வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, August 28, 2014

சிலை வணக்கம் பெரும் தீமை

மனித சமூகத்தில் ஊடுறுவிய தீமைகளில் மிகப்பெரிய தீமை சிலை வணக்கமாகும். அதைபெருங் குற்றமாகவும் இஸ்லாம் கருதுகிறது

அரசுக்கு எதிரான செயல்கள் பெரும் குற்றங்களாக கருதப்படுகின்றன உலகம் முழுவதிலும்.

உலகில் தனி மனித சுதந்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் தருகிற அமெரிக்கா அதனுடைய வேவுப் பணிகளை உலகத்திற்கு அம்பலப்படுத்தி விட்டார் என்ற குற்றத்திற்காக அமெரிக்காவின் சி.ஐ.ஏ.வில் தொழில்நுட்ப வல்லுனராக பணிபுரிந்த 29 வயது எட்வர்ட் ஸ்நோடென் - Edward Snowden ஐ மன்னிக்க முடியாத மிகப்பெரும் குற்றவாளியாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்கா மீதுள்ள பயத்தால அவருக்கு அடைக்கலம் அளிக்கவும் அவர் செல்லும் விமானம் தங்களுடைய வான் வெளியில் பறக்கவும் கூட உலக நாடுகள் மறுத்துவிட்டன. அடைக்கலம் கோரி ஸ்நோடென் அனுப்பிய விண்ணப்பத்தை ஒரு விநாடிகூட யோசிக்கவும் இந்தியா நிராகரித்துவிட்டது.

தன்னுடைய நண்பர்களை கூட வேவு பார்த்த அவர்களுடைய செல்போன் களை ஒட்டுக்கேட்ட அமெரிக்க அரசுக்கு எதிரான செயலை மாபெரும் குற்றமாக உலகம் கருதுகிறது.

உண்மையான அரசனுக்கு எதிரான – உண்மையான அவமதிப்புச் செயல்கள் உலகின் மாபெரிய குற்றங்கள் அல்லவா?

فَمَنْ أَظْلَمُ مِمَّنْ افْتَرَى عَلَى اللَّهِ كَذِبًا(15)

இந்த போலி தெய்வங்களால் நமக்கு ஏதாவது நனமை உண்டா? எல்லா வகையிலும் நம்மை படைத்து பாதுகாக்கிற – கல்லுக்குள் இருக்கிற தேரைக்கும் உணவளிக்கிற – ரப்புல் ஆலமீனை – விட்டு விட்டு இன்னொன்றை வணங்குவது நன்றி கெட்ட செயல்

وَلَا تَدْعُ مِنْ دُونِ اللَّهِ مَا لَا يَنْفَعُكَ وَلَا يَضُرُّكَ فَإِنْ فَعَلْتَ فَإِنَّكَ إِذًا مِنْ الظَّالِمِينَ(106)

وَاتَّبَعْتُ مِلَّةَ آبَائِي إِبْرَاهِيمَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ مَا كَانَ لَنَا أَنْ نُشْرِكَ بِاللَّهِ مِنْ شَيْءٍ ذَلِكَ مِنْ فَضْلِ اللَّهِ عَلَيْنَا وَعَلَى النَّاسِ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَشْكُرُونَ(38)

கண்ணுக்குத் தெரியாத இறைவன் – ப்டைத்தவன் ஒருவன் இருக்கிறான் என்பதற்கு இந்த உலகின் நுட்பமான இயக்கமே போதுமானது.

நாம் கையால் செய்த மரம் கல்லாலான இந்தச் சிலைகள் உலகை படைத்துக் காப்பதில் எந்த ஒரு பங்களிப்பையும் செய்யததில்லை

சிலைகளை கடவுள் என்பது அப்பட்டமான மனித கறபனை. வடிகட்டிய பொய்.

وَمَا يَتَّبِعُ الَّذِينَ يَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ شُرَكَاءَ إِنْ يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ وَإِنْ هُمْ إِلَّا يَخْرُصُونَ(66யூனுஸ் )

இந்தக் க்டவுள்கள் மனிதர்கள் தங்களது கறப்னையால் சூட்டிக் கொண்ட வெற்றுப் பெயர்கள் என்ப்தை தவிர வேறு எதுவும் இல்லை

مَا تَعْبُدُونَ مِنْ دُونِهِ إِلَّا أَسْمَاءً سَمَّيْتُمُوهَا أَنْتُمْ وَآبَاؤُكُمْ مَا أَنزَلَ اللَّهُ بِهَا مِنْ سُلْطَانٍ

