வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, October 16, 2014

எத்தகைய மாற்றம் வேண்டும்

وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا أَنْ يَكُونَ لَهُمْ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ وَمَنْ يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلَالًا مُبِينًا(36)

இன்றைய முஸ்லிம் சமுதாயம் பல்வேறு குழப்பங்களில் சிக்கித் தவிக்கிறது.

சமூகத்தை மேலும் குழப்ப மடையச் செய்ய என்ன செய்ய தேவையோ அத்தகைய முய்றசிகள் தீவிரமாக நடந்து வருகின்றன,

எப்படி எல்லாம் குழப்பம் செய்ய முயற்சிக்கிறது,
·         அமெரிக்காவில் ஒரு சர்ச்சில்  வஹீதா எனற பெண்மணியை இமாமத் செய்ய வைத்து அவளுக்குப்பின் நின்று ஆண்கள் தொழுவது மாதிரியான காட்சியை பரப்பினர்
·         சமீப காலத்தில் வாட்ஸ் அப் வழியே பரப்பட்ட ஒரு செய்தி ஒரு பெண் இமாமாக நின்று தொழவைக்கிறார், பாத்திஹா சூராவின் ஓவொரு வாசகத்தையும் அரபியில் சொன்ன பிறகு அதன அர்த்ததை ஆங்கிலத்தில் சொல்கிறார் பர்தாவின் உடையிலில்லாத உடல் வெளியே தெரிவது மாதிரி ஸ்கர்ட் அணிந்த பெண்களும் ஆண்களும் அந்த யுவதிக்கு பின்னால் நின்று தொழுகிறார்கள்,

இது மாதிரியான பல் முயற்சிகள் நடை பெறுகின்றன்.

நமது நாட்டில் உள்ள இந்துத்துவ அமைப்புக் கூட முஸ்லிம்களை சமய ரீதியாக குழப்பிவிடுவதற்கான செயல் திட்டங்களை வகுத்துக் கொண்டு செயல்படுகிறது.

இந்த நிலையில் முஸ்லிம்கள் இஸ்லாமின் உன்னதமான அடிப்படைகளில் தங்களை உறுதிப் படுத்திக் கொள்ளவும் தெளீவு படுத்திக் கொள்ளவும் கடமைப் பட்டிருக்கிறார்கள்.

மார்க்கம் என்பது தொன்மையானது

தொன்மையான மார்க்கத்தின் வழிகாட்டுதல்களில் தொன்மையான நடைமுறைகளை பின்பற்றுவதே சரியானதாகும். உண்மையானதாகும்.

இன்றைய காலத்தில் பைனானஸ் சிஸ்டம் தவிர்க்க முடியாதது அதனால் வட்டியை அனுமதிக்க வேண்டும் என்று ஒருவர் கோருவார் எனில் முஸ்லிம்கள் என்ன சொல்ல வேண்டும் ?

எங்களது நபி தடுத்துள்ளார்கள், எங்களது முன்னோர்கள் எந்த  சூழலிலும் அதை அனுமதிக்க வில்லை எனவே நாங்கள் அதை ஏறக்மாட்டோம் என்று தான் சொல்ல வேண்டும்.  

அப்படிச் சொல்லாமல் நீங்கள் சொலவது சரிதான் இன்றைய சூழலில் வட்டியை மறுக்க முடியாதுதான். வட்டி குறித்த சட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று சொல்வார் எனில் அவர் இந்த சமுதாயத்த விட்டு தள்ளி நில் என்று மக்கள் சொல்லி விடுவர்ர்கள்.

வெளிப்படையான மார்க்கத்தின் சட்டங்களை இவ்வாறு மீறுவோறை ஒதுக்கி விடுகிற நோய எதிர்ப்பு சக்தி இஸ்லாத்திற்கும் முஸ்லிம் சமுதாயத்திற்கும் இயறகையாகவே இருக்கிறது.

அதே நேரத்தில் இஸலாத்த தீவிரமாக பின்பற்றுவதாக அடையாளப்படுத்திக் கொண்டு நவீனத்துவம் என்ற பெயரில் இஸ்லாத்தின் கோட்பாடுகளை அசைத்துப் பார்க்க்கிற சக்திகளால் முஸ்லிம் சமுதாயம் எப்போது பலவீனமடைந்தே வந்துள்ளது. 

நவீனத்துவம் முற்போக்குச் சிந்தனை சமூகப்பார்வை என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி முஸ்லிம் சமூகத்தின் அடிப்படைகளை ஆட்டம் காணவைக்கிற் ஒரு அமைப்பு தான் ஜமாத்தே இஸ்லாமி என்ற அமைப்பு இதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்.

1903 செப்டம்பர் 25 இல், ஹைதராபாத் நிஜாமின் கட்டுப்பாட்டிலிருந்த ஔரங்கபாதில் பிறந் மொளதூதி 1941 இல் ஜமாத்தே இஸ்லாமியை நிறுவினார்

மிகச்சிறந்த உருது மொழி ஆற்றால் பெற்றிருந்த அவர் தன்னுடைய எழுத்தாற்றலால் மக்களை கவர்ந்தார், பல பத்ரிககளிலும் அவர் பணி செய்தார். அடிப்படை மார்க்க கல்வியை முறையாக கற்காத அவருக்கு கிடைத்தத நவீன அறிவு அவரை மேதையாகவும் முஸ்லிம் சமூகத்தை முட்டாள் ஜனங்களாகவும் பார்க்க வைத்தது.

தனக்கு தெரிந்த மார்க்கச் செய்திகளை தற்கால உதாரணங்களுடன் அல்லது தற்கால பிரச்சினைகளுடன் இணைத்து அவர் பேசிய விதம் பலரையும் கவர்ந்தது,  

ஐரோப்பா உலகின் கவனத்தை ஈர்க்க தொடங்கியிருந்த காலத்தில் ஐரோப்பிய தகவல்களின் – பலகனி வழியே அவர் இஸ்லாத்தை அறிமுகப்படுத்தியது பலரையும் அவருக்கு அடிமையாக்கியது,

ஆசிய பகுதியில் அரசியல் விடுதலை போராட்டம் நடை பெற்றுக் கொண்டிருந்த காலத்தில் தனது செல்வாக்கை அரசியல் பேராட்டமாக மாற்ற ஜமாத்தே இஸ்லாமி என்ற அமைப்பை அவர் துவக்கினார்,

இஸ்லாம என்றால் பக்தி ஒழுக்கம் எனறு காலம் காலமாக அடையாளபட்டு வந்த்தை மாற்றி இஸ்லாம் என்றாலே  அரசியல் அரசு என்ற தோற்றத்தை அவர் ஏற்படுத்த முனைந்தார்,

இஸ்லாத்தின் வரலற்றை முறையோடு படித்தவர்களுக்கு தெரியும்

பெருமானார் (ஸ்ல்) அவர்கள் அரசு என்ற இலக்கோடு மார்க்கத்தை பிரச்சாரம் செய்ததில்லை. அத்தகைய வார்த்தை அவர்களது பிரச்சாரங்களில் பெரும்பாலும் இருந்ததே இல்லை.

மதீனாவுக்குள் நுழைந்த போது ஜும் ஆ கடைமையாக்கப்பட்டது. அப்போது அந்த முதல் குத்பாவில் மக்காவை பிடிப்போம் என்ற சபதத்தையோ பூமியில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவோம் என்ற சூளுரையையோ பெருமானார் (ஸ்ல்) பேசவில்லை.

மதீனாவில் சட்டங்களை அமுல் படுத்திய போதும் இஸ்லாமிய அரசின் சட்டங்கள் என்று பெருமானார் (ஸ்ல்) கூறியதில்லை.

அரசு தலைவர்களுக்கு கடிதம் எழுதிய போதும் இஸ்லாமிய அரசின் தலைவர் என தன்னை பெருமானார் (ஸ்ல்) குறிப்பிடவில்லை. அல்லாஹ்வின் தூதர் என்றே குறிப்பிட்டார்கள்,

புகாரியில் பிரபலமான் ஹிர்கல் ஹதீஸை படித்துப் பாருங்கள் (ஹதீஸ் எண் 7)
ثُمَّ دَعَا بِكِتَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّذِي بَعَثَ بِهِ دِحْيَةُ إِلَى عَظِيمِ بُصْرَى فَدَفَعَهُ إِلَى هِرَقْلَ فَقَرَأَهُ فَإِذَا فِيهِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ مِنْ مُحَمَّدٍ عَبْدِ اللَّهِ وَرَسُولِهِ إِلَى هِرَقْلَ عَظِيمِ الرُّومِ سَلَامٌ عَلَى مَنْ اتَّبَعَ الْهُدَى أَمَّا بَعْدُ فَإِنِّي أَدْعُوكَ بِدِعَايَةِ الْإِسْلَامِ أَسْلِمْ تَسْلَمْ يُؤْتِكَ اللَّهُ أَجْرَكَ مَرَّتَيْنِ فَإِنْ تَوَلَّيْتَ فَإِنَّ عَلَيْكَ إِثْمَ الْأَرِيسِيِّينَ وَ يَا أَهْلَ الْكِتَابِ تَعَالَوْا إِلَى كَلِمَةٍ سَوَاءٍ بَيْنَنَا وَبَيْنَكُمْ أَنْ لَا نَعْبُدَ إِلَّا اللَّهَ وَلَا نُشْرِكَ بِهِ شَيْئًا وَلَا يَتَّخِذَ بَعْضُنَا بَعْضًا أَرْبَابًا مِنْ دُونِ اللَّهِ فَإِنْ تَوَلَّوْا فَقُولُوا اشْهَدُوا بِأَنَّا مُسْلِمُونَ

ஹிர்களுக்கும் அபூசுப்யானுக்குமான உரையாடலை கவனியுங்கள். அரசு ஆட்சி பற்றிய பேச்சு இல்லை என்பது அப்பட்டமாக புரிய வரும். 

مِنْهُ قَالَ مَاذَا يَأْمُرُكُمْ قُلْتُ يَقُولُ اعْبُدُوا اللَّهَ وَحْدَهُ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَاتْرُكُوا مَا يَقُولُ آبَاؤُكُمْ وَيَأْمُرُنَا بِالصَّلَاةِ وَالزَّكَاةِ وَالصِّدْقِ وَالْعَفَافِ وَالصِّلَةِ

فَهَلْ كَانَ مِنْ آبَائِهِ مِنْ مَلِكٍ قُلْتُ لَا قَالَ
وَسَأَلْتُكَ هَلْ كَانَ مِنْ آبَائِهِ مِنْ مَلِكٍ فَذَكَرْتَ أَنْ لَا قُلْتُ فَلَوْ كَانَ مِنْ آبَائِهِ مِنْ مَلِكٍ قُلْتُ رَجُلٌ يَطْلُبُ مُلْكَ أَبِيهِ


இஸ்லாமிய மார்க்கத்தின் முகம் கொள்கை சீர்திருத்தமும் சரியான வழிபாடுகளும் அல்லாஹ்வின் சட்டத்தை முஸ்லிம்கள் பின்பற்றிவாழ்வதும் மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வதுமாகும்.

ஆட்சிக்கான ஒரு வாய்ப்பு அமையுமெனில் இஸ்லாமின் சட்டங்கள் நிலை நாட்டப்படும்.

இதுவே இஸ்லாத்தின் எதார்த்தம்.

இந்த முகத்தை மாற்றி உலகின் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதே இஸ்லாமின் அடையாளம் என்று மாற்ற முயற்சி செய்து பலரது சிந்தனையையும் வழி திருப்பி விட்டவர் மொள்தூதி.

அவரிடம் வேறு பல குழப்பங்களும் இருந்தன. முக்கியமாக நான்கு

·         குர் ஆனுக்கு சொந்த விளக்கம்
·         புத்திக்கு ஒத்துக்கொள்ளும் ஹதீதுகளை மட்டும் எடுத்துக் கொள்ளுதல்
·         ஸஹாபாக்களை தரம் குறைத்து விமர்ச்சித்தல்
·         இமாம்களை ஏற்றுக் கொள்ளாமை

குர் ஆனுக்கு விள்க்கம் என்ற பெயரில்  அவருடைய சொந்த கருத்துக்கள் ஏராளமாக இடம் பெற்றுள்ளன, வார்த்தை ஜாலங்களில் மறைந்திருக்கிற மார்க்கத்திற்கு முரனான கருத்த்துக்களை சாமாணய் மக்கள் புரிர்நது கொள்ளமுடியாதபடி செய்வது அவருக்கு கை வந்த கலை

ந்ஸ்ரு அத்தியாயத்தின் விளககத்தில் பெருமானாரின் மரியாதை இழிபடுத்தும் வகையில் அவருடைய வாசகங்கள் சுயமபுவாக பேசுகின்றன. எந்த விரிவுரையாளரும் செய்யத் துணியாத அபகீர்த்தி இது

فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا(3) விற்கு அவர் கொடுக்கிற விளக்கம்.

நீர் உமது 23 ஆண்டுகால பணியில் கடமையை நிறைவேற்றுவதில் நடந்த தவறுகளுக்காக பாவ மன்னிப்பு கேளுங்கள்,  

صاحب سورۃ نصر کی تشریح کرتے ہوئے لکھتے ہیں" اس طرح جب وہ کام تکمیل کو پہنچ گیا جس پر محمدؐ کو مامور کیا گیا تھا ، تو آپؐ سے ارشاد ہوتا ہے کہ اس کارنامے کو اپنا کارنامہ سمجھ کر کہیں فخر نہ کرنے لگنا۔نقص سے پاک بے عیب ذات اور کامل ذات صرف تمہارے رب کی ہے، لہذا اس کار عظیم کی انجام دہی پر اس کی تسبیح اور حمد و ثنا کرو اور اس ذات سے درخواست کرو کہ مالک اس ۲۳ سال کے زمانے خدمت میں اپنے فرائض ادا کرنے میں جو خامیاں اور کوتاہیاں مجھ سے سرززد ہوگئی ہوں، انہیں معاف فرمادے" (قرآن کی چار بنیادی اصلاحیں،ص۱۵۲

தப்ஹீமுல் குர் ஆனில் ஆதம் தாவூது யூனுஸ் மோச்மான தகவல்களை அவரது காலத்து மார்க்கக அறிஞர்கள் அத்தனை பேரும் கடுமையாக கண்டித்துள்ளார்கள

யூனுஸ் அத்தியாயத்தில் யூனுஸ் அலை அவர்களின் வரலாற்றை எழுதுகிற போது அவர் நபித்துவ கடமைய நிறைவேற்றவில்லை. அதனால் அந்த மக்களுக்கு அல்லாஹ் வாய்ப்பளித்தான் என்று எழுதினர்/
இது பற்றி மஆரிபுல் குர்ஆனில் ஷபீ சாஹிப் சூரத்து யூனுஸ் விரிவுரையில் விளக்கியுள்ளார், )

இது முழுக்க முழுக்க இவரது கற்பனையாகும். தன்னை பொய்யரென்று கருதி மக்கள் தம்மை கொலை செய்து விடுவார்களோ என்ற அச்சத்தின் காரணமாகவே யூனுஸ் அலை படகிலேறி பயணம் செய்தார் என்று முபஸ்ஸிர்கள் கூறுகிற போது – துணிந்து ஒரு நபியை பொறுப்பபற்றவராக ஆக்க அவரது நவீன் சிந்தனை அவரை தூண்டியுள்ளது
தாவூத் (அலை) பற்றி

 "حضرت داؤد علیہ السلام کے فعل میں خواہیش نفس کا کچھ دخل تھا اس کا حاکمانہ اقتدار کے نامناسب استعمال سے بھی کوئی تعلق تھا، اور وہ کوئی ایسا فعل تھا جو حق کے ساتھ حکومت کرنے والے کسی فرماں روا کو زیب نہ دیتا تھا"۔ (تفہیم القرآن،ج۴، ص۳۲۷، سورہ ص)

யூனுஸ் அலை தனது பொறுப்பில் தவறினார்

۱۱۔ " حضرت یونس علیہ السلام سے فریضہ رسالت کی ادائیگی میں کچھ کوتاہیاں ہوگئی تھیں۔ گالباً انہوں نے بے صبر ہوکر قبل از وقت اپنا مستقر بھی چھوڑ دیا تھا" ۔ (تفہیم القرآن،ج۲،ص۳۱۲،طبع سوم،۱۹۶۴ء)

மூஸா அலை பாவம் செய்தார்

نبی ہونے سے پہلے تو حضرت موسیٰ علیہ السلام سے بھی ایک بہت بڑا گنا ہوگیا تھا کہ انہوں نے ایک انسان کو قتل کردیا"۔ ( رسائل ومسائل،ج۱،ص۳۱،طبع دوم)

யூசுப் (அலை) சர்வாதிகாரி இத்தாலியின் முசோலினி போல

" یہ محض وزیر مالیات کے منصب کا مطالبہ نہیں تھا، جیسا کہ بعض لوگ سمجھتے ہیں۔ بلکہ یہ ڈکٹیٹرشپکا مطالبہ تھا۔ اور اس کے نتیجے میں سیدنا یوسف علیہ السلام کو جو پوزش حاصل ہوئی وہ قریب قریب وہی پوزش تھی جو اس وقت اٹلی میں مسولینی کو حاصل ہے"۔ ( تفہیمات۔ج۲،ص۱۲۲، طبع پنجم،۱۹۷۰ء

தனக்கு ஆங்கிலமும் முசோலினியும் தெரியும் என்பது மட்டுமே இவ்வாறு  விளக்கம் சொல்ல மௌதூதியை தூண்டியது, .

நபிமார்களின் மீதான விமர்சனத்த இந்த அளவோடு நிறுத்த வில்லை,

நபிமார்களிடமிருந்தும்தும் தவறுகள் நிகழலாம் அதற்கு தண்டனையும் தரப்பட்டிருக்கிறது, என்றார்.

انبیاء کرام سے غلطیاں بھی ہو جاتی ہیں اور ان کو شزا بھی دی جاتی ہے"۔ ( رسالہ ترجمان القرآن، ص۱۵۸،مئی ۱۹۵۵ء

மொளதூதியின் விமர்சனம் அம்பு பெருமானாரையும் விட்டு வைக்க வில்லை

நாயகமவர்கள் மனித தன்மைக்கு மேலுள்ளவர்களும் அல்ல. மனித பலகீனங்களுக்கு அப்பாற்பட்டவர்களும் அல்லதர்ஜுமானுல் குர் ஆண் 76

 ")
۴۔ "رسول اللہ صلی اللہ علیہ وسلم نہ فوق البشر ہے نہ ہی بشری کمزوریوں سے بالا تر ہے"۔ (رسالہ ترجمان القرآن،اپریل ۱۹۷۶ءبعنوان: اسلام کس چیز کا علمبردار ہے (خطبات یورپ، ص


தஜ்ஜாலின் வருகை சமீப்த்திருக்கிறது என்று பெருமானார் விளங்கிக் கொண்டது சரியல்ல – என்கிறார் மௌதூதி
இதுமாதிரி விச்யத்தில் நபியின் அனுமானங்கள் சரியல்ல என்று சொல்வது நபித்துவத்தை குறை படுத்தியதாகாது, என்கிறார்

 " حضورصلی اللہ علیہ وسلم کو اپنے زمانے میں یہ اندیشہ تھا کہ شاید دجال آپؐ کے عہد میں ہی ظاہر ہو جائے۔ یا آپؐ کے بعد کسی قریبی زمانہ میں ظاہر ہو،لیکن کیا ساڑے تیرہ سو برس تاریخ نے یہ ثابت نہیں کر دیا کہ حضورؐ کا یہ اندیشہ صحیح نہ تھا۔ اب ان چیزوں کو اس طرح نقل و روایت کئے جانا کہ گویا یہ بھی اسلامی عقائد ہیں’ نہ تو اسلام کی صحیح نمائندگی ہے اور نہ اسے حدیث ہی کا صحیح فہم کہا جا سکتا ہے۔ جیسا کہ میں عرض کر چکا ہوں۔ اس قسم کے معاملات میں نبی کے قیاس و گمان کا درست نہ نکلنا ہرگز منصب نبوت پر طعن کا موجب نہیں ہے"۔ (ترجمان القرآن’’ربیع الاول ۱۳۶۸ھ’جلد ۲۸،ص



رضی اللہ عنہم ورضواعنہ என்று  திருக்குர் ஆன் கூறும் சஹாபாக்கள் குறித்து மௌதூதியின் கருத்துக்கள் இன்றைய ஐரோப்பியர்கள் இஸ்லாம் பற்றி தெரிவிக்கும் கருத்துக்களை விஞ்சக் கூடியவை

பெருமானார் (ஸல்) அவர்கள் தன்னுடைய தோழர்கள் குறித்து சொன்னார்கள்.

" اللہ اللہ فی اصحابی لا تتخذوھم من بعدی غرضا فمن احبھم فبحبی احبھم و من ابغضھم فببغضی ابغضھم من آذاھم فقد آذانی فقد آذی اللہ ومن آذی اللہ فیوشک ان یا خذہ

அஹ்லுஸ்ஸூன்த் வல்ஜமாத்தினரிடத்தில் ஈமானுக்கு அளவுகோல் சஹாபாக்கள் தான்

ஆனால் மௌதூதி  பெருமானாரை தவிர மற்ற எவரையும் சத்தியத்தின் அளவு கோல் அல்ல என்கிறார்..

"رسول خدا کے سوا کسی انسان کو معیار حق نہ بنائے کسی کو تنقید سے بالاتر نہ سمجھے، کسی کی ذہنی غلامی میں مبتلا نہ ہو ہر ایک کو خدا کے بتائے ہوئے اسی معیار کامل پر جانچے اور پرکھے، اور جو اس معیار کے لحاظ سے جس درجہ میں ہو اس کو اسی درجہ میں رکھے"۔ ( دستور جماعت اسلامی پاکستان،ص۱۴)

ஒரு விந்தை என்ன வெனில்? 

இவர் தான் நபிமார்கள் தவறு செய்வார்கள் அதற்கு தண்டனை பெறுவார்கள். முஹம்மது நபி மனித பலகீனங்களுக்கு அப்பாற்பட்டவர் அல்ல என்றவர்.

ஒரு அக்கிரமம் பாருங்கள்
மக்காவிலிருந்து அகதியாக வந்த அப்துர் ரஹ்மான் பின் அவ்ப் ரலி அவர்களுக்கு ஸஃது பின் ரபீஃ என்ற அன்சாரி தோழர் எனது மனைவிகளில் ஒருவரை தருகிறேன் என்று சொன்னது எத்தகைய உணர்ச்சுயூட்டுகிற வரலாறு? , இந்த வரலாற்றின் எதார்த்ததை புரியாமல் போலித்தனமான இன்றைய நாகரீகத்தை சமாளிப்பதற்காக இந்த வரலாற்றை மௌதூதி எப்படி கொச்சை படுத்டுகிறார் பாருங்கள்

மனைவியை விட்டுத்தருவதாக சொன்னது யூதர்களின் பழக்க தோசம் என்கிறார்.

" چناچہ یہ یہودی اخلاق ہی کا اثر تھا کہ مدینہ میں بعض انصار اپنے مہاجربھائیوں کی خاطر اپنی بیویوں کو طلاق دیکر ان سے بیاہ دینے پر آمادہ ہو گئے تھے"۔ (تفہیمات،ج۲،ص۳۵،طبع دوم


மௌதூதியை புரட்சிகரமான எழுத்தாளர் என்கிறார்களே அதற்கு இது தான் இலக்கணம்.

உஸ்மான் ரலி அவர்களை குறித்து அரசியல் வாதி மௌதூதியின் பேச்சு இரத்தக் கண்ணீரை வரவழைக்க கூடியது,

உஸ்மான் ரலி மரியாதைக்குரியவர் என்றாலும் ஆட்சிக்கு தகுதியற்றவராக இருந்தார். இஸ்லாமிய வரலாற்றுக்குள் மீண்டும் ஜாஹிலிய்யத் நுழைய காரண்மானார்.

