வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, September 04, 2014

அதீத உணர்ச்சியே உன் பெயர் முஸ்லிமோ?


  • உலகின் தலை சிறந்த அறிவியல் அறிஞர் ஐசக் நியூட்டன்.
  • தி ஹன்ட்ரட் நூலில் அவருக்கு இரண்டாம் இடம் தரப்பட்டிருக்கிறது. 
  • அவர் கண்டு பிடித்த தத்துவங்கள் மனித வரலாற்றில் மிகப் பெரிய தாக்கத்தை செலுத்துகின்றன. 
  • எல்லோருக்கும் புரிகிற ஒரு சின்ன உதாரணம் சொல்லவேணும் எனில் அவர் கண்டு சொன்ன தத்துவத்தின் அடிப்படையில் தான் இன்று ராக்கெட்கள் செயல்படுகின்றன.

பொருட்களின் இயக்கம் தொடர்பான மூன்று விதிகளை நியூட்டன் உருவாக்கினார். அவை நியூட்டனின் இயக்க விதிகள் எனப்படும். நியூட்டனின் மூன்றாவது விதி இப்படிச் சொல்கிறது.

every action there is always opposed an equal reaction

எந்த ஒரு செயலுக்கும் அதற்கு சமமான எதிர் விளைவு உண்டு. ஒரு பந்தை எந்த வேகத்தில் எறிகிறீர்களோ அதே வேகத்தில் அது திரும்பி வரும்.

உங்கள்து துடுப்பை எவ்வளவு வேகத்தில் பின்னுக்கு தள்ளுகிறீர்களோ அதே வேகத்தில் படகு முன்னோக்கி நகரும்.

காற்றடைத்த பலூனிலிருந்து எந்த வேகத்தில் காற்று வெளியே வருகிறதோ அதே வேகத்தில் பலூன் புஸ்ஸென்று முன்னோ செல்லும்.

( உதாரணம் போது மென்று நினைக்கிறேன்.)

அறிவியலில் ஈக்குவல் ரியாக்ஸன் சமமான எதிர் விளைவுகள் ஏற்படும். ஆனால் அரசியலிலும் சமூகத்திலும் ஒரு செயலுக்கான எதிர் விளைவு சமமாக இருக்கும் என்றும் சொல்ல முடியாது. சில நேரத்தில் அதிக பயங்கரமாக அமைந்து விடும்.

இரண்டாம் உலக யுத்ததில் அமெரிக்கா சண்டையில் ஆரம்பத்தி பங்கெடுக்க வில்லை. சும்மா இருத்த சாத்தானை ஊதிக் கெடுத்தது. ஜப்பான்.

1941 டிஸம்பர் 7 ம் தேதி காலை அமெரிக்காவிற்கு சொந்தமான பியர்ல் ஹார்ப ர் முத்து துறைமுகத்தின் மீது தாக்குதல் தொடுத்து அமெரிக்காவின் 8 கப்பல்கள் 188 விமானங்கள் 2403 வீரர்களை அழித்தது. 1178 பேர் ஊனமுற்றனர்.

இதற்கு கிடைத்த பதில் என்ன தெரியுமா?

அமெரிக்காவின் சில விமானங்களை தாக்கியதற்காக ஜப்பான் இரண்டு நகரங்களை  இழந்தது,
ஹிரோஷிமா நாகாசாகி என்ற இரண்டு ஜப்பானிய தொழில் நகரங்கள் மீது அமெரிக்கா அணுகுணு வீசியது. நிமிட நேரத்தில் இரண்டு நகரங்களும் அழிந்தன. ஹிரோஷிமாவில் 1,66,000 பேரும் நாகாசாகியில் 80.000 ஆயிரம் பேருமாக மோத்தம் 2,46,000 பேர் மிக மோசமாக கொல்லப்பட்டனர். இன்று வரை அந்ந்த நகரங்களில் அணுக்கதிர்களின் தாக்குதல் இருக்கிறது.  அமெரிக்காவை துணிச்சலாக தாக்குமளவு தைரியம் பெற்றிருந்த ஜப்பான் உடனடியாக சரணடைந்தது.