சிலைகள் மொத்தமுமே மனித கறபனைகளும் அவர்கள் விரும்ப்ச் சூடிக் கொள்ளும் பெயர்கள் தான்

இன்று சதுர்த்தி கொண்டாடப்படுகிற விநாயகருக்கு முப்பத்தி இரண்டு உருவங்கள் சமய ரீதியாக சொல்லப் படுகிற ஆனால் மக்கள் உருவாக்கி வைத்திருக்கிற உருவங்கள் எத்தனை

சென்னை குரோம்பேட்டை ராதா நகர் கிருஷ்ணமாச்சாரி தெருவை சேர்ந்த கட்டிட கலை நிபுணர் சீனிவாசன் சென்னை அஸ்தினாபுரத்தில் வெவ்வேறு வகையான 5000 விநாயகர் சிலைகளை வைத்து ஒரு கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
அதில் 100 கண்ணாடி பிள்ளையார் சிலைகள் , பெண் உருவத்தில் உள்ள பிள்ளையார், பிள்ளையார், கேரம் ஆடும் பிள்ளையார், பாகவதர் கோலத்தில் பிள்ளையார், கர்நாடக மற்றும் மேற்கத்திய இசை கலைஞர்களாக பிள்ளையார், செஸ் ,கிரிக்கெட் ஆடும் பிள்ளையார் என்று ஏராளமான உருவத்தில் விநாயகர் சிலைகள் கண்காட்சியில் வைக்கப்பட்டு உள்ளது.
தக்காளி, பச்சை மிளகாய், பப்பாளி, தென்னை மரம், வாழை மரம், தேங்காய், பசுவின் முதுகு, உத்தராட்ச கொட்டை ஆகியவற்றில் தோன்றிய விநாயகர் உருவங்கள் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் சொல்கின்றன,
சிலைக் கடவுள்கள் முழுக்க முழ்க்க மனிதக் கறபனைகள் என்பதற்கான அடையாளம் இது. மக்கள் தமது சொந்த விருப்பங்களுக்கும் ஆசைகளுக்கும் கடவுள் நாமகரணம் செய்து விட்டார்கள் என்பதற்கான சாட்சி இது.

படைத்த ரப்பு விசயத்தில் இத்தகைய அவதூறை துணிந்து செய்வதை பெரும அநீதி என திருக்குர் ஆன் திரும்பத் திருமபக் கூறுகிறது.
فَمَنْ أَظْلَمُ مِمَّنْ افْتَرَى عَلَى اللَّهِ
இத்தகைய செயலுக்கு மன்னிப்பே இல்லை என திருக்குர் ஆன் ப்ரகடணப்படுத்துகிறது,

إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ وَمَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ افْتَرَى إِثْمًا عَظِيمًا(48)

إِنَّهُ مَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنْصَار

சிலைகள் முழுக்க முழுக்க மனிதக் கறபனையாக இருப்பதால் அவை தமக்கு எந்த வகையில் வழிகாட்டுகின்றன – எவ்வாறு வாழுமாறு உத்தரவிடுகின்றன ?  என்று யாரும் யோசிப்பதே இல்லை.  அதனால் இந்தக் கடவுள் என்னை இப்படி நடக்க உத்தரவிடடுள்ளது என உலகில் சிலை வணங்கிகள் எவரும் சொன்னதில்லை. வாழ்ந்த மனிதனை கடவுளாக்கியவர்களை தவிர

இந்த சாமிக்கு பிடித்தது என்ன வென்று கேட்டால் பச்சை அல்லது மஞ்சள் என்று நிரத்தை சொல்கிறார்கள். அல்லது மாவிலை வேப்பிலை என்று தாவரங்களை சொல்கிறார்கள். அல்லது வெண்பொங்கல் சர்க்கரை பொங்கள் என உணவுகளைச் சொல்கிறார்கள்.

இந்த சாமி என்னை இப்படி வாழுமாறு கூறியது என யாரும் சொல்வதில்லை. சாமியின் சார்பாக இந்த ஆசாமி இப்படி கூறினார் என்றும் கூட யாரும் எதையும் சொல்வதில்லை.  

வாழ்ந்த மனிதனை கடவிளாக்கியவர்களோ அவர் இறைந்த பிறகு அவர் எங்கே என்றால் அவர் கடவுளிடம் சென்று விட்டார் என்று சொல்கிறார்கள். உதாரணம் சாய்பாபா. சங்கராச்சாரியார்.

பள்ளிவாசலை பார்வையிட வந்த மாற்று மதச் சகோதரர்கள் அங்கு வைக்கப் பட்டிருந்த குர் ஆன்களை காட்டி இவை என்ன ? என்று கேட்டார்கள்.

