வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Wednesday, July 09, 2014

உண்மை வலிது

لَقَدْ تَابَ اللَّهُ عَلَى النَّبِيِّ وَالْمُهَاجِرِينَ وَالْأَنصَارِ الَّذِينَ اتَّبَعُوهُ فِي سَاعَةِ الْعُسْرَةِ مِنْ بَعْدِ مَا كَادَ يَزِيغُ قُلُوبُ فَرِيقٍ مِنْهُمْ ثُمَّ تَابَ عَلَيْهِمْ إِنَّهُ بِهِمْ رَءُوفٌ رَحِيمٌ(117)
وَعَلَى الثَّلَاثَةِ الَّذِينَ خُلِّفُوا حَتَّى إِذَا ضَاقَتْ عَلَيْهِمْ الْأَرْضُ بِمَا رَحُبَتْ وَضَاقَتْ عَلَيْهِمْ أَنفُسُهُمْ وَظَنُّوا أَنْ لَا مَلْجَأَ مِنْ اللَّهِ إِلَّا إِلَيْهِ ثُمَّ تَابَ عَلَيْهِمْ لِيَتُوبُوا إِنَّ اللَّهَ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ(118)يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَكُونُوا مَعَ الصَّادِقِينَ(119)
பாவமன்னிப்பிற்குரிய ரமலானின் இந்த  இரண்டாம் பகுதியில் திருக்குர் ஆனின் வழியாக  அல்லாஹ் மன்னிப்பு வழங்கிய ஒரு மகத்தான வரலாற்றை பார்க்கிறோம்.
அந்த மூவரையும் அல்லாஹ் மன்னித்து விட்டான் என்று சொல்கிற இறைவசனம் மூவர் யார் என்று குறிப்பிடாவிட்டாலும் கூட பின்தங்கிய அம்மூவர்என்று சொன்னதால்  அம்மூவரின் பெயரை தவிர்த்து விட்டு இந்த வசனத்திற்கு விளக்கம் குற இயலாது. அதனால் திருக்குர் ஆன் இருக்கிற வரை இம்மூவரின் பெயரும் இருக்கும்.
1.   கஃபு பின் மாலிக்
2.   ஹிலால பின் உமைய்யா
3.   முராரா பின் ரபீஃ
இம்மூவரில் பிரதானமானவர் கஃபு.
இஸ்லாம் இந்த உலகில் நிகழ்த்திக் காட்டிய அற்புதமான சாதனைகளுக்கு எடுத்துக் காட்டாக திகழ்கிற கஃபு (ரலி) அவர்களின் வரலாற்றை இமாம் புகாரி ரஹ் அவர்கள் யுத்தம் தொர்பான பாடத்தில் (கிதாபுல் மகாஸி) குறிப்பிடுகிறார்.( புஹாரி 4418)
கஃபு பின் மாலிக் ரலி பெருமானாரை மக்காவிலேயே சந்தித்து அகபா உடன்படிக்கையின் போது இஸ்லாமை தழுவியவர் தபூக் யுத்தத்தில் கலந்து கொள்ளாது பின் தங்கிவிட்டார்.  இதற்கான காரணத்தை புஹாரியில் இடம் பெற்றுள்ள நீண்ட ஹதீஸில் விளக்கியுள்ளார்.
·         அது கடும் கோடைக் காலம்
·         பயணத்தின் தூரம் அதிகம் (சுமார் 700 மைல்)
·         இதுவரை எதிர்கொண்டவர்களை விட பெரிய இராணுவம் கொண்ட எதிர்கள்
·         அது மதீனாவில் பேரீத்தம் பழ அறுவடை நேரம்

பொதுவாக யுத்த ஆயத்தங்களை இரகசியமாக செய்கிற பெருமானார் (ஸல்) இந்த பயணத்தின் முக்கியம் கருதி இது பற்றி முன்னதாகவே விளக்கி சொல்லியிருந்தார்கள்.

அதனால் சஹாபாக்கள் அதிக அளவில் திரண்டிருந்தனர். பெருமளவில் நிதியும் திரட்டப் பட்டது. சஹாபாக்களின் அர்ப்பணிப்பு உணர்விக்கு அது சான்றாக இருந்தது. 

