வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, September 18, 2014

ஹாஜிகள் காணும் அதிசயங்களின் உலகு

وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَنْ طَهِّرَا بَيْتِي لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ(125)وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنْ الثَّمَرَاتِ مَنْ آمَنَ مِنْهُمْ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ قَالَ وَمَنْ كَفَرَ فَأُمَتِّعُهُ قَلِيلًا ثُمَّ أَضْطَرُّهُ إِلَى عَذَابِ النَّارِ وَبِئْسَ الْمَصِيرُ(126)

தாஜ் மஹால், பைசா நகரத்து சாய்ந்த கோபுரம், சீனப் பெருஞ்சுவர் என உலகிலுள்ள படைப்பு அதிசயங்களை காண மக்கள் பலரும் ஆசைப்பட்டு பயணமாகிறார்கள். travel to wonders of the world  

ஹஜ்ஜுக்கு செல்கிற ஹாஜிகளோ, படைத்தவன் வைத்திருக்கிற உலகின் மகா அதிசயங்கள் பல வற்றை காண்கிறார்கள்.

அல்லாஹ் அமைத்துள்ள இந்த அற்புதங்களை உணரவேண்டும்  என்ற சிந்தனை பெரும்பாலும் இன்றைய  ஹாஜிகளிடம் இருப்பதில்லை, அதனால்
ஹஜ்ஜின் கடமைகளை நிறைவேற்றுகிற அவசரத்தில் இந்த அதிசயங்களை உணர்ந்து அனுபவிக்கிற வாய்ப்பு பலருக்கும் கிடைப்பதில்லை.

ஹஜ்ஜை முடித்து திரும்புகிற ஹாஜி யாரிடமாவது நீங்கள் ஒரு சர்வதேச சமுதாயத்தின் அங்கம் என்பதை எப்படியாவது உணர்ந்தீர்களா? என்று கேட்டுப் பாருங்கள் ? அவர் முழிப்பார்.

அரபாவில் நீங்கள் அறிந்த உண்மை என்ன ? என்று கேட்டுப் பாருங்கள். குறைந்த பட்சம் தட்டுப்பாடில்லாமல் சுடு தண்ணீர் கிடைத்தது என்று சொல்ல அவருக்கு தோன்றாது.  

ஹாஜிகள் ஹஜ்ஜின் வணக்கத்தை ஒரு இயதிர தனமான உணர்வோடு முடித்துக் கொண்டு திரும்பி விடுகிறார்க்ள்.

ஆனால் فيه آيات بينات  என்று அல்லாஹ் சொல்கிறான்.

إِنَّ أَوَّلَ بَيْتٍ وُضِعَ لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكًا وَهُدًى لِلْعَالَمِينَ(96)فِيهِ آيَاتٌ بَيِّنَاتٌ مَقَامُ إِبْرَاهِيمَ وَمَنْ دَخَلَهُ كَانَ آمِنًا وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنْ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا

ஹஜ்ஜுக்கு செல்கிற போது அல்லாஹ்வின் அந்த அற்புதங்களையும் காணப்போகிறேன் என்ற சிந்தனையும் ஹாஜிகளிடம் வேண்டும்.   

அதற்கு தயாராகிற நம்மிடமும் இருக்க வேண்டும்.

ஹஜ்ஜுலுள்ள அல்லாஹ்வின் மாபெரிய அல்லாஹ்வின் அற்புதங்களை பற்றி அறிந்து கொண்டால் ஹஜ்ஜுக்கு செல்ல வேண்டும் என்ற துடிப்பு நமக்கு அதிகரிக்கும்.

முன்னரே அவற்றைப் பறறீ தெரிந்து கொள்வது இவற்றை உணரும் வாய்ப்பை தரும்.

கொண்டு போகிற சாமாண்களையும் கொண்டு வரவேண்டிய சாமாண்களையும் பற்றிய் சிந்தனை இருக்கிற அளவுக்கு ஹஜ் கடமையை பற்றிய தெளிவும் – புனித தளங்களைப் பற்றிய் விபரங்களும் இன்றைய ஹஜ் பயணிகளிடம் இல்லாமல் இருப்பது தான் அல்லாஹ்வின் அடையாளங்களை ஹாஜிகள் முழுமையாக உணரமுடியாமல் இருப்பதற்கான காரணமாகும்.

எனக்கேற்பட்ட ஒரு அதிர்ச்சியான அனுபவம் ;

இரண்டு வருடங்களுக்கு முன் தவாபுல் வதா செய்து கொண்டிருக்கிற போது அந்த இடத்தில் என்னைச் சந்தித்த ஒருவர் கேட்டார். ஹஜருல் அஸ்வத் எங்கே இருக்கிறது?  