حضرت عثمانؓ جن پر اس کار عظیم(خلافت) کا بار رکھا گیا تھا، ان خصوصیات کے حامل نہ تھے جو ان کے جلیل القدر پیشرؤں کو عطا ہوئی تھیں۔ اس لئے جاہلیت کو اسلامی نظام اجتماعی کے اندر گھس آنے کا راستہ مل گیا۔ " (تجدید و احیائے دین،ص۲۳)

மௌதூதியின் பேனா எதற்கு துணிகிறது பாருங்கள்! உஸ்மான் ரலி தவறு செய்து விட்டார்.

حضرت عثمانؓ کی پالسی کا یہ پہلو بلا شبہ غلط تھا اور غلط کام بہر حال غلط ہے خواہ وہ کسی نے کیا ہو،اس کو خواہ مخواہ کی سخن سازیوں سے صحیح ثابت کرنے کی کوشش کرنا نہ عقل و انصاف کا تقاضہ ہے اور نہ دین کا یہ مطالبہ ہے کہ کسی صحابی کی غلطی کو غلطی نہ مانا جائے"۔ (خلافت و ملوکیت،ص۱۱۶)
இத்தகைய கருத்துக்கள் மூலம் மௌதூதி ஷியாக்களுக்கு நெருக்கமானவரானார். இப்படி பேசியதாலேயே இவரை ஷியா பிரிவைச் சார்ந்தவர் என்று கருதுவோரும் உண்டு,

ஈரானின் முன்னாள் அதிபர் குமைனி மௌதூதியை புகழ்வது இதற்கு போதுமான சாட்சியாகும்.

سید مودودی صرف پاکستان ہی کے نہیں پورے عالم اسلام کے قائد تھے۔ ان کے اسلامی فکر نے پوری اسلامی دنیا میں اسلامی انقلاب کی تحریک برپا کردی۔۔ انکے مشن کو آگے بڑھانے کی بہت ضرورت ہے"۔ امام خمینی ۔

லாகூரிலிருந்த் வெளிவருகிற ஷீஆ வாரப்பத்ரிகையில் 18 அக்டோபர் 1979)


மௌதூதியின் இத்தகைய காரணம்,
அரை குறையாக அரசியல் படிப்பதும் மேற்கத்திய சிந்தனையாளர்களை திருப்திப் படுத்த முய்றசிப்பதுமே கருத்துக்களின் காரணமாகும்

உண்மையாக ஆழமான வரலாற்றை பார்க்கும் பார்வை இல்லாது போனதும், மேன்மக்களை பற்றி பெருமானார் (ஸ்ல்) அவர்கள் சொன்ன கருத்துக்களை மதிக்காமல் போனதும் – புதுமையாக சொல்ல வேண்டும் என்ற ஆசையுமே இத்தகைய தீனுக்கு எதிரான துணிச்சலுக்கு காரணமாகும்

முஆவியா (ரலி) தனது மகன் யஜீதை நியமித்ததை கூட விமர்சனம் செய்யக் கூடாது என்பது அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாத்தினர்களின் கருத்து, இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு,

அடிப்படையில் முஆவியா ரலி பெருமானாரின் தோழர். அவர்களை விமர்ச்சிக்க நமக்கு தகுதியில்லை என்பது முதனமை காரணம் இன்னொரு காரணமும் இருக்கிறது, அரசு ஒரு பேரராசாக வளர்ந்து விட்ட நிலையில் இத்திட்டத்தை முன்வைத்ததே சஹாபாக்களில் சிலர் தான் என்பதும் இங்கு கவனிக்கப்பட வேண்டியது. பேரரசை வலிமையாக காக்கும் சிந்தனையே இதற்கு காரணம் என்பதும் மறுக்க கூடிய விசயமல்ல.  

இந்த இடத்திலு ஜமாத்தே இஸ்லாமி அமைப்பினர்கள் பலருக்கும் மனித குலத்திற்கு எதிராக மாபெரும் கொலைக் குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்ற அடிப்படையில் பங்களா தேஷ் நீதிமன்றம் தூக்கு தண்டனைகள் வழங்கியதை இங்கு நாம் நினைவு கூறவேண்டும்.

யார் யாரை குறை சொல்கிறார்கள் பாருங்கள்

ஹதீதுகள் விச்யத்தில் மௌதூதி ஹதீஸ் மறுப்பாளர் என்ற குற்றம் சாட்டப்படுகிற அளவுக்கு கடுமையான கருத்துக்களை கொண்டிருந்தார், ஆரம்ப காலத்தில் ஹதீதுகளையும் அது தொகுக்கப்பட்ட வரலாற்றையும் வியந்து பாரட்டியவர் – ஒரு புரட்சியாளராக தன்னை நிலை நிறுத்த்திக் கொள்ளும் முய்ற்சியில் பிறகு கண்டபடி பேசினார்,

அடிப்படை ரிவாயத்துக்கள் ஒரு புறம் இருக்கட்டும். இந்தப் புதுமைக் காலத்தில் முற்காலத்தின் அர்த்தமற்ற பேச்சுக்களை கேட்க யார் தயாராக இருக்கிறார்கள்,

முறையானது சனது உள்ளது என்ற காரணத்தால் சரியான ரிவாயத்து என்று முஹத்திஸ்கள் ஒத்துக் கொள்ளும் எல்லா ரிவாயத்துக்களையும் நாமும் சரியானது என ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயமில்லை

ஹதீதுகள் சரியாக இருக்கலாம் என்று நினைக்கலாமே தவிர அதுதான் சரியானது என்று ஒத்துக் கொள்ள வேண்டிய தேவை இல்லை,

இபுறாகீம் அலை மூன்று இடங்களில் தவிர பொய் சொல்லவில்லை என்ற ஹதீஸீன் கருத்தை முழுவதுமாக புரியாமல் மௌதூதி இப்ப்டி சொல்கிறார்

இந்த ஹதீஸை இமாம் புகாரியும் இமாம் முஸ்லிமும் சஹீஹ் என்று சொல்வதனால் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்

یک گروہ روایت پرستی میں غلو کرکے اس حد تک پہنچ گیا ہے۔ کہ اسے بخاری و مسلم رحمہما اللہ کے چند راویوں کی صداقت زیادہ عزیز ہے اوراس بات کی پرواہ نہیں ہے کہ اس سے ایک نبی پر جھوٹ کا الزام عاید ہوتا ہے۔  ترجمان القرآن ماہ مئی ؁ 55ء کے ص 163

சனது பலமானது என்பதால் அதை கண்ணை மூடிக் கொண்டு ஏற்க முடியாது

نہ فن حدیث کے نقطۂ نظر سے کسی حدیث کی سند کا مضبوط ہونا اس بات کا مستلزم ہے کہ اس کا متن خواہ کتنا ہی قابل اعتراض ہو مگر اسے ضرور آنکھیں بند کرکے مان لیا جائے۔ سند کے قوی اور قابل اعتماد ہونے کے باوجود بھی ایسے اسباب ہوتے ہیں کہ جن کی وجہ سے ایک متن غلط صورت میں نقل ہوجاتا ہے اور ایسے مضامین پر مشتمل ہوتا ہے جن کی قباحت خود پکار رہی ہوتی ہے کہ یہ باتیں نبی کی فرمائی ہوئی نہیں ہوسکتیں


இவரின் இந்தப் போக்கு எதற்கு வழி கோலியது என்றால் ஸஹீஹான ஹதீஸ்களில் வருகிற இறுதிக் காலத்து அதிசயங்களுக்கு தஜ்ஜால் யஃஜீஜ் மஃஜூஜ்  ஈஸா அலை இறங்கி வருதல் போன்ற நிலவரங்கள் எல்லாவற்றுக்கும் அவர் புதிய புதிய விளக்கங்களை கூறீனார்;

இரண்டாம் வருகையை உறுதி செய்யப்பட்ட ஈஸா நபியின் வாழ்வை
குழப்பத்திற்குரியது என்றார்

مسیح علیہ السلام کی حیات کا مسئلہ متشابہات میں سے ہے۔ ( کوثر ، 21 فروری  ؁1951ء)

ஒரு ஹதீஸ் ஸஹீஹானதாக் இருப்பதற்கு மௌதூதி வைத்த அளவு கோல் அது எனது அறிவுக்கு ஏற்றதாக  எனக்கு சரியனறு படக்கூடியதாக இருக்க வேண்டும்

மிர்சா குலாம் காதியானி இப்படித்தான் சொன்னான்

ஹதீஸ் ஸஹீஹ் ஆக இருப்பதற்கு எனது வஹ்யுக்கு அது ஒத்திருக்க வேண்டும் என்றார்ன்

எனவே தான் மார்க்க அறிஞர்கள் ஜமாத்தே இஸ்லாமி மௌதூத ஆகியோர் விச்யத்தில் மிக மிக அழுத்தமான எச்சரிக்கைகளை சமுதாயத்திற்கு கொடுத்த்துள்ளனர்

“ இவர்களுடை பத்ரிகைகளிலும் நூற்களிலும் மேலெழுந்த வாரியாக பார்க்க கூடியவர்கள் புரிந்து கொள்ள முடியாத விதத்தில், தீனுடைய அடிப்படைக்கு புறம்பான விச்யங்களும்  தீனையே மாற்றக் கூடிய விஷயங்கள் புகுத்தப் பட்டுள்ளன என பல அறிஞர்களும் கூறினர்

இவர்களாலும் இவர்களுடைய எழுத்துக்களாலும் தயாராக கூடியவர்களுக்கு ஒரு புதிய தீனின் தன்மைகளே ஏற்படுகின்றன. என அபுல் ஹஸன் அலி நத்வி கூறினார்.

தாருல் உலூம் தேவ்பந்தின் பத்வா இப்படிக் கூறுகிறது

۲۔ " ابوالاعلی مودودی اور انکی جماعت کے لٹریچر میں بہت سی باتیں ایسی ہیں جو اہل سنت والجماعت کے خلاف ہیں۔ کچھ باتیں معتزلہ کی، کچھ خوارج کی، کچھ شیعوں کی، کچھ غیر مقلدین کی اور کچھ منکرین حدیث کی ہیں"۔ (فتاویٰ محمودیہ،ج۲،ص۱۴۴) مفتی محمود- مفتی عظم دارالعلوم دیوبند

இன்னொரு தாருல் உலூம் பத்வா

ஜமாத்தே இஸ்லாமி அமைப்பிடமிருந்து ஒதுங்கியிருப்பது வாஜிபு, அவர்களுடன் சேருவது கொல்லும் விஷமாகும். மற்றவர்களை தடுப்பதும் வாஜிபாகும். இவர்கள் விச்யத்தில் கவனக்குறைவு ஜாயிஸ் இல்லை. இதன்பால் அழைப்பவர்கள்இதற்கு உதவியாக இருப்பவர்கள் பாவிகளாவார்கள். இந்த ஜமாத்தை சேர்ந்தவருக்கு பின்னால் தொழுவது மக்ரூஹ் செய்யது மஹ்தீ ஹஸன்
தாருல் இப்தாதலைமை முப்தி தேவ்பந்த் – 23 ஜமாதுல் அவ்வல் – 1370

இத்தகைய கடுமையான நிலைப்பாட்டை எடுப்பதற்கு நியாயமான காரணங்கள் இன்னும் ஏராளமாக இருக்கின்றன

அற்புதமான் எழுத்து வன்மை பெற்ற ஒருவர் தனக்கு கிடைத்த மரியாதையில் மார்க்கத்தை நவீன வழிக்கு மாற்று கிறேன் என்ற பெயரில் நடத்திய கருத்துப் படுகொலைகள் அவை

அவருடை கருத்த்துக்கள் பலவரும் தான்றித்தோனமான சிந்தனை உடைய ஒரு கூட்டத்தை உருவாக்குபவை

1980 களுக்குப் பிறகு தமிழ் சமுகத்தில் உருவான கருத்துக்களுக்கெல்லாம் முன்னோடிகள் இவர்கள்.

இதில் இன்னொரு விச்யம் என்ன வென்றால் இவர்கள் நவீனம நாகரீகம் என்ற பெர்யரில் இஸ்லாத்தின் எந்த உண்மையையும் மறுப்பார்கள்.

