வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, February 27, 2014

அவர்களை விட்டு விடுங்கள்يُرِيدُونَ لِيُطْفِئُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَاللَّهُ مُتِمُّ نُورِهِ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ(8)
1500 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றும் உலகில் வேகமாக பரவிவரும் மார்க்கம் இஸ்லாம் ஆகும்.
according to others including the Guinness Book of World Records, Islam is the world’s fastest-growing religion by number of conversions each year.
Islam is the fastest growing religion in the world - the World Christian Database as of 2007.
யாராவது ஒரு பிரபலம் இஸ்லாமைத் தழுவி விட்டால் முஸ்லிம் சமுதாயம்குறிப்பாக தமிழ் பேசுகிற முஸ்லிம் சமுதாயம்அதை ஒரு மகிழ்ச்சிக்குரிய செய்தியாக எடுத்துக் கொண்டு நகர்ந்து விடாமல்அந்தப்பிரபலத்தை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடுகிறது. அவரை எப்படியாவது தங்களது ஊருக்கு வரவழைத்து விருந்து கொடுத்து நான் முஸ்லிமானத் எப்படி என்று பேசச் சொல்கிறது.
அப்துல்லாஹ் பெரியார் தாசன் ஒரு கூட்டத்தில் இப்படிக் கேட்டே விட்டார்இன்னும் எத்தனை கூட்ட்த்தில் இதே தலைப்பில் என்னை பேசச் சொல்வீர்கள்?
தவ்ஹீதின் போர்வையிலும் தாவாவின் போர்வையிலும் இயங்குகிற சில இயக்கங்கள் இத்தகைய பிரபலங்களை வைத்து காசு பார்க்கின்றன. சில பெறுமை தேடிக் கொள்ள முயற்சி செய்கின்றன.
எனக்கேற்பட்ட ஒரு அதிர்ச்சியான அனுபவம். உமர் பாரூக் என்ற என்ற அறிவியல ஆய்வாளர் இஸ்லாமை தழுவினார். அவர் என்னிடம் நேரிடையாக கூறிய செய்தி இது.
நான் முஸ்லிமாக காரணம் ஒரு ஒரு வைணவ பிராமனரான என்னுடைய ஆசிரியர் ஆவார். அவர்  ஒரு அறிவியல் செமினாரில் பேசுகிற போது திருக்குர் ஆனில் யாசின் அத்தியாயத்தில் கோள்களின் ஓட்டம் சம்பந்தமாக சிறப்பாக பேசப்பட்டுள்ளதாக சொன்னார். ஒரு பிராமணரே இப்படிச் சொல்கிறாறே என ஆச்சரியப்பட்ட நான் திருக்குர் ஆனை படிக்க ஆரம்பித்தேன், நான் இஸ்லாமை தழுவ அதுவே காரணாமாகும். பின்னால் என்னை பலரும் நிகழ்ச்சிகளுக்கு