வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, September 11, 2014

வீணடித்தல் தகுமா ?

புனிதப் பயணிகள் புறப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த ஆண்டு இந்தியாவிலிருந்து சுமார் 135000 பேர் ஹஜ்ஜுக்கு புறப்படுகிறார்கள். அல்லாஹ்

இந்தியாவிலிருந்து முதல் விமானம் மங்களூருவிலிருந்து ஆகஸ்ட் 27 ல் கிளம்பியது. அதே தேதியில் காஷ்மீரிலிருந்தும் லக்னோவிலிருந்தும் ஹாஜிகள் கிளம்பினர்.

27 Aug 2014,
Minister for Haj said the flight which took off from Mangalore International Airport on Wednesday is the first flight to take off for Haj from India this year.


அல்லாஹ் அனைவரின் ஹஜ்ஜையும் மக்பூலாக்குவானாக! பயனங்களை இலேசாக்குவானாக! இந்த ஆண்டு ஹஜ் பாதுகாப்பானாகதாக அமையட்டும்.

எபோலா வைரஸ் – என்று பயம் காட்டினார்கள். அல்லாஹ்வின் மீது தவக்குல் வைத்து செயல்படும் முஸ்லிம் உம்மத் இதற்கெல்லாம் பயந்து கொண்டிருப்பதில்லை. உலகம் முழுவதிலிமுள்ள மக்கள் மக்காவில் குழுமி வருகிறார்கள். எந்த வித அசொளகரியமும் இல்லாமல் ஹாஜிகள் ஹஜ்ஜின் கடமைகளை முழுமையாக நிறைவேற்ற அல்லாஹ் கிருபை செய்வானாக! அல்லாஹ் கிருபை செய்வான்.

ஹாஜிகள் அல்லாஹ்வின் குழுவினர். அவர்களை பாதுகாக்கிற பொறுப்பு அல்லாஹ்வினுடையது.

عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ الْحُجَّاجُ وَالْعُمَّارُ وَفْدُ اللَّهِ إِنْ دَعَوْهُ أَجَابَهُمْ وَإِنْ اسْتَغْفَرُوهُ غَفَرَ لَهُمْإبن ماجة 2883

ஜிஹாதுக்கு அடுத்த படி

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ أَيُّ الْعَمَلِ أَفْضَلُ فَقَالَ إِيمَانٌ بِاللَّهِ وَرَسُولِهِ قِيلَ ثُمَّ مَاذَا قَالَ الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ قِيلَ ثُمَّ مَاذَا قَالَ حَجٌّ مَبْرُورٌ - البخاري 26

பெண்களுக்கு ஹஜ்ஜே  ஜிஹாது !

عَنْ عَائِشَةَ بِنْتِ طَلْحَةَ عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّهَا قَالَتْ يَا رَسُولَ اللَّهِ نَرَى الْجِهَادَ أَفْضَلَ الْعَمَلِ أَفَلَا نُجَاهِدُ قَالَ لَا لَكِنَّ أَفْضَلَ الْجِهَادِ حَجٌّ مَبْرُورٌ- البخاري 1520

ஹாஜிகள் புறப்படுவதை பார்க்கையில் நாமும் போக வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் வரும். அது இயல்பானது.

ஹஜ்ஜுக்கு செல்கிறவரும். செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்களும் ஒன்றை மறந்து விடக்கூடாது.

பகட்டுக்காக பெறுமைக்காக ஹஜ் செய்ய நினைகக் கூடாது.

ஹஜ்ஜுக்கான கூலி உன்னதமானது.

عن أَبي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ حَجَّ لِلَّهِ فَلَمْ يَرْفُثْ وَلَمْ يَفْسُقْ رَجَعَ كَيَوْمِ وَلَدَتْهُ أُمُّهُالبخاري 1521

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَابِعُوا بَيْنَ الْحَجِّ وَالْعُمْرَةِ فَإِنَّهُمَا يَنْفِيَانِ الْفَقْرَ وَالذُّنُوبَ كَمَا يَنْفِي الْكِيرُ خَبَثَ الْحَدِيدِ وَالذَّهَبِ وَالْفِضَّةِ وَلَيْسَ لِلْحَجَّةِ الْمَبْرُورَةِ ثَوَابٌ إِلَّا الْجَنَّةُ  - ترمذي 738

இந்தகைய உயர்ந்த கூலியை தருகிற ஹஜ்ஜை பணத்தின் பெறுமையில் அல்லது செல்வாக்கின் ஆசையில் –நிறைவேற்றிவிடக் கூடாது. அப்படி நினைக்கவும் கூடாது.

பெருமானாரின் எச்சரிக்கையை பாருங்கள். சமூகத்தின் பணககாரர்கள் உல்லாசத்திற்காக – பிக்னிககாக ஹஜ்ஜுக்கு வருவார்கள் என எச்சரிக்கிறார்கள். அது என்னா ஆகும் என்பதையும் சொல்கிறார்கள்.


