வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Wednesday, February 19, 2014

தக்வாவின் வாழ்விலக்கணம்



وَلَقَدْ وَصَّيْنَا الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِكُمْ وَإِيَّاكُمْ أَنْ اتَّقُوا اللَّهَ وَإِنْ تَكْفُرُوا فَإِنَّ لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَكَانَ اللَّهُ غَنِيًّا حَمِيدًا(131)4:
ஒவ்வொரு ஜும் ஆவிலும் புது புது தலைப்புக்களில் உரை நிகழ்த்தப்படுகிறது.
அரிதான பல செய்திகள் சொல்லப்படுகின்றன.
எத்தை விசயங்கள் சொல்லப்பட்டாலும் ஊஸீகும் பிதக்வல்லாஹ் என்பது தான் ஜும் ஆ வின் பிரதான அறிவுரை
கேட்டுக் கேட்டு பழகிப் போயிருந்தாலும் தேய்ந்தமானம் ஆகாத சொல் இது. தேய்மானம் ஆகி விடக்கூடாத சொல் இது. நம்முடைய வாழ்க்கையை வழி நடத்த வேண்டிய வாக்கியம்.
அல்லாஹ் வஸிய்யத் என்ற சொல்லில் மனிதர்களுக்கு செய்த ஒரே உபதேசம் இதுதான்.
وَلَقَدْ وَصَّيْنَا الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِكُمْ وَإِيَّاكُمْ أَنْ اتَّقُوا اللَّهَ وَإِنْ تَكْفُرُوا فَإِنَّ لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَكَانَ اللَّهُ غَنِيًّا حَمِيدًا(131)
இன்றைய நம்முடைய வாழ்வியல் போங்கில் இஸ்லாமின் அடையாளம் பெரிதுபடுத்தப்படுகிறது. எங்கும் இஸலாம் எதிலும் இஸ்லாம் என்ற கோஷமும் அதை உயர்த்திப் பிடிக்கும் இயக்கங்களும் பெருகிவிட்டன,  
இயக்கங்களை சார்ந்தவர்கள் தங்களது இயக்கத்திற்கான் செயல்பாட்டை இஸ்லாம் என்று நினைக்கின்றனர். கொள்கை வாதிகள் அவர்களது கொள்கை வழிப் பிரச்சாரத்தை இஸ்லாம் என்கின்றனர். -  இந்த ஈடுபாட்டில் தக்வாவின் அம்சங்கள் மிளிர்கிறதா என்பது தான் இந்த தலை முறை முஸ்லிம் சமுதாயம் சந்திக்கிற மிகப்பெரிய கேள்வியாகும்.
அருமைப் பெருமக்களே ! இளைஞர்களே! தகவாவின் வாழ்வுதான் நமக்குத்தேவை என நாம் உணர்வோம். அல்லாஹ் கிருபை செய்வானாக!
இஸ்லாத்தின் - திருக்குர் ஆனின் - பெருமானாரின் முதலும் முடிவுமான அறிவுரை தக்வா தான்.
அதனால் தான் எத்தனையோ செய்திகள் பேசப்பட்டாலும் கூட ஊஸிகும் பிதக்வல்லாஹ் என்பது தான் ஜும் ஆ குத்பாவின் பர்ளான் அறிவுரையாகும்.
தக்வாவிற்கான விளக்கம் அரிதான – புரிந்து கொள்ளச் சிரம்மான பூடகமான் ஒன்றல்ல. மிக எளிமையானது.
உங்களது மனதிலிருக்கிற எண்ணங்களும் திட்டங்களும் உருவம் பெற்று வெளியே வருமானால் எது வெளியே தெரிந்து  விடுவதை நீங்கள் விரும்பமாட்டீர்களோ அத்தைகையவற்றை விட்டும் விலகிக் கொள்வது தகவா. என்று சில அறீஞர்கள் விளக்கம் சொன்னாகள்.
இது கூட கொஞ்சம் தத்துவார்த்தமாக தெரியலாம். மிக எதார்த்தமாக தக்வாவுக்கு சட்ட அறிஞர்கள் பொருள் சொன்னார்கள்
فتقوى الله معناها : أن تفعل ما أمرك الله -سبحانه وتعالى- به رجاء ثوابه، وأن تترك معصية الله خوفًا من عقابه .
அல்லாஹ்வை உண்மையாக பயந்து கொள்ளுங்கள் என்று குர் ஆன் கூறுகிறது. அதன கருத்து அல்லாஹ்வை முழுமையாக பயந்த்த கொள்ளுங்கள் என்பதாகும்.
(و حَقَّ تُقَاتِهِ ) معناها : أن الإنسان لا يترك شيئًا مما أمر الله به إلا وفعله، وأن لا يفعل شيئًا مما نهى الله عنه بأن يتجنب كل ما نهى الله عنه .
عبد الله بن مسعود - رضي الله عنه - : اتقوا الله حق تقاته: أن يُطاع فلا يُعصى، وأن يُذكر فلا يُنسى، وأن يُشكر فلا يُكفر
அல்லாஹ் கட்டளையிட்டவை அனைத்தையும் செய்வது அல்லாஹ் தடுத்த அனைத்தை விட்டும் விலகிக் கொள்வது முழுமையான தகவா!
அபூபக்கர் ரலி ஒரு தடவை பெருமானார் கேட்ட அனைத்து நற்செயல்களையும் செய்திருந்தார்கள்.