கஃபு (ரலி) தயாராக நினைத்தார். ஏதோ ஒன்று அவரை தடுத்து விட்டது.

சூழ்நிலயும் அதற்கு சாதகமாக இருந்தது. கஃபு (ரலி) கூறுகிறார்.

கலந்து கொள்வோருக்கான பட்டியல் எதுவும் தயாரிக்கப் பட வில்லை. அதனால் அல்லாஹ் வஹியின் மூலம் அறிவித்துக் கொடுத்தால் தவிர யார் வரவில்லை என்று தெரியாது.
قَالَ كَعْبٌ فَمَا رَجُلٌ يُرِيدُ أَنْ يَتَغَيَّبَ إِلَّا ظَنَّ أَنْ سَيَخْفَى لَهُ مَا لَمْ يَنْزِلْ فِيهِ وَحْيُ اللَّهِ
யுத்தத்திற்கு ஆயத்தமாக இருந்தாலும் அந்த நேரத்தில் புறப்படுவதில காட்டிய தாமதம் கஃபு (ரலி)   அவர்களை யுத்தத்திற்கு செல்ல விடாமல பின் தங்க வைத்து விட்டது.

(முஃமின்கள் எச்சரிக்கை அடைய வேண்டிய செய்தி இது. எவ்வளவு தான் கட்டுபாடனவராக இருந்தாலும் அமல்களில் எப்போதாவது சுணக்கம் காட்டினால்சற்று நேரம் கழித்து செய்து கொள்ளாலாம் என்று நினைத்தால் அது வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தி விடக் கூடும். கஃபு ரலிக்கு நேர்ந்ததை போல. அதனால் ஒரு போதும் கடமைகளில் சுணக்கம் கூடாது. நாம் சுணக்கம் காட்டிய அல்லது தவற விட்ட கடமைகளுக்காக இப்புனித ரமலானில் அல்லாஹ்விடம் மன்னிப்பு கோருவோம். அல்லாஹ் நமது பிழைகளை பொறுத்தருள்வானாக!)

யுத்ததிற்கு எல்லோரும் புறப்பட்டு சென்ற பிறகு மதீனாவில் சுற்றிய கஃபு (ரலி) வெட்கரமாக உணர்ந்தார்கள். ஏனெனில் மதீனாவில் அப்போது முனாபிக்குகளும் இயலாதவர்களுமே இருந்தார்கள்.  

சொல்லி வைத்த மாதிரி யுத்த களத்தில் வைத்து பெருமானார் (ஸல்)அவர்கள் கஃபை பற்றி விசாரித்தார்கள். கஃபு வரவில்லை என்பது  செய்தியாகிவிட்டது.
என்ன பொய் சொல்லி தப்பிக்கலாம் என்று பல யோசனைகளை செய்து வைத்தார் கஃபு. ஆனால் பெருமானார் மதினாவுக்கு வந்து விட்டார் என்ற செய்தியில் எல்லா பொய்களும் பறந்து விட்டன. அவரது ஈமான் உண்மையை மட்டுமே பேசுமாறு அவருக்கு அறிவுறுத்தியது. ஒரு வேளை அல்லாஹ் உண்மையை வெளிப்படுத்தி விட்டால் என்னவாகும் என்று அவர் அஞ்சினார்.

وَطَفِقْتُ أَتَذَكَّرُ الْكَذِبَ وَأَقُولُ بِمَاذَا أَخْرُجُ مِنْ سَخَطِهِ غَدًا وَاسْتَعَنْتُ عَلَى ذَلِكَ بِكُلِّ ذِي رَأْيٍ مِنْ أَهْلِي
فَلَمَّا قِيلَ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ أَظَلَّ قَادِمًا زَاحَ عَنِّي الْبَاطِلُ ،،،  فَأَجْمَعْتُ صِدْقَهُ

மஸ்ஜிதுன்னபவியில் பெருமானாரைச் சந்தித்த சுமார் 80 ஏதேதோ காரணங்களைச் சொல்லி தங்கள்து இயலாமையை வெளிப்படுத்தினர். அவர்களது வெளிப்படையான காரணத்தை ஏற்றுக் கொண்ட பெருமானார் (ஸல்) அவர்களுக்காக மன்னிப்பு கோரினார்கள். அவர்களது அந்தரங்கத்தை அல்லாஹ்விடம் ஒப்படைத்தார்கள்.