போனது போகட்டும்.

இந்த ஆண்டு ஹஜ்ஜுக்கு செல்கிற புனித ஹாஜிகள அல்லாஹ்வின் அற்புதங்களை உணர்ந்து கொள்ள் அல்லாஹ் தவ்பீக் செய்வானாக! இனி வரும் வருடத்தில் அந்த அற்புதங்களை காண உணரும் நம்க்கு அல்லாஹ் கிருபை செய்வானாக!.

திருக்குர் ஆனின் பகரா அத்தியாத்தின் 125 , 126 வசனங்கள் புனித தளங்களில் அல்லாஹ்வின் அடையாளங்கள் சிலவற்றை நமக்கு சுட்டிக்காட்டுகின்றன

وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ

மக்கள் திரும்பத் திரும்ப வருகிற இடமாக கஃபாவை அல்லாஹ் ஆக்கியிருக்கிறான்.

   உலக அற்புதங்கள் சலிப்புத்தட்டிவிடும்  தாஜ்மஹால் ஈபில் டவர்  தொங்கும் தோட்டம்-  நயாகரா நீர்வீழ்ச்சி  எதுவும்   அதிகப்  பட்சமாக  மூன்றாவது  சலிப்புத் தட்டும்

    மக்கா சலிப்பதில்லை. முப்பது தடவை ஹஜ்செய்தவர்கள் உண்டு மீண்டும் போக ஆசைப்படுகிறார்கள் 
  
   ஹஜ்ஜை முடித்துவிட்டு ஊருக்குள் காலடி வைப்பவர் என்ன சொல்கிறார்? இன்னொரு முறை போகவேண்டும்.? கஃபாவை காணவேண்டும் என அழுகிறார்.

உஸ்மான் (ரலி) உம்ராவை முடித்து விடடு வீட்டுக்கு திரும்புவார்கள். அவர்களுடைய பொதிகள் இறக்கி கூட வைக்கப் பட்டுருக்காது. கஃபாவை காணும் ஆவல் மேலோங்க அப்படியே இரண்டாவது உம்ராவுக்காக பயணமாகியிருக்கிறார்.  

ஒரு முக்கியத்தகவல் –

கஃபாவை வலம் வருதல் உலகின் புராதானமான தொடச்சியான வணக்கமாகும்.

ومنها أنه منذ خلقه الله تعالى، ما خلا عن طائف به من إنس أو جن أو مَلَكأو غيرهم. وغيرها الكثير .والكثير من كتاب [زاد الحاج والمعتمر

இந்த ஆச்சரியமான  தொடர் சங்கிலியில் தானும் பிணைந்து கொள்ள ஒரு வாயப்புக் கிடைத்திருக்கிறது என்பதை ஹாஜி உணர வேண்டும்.

இரண்டாவது அதிசயம்   
وَأَمْنًا  பாதுகாப்பு மண்டலம்

ஆயிரக்கணக்கில் மக்கள் கூடினாலே மக்களுக்கும் உடமைகளுக்கும் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை.

இலட்சக்கணக்கான ஹரமில் மக்கள் கூடுகிறார்கள். பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் கிடையாது. இலட்சக் கணக்கானோரை ஒழுங்கு செய்கிறார்கள். அதிரும் ஸ்பீக்கர்களோ அதட்டும் குரல்களோ இல்லை.

ஹாஜி – ஹாஜி – தரீக் – தரீக் இன்னும்  சில  ஒற்றை வார்த்தைகளை  தவிர  வேறு  சொற் பிரயோகம்  இல்லை.  40 லட்சம் மக்களை கட்டுப்படுத்துகிறது அரசு.

உலகத்திலேயே கையில் ஆயுதம் வைத்திருக்காத போலீஸையும் – மிரட்டாத – கெட்ட வார்ததை பேசாத போலீஸை ஹரமில் பார்க்கலாம்.

அரசு கட்டுப்படுத்துகிறது – பாதுகாக்கிறது என்று சொல்வது கூட தவறு தவறு. அல்லாஹ் பாதுகாக்கிறான். இத்தனை இலட்சம் மக்களை பாதுகாப்பதற்கு ஏற்ற பாதுகாவல் வசதியோ ஏற்பாடுகளோ எதுவும் இன்றைய சவூதி அரசிடம் கிடையாது. அரசு தனது கடமையை செய்து விடுகிறது என்பது மட்டுமே உண்மை. ஹரமின் அமைதியை அல்லாஹ் பாதுகாக்கிறான்.

