வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, October 09, 2014

திருமண பாக்கியம்

பெருநாள் முடிந்த கையோடு திருமணங்களின் வரிசை தொடங்கி விட்டது.
இது மகிழ்ச்சியான விசய்ம்.

முஸ்லிம் சமுதாயம் உரிய காலத்தில் திருமணம் செய்ய/ செய்துவைக்க அக்கறை  செலுத்துவது  வாழ்க்கையின்
1.   மகிழ்ச்சியை மட்டுமல்ல
2.   மரியாதையையும்
காப்பாற்றிக் கொள்ளும் புத்திசாலித்தனாமான நடைமுறையாகும்.
3.   இஸ்லாத்தை நடைமுறைப்படுத்தும் ஒரு அம்சமும ஆகும்.

திருமணங்களில் ஓதப்படுகிற குத்பாவையோ துஆவையே காது கொடுத்து கேட்கிற மனோபாவம் இப்போது இல்லை.

அதை கொஞ்சம் காது கொடுத்து கேட்டீர்கள் என்றால் இமாம் இப்படிச் சொல்வார்.

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ النِّكَاحُ مِنْ سُنَّتِي فَمَنْ رَغِبَ عَنْ سُنَّتِي فَلَيْسَ مِنِّي

இந்த நபி இரு நபி மொழிகளின் சேர்க்கையாகும்.
இப்னும் மாஜாவில் இப்படி அருகிறது,

عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ النِّكَاحُ مِنْ سُنَّتِي فَمَنْ لَمْ يَعْمَلْ بِسُنَّتِي فَلَيْسَ مِنِّي وَتَزَوَّجُوا فَإِنِّي مُكَاثِرٌ بِكُمْ الْأُمَمَ وَمَنْ كَانَ ذَا طَوْلٍ فَلْيَنْكِحْ وَمَنْ لَمْ يَجِدْ فَعَلَيْهِ بِالصِّيَامِ فَإِنَّ الصَّوْمَ لَهُ وِجَاءٌ

அஹ்மதில் இப்படி ஒரு ஹதீஸ் வருகிறது,

عَنْ أَنَسٍ أَنَّ نَفَرًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَأَلُوا أَزْوَاجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ عَمَلِهِ فِي السِّرِّ فَقَالَ بَعْضُهُمْ لَا أَتَزَوَّجُ النِّسَاءَ وَقَالَ بَعْضُهُمْ لَا آكُلُ اللَّحْمَ وَقَالَ بَعْضُهُمْ لَا أَنَامُ عَلَى فِرَاشٍ وَقَالَ بَعْضُهُمْ أَصُومُ وَلَا أُفْطِرُ فَقَامَ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ مَا بَالُ أَقْوَامٍ قَالُوا كَذَا وَكَذَا وَلَكِنِّي أُصَلِّي وَأَنَامُ وَأَصُومُ وَأُفْطِرُ وَأَتَزَوَّجُ النِّسَاءَ فَمَنْ رَغِبَ عَنْ سُنَّتِي فَلَيْسَ مِنِّي(

திருமணங்களில் சொல்லப்படுகிற பூமான நபியின் இந்தக் கருத்து சாமாணயமானதல்ல. இது விச்யத்தில் சமரசத்திற்கு இடமில்லத படி சமூகத்தை ஒழுக்கத்தின் தளத்தில் நிலை நிறுத்தும் கருத்தாகும்.

சுதந்திரம் என்ற பெயரில் திருமணமில்லாமல் வாழும் கலாச்சாரத்திற்கும் அதற்கு வக்காலத்து வாங்கும் போலி முற்போக்கு தனத்திற்கும் எதிராக கொடி உயர்த்திப் பிடிக்கிற வாசகமாகும் இது.

அமெரிக்காவில் 50 சதவீத இளைஞர்களே  திருமணம் செய்து கொண்டுள்ளனர், இங்கிலாந்தில் 48 சதவீதம் பேர் தான் திருமணம் செயத்ள்ளனர்.