அழைத்தார்கள். தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தினர்களும் அழைத்தார்கள். ஒரு நாள் அவர்களுடைய இணைய தளத்தில் நான் எதோச்சையாக பார்த்தேன். என்னுடைய படத்தை போட்டுஎங்கள் மூலம் இஸாமை தழுவியவர் என்று குறித்திருந்தனர். அத்தோடு அவர்களுடைய தொடர்பை நான் விட்டு விட்டேன்.”
இந்த நிகழ்ச்சியை கேள்விப்பட்ட பிறகு நான் ஜும் வில் சொன்னேன். தவ்ஹீத் இயக்கத்தவர்கள் - அமைப்புக்காரர்கள் பொதுப்பிரச்சினைக்கு கூப்பிடுகிறார்கள் என்று போய்விடாதீர்கள், தொப்பி போட்ட உங்களது போட்டாவைக் காட்டி இவர்கள் எல்லோரும் எங்களால் முஸ்லிம் ஆனவர்கள் என்று சொல்லி வெளிநாட்டில் விற்று விடுவார்கள்
ஜும் முடிந்த பிறகு அவர்களோடு தொடர்பில் இருந்த ஒருவர் என்னைச் சந்தித்து அவர்கள் அப்படிச் செய்யக் கூடியவர்கள் தான். விளையாட்டாகவும் வேடிக்கையாகவும் ஏராளமான பொய்களைச் சொல்லி அவர்கள் பணம் பார்ப்பது உண்மைதான். என்றார்.
எனவே அருமையானவர்களே!     
ஒருவர் முஸ்லிமாகிற போது அவரை நிம்மதியாக இஸ்லாமிய வழி முறைய பின்பற்ற விட்டு விடுங்கள்! மார்க்கத்தில் நுழைகிற அனைவரையும் சமத்துவமாக சகோதரத்துவத்தோடு நடத்துங்கள். தேவையற்ற பிரபலத்தையும் வாக்குறிதியையும் முக்கியத்துவத்தை கொடுக்காதீர்கள்.
கொஞ்ச நாள் முக்கியத்துவம் கொடுத்து இடைவெளியில்லாம் பிஸியாக்குவது பிறகு அம்போ என்று விட்டுவிடுவது இது நம்மிடம் இருக்கிற தேவையற்ற பழக்கம். இது பற்றி அப்துல்லாஹ் அடியார் வருத்தப்பட்டு கூறியுள்ளார்.
நாம் என்ன நினைக்கிறோம்? ஒருவர் முஸ்லிமாகி விட்டால் - அவர் எவ்வளவு தான் பிரபலமாக இருந்தாலும்அதனால் இஸ்லாத்திற்கு பெருமை என்று நினைக்கிறோமா?
அப்படி என்றால் நாம் இஸ்லாத்தை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று பொருள்.
உலகில் யார் இஸலாத்திற்கு வந்தாலும்அது யூசுப் இஸ்லாமாக இருதாலும்மைக்கேல் ஜாக்ஸனின் தங்கையாக இருந்தாலும் ஆர் ரஹ்மானாக இருந்தாலும்அப்துல்லாஹ் அடியாராக இருந்தாலும் அப்துல்லாஹ் பெரியா தாசனாக இருந்தாலும் - யுவன் சங்கர் ராஜாவாக இருந்தாலும்அதனால் இஸ்லாத்திற்கு நன்மை என்பதல்ல அவர்களுக்குத் தான் நன்மையாகும்.