திருட்டு பயம் ஹரமில் சுத்தமாக கிடையாது. பொதுவாக மக்காவிலே மிக குறைந்த அளவில தான் திருட் வழிப்பறிக் குற்றங்கள் சமீப காலமாக தென்படுகின்றன.

எங்களது உஸ்தாது சித்தையன் கோட்டை கமாலுத்தீன் ஹஜ்ரத் தன்க்கு ஏற்பட்ட அனுபவத்தை சொன்னார்கள்.

நாங்கள் ஒரு இடத்தில் எங்களது சூட்கேஸ் ஒன்றை தவறுதலாக விட்டு விட்டோம், எங்கே வைத்தோம் என்பது தெரியவில்லை. பல நாட்களுக்கு பிறகு ஒரு தெரு வழியாக நாங்கள் சென்ற போது நாங்கள் விட்ட இடத்தில் அந்த சூட்கேஸ் அப்படியே இருந்தது,

ومن دخله كان آمنا

உள்ளே நுழைந்தவர் அனைவருக்கும் நிம்மதியான அடைக்கலம் உண்டு. காலம் காலமாய தந்தையை கொன்றைவரை நேரில் பார்த்தால் கூட அவரை பாதிப்புக்குள்ளானவர் ஹரமில் வைத்து ஒன்றும்  செய்யமாட்டார்.

அதே போல மக்கா இதுவரை அச்சுறுத்தலுக்கு  ஆளானதில்லை.

பாதுகாப்பு மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும். செடி கொடிகளுக்கும் உண்டு.

  عن ابن عباس رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم أنه قال: حرم الله مكة فلم تحل لأحد قبلي ولا لأحد بعدي أحلت لي ساعة من نهار، لا يختلى خلاها ولا يعضد شجرها ولا ينفر صيدها ولا تلتقط لقطتها إلا لمعرف، فقال العباس رضي الله عنه: إلا الإذخر لصاغتنا وقبورنا. فقال: إلا  الإذخر.- البخاري

அறிஞர்கள் கூறுகிறார்கள் பாதுகாப்பு உடலுக்கு ம்ட்டுமல்ல  உள்ளத்துக்கும் 
 அங்கு பெரும்பாலும் தவறான சிந்தனைகள்எழுவதில்லை. 
  குடும்பத்தை பிரிந்து செல்லும் ஆண்கள்அன்னியப் பெண்களை அருகருகே சந்தித்தாலும்சிந்த
னை கெடுவதில்லை.

ஒவ்வொரு ஹாஜியும் இந்த அற்புதத்தை அனுபவிக்கிறார். ஆனால் பெரும்பாலும் அதை அவர் உணர்வதில்லை.

அற்புதம் 3
وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى

هو الحجر الذي قام عليه خليل الله إبراهيم عند بناء الكعبة
وقد كان من معجزات إبراهيم عليه السلام أن صار الحجر تحت قدميه رطبا فغاصت فيه قدماه وقد بقي أثر قدميه ظاهرا فيه من ذلك العصر إلى يومنا وان تغير عن هيئته الأصلية بمسح الناس بأيديهم قبل وضع الحجر في المقصورة الزجاجية
قال ابن كثير: " وكانت آثار قدميه ظاهرة فيه ولم يزل هذا معروفا تعرفه العرب في جاهليتها، وقد أدرك المسلمون ذلك فيه أيضا، كما قال أنس بن مالك: " رأيت المقام فيه أصابعه وأخمص قدميه. غير أنه أذهبه مسح الناس بأيديهم.

واستمر الحجر كما هو في مكانه ملاصقا للكعبة حتى عهد رسول الله في يوم الفتح حيث أخره عن موضعه عندما نزلت آية «واتخذوا من مقام إبراهيم مصلى» إلى مكانه الحالي حتى لا يعوق المصلون خلفه الطائفين

وفي عهد عمر بن الخطاب وقع سيل شديد سمى بـ (سيل أم نهشل) وجرف حجر المقام من مكانه وذهب به بعيدا.. جاء عمر فزعا من المدينة وجمع الصحابة وسألهم: « أناشدكم أيكم يعرف موقع هذا المقام في عهد رسول الله؟» فقام رجل وقال: أنا يا عمر.. لقد أعددت لهذا الأمر عدته ..

وأعاد المقام إلى مكانه، وكان ذلك في رمضان عام 17هـ فهو في موقعه إلى اليوم.