Barely half of Americans over the age 18 are married, according to a new reportfrom the Pew Research Institute. 

those observed in the UK in November, where researchers found that only 48 percent of adults there were married.

1960 களில் 71 சதவீதமாக இருந்த திருமணங்கள் இப்போது 50 சதவீதமாக சரிவு கண்டிருக்கிறது.

marriage is less important than it used to be in the lives of Americans. 

அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளில் மட்டுமல்ல இந்தியா போன்ற ஆசிய நாடுகளிலும் கூட 25 வயதுக்கும் 45 வயதுக்கும் இடைப்பட்ட ஒரு சாராரிடம் திருமணம் தேவையற்றது என்ற எண்ணம் பரவி வருகிறது. லைவ் டுகெதர்  -சேர்ந்து வாழ்தல் பழக்கம் உயர் தட்டு வகுப்பாரிடம் உருவாகி வருகிறது.

இந்தியாவுக்கோ உலகிற்கோ இது ஒன்றும் புதிதல்ல, நாகரீகமற்ற நாடோடிகளிடமும். சேரிவாழ் மக்களிடமும் இது நடைமுறையில் இருந்தது தான், மேற்கத்திய கல்வி பெற்று தனித்தனியான பொருளாதர பலம் படைத்த -  சமூக சிந்தனையற்ற வர்க்கம் அந்த அநாகரீகத்தை இப்போது நாகரீகமாக காட்ட முயற்சிக்கிறது.

ஜாஹிலிய்யாவில் இப்படி சேர்ந்து வாழும் பழக்கம் இருந்தது. இன்னும் விகாரமாக. ஒரு பெண்ணுடன் 10 பேர் சேர்ந்து வாழ்வார்கள்,

முஹம்மது நபி (ஸல்) ஒரு வாழும் சீர்திருத்தவாதியாக - புரட்சியாளராக 21 ம் நூற்றாண்டிலும் இந்த அநாகரீகத்திற்கு எதிராக ஒவ்வொரு இஸ்லாமிய திருமணத்திலும் குரல் கொடுத்து வருகிறார்கள். அது தான்

النِّكَاحُ مِنْ سُنَّتِي فَمَنْ رَغِبَ عَنْ سُنَّتِي فَلَيْسَ مِنِّي

திருமணத்தை எதிர்க்கிறாயா நீ என்னைச் சார்ந்தவனல்ல. தள்ளி நில அசிங்கம் பிடித்தவனே என்பது தானே இதன் கருத்து

திருமணம் செய்து கொள்ளாதவர்களை பெருமானார் கண்டித்த விதம் இந்த கருத்தை நமக்கு தருகிறது,

அக்காப் பின் பிஷ்ரை பெருமானா கண்டித்த விதம்

حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَاشِدٍ عَنْ مَكْحُولٍ عَنْ رَجُلٍ عَنْ أَبِي ذَرٍّ قَالَ دَخَلَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ يُقَالُ لَهُ عَكَّافُ بْنُ بِشْرٍ التَّمِيمِيُّ فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا عَكَّافُ هَلْ لَكَ مِنْ زَوْجَةٍ قَالَ لَا قَالَ وَلَا جَارِيَةٍ قَالَ وَلَا جَارِيَةَ قَالَ وَأَنْتَ مُوسِرٌ بِخَيْرٍ قَالَ وَأَنَا مُوسِرٌ بِخَيْرٍ قَالَ أَنْتَ إِذًا مِنْ إِخْوَانِ الشَّيَاطِينِ وَلَوْ كُنْتَ فِي النَّصَارَى كُنْتَ مِنْ رُهْبَانِهِمْ إِنَّ سُنَّتَنَا النِّكَاحُ شِرَارُكُمْ عُزَّابُكُمْ وَأَرَاذِلُ مَوْتَاكُمْ عُزَّابُكُمْ أَبِالشَّيْطَانِ تَمَرَّسُونَ مَا لِلشَّيْطَانِ مِنْ سِلَاحٍ أَبْلَغُ فِي الصَّالِحِينَ مِنْ النِّسَاءِ إِلَّا الْمُتَزَوِّجُونَ أُولَئِكَ الْمُطَهَّرُونَ الْمُبَرَّءُونَ مِنْ الْخَنَا ……..وَيْحَكَ يَا عَكَّافُ تَزَوَّجْ وَإِلَّا فَأَنْتَ مِنْ الْمُذَبْذَبِينَ قَالَ زَوِّجْنِي يَا رَسُولَ اللَّهِ قَالَ قَدْ زَوَّجْتُكَ كَرِيمَةَ بِنْتَ كُلْثُومٍ الْحِمْيَرِيِّ   - احمد