சமூக இயலிலும் வரலாற்றுத்துறையிலும் இது போல நூற்றுக் கணக்கான உதாரணங்கள் உண்டு. ஒரு செயல் சில நேரங்களில் மிக பாரதூரமான பின் விளைவுகளை ஏற்படுத்தி விடும்.

நாம் அதீத வெற்றிக் களிப்பிலும் தோல்வியிலும் உணர்ச்சி வசபபட்டு காரியங்கள் செய்கிற போது நியூட்டனின் மூன்றாவது விதியை மட்டுமல்ல சமூக அரசியல் நிகழ்வுகளையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும், நமது ஒரு செயல் அதற்கு நிகரான மட்டுமல்ல அதை கடினமான எதிர் விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி நிதானத்தை கடை பிடித்து வாழும் வழி முறைகளை எல்லா நிலையிலும் முஸ்லிம்களுக்கு கற்றுக் கொடுத்தார்கள்.

பெருமானாரின் 60 வயதில் ஹிஜ்ரி 8 துல்ஹஜ்ஜில் இபுறாகீம் (ரலி) பிறந்தார்.  16 மாதத்தின் 8 நாளில் வபாத்தானார்.  

وقال محمد بن مؤمل المخزومي‏:‏ توفي وكان ابن ستة عشر شهراً وثمانية أيام‏.‏ وصلى عليه رسول الله ، ودفنه بالبقيع‏.‏

وفي حديث شيبان‏:‏ فدمعت عينا رسول الله ، فقال رسول الله‏ :‏ ‏"‏تدمع العين، ويحزن القلب، ولا نقول إلا ما يرضي ربنا‏"‏‏.‏

குழந்தை இறந்த துக்கத்தில் பெருமானார் அழுத போது உம்மத் உணர்ச்சி வசப்பட்டது. அப்போது சூரிய கிரகணம் ஏற்பட்டது. உணர்ச்சிக் கொந்தளிப்பிலிருந்த சமுதாயம் பெருமானாரின் மகனுக்காக வானம் துக்கம அனுஷ்டிக்கிறது என்று சொன்னது.

இந்த அதீத உணர்ச்சியை பெருமானார் (ஸல்) நிதானப்படுத்தினார்கள்.

عن أبي مسعود الأنصاري قال { انكسفت الشمس يوم مات إبراهيم بن رسول الله فقال الناس انكسفت الشمس لموت إبراهيم فقال النبي إن الشمس والقمر آيتان من آيات الله لا ينكسفان لموت أحد ولا لحياته فإذا رأيتم ذلك فافزعوا إلى ذكر الله وإلى الصلاة } . 

இன்னொரு உதாரணம். பெருமானாருக்கு கழ்பா என்ற பெயரில் ஒரு ஒட்டகை இருந்தது. பெரும்பாலும் அதுவே போட்டிகளில் வெற்றி பெரும். ஒரு முறை கிராமத்து மனிதர் கொண்டு வந்த சிறிய ஒட்டகையிடம் அது தோற்றுப் போனது.
அப்போதும் உம்மத் உணர்ச்சி வசப்பட்டது. பெருமானாரின் ஒட்டகை எப்படி தோற்கும்?
நபி (ஸ்ல்) அவர்கள் உம்மத்தின் அந்த அதிகப்படியான கொந்தளிப்பை நிதானப்படுத்தினார்கள்,

·  عَنْ أَنَسٍ قَالَ كَانَتْ نَاقَةٌ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تُسَمَّى الْعَضْبَاءَ وَكَانَتْ لَا تُسْبَقُ فَجَاءَ أَعْرَابِيٌّ عَلَى قَعُودٍ لَهُ فَسَبَقَهَا فَاشْتَدَّ ذَلِكَ عَلَى الْمُسْلِمِينَ وَقَالُوا سُبِقَتْ الْعَضْبَاءُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ حَقًّا عَلَى اللَّهِ أَنْ لَا يَرْفَعَ شَيْئًا مِنْ الدُّنْيَا إِلَّا وَضَعَهُ رواه البخاري.
العضباء وهي غير القصواء التي حجّ عليها، هذه ناقة أخرى، وكان من هدي الرسول عليه الصلاة والسلام أنه يسمي دوابه وسلاحه وما أشبه ذلك.