ثم بعد ذلك عمل للمقام تابوتا يوضع فيه، وتطور الوضع إلى بناء مقصورة له تنتهي مؤخرتها بمظلة متصلة بالمقصورة ليصلي الناس تحتها ركعتي الطواف، وكأنت أول المقصورة أنشأت عام 810 هـ،

 وكان يتم بعد ذلك ترميمها من قبل السلاطين وغيرهم إلى أن أزيلت هذه المقصورة في عهد فيصل بن عبد العزيز واستعيض عنها بالصرح البلوري و الغطاء النحاسي.

நான்காயிரம் வருடத்திற்கு மேலாக இபுறாகீம் நபி பாத அடி பதிந்த கல் அங்கேயே இருக்கிறது.

பெருமானாரின் காலத்தில் தொழுகிறவர்களின் வசதிக்காக தள்ளி வைக்கப்பட்டது, உமர் ரலி காலத்திற்குப் பிறகு இப்போதிருக்கிற இடத்திலேயே இருக்கிறது.

பிறகு அது பெட்டியில் வைக்கப்பட்டது. பின்னர் 810 ல் அதற்கு மேலே ஒரு கூறை கட்டி அதில் தொழுக வசதி செய்யப்பட்டிருந்தது. மன்னர்கள் பலரும் அதை பளிங்குக் கற்களாக அழகு படுத்தி வந்தனர். சவூதி மன்னர் பைசலின் காலத்தில் கூறை அகற்றப் பட்டு இப்போதிருக்கிற கூண்டு வடிவத்தில் வைக்கப்பட்டது.

ஹிஜ்ரி 17 ல் இருந்த இடத்திலேயே இப்போதும் அந்தக் கல் இருக்கிறது.

அற்புதம் 4

وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَنْ طَهِّرَا بَيْتِي لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ(125
கஃபாவின் தூய்மை பாதுகாக்கப் பட்டது.
கஃபாவை சுற்றி சுற்றி மக்கள் வருகிறார்கள் ஆனால் யாரும் கஃபாவை வணங்குவதில்லை.
கஃபாவை சுற்றிலும் ஏன் கஃபாவிற்குள் கூட சிலைகள் வைக்கப் பட்டிருந்தது, அப்போதும் கூட கஃபா வணங்கப் படவில்லை.
கஃபாவுககு தலை சாய்க்கவோ – கஃபாவுக்கு பூஜை மாலை மரியாதை செய்யப்படவோ இல்லை.
இன்றளவும் ஹாஜி உணர வேண்டிய அற்புதம் . கஃபாவை கண்டு அழுகிறார்கள். அதன் திரையைப் பிடித்து அழுகிறார்கள். அதன் வாசலுக்கு கீழ் நெஞ்சையும் முகத்தையும் புதைக்கிறார்கள்.
ஆனால் ஒருவர் கூட கஃபாவை தெயவமாக கருதுவதில்லை , வணங்குவதில்லை.

அது கியாமத் நாள் வரை பரிசுத்தமாகவே இருக்கும்.


அற்புதம் 4
وَارْزُقْ أَهْلَهُ مِنْ الثَّمَرَاتِ مَنْ آمَنَ مِنْهُمْ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ
இபுறாகீம் நபியின் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்ட இறைவன் ஹஜ்ஜில் கூடுகிற இலட்சோப இலட்சம் மக்களுக்கு போதிய தேவையான உணவை கொடுக்கிறான்.
ஒவ்வொரு நாட்டுக்காரருக்கும் அவருக்கு தேவையான உணவு கிடைக்கிறது,
·         தமிழர்களுக்கு ரசம்
·         மலாய் காராகளுக்கு நாசிலாமா
·         சீனர்களுக்கான நூடுல்ஸ்
·         ஐரோப்பியர்களுக்கான பிரட் வகையராக்கள்.
எதற்கும் பஞ்சமில்லை


மக்காவின் பரக்கத் கணக்கில் அடங்காத்து. يجبي إليه ثمرات كل شيئ

ثمرات என்ற வார்த்தைக்கு பழங்கள் என்று மட்டும் அர்த்தமல்ல . பலன்கள் என்றும் அர்த்தமுண்டு. பலன்கள் என்றால் தயாரிப்புக்கள் என்றும் பொருள் வரும். உலகில் தயாராகும் எல்லா பொருட்களும் அங்கு கிடைக்கும் என்பது இதன் கருத்து என முப்தீ ஷ்பீ சாஹிப் மஆரிபுல் குர்ஆனில் கூறுகிறார்.

இன்றைய உண்மை அப்படித்தான் இருக்கிறது.