திருகுர் ஆன் என்று பதில் சொன்ன நான், நாங்கள் வணங்குகிற இறைவன் எங்களுக்கு வழிகாட்டிய நூல் என்று பதில் சொன்னேன்.

எத்தகைய உன்னதமான உம்மத் நாம் என்பது ஒரு சிலிர்ப்பை தந்தது.

இப்படி வாழ்ந்தால் உங்களை எனக்கு பிடிக்கும் – இப்படி வாழ்ந்தால் எனக்குப் பிடிக்காது என்று சிலைகள் – வழிகாட்டவில்லை அதனால் என்ன ஆயிற்று?

எத்தகைய தீயவர்களும் ஒரு கற்பூர ஆராத்தியை சிலைகளுக்கு காட்டி விட்டு தங்களது அக்கிரமத்தை அரங்கேற்றி கொண்டிருக்கிறார்கள்.

ஒரு சாமியார் சொன்னார். திருப்பதி வெங்கடாஜலபதிக்குத்தான் எல்லா அபிஷேகங்களூம் கிழமை தவறாமல் நடக்கின்றன, கிராமத்து கோயில்களில் இருக்கிற சாமிகளை யார் கண்டு கொள்கிறார்கள். திருப்பதி உண்டியலில் விழுகிற கோடிக்கணகான காணிக்கைகள் பெரும்பாலும் முறையற்ற பணம் தானே!

உலகில் தோன்றிய எந்த மதமும் சிலை வணக்கத்தை அடிப்படையாக கொண்டதில்லை. இந்து மதம் புத்த மதம் உடபட.

இந்து மதத்தின் மூல வேதங்கள் உருவமற்ற இறைவனை தான் போதித்தன என்பதை மத அறிஞர்கள் ஒப்புக் கொண்டுள்ளார்கள் vishwahindusamaj.com   எனும் இணைய தளம் கீழ் காணும் செய்தியை சொல்கிறது.

Idolatry does not find any support from Vedas. In chapter 32 of Yajurveda it has been said that God Supreme or Supreme Spirit has no ‘Pratima’ or material shape. He cannot be seen directly by anyone. His name is so great that only the Name is enough to invoke Him. He pervades all beings and all directions.     

உருவ வழிபாடு வேதங்களிலிருந்த் எந்த ஆதரவையும் பெற்றதில்லை. யஜுர் வேதத்தின் 32 வது அத்தியாயம் இப்படி கூறுகிறது.
கடவுள் எந்த உருவமும் இல்லை. கடவுளை யாராலும் நேரடியாக பார்க்க முடியாது. அவனது பெயரே பெரியது, அவனை அறிய போதுமானது. அவன் எங்கும் எதிலும் இருக்கிறான்.


இன்னும் பல தகவல்கள்.
       

இந்து வேத நூல்.....சாந்தோகியா உபநிஷிதம்அத்தியாயம்: 6 பகுதி: 2வசனம்:1
இறைவன் ஒருவன் மற்றொன்று இல்லை)

ஸுவேர்காஷிவேதர் உபநிஷிதம்.அத்தியாயம்: 6 வசனம்: 9

இறைவனுக்கு பெற்ற்றோர்கிடையாது,அவனுக்கு படைப்பாளன்
கிடையாது இறைவனுக்கு மேல்சக்திவாய்ந்தவர்கள்கிடையாது)

3:ஸுவேர்காஷிவேதர் உபநிஷிதம்.அத்தியாயம்: 4 வசனம்: 19

(இறைவனுக்கு நிகர்இல்லை அவனுக்கு நிகராகஎதுவுமில்லை அவனுக்கு உருவமில்லை)

பகவத்கீதை அத்யாயம்:7வசனம்: 20
பொருளாசையின்காரணமாக சிலர் பல கடவுள்களை உருவாக்கி வணங்குவார்கள்

யஜூர் வேதம்அத்தியாயம்:32 வசனம்: 3
இறைவனுக்கு இணை இல்லை உருவமில்லை)

யஜூர்வேதம்அத்தியாயம்:40 வசனம்: 9

எவன்கடவுளை விட்டு கடவுளின்படைப்புகளை வணங்கிரானோ அவன்
அறியாமையில் அவன்இருளில் நுழைகிறான்

இந்து மத அறிஞர்கள் ஒத்துக் கொள்ளும் ஒரு உண்மை புத்திக் குறைந்தவர்களுக்குத்தான் சிலவணக்கம் எனபதாகும்

உத்தர கீதை இப்படிச் சொல்வதாக அறிஞர்கள் கூறுகிறார்கள்.

