்கள்.

இதில் சந்தேகம் இல்லை,

ஆனால் குழந்தைகள் பெற்றுக்கொள்வதற்கும் வளர்ப்பதற்கும் அல்லாஹ் ஒரு நோக்க்கத்தை கற்றுத்தருகிறான்.

وَالَّذِينَ يَقُولُونَ رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا(74)

திருமணம் செய்து கொள்வதினுடையவும் குழந்தைகள் பெற்றுக் கொள்வதினுடையவும் நோக்கத்தை இந்த துஆ முழுமையாக பிரதிபலிக்கிறது.

·         கண் குளிர்ச்சி
·         இறையச்சமுடைய மனித சமுதாயத்தின் வளர்ச்சி.

நம்முடைய பிள்ளைகள் நமக்கு கண் குளிர்ச்சியாக திருப்தியையும் மகிழ்ச்சியையும் தருபவர்களாக இருக்க வேண்டும்

சில பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகள் உயர்ந்த படிப்பு படித்தவர்களாக–நாகரீக வாழ்க்கை வாழ்கிறவர்களாக – உயர்ந்த சம்பளம் வாங்குகிறவர்களாக இருக்க வேண்டும் என்று இலட்சியம் வைக்கிறார்கள், அதற்காக உருகி ஓடாய் தேய்கிறார்கள். கல்லூரி வாசலகளுக்கும் கம்பனி கதவுகளுக்கும் தூதரங்களின் விசாக்களுக்கும் அலை மோதி பெற்றுத்தருகிறார்கள். அந்தப் பிள்ளைகள் படித்த பட்டம் பெற்று நல்ல வேலையில் சேர்ந்த்தும் பெற்றோரை உள்நாட்டில் விட்டு விட்டு வெளி நாட்டில் செட்டில்ட் ஆகி விடுகிறார்கள். இந்தப் பெற்றோர்களுக்கு தங்களது பிள்ளைகளை பற்றிய நோக்கம் நிறைவேறி விட்டது ஆனால் கண குளிர்ச்சி கிடைத்த்தா ? இதென்ன வாழ்க்கை இது ?

மனிதர்களுக்கு அல்லாஹ் வாழ்க்கையின் எதார்த்த்தை கற்றுத்தருகிறான்.
வாழ்க்கையில் முக்கியம் மகிழ்ச்சி – திருப்தி நிறைந்த மகிழ்ச்சி – அது தான் கண்குளிர்ச்சி.

நமது பிள்ளைகள் டாக்டராக வேண்டும் இஞ்சினியராக வேண்டும் என்ற இலட்சியத்தை விட நமது பிள்ளைகளால நமக்கு கண் குளிர்ச்சி கிடைக்க வேண்டும் என்று பெற்றோர்கள் நினைக்க வேண்டும்.

அதற்காகவே பிள்ளைகள் என்ற் சிந்தனை வலுப்பெற வேண்டும்.

இரண்டாவதாக நமது பிள்ளைகளால் இறையச்சமுடைய சமுதாயத்தின் எண்ணிக்கை பெருக வேண்டும்.
وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا

இந்த வசனத்திற்கு மதிப்பிற்குரிய உஸ்தாது சித்தனையன் கோட்டை கமாலுத்தீன் ஹஜ்ரத் அவர்கள் அருமையாக விளக்கம் சொல்வார்கள்

இறைவா! என்னுடைய குடும்பத்தை தக்வாவுடைய குடும்பமாக ஆக்கி அதன் பொறுப்பாளியாக என்னை ஆக்குவாயாக என்பது இதன் கருத்து என ஹஜ்ரத் அவர்கள் விவரிக்கும் அழகு இன்னும் என் கண்களில் நிற்கிறது.

ஒரு வரலாற்றுத்தகவலை இங்கே குறிப்பிடுவது பொருந்தும்

மூஸா அலை அவர்களை நதியிலிருந்து கண்டெடுத்து பிர் அவ்னது முன்னே கொண்டு சென்ற ஆஸியா அம்மையார் இப்படித்தான் சொன்னார்கள்.

