வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, June 26, 2014

ரமலான்

 ரமலானை வரவேறகும் பழைய பதிவு இது

ரமலான் 2013 

ரமலான் எல்லோருக்கும் நன்மை தரும்
மனிதர்கள் மூன்று வகையினர்
ثُمَّ أَوْرَثْنَا الْكِتَابَ الَّذِينَ اصْطَفَيْنَا مِنْ عِبَادِنَا فَمِنْهُمْ ظَالِمٌ لِنَفْسِهِ وَمِنْهُمْ مُقْتَصِدٌ وَمِنْهُمْ سَابِقٌ بِالْخَيْرَاتِ بِإِذْنِ اللَّهِ ذَلِكَ هُوَ الْفَضْلُ الْكَبِيرُ
1.   பாவத்தில் திழைத்திருப்போர்
2.  நன்மைகளும் பாவங்களும் கலந்து வாழ்வோர்
3.      நன்மைகளை மட்டுமே செய்வோர்
முதல் பிரிவினர் நரகிலிருந்து விடுதலை பெறவும்
இரண்டாம் பிரிவினர் பாவமன்னிப்புக்கும்
மூன்றாம் பிரிவினர் அல்லாஹ்வின் நிறைவான அருளுக்கும் ஆசைப்படுவர்.
இவர்கள் அனைவருக்கும் இவர்களுக்கு வேண்டியது கிடைக்கும் என்பதை யே وهو شهر أوله رحمة وأوسطه مغفرة ، وآخره عتق من النار என்ற மூன்று பிரிவுகள் கிடைக்கிறது.
இங்கே நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.
நாம் எந்த தரத்தில் இருக்கிறோம்?
நாம் நினைப்போம். இரண்டாம் தரத்தில் என்று.
ஆனால் இரண்டாம் தரத்திலிருப்ப்வார்கள் யாரெனில் நிறைய நன்ம்கைகளை செய்து விட்டு எப்போதாவது பாவம் செய்தாலும் உடனடியாக பாவ மன்னிப்பு கோரி மீள்பவர்களே مُقْتَصِدٌ கள்  என விரிவுரையாளர்கள் கூறுகிறார்கள்
அப்படியானால் நாம் மூன்றாம் நிலையில் இருக்கிறோம்.
இதிலிருந்து இடம் பெயர்ந்து இரண்டாம் நிலைக்கும் முதல் நிலைக்கும் செல்ல நாம் உறுதியேற்க வேண்டும். அதற்கு அடிப்படையாக இந்த ரமலானை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
ரமலானை பயன்படுத்தாவர்களாக ஆகி விடக் கூடாது. அல்லாஹ் நம் எல்லோரையும் காப்பாற்றுவானாக!
روى ابن حبان في صحيحه  بسنده إلى رسول الله {صلى الله عليه وسلم} قال: ((صَعِدَ رَسُولُ اللَّهِ {صلى الله عليه وسلم} الْمِنْبَرَ فَلَمَّا رَقِيَ عَتَبَةً قَالَ آمِينَ ثُمَّ رَقِيَ عَتَبَةً أُخْرَى فقَالَ آمِينَ ثُمَّ رَقِيَ عَتَبَةً ثَالِثَةً فقَالَ آمِينَ ثُمَّ قَالَ أَتَانِي جِبْرِيلُ فقَالَ يَا مُحَمَّدُ مَنْ أَدْرَكَ رَمَضَانَ فَلَمْ يُغْفَرْ لَهُ فَأَبْعَدَهُ اللَّهُ قُلْتُ آمِينَ قَالَ وَمَنْ أَدْرَكَ وَالِدَيْهِ أَوْ أَحَدَهُمَا فَدَخَلَ النَّارَ فَأَبْعَدَهُ اللَّهُ قُلْتُ آمِينَ فقَالَ وَمَنْ ذُكِرْتَ عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَيْكَ فَأَبْعَدَهُ اللَّهُ قُلْ آمِينَ فَقُلْتُ آمِين )) (رواه الحكم في مستدركه وابن حبان في صحيحه).
ரமலானை பயன்படுத்திக்கெள்ள அக்கறையோடும் ஈடுபாட்டோடும் இடைவிடாமல் தொடர்ச்சியாகவும் நாம அமல்கள் செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment