நோன்பு ஒரு உன்னதமான கட்டுப்பாட்டை நமக்கு போதிக்கிறது.
·
கன்காணிப்பு கேமராக்கள்
இல்லை –
(இப்போதெல்லம் கேமரா வைத்திருக்கிற
இடத்திலேயே திருடுகிறர்கள்)
·
லத்தியை வைத்து எச்சாரிப்பாரில்லை.
(துப்பாக்கிக்கு கூட இப்போது
பலரும் பயப்படுவதில்லை)
·
விசரித்து உண்மையை
கேட்பாரும் இல்லை
முஃமின்கள் தூய்மையாக நோன்பை கடைபிடிக்கிறார்கள்.
இந்த வணக்கத்திற்கு நிகராக இன்னொன்று இல்லை என்றார்கள்
பெருமானார் (ஸல்).
عن أبي أمامة قال أتيت رسول الله صلى
الله عليه وسلم فقلت مرني بأمر آخذه عنك قال عليك بالصوم فإنه لا مثل له
தொழுதாலும் தர்ம்ம் செய்தாலும் ஹஜ்ஜுக்குப் போனாலும்
பலருக்குத் தெரியும். அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிகிற வணக்கம் நோன்பு. அதில் நோர்மையாக
இருக்கிறாரா என்பதும் அல்லாஹ்வுக்கே தெரியும்
ஒரு முஃமின் நிய்யத்தின் மூலம் அல்லாஹ்வோடு செய்து கொண்ட இரக்சிய உடன்படிக்க்கு முழுவதுமாக கட்டுப்படுகிறார்.
எந்த இரகசிய சந்தர்பத்திலும் நோன்புக்கு முரணாக அவர்கள் நடந்து கொள்வதில்லை.
அதனால் தான் அல்லாஹ் சொல்கிறான் الصوم لي
இத்தகைய நோன்புக்கு எப்படி கூலி தருவது அதையும்
அல்லாஹ்வே தீர்மாணிக்கிறான். நோன்பின் கூலியை நிர்ணயிப்பது மலக்குகள் அல்ல. அல்லாஹ்.
ஒவ்வோரு
வரும் அவரவரது தகுதிக்கு தான் கொடுப்பார்கள். அல்லாஹ் தன்னுடய தகுதிக்கேற்ப
தருவான்.
அது நம்முடைய ஈமானை – இஹ்திஸாபை – ஆர்வத்த்தை
- தாங்கிக் கொள்கிற சிரமத்தை பொறுத்தது.
நாள் முழுக்க ஏசி அறையில் தூங்கிக் கழிக்கிறவரின்
நோன்பும், சாலை யோரத்தில் வெயிலில் நின்று வியாபரம் செய்கிறவரின் நோன்பும் சமமாகிவிடுமா?
அதனால் தான் அல்லாஹ் நோன்பிற்கான கூலியை தானே தீர்மாணிக்கிறான்.
வசதியாக நோன்பு வைக்கிறவர்கள் தங்களது நோன்பை கனப்படுத்திக்
கொள்ள தகுந்த காரியங்களை செய்து கொள்ள வேண்டும்
·
அதிகமாக இபாத்த்துகளில்
ஈடுபடலாம்
·
தான் தர்மங்கள் -
நல்ல காரியங்கள் செய்யலாம் உதவலாம்
நமது நோன்பு அதிக பட்ச கூலியை அல்லாஹ்விடமிருந்து
பெற்றுத் தருகிற வகையில் நாம் முயற்சி செய்ய வேண்டும்.
வெறும் பசி அல்லது தாகம் மட்டுமே நமது நோன்பாகி
விடக்கூடாது.
நோன்பை ஒரு கேடயம் என பெருமானார் (ஸல்) வர்ணித்தார்கள்.
عن أبي هريرة رضي الله عنه أن الرسول صلَّى الله عليه وسلم قال:
"إنما الصوم جنَّة فإذا كان أحدهم صائماً فلا يرفث ولا يجهل وإن امرؤ قاتله
أو شاتمه فليقل: إني صائم إني صائم - البخاري ومسلم
கேடயம ஆபத்திலிருந்து தடுக்க கூடியது
நோன்பு 3 வகையான தடுப்பாக
அமைகிறது என விரிவுரையாளர்கள் சொல்கிறாரள்
1.
நோன்பு வைத்திருக்கிறவனின் மன்சோ அல்லது ஷைத்தானோ நோன்பாளியின் தீர்மானத்தை மாற்ற
முடிவதில்லை. இந்த இரண்டின் மோசடியிலிருந்தும் நோன்பு மனிதனை பாதுகாக்கிறது. நோன்பாளிக்கு
ஏற்படக்கூடிய சோர்வு தீய செயல்களுக்கான உந்துதலை குறைக்கிறது.
2.
டென்ஷனை குறைக்கிறது. நோன்பாளி சண்டை சச்சரவுகளுக்கு வழி வகுப்பதில்லை
3.
மறுமையில் நரகிலிருந்து பாதுகாப்பை தருகிறது.
