வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, June 19, 2014

இமாம் மாலிக் ரஹ் பயன்பட வாழும் கல்வி



قَالُوا سُبْحَانَكَ لَا عِلْمَ لَنَا إِلَّا مَا عَلَّمْتَنَا إِنَّكَ أَنْتَ الْعَلِيمُ الْحَكِيمُ

மைக்கேல் பாரடேகிரகாம் பெல்எட்வெர்ட் ஜென்னர் இவர்களுக்கெல்லாம் நாம் நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறோம்.  இவர்களது அறிவாற்றலால்  அதனால் ஏற்பட்ட நனமைகளால் நாம் பயனடைந்து கொண்டிருக்கிறோம்.

இதே போல முஸ்லிம்கள் அனைவரும் இமாம்களுக்கு நன்றி செலுத்த வேண்டும்.

ஹிஜ்ரி 100 க்குப் பிறகு பிறந்த ஒவ்வொரு முஸ்லிமும் இந்த இமாம்களினால் பயன்பெற்றவர்களே!

இமாம்கள் இஸ்லாத்தின் மூலங்களை ஆய்வு செய்து அதிலுள்ள சட்டக் காரணிகளை கண்டறிந்து சட்ட சூத்திரங்களை உருவாக்கித் தந்தார்கள். அவர்கள் காரணமாகத்தான் இன்று இஸ்லாத்தை நாம் எளிதாக அறிந்து கொள்ள முடிகிறது,
யோசித்துப் பாருங்கள் இமாம்கள் அற்புதமான சேவைகள் இல்லை எனில் ஒவ்வொரு வரும் குர் ஆனையும் ஹதீஸையும் ஆய்வு செய்வதற்கே முழுக்காலத்தையும் செலவிட வேண்டியிருக்கும்.

ஒரு திருடன் திருடிக் கொண்டு ஓடுகிற போது கீழே விழுந்து இறந்து போனான். அவனுக்கு ஜனாஸா தொழவைப் பதா என்பதில் சர்ச்சை எழுந்த்து.

இமாம் அபூ ஹனீபா கேட்டார் அவன்  முஸ்லிமா கிருத்துவனா? எல்லோரும் அவன் முஸ்லிம் என்றார்கள். அப்படியானால்  அவனுக்கு தொழவையுங்கள் என்று தீர்ப்பளித்தார்கள்.

திருட்டு போன்ற குற்றங்களை செய்பவர்கள் பாஸிக் பாவிகள். ஆனால் காபிர்கள அல்ல என்பது போன்ற சட்டச் சூத்திரங்கள் இமாம்களின் ஆய்வுகளின் முடிவுகளாகும்.

இமாம்களின் அபாரமான அறிவாற்றல் கொண்டிருந்த இமாம்கள் திருக்குர் ஆனிலிருந்தும் ஹதீஸ்களிலிருந்தும் மிக நுட்பமாக சட்டங்களை கண்டறிந்து அவற்றை நமக்கு வகுத்தும் தொகுத்தும் சொன்னார்ள்.

இமாம் அபூஹனீபா குறித்து
§         وقال سفيان الثوري وابن المبارك : " كان أبو حنيفة أفقه أهل الأرض في زمانه

இமாம் மாலிக் குறித்து
§         الليث: "علم مالك تقي, علم مالك نقي, مالك أمان لمن أخذ عنه من الأنام".
§         ابن المبارك: "لو قيل لي اختر للأمة إماما, لأخترت مالكا".

இதே போலத்தான் மற்ற இமாம்கள் ஒவ்வொருவரும் ஆழிய அறிவாற்றல பெற்றிருந்தார்கள் என்பதற்கு அவர்களுடைய காலத்து அறிஞர்கள் சாட்சி சொல்கிறார்கள்

திருக்குர் ஆனில் அல்லாஹ்வோ அல்லது பெருமானார் (ஸல்) அவர்களோ மார்க்கத்தில் நமது தேவைகளை வரிசையாகவும் ஒரு தலைப்பின் கீழும் சொல்லவில்லை. உதாரணமாக ஓளு ஜகாத் தலாக்

இமாம்களே திருக்குர் ஆனிலிருந்து ஹதீஸ்லிருந்தும் கிடைக்கிற சட்டங்களை மக்களின் தேவைக்கேற்ப வரிசையாக வகுத்தும் பர்ளு சுன்னத் முஸ்தப்பு என பகுத்தும் சொன்னார்கள்.