وَقَالَتْ امْرَأَةُ فِرْعَوْنَ قُرَّةُ عَيْنٍ لِي وَلَكَ لَا تَقْتُلُوهُ عَسَى أَنْ يَنفَعَنَا أَوْ نَتَّخِذَهُ وَلَدًا وَهُمْ لَا يَشْعُرُونَ(9)

امرأته آسية بنت مزاحم تخاصم عنه وتذب دونه وتحببه إلى فرعون
فقالت: "قرة عين لي ولك" فقال فرعون أما لك فنعم وأما لي فلا

وقوله: "عسى أن ينفعنا" وقد حصل لها ذلك وهداها الله به وأسكنها الجنه بسببه.
ஆஸியா அம்மையாரின் பேச்சுக்கு பிர் அவ்ன் பதில் பேசாமல் இருந்திருந்தால் மூஸா அலை மூலமாக அவனும் கூட நேர்வழு பெற்றிருக்க கூடும் அறிஞர்கள் கூறுகிறார்கள்.

என்வே குழந்தை வேண்டுவோர் , எனக்கு குழந்தை வேண்டும், அந்தக் குழந்தையால் நான் மகிழ்ச்சியடைய வேண்டும். அந்தக் குழந்தையால் தகவாவுடைய சமுதாயம் செழிப்படைய வேண்டும் என்று நிய்யத் வைக்க வேண்டும்

இது வரை குழந்தை பெற்றுக் கொள்ளாதவர்கள் இந்த நிய்யத்தை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும். குழந்தை பெற்றவர்கள் நிய்யத்தை சரி செயது கொள்ள வேண்டும்.

அல்லாஹ் ந்மது குடும்பத்தை மகிழ்ச்சியான குடும்பமாக்கி தக்வாவுடைய சமுதாயத்திற்கு முன்னுதாரமான குடும்பமாக ஆக்கியருள்வானாக!

இந்த இலக்கு நமக்கு இருக்குமெனில் எண்ணிப்பாருங்கள்! நாம் பிள்ளைகளை வளர்க்கிற விதம் எப்படி இருக்கும்.
 
سهل بن عبد الله الطشتري   சொல்கிறார் நான் சிறு பிள்ளையாக இருக்கிற போது என் தாய
 الله حاضري الله ناضري الله شاهدي الله معي

என்று சொல்லிக் கொடுத்து  மனப்பாடம் செய்து வைத்தார். நான் பெரியவனான போது இதன் அர்த்த்தை என்னிடம் கேட்ட பிறகு ஒரு நாள் இப்படிச் சொன்னார்.
  كان الله معه وناظرا إليه وشاهده أ يعصيه
என வாழ்வில் மற்றக் முடியாத அறிவுரையாக அது அமைந்த்து என்றார்.

தன்னுடைய குடும்பத்தை சிறந்த் குடும்பமாக – முன்னுதாரனமான குடும்பமாக உருவாக்க ஒருவர் தீர்மாணித்து விட்டால் அவர் இப்ப்படித்தானே செயல்படுவார்.

ஒரு முறை ஒரு பெண்மணி ரேடியோவில் வீட்டில் இருக்கிற வரை எங்கள் பிள்ளைகள் நல்லவர்களாக இருக்கிறார்கள், வெளியே செல்லும் போது தான் தவறு செய்கிறார்கள். நாங்கள் அவர்கள் பின்னாலேயே சென்று கொண்டிருக்க முடியுமா? என்று கேட்டார்.

நீங்களும் நானும் காலம் காலமாக கேள்விப்ப்பட்ட ஒரு செய்தியை சொல்கிறேன்.

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் திருடர்களிடம் தன்னுடைய சட்டைப்பையில் 40 தீனார்கள் இருப்பதாக சொன்னார். இவ்வாறு உண்மை சொல்ல உன்னால் எப்படி முடிந்த்து என்று கேட்ட போது என் அம்மா சொன்ன அறிவுரை அது என்று சொன்னார்.

அம்மாவின் அறிவுரை வீட்டு வாசலுக்கு அப்பாலும் ஒரு மகனுக்கு வழி காட்டக்காரணம், அம்மாவின் கண்டிப்பு அல்ல. அம்மாவின் அக்கறையாகும்.

தன் பிள்ளை நல்லபிள்ளையாக வள்ரவேண்டும் என்பதில் அம்மாவின் தூய எண்ணமும் ஈடுபாடும் அவரது பிள்ளையிடம் அதற்குரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதே உண்மை.

நாம் அப்படி உருவாக்க எண்ணுகிறோமா என்பது தான் இப்போதைய பிரச்சினை

பிள்ளைகள் மீது அதிக அன்பு வைத்திருக்கிறோம் சந்தேகமில்லை,
வேண்டியதை வாங்கிக் கொடுக்கிறோம் சந்தேகமில்லை.
அவர்களுக்கு விலை உயர்ந்த பொருட்களை வாங்கித்தருவதை நமது சமூக அந்தஸ்தாக கருதுகிறோம். சந்தேககமில்லை.