நோன்பாளி அல்லாஹ்வுக்கு பிரியமானவனாகி
விடுகிறார். அவரது வாய் வாடை கஸ்தூரியாக அவனுக்கு மணக்கிறது. நோன்பாளிக்கான மீன்களை
பறவைகளை பிரார்த்திக்க் வைக்கிறான். நோன்பாளியின் பிரார்த்தனையை அங்கீகரிக்கிறான்.
இப்தார் நேரத்து துஆ வை அலட்சியப்படுத்தி
விடாதீர்கள்
ஒரு முதலாளி உங்களது கோரிக்கையை ஏற்பதாக சொல்லி விட்டால் எப்படி கேட்பீர்கள். எதை எல்லாம் பட்டியலிடுவீர்கள்,
தயாராக இருங்கங்கள். பக்தியோடு கேளுங்கள்.
உங்கள் வீட்டில் ஒரு ஒரு வேலைக்காரன் வேலையை
முடித்து விட்டால் எப்படி கூலி கொடுக்க தயாராகிறீர்கள். அது போல அல்லாஹ் கூலி கொடுக்க
தயாராகிறான்.
வீட்டில் சுண்ணாம்பு அடித்தவர் கை அழம்பி வரப்போனார். மஃரிபுக்கு பாங்கு சொல்லிவிட்டது.
தொழப் போனால் அவருக்கு அரை மணி நேரம் தாமதமாகும். நின்று அவருக்கு கூலியை கொடுத்து
விட்டு தொழப் போனேன்.
சாதா மனிதனே கூலியை கொடுத்து
விட இவ்வளவு அக்கறை காட்டுகிற போது கருணை மிக்க
ரஹ்மான் நாள் முழுக்க பட்டினி கிடந்த மனிதனுக்கு கூலியை தர தாமதிப்பானா?
அல்லாமா துல் பிகார் சாஹிப்
சொல்கிறார்.
ரமலான நமக்கு அல்லாஹ் கொடுத்திருக்கிற
பிளாங் செக்!
அதில் வேண்டியதை நிரப்பிக் கொள்ள வேண்டியது நமது பொறுப்பு.
ரமலானுடையவும் நோன்பினுடையவும்
நன்மைகளை பரிபூரணமாக பெற வேண்டும் என்பதில் நாம் அக்கறை செலுத்துவோம்.
இந்த கவனம் வந்து விட்டால்
போதும் நம்முடைய ரமலானும் நம்முடைய நோன்பும் சுத்தமாகிவிடும். ஈமானாலும் அமல்களாலும்
கனமாகிவிடும்.
ரமலானின் இந்த முதல் ஜும்ஆ
வில் நோன்புடன் தொடர்புடைய அதே நேரத்தில் இன்றைய முஸ்லிம்களின் வாழ்க்கைகு அவசியமான
ஒரு செய்தியை நாபகப்படுத்துகிறேன்.
நோன்பு உன்னதமான கட்டுப்பாட்டை
நமக்கு பழக்கப் படுத்துகிறது.
அல்லாஹ்வின் – மார்க்கத்தின்
உத்தரவிற்கு ரக்சியமாகவும் பகிரங்கமாகவும் கட்டுப் படுகிறோம்.
சகோதர்ர்களே கட்டுப்பாடு
என்பது தான் இஸ்லாத்தின் அடையாளம்.
முஸ்லிம் என்று சொன்னாலே
கட்டுப்படுகிறவர் என்று தான் பொருள்.
உலகத்தை முஸ்லிம் சமுதாயம்
வென்றது அதன் கட்டுப்பாட்டு உணரினால் தான் என்று வரலாறு சொல்கிறது,
அதே போல முஸ்லிம்கள் பின்னடைந்த்து
கட்டுப்பாடு தவறியதால் தான் என்பதையும் வரலாறு காட்டுகிறது.
பத்ரில் முஸ்லிம்கள் பெற்ற
வெற்றி பெருமானருக்கு கட்டுப் பட்ட முஸ்லிம் உம்மத்துக்கு கிடைத்த்து.
உஹதில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட
தோல்வி கட்டுப் பட தவறிய சிலரால நிகழ்ந்த்தே!
நாம் அல்லாஹ்வுக்கு கட்டுப்படனும்
தூதருக்கு கட்டுப்படனும் நமக்கு பொறுப்பாளியாக இருக்கிற பொற்றோர்களுக்கு ஆசிரியர்களுக்கு
தலைவர்களுக்கு கட்டுப்படனும்
இன்று இது விச்யத்த்இல் ஒரு
செய்தியை நான் நாபகப்படுத்டுகிறேன்.
திருக்குர் ஆனில் அல்லாஹ்
இரண்டு நபிமார்களின் மகன்களை குறிப்பிடுகிறான்.
ஒரு மகன் தந்தையின் அபாயகரமான
யோசனைக்கு கட்டுப் பட்டார்.
فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ
قَالَ يَابُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَى
قَالَ يَاأَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ سَتَجِدُنِي إِنْ شَاءَ اللَّهُ مِنْ الصَّابِرِينَ(102
அதனால் அவருக்கு பாதிப்பு
எதுவும் ஏற்பட வில்லை, மாறாக அவரது வாழ்க்கை வெளிச்சமானது, அவரது சந்த்திகள் பிழைத்தனர்.