وَكَانُوا بِضْعَةً وَثَمَانِينَ رَجُلًا فَقَبِلَ مِنْهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَانِيَتَهُمْ وَبَايَعَهُمْ وَاسْتَغْفَرَ لَهُمْ وَوَكَلَ سَرَائِرَهُمْ إِلَى اللَّهِ

கஃபு ரலி வந்ததும் பெருமானார் அவரைப் பார்த்து ஒரு கோபப் புன்னகை புரிந்தார்கள்

فَجِئْتُهُ فَلَمَّا سَلَّمْتُ عَلَيْهِ تَبَسَّمَ تَبَسُّمَ الْمُغْضَبِ

யுத்தத்திற்கு தயாரான நீர் ஏன் வரவில்லை என்று கேட்டார்கள்.  கஃபு ரலி உள்ளம் திறந்தார்.

என்னால் பொய்யாக வாதாடி உங்களை நம்ப வைத்து விட முடியும். நான் உண்மை சொல்ல விரும்புகிறேன், என்னிடம் எந்தக் காரணமும் இல்லை என்னை மன்னித்து விடுங்கள் என்றார்.

إِنِّي لَأَرْجُو فِيهِ عَفْوَ اللَّهِ لَا وَاللَّهِ مَا كَانَ لِي مِنْ عُذْرٍ وَاللَّهِ مَا كُنْتُ قَطُّ أَقْوَى وَلَا أَيْسَرَ مِنِّي حِينَ تَخَلَّفْتُ عَنْكَ
என்பது பேர் வந்து சமாளித்து விட்டுப் போன் போது ஒன்றும் சொல்லத பெருமானார் கஃபு ரலி இவ்வாறு கூறியதும்

فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَّا هَذَا فَقَدْ صَدَقَ فَقُمْ حَتَّى يَقْضِيَ اللَّهُ فِيكَ

இவர் உண்மை சொன்னார் என்றார்கள். முடிவை ஒத்தி வைத்தார்கள்.

கஃபு ரலி யை பின் தொடர்ந்து வந்த அவரது குடும்பத்தினர். நீங்களும் ஒரு பொய்யைச் சொல்லி இருக்கலாமே! அல்லாஹ்வின்  தூதரே அவர்களுக்கு பாவ மன்னிப்பும் கோரினார் அல்லவா என்றார்கள்.

قَدْ كَانَ كَافِيَكَ ذَنْبَكَ اسْتِغْفَارُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَكَ
ஆனால் கஃபு ரலி அதை ஏற்றுக் கொள்ள வில்லை.

பெருமானாரின் உத்தரவு பின்னால் வந்தது.

கஃபு அவர்களோடும் அவர் போல பின் தங்கி விட்ட மற்ற இருவரோடும் பேச வேண்டாம் என பெருமானார் தடை செய்தார்கள்.

40 நாட்கள் இத்தடை தொடர்ந்தது,

மற்ற இருவரும் வீட்டிற்குள் அழுது கொண்டு அடைந்து கிடந்தார்கள். எனினும் கஃபு (ரலி) முஸ்லிம்களுக்கிடையே உலா வந்தார்.

ஆனால் அவர் சலாம் சொன்னால் ஒருவரும் பதில் சொல்ல வில்லை. பெருமானார் (ஸல்) அவர்கள் கூட பதில் சொல்கிறார்களா என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. கஃபு (ரலி) பூமியே சுருங்கிப் போய்விட்டது, வாழ்க்கை இறுகிப் போய்விட்டது.

இந்த நேரத்தில் பக்கதிலிருந்த கஸ்ஸான் குலத்து சிற்றரசன் கஃபு (ரலி) ஆதரவு தருவதாக கூறி ஒரு கடிதத்தை அனுப்பினார். (சோதனையில் ஏற்பட்ட சோதனை அது)

ஆனல் உண்மை முஃமினும் தீர்க்க சிந்தனை கொண்டவருமான  கஃபு (ரலி) அக்கடிதத்தை அடுப்பிலே போட்டார்.

َ دَفَعَ إِلَيَّ كِتَابًا مِنْ مَلِكِ غَسَّانَ فَإِذَا فِيهِ أَمَّا بَعْدُ فَإِنَّهُ قَدْ بَلَغَنِي أَنَّ صَاحِبَكَ قَدْ جَفَاكَ وَلَمْ يَجْعَلْكَ اللَّهُ بِدَارِ هَوَانٍ وَلَا مَضْيَعَةٍ فَالْحَقْ بِنَا نُوَاسِكَ
فَقُلْتُ لَمَّا قَرَأْتُهَا وَهَذَا أَيْضًا مِنْ الْبَلَاءِ فَتَيَمَّمْتُ بِهَا التَّنُّورَ فَسَجَرْتُهُ بِهَ

40 வது நாள் புதிய உத்தரவு வந்தது. மனைவியை விட்டு பிரிந்திருக்குமாறு பெருமானார் உத்தரவிட்டார்கள். கஃபு கேட்டார்.

فَقُلْتُ أُطَلِّقُهَا أَمْ مَاذَا أَفْعَلُ قَالَ لَا بَلْ اعْتَزِلْهَا وَلَا تَقْرَبْهَا

கஃபு (ரலி) தனத் மனைவியை அவரத் தாய் வீட்டுக்கு செல்லுமாறு உத்தரவிட்டு விட்டு தன் வீட்டில் தனியே இருந்தார்கள்.

50 வது நாள் காலை சுபுஹ் தொழுது விட்டு தன் வீட்டின் மேல் பகுதியில் அவர் உட்கார்ந்திருக்கும் போது பக்கத்திலிருத ஸில்ஃ மலையிலிருந்து ஒரு சப்தம் கேட்டது.

கஃபே! நல்ல செய்தி!

கஃபு ரலி சொல்கிறார் எனக்கு புரிந்து விட்டது. எனக்கு மன்னிப்பு கிடைத்து விட்டது என்பதை அறிந்தேன் ஸஜ்தாவில விழுந்தேன்.

(கஃபு ரலி யின் விவகாரம் மதீனாவின் ஒட்டு மொத்த சஹாபாக்களுக்கு ம் பெரும் வேதனையாக இருந்தது. இவர்களின் தவ்பா குறித்த தவ்பா அத்தியாயத்தின் வசனம் இரவில இறங்கியது. அன்னை உம்மு சலமா அம்மையார் இப்போதே சொல்லிவிடவா என்று கேட்டாகள். உறக்கத்திலிருக்க மக்களை இடையூறு செய்ய வேண்டாம் என்று சொன்ன பெருமானார் காலையில் செய்தியை சொன்னாகள். அபூபக்கர் ரலி அவர்களும் உமர் ரலி அவர்களும் இந்த செய்தியை சொல்ல முந்திக் கொண்டு வந்தார்கள், நடை வேகதத்தில் உமர் ரலி முந்தி விடவே பக்கதிலிருந்த மலை மீதேறி இந்த நற்செய்தியை அபூபக்கர் சித்தீக் ரலி அவர்க்ள் தான் சம்பதமிட்டுச் சொன்னார்கள் என ஒரு வரலாற்றுக் குறிப்பு தெரிவிக்கிறது. ) 

இதற்குள் இன்னொருவர் குதிரையில் ஏறி முழு செய்தியை கொண்டு வந்தார். அவருக்கு தான் அணிந்திருந்த ஜுப்பாவை கழற்றிக் கொடுத்த கஃபு ரலி அவர்கள் பெருமானாரைச் சந்தித்தார். பெருமானார் (ஸல்) முகமெல்லாம் வெளிச்சமாக கஃபுக்கு அந்த நற்செய்தியை சொன்னார்கள்.

கஃபு கேட்டார் :இந்த நற்செய்தி உங்களுடையதா? அல்லாஹ் கூறியதா?
பெருமானார் சொன்னார்கள் அல்லாஹ்வினுடையதே
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَبْرُقُ وَجْهُهُ مِنْ السُّرُورِ أَبْشِرْ بِخَيْرِ يَوْمٍ مَرَّ عَلَيْكَ مُنْذُ وَلَدَتْكَ أُمُّكَ قَالَ قُلْتُ أَمِنْ عِنْدِكَ يَا رَسُولَ اللَّهِ أَمْ مِنْ عِنْدِ اللَّهِ قَالَ لَا بَلْ مِنْ عِنْدِ اللَّهِ
மகிழ்ச்சியி கஃபு ரலி சொன்னார். என் சொத்து முழுவதையும் தர்மம் செய்கிறேன்.

(முஃமின்கள் சிந்திக்க வேண்டும். எந்த சொத்து அவருடைய பயணத்தை தடை செய்ததோ. அந்த சொத்தை மொத்தமாக கொடுத்துவிட அவர் துணிகிற நேரம் வந்தது. பலத்த சோதனைகளுக்குப் பிறகு)

فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ اللَّهَ إِنَّمَا نَجَّانِي بِالصِّدْقِ وَإِنَّ مِنْ تَوْبَتِي أَنْ لَا أُحَدِّثَ إِلَّا صِدْقًا مَا بَقِيتُ
அப்படிச் செய்ய வேண்டாமென தடுத்த (ஸல்) அவர்கள். அதில் ஒரு பகுதியை தர்மம் செய்ய அறிவுரை கூறினார்கள்

அதற்கு பிறகு கஃபு (ரலி) பெருமானார் (ஸல்) அவர்களிடம் கூறியது தான் இந்த நீண்ட நிகழ்வில் மிக முக்கியமானது.

فَوَاللَّهِ مَا أَنْعَمَ اللَّهُ عَلَيَّ مِنْ نِعْمَةٍ قَطُّ بَعْدَ أَنْ هَدَانِي لِلْإِسْلَامِ أَعْظَمَ فِي نَفْسِي مِنْ صِدْقِي لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
இஸ்லத்திற்கு அடுத்த படியாக அல்லாஹ் எனக்குச் செய்த உபகாரம் நான் உண்மை பேச வாய்ப்பளித்த்து தான் என்று சொன்ன கஃபு ரலி அவர்கள் இனி எப்போதும் உண்மையே பேசுவேன் என்று சத்தியம் செய்தார்கள். அதற்கேற்பவே கடைசி வரை வாழ்ந்தார்கள்.
அருமைச் சகோதரர்களே!
தன் வாழ்வில் எதிர்பாராமல நிகழ்ந்து விட்ட ஒரு தவறுக்கு மன்னிபுத்தேடி ஒரு முஃமின் பட்ட சிரமங்களை  என்னிப் பார்க்க வேண்டும்.
அதே நேரத்தல் தூய உள்ளத்தோடு மேற்கொண்ட அந்த தவ்பாவின் தவ வாழ்க்கைக்கு திருக்குர் ஆனின் வசனங்களின் வழியாக அல்லாஹ் அளித்த மகத்தான் மன்னிப்பையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
இதற்கு அடுத்த படியாகஇன்னும் சொல்வதானாலஇவற்றை விட முக்கியமாக - இந்த புனித ரமலானின் இரண்டாவது ஜும்ஆவில் உண்மை பேசியதால் கிடைக்கிற நன்மையை எண்ணிப் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பெருமானார் (ஸல்) எவ்வளவு அர்புதமாக சொன்னார்கள்.
عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ الصِّدْقَ يَهْدِي إِلَى الْبِرِّ وَإِنَّ الْبِرَّ يَهْدِي إِلَى الْجَنَّةِ وَإِنَّ الرَّجُلَ لَيَصْدُقُ حَتَّى يَكُونَ صِدِّيقًا وَإِنَّ الْكَذِبَ يَهْدِي إِلَى الْفُجُورِ وَإِنَّ الْفُجُورَ يَهْدِي إِلَى النَّارِ وَإِنَّ الرَّجُلَ لَيَكْذِبُ حَتَّى يُكْتَبَ عِنْدَ اللَّهِ كَذَّابًا     البخاري 6094
அருமைச் சகோதரர்களே!
இன்றைய நம்து உலகில் உண்மை என்பது கேலிப் பொருளாகி விட்டது. உண்மை தான் பேசுவோம் என்று வாழ்கிறவர்கள் யாரும் இல்லை என்றாகிவிட்டது.
உயர்ந்த பொறுப்பில் இருக்கிற தலைவர்கள் கூட அப்பட்டமாக பொய் சொல்கிறார்கள். பத்ரிகைகலில் தொலைக் காட்சியில் வியாபார விளம்பரங்களில் பொய் தான் இன்று ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கிறது.