அந்த நன்மையை தேடித்தான் அவர்கள் இஸ்லாத்திற்கு வருகிறார்கள்
எனக்குத் தெரிந்த ஒருவர் குடிப்பழக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக இஸ்லாத்திற்கு வந்தார்இன்னொரு இந்து சகோதரர், பெரியப்பா மகளை திருமணம் செய்து கொள்வதற்காக இஸ்லாத்திற்கு வந்தார்.
இராஜாஜியிடம் அவரது உறவுக்காரப் இளைஞர் ஒருவர்  தன்னுடைய பெரியப்பா மக்ளை விரும்புவதாக  கூறிய போதுஅது தான் உன் முடிவென்றால் இஸ்லாமை தழுவிவிடு என்று இரஜாஜி கூறினார்.
இந்தியாவில் பல கிராமங்கள் தீண்டாமை கொடுமையிலிருந்து தப்பிப்பதற்காக இஸ்லாமிற்கு வந்தன.
மேலை நாடுகளில் பல பிரமுகர்கள் இஸ்லாமைத் தழுவுகிறார்கள். காரணம்அந்நாடுகளில் வாழ்க்கை முறை அர்த்தமற்று வெறும் போதை ஆபாசத்தை மையாமாக கொண்டிருப்பதை வெறுத்து அதிலிருந்து விடுபட்டு ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கை வேண்டும் என்று தேடி இஸ்லாமிற்கு வருகிறார்கள்!
கருப்பன் வெள்ளையன் என்ற இனவெறியிலிருந்து தப்பிப்பதற்காக சிலர் இஸ்லாமிற்கு வந்தனர்.
முஹம்மது அலி கிளே ஒலிம்பிக்கில் அமெரிக்காவிற்காக பல தங்கப்பதகங்களை வாங்கிக் கொடுத்தவர். அந்த மகிழ்ச்சியில் நணபர்களுடன் ஒரு ஹோடலுக்கு சென்ற அவரை கருப்பர் என்பதால் உணவகத்திற்குள் அனுமதிக்க மறுத்தார்கள். மனம் வெறுத்துப் போன அவர் தனக்கு கிடைத்த தஙக மெடல்களை ஆற்றீல் வீசினார். பிறகு இன்வெறிக்கொடுமையிலிருந்த் தப்பிப்பதற்கு இஸ்லாமே தீர்வென்று கருதி இஸ்லாமைத் தழுவினார்.
இவ்வாறு யாரெல்லாம் இஸ்லாமைத் தழுவினார்களோ அவர்களை அனைவரும் இஸ்லாமினால் நன்மையடைந்தவர்கள்.
உமர் (ரலி) இஸ்லாமைத் தழுவியதை விட இஸ்லாமிய வரலாற்றில் சாதனை நிகழ்வு வேறு என்னவாகவாக இருக்க முடியும்?
قال عبد الله بن مسعود وما عبدنا الله جهرة حتى أسلم عمر .
பெருமானாரின் துஆ அல்லவா அது
عَنْ ابْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: اللَّهُمَّ أَعِزَّ الْإِسْلَامَ بِأَحَبِّ هَذَيْنِ الرَّجُلَيْنِ إِلَيْكَ بِأَبِي جَهْلٍ أَوْ بِعُمَرَ بْنِ الْخَطَّابِ" وَكَانَ أَحَبَّهُمَا إِلَيْهِ عُمَرُ.
அவரது வருகையால் மலக்குகள் மகிச்சியடைந்தனர்
عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ لَمَّا أَسْلَمَ عُمَرُ نَزَلَ جِبْرِيلُ فَقَالَ يَا مُحَمَّدُ لَقَدْ اسْتَبْشَرَ أَهْلُ السَّمَاءِ بِإِسْلَامِ عُمَرَ.