ஒளு விசயத்தில் திருக்குர் ஆன் சொல்லக்கூடிய நான்கு செய்திகள் பர்ளு என்றும் அதற்கு மேலாக பெருமானார் (ஸல்) அவர்கள் செய்தவைகளை சுன்னத் என்றும் இமாம் அபூஹனீபா வகைப் படுத்தினார்கள்.

திருக்குர் ஆனிய வசன்ங்களையும் அண்ணலாரின் பொன் மொழிகளையும் இவ்வாறு சட்டங்களாக வகுத்தும் பகுத்தும் சொன்ன முதல் அறிஞர் பெருமகனாக இமாம் அபூஹனீபா ரஹ் அவர்கள் பாராட்டப்படுகிறார்கள்.

§         وهو أول من دوَّن الفقه الإسلامي وسجله باباً باباً

அன்னாரின் வழியில் மற்ற இமாம்களும் தங்களது ஆய்வுகளின் அடிப்படையில் முஸ்லிம் சமுதாயத்திற்கு அதி உன்னதமான சட்ட்த் தொகுப்புக்களை வழங்கினார்கள்.

அவற்றில் கருத்து வேறுபாடுகள் இருந்தனஅவை தீனுக்கு அழகாக அமைந்தன- கருத்து வேறுபாடுகளை கொண்டவர்கள் இப்படி ஒருவரை ஒரு வர் மதித்து வாழ முடியுமா? என்ற ஆச்சரியமே அவர்களது கருத்து வேறுபாடுகளின் உன்னத தன்மைக்கு சான்று பகர்கிறது.

§         قال الإمام الشافعي زائراً قبر أبي حنيفة  "إني لأتبرك بأبي حنيفة "-

இன்றைக்கும் பாருங்கள் ஹனபியும் ஷாபியும் ஒருவரை ஒருவர் அங்கீகரித்துமதித்துதேவை எனில் மற்றவரின் கருத்தை ஏற்றுக் கொண்டு வாழ்கிறார்கள்.

கருத்து வேறுபாடுகள் அங்கீகரிக்கப் படுவதற்கு உலகின் உன்னதமான உதாரணங்களாக மத்ஹபுகள் திகழ்கின்றன,

இமாம்கள் நால்வருமே அடுத்தடுத்த கால கட்டத்தில் வாழ்ந்தவர்கள்
நான்கு இமாம்கள்
·         அபூஹனீபா பிறப்பு 80  - இறப்பு 150
·         மாலிக்            93  -     173
·         ஷாபி :            150 -    204
·         ஹன்பல்          164 -  241  

أحمد بن حنبل كان تلميذاً للشافعي. والشافعي كان تلميذا لمالك. والشافعي وأحمد بن حنبل تتلمذا على تلاميذ أبي حنيفة.

ஒருவரை ஒருவர் கல்வியின் அடிப்படையில் மதித்து வாழும் நிர்பந்த நிலையில் இமாம்களின் கருத்து வேறுபாடுகள் தீனுக்கான சேவையாக அவர்களது சிந்தனை செயல்பட்ட்தையே காட்டுகிறது,

இமாம்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கை வரலாறும் அன்றைய காலத்தில் அறிவுத்தளத்தில் அவர்கள் ஐகான் ICON  களாக இருந்தார்கள் என்பதையும் அதே போல
·         இறையச்சம்
·         இறைத்தூதரின் மீது நேசம் 
·         நேர்மை
·         தீனுக்கு சேவையாற்றுவதே இலக்கு
 ஆகிய அம்சங்களில் தலை சிறந்தவர்களாக இருந்தார்கள் என்பதை காட்டுகிறது, இது தவிர ஒவ்வொரு வரிடம் சில விசேஷ அம்சங்கள் இருந்தன.