அடிப்படையில் நம்முடைய பிள்ளைகள் நல்ல பிள்ளைகளாக இறையச்சமுடைய சம்தாயத்தின் பிரஞைகளாக வளரவேண்டும் என்ற அக்கறை இருக்கிறதா என்ற விசயத்தில் நம்மிடம் தடுமாற்றம் இருக்கிறது தெளிவும் உறுதியும் இல்லை.

அதனால் நம்முடையை திட்டமிடுதல்கள் நம்முடைய பிள்ளைகளை எப்படி உருவாக்கி வைத்திருக்கிறது.

·         பெற்றோரின் செல்லத்தால் எவரையும் மதிக்காத – திமிர் பிடித்த பிள்ளைகள்!
·         சதா இண்டெர்னெட்டிலும் பேஸ்புக்கிலும் உலாவுகிற இளசுகள்,  
·         மார்க்கம் என்றால் ஒரு மார்க்கமாக பார்க்கிற பட்ட்தாரிகள்

நேற்றைக்கு முன் தினம் பத்ரிகைகளில் ஒரு செய்தி.

 ஒரு பெண் தன்னுடைய பேஸ்புக்கில் இப்போது நான் தனியாக வீட்டில் இருக்கிறேன் என்று ஸ்டேட்டஸ் வெளியிட்டிருக்கிறாள். சற்று நேரத்தில் வீட்டுக்கு வந்த அவளுடை நணபன் அவளை கற்பழித்து விட்டு ஓடிவிட்டான்.

அல்லாஹ் நம்முடைய இல்லங்களை காப்பாற்றுவானாக! நம்முடையை வீடு இப்படி இல்லை என்றால் அல்ஹம்துலில்லாஹ். ஒரு வேளை இது போலவோ அல்லது இதற்கு கூடுதல் குறைவாகவோ இருக்கும் என்றால் அல்லாஹ்விடம் அதிகமதிகம் ரப்பனா ஹப்லனா துஆ வை ஓதிக் கொண்டு சீர்திருத்த முயற்சிகளை நாம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

நான் மீண்டும் தெரியப்படுத்திக் கொள்கிறேன்,

நல்ல குழந்தைகளைப் பற்றிய சிந்தனை சாதாரணமாக எடுத்துக் கொள்ளத் தக்கதல்ல
திருமணமாகிற போது  பலரும் அசட்டையாக இருக்கிறார்கள்.

முதலிரவில் மனைவியை தொடுகிற முதல் தருணத்திலிருந்து குழந்தையைப் பற்றிய சிந்தனை அவசியம்..

மனைவியை தொடும் முதல் சந்தர்ப்பத்தில் சாத்தானிய தீண்டுதல் இல்லாத சந்த்திகளைப் பற்றிய நினைப்பை நபி (ஸல்) அவர்கள் தம்பதிகளுக்கு ஊட்டினார்கள்.

 ابن عباس - رضي الله عنه - قال : قال رسول الله صلى الله عليه وسلم : ( لو أن أحدكم إذا أراد أن يأتي أهله قال : بسم الله ، اللهم جنبنا الشيطان ، وجنب الشيطان ما رزقتنا ، فإنه إن قضي بينهما ولد من ذلك لم يضره الشيطان أبدا ) ( متفق عليه

குழந்தை வேண்டும் என்ற சிந்தனை பொதுவாக இருப்பது கூடாது அது எப்படி இருக்க வேண்டும் என நபிமார்களின் பிரார்த்தனைய்லிருக்கிற  எச்சரிக்கையை நாம் கவனிக்க வேண்டும். .
رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ
وَاجْعَلْهُ رَبِّ رَضِيًّا

நம் குழந்தை தீய வழியில் சென்று விடக்கூடாது என்பதில் முழு அக்கறை பெற்றோருக்கு வேண்டும்.

குழந்தைக்கு பெயர் வைத்த இம்ரானின் மனைவி அடுத்த்தாக செய்த பிரார்த்தனை
وَإِنِّي أُعِيذُهَا بِكَ وَذُرِّيَّتَهَا مِنْ الشَّيْطَانِ الرَّجِيمِ(36)
عن أبي هريرة قال: قال رسول الله صلى "ما من مولود يولد إلا مسه الشيطان حين يولد فيستهل صارخا من مسه إياه إلا مريم وابنها"

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صِيَاحُ الْمَوْلُودِ حِينَ يَقَعُ نَزْغَةٌ مِنْ الشَّيْطَانِ – مسلم

நம்முடைய நிய்யத் சரியாக இருக்கும் என்றால் அல்லாஹ் அதற்கான வழியை இலேசாக்குவான்.