இன்றைக்கும் ஜமாத்தே இஸ்லாமி அமைப்பினரிடம் ஹதீஸ் கள் விச்யத்தில் ஒரு கொள்கை இல்லாமல் இருப்பதை பார்க்கலாம்.

மார்க்கச் சட்டங்களில் ஒட்டு மொத்த சமுதாயத்திடமிருந்தும் விலகி நிற்கிற தனிப்போக்கை கவனிக்கலாம்.

நாகரீகமாக பேசுவார்கள். நவீனமாக புத்தகங்கள் வெளியிடுவார்கள், அழகான பெயரில் அமைந்திருக்கிற ஜமாத்தே இஸ்லாமி என்பது அடிப்படையில் அவர்களுடைய தனி இஸ்லாமாகும். அல்லாமா அபுல்ஹஸன் அலி நத்வி அவர்கள் சொன்னது போல  இவர்களுடைய் தீன் மேற்கத்திய சிந்தனையாளர்களை திருப்திப்படுத்தும் புதுவகையான தீனாகும்.

தமிழக ஜமாத்தே இஸ்லாமியிடம் இத்தகைய அடையாளங்களை தாரளமாக பார்க்கலாம். மார்க்கத்தை மாற்றுவதில் மௌதூதியை விஞ்சிய இன்றை ஜமாத்தே இஸ்லாமியினர்

புத்தக் கண்கட்சியிலே ஒருவரைச் சந்தித்தேன் ஐ எஃப் டிக்கு சென்று திருக்குர் ஆன் வாங்கி வந்தேன் என்றார், பொட்டில் அறைந்தார் போல் இருந்தது. அது திருக்குர் ஆனா?

நம்முடைய் தமிழக ஆலிம்கள் வலிந்து வலிந்து கேட்டுக் கொண்டார்கள் இப்படி பெயர் வைக்காதீர்கள், அது முஸ்லிம்களின் வழியல்ல, கிருத்துவர்களின் வழி . அவர்கள் தான் மொழிபெயர்ப்புக்கு பைபிள் என்று பெயர் வைத்தார்கள், இன்று அவர்களிடம் ஒரிஜினல் பைபிளே இல்லாமல் போய்விட்டது.

நமது முன்னோர்கள் செய்த மிக முக்கியமான பணி தர்ஜமாவை மூலத்துடன் தான் வெளியிட வேண்டும் என்றார்கள், மட்டுமல்ல தர்ஜமாவிற்கும் தப்ஸீருக்கும் தனிப்பெயர் வைத்தார்கள்.

மௌதூதி திருக்குர் ஆனுக்கு உரை எழுதி அதற்கு தப்ஹீமுல் குர்ஆன் என்று பெயரிட்டார். கவனிக்கவும் அல்குர்ஆன் என்று பெயரிடவில்லை.

அதை தமிழில் வெளியிட முயற்சி செய்த தமிழக ஜமாத்தே இஸலாமியினர் திருக்குர் ஆன் என்ற பெயரில் வெளியிட முயன்றனர்.

மொழி பெயர்ப்பை குர் ஆண் என்று சொல்லக் கூடாது குர் ஆணில் தவறுகள் இல்லை. குர் ஆன் அல்லாஹ்வின் கலாம்,
மொழிபெயர்ப்பை அப்ப்படிச் சொல்லக் முடியாது, மொழிபெயர்ப்பில் தவறுகள் வரலாம் வந்திருக்கிறது, அப்படிச் செய்ய வேண்டாம் என்று இது நமது முன்னோர்களின் முக்கியத் தீர்மாணம் என தமிழகத்தின் தலை சிறந்த ஆலிம்கள் மதரஸாக்கள் கோரிக்கை வைத்தன.
தமிழில் முதல்
மொழிபெயர்ப்பை தப்ஸீரை வெளியிட்ட அனைவருமே தனிப்பெயரில் தான் வெளியிட்டார்கள் என்பதை சுட்டிக் காட்டினர்

·         தர்ஜமத்துல் குர் ஆன் பீ அல்தபில் பயான்
·         அன்வருல் குர் ஆன்
·         அத்திப்யான்  

நவீனத்துவ போதையிலிருந்த ஜமாத்தே இஸ்லாமியினருக்கு இதிலுள்ள பின்னணியும் தததுவமும் புரியவே இல்லை.

தப்ஹீமுல் குர் ஆனை திருக்குர் ஆன் என்று தான் வெளியிட்டார்கள் ( மூலமும் உரையும் என்ற சின்ன எழுத்து ஏமாற்று வேலை) அதற்கு பதிலாக ஜமாத்தே இஸ்லாமி அல்லது மௌதூதியின் திருக்குர் ஆண் என்று சொல்லியிருக்கலாமே

இதில் இன்னும் சில நுட்பமான குர் ஆன் அதனுடைய சொற்களாலும் கருத்துக்களாலும் பாதுகாக்கப்பட்ட செய்திகள் அடங்கியிருக்கின்றன, இன்ஷா அல்லாஹ் இன்னொரு சமயத்தில் அதைப்பற்றி பேசுகிறேன்.

இப்போதைக்கு ஒன்றை நினைவில் வையுங்கள் தங்களது சொந்தக் கருத்தை திருக்குர் ஆன் என்ற பெயரில் வெளியிட்டு தமிழகத்தில் கருத்துப் புரட்சி செய்தவர்கள் அவர்கள் தான்.  
.
ஜமாத்தே இஸ்லாமியினருக்கு பிறகு தான் அவ்வாறு போடுகிற துணிச்சல் மற்ற பலருக்கும் வந்தது.

இவர்கள் இப்போது மாற்றத்தை நோக்கி என்று மாநாடு போடுகிறார்கள்

எந்த மாற்றத்திற்கு மக்களை அழைக்கிறார்கள்

தொன்மையான தீனுக்கு மௌதூதி கொடுத்த அந்த மாற்றத்தை நோக்கியா?
இஸ்லாத்தின் முகத்தை அரசியல் என்று மாற்றினார்களே அந்த மாற்றத்தை நோக்கியா?
அல்லாஹவை தவிர வேறு யாருக்கு ஆட்சியில்லை என்ற கோஷத்தில் எந்த அரசுக்கும் கட்டுப்படாத ஒரு சமூகத்தை உருவாக்கும் மாற்றத்தை நோக்கியா ?