திருமணத்திற்கு எதிரான எந்த வாதமும் இந்நபிமொழியின் முன் தலை கவிழும். 

ஒரு சமூகத்தில் குடுமப் அமைப்பை காப்பாற்றுவதில் திருமணம் முக்கியப் பங்கு வகிக்கிறது. திருமணம் இல்லையே குடும்பம் இல்லை. குடும்பம் இல்லையேல் நாகரீக சமூகம் இல்லை,  

1948-ஆம் ஆண்டு செய்யப்பட்ட பன்னாட்டு மனித உரிமைப் பிரகடனம் (Universal Delaration of Human Rights)
குடும்பம் என்பது இயற்கையான மற்றும் சமூகத்தின் அடிப்படைக் குழுவாக இருக்கிறது; அரசாலும் சமூகத்தாலும் பாதுகாக்கப்படும் உரிமையை குடும்பம் பெற்றிருக்கிறது என்று கூறியுள்ளது
 ('The family is the natural and fundamental group unit of society and is entitled to protection by society and the State').

“குடும்பத்தை எதற்காக இயற்கையான அமைப்பு என்று சொல்கிறார்கள் என்றால், அது காலம் காலமாக இருக்கிறது. அரசாங்கம், நாடு போன்ற அமைப்புகள் உருவாவதற்கு முந்தைய காலத்திலிருந்தே குடும்பம் இருக்கிறது

அதனால் தான் ஆதிமனிதர் ஆதம் அலை காலத்திலிருந்து இன்று வரை நீடித்துக் கொண்டிருக்கிற அனைத்து நபிமார்களின் சுன்னத்தாக திருமணம் இருக்கிறது.

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْبَعٌ مِنْ سُنَنِ الْمُرْسَلِينَ التَّعَطُّرُ وَالنِّكَاحُ وَالسِّوَاكُ وَالْحَيَاءُ

எந்த சமூகங்களில் திருமணம் தாமதமாகிறதோ அல்லது திருமணம் விச்யத்தில் அலட்சியம் காணப்படுகிறதோ அங்கெல்லாம் நிம்மதி குறைந்து காணப்படுகிறது. சமுதாயம் அவலமான பல காட்சிகளை பார்த்துவருகிறது என்பது எதார்த்தம்.

