வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, March 06, 2014

தாயிப் பயணம் பின்னடைவின் எல்லைநபிகள் நாயகம் (ஸல்) அவர்களது வாழ்க்கையில் தாயிப் பயணம் பற்றிய செய்திகளை நாம் கேள்விப்பட்டிருப்போம் .  அவர்கள் அங்கு ஏளனப்    பேச்சுக்களை எதிர்கொண்டார்கள் கல்லால் அடிக்கப்பட்டார்கள். அவர்களது  உடலில் இரத்தம் வழிந்தோடியது என்பது வரை நாம் அறிந்த்தே!

இந்தப் பயணம் பெருமானாரது வாழ்வில் நடந்த் ஒரு துர்ச்சம்பவம் என்ற அளவோடு முடித்துக் கொள்ளத்தக்கதல்ல. அதில் முஸ்லிம் சமுதாயத்திற்குஅதிலும் குறிப்பாகதொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிற முஸ்லிம் சமுதாயத்திற்கு பல முக்கிய பாடங்களும் படிப்பினைகளும் இருக்கின்றன.

இன்றைய இந்த் ஜும் ஆவில் பெருமானாரின் தாயிப் பயனம் பற்றியும்அதில் பெருமானாருக்கு ஏற்பட்ட அனுவங்களையும்சமுதாயத்திற்கு கிடைத்த பாடங்களையும் பார்க்க இருக்கிறோம்.

40 வயதில் நபியாக தேர்ந்தெடுக்கப் பட்ட பெருமானார் (ஸல்) அவர்கள் 43 வயதிலிருந்து இஸ்லாமிய பிரச்சாரத்தை தொடங்கினார்கள், மக்காவில் காபிர்களின் பலத்த எதிர்ப்புக்கு இடையிலும் பெருமானார் (ஸல்) அவர்களின் பிரச்சாரம் மிக எச்சரிக்கையாகவும் நளினமாகவும் தொடர்ந்த்து.

38 பேர் இஸ்லாமை தழுவியிருந்த நிலையில் அபூபக்கர் (ரலி அவர்கள் பெருமானாரை அணுகி நாம் பகிரங்கமாக பிரச்சாரம் செய்தால் என்ன என்று கேட்ட போது பெருமானார் (ஸல்) சொன்னார்கள்    يا أبا بكر! إنا قليل

عن عائشة رضي الله عنها قالت: لما اجتمع أصحاب رسول الله صلى الله عليه وسلم وبلغوا ثمانية وثلاثين رجلاً، ألح أبو بكر على النبي صلى الله عليه وسلم في إعلان الدعوة، فقال رسول الله صلى الله عليه وسلم: ((يا أبا بكر! إنا قليل))

உமர் (ரலி) அவர்கள் 40 வது நபராக இஸ்லாமை தழுவிய பிறகு ஏன் நாம் பகிரங்கப்படுத்தக் கூடாது என்று கேட்ட போதும் இதே பதிலை பெருமானார் (ஸல்) சொன்னார்கள்.

ثم قال عمر يا رسول الله علام نخفي ديننا ونحن على الحق ويظهرون دينهم وهم على باطل.فقال رسول الله  يا عمر إنا قليل وقد رأيت ما لقينا

(ஷிர்க்) சிலை வணக்கத்தை எதிர்ப்பது தான் பெருமானாரின் பணி என்றாலும் சிலைகளை சேதப்படுத்தவோசிலை வணங்கிகளை இழிவுபடுத்தவோ மலிவான வேலைகள் எதிலும் பெருமானார் (ஸல்) இறங்கவில்லை. அதே நேரத்தில் எதிரிகளால் தொல்லைகள் ஏற்பட்ட போது சகித்துக் கொள்ளுமாறு தோழர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

யாசிர் (ரலி) குடும்பம் சின்னாபின்னப் படுத்தப் பட்ட்து. பெருமானார் அந்தக் கொடுமைகளை கண்ணால் பார்க்க நேர்ந்த் போதும் கூட அந்தக் குடும்பத்திற்கு  பொருமை காக்கும்படி அறிவுரை சொன்னார்கள். :"صبرا ال ياسر فان موعدكم الجنه"

هم ياسر و زوجته سمية و ابنهما عمار...وهذه هي اول اسرة اسلمت بالكامل ..واول عائلة جهرت بالاسلام ..وكانوا هم سابع من جهر بالاسلام في الدنيا ..وهم في الرتبة الثلاتين من بعد رسول الله صلى الله عليه وسلم في دخولهم الاسلام
و كانت سمية اول من قتل في سبيل الله وكانت رضي الله عنها اول امراة تسلم بعد السيدة خديجة رضي الله عنها و ارضاها .

وعندما جهرت السيدة سمية باسلامها ظل ابو جهل يعذبها اشد التعذيب لايام طويلة و يقال"لم يشهد التاريخ امراة عذبت كما عذبت سمية من طرف ابي جهل "كان يضربها ضربا شديدا و ياذيها اشد الاذى ..وكان يريد منها كلمة واحدة وهي ان تكفر بدين محمد عليه الصلاة و السلام ..ولكن المراة لم تنطق الا بالشهادتين لدرجة انها استطاعت ان تقهره بصبرها و ايمانها و قوة احتمالها ..فلجا ابو جهل للقوة الغاشمة

فحمل حربته و اغرسها فيها ..ضربها بالحربة الى مكان عفتها وهي مقيدة مكبلة ..فسقطت رضي الله عنها و ارضاها شهيدة.. بل كانت اول من استشهدت في الاسلام ....ماتت بين زوجها و ابنها المكبلين