அக்நிரதேலோத் விஜாதீநாம்
முநிநாம் ஹிருதிதைவதம்
பர்மாஸ்வ பாபுத்தா நாம்
ஸர்வத்ர ஸமதர்சிந

பொருள்:  பார்ப்பனர் களுக்குத் தெய்வம் அக்னியில், முனிவர் களுக்குத் தெய்வம் இருதயத்தில், புத்தி குறைந்தவர்களுக்குத் தெய்வம் சிலையில், சம பார்வை உடையவர்களுக்கு எங்கும் தெய்வம். 

தமிழ்சித்தர்களில் ஒருவரான சிவவாக்கியர் உயர்ந்த ஆன்மீகத்தை இப்படி பாடியுள்ளார்.

நட்ட கல்லை சுற்றி வந்து நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து மொணெமொணென்று சொல்லும் மந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ? நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச் சுவை அறியுமோ?” 


உலகில் நடைபெற்ற கொடுமைகளுள் மிகப்பெரிய கொடுமை ஈஸாவை கிருத்துவகள் கடவுளாக்கியதும் அவருக்கு உருவம் செய்த்ததும் – கிருத்துவர்கள் உருவ வழிபாட்டுக்காரர்களாக மாறியதுமாகும்.

ஆனால் அவர்கள் கையில் வைத்திருக்கிற பைபிளே உருவ வழிபாட்டுக்கு எதிராக பேசுகிறது.

விக்கிரகங்களை உருவாக்குகிற யாவரும் வீணர்; அவர்களால் இச்சிக்கப்பட்டவைகள் ஒன்றுக்கும் உதவாது; அவைகள் ஒன்றும் காணமலும், ஒன்றும் அறியாமலும் இருக்கிறதென்று தங்ளுக்கு வெட்கமுண்டாக அவைகளுக்குத் தாங்களே சாட்சிகளா யிருக்கிறார்கள்.. அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.  ஏசாயா 44:9 (44:6,9-20)

அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது. அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது; அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது. அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது; தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது. அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.  சங்கீதம் 115:3-8 (Psalms 115:3-8)

طُمست عيونهم عن الإبصار، وقلوبهم عن التعقل" (سفر إشعياء 44: 18-20)
إذ" يسجدون لعمل أيديهم، لمَا صنعته أصابعهم" (سفر إشعياء 2:

 المزامير 115

    115 : 4 اصنامهم فضة وذهب عمل ايدي الناس
115: 5  لها أفواه ولا تتكلم لها أعين ولا تبصر
 115: 6  لها أذان ولا تسمع لها مناخر ولا تشم
 115: 7  لها أيد ولا تلمس لها أرجل ولا تمشي ولا تنطق بحناجرها
 115: 8 مثلها يكون صانعوها بل كل من يتكل عليها
 115: 9 يا إسرائيل أتكل على الرب هو معينهم ومجنهم


திருக்குர் ஆன் அவர்களை சாடுகிறது.

لَقَدْ كَفَرَ الَّذِينَ قَالُوا إِنَّ اللَّهَ هُوَ الْمَسِيحُ ابْنُ مَرْيَمَ قُلْ فَمَنْ يَمْلِكُ مِنْ اللَّهِ شَيْئًا إِنْ أَرَادَ أَنْ يُهْلِكَ الْمَسِيحَ ابْنَ مَرْيَمَ وَأُمَّهُ وَمَنْ فِي الْأَرْضِ جَمِيعًا وَلِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا يخْلُقُ مَا يَشَاءُ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ(17)

உருவ வழிபாடு இறைவனுக்கு எதிரான் பெருங்குற்றம் என்பது மட்டுமல்லாது. அது சமூகத்தில் அநாகரீகமான தீய விளைவுகள் பல வற்றை உண்டு பண்ணக்கூடியதாகும். உருவ வழிபாடு எங்கே இருக்கிறதோ அங்கே இதுவெல்லாம் இருக்கும்.

  • கடவுள்களின் எண்ணிக்கை பெருக்கம்

முப்பத்தி முவாயிரம் கோடி கடவுள்கள் இருப்பதாக இந்துக்கள் கூறுகிறார்கள்
மூன்று கடவுள்கள் இருப்பதாக கிருத்துவர்கள் கூறுகிறார்கள்.

·         அமைதியற்ற பொருத்தமற்ற வழிபாட்டு முறைகள்
·         மூட நம்பிக்கைகள்
அறியாமை பெருகும்
·         தீண்டாமை
·         வீண் விரயம்
·         பிளவுகளுக்கும் சச்சரவுகளுக்கும் அதிக காரணமாகும்.