கியாமத் நாள் வரை மட்டுமல்ல மறுமையிலும் அவரது புகழ் ஓங்கி நிற்ம்.
இன்னொரு நபி தன் மகனை ஆபத்தில்
காப்பற்றுவதற்காக அழைத்த போது கட்டுப்பட மறுத்தான். நிமிட நேரத்தில் வெள்ளத்தில் அடித்துச்
செல்லப் பட்டு அழிந்து போனான்.
وَنَادَى نُوحٌ ابْنَهُ
وَكَانَ فِي مَعْزِلٍ يَابُنَيَّ ارْكَبْ مَعَنَا وَلَا تَكُنْ مَعَ الْكَافِرِينَ(42)
قَالَ سَآوِي إِلَى جَبَلٍ يَعْصِمُنِي
مِنْ الْمَاءِ قَالَ لَا عَاصِمَ الْيَوْمَ مِنْ أَمْرِ اللَّهِ إِلَّا مَنْ رَحِمَ
وَحَالَ بَيْنَهُمَا الْمَوْجُ فَكَانَ مِنْ الْمُغْرَقِينَ(43)
நூஹ் (அலை) உலுல் அஜ்ம்களில்
ஒருவர். அவரது பிரார்த்தனையால ஒரு மாபெரும் பிரளமயம் ஏற்பட்டது
فَدَعَا رَبَّهُ
أَنِّي مَغْلُوبٌ فَانْتَصِرْ(10)فَفَتَحْنَا أَبْوَابَ السَّمَاءِ بِمَاءٍ مُنْهَمِرٍ(11)وَفَجَّرْنَا
الْأَرْضَ عُيُونًا فَالْتَقَى الْمَاءُ عَلَى أَمْرٍ قَدْ قُدِرَ(12)
இத்தகைய பலம் வாய்ந்த நபிக்கு மகனாக பிறந்த போதும்
கட்டுப் பாடு தவறியதால் நுஹ் நபியின் மகன் யாமுக்கு இந்த கதி ஏற்பட்டது
இந்த இரண்டு நிக்ழவுகளும் உணர்த்துகிற தத்துவம்
இது தான். கட்டுப்பாடு வாழ்க்கையில் வெளிச்சத்தை தரும். கட்டுப்படாமை அழிவை தரும்
அன்பார்ந்த சகோதரர்களே! நோன்பு எனும் உன்னதமான
கட்டுப்பாட்டுப் பட்டறையில் புடம் போடப் படுகிற தங்கங்களே!
கட்டுப்படுதலின் நன்மையை தேவையை உணருங்கள். யாராவது
ஒருவருக்கு – ஒரு ஜமாத்திற்கு – ஒரு வழிகாட்டிக்கு – அதற்கு முன்னதாக பெற்றோர்களுக்கும்
ஆசிரியர்களுக்கும் கட்டுப்பட்டவராக நடந்து கொள்ளுங்கள்
உங்களை கட்டுப் படுத்துகிறவர் யாரும் இல்லை என்ற
சூழ்நிலையில் இருக்காதீர்கள். அது ஷைத்தானை நன்பணாக்கி விடும்.
கட்டுப் பாட்டுடன் நடந்து கொள்வேன் என்று உறுதியேற்றுக்
கொள்ளுங்கள்.
ஒரு இடத்தில்
ஒரு கூட்ட்த்திற்கு திரண்டீர்கள் என்றல் நீன்கள் கட்டுப் படுவதற்காக ஒரு தலைவரை தேர்வு
செய்து கொண்டு விடுங்கள். ஒரு தலைவரில்லாத கூட்டம் என்றால் அங்கிருந்து அகன்று விடுங்கள்.
உங்களது கட்டுப் பாட்டின் முக்கியத்துவம் எத்தகையது
என்பதை நினைவில் கொண்டு உங்களது தலைவரை தேர்ந்தெடுங்கள். அவலட்சமான, தீய் நடத்தையுள்ள
. இறையச்சமற்ற தலைவர்களிடமிருந்து விலகி நில்லுங்கள
நமது கட்டுப்பாட்டை குலைக்கிற சக்திகளுக்கு அவர்கள்
எத்தகைய நல்லவர்களாக தோனறினாலும் அவர்களுக்கு இடமளித்து விடாதீர்கள்
எங்கிருந்தோ வருகிற தலைவனின் உத்தரவால் உள்ளூருக்குள்
முஸ்லிம் சமூகத்திற்குள் கட்டுப்பாட்டை காற்றில் பறக்கவிடாதீர்கள்.
ஞாபத்தில் வையுங்கள் முதல் கண்ணியை விட்டு விட்டு
மூன்றாம் கண்ணியில் மாலையை கோர்க்க முடியாது,
அல்லாஹ் இந்த் புனித ரமலான் மாத்தின் பாக்கியத்தால்
முஸ்லிம் உம்மத்தினருக்கிடையே கட்டுப்பாட்டு உணர்வை வார்த்தெடுப்பானாக!
No comments:
Post a Comment