وبعد ايام قليلة يموت زوجها ياسر بعد صبره الكبير على العذاب و قتل زوجته امام عينين ...ويبقى بعدهما ابنهما عمارابن ياسر ..و كان سنه بضعا و عشرين سنة ..وكان الم الفراق شديد عليه لانهما قتلا امام ناظريه و بطريقة شنيعة على يد ابي جهل ...ولكن الشاب ظل ثابتا ..ولكن ايذاء ابو جهل كان يزيد شدة يوما بعد يوم ..الى ان خارت قوى عمار و لم يعد يقوى على التحمل
وبعد شدة العذاب وفي يوم من تلك الايام قيل له " سب محمدا"فسب رسول الله عليه الصلاة و السلام و ذلك لان طاقته نفدت
وركض الى رسول الله يبكي و يقول :"و الله يا رسول الله مازالوا بي حتى فعلت"ورد عليه الصلاة و السلام وقال :"يا عمار فكيف تجد قلبك " قال :"مطمان بالايمان يا رسول الله "فقال له رسول الله :"يا عمار فان عادوا فعد"وبشر النبي عليه الصلاة و السلام ال ياسر وقال:"صبرا ال ياسر فان موعدكم الجنه"


ஒரு வேளை பெருமானார் ஸல் தன் தோழ்ரகளை தூண்டிவிட்டு ஒரு உள்ளுர் கலகத்தை ஏற்படுத்தி இருப்பார்கள் எனில் பிறகாலத்தில் அவர்கள் பெற்ற மாபெரும் வெற்றி சாத்தியப் பட்டிருக்காது,

பெருமானார் (ஸல் அவர்களிடம் ஒரு பெரிய கனவு இருந்த்து, அவரைச் சார்ந்த மக்கள் அத்தனை பேரையும் இஸ்லாமை ஏற்கச் செய்வதே அந்தக் கனவு.  அதனால் அவசரப் பட்டு அவர்கள் எந்தக் காரியத்தையும் செய்து விடவில்லை.

இன்றைய முஸ்லிம்களுக்கு அத்தகைய் இலக்கு எதுவும் வாழ்க்கையில் இல்லை. அதனால் தான் சிறு சிறு காரியங்களுக்கெல்லாம் உணர்ச்சி வசப்படுகிறார்கள். நஷடமடைகிறார்கள். அவதிக்குள்ளாகிறார்கள்.

பெருமானார் (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் கிடைத்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு  ஒரு ரமலான் மாத்த்தில் பெருமானாரின் பாதுகாவலராக இருந்த அபூதாலிபும் பெருமானாரின் அருமை துணைவியார் அன்னை கதீஜா (ரலி) அவர்களும் அடுத்தடுத்து மூன்று நாள் இடைவெளியில் இறந்து போன போது மக்கா மக்கள் பெருமானாரையே நேர்ரடியாக தாக்க தொடங்கினார்கள். மக்காவில் வாழ்வது சிரம்மானது,

மக்காவிற்கு மாற்றாக இன்னொரு ஊரைத் தேடும் சிந்தன பெருமானாருக்கு  எழுந்த்து.

ஒரு ஊரில் வாசல்கள் அடைபடுமானால் இன்னொரு ஊரில் வாய்ப்பை தேடுவது  இயல்பு தானே!
நபி (ஸல்0 அவர்கள் தாயிபை தேர்ந்தெடுத்தார்கள்  தாயிப் மக்காவிலிருந்து தென்கிழக்காக 65 மைல் தொலை விலிருக்கிற கோடை வாசஸ்தலம். தோட்டங்களும் விளைச்சலும் நிறைந்த பூமி.

தாயிபை பெருமானார் (ஸல்) அவர்கள் தேர்ந்தெடுத்த்தற்கு பல காரணங்கள் உண்டு,

·         பக்கத்தில் இருக்கிற ஊர் தாயிப் . பெருமானார் (ஸல்) அவர்கள் மக்காவிலிருதும் முஸ்லிம்களிடமிருந்து வெகு தூரம் செல்லவிரும்பவில்லை.

·         அரசியல் ரீதியாக தாயிப் அரபு தீபகறபத்தின் இரண்டாவது பெரிய நகரம்.. மக்காவிற்கு அடுத்த  வியாபார கேந்திரம். அரபிகளிடம் அந்த ஊருக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு.
அதனால் தான் மக்காவின் காபிர்கள் இந்த இரண்டு ஊரில் உள்ள ஒரு பெரிய மனிதர் யாரும் அல்லாஹ்வுக்கு கிடைக்கவில்லையா என்று கேட்டனர்.
وَقَالُوا لَوْلاَ نُزِّلَ هَذَا الْقُرْآنُ عَلَى رَجُلٍ مِنَ الْقَرْيَتَيْنِ عَظِيم - الزُّخرف: 31 . والقريتان هما مكة والطائف.
·         தாயிபில் வசித்த பனூதகீபு மக்கள் பல சாலிகள்.  மக்காவின் குறைஷியரை எதிர்க்கிற ஒரு சூழ்நிலை வந்தால் அந்த சக்தி அவர்களுக்க்த்தான் இருந்த்து.
பனூ சகீபுகள் கடைசிவரை வன்மையால் இஸ்லாமை தழுவ்வில்லை என்பது வரலாறு

·         சமய ரீதியாக .தாயிபுக்கும் மக்காவிற்கும் இடையே ஒரு போட்டி உண்டு, மக்காவில் கஃபா இருந்தாலும் அரபுகள் நேசிக்கிற லாத் எனற சிலை தாயிபில் இருந்த்து, அரபுகள் அதனால தான் சத்தியம் செய்கிற போது லாத் என்ற வார்த்தை பயனபடுத்தினார்கள். மக்காவின் மிஞ்சும் ஆசையில் தன் பேச்சை அவர்கள் கேட்க்க் கூடும் என்று பெருமானார் நினைத்தார்கள்.