ஆனால் இஸ்லாமை ஏற்றுக்க் கொண்டதால் தனக்குத்தான் நன்மை என உமர் ரலி அவர்கள் நினைத்தார்கள்.
إنا كنا أذل قومٍ فأعزنا الله بالإسلام فمهما نطلب العزة بغير ما أعزنا الله به أذلنا الله. -- أخرجه الإمام الحاكم النيسابوري

உமர் ரலி அவர்களை விடச் சிறப்பாக யாரும் மார்க்கத்தை தழுவிட முடியாது. இஸ்லாத்தினால் நன்மை அடைந்ததிதிலும் அவரைப் போல் இன்னொருவர் இருக்க முடியாது.
இஸ்லாம் ஒன்றும் அரசியல் கட்சியோ அல்லது அரசியல் தலைமையோ அல்ல. கை தட்டல்கள் அதிகமானாலோ ஆட்கள் புதிதாக சேர்ந்தாலோ ஆர்ப்பாட்டமாக நடந்து கொள்வதற்கு
கன்னியாகுமரியில் அரசியல் பாரம்பரியத்தைச் சேர்ந்த ஒருவர் இன்னொரு கட்சியில் சேர்ந்தார் என்றதும் அந்தக் கட்சிக்கு இது வலுவாக அமையும் என்று பத்ரிகைகள் எழுதுகின்றன. அது போலவா ஒருவர் இஸ்லாமைத் தழுவதும்?
ஒரு தனி நபரினாலோ முஸ்லிம் சமுதாயத்தினாலோ இஸ்லாம் அடைந்த நன்மையை விட இஸ்லாமிய மார்க்கத்தினால் தனிநபர்களும் முஸ்லிம் சமுதாயமும் அடைந்த நன்மைகளே அதிகம்.
முஸ்லிம் சமுதாயம் மிக மோசமாக தோல்விகளில் துவண்டு போயிருந்த சமயங்களில் இஸ்லாம் அவர்களை காப்பாற்றி மீட்டுருவாக்கம் செய்திருக்கிறது.
முஸ்லிம் சமுதாயத்தின் 1500 ஆண்டு கால வரலாற்றில் அது சந்தித்த சோதனைகளில் மிக்க் கொடுமையானது ஹிஜ்ரி 7 ம் நூற்றாண்டில் அதாவத் கிபி 13 வது நூற்றாண்டில் ஏற்பட்ட தாத்தாரிகளின் படையெடுப்பாகும்.
(رجال الفكر والدعوة في الإسلام   என்ற நூலில் அபுல் ஹஸன் அலி நத்வி அவ்ர்கள் ஒரு தனி தலைப்பில் தாத்தாரியங்களினால் ஏற்பட்ட தாக்குதலையிம் அதன் விளைவுகளையும் அதிலிருந்த் இஸ்லாம் மீண்ட விதத்தையும் நெஞசை உருக்கும் வகையில் எழுதியுள்ளார்.)
துருக்கியின் கிழக்கில் சீனாவை  ஒட்டிய  மங்கோலியப் பகுதியில்  தோன்றிய செங்கிஸ்கான் ஒரு காட்டு மிராண்டிப் படையை வைத்துக் கொண்டு தன்னுடைய சாதுரியத்தாலும் வீரத்தாலும் ஐரோபாவின் பல பகுதிகளையும் கைப்பற்றி அந்தப் பகுதிகளில் இரத்த ஆற்றை ஓட்டினான்.துருக்கியின் கிழக்குப்பகுதியிலிருந்த இரு சகோதரக் குடும்பங்கள் முகலாயர்களும் தாதாரியர்களும். தாதாரிய வம்சத்தில் தோன்றியவன் தான் செங்கிஸ்கான். அதனால் தான் அவனுடைய படையெடுப்பு தாதாரியரின் படையெடுப்பு என்றழைக்கப்படுகிறது.
செங்கிஸ்கான் ஐரோப்பிய பகுதியில் ஆக்ரமிப்புக்களை நிகழ்த்திக் கொண்டிருந்த அந்த நேரத்தில் அப்பாசிய கிலாபத்தின் கீழ் பூமிப்பந்தின் பெரும் பகுதிகளில் முஸ்லிம்கள் ஆட்சி நடந்து கொண்டிரூந்தது. முஸ்லிம்கள் அன்றைய மாவல்லரசாக இருந்தனர். அவர்களை எதிர்ப்பதற்கு கூட அக்கம் பக்கத்தில் யாரும் அச்சப்படுகிற நிலை இருந்த்து.
ஆரம்பத்தில் செங்கிஸ்கான் முஸ்லிம் கலீபாவையோ சிற்றரசர்களையோ எதிர்க்க வில்லை.
அப்போதைய இஸ்லாமிய சாம்ராஜ்யம் பிரம்மாண்டமானது. ஆசியா ஆப்ரிக்கா ஐரோப்பா என மூன்று கண்டங்களிலும் பரவியிருந்தது. .
இஸ்லாமிய சாம்ராஜ்யம் மத்தியில் கலீபாவின் ஆட்சியின் கீழ் இருந்தாலும், அந்த்தந்தப் பகுதிகளில் கலீபாவின் கீழ் குறு மன்னர்கள் ஆட்சியில் இருதனர். சாம்ராஜத்தின் கிழக்குப் பகுதியில் அதாவது ரஷ்யா சீனாவை ஒட்டிய பகுதியில் சுல்தான் அலாவுத்தீன் முஹம்மது குவாரிஜ்மி ஷா என்ற சுல்தானின் அதிகாத்தின் கீழ் இருந்த்து.