நம்முடைய பிள்ளைகளை நல்லவர்களாக வளர்க்க மார்க்கம் நமக்கு பல ஆலோசனைகளை வழங்கியிருக்கிறது

மகிழ்ச்சியை தருகிற நல்ல பிள்ளைகள் என்ற நிய்யத்திற்கு அடுத்தபடியாக

கொளைகை அகீதா -  வழிபாடுகள் தீன் - பண்பாடு அக்லாக் - இந்த மூன்று விச்யத்திலும் பெற்றோர்களின் பங்களிப்பு இருக்க வேண்டும்.

அல்லாஹ் ரஸுல் மறுமை போன்ற மார்க்கத்தின் அடிப்படையான போதைகளை பெற்றோர் பிள்ளைகளுக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்க வேண்டும் குறிப்பாக இஸ்லாத்தின் வழி காட்டுதல்களுக்கு மாற்றமான வற்றை கண்டித்து திருத்த வேண்டும்.

நபிமார்கள் தங்களது குடும்பத்தினருக்கு சொன்ன அறிவுரைகள் பலவற்றை குர் ஆன் எடுத்துக்காட்டுகிறது,

وَوَصَّى بِهَا إِبْرَاهِيمُ بَنِيهِ وَيَعْقُوبُ يَابَنِيَّ إِنَّ اللَّهَ اصْطَفَى لَكُمْ الدِّينَ فَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ(132)
أَمْ كُنتُمْ شُهَدَاءَ إِذْ حَضَرَ يَعْقُوبَ الْمَوْتُ إِذْ قَالَ لِبَنِيهِ مَا تَعْبُدُونَ مِنْ بَعْدِي قَالُوا نَعْبُدُ إِلَهَكَ وَإِلَهَ آبَائِكَ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ إِلَهًا وَاحِدًا وَنَحْنُ لَهُ مُسْلِمُونَ(133)
ஒரு தந்தை தன் மகனுக்கு செய்த உபதேசங்களையே பிரதான மாக கொண்டு திருக்குர் ஆனில் லுக்மான் என்ற அத்தியாயம் அமைந்திருக்கிறது.

وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَابُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ(13)وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنْ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ(14) وَإِنْ جَاهَدَاكَ عَلى أَنْ تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا وَاتَّبِعْ سَبِيلَ مَنْ أَنَابَ إِلَيَّ ثُمَّ إِلَيَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُمْ بِمَا كُنتُمْ تَعْمَلُونَ(15)يَابُنَيَّ إِنَّهَا إِنْ تَكُنْ مِثْقَالَ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ فَتَكُنْ فِي صَخْرَةٍ أَوْ فِي السَّمَاوَاتِ أَوْ فِي الْأَرْضِ يَأْتِ بِهَا اللَّهُ إِنَّ اللَّهَ لَطِيفٌ خَبِيرٌ(16)يَابُنَيَّ أَقِمْ الصَّلَاةَ وَأْمُرْ بِالْمَعْرُوفِ وَانْهَ عَنْ الْمُنكَرِ وَاصْبِرْ عَلَى مَا أَصَابَكَ إِنَّ ذَلِكَ مِنْ عَزْمِ الْأُمُورِ(17) وَلَا تُصَعِّرْ خَدَّكَ لِلنَّاسِ وَلَا تَمْشِ فِي الْأَرْضِ مَرَحًا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ(18)وَاقْصِدْ فِي مَشْيِكَ وَاغْضُضْ مِنْ صَوْتِكَ إِنَّ أَنكَرَ الْأَصْوَاتِ لَصَوْتُ الْحَمِيرِ(19)


நபிகள் நாயகம் (ஸல்) சொன்னார்கள்;

إذا أفصح اولادكم فعلموهم لا إله إلا  الله

பேச முறபடும் போது லாயிலாக இல்ல்லாஹு சொல்லிக் கொடுங்கள்

நேற்று ஒரு அம்மா தன் குழந்தையின் மழலை மொழியை பிறரிடம் அறிமுகப்படுத்தி பெருமைப பட்டுக் கொண்டிருந்தாள். 
எங்கே பாடு :
பை பை
எங்கே ஓது
ரப்பனா ஆதினா

இந்த இரண்டுக்கும் சம்மான இடத்தை  நாம் தரும் போது குழந்தை எப்படி வளரும். இதில நாம் கவனம் செலுத்த வேண்டும். நமது அக்கறை எப்படியோ அப்படித்தான் எதுவும் அமையும். பிள்ளை வளர்ப்பும் அப்படித்தான்,

சிறுவர்களானதும் மார்க்க கடைமை அறீமுகப்படுத்துங்கள்

وإذا صغروا قمروهم بالصلوة

தொடர்ந்து நற்பண்புகளை சொல்லிக் கொடுங்கள்

நம்மில் எத்தனை பேர் குழந்தைகளுக்கு அமைதியாக உயர் பண்பாடுகளை போதித்திருக்கிறோம்.