பிறரிடம் எதையும் கேட்காதீர் என்ற பெருமானாரின் உத்தரவை தலை மேல் தாங்கிக் கொண்ட ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) மக்களிடம் எதையுமே கேட்காதவராக மாறினார். ஒட்டகையின் மேல் உட்கார்ந்திருக்கிற போது சாட்டை கீழே விழுந்து விட்டால் அதை கூட மற்றவரிடம் எடுத்துக் கேட்க மாட்டார்.
இது தக்வாவிற்கான தத்துவார்த்த விளக்கங்கத்தையும் பொருள் விளக்கத்தையும் புத்தகத்தில் நாம் படிக்கலாம். தக்வாவிற்கான வாழ்விலக்கணம் ஒன்றிருக்கிறது.  அதை நாம் இறையச்சமுடைய நல்லடியார்களின் வாழ்க்கையிலிருந்து நாம் படிக்க முடியும்.. அது தான் எதார்த்த்தில் சீக்கிரமாக நம்மை தக்வாவின் தன்மைகளை உணரச் செய்யக் கூடியது.
சஹாபாக்களின் வரலாற்றில் பன்னூற்றுக்கணக்கான உதாரணங்களை பார்க்கலாம்.
சொர்க்க்க வாதி என்று உறுதிப் படுத்தப் பட்ட பிறகும் அவர்கள் தமது நிலையைப் பற்றி எப்படி பயந்தார்கள்?
عمرو بن العاص
كان داهية من دهاة العرب، وصاحب رأي وفكر، وفارسا من الفرسان، أرسلته قريش قبل إسلامه إلى الحبشة ليطلب من النجاشي تسليمه المسلمين الذين هاجروا إلى الحبشة فرارا من الكفار وإعادتهم إلى مكة لمحاسبتهم وردهم عن دينهم الجديد فلم يستجب له النجاشي. وبعد إسلامه فتح مصر بعد أن قهر الروم وأصبح واليا عليها بعد أن عينه أمير المؤمنين عمر بن الخطاب رضي الله عنه.
دخل الإسلام في السنة الثامنة للهجرة بعد فشل قريش في غزوة الأحزاب، وقدم إلى المدينة المنورة مع خالد بن الوليد وعثمان بن طلحة مسلمين بعد مقاتلتهم الإسلام.
கடைசி கட்டத்தில் இஸ்லாமை தழுவினார். இஸ்லாமிற்காக தீரம்மிக்க பல பணிகளை செய்தார்.
சிரியா எகிப்து பாலஸ்தீனம் ஆகிய பகுதிகளில் அவர் வென்றெடுத்த பகுதிகளாகும்.
பின்னாள் எகிப்தின் ஆளுனரானார்.
மரண தருவாயில் அழுது புலம்பினார். நான் மூன்று கட்டங்கள்ள கடந்து வந்துள்ளேன். ஜாஹ்லிய்யாவுல் இறந்திருந்தால் நரகம் கிடைத்திருக்கும்
பெருமானார் காலத்தில் இறந்திருந்தால் சொர்க்கம் கிடைத்திருக்கும்
இந்த அரச பொறுப்புக்கள்ள ஏற்ற நிலையில் இறக்க்கிறேன், என்ன வாகுமோ தெரியவில்லை. என்னை அடக்கிய பிறகு ஒரு ஒட்டகம் அறுத்துப் பங்கிடப்படுகிற அளவுக்குண்டான நேரம் என் கப்ருக்கு பக்கத்தில் நின்று துஆ செய்! என்று தன் மகனிடம் சொன்னார்.
حينما حضر عمرو بن العاص الموت .. بكى طويلا .. و حول وجهه إلى الجدار , فقال له إبنه :ما يبكيك يا أبتاه ؟ أما بشرك رسول الله ....
فأقبل عمرو رضي الله عنه إليهم بوجهه و قال : إن أفضل ما نعد ... شهادة أن لا إله إلا الله , و أن محمدا رسول الله ..
إني كنت على أطباق ثلاث ..
لقد رأيتني و ما أحد أشد بغضا لرسول الله صلى الله عليه و سلم مني , و لا أحب إلى أن أكون قد استمكنت منه فقتلته , فلو مت على تلك الحال لكنت من أهل النار.....
فلما جعل الله الإسلام في قلبي , أتيت النبي صلى الله عليه و سلم فقلت : إبسط يمينك فلأبايعنك , فبسط يمينه , قال : فقضبت يدي ..
فقال : ما لك يا عمرو ؟
قلت : أردت أن أشترط
فقال : تشترط ماذا ؟
قلت : أن يغفر لي .
فقال : أما علمت أن الإسلام يهدم ما كان قبله , و أن الهجرة تهدم ما كان قبلها , و أن الحج يهدم ما كان قبله ؟
و ما كان أحد أحب إلي من رسول الله صلى الله عليه و سلم و لا أحلى في عيني منه , و ما كنت أطيق أن أملأ عيني منه إجلالا له , و لو قيل لي صفه لما إستطعت أن أصفه , لأني لم أكن أملأ عيني منه ,
و لو مت على تلك الحال لرجوت أن أكون من أهل الجنة ,
ثم ولينا أشياء , ما أدري ما حالي فيها ؟
فإذا أنا مت فلا تصحبني نائحة و لا نار , فإذا دفنتموني فسنوا علي التراب سنا ثم أقيموا حول قبري قدر ما تنحر جزور و يقسم لحمها , حتى أستأنس بكم , و أنظر ماذا أراجع به رسل ربي ؟