وَمَا كَانَ صَلَاتُهُمْ عِنْدَ الْبَيْتِ إِلَّا مُكَاءً وَتَصْدِيَةً فَذُوقُوا الْعَذَابَ بِمَا كُنتُمْ تَكْفُرُونَ(35)إِنَّ الَّذِينَ كَفَرُوا يُنْفِقُونَ أَمْوَالَهُمْ لِيَصُدُّوا عَنْ سَبِيلِ اللَّهِ فَسَيُنفِقُونَهَا ثُمَّ تَكُونُ عَلَيْهِمْ حَسْرَةً ثُمَّ يُغْلَبُونَ وَالَّذِينَ كَفَرُوا إِلَى جَهَنَّمَ يُحْشَرُونَ(36)

عن ابن عباس في قوله "وما كان صلاتهم عند البيت إلا مكاء وتصدية" قال كانت قريش تطوف بالبيت عراة تصفر وتصفق والمكاء الصفير والتصدية التصفيق.

உலகத்தில் பலர் உருவ வழிபாட்டிற்கு எதிராக பிரச்சாரம் செய்திருக்கிறார்கள். நூஹ் நபிக்குப் பின்னுன்டான எல்லா இறைத்தூதர்களும் உருவ வழிபாட்டை எதிர்த்தே வந்துள்ளார்கள்.
ஆனால் இதில் பெரும் வெற்றி கண்டவர் பெருமானார் (ஸல்)
உருவ வழிபாடு அதனுடைய எல்லா வகையான தீமைகளையும் படரச்செய்திருந்த காலத்தில் பெருமானார் (ஸல்) அவர்கள் பிறந்தார்கள்.

தற்போது சில இந்துதுத்துவ அமைப்புக்கள் கஃபாவுக்குள் சிலைகள் தான் இருந்தன, இப்போதும் சிலைகள் இருக்கின்றன, கஃபாவே ஒரு கல் கட்டிடம் தானே அதை தான் முஸ்லிம்கள் வணங்குகிறார்கள் என்று பேசுகிறார்கள். ஜக்கி வாசுதேவ் சமீபத்தில் ஹிந்து நாளிதழுக்கு எழுதிய ஒரு கட்டுரையில் இவ்வாறு குறிப்ப்ட்டிருந்தார். இது உச்ச பட்ச அறியாமையின் வெளிப்பாடாகும்.
கஃபாவுக்குள் சிலைகள் இருந்தன, உண்மை தான் வரலாற்றை இன்னும் கொஞ்சம் ஆழமாக படிக்க வேண்டும். அப்போதுதான் முழு உண்மை புலப்படும்.

கஃபா இறைவனை வணங்குவதற்காக தூய முறையில் கட்டப்பட்ட முதல் ஆலயம், இஸ்மாயில் அலை அவர்களின் சம்பந்த வழியினரான ஜுர்ஹும்கள் அந்த ஆலயத்தின் நிர்வாகிகளாக இருந்த வரை அவர்களுக்கு தீன் தெரிந்திருந்தது, ஜுர்ஹும்களின் நிலையை கண்டு பொறாமை கொண்ட அரபக நாடோடிகளான பனூகுஸாஆக்கள் ஜுர்ஹும்களை தாக்கி மக்காவையும் கஃபாவையும் கைப்பற்றினர். அவர்களுககு மதமும் தெரியாது, மார்க்கமும் தெரியாதுஅவர்களின் தலைவனாக இருந்த லுஹை பின் ஹாரிதா தன்னுடைய நோயுக்கு சிகிட்சை பெற வெளியூர் சென்ற போது அங்கு ஒரு வண்ணமயமான சிலையை பார்த்து அதிசயித்து நின்றான். அந்த ஊர் மக்கள் மக்காவின் தலைவனுக்கு அந்த சிலையை அன்பளிப்பாக வழங்கினார்கள். அதுவே ஹுபல் சிலை. அதைக் கொண்டு வருகிறது  அதனுடைய வலது கை முறிந்து விட்டது. அதற்கு பதில் மக்காவ்ல் தங்கத்தில் ஒரு கை செய்யப்பட்டது.