உண்மை பேசுவதை - நாணயாமக் நடப்பபதை - நல்லவர்களாக இருக்க வேண்டியதன் அவசியத்தை – கற்பொழுக்கம் பேணுவதை -

أَنَسَ بْنَ مَالِكٍ يُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَكْرِمُوا أَوْلَادَكُمْ وَأَحْسِنُوا أَدَبَهُمْ

عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَأَنْ يُؤَدِّبَ الرَّجُلُ وَلَدَهُ خَيْرٌ مِنْ أَنْ يَتَصَدَّقَ بِصَاعٍ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ

عن علي عن رسول الله صلى الله عليه وسلم.
"
أدبوا أولادكم على ثلاث خصال : على حب نبيكم ، و حب أهل بيته ، و على قراءة القرآن ، فإن حملة القرآن في ظل الله يوم لا ظل إلا ظله ، مع أنبيائه و أصفيائه " . رواه الديلمي ( 1/1/24 )

عَنْ مُعَاذٍ قَالَ أَوْصَانِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَشْرِ كَلِمَاتٍ قَالَ
·       لَا تُشْرِكْ بِاللَّهِ شَيْئًا وَإِنْ قُتِلْتَ وَحُرِّقْتَ
·       وَلَا تَعُقَّنَّ وَالِدَيْكَ وَإِنْ أَمَرَاكَ أَنْ تَخْرُجَ مِنْ أَهْلِكَ وَمَالِكَ
·       وَلَا تَتْرُكَنَّ صَلَاةً مَكْتُوبَةً مُتَعَمِّدًا فَإِنَّ مَنْ تَرَكَ صَلَاةً مَكْتُوبَةً مُتَعَمِّدًا فَقَدْ بَرِئَتْ مِنْهُ ذِمَّةُ اللَّهِ
·       وَلَا تَشْرَبَنَّ خَمْرًا فَإِنَّهُ رَأْسُ كُلِّ فَاحِشَةٍ
·       وَإِيَّاكَ وَالْمَعْصِيَةَ فَإِنَّ بِالْمَعْصِيَةِ حَلَّ سَخَطُ اللَّهِ عَزَّ وَجَلَّ
·       وَإِيَّاكَ وَالْفِرَارَ مِنْ الزَّحْفِ وَإِنْ هَلَكَ النَّاسُ وَإِذَا أَصَابَ النَّاسَ مُوتَانٌ وَأَنْتَ فِيهِمْ فَاثْبُتْ
·       وَأَنْفِقْ عَلَى عِيَالِكَ مِنْ طَوْلِكَ وَلَا تَرْفَعْ عَنْهُمْ عَصَاكَ أَدَبًا وَأَخِفْهُمْ فِي اللَّهِ – احمد
நிறைவாக ஒன்றை சொல்லி முடிக்கிறேன்,
·         இமாம் ஷாபி எப்படி வர வேண்டும் என்று அவரது தாயார் விரும்பினார்களோ அப்படி வந்தார். அன்னாரை இமாம் மாலிக்கிடம் சிறுவயதிலேயே தாயார் அனுப்பி வைத்தார்.
·         தன் மகன் மக்காவின் இமாமக வேண்டும் என்று தன்னுடைய தாய துஆ செய்த்தாக மக்கள் இதயங்களை கொள்ளை கொண்ட ம்க்காவின் இமாம் சுதைசி ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.
நமது பிள்ளைகள் விசயத்தில் நமக்கு நல்ல நிய்யத்தும்
அந்த நிய்யத்தை மெய்யாக்கும் நல்ல முயற்சிகளும் நமக்கு வேண்டும்.

4 comments:

  1. good naseehath masha allahh

    ReplyDelete
  2. hathees maslahi.6:04 AM

    Jazakallah.

    ReplyDelete
  3. அல்ஹம்துலில்லாஹ்! மிகவும் அருமையான உதாரணங்கள்!!
    பாரக்கல்லாஹ்!!!

    ReplyDelete