செங்கிஸ்கான் இஸ்லாமிய கலீபாவிடம் தங்களது வியாபாரிகள் முஸ்லிம்கள் பகுதிக்குள் வியாபாரம் செய்ய அனுமதி கோரினார். இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் கிழக்குப்பகுதியில் பயணம் செய்த மங்கோலிய வியாபாரிகளை கொலை செய்யப்பட்டனர். அவர்கள் உளவாளிகள் என சுல்தான் முஹம்மத் நியாயப்படுத்தினார். தங்களது வியாபாரிகள் கொல்லப்பட்டதற்கான காரணத்தை க் கேட்டு செங்கிஸ்கான் தூதனுப்பினார். சுல்தான் அந்த தூதரையும் கொன்றார். பரந்து பட்ட விசாலாமான ஆட்சியதிகாரம் அவருக்கு அந்த தைரியதை கொடுத்த்து. தன்னுடைய தூதர்கள் கொல்லப்பட்ட போது செங்கிஸ்கான் தனிமையில் யோசித்தார். இறுதியில் ஒரு பிரகடனத்தை வெளியிட்டான், வானம் எப்படி இரண்டு சூரியன்களை சகித்துக் கொள்ள் முடியாதோ அது போல் இந்த பூமி இர்ண்டு அரசர்களை சுமந்து கொள்ள முடியாது என்று பிரகடனப்படுத்தி விட்டு ஹிஜ்ரி 616 ம் ஆண்டு இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் கிழக்குப் பகுதி நகரங்களான புகாரா ஹம்தான் ஜன்ஜான் நைஸாபூர்  குவரிஜ்ம் உள்ளிட்ட நகரங்களை வெறிகொண்டு தாக்கினான்.
புகாராவின் பள்ளிவாசல் ஒன்றை தனது குதிரக் கொட்ட்டியாக மாற்றிக் கொண்ட செங்கிஸ்கான் தன்னை தவறு செய்தவர்கள் மீது இறைவன் அனுப்பிய சாபம் என்று கர்ஜனை செய்தான்.
لعنة الله سلطها على خلقه عقوبة لهم على خطاياهم
பேரழிவுகள் பேரழிவுகள் எங்கு நோக்கினும் மனித உடல்கள் ஆண் பெண் சிறுவர் பெரியவர் என்ற போதமில்ல்லாமல் முஸ்லிம்களை கொன்று குவிக்க்கப்பனர். இஸ்லாமியச் சின்னங்கள் சின்னாபின்னப் படுத்தப்பட்டன.
கொன்ஞ்சம் கொஞ்சமாக இஸ்லாமிய நிலப்பரப்பை கபளீகரம் செய்த தாத்தாரியகளைப் பற்றிய அச்சம் முஸ்லிம்களை கதிகலங்கச் செய்திருந்த்து.
வரலாற்றாசிரியர்கள் அதற்கு உதாரணமாகவும் உவமையாகவும் சில விசயங்களைச் சொல்லிக் காட்டுகிறரர்கள்.
ஒரு தாத்தாரிய வீர்ன் தனியாக ஒரு முஸ்லிம் வீதிக்கு சென்று அங்குள்ள நூற்றுக் கண்க்கானோரை வெட்டிச் சாய்பான், அவனை யாரும் எதிர்க்கவோ திருப்பித்தாக்கவோ இல்லை.
ஒரு தாத்தரியப் பெண் ஆண் உடை அணிந்து வந்து ஒரு முஸ்லிம் குடும்பத்திற்குள் புகுந்து அக்குடும்பத்தையே நாசம் செய்தாள். அவள் ஒரு பெண் என்பதை அவர்களின் அடிமைதான் முதலில் கண்டு பிடித்தான்.
ஒரு தாத்தாரியன் ஒரு முஸ்லி ம் இளைஞனைப் பிடுத்து வெட்டப் போகிற போது தான் கவனித்தான், அவன் கத்தியை எடுத்து வரவில்லை, உடனே அந்த இளைஞனிடம் இங்கேயே உன் தலைவை வைத்துக் கிட என்று உத்தவிட்டு விட்டு கத்தியை எடுக்கச் சென்றான், அவன் திரும்பி வருகிற வரை அந்த இளைஞன் அங்கேயே இருந்தான். சாவகாசமாக கத்தியை எடுத்து வந்து அந்த இளைஞனைக் கொன்றானாம்.
அந்தக் காலத்தில் சொல்லப்பட்ட ஒரு அரபுப் பழமொழி முஸ்லிம்களிடம் தாத்தாரியர்களைப் பற்றிய் அச்சம் எந்த அளவுப் பரவிப் படர்ந்திருந்த்து என்பதற்கு சான்றாக இருக்கிரது.
إذا قيل لك إن التتر إنهزموا فلا تصدقه

தாதாரியர் தோற்று விட்டார்கள் என்று யாரும் சொன்னால் அதை நம்பி  விடக்கூடாது

இறுதியாக தாத்தாரியர்கள் முஸ்லிம்களது உயர் அந்தஸ்தின் சின்னமாக இருந்த அப்பாஸிய கிலாபத்தின் தலைநகரான் பக்தாதையும் கைப்பற்றினார். அப்பாஸிய கலீபா முஸ்தஃஸிம் பில்லாவோடு சண்டையிட்டு செங்கிஸ்கானின் பேரன் ஹுலா கான் பக்தாதை கைப்பற்றினான், இலட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

வரலாற்று பேராசான், الكامل في التاريخ என்ற நூலை இஸ்லாமிய உலகிற்க் தந்த இப்னுல் அஸீர் إبن الأثير
அந்த் நிகழ்வுகளை தன்னால் எழுத முடியாது என்று மறுத்துவிட்டார்.

முஸ்லிம் சமுதாயத்திற்க் நேர்ந்த் அந்தப் பேரழிவு மனித வரலாறு இது வரை சந்தித்திராத பேரழிவாகும். முஸ்லிம் உம்மத்தின் அந்த மரண அழிவை எழுத எனக்கு மனம் வரவில்லை என்றாலும் அடுத்த தலை முறைக்கு இந்தச் செய்தி சென்று சேரவேண்டும் என்று நிர்பந்திப்பதால் இவற்றை எழுதுகிறேன், என்று சொல்லி விட்டு பக்தாதுக்கு முஸ்லிம் உம்மத்திற்கு  நேர்ந்த பேரழிவை இப்னுல் அஸீர் எழுது வதக அபுல் ஹஸன் அலி நத்வி குறிப்பிடுகிறார்.

நம்ப முடிகிறதா அருமைச் சமுதாயமே!

பக்தாதில் பாங்கு சொல்வது தடை செய்யப்பட்டது. கிருத்துவகள் தாத்தாரியர்களுடன் சேர்ந்து கொண்டு பள்ளிவாசலில் மதுவை கொட்டினர். பன்றி மாமிசத்தை வீசினர்.
40 நாட்களாக பக்தாதில் நட்த்தப்பட்ட படுகொலையில் ஒரு இலட்சத்து 80 முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டு அவர்களுடயை உடல்கள் நல்லடக்க்கம் செய்யப்படாமல் அப்படியே வீதிகளில் வீசப்பட்டன. அந்த உடல்களில் இருந்து புறப்பட்ட துர்வாடையால் சிரியாவில் காலரா நோய் பரவியது. இஸ்லாமியச் சின்னங்கள் அழிக்கப்பட்டன. நூலகங்கள் தீக்கிரையாக்கப்பட்டு அதன் சாம்பல் டைகிரிஸ் நதியில் கரைக்கப்பட்டது . டைகிரிஸ் நதி கருப்பாக ஓடியது.

وقد أجمل ابن طباطبا ما نزل بأهل بغداد في قوله: "فجرى من القتل الذريع والنهب العظيم والتمثيل البليغ ما يعظم سماعه جملة فما الظن بتفصيله".
وكان ما كان ما لست أذكره    +   فظن ظنا ولا تسأل عن الخبر 
சுமார் ஐந்தே கால் நூற்றாண்டாக இஸ்லாமியப் பேரசை சிறப்பாகவும் செழிப்பாகவும் கிழக்கிலும் மேற்கிலும் நிகர் சொல்ல முடியாத பேர்ரசாக இருந்த அப்பாஸிய சல்தனத் முடிவுக்கு வந்த்து.

இத்தனை சோகத்திலும அந்தப் பகுதியில் முஸ்லிம்கள் அழிந்து விடவில்லை, இன்றும் அவை இஸ்லாமின் கேந்திரங்களாகவே  இருக்கின்றன்,

எப்படி வரலாற்றில் வரலாற்றில் ஒரு பேரதியசமாக எப்படி ந்டந்த்து என்று யூகிக்க் முடியாமலே அந்த மாற்றம் நடந்த்து, செங்கிஸ்கானின் வாரிசுகள் இஸ்லாமை தழுவினர். தாதாரியர்களும் முகலாயர்களும் முஸ்லிம்களானார்கள்.