وكان أول من غيَّر دين إسماعيل عليه السلام فنصب الأوثان وسيَّب السائبة ووصل الوصيلة وبَحَر البَحِيرة وحمى الحامية، عمرو بن ربيعة، وهو لُحَيّ بن حارثة بن عمرو بن عامر الأزدي وهو أبو خزاعة.
وكان الحارث هو الذي يلي أمر الكعبة فلما بلغ عمرو بن لُحَيّ نازعه في الولاية وقاتل جرهما ببني إسماعيل فظفر بهم وأجلاهم عن الكعبة ونفاهم من بلاد مكة وتولى حجابة البيت بعدهم.
ثم إنه مرض مرضا شديدا، فقيل له: إن بالبلقاء من الشام حمَّة إن أتيتها برأت فأتاها فاستحم بها فبرأ ووجد أهلها يعبدون الأصنام، فقال: ما هذه؟ فقالوا: نستسقي بها المطر ونستنصر بها على العدو، فسألهم أن يعطوه منها ففعلوا فقدم بها مكة ونصبها حول الكعبة، وقيل: إنهم أعطوه صنما يقال له هُبل فقدم به مكة فوضعه عند الكعبة فكان أول صنم وضع بمكة.
قال ابن هشام: فحدثنا الكلبي عن أبي صالح عن ابن عباس قال: قال النبي  «رفعت لي النار فرأيت عَمرا (أي عمرو بن لُحَيّ) رجلا قصيرا أحمر أزرق يجر قُصبه في النار، قلت: من هذا؟ قيل: هذا عمرو بن لُحَيّ أول من بحر البحيرة ووصل الوصيلة وسيَّب السائبة وحمى الحامية وغيَّر دين إبراهيم ودعا العرب إلى عبادة الأوثان».

பெருமானார் (ஸல்) அவர்களுக்கு நானூறு வருடங்களுக்கு முன் இந்த விபத்து நடந்தது.
பனுகுஸா ஆக்களிடமிருந்து அதிகாரத்தை ஜுர்ஹும்களின் வழி வந்த குறைஷி களின் தலைவரான குஸைய்யு கைப்பற்றினார்.
இதற்கிடையில் குறைஷிகளும் சிலை வணங்கிகளாக மாறியிருந்தனர். கஃபாவை சுற்றி ஏராளமான சிலைகள் வைக்கப்பட்டிருந்தன். அரபிகள் பல் வேறு சிலைகளை வணங்கினார்கள்

ومن الأصنام المشهورة القديمة إساف ونائلة عبدتهما خزاعة وقريش ومن حج البيت بعدُ من العرب وكانوا ينحرون ويذبحون عندهما.
ومَنَاة كان منصوبا على ساحل البحر بقُدَيْد بين مكة والمدينة وكانت العرب جميعا تعظمه وتذبح حوله ولم يكن أحد أشد إعظاما له من الأوس والخزرج،
وقد ورد ذكر مناة في القرآن، قال تعالى: {وَمَنَوةَ الثَّالِثَةَ الاْخْرَى} (النجم: 20).
والفِلس وهو صنم طيء هدمه عليّ رضي الله عنه بأمر رسول الله 
واللات (تأنيث الله) وهي أحدث من مناة وكانت صخرة مربعة وكانت قريش كلها تعظمها وهي بالطائف
إنها من أعظم آلهة العرب
 ذكرها الله في القرآن فقال: {أَفَرَءيْتُمُ اللَّتَ وَالْعُزَّى} (النجم: 19)،
 ولم تزل كذلك حتى أسلمت ثقيف فبعث رسول الله  المغيرة بن شعبة فهدمها وأحرقها بالنار،

ومن أصنامهم العُزى (تأنيث الأعز) والأعز بمعنى العزيز ويقال: إنها أحدث من اللاة ومناة، كانت بوادي نخلة الشآمية وكانت أعظم الأصنام عند قريش وكانوا يزورونها ويهدون لها ويتقربون عندها بالذبح.


தூய ஏகத்துவ வாதிகளாக இருந்தவர்கள் காலத்தின் கோலத்தால் இவ்வாறு சிலை வணங்கிகளாக மாறிய பிறகு அவர்களிடம் வாழும் வழி முறை மார்க்கம் எதுவும் இருக்கவில்லை. எல்லா பாவச்செயல்களும் வலிமையின் அடையாளமாக கருதப்பட்டது. நீதி அநீதிக்கு வித்தியாசம் இருக்கவில்லை.

இந்த நிலையில் முஹம்மது ஸல்) அவர்கள் அம்மக்களை மட்டுமல்ல உலக மக்களை இத்தகைய தீய பழக்கத்திலிருந்த் மீட்பதில் பெரும் வெற்றி பெற்றாரர்கள்.

சிலை வணக்திலிருந்து மக்களை விடுவிப்பதில் அவரர்களுடைய் வெற்றி சாமாணியமானதல்ல.