இன்று இமாம் மாலிக் ரஹ் அவர்களின் வரலாற்றில் சில விசேஷ அம்சங்களை பார்க்கிறோம்.

இமாம் மாலிக் ரஹ் அவர்களுடைய கப்ரு ஜன்னத்துல் பகீஃ கபருஸ்தானில் இருக்கிறது.
அங்கே அடக்கமாக வேண்டும் என்பதறகாகவே அவர்கள் ஹஜ்ஜுக்காக மக்காவுக்கு சென்றதை தவிர மதீனாவை விட்டு வெளியேறவில்லை

அப்பாஸீய கலீபாக்கள் அப்போதைய தலை நகரான் பக்தாதுக்கு வருகை தருமாறு பல முறை விரும்பிக் கேட்டுக் கொண்ட போதும் மதீனாவிலிருந்து அவர்கள் வெளியேறவில்லை

மதீனாவை நேசிப்பதில் அளவு கடந்த் ஈடுபாடு கொண்டிருந்தார்
மதீனாவில் செருப்பணிந்தோ வாகனத்திலோ சென்றதில்லை
மதீனாவின் பழைய கட்டிடங்களை காணும் போது இதில் பெருமானாரின் பார்வை பட்டிருக்கும் அல்லவா என்று சொல்லி அதை முத்தமிடுவார்.

ஆனால் இமாம் மாலிக் மதீனாவை பூர்வீகமாக கொண்டவர் அல்ல.

அவருடைய பூர்வீகம் எமன்,
அங்கு சிற்றரசர்களாக இருந்த இருந்த அவருடை முப்பாட்டனார் அபூஆமிர் பெருமானார் (ஸல்) அவர்களது காலத்தில் ஹிஜ்ரி 3 ல் மதீனாவிற்கு வந்து இஸ்லாமை தழுவினார்.

§         مالك بن أنس بن مالك بن أبي عامر
§         من ملوك اليمن،

தந்தை இறந்து மூன்று வருடங்களுக்குப் பிறகு பிறந்தார். ஆச்சரியமான முறையில்
அதனால் தான் அதிகப் பட்ச கர்ப்ப காலம்
§  24 மாதம் என அபூஹனீபா சொல்லும் போது
§  4 வருடம் ஷாபி சொல்லும் போது
§  6 வருடம் மாலிக் சொன்னார்கள்.

இமாம் மாலிக்கின் தோற்றமும் சிறப்பு இயல்புகளும்

§         كان مالك طويلا عظيم الهامة اشقر ، أزرق العينين ، عظيم اللحية و كان متصف بحسن الخلق و الرزانة و سرعة الحفظ والفهم منذ صباه
§  உயரமானவர்
§  பெரிய தலை
§  அழகிய சிவப்பு
§  நீலநிரக் கண்கள்
§  அடர்ந்த தாடி
§  அருமையான குணம்
§  கம்பீரம்
§  விரைவான மனன சக்தி
§  சிறுவயதிலேயே கல்வியில் திருவானவர்

இப்னு உமர் ரலியின் சீடரான இமாம் நாபிஃ யிடம் அதிக ஈடுபாடு கொண்ட இமாம் மாலிக் அவரிடமிருந்து ஏராளமாக கற்றார். வேறுபலரிடமிருந்தும் அவர் ஹதீஸ்களை பெற்றார்.

أخذ عن نافع ولازمه، وعن سعيد المقبري، والزهري، وابن المنكدر، ويحي بن سعيد القطَّان، وأيوب السختياني، وأبي الزناد، وربيعة، وخلق

ஹதீஸ் அறிவிப்பாளர்களில் தங்கத் தொடர் வரிசை என்று போற்றப்படுவது

قال البخاري: "أصح الأسانيد كلها: مالك عن نافع عن ابن عمر"، وكان البخاري يسمي هذا الإسناد بسلسلة الذهب،

மதீனாவின் பிரபல கல்வியாளரும், முதன் முதலாக ஹதீஸ் நூலை தொகுத்தவருமான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹரியிடமிடமிருந்து அதிகமாக கற்றர்.

இளம் வய்திலேயே பெரும் ஹதீஸ் கலை அறிஞராக புகழ் பெற்ற அவர் 17 வய்தில் மஸ்ஜிதுன் னபவி பள்ளிவாசல் மாணவர்களுக்கு பாடம் நடத்த தொடங்கினார். 69 ஆண்டுகள் மஸ்ஜிதுன் னபவயில் வகுப்புக்கள் நடத்தினார்.  

பல்லாயிரக்கனக்கான மாணவர்கள்
ஒரு சர்வதேச கல்லூரி போல அவரது வகுப்பு இருக்கும்
நாடு வாரியாக மாணவர்கள் அழைத்து அனுமதிக்கப் படுவார்கள்

§         وهذا الإمام مالك، قد بدأ حلقته وكان له من العمر 17 سنة واستمر حتى مات. وطوال هذه المدة كان الحضور بالآلاف حتى اضطر للاستعانة بمن يساعده في النظام فكان ينادي: (ليدخل أهل الحجاز) فلا يدخل غيرهم، (ليدخل أهل الشام)، (ليدخل أهل مصر)

17 வயதில் ஆசிரியராக கல்விப் பணியை தொடங்கினாலும் கூட 40 வயதுக்கு மேல் தான் சட்ட தீர்ப்புக்கள் பத்வா கொடுக்க ஆரம்பித்தார். அதுவும் 70 ஆசிரியர்களிடம் அனுமதி பெற்ற பிறகு
تحلق الناس عنده لطلب العلم وهو ابن سبع عشرة سنة ولم يفتي إلا بعدما استشارة سبعين عالما من علماء المدينة وهو ابن اربعين

இமாம் மாலிக்கின் அரை நூற்றாண்டுகளுக்கு மேலான ஹதீஸ் பணியால ஹதீஸ்களை அறீஞர்கள் பெரும்பாலோர் இமாம் மாலிக்கின் மாணவர்களே .

பெருமானாரின் பாராட்டு

يروى عن النبي من حديث أبي هريرة أنه قال: "ليضربن الناس أكباد الإبل في طلب العلم، فلا يجدون عالما أعلم من عالم المدينة" وقال غير واحد بأنه مالك بن أنس

மக்கள் அளித்த பாராட்டு
·       و قال عبد الرحمن بن مهدى: ما رأيت أحدا أتم عقلا أو أشد تقوى من مالك ، و قد شهد له جميع الأئمة بالفضل حتى قالوا: لا يفتى و مالك فى المدينة

·       قول الشافعي فيه :" إذا جاء الحديث فمالك النجم"

·       وقال :" من أراد الحديث فهو عيال على مالك

பேரறிஞராக இருந்தாலும் அலட்டிக் கொள்ளும் இயல்போ, எதற்கு முந்திக்கொள்ளும் குணமோ இமாமிடம் இருக்க வில்லை .

லா அத்ரீ எனக்கு தெரியாது என்று அதிகமாக பதில சொல்பவராக இருந்தார்,
என்ன இப்படி சொல்கிறீர்கள் என்று கேட்டால்

قَالُوا سُبْحَانَكَ لَا عِلْمَ لَنَا إِلَّا مَا عَلَّمْتَنَا إِنَّكَ أَنْتَ الْعَلِيمُ الْحَكِيمُ
என்ற இறை வசனத்தை ஓதிக் காட்டுவார்.

الامام مالك  كان يقول ما أجبت في الفتوى حتى سألت من هو أعلم مني هل تراني موضعا لذلك سألت ربيعة وسألت يحيى بن سعيد فأمراني بذلك فقلت فلو نهوك قال كنت أنتهي لا ينبغي للرجل أن يبذل نفسه حتى يسأل من هو أعلم منه

முஅத்தா

இமாம் மாலிக் அவர்கள் தொகுத்த மிக உன்னதமான ஹதீஸ் நூலான முஅத்தா மாலிக்கிற்கு அவர் காலத்திலேயே சர்வதேச அங்கீகாரம் கிடைத்து அதைப் படிப்பதற்காக கூட்டம் கூட்டமாக மாணவர்கள் உலகின் பல்வேறு பாகத்திலிருந்து வந்து சென்றார்கள். அரசர்கள் கூட

இமாம் மாலிக்க்கின் தனிச்சிறப்புகளில் முக்கியமானது உலகின் மகா சகரவர்த்திகளான அரசர்கள்அவரது இடம் தேடி வந்து சாமாண்யர்களில் ஒருவராக அமர்ந்து கல்வி பெற்றார்கள்.