·         பொருளாதார ரீதியாக பார்த்தால் மக்காவின் செல்வந்தர்களுக்கு தாயிபில் சொத்துக் கள் தோட்டங்கள் இருந்தன. தாயிபை பெருமானாருக்கு கட்டுப்படும் எனில் அதன் மூலம் மக்கா வழிக்கு வருவதற்கு ஏது வாகலாம்.

இத்தகைய மனிதக் கணக்கீடுகளின் படி பார்த்தால் மக்காவிற்கு மாற்றாக தேர்ந்தெடுப்பதற்கு பொருத்தமான இடமாக தாயிப் இருந்த்தால் பெருமானார் (ஸல்) அவர்கள் தாயிபை தேர்ந்தெடுத்தார்கள்.

நபித்த்வம் பெற்ற 10ம் ஆண்டு ஷவ்வால் மாதம்கிபி 616 மே அல்லது ஜுன் மாதம் பெருமானார் (ஸல்) அவர்கள் தாயிபுக்கு சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடந்தே சென்றார்கள். சாதாரணமாக அது கடும் கோடை நேரம். ஒரு ஒட்டகை ஏற்பாடு செய்து கொள்ள் முடியாது என்பதல்ல, தன்னுடைய பயணம் மற்றவர்களின் பார்வையில் பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே கால்நடையாக பயணம் செய்தார்ர்கள். இதே காரணத்திற்காக தன்னுடைய பிரதான தோழர்கள் அபூபக்கர் உமர் (ரலி) போன்றவர்களை உடன் அழைத்துக் கொள்ள வில்லை. அவர்களுடைய அடிமை என்று அறியப்பட்ட வளர்ப்பு மகன் ஜைது பின் ஹாரிதா (ரலி) அவர்களை மட்டும் உடன் அழைத்துக் கொண்டார்கள். மற்றவர்களின் பார்வைக்கு அந்தப் நடை பயணம் வித்தியாசமாக தெரிந்து விடக் கூடாது என்பதற்காக! போகிற இடத்திலும் தான் அது ஒரு பணிவை காட்டும் என்பதற்காகவும்!!

ஜைது பின் ஹாரிதா (ரலி) 30 வயதை கடந்தவராக இருந்தார். பெருமானாருக்கு உதவியாளரவும் உற்ற பணியாளராகவும் அவர் நடந்து கொண்டார்.

தாயிபின் அதிகாரம் பனூ மாலிக் பனூ அம்ர் என்ற் இரண்டு குடும்பங்களுக்கிடையே சுற்றி வந்து கொண்டிருந்த்து, இதில் பனூ மாலிக்குகள் ஹிஜாஸீலிருந்த ஹவாஸின் குலத்தாரோடு நட்பு வைத்திருந்தனர், பனூ அம்ருகள் மக்காவின் குறைஷிகளோடு நட்பு வைத்திருந்தனர். பெருமானாரும் குறைஷி குலத்தைச் சார்ந்தவர் என்பதால் நபி  (ஸல்) அவர்கள் பனூ அமரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று ச்கோதர்ர்களான அப்து  யாலைல் மஸ்வூத் ஹபீப் ஆகிய மூவரையும் சந்தித்தித்து அல்லாஹ்வின் மார்கத்திற்கு அழைத்து தனக்கு உதவியாக நிற்குமாறு கேட்டுக் கொண்டார்கள்.
அவர்களிடமிருந்து கிடைத்து கடுமையான பதில்கள் வந்தன.

موقف سادة الطائف من دعوة الرسول

قال عبد ياليل بن عمرو: إنه سيمرط (أي سيمزق) ثياب الكعبة إن كان الله أرسلك.
أما مسعود فقال: أما وجد الله أحدًا غيرك.
وأما الثالث حبيب فقد قال -وهو يحاول أن يصطنع الذكاء مع شدة غبائه- قال: والله لا أكلمك أبدًا، إن كنت رسولاً لأنت أعظم خطرًا من أن أرد عليك الكلام، ولئن كنت تكذب على الله ما ينبغي أن أكلمك.

சற்றும் மரியாதையற்ற் முறையில் இவர்கள் இப்படிப் பேசுவார்கள் என நபி (ஸல்) அவர்கள் நினைத்தும் பார்க்கவில்லை, ஆயினும் உடனடியாக சுதாகரித்துக் கொண்ட பெருமானார் (ஸல்) அவர்கள் உடனடியாக அவர்களிடம் கூறினார்கள்
وقال لهم: "إذ فعلتم ما فعلتم فاكتموا عني
இது தான் உங்களது முடிவென்றால். சரி! நான் வந்த செய்தியை நீங்கள் யாரிடமும் சொல்ல வேண்டாம்

ஆனால் அந்தச் சின்னப் புத்திக்கார்கள் பெருமானாரின் வருகை ஊருக்கு தெரிவித்த்தோடு அவரை கேலி செய்யவும் துரத்தி விடவும் ஆட்களை ஏற்பாடு செய்தார்கள்.