உஹது யுத்ததில் பெருமானார் (ஸல்) அவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் என்ற வதந்தியில் உணர்ச்சி வசப்பட்ட பல  முஃமின்கள் பலர் மதீனாவுக்கே திரும்பிவிட்டனர்.

அல்லாஹ் போர்க்களத்தின் அந்த உக்கிரத்திற்கு நடுவேயும் உம்மத்தை நிதானப்படுத்தினான்,

அவர் இறந்து விட்டாலோ.. அல்லது கொல்லப் பட்டாலோ நீங்கள் உங்களது பழைய மத்ததிற்கு திரும்பி விடுவீர்களா ? என அல்லாஹ் கேட்டான்.

أَفَإِيْن مَاتَ أَوْ قُتِلَ انْقَلَبْتُمْ عَلَى أَعْقَابِكُمْ وَمَنْ يَنْقَلِبْ عَلَى عَقِبَيْهِ فَلَنْ يَضُرَّ اللَّهَ شَيْئًا وَسَيَجْزِي اللَّهُ الشَّاكِرِينَ(144

அதற்கு முன்னதாக உம்மத்தை அல்லாஹ் யோசிக்க வைத்தான். பெருமானாரும் ஒரு இறைத்தூதர் தானே! மற்ற தூதர்கள் எல்லாம் சாகாவரம் பெற்றிருந்தார்களா என்ன?

وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ

இதே போன்ற தொரு போர்க்களத்தில். கைபரில் – பெரும் சஹாபாக்கள் சென்று வெற்றி பெற முடியாத நிலையில் நாளை நான் ஒருவரிடம் கொடியை தருவேன் என்று பெருமானார் சொல்லி அந்தக் கொடியை அலி (ரலி)  கொடுத்த போது – எதிரிகளை விட மாட்டேன் என அலி (ரலி) நபி (ஸல்) அவர்கள் அவரை நிதானப் படுத்திய வார்த்தைகள் வரலாற்றின் வைர வரிகளுக்கு சொந்தமானவை

سَهْلٌ ابْنَ سَعْدٍ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ خَيْبَرَ لَأُعْطِيَنَّ الرَّايَةَ غَدًا رَجُلًا يُفْتَحُ عَلَى يَدَيْهِ يُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ وَيُحِبُّهُ اللَّهُ وَرَسُولُهُ فَبَاتَ النَّاسُ لَيْلَتَهُمْ أَيُّهُمْ يُعْطَى فَغَدَوْا كُلُّهُمْ يَرْجُوهُ فَقَالَ أَيْنَ عَلِيٌّ فَقِيلَ يَشْتَكِي عَيْنَيْهِ فَبَصَقَ فِي عَيْنَيْهِ وَدَعَا لَهُ فَبَرَأَ كَأَنْ لَمْ يَكُنْ بِهِ وَجَعٌ فَأَعْطَاهُ فَقَالَ أُقَاتِلُهُمْ حَتَّى يَكُونُوا مِثْلَنَا فَقَالَ انْفُذْ عَلَى رِسْلِكَ حَتَّى تَنْزِلَ بِسَاحَتِهِمْ ثُمَّ ادْعُهُمْ إِلَى الْإِسْلَامِ وَأَخْبِرْهُمْ بِمَا يَجِبُ عَلَيْهِمْ فَوَاللَّهِ لَأَنْ يَهْدِيَ اللَّهُ بِكَ رَجُلًا خَيْرٌ لَكَ مِنْ أَنْ يَكُونَ لَكَ حُمْرُ النَّعَمِ

வணக்க வழிபாட்டில் கூட மிகிதியாக உணர்ச்சி வசப்படுதலை பெருமானார் (ஸல்) அனுமதிக்க வில்லை. உம்மத்தை நிதானப்படுத்தினார்கள்.