அவர்கள் பலமான முஸ்லிம் அரசாங்கத்தை பல இடங்களிலும் நிறுவினர்

இது போல ஒன்றல்ல பல சந்தர்ப்பங்களில் இஸ்லாமிய வரலாறு இந்த சத்தியத்திற்கு சான்றாக அமைகிறது. முஸ்லிம்கள் அழிவின் விளிம்பில் இருந்த போது இஸ்லாம் வெற்றி பெற்றிருக்கிறது.  முஸ்லிம்கள் இஸ்லாம் காப்பற்றி யிருக்கிறது,

இப்போது கூட முஸ்லிம்களின் நிலை பரிதாபகரமாக இருக்கிறது, அரசியல் அதிகாரமோ அந்தஸ்தோ மரியாதை இல்லை. முஸ்லிம்களின் கருத்துக்களுக்கு அல்ல உணர்வுகளுக்கே கூட மதிப்பில்லை,

நம்முடைய நாட்டில் பல காலமாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த தூக்கு தண்டனையின் கதவு திறந்து இரண்டு முஸ்லிம்கள் தூக்கில்டப்பட்டவுடன் அது மூடிக் கொண்ட்து.

அவர்களின் அப்ஜல் குருவின் மீதான தூக்கு தண்டனை மிக வெளிப்படையாகவே அநீதி என்று பேசப்பட்ட்து  காரணம் அப்ஜல் குருவின் மீதான் குற்றத்தை நிரூபிக்க போதுமான ஆதாரம் இல்லை என்றும் மக்களின் மனோ நிலையை சாந்தப்படுத்தவே தூக்கு தண்டனை விதிக்கப்படுவதாகவும் தண்டனை வழங்கிய நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.  காஷ்மீர் மாநில சட்டம் மன்றம் அப்போதைய காங்கிரஸ் முதல்மைச்சர் குலாம் நபி ஆஸாத் தலைமையில் தூக்கு தண்டனை ரத்து செய்ய வேண்டும் என்று தீர்மாணத்தை நிறைவேற்றி அனுப்பியிருந்த்து,
தண்டனை வழங்க நிர்ணயிக்கப் பட்ட தேதி கடந்து பல வருடங்களுக்குப்பின் திடீரென அவருடை குடும்பத்த்திற்கு கூட தெரியாமல் அவர் தூக்கிலடப்பட்டார்.

அவர் தான் கடைசியாக தூக்கிடப்பட்டவர். அத்தோடு தூக்கு தண்டனையின் வாசலை உச்சநீதிமன்றம் மூடிவிடுகிறது.
இந்திய அரசு நீதித்துறை நிர்வாகம் மூன்றுமாக சேர்ந்து முஸ்லிம்களுக்கான நீதியை பகிரங்கமாக மறுத்திருக்கிற மிக இழிவான சூழ்நிலைக்கு முஸ்லிம் சமுதாயம் தள்ளப்பட்டிருக்கிற சந்தர்பத்தில் தான் பலரும் இஸ்லாமை தழுவி வருகிறார்கள் என்ற செய்தியை நாம் கேள்விப்படுகிறோம். இந்தியாவிலும் இஸ்லாம் வேகமாக பரவிவருகிறது,