இந்த தீனுக்காக நிறையச் செய்து விட்ட்தாக பெருமிதம் கொள்கிற நமது நிலை எப்படி இருக்கிறது யோசித்துப் பார்க்க வேண்டும்.
அப்துல் லாஹ் பின் முபாரக் – மாபெரும் மார்க்க சீர்திருத்த் வாதி
ஒரு தடவை அவர் பக்தாதில் உரை யாற்றிய போது 120 முகப்பிர்க் ள் இருந்தனர்.
மரணப்படுக்கையில் தன்னை கட்டிலிருந்து கீழே தரையில் கிடத்துமாறு கூறினார்.
தரையில்  புரண்டு அழுது புலம்பினார்.
யா அல்லாஹ்! இந்தக் கிழவனின் முதுமையின் மீது கருணை காட்டு!
இது போல பன்னூறு உதாரணங்கள் இஸ்லாமிய வரலாறில் தகவாவிற்கான வாழ்விலக்கணங்களாக மிளிர்கின்றன.
அவர்களது வாழ்வில் எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்பும் அல்லாஹ்வை பயந்தார்கள்.
பார் போற்றும் நல்ல காரியங்களை செய்த பிறகும் அல்லாஹ் என்ன செய்வானோ என அல்லாஹ்வை பயந்தார்கள்.
நாம் படித்துக் கொள்ள் வேண்டிய பாடம் இது.
இனி எந்த ஜும் ஆவ்லும் ஊஸீகும் பிதக்வல்லாஹ் என்ற வார்த்தையை கேட்கிற போதும் நமது உடலில் ஒரு சிலிர்ப்பு வரவேண்டும்.
அல்லாஹ் கிருபை செய்வானாக!

1 comment:

  1. طلحة مصباحي5:52 AM

    جزاك الله خيرا كثيرا

    ReplyDelete