வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Sunday, October 05, 2014

முஸ்லிம் என்பவன் தியாகி தீவிரவாதி அல்ல

وَإِذْ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِي الظَّالِمِينَ

அனைவருக்கும் இனிய ஹஜ்ஜுப் பெருநாள் நலவாழ்த்துக்கள். இன்றைய தினத்தை அல்லாஹ் பாக்கியமானதாக ஆக்கியருள்வானாக! இன்றைய மகிழ்ச்சியையும் நல்லுணர்வுகளையும் காலமெல்லாம் நிலைக்கச் செய்வானாக! முஸ்லிம் உம்மத்திற்கு வெற்றியையும் அமைதியையும் சந்தோஷத்தையும் தந்தருள்வானாக!

இன்றைய நாளில் எத்தனை இடங்களில் பெருநாள் தொழுகை நடை பெறுகீறதோ அத்தனை இடங்களிலும் இபுறாகீம் அலை பேசப்படுவார்கள்.

ஒரு விசயம் திரும்ப திரும்ப சொல்லப் பட்டால் கீறல் விழுந்த ரிகார்டு என்போம்.

4000 ஆயிரம் வருடங்களாக சொல்லப்படுகிற இபுறாகீம் அலை இஸ்மாயீல் அலை அவர்களுடைய வரலாறு எவ்வளவு கேட்டாலும் கீறல் விழாதது மட்டுமல்லநம் வாழ்வை கீறல் விழாதவாறு பாதுகாக்கும் சக்தி படைத்ததது.

இபுறாகீம் அலை உலகின் அதிக பெறுமைக்குரிய மனிதர்.

ரெஸ்பெக்ட் என்பதை நீங்கள் விரும்புவீர்கள் எனில் இபுறாகீம் நபியை பார்த்து நீங்கள் ஆசைப்படாமலும் பொறாமைப் படாமலும் ஒருக்க முடியாது.
 The Most respectable person in mankind

முஸ்லிம்கள் யூதர்கள் கிருத்துவர்கள் ஆகிய உலகின் மூனறு முக்கிய இனங்களின் தந்தையாகக் கருதப்படும் இப்ராஹீம் (அலை) அவர்கள் திருக்குர்ஆனில் மட்டுமின்றி, தோரா, பைபிள் ஆகிய வேதங்களிலும் பாராட்டப்ப்டுகிறார்.

இந்த மூன்று மதங்களும் இபுறாகீம் நபியின் பெயரால் இபுறாகீமிய மதங்கள் (Abrahamic religions  என்று அழைகப்படுகின்றன.

நூஹ் (அலை) அவர்களின் பத்தாவது தலைமுறையில் ஆஸர் என்பவரின் மகனாக கிமு 2160 தென் இராக்கில் உள்ள் உர் என்ற ஊரில் இப்ராஹீம் (அலை) பிறந்தார்கள், பழைய பாப்லோனிய நகரத்தின் ஒரு பகுதியாக அது இருந்தது, மொசபடோமியா என்ற்ழைக்கப்பட்ட நாடாக அது இருந்தது.

ஸாரா ஹாஜரா இரண்டு மனைவிகளுடனும். இஸ்மாயீல் இஸ்ஹாக் என்ற இருமகன்கள் (வேறு மனைவியர்களும் பிள்ளைகளும் இருந்ததாகவும் ஒரு கருத்து உண்டு) 175 ஆண்டுகள் கடந்த அவருடை வாழ்க்கை பயணம். இன்றைய ஜெரூசலத்திலிருந்து 35 கிலோ மீட்டர் தொலைவிலிருக்கிற ஒரு ஊரில் முடிந்தது அங்கு அவர் அடக்கம் செய்யபட்டிருக்கிறார். அந்த ஊருக்கு மதீனத்துல் கலீல் என்று பெயர். அவரது வாழ்க்கை பெற்றுக் கொடுத்த அற்புத பட்டம அது.,