1400 ஆண்டுகளை கடந்தும் அந்நாடுகள் சிலை வணக்கத்திலிருந்து விலகி நிற்கின்றன. இன்னும் நாள்தோறும் ஆயிரக்கணக்காணோர் சிலை வணக்கத்திலிருந்து விடுபட்டு வருகின்றனர்.

பெருமானாரின் சாதனைக்கு சாட்சி
عن عبد الله بن مسعود ، أن رسول الله صلى الله عليه وآله وسلم قال : " إن إبليس يئس أن تعبد الأصنام بأرض العرب ، ولكنه سيرضى بدون ذلك منكم بالمحقرات من أعمالكم ، وهي الموبقات ، فاتقوا المظالم ما استطعتم ، فإن العبد يجيء يوم القيامة وله من الحسنات ما يرى أنه ينجيه ، فلا يزال عبد يقوم فيقول : يا رب إن فلانا ظلمني مظلمة ، فيقال : امحوا من حسناته حتى لا يبقى له حسنة " . -  احمد 2268 هذا حديث صحيح الإسناد ولم يخرجاه 

சிலை வணக்கத்திற்கு எதிராக பெருமானார் (ஸல்) அவர்கள் பெற்றது போன்ற வெற்றியை மற்ற புரட்சியாளர்கள் பலரும் பெற முடியவில்லை. இந்த விசயத்தில் பெருமானாரின் வெற்றிக்கு காரணம்

1.       உள்ளார்த்தமான கடும் எதிர்ப்பு. எந்த கட்டத்திலும் அதை சகித்துக் கொண்டதில்லை. அல்லாஹ்வின் மரியாதையில்

·        عَنْ عَبْدِ اللَّهِ قَالَ سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ الذَّنْبِ أَعْظَمُ عِنْدَ اللَّهِ قَالَ أَنْ تَجْعَلَ لِلَّهِ نِدًّا وَهُوَ خَلَقَكَ قُلْتُ إِنَّ ذَلِكَ لَعَظِيمٌ قُلْتُ ثُمَّ أَيُّ قَالَ وَأَنْ تَقْتُلَ وَلَدَكَ تَخَافُ أَنْ يَطْعَمَ مَعَكَ قُلْتُ ثُمَّ أَيُّ قَالَ أَنْ تُزَانِيَ حَلِيلَةَ جَارِكَ    - البخاري 4117

·        عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ أَنَا أَغْنَى الشُّرَكَاءِ عَنْ الشِّرْكِ فَمَنْ عَمِلَ لِي عَمَلًا أَشْرَكَ فِيهِ غَيْرِي فَأَنَا مِنْهُ بَرِيءٌ وَهُوَ لِلَّذِي أَشْرَكَ  - إبن ماجة
1.       ஷிர்கிற்கான வாசல்களை அடைத்தார்கள்

·        عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ قَالَ سَمِعَ ابْنُ عُمَرَ رَجُلًا يَحْلِفُ لَا وَالْكَعْبَةِ فَقَالَ لَهُ ابْنُ عُمَرَ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ حَلَفَ بِغَيْرِ اللَّهِ فَقَدْ أَشْرَكَ  
·        எஜமானரை ரப்பு என்று சொல்லாதீர்கள் சையித் என்று சொல்லுங்கள்

2.       ஷிர்கை வெறுத்தார்கள் – முஷ்ரிக்களை வெறுக்கவில்லை

·         முஷ்ரிகான தனது தாயை அரவணைத்துக் கொள்ள அஸ்மா ரலி அவர்களை அனுமதித்தார்கள்.
·         முஷ்ரிகான பக்கத்து வீட்டுக்காரர்களுடன் நல்லுறவாட பணித்தார்கள்.

3.    மக்கள் ஷிர்க செய்வதை எதிர்த்தார்கள் – சிலைகளை சேதப்படுத்தவோ – கேவலப் படுத்தவோ இல்லை. அவர்களது பிரச்சார காலம் முழுவதும் இந்த உத்தி கையாளப் பட்டது..
·        وَلَا تَسُبُّوا الَّذِينَ يَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ فَيَسُبُّوا اللَّهَ عَدْوًا بِغَيْرِ عِلْمٍ ۗ كَذَٰلِكَ زَيَّنَّا لِكُلِّ أُمَّةٍ عَمَلَهُمْ ثُمَّ إِلَىٰ رَبِّهِمْ مَرْجِعُهُمْ فَيُنَبِّئُهُمْ بِمَا كَانُوا يَعْمَلُونَ
·        قال القرطبي
فنهى سبحانه المؤمنين أن يسبوا أوثانهم؛ لأنه علم إذا سبوها نفر الكفار وازدادوا كفرا
 قال العلماء : حكمها باق في هذه الأمة على كل حال؛ فمتى كان الكافر في منعة وخيف أن يسب الإسلام أو النبي عليه السلام أو الله عز وجل،  فلا يحل لمسلم أن يسب صلبانهم ولا دينهم ولا كنائسهم، ولا يتعرض إلى ما يؤدي إلى ذلك؛ لأنه بمنزلة البعث على المعصية