நமக்கு கிடைத்திருக்கிற விஞ்ஞான சாதனங்கள் நம்மை அதிகம் பொய் பேச வைக்கின்றன.

பொய் பேசினால் தான் வாழ் முடியும் என்ற மாயைக்கு உலகம் ஆட்பட்டு விட்டது.

அல்லாஹ்விற்காக முஃமின்கள் செய்கிற உண்மையான வணக்கம் நோன்பு. இந்த நோன்பை கடைபிடித்திருக்கிற நேரத்தில்

அருமைச் சகோதரர்களே!
இன்றைய நுகர்வு உலகம் நம்மை இழுத்துச் செல்கிற வழியிலிருந்து விடுபடுவோம்

உண்மை பேசுவோம். அதற்கு அதிக முக்கியத்துவம் தருவோம்.

இளைய சமுதாயம் இந்த உறுதிக்கு வருமாறு ஈமானை முன்னிறுத்தி அழைப்பு விடுக்கிறேன்.

உண்மை தான் நல்லதற்கு வழி காட்டும் என்று சொன்ன பெருமானாரின் வார்த்தகளுக்கு திரும்புவோம்.

உண்மையால் கிடைக்கிற வேறு சில நன்மைகளை அறிஞர்கள் பட்டியலிடுகிறார்கள்.

அவற்றில் அறிவுப்பூர்வமானவை சில ஆன்மீக ரீதியானவை சில

உண்மையின் அறிவுப்பூர்வமான நன்மைகள்

1.  மன நிம்மதி
قال رسول الله - صلى الله عليه وسلم -: ((الصدق طمأنينة، والكذب ريبة))[رواه الترمذي
2.   மக்களின் நம்பிக்கை- உண்மை பேசுகிறவர்களை எப்போதும் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்
3.  வஞ்சக இயல்பிலிருந்து தப்பித்தல்
((ثلاث مَن كُنَّ فيه كان منافقًا: إذا حدَّث كذب، وإذا وعد أخلف، وإذا اؤتُمِن خان))[رواه البخاري ومسلم]

உண்மை பேசுவதால் கிடைக்கிற ஆன்மீக பலன்கள். முஃமின்களின் அதிக கவனத்திற்குரிய செய்திகள் இவை.
1.   உண்மை நல்லதற்கு வழிகாட்டும்
2.   சிக்கல்களிலிருந்து விடுதலையை தரும்
கஃபு ரலி அவர்களின் வரலாறு இதற்கு போதும்
3.   சம்பாத்தியத்தில் பரகத் கிடைக்கும்
عَنْ حَكِيمِ بْنِ حِزَامٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْبَيِّعَانِ بِالْخِيَارِ مَا لَمْ يَتَفَرَّقَا  فَإِنْ صَدَقَا وَبَيَّنَا بُورِكَ لَهُمَا فِي بَيْعِهِمَا وَإِنْ كَذَبَا وَكَتَمَا فَعَسَى أَنْ يَرْبَحَا رِبْحًا وَيُمْحَقَا بَرَكَةَ بَيْعِهِمَا البخاري 2114
4.   அல்லாஹ்விடம் மலக்குகளிடம் புகழ்
((حتى يكتب عند الله صدِّيقًا))[رواه البخاري ومسلم].

5.   சொர்கத்திற்கான நுழைவுச் சீட்டும் நரக விடுதலையும்
·        هَذَا يَوْمُ يَنْفَعُ الصَّادِقِينَ صِدْقُهُمْ لَهُمْ جَنَّاتٌ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا - رضي الله عنهم - وَرَضُوا عَنْهُ ذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ )[المائدة: 119]. 
·        وقد سئل النبي - صلى الله عليه وسلم -: ما عمل الجنة؟ فقال: ((الصدق))[رواه أحمد].
·         (التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء

இந்த உலகம் இவற்றை கண்டு கொள்ளாமல் இருக்கலாம், முஃமின்கள் இவற்றை அலட்சியம் செய்ய முடியாது







2 comments:

  1. Intha vasanam ippadyum pesalama, sirappaana. Katturai usthat,,,

    ReplyDelete
  2. அல்ஹம்துலில்லாஹ் அற்புதமான வரலாறு மிகவும் பயனுள்ள கட்டுரை

    ReplyDelete