நான் இரவெல்லாம் தொழுவேன். எப்போதும் நோன்பு வைப்பேன் . கல்யாணமே செய்துக்க மாட்டேன் என்றெல்லாம் உம்மத் உணர்ச்சிக் கொந்தளிப்பில் பேசியதுண்டு. பெருமானார் (ஸல்) உம்மத்தை சகஜ நிலைக்கு கொண்டு வந்தார்கள்

 أَنَسَ بْنَ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ جَاءَ ثَلَاثَةُ رَهْطٍ إِلَى بُيُوتِ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْأَلُونَ عَنْ عِبَادَةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا أُخْبِرُوا كَأَنَّهُمْ تَقَالُّوهَا فَقَالُوا وَأَيْنَ نَحْنُ مِنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَا تَأَخَّرَ قَالَ أَحَدُهُمْ أَمَّا أَنَا فَإِنِّي أُصَلِّي اللَّيْلَ أَبَدًا وَقَالَ آخَرُ أَنَا أَصُومُ الدَّهْرَ وَلَا أُفْطِرُ وَقَالَ آخَرُ أَنَا أَعْتَزِلُ النِّسَاءَ فَلَا أَتَزَوَّجُ أَبَدًا فَجَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَيْهِمْ فَقَالَ أَنْتُمْ الَّذِينَ قُلْتُمْ كَذَا وَكَذَا أَمَا وَاللَّهِ إِنِّي لَأَخْشَاكُمْ لِلَّهِ وَأَتْقَاكُمْ لَهُ لَكِنِّي أَصُومُ وَأُفْطِرُ وَأُصَلِّي وَأَرْقُدُ وَأَتَزَوَّجُ النِّسَاءَ فَمَنْ رَغِبَ عَنْ سُنَّتِي فَلَيْسَ مِنِّي

ஹஜஜுக்கு குர்பானிக்கக ஒட்டகையை கொண்டு வந்த ஒருவர். அதில் சவாரி செய்யாமல் நடந்தே வந்தார். குர்பானி ஒட்டகையில் சவாரி செய்வதா என அவர் உணர்ச்சி வசப்பட்டார். பெருமானார் அவரை நிதானப்படுத்தினார்கள்

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى رَجُلًا يَسُوقُ بَدَنَةً فَقَالَ ارْكَبْهَا فَقَالَ إِنَّهَا بَدَنَةٌ فَقَالَ ارْكَبْهَا قَالَ إِنَّهَا بَدَنَةٌ قَالَ ارْكَبْهَا وَيْلَكَ فِي الثَّالِثَةِ أَوْ فِي الثَّانِيَةِ – البخاري
(பதனத் என்றால் குர்பானி ஒட்டகை)


நோயுற்றுக் கிடந்த தன்னை வந்து சந்தித்த பெருமானார் தனக்காக துஆ செய்த போது உணர்ச்சி வசப்பட்ட சஃது பின் அபீவக்காஸ் (ரலி) சொத்து முழுவதையும் தர்மம் செய்து விடுகிறேன் என்றார். பெருமானார் (ஸல்) நிதானப்படுத்தினார்கள்.

أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ عَلَى سَعْدٍ يَعُودُهُ بِمَكَّةَ فَبَكَى قَالَ مَا يُبْكِيكَ فَقَالَ قَدْ خَشِيتُ أَنْ أَمُوتَ بِالْأَرْضِ الَّتِي هَاجَرْتُ مِنْهَا كَمَا مَاتَ سَعْدُ بْنُ خَوْلَةَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اللَّهُمَّ اشْفِ سَعْدًا اللَّهُمَّ اشْفِ سَعْدًا ثَلَاثَ مِرَارٍ قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ لِي مَالًا كَثِيرًا وَإِنَّمَا يَرِثُنِي ابْنَتِي أَفَأُوصِي بِمَالِي كُلِّهِ قَالَ لَا قَالَ فَبِالثُّلُثَيْنِ قَالَ لَا قَالَ فَالنِّصْفُ قَالَ لَا قَالَ فَالثُّلُثُ قَالَ الثُّلُثُ وَالثُّلُثُ كَثِيرٌ إِنَّ صَدَقَتَكَ مِنْ مَالِكَ صَدَقَةٌ وَإِنَّ نَفَقَتَكَ عَلَى عِيَالِكَ صَدَقَةٌ وَإِنَّ مَا تَأْكُلُ امْرَأَتُكَ مِنْ مَالِكَ صَدَقَةٌ وَإِنَّكَ أَنْ تَدَعَ أَهْلَكَ بِخَيْرٍ أَوْ قَالَ بِعَيْشٍ خَيْرٌ مِنْ أَنْ تَدَعَهُمْ يَتَكَفَّفُونَ النَّاسَ وَقَالَ بِيَدِهِ

இவ்வாறு கொள்கை வணக்கம் யுத்தம் சராசரி வாழ்வு நிலைகள் அனைத்திலும் அதீத உணர்ச்சி வசப்படுதலுக்கு ஆளாகாமல் அறிவார்த்தமாக யோசித்து நிதானமாக நடந்து கொள்ளும் ஒரு வழி முறை உம்மத்திற்கு எல்லா நிலையிலும் போதித்தார்கள் பெருமானார் (ஸல்)

அந்தப் பக்குவத்தை கடை பிடித்த முஸ்லிம் உம்மத் உலகிற்கு முன்மாதிரியாக வெற்றியடைந்த சமுதாயமாக – அந்தஸ்ததிற்கும் மரியாதைக்கும் உரியதாக – பெருமக்குரியதாக இருந்தது.

வல்லரசுகள் அந்த முஸ்லிம்களின் முன் மண்டியிட்டன. உலக்ம அந்த முஸ்லிம்களிடமிருந்து அனைத்து வாழ்க்கை பாடங்களையும் படித்தது.    

இன்று நம்முடைய பின்னடைவுகளுக்கும் தோல்விகளுக்கும் அவமானங்களுக்கும் முக்கிய காரணங்களில் பிரதானமானது, அதீத உணர்ச்சியாகும்.

உண்மை அறியாமல் – அல்லது அறிந்த பிறகு நிதானம் இல்லாமல்- பின் விளைவுகளை யோசிக்காமல் செய்யப்படுகிற செயல்கள் நம்மை பெரிய அளவில் கோமாளிகளாக்குகின்றன.

சென்னையில் பைத்துல் முகத்திஸ் இமாம் தொழ வைக்கிறார் என்று ஒருவர் சொன்னால் சாலைகள் தாங்காத கூட்டம்.

அவர் உண்மையில் பைத்துல் முகத்திஸின் இமாம் தானா? பைத்துக் முகத்திஸிற்கு எத்தனை இமாம்கள் இருக்கிறார்கள். எப்படி நியமிக்கப்படுகிறார்கள் அவர்களுக்கான விசேச தகுதி என்ன எதையும் நாம் யோசிக்க வில்லை.

பரபரப்பை உண்டு பண்ண நினைக்கிற எவரும் மிக எளிதாக முஸ்லிம் உம்மத்தை கேலிப் பெருளாக்கி விட முடிகிறது.