மக்கா வெற்றியின் போது மக்கள் முஸ்லிமாகி விட்ட சூழலில் ஷிர்கிற்கு அங்கே இடமிலை என்ற நிலையில் சிலைகளை அப்புறப் படுத்தினார்கள். அப்புறப்படுத்துமாறு இஸ்லாமை தழுவிய தோழர்களுக்கு உத்ததரவிட்டார்கள்.

சிலை வணக்கத்திற்கு எதிராக உளகில் கருத்துச் சொன்ன பலரும் உப்யோகப்படுத்தியை வார்த்தைகள் நடவடிக்கைகளை ஒப்பிடும் போது பெருமானாரின் நடைமுறைகள் மிக நாசூக்கானவையாக – இந்த பாவத்திலிருந்து மக்களை மீட்க வேண்டுமே என்ற கவலையும் அக்கறையும் கொண்டதாக அமைந்திருந்ததே தவிர – ஆத்திரமும் குரோதமும் கொண்டதாக இருக்கவில்லை. மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விச்யம் இது

அண்ணல் பெருமானார் ஸல் அவர்கள் செய்த மிகப் பெரிய கிருபயினால் ஷிர்கிலிருந்து தப்பித்துக் கொண்ட நாம் அந்த நடைமுறைகளின் திசைகளை கூட திரும்பிப் பார்க்காது நடக்க தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். நமது சந்த்திகளை பாதுகாக வேண்டும்.

·         இறை நிந்தனை செய்யும் திரைப் பாடல்கள்
·         சிலை வணங்கப்படும் இடங்கள்
·         பூஜை புணஷ்காரத்திற்கான உதவிகள் – பங்களிப்புகள் – தவிர்த்துக் கொள்ள வேண்டும். தவிர்க்க இயலாத சந்தர்ப்பங்களில் அன்னதானம் போன்ற மக்களுக்கு பயன்படும் வழிகளில் செலவழிக்கலாம்.
·         வீடுகளில் உருவப்படங்களை மாட்டிவைப்பதை தவிர்க்க வேண்டும். அம்மா உஸ்தாது ஆகியோரின் படமாக இருந்தாலும்.
·         உயிருள்ள வற்றின் சிலைகளை எக்காரணத்தை கொண்டும். அன்பளிப்பு பொருட்கள் – சாதனைகளுக்கான அடையாளங்கள் – வைக்க கூடாது.
·         லாப்டிங்க் புத்தா சிலைகள் வைக்க கூடாது.
·         அம்மை நோயை மாரியாத்தா என்று கருதக் கூடாது
·         மந்திரித்தலுக்காக கோயில்களுக்கு செல்லக் கூடாது
·         ஜோஸியக்காரகள் மந்திரவாதிகளை அணுகக் கூடாது

ஞாலகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். ஷிர்க் என்ற பாவத்திற்கு மன்னிப்பே கிடையாது.

عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ مَاتَ يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا دَخَلَ النَّارَ وَقُلْتُ أَنَا مَنْ مَاتَ لَا يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا دَخَلَ الْجَنَّةَ –البخاري 1162

عَنْ أَنَسٍ يَرْفَعُهُ إِنَّ اللَّهَ يَقُولُ لِأَهْوَنِ أَهْلِ النَّارِ عَذَابًا لَوْ أَنَّ لَكَ مَا فِي الْأَرْضِ مِنْ شَيْءٍ كُنْتَ تَفْتَدِي بِهِ قَالَ نَعَمْ قَالَ فَقَدْ سَأَلْتُكَ مَا هُوَ أَهْوَنُ مِنْ هَذَا وَأَنْتَ فِي صُلْبِ آدَمَ أَنْ لَا تُشْرِكَ بِي فَأَبَيْتَ إِلَّا الشِّرْكَ–البخاري 3086

1 comment:

  1. Idhu Rombave soodana subject.idhai appadiye imamgal jummavil pesavendum.but, samudhayam otthulaippu kodukkuma? Namakku ean vambu enru odhungi nirkka solluma?

    ReplyDelete