இறைவன் மீதும், அவன் கருணையின் மீதும் கொண்டிருந்த முழுமையான நம்பிக்கையின் காரணமாக , அல்லாஹ்வின் நண்பர் -- கலீலுல்லாஹ் -- என்ற கண்ணியம் மிக்க  அந்தஸ்தை அவர் பெற்றார்.
وَاتَّخَذَ اللَّهُ إِبْرَاهِيمَ خَلِيلًا(125)

ஐவேளைத் தொழுகையிலும், இப்ராஹீமுக்கும் அவரது சந்ததியினருக்கும் அருள் செய்தது போல முஹம்மதுவுக்கும் அவர்களது சந்ததியினருக்கும் அருள் பாலிப்பாயாக என்று பிரார்த்தனையில் கேட்கும் அளவுக்கு இப்ராஹீம் (அலை) அவர்களின் புகழை அல்லாஹ் வாழ்வாங்கு உயர்த்தியுள்ளான்..

இபுறாகீம் என்ற பெயரில் ஒரு அத்தியாயத்தை (14) அமைத்தான்.
சுமார் 69 இடங்களில் இபுறாகீம் நபியின் பெயரை பயன்படுத்தியுள்ளான்.

படைப்பினங்களில் சிறந்தவர்அவரை பெருமானார் (ஸல்) பாராட்டினார்கள்.
أَنَسَ بْنَ مَالِكٍ يَقُولُ قَالَ رَجُلٌ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا خَيْرَ الْبَرِيَّةِ قَالَ ذَلِكَ إِبْرَاهِيمُ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ – الترمذي 3275
உருவத்தில் தான் இப்ராஹீம் (அலை) அவர்களைப் போல இருப்பதாக  நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்,  (புகாரி 3355, முஸ்லிம் 169).

ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ أَمَّا إِبْرَاهِيمُ فَانْظُرُوا إِلَى صَاحِبِكُمْ وَأَمَّا مُوسَى فَجَعْدٌ آدَمُ عَلَى جَمَلٍ أَحْمَرَ مَخْطُومٍ بِخُلْبَةٍ كَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ انْحَدَرَ فِي الْوَادِي

மறுமை நாளில் முதலில் ஆடை அணிவிக்கப்படுபவர்

عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تُحْشَرُونَ حُفَاةً عُرَاةً غُرْلًا ثُمَّ قَرَأَ كَمَا بَدَأْنَا أَوَّلَ خَلْقٍ نُعِيدُهُ وَعْدًا عَلَيْنَا إِنَّا كُنَّا فَاعِلِينَ فَأَوَّلُ مَنْ يُكْسَى إِبْرَاهِيمُ  

அல்லாஹ் அவர் கேட்டதை எல்லாம் அவருக்கு கொடுத்தான்

رَبِّ هَبْ لِي حُكْمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ(83)وَاجْعَلْ لِي لِسَانَ صِدْقٍ فِي الْآخِرِينَ(84)وَاجْعَلْنِي مِنْ وَرَثَةِ جَنَّةِ النَّعِيمِ(85)وَاغْفِرْ لِأَبِي إِنَّهُ كَانَ مِنْ الضَّالِّينَ(86)وَلَا تُخْزِنِي يَوْمَ يُبْعَثُونَ(87)
என தந்தையை நரகில் போட்டு என்னை கேவலப்படுத்தி விடாதே என்று கேட்டார். அதுவும் அவருக்கு கிடைத்தது வேறொரு வடிவத்தில்.

இப்ராஹீம் (அலை) அவர்களின் தந்தைக்கு கடைசியில் என்ன நேரும் என்பதை அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்.