சூனிய உடன் படிக்கை சார்ந்த சர்ச்சையும் இப்படித்தான். ஒரு திருட்டுப் பேர்வழி மக்களின் உணர்ச்சியை களவாடிச் செய்கிற முட்டாள் தனத்தை அதீத உணர்ச்சிகளுக்கு உட்படுத்தி ஆலிம்களும் சேர்ந்து பரபரப்பாக்கி விட்டனர். சமுதாயம் அறிவு வட்டத்தில் கேலிப் பொருளாகி நிற்கிறது.

இன்ன தேதிக்குள் இறைவன் இருக்கிறான் என்று நிரூபித்து விட்டால் கோடிகள் தருகிறோம் என்று நாத்திகர்கள் விட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள். என்ன நடந்து விட்டது?

வெத்து பரபரப்புக்குள்ளாகிற அதீத உணர்ச்சி நிலையிலிருந்து நாம் எப்போது விடுபட போகொறோம்.

வாட்ஸ் அப் வேண்டாம். அது யூதனுடையது. வெளியே வா! வெளியே வா! வெளியே வா! என்று ஒன்று கத்தியில்லாத யுத்தமே நடந்தது. டெலிகிராம் அப்ளிகேஷனுக்கு இடம் பெயருமாறு ஒரு போராட்டத்தையே சில முஸ்லிம்கள் நடத்தினார்கள். அது ஒரு ஜோர்டானிய முஸ்லிமுக்குச் சொந்தமானது என்று சாதித்ததார்கள். என்ன நடந்தது?

இப்போது வாட்ஸ் அப்பில் மெசேஜ் வருகிறது டெலிகிராம் ரொம்ப ஆபத்தானதாமே?

அல்லாஹு அக்பர்!  ஸ்மார்ட் போன் மூலம் சமுதாயத்தின் உணர்ச்சி அலை சூடேற்றப்படுவதற்கு அளவே இல்லை.

மதீனாவில் பெருமானாரின் கப்ரை சவூதிக் காரர்கள் இடிக்க போகிறார்கள். ஜன்னத்துல் பகீவிற்கு இடம் மாற்றப் போகிறார்கள் என்ற டைம் ஆப் இந்தியா பத்ரிகையையின் செய்தியை பரப்பாதவர்கள் உண்டா?

அர்த்த இராத்திரியில் செய்தியை அனுப்பிய நணபருக்கு இப்படி பதில் அனுப்பினேன்.
இது முஸ்லிம் உம்மத்தை தேவையற்ற கலக்கத்திற்கு உள்ளாக்கும் உண்மையற்ற சதிச் செய்தி. இப்படித்தான் இரண்டு மாதத்திற்கு முன் இராக்கில் உள்ள ஐ எஸ் அமைப்பினர் கஃபாவை இடிக்கப் போவதாக சொன்னதாக் செய்தியை பரப்பினர். அதிலும் இதே போன்ற வாசகங்கள் பயன்படுத்தப் பட்டன. இதன் பின்னணியில் முஸ்லிம் சமுதாயத்தை மானசீக நெருக்குதலுக்கு உள்ளாக்கி மகிழ்ச்சியடைய நினைக்கும் கும்பலின் கைவரிசை இருக்கிறது. தயவு கூர்ந்து இத்தகைய செய்தியை பரப்ப வேண்டாம்.

உலகம் முழுவதிலும் முஸ்லிம்கள் இத்ததகைய் செய்திப் பரிமாற்றங்களாகும், அதீத உணர்ச்சி வசப்பட்ட நடவடிக்ககளாகும் அவர்களே அதிகம் சோர்வடைந்திருக்கிறார்கள். பொது தளத்தில் கேலிப்பொருளாகியும் வருகிறார்கள்.

பாலஸ்தீனில் முஸ்லிம்களை கொன்று குவிக்கிற இஸ்ரேலியர்களை உண்மையில் கட்டுப்படுத்து கிற நடவடிக்கள் வரவேற்கத்தக்கது. இஸ்ரேலின் தாக்குதலில் கடும் சேதத்தை சந்தித்த போதும் ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்ததிற்கு ஒத்துக் கொள்ள வில்லை, காரணம் இஸ்ரேலிடமிருந்து இன்னும் சில அடிப்படைஉரிமைகளைப் பெற்றுக் கொள்ள அவர்கள் நினைத்தார்கள். இஸ்ரேலின் டெல் அவிவ் விமான நிலையத்திற்கு விமானங்கள் வர முடியாத அச்சமூட்டுகிற சூழ்நிலையை ஏற்படுத்தினார்ல் இஸ்ரேல் தானாக இறங்கி வரும் என்று திட்டமிட்டார்கள். இழப்புக்களை தாங்கிக் கொண்டார்கள். இஸ்ரேல் இறங்கி வந்து ஹமாஸின் கோரிக்கைகள் சில வற்றை ஏற்றுக் கொண்ட பிற்கே காஸா வில் போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டிருக்கிறது.

அல்லாஹ் பாலஸ்தீன மக்களுக்கு நிரந்தர அமைதியை பாதுகாப்பான வாழ்வை விரைவாக தந்தருள்வானாக!

இது போன்ற தீரம் மிக்க நடவடிக்கைகள் ஏற்கத் தக்கது, அதே போல இஸ்ரேலிய ஆக்ரமிப்புகளுக்கு ஆதரவு தெரிவிக்கிற அல்லது உதவி செய்கிற இஸ்ரேலிய நிறுவனங்களை புறக்கணிப்பதும் ஏற்கத்தக்கது,

புறக்கணிப்பு என்பதை சத்தமில்லாத செயல் பாட்டின் மூலம் செய்து காட்ட முயன்றிருக்க வேண்டும். அது தான் உண்மையான வெறுப்பின் வெளிப்பாடு.

எல்லா மக்களும் பார்வையில் படுகிற வகையில் இஸ்ரேலிய பொருட்களின் பேனர்களை வைத்து புறக்கணிப்பு கோஷம் போடுவது அதீத உணர்ச்சி வசப்படுதலின் ஒரு வெளிப்பாடாகவே அமையும்.

பொருட்களை புறக்கணிப்பது வேறு அதை விளமபரப்படுத்துவது வேறு.
இன்னொரு மெஸேஜை பாருங்கள்!
கீழக்கரை மட்டும் புறக்கணிக்கும் என்றால் ஒரு நாளைக்கு 30 இலட்சம் நஷடமாகும்.

எதோ பொருளாதாரத்தை மெத்த கரைத்துக் குடித்த மேதை போல செய்யப்படுகிற இத்தகைய மேம்போக்கான நடவடிக்கைகள் அதீத உணர்ச்சி யூட்டவும் குற்றம் சாட்டிக் கொள்ளவும் மட்டுமே பயன்படும்.

இத்தகைய செய்திகளை விரல் சொடுக்கில் யோசிக்காமல் பரப்புகிற போது சமுதாயம் உண்மையற்ற செய்திகளை உண்மை போல நம்பிக் கொள்ளும். பிறகு நமது நடவடிக்கைகள் கேலிக் குரியதாகிவிடும் . நாமே நமக்கு எதிர்களாக ஆவோம்.

அதே நேரம் முஸ்லிம்கள் வெறுத்து ஒதுக்கியதால் பெப்ஸி நிறுவனத்தின் வியாபாரம் சரிந்தது என்ற செயதியை பத்ரிகைகளும் சேனல்களும் சொல்லும் என்றால் அதன் வீரியம் எத்தகையது என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஒரு முக்கியமான செய்தியை இங்கே நினைவு படுத்துவது பொருத்தம் என நினைக்கிறேன்.