நபிமார்களை சுத்தமாக நம்புவதும்.
சஹாபாக்களை மிக உயர்வாக மதிப்பதும்.
ஹதீஸ்களின் கருத்துக்களை அப்படியே ஏற்றுக் கொள்வதும்,
இமாம்களின் சிந்தனைகள ஒப்புக்கொள்வதும்
பெருமானார் கூறிச் சென்ற அற்புதங்களை நம்புவதும் 
பழமையானவை. 
இதில் மாற்றம் வேண்டும் அப்படி ஒரு இஸ்லாம் வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் ஜமாத்தே இஸ்லாமியின் மாற்றத்தை நோக்கிய பயணத்திற்கு நீங்கள் தயாராகலாம்.

நமக்கு அசலான மார்க்கம் வேண்டும். நபிமார்களை மதித்து சஹாபாக்களை மதித்து மார்க்கத்தில் உள்ளவைகளை ஒப்புக்குகொண்டு வாழ்கிற அடிப்படையான அந்த பழைய மார்க்கம் வேண்டும் என்று நீங்கள் விருமினால் ஜமாத்தே இஸ்லாமி போன்று புற்றீசல்களாக முளைத்துவருகிற அமைப்புக்களிலிருந்து விலகி நில்லுங்கள் 

நபிமார்களையும் சஹாபாக்களையும் நல்லோரர்களையும் பின் பற்றி வாழ்கிற சுன்னத் ஜமாத்தில் தொடர்ந்து இறுக்கமாக இணைந்திருங்கள். 

நேர்வழியில் இருப்பீர்கள். ஈருலகிலும் நிம்மதியடைவீர்கள். 





10 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. நல்லஅருமையான அசியமான தகவலல்கள்நிறைந்த ஆக்கம் இதில்Pj யின்எல்லாக்குழப்பங்களுக்கும்மௌதூதிதான் முன்னோடி என்பதையும்சேர்த்திருக்கலாம்உங்கள்சேவைதொடரமனமாறவாழ்த்துகிறே

    ReplyDelete
  3. அவசியமான, அதே நேரத்தில் மிகவும் கவனமாக ஜும்ஆ உரையில் இடம் பெற வேண்டிய ஆக்கம், இது போன்று ”அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் அகீதாவிலிருந்து இன்றைய ஒவ்வொரு அமைப்பினரும் எங்கிருந்து வேறுபட்டு நிற்கின்றார்கள்” என்று முழுமையாக மக்கள் மன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும். அதற்கு உங்களின் எழுத்தும், ஆக்கமும் உதவியாக இருந்திட துஆ செய்கிறோம்!
    அல்லாஹ் உங்களுக்கு எல்லா நிலைகளிலும் துணை நிற்பானாக! ஆமீன்!

    ReplyDelete
  4. Anonymous10:22 PM

    ஹஜ்ரத்,இந்த வார வெள்ளிமேடை மிக மிக அருமை..சமூக சேவை என்ற போர்வைக்குள் இருந்த கொள்கை குழப்பவாதிகளைதோலுரித்துக்காட்டி விட்டீர்கள்.நீண்ட நாட்களாக இந்த இயக்கத்தை பற்றி தெரிந்து கொள்ள எதிர்பார்த்திருந்தேன்.
    அல்லாஹ் உங்கள் சேவையை கபூல் செய்வானாக!ஆரோக்யத்துடன் நீண்ட ஆயுளை தருவானாக ஆமீன்

    ReplyDelete
  5. Anonymous2:35 AM

    ஜமாத் இஸ்லாமி மௌதூதி செய்துள்ள குளப்பத்தை மிக தெளிவாக சொன்னீர்கள் ஜஸாகுமுல்லா

    ReplyDelete
  6. Anonymous2:37 AM

    மௌதூதி ,ஒரு கருத்து முரண்பாட்டாளர் என்பது தெரியும்..ஜ.இ-காரர்களால் பெரிய குழப்பங்கள் தெரியவில்லையே என்று நினைத்தேன்ஆனால்,அவர் இவ்வளவு பெரிய குழப்பவாதி-நவீன. குழப்பவாதிகளின் ரோல்மாடல் என்பது இப்பொழுதுதான் நன்றாக விளங்குகிறது..இ. நச்சுக்கருத்துக்களைக் கொண்ட நல்லபாம்பு என்பதை சமுதாயம் மக்கள் உணர வேண்டும்.தெளிவுபடுத்திய ஹழரத் அவர்களுக்கு நன்றி.Jazakallahu ...

    ReplyDelete
  7. ஜமாஅத்தே இஸ்லாமியின் கொள்கைகள் தெரிந்துகொண்டேன்

    ReplyDelete
  8. ஜமாஅத்தே இஸ்லாமி மௌதூதி முகவிலாசங்கள்இன்னும் இளையதலைமுறையினருக்கு குறிப்பாகஆலிம்களுக்குவெளிச்சப்படுத்தவேண்டியபக்கங்கள்இன்னும்நிறையஇருப்பதாகவேகருதுகிறேன் وفقك الله وايانا في الدارين وايدك الله وايانا بروح القدس وحياك الله ايانا بحياة طيبة

    ReplyDelete
  9. அல்ஹம்து லில்லாஹ்! காலத்திற்கேற்ற கருத்தான கட்டுரை.
    சமூக சேவை, முற்போக்கு சிந்தனை, கவர்ச்சி இவற்றை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிற எத்தனையோ அமைப்புகளின் அடித்தளம் இப்படித்தான் படுமோசமாக உள்ளது.
    அந்தரத்திலே அழகான பளபளப்பான பழம்; ஆணிவேரிலே அமிலம்; இதுதான் இவர்களின் இழிநிலை. தெளிவாகப் படம்பிடித்துக் காட்டிய தங்களுக்கு ஆழமான நன்றி.

    ReplyDelete
  10. அருமை யான கட்டுரை

    ReplyDelete