இறுதி நாளில் இப்ராஹீம் தம்முடைய தந்தை ஆஸரைச் சந்திப்பார். ஆஸரின் முகத்தில் புகையின்  கருமையும் புழுதியும் படிந்திருக்கும் . எனக்கு மாறு செய்ய வேண்டாம் என்று நான் உங்களுக்குக் கூறவில்லையா என்று இப்ராஹீம் கூறுவார். அதற்கு, இன்றைய தினம் நான் உமக்கு மாறு செய்ய மாட்டேன் என்று அவருடைய தந்தை கூறுவார். உடனே இப்ராஹீம், என்னுடைய இறைவா ! மக்களுக்கு உயிர் கொடுத்து எழுப்பப் படும் மறுமைநாளில் என்னை இழிவுடுத்த மாட்டாய் என்று எனக்கு நீ வாக்களித்திருந்தாய். உன் கிருபையை விட்டு வெகு தூரத்தில் என் தந்தை இருப்பதை விட அதிகமான இழிவு ஏதாவது இருக்கிறதா? என்று பிரார்த்திப்பார். அப்போது, இறைமறுப்பாளர்களுக்கு சுவர்க்கத்தை நான் விலக்கி வைத்திருக்கிறேன் என்று அல்லலஹ் கூறுவான். பின்னர், இப்ராஹீமே, உமது காலடியில் இருப்பது என்னவென்று பாருங்கள் என்று கூறப்படும்   . உடனே அவர் பார்ப்பார். அப்போது உதிரத்தில் தோய்ந்த கழுதைப்புலி  இருக்கும். அதன் கால்களைப் பிடித்து நரக நெருப்பில் போடப்படும் (புகாரி, 3350).

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَلْقَى إِبْرَاهِيمُ أَبَاهُ آزَرَ يَوْمَ الْقِيَامَةِ وَعَلَى وَجْهِ آزَرَ قَتَرَةٌ وَغَبَرَةٌ فَيَقُولُ لَهُ إِبْرَاهِيمُ أَلَمْ أَقُلْ لَكَ لَا تَعْصِنِي فَيَقُولُ أَبُوهُ فَالْيَوْمَ لَا أَعْصِيكَ فَيَقُولُ إِبْرَاهِيمُ يَا رَبِّ إِنَّكَ وَعَدْتَنِي أَنْ لَا تُخْزِيَنِي يَوْمَ يُبْعَثُونَ فَأَيُّ خِزْيٍ أَخْزَى مِنْ أَبِي الْأَبْعَدِ فَيَقُولُ اللَّهُ تَعَالَى إِنِّي حَرَّمْتُ الْجَنَّةَ عَلَى الْكَافِرِينَ ثُمَّ يُقَالُ يَا إِبْرَاهِيمُ مَا تَحْتَ رِجْلَيْكَ فَيَنْظُرُ فَإِذَا هُوَ بِذِيخٍ مُلْتَطِخٍ فَيُؤْخَذُ بِقَوَائِمِهِ فَيُلْقَى فِي النَّارِ
இணை வைத்தவரான ஆஸர் கழுதைப் புலியாக மாற்றப் பட்டு நரகத்தில் போடப்படுவார் என்பதே இதன் கருத்து. அவர் மனிதத் தோற்றத்தில் இருந்தால் இபுறாகீம் (அலை) அவர்களுக்கு வேதனை ஏற்படும் என்பதற்காக இந்த ஏற்பாடு புகாரியி விரிவுரையாளர் ஐய்னீ குறிப்பிடுகிறார்

பஞச பூதங்களின் தன்மையை அல்லாஹ் மாற்றுவதில்லை. எங்கும் தண்ணீர் குளிரும் நெருப்பு சுடும் ஆனால் இபுறாகீம் அலை அவர்களுக்காக அல்லாஹ் மாற்றினான்.
கிமு 2019 லிருந்து சுமார் 400 ஆண்டுகளாக இராக்கை  ஆட்சி செய்த அன்றைய இராக்கிய முரட்டு மன்னன் நம்ரூது அவரை நெருப்பில் இட்ட போது அதை அவருக்கு இதமான குளிராக மாற்றினான்.

அந்த நேரத்தில் இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு வியர்த்ததாகவும், அதை ஜிப்ரயீல் (அலை) அவர்கள் துடைத்து விட்டதாகவும், அந்த வியர்வையைத் தவிர வேறு துன்பம் எதுவும் அவர்களுக்கு இல்லை என்று ழஹ்ஹாக் கூறினார்.