மக்களை ஈர்க்கிற இஸ்லாமின் சக்தி இன்றும் இளைமையாகவும் வலிமையாகவும் இருக்கிறது, அது முஸ்லிம்களை பாதுகாக்கவும் உயர்ந்த அந்தஸ்திற்கு கொண்டு செல்லவும் சக்தி படைத்த்தாக் இருக்கிறது.  இதை முஸ்லிம்கள் சரியாகப் புரிந்து கொண்டால் யாராவது ஒருவர் இஸ்லாமைத் தழுவியவுடன் அவரைக் கொண்டாட தயாராக மாட்டார்கள். இஸ்லாமைக் கொண்டாடவும் அதை வாழ்வில் முழுமைப் படுத்தவும் ஆசைப்படுவார்கள்.
யாராவது புதிதாக் இஸ்லாமை தழுவியதாக அறிந்தால்
·         நாம் பிரியாணி கொடுப்பதையும்- விழாக்களுக்கு அழைப்பதையும் – விட்டு விட்டு அவர் தெரிந்தவராக இருந்தால் வாழ்த்துச் சொல்வோம். அவர் இஸ்லாமை மேலும் தெரிந்து வழி செய்வோம்,
·         தெரியாதவராக இருந்தால் இஸ்லாமிய உறவையும் சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் நிலை நாட்டுவோம்.
·         உதவி தேவை என்றால் உதவி செய்வோம்.
·         அவர் இஸ்லாத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார். பாக்கிய சாலி. நமக்கு இயல்பாக இஸ்லாம் கிடைத்திருக்கிறது, அதன் மூலம் நாம் பாக்கியசாலிகளாக ஆவோம் என உறுதியேற்போம்.
·         புதிதாக் இஸ்லாத்தில் இணைந்திருப்பவர் அவரது சக்தியை அனுபவத்தைப் பயன்படுத்தி இஸ்லாமிற்கும் முஸ்லிம் சமுதாயத்திற்கு அழுத்தமாக பணியாற்றும் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க முயற்செய்வோம்.
·         அப்துல்லாஹ் அடியாரோ, அப்துல்லாஹ் பெரியார்தாசனோ இஸ்லாமில் இணைய விரும்புகிறவர்களுக்கான ஒரு கவுன்சிலிங்க் செண்டரை அமைக்க சமுதாயம் தூண்டியிருக்கும் என்றால் அது எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்.
·         சிங்கப்பூரில் இஸ்லாமை தழுவிய ஒரு சீனர், முஸ்லிம் கன்வெர்டர் அஸோசியேசன் என்ற ஒரு அமைப்பை வை உருவாக்கி மிகச் சிறப்பாக நட்த்தி வருகிறார், அங்கிருக்கிற வக்பு வாரியத்திற்கு (முயீஸ்) நிகராக அது செயல்பட்டு வருகிறது,
·         எல்லாவற்றுக்கு மேலாக ஒருவர் இஸ்லாமில் இணைகிற போது அவரால் இஸ்லாமிற்கு அல்ல. இஸ்லாமால அவருக்கே அதிக நன்மை என்பதை நாம் புரிந்து கொள்வோம்.
·         இன்றைய கால சூழ்நிலையில் இஸ்லாமின் எதிர்ப்புச் சக்திகள் அவரை ஓரங்கட்டாமலும் அவரை துன்புறுத்தாமலும் இருக்க் இது உதவும்

என்னுடை ஆசிரியர் பேஷ் இமாம் நிஸார் சாஹிப் அவர்கள்,  இஸ்லாம் பணியாற்றவேண்டிய உண்மையான களம் இந்தியா தான், இங்கு தான் ஷிர்க் அதிகமாக இருக்கிறது என்று கூறுவார். இஸ்லாம் பணியாற்ற வேண்டிய களத்தில் உரிய முறையில் பங்காற்ற அல்லாஹ் நமக்கு கிருபை செய்வானாக! இந்தியாவிற்கு அல்லாஹ் ஹிதாயத்தை வழங்குவானாக!

4 comments:

 1. masha allah thakka samayathil thelivana vilakkangaludan niraindha thahaval allah thangalin sevayai porndhikolvaanaaha!

  ReplyDelete
 2. طلحة مصباحي8:26 PM

  جزاك الله خيرا كثيرا اللهم طول حياتك مع أعمال الصالحات

  ReplyDelete
 3. அல்ஹம்துலில்லாஹ் அருமை காலத்தின் கட்டாய பேச்சு புதுகை மிஸ்பாஹி

  ReplyDelete
 4. அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு இமாம் கோவை
  அப்துல் அஜீஸ் பாக்கவி தங்கள் ஒரு இமாம் மட்டும் தான் துணிந்து
  சமுதாயத்திற்கு தேவையான கருத்தை துணிந்து எழுதுகிறீர்கள்
  வாகாபிகளுக்கும் இந்த கட்டுரை ஒரு சாட்டையடி

  ReplyDelete