عن أنس رضي الله عنه قال:قال رسول الله صلى الله عليه وسلم يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ يَحُجُّ أَغْنِيَاءُ أُمَّتِي نُزْهَةً وَأَوْسَاطُهُمْ لِلتِّجَارَةِ وَقُرَّاؤُهُمْ لِلرِّيَاءِ وَالسُّمْعَةِ وَفُقُرَاؤُهُمْ لِلْمَسْأَلَةِ (كنز العمال)
 قال ابن مسعود رضي الله عنه: آخر الزمان يكثر الحاج بالبيت يهون عليهم السفر ويبسط عليهم الرزق، ويرجعون محرومين مسلوبين يهدي بعيره إلى القفار وجاره مأسور إلى جنبه ما يواسيه (الديلمي)

ஹஜ்ஜுக்கு செல்பவரும் செல்ல ஆசைப்படுகிறவர்களும் அல்லாஹ்விற்காக – அல்லாஹ்வின் மீதுள்ள காதலால – கஃபாவின் காணும் ஆசையால – பெருமானாருடையை ரவ்ளாவை தரிசிக்கும் பேராவலால் ஹஜ்ஜுக்கு போகிறோம் என்று எண்ண வேண்டும்.

இல்லை எனில் பணம் முய்றசி எல்லாவற்றையும் திட்டமிட்டே  வீணடித்தாகிவிடும்,.

இதோ நம்முடைய மாநிலத்தில் சில இடங்களில் உள்ளாட்சி அமைப்புக்களுக்கான தேர்தல் வருகிற வியாழக்கிழமை நடக்க இருக்கிறது,

தமிழகத்தில் காலியாக உள்ள மாநகராட்சி மேயர் பதவிகள், நகராட்சித் தலைவர்கள் மற்றும் இதர உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தல் வரும் செப்டம்பர் 18 ஆம் திகதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கோவை மாநகராட்சி மேயராக இருந்த செ..வேலுச்சாமி பதவி விலகியதால் அந்த இடம் காலியாக உள்ளது. திருநெல்வேலி மேயராக இருந்த விஜிலா சத்யானந்த், தூத்துக்குடி மேயராக இருந்த சசிகலா புஷ்பா ஆகிய இருவரும் டெல்லி மேல் சபை நாடாளுமன்ற உறுப்பினர்களாகிவிட்டதால் அந்த மேயர் பதவிகளும் வெற்றிடமாக உள்ளன.

புதுக்கோட்டை நகர சபைத் தலைவர் கார்த்திக் தொண்டைமான், சங்கரன் கோவில் நகர சபை தலைவராக இருந்த முத்துச் செல்வி ஆகிய இருவரும் சட்டமன்ற உறுப்பினர்களாகி விட்டனர். கடலூர் நகர சபை தலைவர் சுப்பிரமணியம்  பதவியை ராஜினாமா செய்து உள்ளார்.
அரக்கோணம், விருத்தாச்சலம், ராமநாதபுரம், கொடைக்கானல், குன்னூர் ஆகிய நகரசபை தலைவர்களும் பதவி விலகி உள்ளனர். இது தவிர ஊரக நகர்ப்புறங்களில் வட்டார கவுன்சிலர் பதவிகளும் சில பகுதிகளில் வெற்றிடமாக உள்ளன. இந்த பதவிகளுக்கு வருகிற 18 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தேர்தல்கள் நமது நாட்டின் ஜனநாயகத்தை கட்டிக் காட்க்க தேவையானவைதான், ஆனால் இப்போது நடைபெறுவது போன்ற தேர்தல்கள் ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்குபவை.

யாருக்காக இந்த தேர்தல் நடக்கிறது, ஏன் நடக்கிறது. பொறுப்பிலிருந்தவர்கள் இறந்து விட்டிருந்தாலொ அல்லது தார்மீக மாக பொறுப்புக்களிலிருந்து விலகி இருந்தாலோ தேர்தல் நடத்துவதில் நியாயமிருக்கிறது.

இந்த தேர்தல் மக்கள் மீது திணிக்கப்பட்ட – மக்களின் வரிப்பணத்தை திட்டமிட்டே வீணடிக்கிற தேர்தலாகும்.

இன்னொரு வார்த்தையில் சொல்வதானால் ஆட்சிய்லிருக்கிறவர்களின் தனிப்பட்ட விருப்பம் – தேர்தலுக்கு செல்வாகிற கோடிக்கணகான தேவையற்ற ஊதாரித்தனமான செலவுக்கு காரணமாகி இருக்கிறது.