சமீபத்தில் இலங்கையில் முஸ்லிம்களின் பள்ளிவாசல்களையும்  வியாபார நிறுவனங்களையும் பொளத்தர்கள் தாக்கியதற்காக சென்னையில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

முஸ்லிம்கள் ஓருடலைப் போன்றவர்கள் என்ற நபி மொழிக்கான எடுத்துக் காட்டு என நாம் நினைத்தோம்.
مَثَلُ المؤمنين في تَوَادِّهم وتراحُمهم وتعاطُفهم: مثلُ الجسد، إِذا اشتكى منه عضو: تَدَاعَى له سائرُ الجسد بالسَّهَرِ والحُمِّى ))[أخرجه البخاري ومسلم عن النعمان بن بشير

ஆனால் அப்போது தமிழகத்திலிருந்து இலங்கைக்கு சென்றிருந்த ஆலிம்கள் சிலரிடம் இலங்கை ஜம் இய்யத்துல் உலமாவைச் சேர்ந்த ஆலிம்கள் சொன்னது எனன் தெரியுமா?

உங்களது நல்லெண்ணமும் துஆ வும் வரவேற்கத்தக்கதே!  ஆனால் இந்த ஆர்ப்பாட்டத்தால் இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் மீது பொளத்தர்களின் கோபம் அதிகரித்திருக்கிறது என்று இலங்கை ஜம் இய்யத்துல் உலமாவினர் கூறியுள்ளார்கள்.

நமக்கான பாடம் என்ன?

நாம் செய்கிற செயல் நமக்கு அல்லது சமுதயத்திற்கு நன்மையா என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பிறகு ஒரு செயலில் இறங்க வேண்டும்.

அதற்கு இன்றைய சூழலில் மூன்று விதிகளை நாம் மறக்காமல் நினைவில் வைத்திருக்க வேண்டும்.
1.   நம்முடைய சந்தோஷமான அல்லது சங்கடத்தை வெளிப்படுத்துகிற ஒவ்வொரு செயலும் – ஈக்குவலான – சமமான – எதிர் விளைவுகளை அல்ல. பாரதூரமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தி விடக்கூடும்
2.   அதீத உணர்ச்சி வசப்படுதலை விட நிதானமான வாழ் முறையை தான் பெருமானார் (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத்தந்துள்ளார்கள்
3.   இன்றைய நிலையில் முஸ்லிம் சமுதாயத்திற்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் தருகிற தகவல்கள் தான் தேவை. அச்சத்த்தையும் அவநம்பிக்கையையும் தருகிற செய்திகள் அல்ல. எச்சரிக்கையுணர்வும் பாத்காப்பு உணர்வும் அவசியம் தான். ஆனால் அது பேடித்தனமாகி விடக் கூடாது. அறிவற்ற பதட்டம் தான் பேடித்தனமாகும் என்பதையும் நினைவில் நிறுத்திக் கொள்ளவோம்.

அல்லாஹ் கிருபை செய்வானாக!


11 comments:

  1. Anonymous7:47 PM

    Super super

    ReplyDelete
  2. Anonymous8:52 PM

    masha allah arumayana arputhamaana samudhayatthirku thaevayana thahaval i koduthulleerhal jazakallah by samsudeen maslahi

    ReplyDelete
  3. ஜஸாகுமுல்லாஹு கைரல் ஜஸா.....

    ReplyDelete
  4. Anonymous9:36 PM

    Chennai vantha baithul muqathas imam 5 imamgalil oruvar aavaar. Unmayai arinthu pesungal imam. Avarai patri YouTube il ullathu.

    ReplyDelete
  5. قال النبي صلي الله عليه وسلم كفي بالمرء كذبا انيحدث بكل ماسمع.رواه مسلم مقالتك جيدة في ضوء هذاالحديث

    ReplyDelete
  6. Mohammed hadhees1:17 AM

    Niraiya "news forward aalim" -galai intha topic phaadhitthu irukkum enru ninaikkiren.

    ReplyDelete
  7. அல்ஹம்து லில்லாஹ் அருமை

    ReplyDelete
  8. Anonymous5:11 AM

    காலத்திற்கேற்ப சமுதாயத்திற்கு மிக அவசியமான அவசரமான அறிவுரை.

    ReplyDelete