وقال الضحاك: يروي أن جبريل عليه السلام كان معه يمسح العرق عن وجهه لم يصبه منها شيء غيره.
தன் மகனை அந்த நிலையில் பார்த்த ஆஸர் கிண்டலாக, எவ்வளவு அருமையானவன் உன்  என்று சொன்னதாக அபூ ஹுரைரா ரலி கூறுகிறார்,

فعن أبي هريرة أنه قال: أحسن كلمة قالها أبو إبراهيم إذ قال لما رأى ولده على تلك الحال: نعم الرب ربك يا إبراهيم!
சுகமாகக் குளிர்ந்து விட்ட அந்த நெருப்புக் குண்டத்துக்குள் இப்ராஹீம் (அலை) நாற்பது அல்லது ஐம்பது நாட்கள் இருந்ததாக மின்ஹால் இப்னு அம்ர் கூறுகிறார். அந்த சில நாட்களில் நான் வாழ்வின் இன்பத்தை நுகர்ந்தது போன்று வேறு எப்போதுமே நுகர்ந்ததில்லை என்று இப்ராஹீம் (அலை) சொன்னார்களாம்!

وعن المنهال بن عمرو أنه قال: أخبرت أن إبراهيم مكث هناك إما أربعين وإما خمسين يوماً، وأنه قال: ما كنت أياماً وليالي أطيب عيشاً إذ كنت فيها. ووددت أن عيشي وحياتي كلها مثل إذ كنت فيها. صلوات الله وسلامه عليه.)இப்னு கஸீர் -

கஅபா எனும் புனித ஆலயத்தைக் கட்டிய பெருமைக்கு இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு இறைவன் சிறப்பான கண்ணியத்தைக் கொடுத்தான். வானவர்கள், மற்றும் விண்ணுலக வாசிகளின் கஅபாவான அல் பைத்துல் மஅமூருக்கு அருகில் ஏழாவது வானத்தில் இப்ராஹீம் (அலை) இறைவன்  வைத்தான் என்கிறார் இப்னு கதீர் தனது  விண்ணேற்றப் பயணத்தின் போது ஏழாவது வானத்தில் இப்ராஹீம் அவர்களைச் சந்தித்தார்கள்.

அவருடைய வாழ்க்கையின நிகழ்வுகளை நினைவூட்டுபவையாகத்தான் ஹஜ்ஜும் குர்பானியும் அமைந்திருக்கின்றன,

மூன்று மத்தவர்கள் இபுறாகீம் நபிக்கு சொந்தம் கொண்டாடினாலும் முஸ்லிம்கள் தான் அவருக்கு வாரிசுகள் உரிமை படைத்தவர்கள் என்கிறான் அல்லாஹ்.
مَا كَانَ إِبْرَاهِيمُ يَهُودِيًّا وَلَا نَصْرَانِيًّا وَلَكِنْ كَانَ حَنِيفًا مُسْلِمًا وَمَا كَانَ مِنْ الْمُشْرِكِينَ
إِنَّ أَوْلَى النَّاسِ بِإِبْرَاهِيمَ لَلَّذِينَ اتَّبَعُوهُ وَهَذَا النَّبِيُّ وَالَّذِينَ آمَنُوا وَاللَّهُ وَلِيُّ الْمُؤْمِنِينَ(68 ,67 3
காரணம் முஸ்லிம்கள் தான் இபுறாகீம் நபியின் தூய கொள்கை வழியை பின்பற்றுகிறார்கள். அவர் தொடங்கி வைத்த வழிபாடுகளை இன்று வரை உலகில் தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இத்தனை பெறுமைக்கும் புகழுக்கும் உரிய் இபுறாகீம் நபியின் வாழ்வு பெருமைக்குரிய வாழ்விற்கான வழிகளை முஸ்லிம் உம்மத்திற்கு சொல்லிக் கொடுக்கிறது, அதன் ஒவ்வொரு அம்சத்திலும்.

இபுறாகீம் அலை தனது வாழ்வில் ஏராளமான போராட்டக் களங்களை எதிர் கொண்டார்.

இபுறாகீம் நபியின்  போராட்டங்களை அற்புமாக  கூறுகிற திருக்குர் ஆன் இபுறாகீம் நபியின் நாயகத்தன்மையை (heroism ) -  அவர் கடைபிடித்த வழுமுறைகளை -படம் பிடிக்கின்றன.

(அற்புதமான் இந்த வசனங்களை பெருநாள் உரையில் முழுமையாக விளக்கமுடியாது என்றாலும் ஆலிம்களுக்கு ஒரு தொகுப்பாக இருக்கட்டுமே என்று தருகிறேன். )

·        وَاذْكُرْ فِي الْكِتَابِ إِبْرَاهِيمَ إِنَّهُ كَانَ صِدِّيقًا نَبِيًّا(41)إِذْ قَالَ لِأَبِيهِ يَاأَبَتِ لِمَ تَعْبُدُ مَا لَا يَسْمَعُ وَلَا يُبْصِرُ وَلَا يُغْنِي عَنْكَ شَيْئًا(42)يَاأَبَتِ إِنِّي قَدْ جَاءَنِي مِنْ الْعِلْمِ مَا لَمْ يَأْتِكَ فَاتَّبِعْنِي أَهْدِكَ صِرَاطًا سَوِيًّا(43)يَاأَبَتِ لَا تَعْبُدْ الشَّيْطَانَ إِنَّ الشَّيْطَانَ كَانَ لِلرَّحْمَانِ عَصِيًّا(44)يَاأَبَتِ إِنِّي أَخَافُ أَنْ يَمَسَّكَ عَذَابٌ مِنْ الرَّحْمَانِ فَتَكُونَ لِلشَّيْطَانِ وَلِيًّا(45)قَالَ أَرَاغِبٌ أَنْتَ عَنْ آلِهَتِي يَاإِبْراهِيمُ لَئِنْ لَمْ تَنتَهِ لَأَرْجُمَنَّكَ وَاهْجُرْنِي مَلِيًّا(46)قَالَ سَلَامٌ عَلَيْكَ سَأَسْتَغْفِرُ لَكَ رَبِّي إِنَّهُ كَانَ بِي حَفِيًّا(47)وَأَعْتَزِلُكُمْ وَمَا تَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ وَأَدْعُو رَبِّي عَسَى أَلَّا أَكُونَ بِدُعَاءِ رَبِّي شَقِيًّا(48
·        إِذْ قَالَ لِأَبِيهِ وَقَوْمِهِ مَا هَذِهِ التَّمَاثِيلُ الَّتِي أَنْتُمْ لَهَا عَاكِفُونَ(52)قَالُوا وَجَدْنَا آبَاءَنَا لَهَا عَابِدِينَ(53)قَالَ لَقَدْ كُنتُمْ أَنْتُمْ وَآبَاؤُكُمْ فِي ضَلَالٍ مُبِينٍ(54)قَالُوا أَجِئْتَنَا بِالْحَقِّ أَمْ أَنْتَ مِنْ اللَّاعِبِينَ(55)قَالَ بَل رَبُّكُمْ رَبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ الَّذِي فَطَرَهُنَّ وَأَنَا عَلَى ذَلِكُمْ مِنْ الشَّاهِدِينَ(56) وَتَاللَّهِ لَأَكِيدَنَّ أَصْنَامَكُمْ بَعْدَ أَنْ تُوَلُّوا مُدْبِرِينَ(57)فَجَعَلَهُمْ جُذَاذًا إِلَّا كَبِيرًا لَهُمْ لَعَلَّهُمْ إِلَيْهِ يَرْجِعُونَ(58)قَالُوا مَنْ فَعَلَ هَذَا بِآلِهَتِنَا إِنَّهُ لَمِنْ الظَّالِمِينَ(59)قَالُوا سَمِعْنَا فَتًى يَذْكُرُهُمْ يُقَالُ لَهُ إِبْرَاهِيمُ(60)قَالُوا فَأْتُوا بِهِ عَلَى أَعْيُنِ النَّاسِ لَعَلَّهُمْ يَشْهَدُونَ(61)قَالُوا أَأَنْتَ فَعَلْتَ هَذَا بِآلِهَتِنَا يَاإِبْرَاهِيمُ(62)قَالَ بَلْ فَعَلَهُ كَبِيرُهُمْ هَذَا فَاسْأَلُوهُمْ إِنْ كَانُوا يَنطِقُونَ(63) فَرَجَعُوا إِلَى أَنفُسِهِمْ فَقَالُوا إِنَّكُمْ أَنْتُمْ الظَّالِمُونَ(64)ثُمَّ نُكِسُوا عَلَى رُءُوسِهِمْ لَقَدْ عَلِمْتَ مَا هَؤُلَاءِ يَنطِقُونَ(65)قَالَ أَفَتَعْبُدُونَ مِنْ دُونِ اللَّهِ مَا لَا يَنفَعُكُمْ شَيْئًا وَلَا يَضُرُّكُمْ(66)أُفٍّ لَكُمْ وَلِمَا تَعْبُدُونَ مِنْ دُونِ اللَّهِ أَفَلَا تَعْقِلُونَ(67)قَالُوا حَرِّقُوهُ وَانصُرُوا آلِهَتَكُمْ إِنْ كُنتُمْ فَاعِلِينَ(68)قُلْنَا يَانَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ(69)وَأَرَادُوا بِهِ كَيْدًا فَجَعَلْنَاهُمْ الْأَخْسَرِينَ(70)
·        أَلَمْ تَرَ إِلَى الَّذِي حَاجَّ إِبْرَاهِيمَ فِي رَبِّهِ أَنْ آتَاهُ اللَّهُ الْمُلْكَ إِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّي الَّذِي يُحْيِي وَيُمِيتُ قَالَ أَنَا أُحْيِي وَأُمِيتُ قَالَ إِبْرَاهِيمُ فَإِنَّ اللَّهَ يَأْتِي بِالشَّمْسِ مِنْ الْمَشْرِقِ فَأْتِ بِهَا مِنْ الْمَغْرِبِ فَبُهِتَ الَّذِي كَفَرَ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ(258)
·        رَبَّنَا إِنِّي أَسْكَنتُ مِنْ ذُرِّيَّتِي بِوَادٍ غَيْرِ ذِي زَرْعٍ عِنْدَ بَيْتِكَ الْمُحَرَّمِ رَبَّنَا لِيُقِيمُوا الصَّلَاةَ فَاجْعَلْ أَفْئِدَةً مِنْ النَّاسِ تَهْوِي إِلَيْهِمْ وَارْزُقْهُمْ مِنْ الثَّمَرَاتِ لَعَلَّهُمْ يَشْكُرُونَ(37)
·        فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَابُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَى قَالَ يَاأَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ سَتَجِدُنِي إِنْ شَاءَ اللَّهُ مِنْ الصَّابِرِينَ(102) فَلَمَّا أَسْلَمَا وَتَلَّهُ لِلْجَبِينِ(103) وَنَادَيْنَاهُ أَنْ يَاإِبْرَاهِيمُ(104)قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ(105)إِنَّ هَذَا لَهُوَ الْبَلَاءُ الْمُبِينُ(106)وَفَدَيْنَاهُ بِذِبْحٍ عَظِيمٍ(107)وَتَرَكْنَا عَلَيْهِ فِي الْآخِرِينَ(108) سَلَامٌ عَلَى إِبْرَاهِيمَ(109)كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ(110)إِنَّهُ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِينَ(111)وَبَشَّرْنَاهُ بِإِسْحَاقَ نَبِيًّا مِنْ الصَّالِحِينَ(112)وَبَارَكْنَا عَلَيْهِ وَعَلَى إِسْحَاقَ وَمِنْ ذُرِّيَّتِهِمَا مُحْسِنٌ وَظَالِمٌ لِنَفْسِهِ مُبِينٌ(113)


·         ஆரம்பத்திலே சிலை செய்யும் குடுமத்தினருடன் போராட்டம்
·         பிறகு சிலை வணங்கும் சமூகத்தினருன் போராட்டம்
·         அதன பிறகு முரட்டு அரசன நம்ரூதிடம் கொள்கை போராட்டம்
·         இதிலிருந்தெல்லாம் வெற்றி பெற்ற குடும்ப பாசமும் இறைக்கட்டளைகளும் மோதிக் கொண்ட போராட்டம். மனைவியை விட்டுப் பிரியவும் மகனை அறுக்கவும்.

இவை அனைத்திலும் அவர் வெற்றி கொண்டார்.

முஸ்லிம்களுக்கு நமபிக்கை அளிக்கிற செய்தி. உலகளாவிய அளவில் இன்று முஸ்லிம்களின் வாழ்வு போராட்டக களமாக இருக்கிறது  ஈமானிய வாழ்வில் போராட்டங்கள் முடிவல்ல. தொடக்கம். அவற்றை நாம் எதிர் கொண்டு வெற்றி பெற வேண்டும்.
போராட்டங்களை எதிர் கொள்ளாமல் பெரும் வெற்றியை எதிர்பார்க்க முடியாது.

நமது போராட்டங்களை சரியாகவும் தெளிவாகவும் எதிர் கொள்ள வேண்டும்.  
நம்ருத்  இபுறாகீம் அலை அவர்களிடம் விவாதம் செய்த போது உயிர்ப்பித்தலுக்கும் மரணிக்கச் செய்தலுக்கும் முட்டாள்தனமாக எதிர் வாதம் செய்தான். அங்கு இபுறாகீம் அலை உயிர்ப்பித்தலை பற்றியும் மரணிக்கச் செய்தல் பற்றியும் வகுப்பெடுத்துக் கொண்டிருக்கவில்லை . அதை அப்படியே விட்டு விட்டு அடுத்த ஆதாரத்திற்க் தாவினார். நம்ரூத் வாயடைத்துப் போனான் என்று குர் ஆண் சொல்கிறது. தனது காரியத்தில் கவனமாக இருக்கிற தெளிவு வெற்றியை உறுதிப்படுத்துகிறது.

நாம் போராட்டங்களை தியாகத்தால் எதிர் கொள்ள வேண்டும் திமிராலும் அடாவடித்தனத்தாலும் அல்ல.

1.   நபி இபுறாகீம் அலை அவர்களது வெற்றிகளுக்கு  அவரது தெளிவுமிக்க  உறுதி காரணமாக இருந்தது.
2.   அந்த உறுதி அவரது தியாகத்தில் வெளிப்பட்டது.  

உறுதியும அர்ப்பணிப்பும் மரியாதை பெறுவதன்  இரு கண்கள்.
வெற்றிகரமான இந்த வாழ்க்கை தத்துவத்தை தான் பல தலைவர்களும் கடைபிடித்து ஜெயித்தார்கள்.
சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்தியாவில் நடைபெறுகிற போராட்டங்கள் குறித்து இங்கிலாந்து பாராளுமன்றத்தில் விவாதம் எழுந்த போது சர்ச்சில் சொன்னார். அவர்கள் துப்பாக்கிகளோடு வந்திருந்தால் நாங்கள் அவர்களை பீரங்கிகளால் முறியடித்திருப்போம். அவர்கள் வெரும் கைகளோடு வந்த்தால் எங்களாக் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றார்.
அர்ப்பணிப்புகளுக்கு முன்னால் அதிகாரம் பலம் இழந்து விடும் ஆயுதங்களின் கூட் மழுங்கி விடும்.
இபுறாகீம் நபியின் கத்தி கூட அப்படித்தான் .

உலகில் முதலில் முஸ்லிம் என்று தன்னை அழைத்துக் கொண்டவர் அவர் தான், முஸ்லிம்களுக்கு முஸ்லிம் என்று பெயரிட்டவரும் அவர் தான். 
அவரது வாழ்வு சொல்வது இது தான் 
முஸ்லிம் என்பவன் தியாகி தீவிரவாதி அல்ல. 
  



No comments:

Post a Comment