இப்போது ராஜினா செய்துவிட்டு புதிதாக போட்டியிடுகிறவர்கள் – நிர்வாகத்திறனுக்காகவோ – அரசாங்கத்தின் தேவைகளுக்காக வேறு பதவிக்கு போட்டியிடவில்லை

கோவை நெல்லை தூத்துக்குடி போன்ற மக்களால தேநதெடுக்கப்பட்டவர்கள் தங்களது  பொறுப்புணர்வை தட்டிக் கழித்து விட்டு பதவி ஆசையில் மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கிறார்கள்.

மக்களிடமிருந்து எப்படி எல்லாம் வரி கசக்கிப்பிழிந்து பெறப்படுகிறது. ஒரு ஏழைத்தொழிலாளி 20 ரூபாயுக்கு செல்போன் ரீஜார்ஜ் செய்தால் 8 ரூபாய வரியாக பிடிக்கிறார்கள். நமது அண்டை நாடான பாகிஸ்தானில் 27 ரூபாயுக்கு விற்கிற பெட்ரோல் நம்முடைய நாட்டில் 75 ரூபாயுக்கு விற்கப்படுகிறது ஏன் ? எல்லாம் வரி செய்கிற மாயம் தான்.

வரிகளின் மூலம் பணக்காரர்கள் அல்ல. சாமாணய பொதுமக்கள் கடும் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

இப்படிச் சுரண்டப்படுகிற பணத்திலே தான் தேர்தல்கள் கோலாகலமாக நடத்தப்படுகின்றன. தேவையான தேர்தல் நன்மையானது. இது போன்ற அநாவசியமான இடைத்தேர்தல்கள் சிலரின் செல்வாக்கிற்காக செய்யப்படுகிற அர்த்தமற்ற ஆடம்பரச் செலவுகளாகும்.

உமர் பின் அப்துல் அஜீஜ் ரஹ் அவர்களை எண்ணிப் பார்க்கிறோம். ஒரு கோடியே முப்பது இலட்சம் சதுர மைல்கள் கொண்ட பரந்த பேரர்சிற்கு தலை மேற்றிருந்தார்கள்.

அவரை அழைச் செல்வதற்காக உயர் ரக் குதிரைகள் பூட்டிய சாரட் வண்டி வாசலில் காத்திருந்தது. உமர் பின் அப்துல் அஜீஜ் ரஹ் முதல் வேலை அந்த சாரட் வண்டியை அரசாங்க கஜானாவுக்கு அனுப்பியது தான். தனது சொந்த தேவைகளுக்கு விளக்கு எரிப்பததகாக தனியாக எண்ணை வைத்திருந்தார்கள் என்று வரலாறு சொல்கிறது.

அல்லாஹ் இது போன்ற – குறைந்த பட்சம் மக்களை வரிப்பணத்தை வீணாக்க கூடாது என்ற சிந்தனை கொண்ட ஆட்சியாளர்களை நமக்கு தந்தருள்வானாக!

தேர்தல் தேவையற்றதாக உண்மைதான். ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு தங்களது கடமையை செய்ய வேண்டியது மக்களின் பொறுப்பாகும்.

தேர்தலில் வாக்களிப்பது – நீதி மன்றத்தில் சாட்சியமளீப்பதற்கு சமமானது என இஸ்லாமிய சட்ட அறிஞர்கள் பத்வா வழங்கியுள்ளனர்.

தேவையான சாட்சியத்தை நிறைவேற்றுவது  நமது மார்க்க ரீதியான க்டமையாகும். தேசத்திற்கு செய்கிற மரியாதையுமாகும்.

சாட்சியத்தை நிறைவேற்றாமல் இருப்பது தவறாகும்.

وَلَا تَكْتُمُوا الشَّهَادَةَ وَمَنْ يَكْتُمْهَا فَإِنَّهُ آثِمٌ قَلْبُهُ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ

இந்த தேர்தலில் முஸ்லிம்கள் தங்களுக்கும் நாட்டிற்கும் ஆபத்தாக இருக்கிற சக்திகளை அடையாளம் கண்டு கொள்வது சிரமம் அல்ல. எனவே ஒன்று பட்டு அத்தகைய சக்திகள் பெற்றிபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய கடமை முஸ்லிம்களுடையது.

அல்லாஹ் மக்கள் மீது கருணை காட்டுகிற பொறுப்பான ஆட்சியாளர்களை தந்தருள்வானாக!

  
3 comments:

 1. ஹஜ்ஜில் ஆரம்பித்து உள்ளாட்சி ்தேர்தலில் முடித்து விட்டீர்கள்..

  ReplyDelete
 2. உங்களுக்கே உரித்தான பாணியில்.....

  ReplyDelete
 3. mohammed hadhees1:13 AM

  Arasiyal patri ivvalavu detail-laha jummavil pesuvadu kadinam.ilai marai kaayaha sollalam.

  ReplyDelete