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பில் (Organisation for Economic Co-operation and Development) இணைந்துள்ள ..சி.டி நாடுகள் எனப்படும் 34 முன்னேறிய நாடுகள் பாலியல் சுதந்திரத்தை ஏற்றுக் கொண்டு குடும்பத்தை விட தனி நபர்களின் மகிழ்ச்சி தான் முக்கியம் என கருதுகின்றன இந்த நாடுகளில் குடும்பங்களின் அழிவால் நேர்ந்துள்ள கேடுகள் நமக்கு ஒரு எச்சரிக்கையாகும்.
4.       ..சி.டி நாடுகளில் 25 முதல் 49 வயதுள்ள பெண்களில் 20 விழுக்காட்டினர் குழந்தை இல்லாமல் இருக்கின்றனர்..
5.       வாரக் கடைசி நாள்களில் மட்டும் சேர்ந்து என்ற அமைப்பால் திருமண பந்தத்திற்கு வெளியே குழந்தை பெறும் அளவு மிக அதிகமாகிவிட்டது.
6.       ..சி.டி நாடுகளில் பிறக்கும் குழந்தைகளில் திருமணம் செய்யாத பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளின் அளவு 1980-ஆம் ஆண்டில் 11 விழுக்காடாக இருந்தது. இது 2007-ஆம் ஆண்டில் 33 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
7.       ஒற்றைப் பெற்றோருக்கு குழந்தையாக வாழ்வது, திருமணம் செய்யாத பெற்றோருக்கு குழந்தையாக வாழ்வது, தாயோ தந்தையோ வேறொருவரைத் திருமணம் செய்வதால் மாற்றுப் பெற்றோருக்கு குழந்தையாக வாழ்வது போன்ற துயரம் மிகுந்த மனச்சூழலில் குழந்தைகள் வளரும் போக்கு அங்கு அதிகமாகிவிட்டது.
8.       தனது இயற்கையான பெற்றோருடன் வாழும் குழந்தைகள் மற்ற மாணவர்களைவிட அதிக மதிப்பெண்களைப் பெறுகின்றனர். நல்ல வேலைகளில் அமர்கின்றனர். குற்றச்செயல்களில் ஈடுபடுவதும் இவர்களிடம் குறைவாகவே இருக்கிறது.
9.       திருமண பந்தத்திற்கு வெளியே பிறக்கும் குழந்தைகள் குற்றச் செயல்களில் அதிகம் ஈடுபடுகின்றன. குழந்தைகள் சுயநலமிகளாக வளர்வதும் அதிகரித்திருக்கிறது.

அமெரிக்க அரசாங்கம் சமூக நலத்திட்டங்களுக்காகச் செலவிடும் சுமார் பத்து லட்சம் கோடி ரூபாய் பணத்தில் முக்கால் பங்கு ஒற்றைப் பெற்றோருக்கும், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வோருக்கும் செலவிடப்படுகிறது. அதாவது மேலை நாடுகளின் அரசாங்கத்தின் மிகப்பெரிய செலவு என்பது குடும்ப அமைப்பு மற்றும் திருமணத்தில் ஏற்படும் குறைபாடுகளைச் சமாளிக்கவே செலவிடப்படுகிறது .

அது மட்டுமல்ல குடுமப் அமைப்பின் சீர்குலைவால் போதைப் பழக்கத்திற்கு ஆளாகும் அடுத்த தலைமுறையை மீட்பதும் இதனால் தற்கொலை செய்து கொள்கிறவர்களின் எண்ணிக்கையை குறைப்பதும் அமெரிக்க போன்ற மேற்கத்திய நாடுகளின் முக்கிய கவலையாக இருக்கிறது என் ஆய்வுகள் தெரிவிக்கின்றன

(தினமணி – ரீடர்ஸ் டைஜஸ்ட்)   

அமெரிக்கர்கள் திருமணத்தை குறைத்தார்கள் என்றாலும் குழந்தை பெற்றுக் கொள்வதை நிறுத்த முடியவில்லை. அதனால் அங்கு எழுந்துள்ள பெரிய பிரச்சினை திருமணம் செய்யாத தாய்களின் எணணிக்கை அதிகரித்துள்ளது. (unwed mpthers)
இது பெண்களின் மீது பெரும் சுமையை ஏறபடுத்தியுள்ளது. மட்டுமல்ல குழந்தைகளுக்கு தந்தை என்பவரை அந்நியப்படுத்தியுள்ளது.

மிக முக்கியமாக ஆண்களின் பெறுப்புணர்வை மழுங்கடித்துள்ளது.

இன்றுள்ள அமெரிக்க பெண்களின் மிக முக்கிய கவலை என்ன தெரியுமா? கனவு என்ன தெரியுமா?
ஏதாவது ஒரு ஆண் மகன் வந்து வில் யூ மேரீ மீ என்று கேட்க மாட்டானா? எனபது தான்

காலம் மாறும். திருமணம் என்ற அற்புதமான் ஏற்பாட்டிற்காக உலகம் ஏங்கும்!  இப்போது இயறகையான காற்றுக்கும் - விவசாயப் பொருட்களுக்கும் ஏங்குவது போல திருமணத்திற்கு ஏங்கும்.

முஸ்லிம் சமூகத்திற்கு இந்த தடுமாற்றம் இல்லை.

இன்றும் அமெரிக்கா இங்கிலாந்து மற்ற ஐரோப்பிய நாடுகளில் செயல்படுகிற இஸ்லாமிய அமைப்புக்கள் லிவ் டு கெதர் அசிங்கத்தில் முஸ்லிம் இளைஞர்களும் இஸ்லாத்தை தழுவுகிறவர்களும் சிக்கிக் கொள்ளாதவாறு பார்த்து வருகின்றன.
இலன்டனிலிருந்து செய்லபடுகிற eropean council for fatwa and research போன்ற அமைப்புக்கள் இதற்காக முயற்சி எடுத்து வருகின்றன.

பெருமானாரின் ஒரு செய்தி இத்தகைய தடுமாற்றத்திற்கு ஆளாவதிலிருந்து முஸ்லிம் சமூகத்தை உலகளாவிய அளவில் பாதுகாத்து வருகிறது.

இன்றைய கால கட்டத்தில் திருமணத்தின் மூலம் ஒரு புதுவாழ்வை தொடங்குகிற போது இது நமக்கு கிடைத்த பாக்கியம் என்பதை இளைஞர்களும் இளம் பெண்களும் புரிந்து கொள்ள வேண்டும்,

காட்டு மிராண்டிகளின் கூட்டத்தில் இல்லாம்ல் மனித நாகரீகத்தை கடைபிடிக்க வாய்ப்பளித்த அல்லாஹ்விற்கு நன்றி செலுத்த வேண்டும்.

திருமணம் செய்து கொள்ள தயாராகும் பலர் எதற்காக திருமணம் செய்கிறோம் என்ற நிய்யத்தை யோசிப்பதே இல்லை.
கல்யாண வயசாச்சு அல்லது பெற்றோருக்கு வயசாச்சு என்பது மட்டுமே இன்றைய திருமணத்தின் நிய்யத்தாக் இருக்கிறதும் மணமக்களுக்கும் அவர்களுடைய பெற்றோர்களும்.

திருமணத்தின் இலக்கை இளைஞர்களும் பெற்றோர்களும் புரிந்து கொள்ள் வேண்டும்.

திருக்குர் ஆன் அற்புதமாக் அந்த இலக்கை கற்றுத்தருகிறது,

رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا(74(25:

இரண்டு இலக்கு
1.   மகிழ்சி
2.       இறையச்சமுள்ள சமுதாயத்தின் வளர்ச்சி

நான் மகிச்சியாக இருக்கவும் இறயச்சமுள்ள மனித குலத்தின் வளர்ச்சிக்காகவும் திருமணம் செய்கிறேன் என்பதை இளைஞர்கள் நிய்யத்தாக வைத்துக் கொள்ளவேண்டும்.

கல்யாணமாகி காலம் கடந்து விட்டவர்களும் இப்படி நிய்யத் வைத்துக் கொள்ளலாம். ஆரம்பத்தில் பிஸ்மில்லா சொல்ல மறந்து விட்டால் சாப்பாட்டுக்கு இடையே பிஸ்மில்லா சொல்வதில்லையா ? அது போல !

திருமணத்தினால் தனி நபர்களுக்கு கிடைப்பது மகிழ்ச்சி எனில் சமுதாயத்திற்கு கிடைப்பது நல்ல குடும்பத்தின் வளர்ச்சி

திருக்குர் ஆன் திருமணத்தின் நன்மைகளை அழகு பட பேசுகிறது,

·         எல்லா நேரத்திலும் மனஅமைதி
·         இளமையில் அன்பு
·         முதுமையில் கருணை

وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ(21)

பலரும் மன அமைதியையும் அன்பையும் கருணையையும் மனைவி தான் கணவனுக்கு தர வேண்டும் என்று நினைக்கிறார்கள். எனவே அமைதி தரவும் அன்பு காட்டவும் கருணையை பொழியவும் மனைவிதான் கடமைப்பட்டிருக்கிறாள் என்று நினைககிறார்கள்.

அடிப்படையில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ள செய்தி இது. அல்லாஹ் மனைவி என்று சொல்ல வில்லை ஜோடி - இணை என்று தான் சொல்லியிருக்கிறான்.

அமைதிதருவதை  அன்பு காட்டுவதை கருணை பொழிவதை இருவருக்குமான பொது கடமையாக எடுத்டுக் கொள்ள வேண்டும்.

இதில் குறிப்பாக ஆண்கள் கவனத்தில் கொள்வது – சீக்கிரத்தில் டென்சனாகிறவர்களும் – அமைதி இழக்கிறவர்களும் அவர்கள் தான் – தங்களது அமைதியை நிம்மதியை அவர்கள் தான் அதிகம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

வெளி உலகில் கசங்கி வருகிற போது மனைவியிடமிருந்து நிம்மதி கிடைக்க வேண்டும் எனில் அந்த நிம்மதியில் அவளை வாழ வைத்தால் தான் அது சாத்தியம்.

மிகச் சின்ன உதாரணம் செல்போனுக்கு சார்ஜ் வேண்டும் என்றால் கரண்ட் இருக்கிற பிளக்கில் இருந்துதான் சார்ஜ் ஏற்ற முடியும். மின்சாரம் இல்லாத இடத்தில் சார்ஜ் ஏற்றிக் கொள்ள முடியாது. அமைதியில்லாத சம்சாரத்திடமிருந்து நிம்மதி பெற முடியாது.,

திருக்குர் ஆன் இன்னொரு விசயத்தையும் சரிசமமாக பேசியுள்ளது. இந்த வசனத்தை கேட்டிருப்பீர்கள். வியந்திருப்பீர்கள். இங்கே புரிந்து கொள்ள வேண்டியது,

கணவன் மனைவியை திருக்குர் ஆன் ஆடையோடு ஒப்பிட்டது, அதற்கு திருக்குர் ஆனின் விரிவுரையாளர்கள் தருகிற முதல் கருத்து
·         ஒருவருக் கொருவர் ஆறுதலாக இருக் வேண்டும்  
அதற்கு வேறு கருத்துக்களும் உண்டு,
·         ஒருவருடன் சேர்ந்தே இருக்க வேண்டும்
·         ஒருவரின் இரகசியத்தை மற்றவர் பாதுகாக வேண்டும்.
·         ஒருவர் இன்னொருவரின் மரியாதையை வெளிப்படுத்த வேண்டும்..ஆள்பாதி ஆடை பாதி என்பார்களே அது போல.

இதில் ஒவ்வொரு விச்யத்திலும் நீ அவளிடமிருந்து என்ன விரும்புகிறாயே அதை அவளுக்கு நீ கொடுக்க வேண்டும்

திருக்குர் ஆன் கற்றுத் தரும் திருமணத்திற்கான நிய்யத்தையும் திருமணத்தின் நன்மைகளையும் ஒவ்வொரு இளைஞனும் குடும்பஸ்தரும் நினைவில் வைத்துக் கொண்டால் அறிஞர் சஃதி சொன்னது போல் நல்ல குடும்பம் பூமியில் இருக்கும் சொர்க்கத்தின் ஒரு துண்டு தான்.

அன்பான ஆலிம்களுக்கு 
தகுந்த இடத்தில் இவற்றையும் தேவை எனில் சேர்த்துக் கொள்ளலாம்

திருமணம் கற்பொழுக்கத்தை பாதுகாக்க கூடியது.
·         ﻓﺎﻧﻪ ﺍﻏﺾ ﻟﻠﺒﺼﺮ ؤﺍﺣﺼﻦ ﻟﻠﻔﺮﺝ 
·         திருமணம் செய்யாமல் கற்ப்பொழுக்கப் படி வாழவ்து சிரமம்

ஆலயத்தில்
மாதேவா என்பவர்கள்
அந்தரங்கத்தில்
மாதே வா என் கின்றனர்.
வெளியே
புத்தம் சரணம் கச்சாமி என் கிறவர்கள்
உள்ளே
முத்தம் சரணம் கச்சாமி
என் கின்றனர்.
நாட்டில்
சாமியார்களுக்கும்
மாமியார்கள்
உண்டு.
கவிதை திமு அப்துல் காதிர் அண்ணனுடையது.

·         அறுபதிலும் ஆசை வரும் என் கிறாற்களே ஆசை எப்போது அடங்கும் என எழுத்தாளர் சுஜாதா விடம் கேட்கப் பட்டது. ( ஏன் எதற்கு எப்படி]
திருமணம் செய்த மனிவியடம் தான் ஆசை அடங்கும் என அவர் பதிலளித்தார். 
·         மனிதனின் காம இச்சைகான தீர்வு திருமண வாழ்வில் தான் இருக்கிறது

குடுமப் அமைப்பின் நன்மைகள்

·         வெளிநாடுகளில் சம்பாதித்துதன் நாட்டிற்கு பணம் அனுப்பும் நாடுகளின்பட்டியலில் உலகிலேயே முதல் இடத்தில் இருப்பவர்கள் நமது இந்தியர்கள்தான்.2010-ஆம் ஆண்டில் மட்டும் வெளிநாடுகளில் வேலை செய்வோர் இந்தியாவில்உள்ள தங்களின் குடும்பத்தினருக்கு அனுப்பிய பணம் மூன்று லட்சம் கோடிரூபாய் என்கிறது புள்ளிவிவரம். இது அரசாங்கம் நீட்டி முழக்கும் நேரடி அன்னியமுதலீடுகளைவிட அதிகமானதாகும்.
·         "இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை'. 
·         குடும்பத் தலைவன் என்பவன் பெற்றோர் , மனைவி , மக்கள் ஆகிய மூவருக்கும் இறுதி வரை துணையாவான் என குறிப்பிடுகிறார் திருவள்ளுவர்
·         உலக அமைதிவறுமை ஒழிப்புசமூக ஒற்றுமைவளர்ச்சிசுற்றுச்சூழல்பாதுகாப்பு என நல்ல இலக்கு எதை எடுத்துக் கொண்டாலும் அதன் வெற்றிக்குஅடித்தளமாக இருப்பது குடும்பம்தான்.

·         அண்மைக் காலங்களில் மேற்கத்திய அநாகரிகங்களின் தாக்கத்தால் கட்டற்றபாலியல் சுதந்திரம்திருமணத்திற்கு முன்பே சேர்ந்து வாழ்தல்பெற்றோரின்ஒப்புதல் இல்லாத காதல் திருமணங்களை ஊக்குவித்தல் என்பன தமிழ்நாட்டில்பேசப்படுவதன் வாயிலாக குடும்ப அமைப்புக்கு ஆபத்து நேர்ந்திருக்கிறது.
·         குடும்பம்அரசுக்கு முந்தையதுஅரசை விட மேலானதுஇயற்கையானது.

·         குடும்பம்திருமணம்பாலியல் உரிமை போன்ற விடயங்களில் மேலைநாடுகள் என்னென்ன தவறுகளைச் செய்தனவோஅதே தவறுகளை நாம்செய்துவிடக் கூடாது. 


2 comments:

  1. Anonymous12:07 AM

    sharafudheen rabbani


    மிக அற்புதமான விஷயங்கள் 

    ReplyDelete