இதுவரை ஹரமில்         உணவு  உறைவிடம்  போக்குவரத்து வசதிகள்-தொலைத் தொடர்பு வசதிகள் என அனைத்திலும் தட்டுப்பாடு அறியப்பட்ட்தில்லை= செல்போன் சிகனலில்கூட பஞ்சமில்லை.

அற்புதம் 5 நல்வழிப்படுத்தும் தளம்  وَهُدًى لِلْعَالَمِينَ


ஆலு இமரான் அத்தியாயத்தின் 96 வது வசனம் இன்னும் ஒரு அற்புத்தை சொல்லிக் காட்டுகிறது.

إِنَّ أَوَّلَ بَيْتٍ وُضِعَ لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكًا وَهُدًى لِلْعَالَمِينَ(96

·         மக்காவிற்கு சென்றூ திரும்ம்பிய பலர் நேர்வழி பெற்றுவாழும் ஏராள அனுப்வங்கள் உண்டு
·         மால்க்கம் எக்ஸ் – அமெரிக்காவின் கருப்பின மக்களின்உரிமைப் போராளி – இஸ்லாமைத் தழுவினார். மக்காவிற்கு சென்றார் வெள்ளையர்கள் என்றாலே வெறுத்த அவர் ஹஜ்ஜில் மனம் மாறினார்.
“ நான் மக்காவில்வெள்ளையர்களைப் பார்த்த போது அவர்கள் மீதிருந்தவெறுப்பு காணாமல் போயிருந்த்து. என  அவருடைய நூலில் கூறுகிறார்.


இதை தவிர இன்னும் பல உண்டு.

பார்வையே வணக்கமாகும் அதிசயம்

جعل الله النظر إلى الكعبة عبادة ولو كان بغير تلفُّظ بذكر أو تأمل بفكر
فقد قال النبى{ إِنَّ الله يُنْزِلُ في كُلِّ يَوْمٍ ولَيْلَةٍ عشرينَ ومئة رحمةٍ يُنزلُ على هذا البيتِ ستونَ للطّائِفينَ، وأَرْبَعُونَ للمصلِّينَ، وعشرونَ للنَّاظِرِينَ } عن ابن عباس رواه الطبراني في الكبير والأوسط
மதாப்
கஃபதுல்லாஹ்வின் இன்னொரு அதிசயம் – மதாப் – தவாபு செய்யும் தளம். அதன் கொள்ளலவு கற்பனைக்கு அப்பாற்பட்டது.

ஒரு மணி நேரத்தில் 50 ஆயிரம் பேர் தவாபு செய்யலாம் என அரச கண்க்கு சொலகிறது, ஆனால் மார்க்க அறிஞர்கள் சொல்கிறார்கள். மதாபின் கொள்ளலவு அல்லாஹ்வுக்கே வெளிச்சம்.

من خصائص البيت أن المطاف حوله يتسع للطائفين مهما كان العدد، فعلى الحاج أن يمشي بالسكينة ولا يزاحم ولايؤذي أحداً فى طوافه أو سعيه بلسانه أو يده أو بأي جارحة.
பிரார்த்தனைகள் அதிகமாக அங்கீகரிக்கப்படும் தளங்களின் கூடம்.

 
قدّس الله هذا المكان وما حوله، وجعل أبواب السماء مفتوحة لإجابة الدعاء، سواء عند الحجر الأسعد، أو عند الركن اليمانى، أو عند الميزاب، أو عند الملتزم، أو حجْر إسماعيل، أو عند زمزم، أو عند مقام إبراهيم عليه السلام.
فعلى الحاج أن يتأدب فى هذه الأمَاكن ولا يدعو بإثم ولا بقطيعة رحم فقد قال النبى{ الكعبة محفوفة بسبعين ألفٍ من الملائكة يستغفرون الله لمن طاف بها ويصلون عليه } أخرجه من ظهيره فى الجامع اللطيف.

இது போல ஹஜ்ரருல் அஸ்வத் ஜம் ஜம் என மினா அரபா முஸ்தலிபா என ஏராளமான அதிசயங்கள ஹாஜி காண்கிறார். .

இவற்றின் அற்புத தன்மைகளை இறைவெளிப்ப்பாடுகளை அவர் உணர்கிறாரா ? என்பது தான் கேள்விக்குரியாக இருக்கிறது.

அல்லாஹ் நமக்கும் அவர்களுக்கும் இவற்றை உணரவும் காணவும் விரைவில் தவ்பீக செய்தருள்வானாக!

இன்னும் நிறைய இருக்கிறது. இன்ஷா அல்லாஹ் வாய்ப்பிருந்தால் இன்னொரு சமயம் பார்க்கலாம். 
  

5 comments: