வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, September 25, 2014

ஈமான் மிளிரும் அற்புத நாட்கள்

அற்புதமான் நாட்கள்

துல்ஹஜ் மாதம் வந்து விட்டது. முஸ்லிம் மஹல்லாக்கள் தோறும் குர்பானி பிராணிகள் அழகு படுத்துகின்றன.

ஹஜ் குர்பானி போன்ற இஸ்லாமிய கலாச்சாரம் இந்த மாதத்தில் சிறப்பாக நிலை நாட்டப்படுகிறது

அது மட்டுமல்ல அல்லாஹ்வின் சட்டங்களுக்கு கீழ் பணிதல் – என்ற ஈமானிய குணமும் உணர்வும் கூர் தீட்டப்படுகிற மாதமாகவும் இது திகழ்கிறது.

இந்த கால கட்டத்தில் வழக்கமாக வாழ்கிற வாழ்வும், வழக்கமாக நிறைவேற்றப்படுகிற வணக்கங்களும் சிறு மாற்றங்களுக்கும் உட்படுத்தப் பட்டு ஈமானின் அடிப்படை தத்துவத்திற்கு புத்துணர்வூட்டுகிறது  

அந்த விழிப்புணர்வோடு இந்த மாதத்தை நாம் எதிர் கொள்ள வேண்டும்.  

இந்த மாத்தின் முதல் பதிமூன்று நாட்கள் அதிக மரியாதைக்குரியவை.

அல்லாஹ் துல்ஹஜ்ஜின் முதல் 10 நாட்களின் இரவுகளின் மீதும் 10 ம் நாளின் பஜ்ரு நேரத்தின் மீதும் மொத்தமாக 10 நாட்கள் மீதும் அதை தொடர்ந்து வரக்கூடிய அய்யாமுத் தஷ்ரீக் என்ற மூன்று நாட்களின் மீது சத்தியமிடுகிறான்,

وَالْفَجْرِ(1)وَلَيَالٍ عَشْرٍ(2)وَالشَّفْعِ وَالْوَتْرِ(3)وَاللَّيْلِ إِذَا يَسْرِ(4)هَلْ فِي ذَلِكَ قَسَمٌ لِذِي حِجْرٍ(5

وعن مسروق ومحمد بن كعب المراد به فجر يوم النحر خاصة وهو خاتمه الليالي العشر

والليالي العشر المراد بها عشر ذي الحجة كما قاله ابن عباس

وَالشَّفْعِ என்பது மொத்தமாக துல்ஹஜ்ஜின் 10 நாட்களையும்
وَالْوَتْرِ என்பது அதை தொடர்ந்து வருகிற மூன்று நாட்களையும் குறிக்கிறது என முபஸ்ஸிர்கள் கூறுகிறார்கள்.
القرطبي : وقال الضحاك : الشفع: عشر ذي الحجة, والوتر: أيام منى الثلاثة. وهو قول عطاء

இவ்வாறு அல்லாஹ் சத்தியமிட்டதில் பல் வேறு சிறப்புக்கள் அடங்கியிருக்கிறது.
·         இந்நாட்களின் நிறைவேற்றப்படுகிற வணக்கங்கள் அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமானவை

عَنْ ابْنِ عَبَّاسٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ مَا الْعَمَلُ فِي أَيَّامٍ أَفْضَلَ مِنْهَا فِي هَذِهِ قَالُوا وَلَا الْجِهَادُ قَالَ وَلَا الْجِهَادُ إِلَّا رَجُلٌ خَرَجَ يُخَاطِرُ بِنَفْسِهِ وَمَالِهِ فَلَمْ يَرْجِعْ بِشَيْءٍ" البخاري 916
     عن ابن عمر أن النبي صلى الله عليه وسلم قال: (ما من أيام أعظم عند الله ولا أحب إليه من العمل فيهن من هذه الأيام العشر، فأكثروا فيهن من التهليل والتكبير والتحميد)،   أحمد

·       இரண்டாவதாக  முக்கிய கவனத்திற்குரிய செய்தி

துல்ஹஜ்ஜின் 10 ம்  நாளுக்கு இரவு இல்லை. 10 ம் நாள் பஜ்ரிலிருந்து தான் ஆரம்பிக்கிறது. அதன் காரணமாகவே தனியாக அன்றைய பஜ்ரின் மீது அல்லாஹ் சத்தியமிடுகிறான்.

وروى ابن جريج عن عطاء عن ابن عباس قال: "والفجر": يريد صبيحة يوم النحر; لأن اللّه تعالى جل ثناؤه جعل لكل يوم ليلة قبله; إلا يوم النحر لم يجعل له ليلة قبله ولا ليلة بعده; لأن يوم عرفة له ليلتان: ليلة قبله وليلة بعده, فمن أدرك الموقف ليلة بعد عرفة, فقد أدرك الحج إلى طلوع الفجر, فجر يوم النحر.

ஏன் இரவு இல்லை?

துல்ஹஜ் 9 ம் நாளுக்கு சட்டரீதியாக இரண்டு இரவுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

பல்லாயிரக்கணக்கானோர் ஹஜ் கடமையை நிறைவேற்ற வருகிறார்கள். ஹஜ்ஜின் பிரதான அம்சம் துல்ஹஜ் 9ம் நாள் பகலில் அரபாவில் தங்குவது.

 قال النبي صل الله عليه وسلم : الحج العرفة

துல்ஹஜ் 9ம் நாளின் பகலில் சிறு பொழுதாவது அரபாவில் தங்கியிருந்தால் தான் ஹஜ் நிறைவேறும். இல்லை ஹஜ் பாதிலாகிவிடும். பிறகு கழா செய்வது கடமையாகும்.

அதனால் தான் உடல் ஓரளவுக்கு உடல் நலமில்லாதவர்களை ஆம்புலன்ஸில் – மிகவும் முடியாதவர்களை ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸில் கொண்டு வந்து சிறிது நேரம் சுற்றற வைத்து கடமையை நிறைவேற்றச் செய்துவிடுகிறது அரசாங்கம்.

பல்லாயிரம் பேர் கூடுகிற இடத்தில் ஏற்படுகிற நெருக்கடி காரணமாக ஒருவரால் பகலில் வந்து சேரமுடியாமல் போகலாம்.

அதற்காக அல்லாஹ் கொடுத்த வசதி.
மக்களின் வழக்கத்தை மாற்றி அல்லாஹ் உத்தரவிடுகிறான்.
அடுத்த இரவும் அரபாவின் இரவாகவே கணக்கிடப்படும். எனவே பத்தாம் நாளின் பஜ்ருக்கு முன்னதாக அரபாவிற்கு வந்து சேர்ந்து விட்டால் ஹஜ் கிடைத்து விடும்.

عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَعْمَرَ أَنَّ نَاسًا مِنْ أَهْلِ نَجْدٍ أَتَوْا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ بِعَرَفَةَ فَسَأَلُوهُ فَأَمَرَ مُنَادِيًا فَنَادَى الْحَجُّ عَرَفَةُ مَنْ جَاءَ لَيْلَةَ جَمْعٍ قَبْلَ طُلُوعِ الْفَجْرِ فَقَدْ أَدْرَكَ الْحَجَّ، أَيَّامُ مِنًى ثَلَاثَةٌ فَمَنْ تَعَجَّلَ فِي يَوْمَيْنِ فَلَا إِثْمَ عَلَيْهِ وَمَنْ تَأَخَّرَ فَلَا إِثْمَ عَلَيْهِ
قَالَ أَبُو عِيسَى وَالْعَمَلُ عَلَى حَدِيثِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَعْمَرَ عِنْدَ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَغَيْرِهِمْ أَنَّهُ مَنْ لَمْ يَقِفْ بِعَرَفَاتٍ قَبْلَ طُلُوعِ الْفَجْرِ فَقَدْ فَاتَهُ الْحَجُّ وَلَا يُجْزِئُ عَنْهُ إِنْ جَاءَ بَعْدَ طُلُوعِ الْفَجْرِ وَيَجْعَلُهَا عُمْرَةً وَعَلَيْهِ الْحَجُّ مِنْ قَابِلٍ وَهُوَ قَوْلُ الثَّوْرِيِّ وَالشَّافِعِيِّ وَأَحْمَدَ وَإِسْحَقَ   - الترمذي

அல்லாஹ்வின் இந்த் சலுகை எத்தகைய உன்னதமானது. ?
இன்றைய வசதி வாய்ப்புக்களின் சூழ்நிலையிலே கூட போக்கு வரத்து நெருக்கடிகளால் கடும் தாமதம் ஏற்படுகிறது.
கடந்த ஆண்டு மதீனாவிலிருந்து அஸருக்குப் பிறகு கிளம்பிய நாங்கள் மினாவிற்கு அருகில் இருக்கிற அஜீஜியா வந்து சேர தஹ்ஜ்ஜுதுடைய நேரமாகியது.  சாதாரணமாக நான்கு மணி நேரம் பிடிக்கிற பயணம் அது.  
அன்றைய பாய்மரக் கப்பலிலிம் ஒட்டகத்திலும் பயணம் செய்து வருகிறவர்கள் இந்த
இடத்தை இன்ன நேரத்தில் அடைவோம் எனபதற்கு என்ன நிச்சயம் இருநதது?
இதை எல்லாம் கருத்தில் கொண்டு தான் பழங்காலத்தில் ஹஜ் பயணிகள் சில மாதங்களுக்கு முன்பாகவே மக்காவில் குழுமிவிடுகிற பழக்கம் இருந்தது.

நெருக்கடியான சூழ்நிலையில் சிக்கிக் கொள்வோருக்காக அல்லாஹ் கொடுத்த அற்புதமான சலுகை பல வகையிலும் மக்களுக்கு பயனளிக்க கூடியது.


சில வருடங்களுக்கு முன் ரியாத்தில் ஒரு பெரியவர் துல் ஹஜ் 9 ம் நாளின் மஃரிபு நேரத்தில் நோன்பை திறந்த பிறகு தொலைக்காட்சியில் ஹாஜிகள் அரபாவிலிருந்து கிளம்புவதை பார்த்துக் கொண்டிருந்தார். அவரது கண்களில் கண்ணீர் வழிந்தோடியது, தந்தையின் அழுகைகான காரணத்தை பிள்ளைகள் கேட்டனர். இந்த வருடம் ஹஜ் முடிந்து விட்டது. நான் அங்கு இல்லையே ! அடுத்த வருடம் நான் இருப்பேனோ தெரியவில்லையே என அங்கலாய்த்தார், தந்ததையின் ஆசையை நிறைவேற்ற திட்டமிட்ட மகன்கள் விரைந்து செயல் பட்டனர். உடனடியாக ஒரு காரில் தந்தையை ஏற்றிக் கொண்டு கிளம்பினர். ஆயிரம் கிலோ மீட்டர்களை வேகம் விழுங்கியது. இரவு முடிவதற்குள்ளாக இஹ்ராமுடன் அரபா வந்து சேர்ந்தனர். தந்தையின் ஆசையை நிறைவேற்றினர். அல்லாஹ் கொடுத்த சலுகையால இந்த ஆசை நிறைவேறிற்று.

இந்த சலுகையை தாண்டி இங்கே கவனிக்க வேண்டியது
கால நேர நிர்ணயித்தில் அல்லாஹ் தனது சக்தியை மக்களுக்கு புரிய வைக்கிறான், இங்கு அவன் வைத்து தான் சட்டம். உங்களுடைய மரபுகள் அல்ல.
நாம் அவனிட்ட வழி நடக்க கடமைப் பட்டவர்கள் . நமது பழக்க வழக்கங்கள் அவனது முன்னிலையில் பயனற்றவை.

எனக்கு பழக்கமில்லே என்றும் இதுதான் எங்களுடைய பழக்கம் என்றும் மக்களிடம் தனது பெறுமையை காட்ட முயல்கிற மனிதனை அல்லாஹ் என வழக்கு என துல்ஹஜ் 10 நாள் பஜ்ரில் உணர்த்துகிறான்.
அரபாவில் கூடியிருககிற ஹாஜி அன்றைய லுஹரையும் அஸரையும் இரண்டு இரண்டு ரகாத்துகளாக சுருக்கி லுஹருடைய நேரத்தில் சேர்த்து தொழுவார். அத்தோடு மஃரிபு நேரம் வந்த பிறகு அங்கு தொழுக நிற்காமல் அவசர அவசரமாக மூட்டை முடிச்சுக்களை எடுத்துக் கொண்டு முஸ்தலிபாவுக்கு நகருவார். ஓடுவார்.
காலமெல்லாம் வக்து வந்த வுடன் மஃரிபை தொழுது வந்த மனிதர் – நேரம் தவறிவிடுமே என்று களத்து மேட்டிலும் கல் திட்டிலும் பிளாட்பாரத்திலும் தெரு முனையிலும் பூங்காவின் மூளையிலும் நின்று பதறிப் பதறி மஃரிபை தொழுது கொண்டிருந்த மனிதருக்கு அன்றைய மஃரிபின் நேரம் வாய்ப் பிருந்தும் தொழுகை இல்லாமல் கடக்கிறது.

பழக்க வழக்கத்திலிருந்து விடுபட்டு அல்லாஹ்வின் உத்தரவுக்கு முழுமையாக கட்டுப்படுகிற அடிமைத்தனம் இதில் உறுதிப்படுகிறது. ஈமான் ஒரு புதிய பாடத்தைப் பெறுகிறது.

(அல்லாமா அபுல் ஹஸ்ன் அலி நத்வி எழுதி சென்னை ஜமாலிய்யா பேராசிரியர்  வேதாளை ஜலாலுத்தீன் பாகவி மொழி பெயர்த்த ஹஜ் என்ற நூலின் ஒரு பகுதியை நான் தமிழ் செம்மைப் படுத்தினேன். அதில் ஒரு பாரா இப்படி வருகிறது.)
ஹஜ் பற்றி அலிமியானின் ஆன்மீக தேடல் அன்னாரது அரபுப் புலமையில் துள்ளிக் குதித்து ஓடுகிறது. அலிமியான் (ரஹ்) கூறுகிறார்.

ஹாஜி மினாவில் இறங்குவார், அரபாவுக்கு புறப்படு! என்றதும் புறப்பட்டு விடுவார். போகிற வழியில் முஜ்தலிபாவில் இறங்காமல் அரபாவிற்கு செல்வார். அங்கு தங்கியிருக்கிற போது அந்தப் பகல் பொழுதை பிரார்த்தனையிலேயே கழிப்பார். சூரியன் மறையும் போது ஒய்வுக்காகவும் உறக்கத்திற்காகவும் இன்னும் கொஞ்ச நேரம் இங்கேயே தங்கலாமே என்று அவருடைய உள்ளம் கெஞ்சும். ஆனால் அதற்கவர் மசியமாட்டார். முஜ்தலிபாவுக்கு புறப்படும்படு! என அவருக்கு உத்தரவிடப்படும். காலமெல்லாம் தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுது வந்தவரிடம் அரபாவில் மஃரிபின் நேரத்தில் தொழுகையை விட்டு விடும்படி கூறப்படும், அதற்கவர் கட்டுப்படுவார். ஏனெனில் அவர் அவருடை இறைவனின் அடிமையே தவிர தொழுகைக்கும் பழக்கத்திற்கும் அடிமையல்ல. எனவே முஜ்தலிபாவிற்கு சென்ற பிறகே அவர் மஃரிபை இஷாவுடன் சேர்த்து  தொழுவார். முஜ்தலிபாவில் சற்று அதிகமாக தங்குவது அவருக்கு பிடித்திருக்கலாம். அதற்கு அவர் அனுமதிக்கப்படமாட்டார். மினாவுக்கு புறப்பட உத்தரவிடப்படும்.”

இந்த ஆண்டு மக்காவில் அரபா நாள் வெள்ளிக்கிழமை வருகிறது. அரபாவில் ஜும் ஆ தொழுகை கிடையாது. காலமெல்லாம் ஜும் ஆவை தொழுத மனிதர் ஹஜ்ஜுடைய பயணத்தில் ஜும் ஆவை தெரிந்தே விடுவார்.

காரணம் அவர் அல்லாஹ்விற்கு கட்டுப்படுகிற அடிமையே தவிர பழக்க வழக்கங்களுக்கு அடிமையானவர் அல்ல.
ஈமான் எத்தகைய புனிதக் கூடத்தில் எவ்வாறு புடம் போடப்படுகிறது பாருங்கள்?

துல் ஹஜ் 10 ம் நாளுக்கு அடுத்து வருகிற இரவும் 11 12 ம நாட்களுக்கு அடுத்து வருகிற இரவுகளும் சட்ட ரீதியாக முந்தைய பகலுடன் தொடர்பு படுத்தப் பட்டுள்ளன, அதனால் அந்த நாட்களில் பகல் பொழுதுகளில் நிறைவேற்ற வேண்டிய கல்லெறியும் கடமையை அடுத்த இரவில் நிறைவேற்ற அனுமதி உண்டு.
துல் ஹஜ் மாததின் முதல் 13 நாட்களுக்குள் உள்ள விஷேச அம்சங்களில் இவை எல்லாம் அடங்கும்,

இந்த நாட்களின் அற்புத அம்சத்திற்கான மற்றொரு காரணத்தை ஹாபிழ் இப்னு ஹஜருல் அஸ்கலானி பத்ஹுல் பாரியில் கூறுகிறார்.  

இந்நாட்கள் தான் அனைத்து வணக்கங்களும் சங்கமிக்கும் நாட்கள். தொழுகை நோன்பு  ஹஜ் குர்பானி தக்பீர்.

والذي يظهر أن السبب في امتياز عشر ذي الحجة لمكان اجتماع أمهات العبادة فيه , وهي الصلاة والصيام والصدقة والحج , ولا يتأتى ذلك في غيره

அரபா நாளில் நோன்பும் ஹஜ்ஜும் சங்கமிக்கிறது.
ஹாஜிகள் ஹஜ்ஜின் பிரதான கடமையை நிறைவேற்றுகிறார்கள். அல்லாதோர் நோன்பு நேற்கிறார்கள்.

அரபா நோன்பின் சிறப்பு

عَنْ أَبِي قَتَادَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ صِيَامُ يَوْمِ عَرَفَةَ إِنِّي أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ وَالسَّنَةَ الَّتِي بَعْدَهُ قَالَ وَفِي الْبَاب عَنْ أَبِي سَعِيدٍ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي قَتَادَةَ حَدِيثٌ حَسَنٌ وَقْدِ اسْتَحَبَّ أَهْلُ الْعِلْمِ صِيَامَ يَوْمِ عَرَفَةَ إِلَّا بِعَرَفَةَ

ஹாஜிகள் அரபா அன்று லுஹ்ரையும் அசரையும் சேர்த்து தொழ உத்தரவிடப்பட்டிருப்பதும். நோன்பு வைக்க கூடாது என உத்தரவிடப்பட்டிருப்பதும் அல்லாஹ்விடம் மன்றாடுவதில் அக்கறை செலுத்த வேண்டும் என்பதற்காகவே!

மதியம் முதல் மஃரிபு வரை வெட்ட வெளியில் நின்று கொண்டு பிரார்த்தனை செய்வது முஸ்தஹப்பு.   
9 ம் நாள் இரவில் முஸ்தலிபாவில் இரவு தங்குதல் எனும் பணிவும் பக்தியும் மிக்க வணக்கம் அரங்கேறுகிறது.
வானமே கூறையாக பூமியே கட்டிலாக கபனாடையின் கோலத்தில் ஒரு இராத்தங்குதல் நடக்கிறது. அரசனிலிருந்து ஆண்டி வரை அந்த மைதானத்தின் தரையில் நடை பாதையில் சாக்கடையின் ஓரத்தில் தொழுது உறங்கி திக்ரு செய்து கழிக்கிறார்கள்.

அல்லாஹ் அந்த மக்களின் சகல தவறுகளுக்கும் பெறுப்பேற்றுக் கொள்கிறான். அவர்கள் பூமியில் புதிதாக பிறக்கிறார்கள்.
10 ம் நாளில் சைத்தானை கல்லெறிவதும் குர்பானியும் சங்கமிக்கிறது. இத்தனையும் தல்பியாவுடனும் தக்பீருடனும் அரங்கேறுகிறது.

மினாவில் ஹாஜிகள் 10 ம் நாளன்று சைத்தானை கடைசி ஜம்ராவில் கல்லெறிந்து விட்டு குர்பானி கொடுக்கிறார்கள். 11 12 13 ஆகிய நாட்களில் மூன்று ஜம்ராக்களிலும் கல்லெறிகிறார்கள்.

ஹஜ்ஜுக்கு செல்லாதவர்கள் சைத்தானை கல்லெறியாவிட்டாலும் ஹாஜி இஹ்ராமில் இருப்பது போல முடி நகம் வெட்டிக்கொள்ளாமல் இருந்து குர்பானி கொடுக்கிறார்கள்.

குர்பானி கொடுக்க நினைப்பவர்கள் துல் ஹஜ் பிறை தெரிந்தவுடன் முடி நகம் வெட்டிக் கொள்ளக் கூடாது. அது சுன்னத்து.

·         عَنْ أُمِّ سَلَمَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ رَأَى هِلَالَ ذِي الْحِجَّةِ فَأَرَادَ أَنْ يُضَحِّيَ فَلَا يَأْخُذْ مِنْ شَعْرِهِ وَلَا مِنْ أَظْفَارِهِ حَتَّى يُضَحِّيَ -  نسائي

குர்பானி வணக்க வழிபாடுகளில் அதீத சிறப்பு வாய்ந்தது.

மக்களில் சிலர் குர்பானி தேவையா?  என யோசிக்கின்றனர், அந்த காசை குமர்களின் திருமணத்திற்கு கொடுக்கலாமே என்று கருதுகின்றனர்.
ஒருவர் இரண்டு நாட்களுக்கு முன் “அப்படிச் செய்யலாமா ஹஜ்ரத் எனக் கேட்டார். குர்பானி ஏன் என சஹாபாக்கள் கேட்ட போது உங்களது தந்தை இபுறாகீமின் சுன்னத்து என பெருமானார் (ஸல்) சொன்னார்கள் அதை அவருக்கு நினைவூட்டினேன். இபுறாகீம் நபின் குர்பானி எத்தகைய மகத்தானது என நினைத்துப் பாருங்கள். ஒன்றல்ல பல ஆடுகள் மாடுகள் ஒட்டகைகளை  கொடுப்பீர்கள். பெருமானார் (ஸல்) அவர்கள் அப்படித்தான் பல ஆடுகளை ஒட்டகைகளை குர்பானி கொடுத்தார்கள்  என்று நான் சொன்னேன். நான் இப்படி யோசிக்க தவறிவிட்டேன் ஹஜ்ரத் என்று அவர் கூறினார்.

உங்களது குர்பானி பிராணியின் இரத்தம் தரையை தொடுவதற்குள் உங்களுக்கான கூலி உறுதிப்படுகிறது,
عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ قَالَ قَالَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا رَسُولَ اللَّهِ مَا هَذِهِ الْأَضَاحِيُّ قَالَ سُنَّةُ أَبِيكُمْ إِبْرَاهِيمَ قَالُوا فَمَا لَنَا فِيهَا يَا رَسُولَ اللَّهِ قَالَ بِكُلِّ شَعَرَةٍ حَسَنَةٌ قَالُوا فَالصُّوفُ يَا رَسُولَ اللَّهِ قَالَ بِكُلِّ شَعَرَةٍ مِنْ الصُّوفِ حَسَنَةٌ إبن ماجة –

عن عائشة أن رسول الله صلى اللهم عليه وسلم قال ما عمل آدمي من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم إنها لتأتي يوم القيامة بقرونها وأشعارها وأظلافها وأن الدم ليقع من الله بمكان قبل أن يقع من الأرض فطيبوا بها نفسا-  ترمذي


என்ன தத்துவார்த்தமான அற்புதமான வாழ்வியல் கட்டத்தை ஒரு முஃமின் கடந்து வருகிறார்?

அல்லாஹ்வின் கட்டளைப் படியான ஒரு வாழ்க்கையில் இடையூறு செய்ய வந்த சைத்தானை விரட்டிய இபுறாகீம் அலை அவர்களின் ஈமானிய வாழ்வின் தடத்தில் ஹாஜி தானும் ஒரு முறை வாழ்ந்து பார்க்கிறார்.    

மற்ற முஃமின்கள் முடி நகம் வெட்டாமல் இருந்து ஹாஜியின் அந்த ராஜபாட்டையில் மானசீகமாக கொஞ் தூரம் போய் இபுறாகீம் நபியின் முன்னுதாரணத்தை ஈரப்படுத்திக் கொள்கிறார்கள்.

குர்பானிக்கான வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை. ஆனால் தக்பீர் உலகில் உள்ள  எல்லா முஸ்லிம்களையும் ஒரு முகப்படுத்தி ஏகத்துவத்தை - அல்லாஹ்வின் பெருமையை எடுத்தோத வைக்கிறது.

  பிறை 9 ன்பஜ்ரு முதல் 13ன் அஸர்வரை ஜமாத்தாக – தனியாக தொழுகிற அதாவாக கழாவாக தொழும் ஆண்கள் பெண்கள் அனைவரும் பர்ளு தொழுகைக்குப் பின் தக்பீர் சொல்ல வேண்டு,

الشافعية قالوا: التكبير سنة بعد الصلاة المفروضة، سواء صليت جماعة أو لا، وسواء كبر الإمام أم لا؛ وبعد النافلة وصلاة الجنازة، وكذا يسن بعد الفائتة التي تقضي في أيام التكبير، ووقته لغير الحاج من فجر يوم عرفة إلى غروب شمس اليوم الثالث من أيام التشريق

தல்பியாவின் கோஷமும் தக்பீரின் முழக்கமும் முஃமின்களின் சமூக அமைப்பை இறை பக்தி எனும் நீராவிக் குளத்தில் குளிப்பாட்டி வைக்கின்றன,

அற்புதங்களும் அதிசயங்களும் நிறைந்த இந்த 13 நாட்கள் நம்மை வழக்கமான பாதையிலிருந்து ஒரு ஈமானிய புத்தாக்கப் பயிற்சிக்கு அழைத்துச் செல்கின்றன.

நாம் அதை உணர்ந்து கொள்வோம்.

சவூதி அரசு 25 ம் தேதி துல் ஹஜ்ஜின் முதல் நாள் என்றும் அக் 3 ம் வெள்ளிக்கிழமை அரபா வின் நாள் என்றும் அறிவித்துள்ளது.

The saudi Arabia’s  Supreme Court said in a statement, Thursday, Sept. 25 is the first day of Dul Hijjah Arafat Day, will be on Friday, Oct. 3, with Eid Al-Adha the following day, the Supreme Court announced after several people saw the new Dul Hijjah crescent on Wednesday.
நம்முடைய நாட்டில் 26 ம் தேதி அதாவது நேற்றிரவு துல் ஹஜ் பிறை தென்படாததால் 27 ம் தேதி துல்ஹஜ்ஜின் முதல் நாள் என்றும் அக் 5 ஞாயிறு அரபா நாள் என்றும் அடுத்த நாள் திங்கட்கிழமை ஹஜ்ஜுப் பெருநாள் என்று தமிழக அரசின் தலைமை காஜி நேற்று அறிவித்துள்ளார்.

இந்த வழிப்படி மார்க்கத்தின் கடமைகளை நாம் நிறைவேற்றுவோம்.

நமது ஊர் கணக்கிற்கு துல்ஹஜ் 9 ம் நாள் தான் அரபா நாளாகும். ஹாஜிகள் அரபாவில் கூடுகிற நாள் அல்ல.   
.   
   ஜப்பானில் பாதி பகல் கடந்த பிறகு தான் மக்காவில் அரபா நாள் ஆரம்மாகிறது. அரபா முடிகிற போதுதான் அமெரிக்காவின் சில ஊர்கள் விடியவே செய்யும்.
     முஸ்லிம்கள் சலனப்படத்தேவையில்லை. 
அக் 5 ஞாயிறுக் கிழமை நோன்பு நோற்போம் அடுத்த நாள் திங்கட்கிழமை ஹஜ்ஜுப் பெருநாளை மகிழ்ச்சியுடன் வரவேற்போம்.


  

7 comments:

 1. அல்ஹம்து லில்லாஹ் அற்புதமான கண்ணோட்டம் ஹழ்ரத்

  ReplyDelete
 2. DHAYAU SEIDHU JUMAA URAYIL UNGALIN ANUBAVANGALAI SERPPADHAI INIMEL THAVIRKKA MUYARCHI SEYYUNGAL ALLAH ARULPAALIPPAANAAGA

  ReplyDelete
  Replies
  1. Mohammed hadhees11:52 AM

   Ellorukkum ella anubavangalum kidaippadhillai.Silarudaiya anubavamdhan palaruukkuu padippinaiyaha amaindhu viduhiradhu.writter-i avarudaiya style-lileye vittu vidalame?!

   Delete
 3. Mohammed hadhees11:59 AM

  Vellikkilamai evening kaanappatta pirai palarudaiya ullangalil 2nd piraiyaha alutthamaaha padhindhu vittadhe!?.idhu ponra nilai thodaramal irukka enna theervu.?

  ReplyDelete
 4. Anonymous11:24 AM

  kesaiulama@HOTmail.com

  Katturai miha Arumai.vaajipaana Amalai kooda saadaanamaaka Ninaippavarkalukku Saattaiyadi.MaashaAllah

  ReplyDelete