அப்பாஸீய கலீபாக்கள் ஒரு கோடி சதுர மைல்களுக்குமேல் கட்டியாண்டவர்கள். 

அரசர்கள் வருகிற போது அவர்களது கையை மரியாதை நிமித்தமாக மக்கள் முத்தமிடுவது வழக்கம்

இமாம மாலிக்கை காண  கலீபா மன்சூர்  வந்த போது அவரது கைகளை முத்தமிட இமாம் மாலிக் மறுத்தார்

தனக்கு முஅத்தாவை கற்க ஆசை என்றும் ஆட்சிப் பணியில் இருப்பதால் இமாம் அவர்கள் பக்தாதுக்கு வந்து கற்பிக்க வேண்டும் என்றும் ஹாரூன் ரஷீது கேட்டுக்கு கொண்ட போது கல்வியை தேடி நீங்கள் தான் வரவேண்டும் என்று இமாம் மாலிக் கூறினார்.

 அவர் மதீனா வந்த போது  ஹாரூன் ரஷீதுக்கு தனி இடம் தர மறுத்தார்.


§         و كان هارون الرشيد قد بعث للإمام مالك ليأتيه فيحدثه بعلمه فقال الإمام (العلم يؤتى) فقصد هارون الرشيد منزله

§  சாய்ந்து உட்கார்ந்த ஹாரூன் ரஷீதிடம் கண்டிப்பு
§          
§          و إستند هارون الرشيد إلى الجدار فقال مالك يا أمير المؤمنين من إجلال رسول الله إجلال العلم فجلس بين يديه فحدثه


அதே நேரத்தில் கல்வியாளர்களை அவர் மதித்த விதம் வேறு.

இமாம் அபூஹனீபா வும் சுப்யான் சவ்ரியும் அவரை சந்திக்க வந்த போது விலை உயர்ந்த போர்வை விரித்து வரவேற்றார்.

முஅத்தாவின் சிறப்பு

·         40 ஆண்டு கால தயாரிப்பு
·         10 ஆயிரம் ஹதீஸ்கள்
·         மு அத்தாவிற்கு 25 விரிவுரைகள்
·         20 சுருக்க நூல்கள் - முஹ்தஸர்கள்

§         و قد ظل يحرره لمدة أربعين عاما جمع فيه عشرة آلاف حديث و يعد كتاب (الموطأ) من أكبر آثار الإمام مالك التى نقلت عنه

ஹதீஸ்இல்முவரஃ இவை தான் இமாம் மாலிக்கிடம் முக்கியத்துவம் பெற்றிருந்தன.

இன்றைய நம்முடை காலத்தில் நாம் மற்றவர்களை மதிப்பதன் அளவுகோல்கள் எதன் அடிப்படையில் அமைந்திருக்கின்றன யோசித்துப் பாருங்கள்.

முஸ்லிம் சமூகத்தில் வால்வுயூஸ்மதிப்பீடுகள் பெரிதும் மாறிவிட்ட காலம் இது. அரசியல் பணம் எல்லாவ்ற்றையும் தாண்டி ஆளுமைப்படுத்து கிறது.

إن أكرمكم عند الله أتقاكم   என்ற வாசகத்திற்கு இன்று நாம் ஏதாவது மதிப்பு தருகிறோமா?

அன்று அந்த மதிப்பு தரப்பட்டதால் ஏற்பட்ட மகத்தான ஒரு நன்மை ஆயிரம் ஆண்டுகளை கடந்த் இன்றும் நிலை பெற்று வருகிறது.