பெருமானார் (ஸல்) அவர்கள் தளரவில்லை, பத்து நாட்களாக தாயிபில் தங்கி பலரிடமும் பேசினார்கள். ஒரு பயனும் கிட்டவில்லை, பத்தாம் நாள் தாயிப்கார்கள் ஒன்று திரண்டு பெருமானாரை ஊரை விட்டு வெளியேறுமாறு கூறினார்கள். பெருமானார் (ஸல்) அவர்கள் ஏளனப்படுத்தப்பட்ட நிலையில் வெளியேறினார்கள். அப்போது தாயிபின் தலைவர்கள்  சிறுவர்களை ஏவி இரண்டு அணியாக வரிசையாக நின்று பெருமானாரின் மீது கற்களை எறியுமாறு செய்தார்கள். இருமருங்கிலிருந்தும் நடைபெற்ற கல்வீச்சுக்கள் ஏச்சுக்களின் நடுவே நபி (ஸல்). பெருமானாரின் நாவு இவர்கள் அறியாத மக்கள்   ولسان حاله يقول: يا ليت قومي يعلمون என்று சொல்லிக் கொண்டிருந்த்து,

சுமார் 5 கிலோ மீட்டர் வரை அவர்கள் பெருமானாரை பின் தொடர்ந்து தாக்கினார்கள். பெருமானாரின் மேனியெங்கும் இரத்த விளாரானது, கால் வழியாக இரத்தம் வழிந்து காலில் அணிந்திருந்த தோலால் செய்யப்பட்ட  சாக்ஸான மோசா சிவப்பானது. பெருமானார் (ஸல்) அவர்கள் மயக்கமடையும் நிலைக்கு ஆளானார்கள்.

ஒரு வேளை அன்று அந்த தாயிப் நகரத்து மக்கள் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு ஆதரவு கொடுத்திருப்பார்களெனில் வரலாற்றீல் தாயிபின் நிலை எந்த அளவு உயர்ந்திருக்கும்? பிற்காலத்தில் மதீனாவிற்கு கிடைத்த மரியாதை அத்தனையும் தாயிபுக்கு அல்லவா கிடைத்திருக்கும்.

இன்று மதீனா எங்கே! தாயிப் எங்கே!

ஆதரவு தாராத்து மட்டுமல்லாது மக்காவின் காபிர்கள் கூட செய்யத்துணியாத அளவு பெருமானாரின் மீது தாக்குதல் தொடுத்து ஏளனம் செய்த அவர்கள் எத்தனை தண்டனைக்குரியவர்கள்.

ஒரு நிரபரதியை நல்லதையே நினைத்து நல்லதையே செய்ய வந்த இறைத்தூதருக்கு இத்தகைய கொடுமையை அவர்கள் இழைத்தார்கள் என்றால் அதைப் பார்த்துக் கொண்டு எல்லோரும் சும்மா இருந்து விடுவார்களா?

ஜிப்ரயீல் அலை அவர்கள் வானத்திலிருது இறங்கி வந்தார்கள். நபிகள் நாயகம் (ஸ்ல) அவர்கள் கூறுகிறார்கள்.

فَانْطَلَقْتُ وَأَنَا مَهْمُومٌ عَلَى وَجْهِي فَلَمْ أَشْعُرْ إِلا وَأَنَا بِقَرْنِ الثَّعَالِبِ فَإِذَا أَنَا بِسَحَابَةٍ قَدْ أَظَلَّتْنِي فَنَظَرْتُ فَإِذَا فِيهَا جِبْرِيلُ , صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , فَنَادَانِي فَقَالَ : إِنَّ اللَّهَ , عَزَّ وَجَلَّ , قَدْ سَمِعَ قَوْلَ قَوْمِكَ وَمَا رَدُّوا عَلَيْكَ ، وَقَدْ بَعَثَ إِلَيْكَ مَلَكَ الْجِبَالِ لِتَأْمُرَهُ فِيهِمْ بِمَا شِئْتَ : فَنَادَانِي مَلَكُ الْجِبَالِ فَسَلَّمَ عَلَيَّ , ثُمَّ قَالَ : يَا مُحَمَّدُ ، إِنَّ اللَّهَ , عَزَّ وَجَلَّ , قَدْ سَمِعَ قَوْلَ قَوْمِكَ ، وَأَنَا مَلَكُ الْجِبَالِ , وَقَدْ بَعَثَنِي إِلَيْكَ رَبُّكَ لِتَأْمُرَنِي بِأَمْرِكَ فَمَا شِئْتَ : إِنْ شِئْتَ أَنْ أُطْبِقَ عَلَيْهِمُ الأَخْشَبَيْنِ ، قَالَ رَسُولُ اللَّهِ , صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : بَلْ أَرْجُو أَنْ يُخْرِجَ اللَّهُ , عَزَّ وَجَلَّ , مِنْ أَصْلابِهِمْ مَنْ يَعْبُدُ اللَّهَ , عَزَّ وَجَلَّ , لا يُشْرِكُ بِهِ شَيْئًا
والأخشبان‏:‏ هما جبلا مكة‏:‏ أبو قُبَيْس والذي يقابله، وهو قُعَيْقِعَان ـ
பெருமானாரின் இந்த பதிலை வரலாறு பொன்னெழுத்துக்களில் பதிவு செய்து பாதுகாத்து வருகிறது. பெருமானார் (ஸல்) யார்? அன்னாரது சிந்தனையும் செயலும் எத்தகையது என்பதை இந்த வார்த்தைகள் உலகிற்கு புரியவைக்கின்றன.

மக்கள் எல்லோரும் முஸ்லிம்களாக வேண்டும் என்ற பெருமானாரின் அந்த விசலாமான் கனவுதான். இத்தகைய பதிலை சொல்ல அவர்களை தூண்டியது.


தாயிப் நகரவாசிகளின் தாக்குதலிலிருந்து தப்பி ஊருக்கு வெளியே இருந்த ஒரு தோட்ட்த்திற்குள் பெருமானார் (ஸல்)  அவர்கள் புகுந்தார்கள் ,அந்த தோப்பு மக்காவின் பிரபல் செல்வந்தர்களான் உத்பா ரபீஆ வுக்குச் சொந்தமானது,

தோப்பில் சென்று ஒரு நிதான நிலைக்கு வந்த போது நடந்த்தை யோசித்த பெருமானார் (ஸல்) அவர்கள் இப்போது ஏற்பட்ட தோல்விக்கு காரணம் தன்னுடையை செயல்களில் நேர்ந்த குறைபாடோ தனக்கு சரியாக தீனை எடுத்து வைக்க முடியவில்லையோ என்று வருந்தினார்கள் . அல்லாஹ்விடம் தன்னுடைய இயலாமை முறையிட்டார்கள்.
قال عليه الصلاة والسلام: «اللهم إليك أشكو ضعف قوتي وقلة حيلتي وهواني على الناس، اللهم يا أرحم الراحمين أنت رب المستضعفين وأنت ربي إلى من تكلني؟ إلى بعيد يتجهّمني أو إلى عدو ملكته أمري، إن لم يكن بك عليّ غضب فلا أبالي ولكن عافيتك هي أوسع، إني أعوذ بنور وجهك الذي أشرقت له الظلمات، وصلح عليه أمر الدنيا والآخرة من أن تنزل بي غضبك أو تحل بي سخطك لك العتبى حتى ترضى لا حول ولا قوة إلا بك». وهذا الدعاء مشهور بدعاء الطائف،

பெருமானார் (ஸல்) தன்னுடைய வாழ்வின் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் சளித்துக் கொள்கிற்விரக்தி தொனிக்கிற எந்த ஒரு பேச்சையும் பேசியதில்லை,

தாயிபின் முறையீடு என்று வரலாறு குறிப்பிடுகிற இந்த பிரார்த்தனை பெருமானாரின் வாழ்க்கையில் காணக்கிடைக்கிற கழிவிரக்கத்தை வெளிப்படுத்துகிறஒரே ஒரு சந்தர்ப்பமாகும்.

இதற்குப்பின் அல்லாஹ்வின் அருள் மழை பொழியாதிருக்குமா?

அந்த தோட்ட்த்தின் உரிமையாளர்கள் இருவரும் பரம எதிரிகளாக இருந்த போதும் கூட பெருமானாரின் நிலையைப் பார்த்து இரக்கம் ஏற்பட்ட்து, அவ்விருவரும் தங்களது வேலையாள் அதாஸிடம் கொஞ்சம் திராட்சைப் பழத்தை அவருக்க்கு கொண்டு போய்க் கொடுஎன்றார்கள்.

ஒரு வேளை அந்த இருவரும் - மனித சமூகத்தின் பிரஞைகளாகபிரதிநிதிகளாக - நபியின் மீது அந்தக் கருணையை காட்டியிருக்காவிட்டால் அல்லாஹ் அந்த சமூகத்தை விட்டு வைத்திருப்பானா இல்லையா என்பது தெரியாது.

ஆணால் அல்லாஹ் தன்னுடைய அருளை அங்கு வெளிப்படுத்தினார்ன். பெருமானாரின் நம்பிக்கை ஏமாற்றத்தை கொடுத்திருந்த தருணத்தில் எதிர்பாராத இட்த்திலிருந்துஎத்ரிபார்க்க முடியாத இட்த்திலிருந்து அல்லாஹ்  தன் கருணை காட்டினான்.

பணியாளர் அதாஸ் திராட்சையை கொண்டு வந்தார், பெருமானாரைப் பார்த்த்தும் இஸ்லாமை தழுவினார்.

فلما رأى ابنا ربيعة عتبة وشيبة ما لقي رسول الله تحركت له رحمهما فدعوا له غلاماً لهما نصرانياً يقال له عداس، فقالا له: خذ قطفاً من هذا العنب وضعه في ذلك الطبق ثم اذهب به إلى ذلك الرجل فقل له يأكل منه، ففعل عداس ثم أقبل به حتى وضعه بين يدي رسول الله فلما وضع رسول الله يده قال: باسم الله، فنظر عداس إلى وجهه ثم قال: والله إن هذا الكلام ما
 يقوله أهل هذه البلدة، قال له رسول الله صلى الله عليه وسلم «ومن أهل أي البلاد أنت يا عداس وما دينك؟»، قال: أنا نصراني وأنا رجل من أهل نينوى، فقال له رسول الله صلى الله عليه وسلم «من قرية الرجل الصالح يونس بن متّى»؟ قال له: وما يدريك ما يونس بن متى؟ قال رسول الله صلى الله عليه وسلم «ذلك أخي كان نبياً وأنا نبي»، فأكب عداس على رأس رسول الله صلى الله عليه وسلم يقبّل رأسه ويديه ورجليه
தாயிபிலிருந்து திரும்பு கிற போது பெருமானாரின் நிலை – மிகவும் நிர்க்கதியானதாக் இருந்த்து, காரணம் இனி சொந்த ஊரான மக்காவிற்குள் நிலை எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது, யாராவது பலமான ஒருவரின் காப்பு உத்தரவாத்தின் கீழ் சென்றால் ஓழிய மக்காவில் உயிர் வாழ் முடியும் என்பதற்கான உத்தரவாதம் கிடையாது,

எனவே நபி (ஸல்) அவர்கள் மக்காவிற்கு திரும்பும் வழியில் ஹரா என்ற இட்த்தில் தங்கி குஸாஆ குடும்பத்தை சார்ந்த ஒருவரை மக்காவின் பிரமுகர்கள் பலரிடம் தூதனுப்பி காப்பு உத்த்ரவாதம் கோரினார்கள்

பிரமுகர்களான அஹ்னஸ் பின் சுறைக் சுஹைல் இப்னு அமர் ஆகியோர் பெருமானாருக்கு காப்புறுதி கொடுக்க இயலாது என ஒதுங்கி விட்ட நிலையில் முத் இம் பின் அதீ பெருமானாருக்கு அடைக்கலம் வழங்கினார். முத் இம் தனது மகன்கள் உடன்பிறந்தாரின் மகன்கள் புடைசூழ ஆயுதபாணியாக கஃபாவிற்குள் நுழைது இதை பிரகடணப்படுத்தினார்.

بعد عودة النبي محمد وبصحبته زيد بن حارثة من الطائف، وقد لقي من ثقيف ما لقي من إيذاء وضرب بالحجارة، ولما وصل إلى حراء أرسل رجلاً من خزاعة إلى المطعم بن عدي يسأله أن يدخل محمد وزيد في جواره، فقال المطعم: «نعم»، ودعا بنيه وقومه فقال: «تلبسوا السّلاح وكونوا عند أركان البيت فإني قد أجرت محمدًا»، فدخل محمد ومعه زيد بن حارثة حتى انتهى إلى المسجد الحرام فقام المطعم بن عدي على راحلته فنادى «يا معشر قريش إني قد أجرت محمدًا، فلا يهجه أحد منكم» فانتهى محمد إلى الركن فاستلمه وصلى ركعتين وانصرف إلى بيته والمطعم بن عدي وولده محيطون به  - طبقات إبن سعد
அதன் பிறகே பெருமானார் (ஸல்) அவர்கள் மக்காவிற்குள் – அவர்களது சொந்த ஊருக்குள் – அவர்களது பாட்டனார் அதிகாரம் செய்த நகருக்குள் – உலகில் எல்லோருக்கும் அடைக்கலம் தரும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள ஊருக்குள் – நுழைய முடிந்த்து.  

அதனால் தான் ஒரு முறை ஆயிஷா அம்மையார் (ரலி) பெருமானார் (ஸல்) அவர்களிடம் உங்களது வாழ்வில் உஹது யுத்த்த்தை விட மிக சோதனையான ஒரு கட்ட்த்தை ச்ந்தித்த்துண்டா? என்று கேட்ட போது நபி (ஸல்) ஆமாம் தாயிபில் தாயிப் வாசிகளை சந்தித்தே என் வாழ்வில் மிகச் சோதனையான கால கட்டம் என்று கூறினார்கள்.

عَنِ ابْنِ شِهَابٍ ، أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ ، أَنَّ عَائِشَةَ , رَضِيَ اللَّهُ عَنْهَا , حَدَّثَتْهُ أَنَّهَا قَالَتْ لِرَسُولِ اللَّهِ , صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : يَا رَسُولَ اللَّهِ , هَلْ أَتَى عَلَيْكَ يَوْمٌ كَانَ أَشَدَّ مِنْ يَوْمِ أُحُدٍ ؟ قَالَ : " لَقَدْ لَقِيتُ مِنْ قَوْمِكِ ، وَكَانَ أَشَدَّ مَا لَقِيتُ مِنْهُمْ يَوْمَ الْعَقَبَةِ إِذْ عَرَضْتُ نَفْسِي عَلَى ابْنِ عَبْدِ يَا لَيْلِ بْنِ عَبْدِ كُلالٍ فَلَمْ يُجِبْنِي إِلَى مَا أَرَدْتُ

மக்காவிற்குள் நுழைந்த பெருமானார் (ஸல்) அவர்கள் நேரே கஃபாவிற்குள் சென்றார்கள், ஹஜருல் அஸ்வதை முத்தமிட்டார்கள், இரண்டு ரக் அத் தொழுதார்கள். அப்போது அபூஜஹ்ல், கேலியாக பனூ அப்து மனாப்களே இதோ உங்களது நபி என்று சொன்னான். தங்களது குடும்பத்தை அபூஜஹ்ல்  கேலி செயத்தை பொறுத்துக் கொள்ள முடியாத உதபா கோபமுற்று ஏன் எங்களில் ஒரு நபியோ அரசரோ இருக்க கூடாதா என்று கேட்டான். இதை கவனித்துக் கொண்டிருந்த பெருமானார் (ஸல்) அவர்கள் உதபாவிடம் சென்று நீ அல்லாஹ்விற்காகவோ அல்லாஹ்வின் தூதருக்காகவோ பரிந்து இவ்வாறு பேசவில்லை. உன் கோபத்தினாலேயே இவ்வாறு பேசினாய என்றார்கள். அபூஜஹ்லிடம் சென்று நீ குறைவாக சிரித்து நிறைய அழகிற நாள் வெகு சீக்கிரமே வரும் என்றார்கள். சுற்றியிருந்த மக்களைப் பார்த்து குறைஷியர்களே! நீங்கள் இப்போது எதை மறுக்கிறீர்களோ அந்த மார்க்கத்தில் வெகு சீக்கிரமே நுழைவீர்கள். நீங்கள் விரும்பாவிட்டாலும். என்றார்கள்

فدخل يوماً المسجد الحرام والمشركون عند الكعبة فلما رآه أبو جهل قال: هذا نبيكم يا بني عبد مناف، قال عتبة بن ربيعة: وما تنكر أن يكون منا نبي أو ملك؟ فأخبر بذلك النبي صلى الله عليه وسلم أو سمعه فأتاهم فقال: «أما أنت يا عتبة بن ربيعة فوالله ما حميت لله ولا لرسوله ولكن حميت لأنفك، وأما أنت يا أبا جهل فوالله لا يأتي عليك غير كبير من الدهر حتى تضحك قليلاً وتبكي كثيراً، وأما أنتم يا معشر الملأ من قريش فوالله لا يأتي عليكم غير كبير من الدهر حتى تدخلوا فيما تنكرون وأنتم كارهون».
 இவ்வாறு சொன்ன பிறகே பெருமானார் (ஸல்) அவர்கள் ஜைது பின் ஹாரிதாவுடன் தன்னுடைய வீட்டிற்குள் சென்றார்கள். அதுவரை முத் இம் பின் அதியும் அவருடைய மக்களும் பெருமானாருக்கு பாதுகாப்பாக இருந்தார்கள்.

பெருமானாரின் தாயிப் பயணம் இந்தப் புள்ளியில் நிறைவடைகிறது,

பெருமானாரின் வாழ்க்கையில் பெரும் பின்னடைவாக கருதப் பட்ட இந்தப் பயணத்திற்குப் பின் மிஃராஜ் நிகழ்ந்த்து ஹிஜ்ரத் நிகழ்ந்த்து இஸ்லாம் மாபெரும் வளர்ச்சியை கண்ட்து. நபி (ஸ்ல்) அவர்கள் எந்தச் செய்தியை சொல்லி மக்காவின் குறைஷியரை எச்சரித்தார்களோ அந்த நிகழ்வும் ஒரு பத்து வருட்த்திற்குள்ளாக நடந்த்து,

தாயிப் பயணம் தருகிற படிப்பிணைகள் ஏராளம்.

·         நாம் எவ்வளவு தான் முயற்சிகள் செய்தாலும் அல்லாஹ் நாடியது தான் நடக்கும். பெருமானார் (ஸ்ல) தாயிபை தேர்ந்தெடுத்த்தற்கான பல நியாயமான காரணங்கள் இருந்தாலும். - நடந்தே சென்று அவர்கள் முய்றசி செய்த போதும் அல்லாஹ் தாயிபின் மக்களுக்கு அந்தச் சிறப்பை அப்போது நாடவில்லை. பெருமானாரின் முகத்தைப் பார்த்தே முஸ்லிமானவர்கள் பலர் இருக்கும் போது பெருமானாரின் பணிவான கனிவான வார்த்தைகளுக்கு  தாயிபின் கல்நெஞசக்காரர்களை கரையவில்லை.
·         அல்லாஹ் நாடியோருக்குத்தான் ஹிதாயத் கிடைக்கும் என்பத்ற்கான் பல் நிகவுகள் தாயிப் தருகிறது.
பெருமானாருக்கு தோட்ட்த்தில் ஆதரவளித்த உத்பா ஷைபாவுக்கு ஹிதாயத் கிடைக்கவில்லை. அவர்களது பணியாளர் அதாஸுக்கு ஹிதாயத் கிடைத்த்து. மக்காவிற்குள் நுழைய பெருமானாருக்கு ஆதரவளிக்க முடியாது என ஒதுங்கிக் கொண்ட அஹ்னஸ் பின் ஷுரைக் – சுஹைல் பின் அம்ரு ஆகியோர் பின்னாளில் இஸ்லாமை தழுவினர். பெருமானாருக்கு ஆதரவளித்த முத் இம் பின் அதீ இஸ்லாமை ஏற்கவில்லை.  ஹிதாயத்தை பெற்றுக் கொண்டுள்ள ஒவ்வொருவரும் அந்த ஹிதாயத்தை தக்கவைத்துக் கொள்ள் அல்லாஹ்வின் உதவியை எப்போதும் நாட வேண்டும்.

·         தாயிபின் பிரதான பாடம் பெருமானார் (ஸல்) அவர்களின் உயர்ந்த இயல்பாகும். இவர்களது சந்த்திகளாவது இஸ்லாமிற்கு வருவார்கள் என்ற வார்த்தை – பெருமானாரின் கருணை உள்ளத்தை – விசாலப் பார்வையை – எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையை – எல்லோரும் முஸ்லிம்களாக வேண்டும் என்ற தன்னுடைய இலட்சியக் கனவிலிருந்து எந்த நிலையிலும் விலகாத போக்கை இந்த வார்த்தைகள் தாங்கி நிற்கின்றன,  ஒரு சீர்திருத்த வாதி தாயிப் பயனத்தின் ஒவ்வொரு கட்ட்த்திலும் தனக்கான கைடு லைனை - அர்ப்பணிப்பு, சிரமங்களை ஏற்றுக் கொள்ளுதல் நளினம் கருணை விசலாமான பார்வை நம்பிக்கை ஆகியவற்றை பெற்றுக் கொள்ள முடியும்.

·         தாயிபின் பின்னடைவு தான் பெருமானாரின் வாழ்க்கையில் ஏற்பட்ட உச்ச பட்ச பின்னடைவு என்றாலும் அதில் அந்தப் புகழ்வாழ்வு முடிந்து விடவில்லை. மாறாக அதற்கு பின்பிருந்து தான் பெருமானாரின் வெற்றி வரலாறு தொடங்கியது. தாயிப் தருகிற மகத்தான பாடம் இது,
எந்த ஒரு நெருக்கடியிலும் இது தான் முடிவு என்று சமுதாயம் கருதி விடக்கூடாது, அல்லாஹ் அதற்கு பிறகு ஒரு மாபெரும் வெற்றிக்கான பாதையை வைத்திருப்பான். திருக்குர் ஆன் உறுதிபடக் கூறுகிறது.
فإن مع العسر يسرا - إن مع العسر يسرا

·         ஆனால் அந்த வெற்றிக்கு சில இலட்சனங்கள் தேவை. அதில் முக்கியமானது தோல்விக்கான காரணத்தை முதலில் தம்முடையது என்று ஏற்றுக் கொள்ள வேண்டும். பிறகு அல்லாஹ்விடம் முறையிட வேண்டும். பிறகும் கருணையோடும் அன்போடும் நீதியோடும் செயல்பட வேண்டும்.

வெற்றிகள் விளையும் போது அதற்கு தாமே சொந்தம் கொண்டாடுவதும், தோல்விகள் ஏற்படும் போது பிறர் மீது பழிபேடுவது. சாதாரண மனிதர்களின் இயல்பு. நபி (ஸல்) அவர்கள் தாயிபின் தோல்விக்கு தன்னுடைய இயலாமையே காரணம் எனறும் தன்னை கோபித்து விட வேண்டாம் என்று அல்லாஹ்வை கோரினார்கள். ஒரு உன்னதமான வழி காட்டுதல் இது, தோல்விகள் ஏற்படும் போது இறைவா! இது எங்களின் இயலாமையே! எங்களை கோபித்து விடாதே என்று முறையீடு செய்வது அல்லாஹ்வின் அருளை பெற்றுத்தரும்.

துபைல் பின் அமர் (ரலி) இஸ்லாமை தழுவிய பிறகு அவருடைய சமூகமான தவ்ஸ் களிடம் சென்று பிரச்சாரம் செய்தார். எவ்வளவு முயன்றும் அவருடைய மனைவியை தவிர மற்ற யாரும் இஸ்லாமை ஏற்கவில்லை. பெருமானாரிடம் வந்து தவ்ஸ்களுக்கு எதிராக பிரார்த்தனை செய்யுமாறு கோரினார்,
عن أبي هريرة رضي الله عنه قدم الطفيل بن عمرو على رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله إن دوسا قد عصت وأبت فادع الله عليها فظن الناس أنه يدعو عليهم فقال اللهم اهد دوسا وأت بهم  صحيح البخاري » كتاب الدعوات

பெருமானார் அவரிடம் சொன்னார்கள். திரும்பிச் சென்று அவர்களிடம் பிரச்சரம் செய்யுங்கள். மென்மையாக நடந்து கொள்ளுங்கள்.
إرجع فادعهم وارفق بهم – سيرة إبن هشام
அவர் ஊருக்கு திரும்பி பிரச்சாரம் செய்தார், பின்னர் அவருடை மக்கள் எழுபது முஸ்லிம்களோடு பெருமானார் (ஸல்) அவர்களை சந்திக்க வந்தார்.

மக்கள் நிராகரிக்கிற போது ஆத்திரப்படுவதும் கோபப்படுவதும் கடும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் சிறந்த பலனை தராது. அது தோல்வியையும் அழிவையுமே தரும்,

தன்னுடை சமூக மக்களின் நிராகரிப்பில் கோபமுற்ற இறைத்தூதர்கள் அந்த சமூகங்களின் அழிவுக்கு பிரார்த்தனை செய்திருக்கிறார்கள். இதில் அச்சமூகங்கள் அழிவைச் சந்தித்தன, அந்த இறைத்தூதர்கள் பெருமானார் (ஸல்) பெற்றதை போல வெற்றியை பெற வில்லை.

ஹிஜாஸ் பிராந்தியத்தில் கடைசியாக இஸ்லாமை தழுவியது தாயிப் வாசிகளாகும், ஹிஜ்ரி 9 ம் ஆண்டு ரமலான் மாத்த்தில் மதீனாவிற்கு வந்த தாயிபின் குழு இஸ்லாமை ஏற்பதற்கு ஆச்சரியமான நிபந்தனைகளை இட்டார்கள்.
இப்போது பெருமானார் அரபு தேசத்தின் அரசராக இருந்தார்கள் ஆனாலும் பெருமானாரின் மனோ நிலையில் எந்த மாற்றமும் இருக்கவில்லை. அன்று நினைத்த்து போலவே அவர்கள் இஸ்லாமாகிவிட வேண்டு என்று நினைத்தார்கள்.

தாயிப் வாசிகள்நாங்கள் இஸ்லாமை ஏற்கிறோம். ஆனால் ஜகாத் தர மாட்டோம் ஜிஹாதில் பங்கேற்க மாட்டோம்என்றார்கள். பெருமானார் (ஸல்) அவர்கள் அப்போதும் கோபப் படவில்லை. ஏற்றுக் கொண்டார்கள். பிறகு சொன்னார்கள். இஸ்லாமை ஏற்றுக் கொண்டு விட்டால் எல்லாம் சரியாகிவிடும்
سيتصدقون ويجاهدون إذا اسلموا – سيرة النبوية – إبن كثير
என்ன உறுதி? என்ன திடம்?

நாம் நமது சத்தியத்தில் உறுதியாக இருந்தால் நம்மைச் சுற்றியிருக்கிற சக்திகள் நமக்கு வசப்படும் அல்லது வழிவிடும்.

ஒரு பின்னடைவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிற முஸ்லிம் சமுதாயம் அர்ப்பணிப்பு பொறுமை கருணை உறுதி ஆகிய தாயிபின் பண்புகளை கவனத்தில் கொள்ளுமானால் குறைந்த பட்சம் பதற்றமடைவதை  கோப்படுவதை பழி சுமத்துவதை  சஞசலப்படுவதை தவிர்க்கும் என்றால் வெற்றிகரமான எதிர்காலத்தை விரைவிலேயே சந்திக்க முடிய்ம்.

அல்லாஹ் கிருபை செய்வானாக!

3 comments:

 1. tayibin payanam ......
  nalla pativu

  ReplyDelete
 2. Mohammed hathees maslahi8:07 AM

  Thayif-i, adhanudaiye padippinaihalai ivvalavu nertthiyaha idhuvai yaarum tamilil eludhiyullarhala enru theriyavillai. Alhamdhu lillah .arumaiyana padhivu.Jazakallahu hairan fiddharain.

  ReplyDelete
 3. அல்ஹம்துலில்லாஹ்

  ஜஸாகல்லாஹு ஹைரன் கஸீரா

  ReplyDelete