இமாம் மாலிக்கிடம் பணிந்து பாடம் பெற்ற கலீபா ஹாரூன் ரஷீதுகஃபாவை இடித்து விட்டு தன் பங்குக்கு புதிதாக கட்ட நினைத்தார். (அவருடை குடும்பத்தவரான நபித்தோழர் அப்துல்லாஹ் பின் ஜுபைர் முன்னர் கட்டியதைஅவரது எதிரியான ஹஜ்ஜாஜ் பின் யூசுப் இடித்த்தை ஈடு செய்யும் வகையில் - )

ஹாரூன் ரஷீது இமாம் மாலிக்கிடம் அனுமதி கோரினார் இமாம் மாலிக் சொன்னார்
வேண்டாம்! கஃபாவை மன்னர்களின் விளையாடு பொம்மையாக ஆக்கிவிடாதீர்கள்!

என்ன அற்புதமான துணிச்சலான பக்தி மிக்க யோசனை! கலீபா ஏற்றுக் கொண்டார்.  சுமார் ஆயிரம் வருடமாக யாரும் கஃபாவை தொடவில்லை அதன் சுவர்கள் பலகீனமாகும் வரை. அதற்குப் பின்னரும் கூட கஃபாவின் அமைப்பை யாரும் மாற்றா முயற்சிக்க வில்லை.

இந்த வரலாறு நீங்கள் கேள்விப்பட்ட்தாக இருக்கலாம். இதில் மறைந்து கிடக்கிற மாண்புகளை எண்ணிப்பாருங்கள்.
·         அறிஞரின் கருத்தை அரசர் ஏற்றார்,
·         அறிஞர் சொன்ன அற்புதமான வாசகம். அதன் கனம்.
·         ஒரு அறிஞரின் தெளிவு நூற்றாண்டுகளாக பின் பற்றப்படுகிற தொலைவு.

இமாம் மாலிக்கை இந்த உலகில் சிறப்பாக அடையாளப்படுத்துவது இரண்டு
1.   இல்மின் மீது அவர் கொண்ட ஆர்வம்
§         كان من توقيره للعلم لا يحدث إلا على طهارة ولا يحدث أو يكتب حديثا واقفا
2.   மதீனாவின் மீது அவர் கொண்ட பாசம்.
·         وكان لا يفضل على المدينة بقعة سواها.

இமாம் மாலிக்கை இந்த உலகில் வியப்பாக நிலை நிறுத்துவது இரண்டு
1.   முஅத்தா மாலிக்
( குர் ஆனுக்கு அடுத்த படியாக பாடம் நடத்தப் படும் மிகப் பழமையான நூல்இன்று வரை பாடம் நடத்தப்படுகிற நூல்   முஅத்தா)
2.   கஃபாவின் தோற்றம்

.





4 comments:

  1. assalamu alaikum. one doubt imam shafi and hambali imam yeppadi abuhanifa (rah) udaya manavaraha irukka mudiyum. abuhanifa (rah) vafath hijri 150. atharkku pinbe intha 2 imamum piranthirukkirarhal.

    ReplyDelete
    Replies
    1. Imam aboo haneefa (Rahm) udaiya maaanavarhal abuyusus (Rahm)&muhammed (Rahm).neengal kooruvadhu kelvippadadha karutthu enru ninaikkiren.

      Delete
  2. அல்ஹம்து லில்லாஹ் மிக அருமை ஹழ்ரத். உண்மையில் இமாம்களின் வரலாறுகளை நாம் மக்களிடம் சொல்லாததினால் தான் இன்று கயவர்கள் இமாம்களின் கண்ணியத்தை குறைத்து பேசும் போது கல்லடியும், சொல்லடியும், செற்றடியும் விழவில்லை.இன்ஷா அல்லாஹ் இதற்கு பிறகாவது ஒவ்வொரு ஜும்ஆ விழும் நாம் தவறாமல் இமாம்களின் சேவைகளை சொல்லி அவர்களின் கண்ணியங்களை மக்களின் உள்ளத்தில் ஆழமாக பதிப்போம்.

    ReplyDelete
  3. Anonymous2:09 AM

    Imamkalai patriya ungal thankath thodar thodarattum.

    ReplyDelete