வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, February 12, 2015

குர்ஆன் ஓளியில் முஸ்லிம் 3



إِنَّ الْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ وَالْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالْقَانِتِينَ وَالْقَانِتَاتِ وَالصَّادِقِينَ وَالصَّادِقَاتِ وَالصَّابِرِينَ وَالصَّابِرَاتِ وَالْخَاشِعِينَ وَالْخَاشِعَاتِ وَالْمُتَصَدِّقِينَ وَالْمُتَصَدِّقَاتِ وَالصَّائِمِينَ وَالصَّائِمَاتِ وَالْحَافِظِينَ فُرُوجَهُمْ وَالْحَافِظَاتِ وَالذَّاكِرِينَ اللَّهَ كَثِيرًا وَالذَّاكِرَاتِ أَعَدَّ اللَّهُ لَهُمْ مَغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا(35)

முஸ்லிமின் 8 வது குணம்.
இறைவனை வணங்கி வாழ்பவராக இருப்பார்.
வணக்கசாலி என்பது முஸ்லிமின் அடையாளமாகும்.
முஸ்லிம் இறைவணக்கமில்லாதவராக இபாதத் செய்யாதவராக இருக்க முடியாது.
நமது வாழ்வு இபாதத்கள் நிறைந்த்தாக இருக்க வேண்டும் என ஓவ்வொருவரும் ஆசைப்பட வேண்டும்.
சிறுபிராயம்இளமைமுதுமை அனைத்து நிலையிலும்
عَنِ الْحَسَنِ في قول الله عز وجل وَاعْبُدْ رَبَّكَ حَتَّى يَأْتِيَكَ الْيَقِينُ قَالَ الموت
முடியாமல் போகிற ஒரு சந்தர்பத்திற்கு முன் முடிந்த வரை இபாதத் செய்து கொள்ளவேண்டும்.
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم نِعْمَتَانِ مَغْبُونٌ فِيهِمَا كَثِيرٌ مِنَ النَّاسِ الصِّحَّةُ وَالْفَرَاغُ
عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ الأَوْدِيِّ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لِرَجُلٍ وَهُوَ يَعِظُهُ اغْتَنِمْ خَمْسًا قَبْلَ خَمْسٍ شَبَابَكَ قَبْلَ هَرَمِكَ وَصِحَّتَكَ قَبْلَ سَقَمِكَ وَغِنَاكَ قَبْلَ فَقْرِكَ وَفَرَاغَكَ قَبْلَ شُغْلِكَ وَحَيَاتَكَ قَبْلَ مَوْتِكَ
عَنِ الْحَسَنِ أنه كان يقول ابن آدم إياك والتسويف فإنك بيومك ولست بغدك فإن يَكُنْ غدٌ لك فَكِسْ في غدٍ كما كِسْتَ في اليوم وإن لم يكن لك غدٌ لم تندم على ما فرطت في اليوم
عَنْ عَبْدِ اللهِ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَضْلُ صَلاةِ اللَّيْلِ عَلَى صَلاةِ النَّهَارِ كَفَضْلِ صَدَقَةِ السِّرِّ عَلَى الْعَلانِيَةِ
عَن مُحَمد بن أبي عميرة وكان من أصحاب رسول الله صلى الله عليه وسلم قَالَ لو أن عبدا خر على وجهه من يوم ولد إلى يوم يموت هرما في طاعة الله لحقره ذلك اليوم ولود أنه زيد كيما يزداد من الأجر والثواب
இபாத்தின் செய்பவர் என்பதன் அடையாளமாக நோன்பாளி என்ற வார்த்தை இங்கு நோன்பாளி என்ற சொல் பயன்படுத்தப்பட்டுன்ள்ளது. 
இபாததுகளில் மிகப்பரிசுத்தமானது நோன்பாகும். யாரும் முகஸ்துதிக்காக நோன்பு நோற்க முடியாது.
முஸ்லிம். இறைவனை வணங்கி வழிபடுபவராக இருக்க வேண்டும். அந்த வணக்கம் இதயச்சுத்தியோடு அல்லாஹ்வுக்காகவே செய்கிற வணக்கமாக இருக்க வேண்டும்.
இந்த வசனத்தில் வெளிப்படையாக சொல்லப்பட்டுள்ள நோன்பில் முஸ்லிம் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.
ரமலான் மாத நோன்பு கட்டாயமானது.  
அதை தவிரவும் நபிலான நோன்புகளை நோற்பதில் முஸ்லிம் கவனம் செலுத்த வேண்டும். சிறந்த முஸ்லிம் அதிக நோன்புகளுக்கு தன வாழ்வில் இடமளிப்பார்.
ரமலான் நோன்புடன் மாதத்தில் மூன்று நாள் நோன்பு  நோற்றால் இந்தப்பட்டியலில் சேர்ந்து விடலாம்.
قال سعيد بن جبير من صام رمضان وثلاثه أيام من كل شهر دخل في قوله تعالى "والصائمين والصائمات
நோன்பின் நன்மைகளும் மகத்துவமும் நாம் அறிந்ததே!
உடலையும் உள்ளத்தையும் பக்குவப்படுத்துவதில் நோன்பு முக்கியப் பங்கு வகிக்கிறது.
மனிதனை ஒரு ஒழுக்க வாழ்க்கைக்குள் நிறுத்தி வைப்பதில் நோன்புக்கு முக்கியப் பங்கு இருக்கிறது என்பதை ஒரு நபி மொழி உணர்த்துகிறது.
قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحصن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء
எனவே நோன்பை சொன்ன பிற்கு முஸ்லிமின் 9 வது இயல்பை அல்லாஹ் கூறுகிறான்,
உலகில் பல சமூகங்களிலும் கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமே உரிய இயல்பாக கருதி அவர்களுக்கு மட்டுமே கற்பு வலியுறுத்தப்பட்டது,
கற்பொழுக்கத்தை பேணுகிற ஆண்களும் பெண்களும் என்ற வார்த்தையில் ஆண்களுக்கும் இந்தக்கடமை வலியுறுத்திய வேதம், குர் ஆனே யாகும்.
இதனடிப்படையில் ஒரு சமூகத்தை உருவாக்குவதிலும் இஸ்லாம் வெற்றி கண்டது.
இமாம் அபூஹனீபாவிடம் ஒரு இளைஞன் ஆணுக்கும் பெண்ணுக்கும் என்ன வித்தியாசம் என்று கேள்வி கேட்டார்
வட இந்தியாவில் ஒரு வாகனம் மோதியதில் ஒரு பெண் கீழே விழுந்தார். அதை பார்த்துக் கொண்டிருந்த ஒரு இளைஞனுக்கு அந்தப்  பெண் தனது அண்ணி என்பதை கூட தெரியவில்லை. அந்தப் பெண்மணி அழைத்த போது அந்த சப்தத்தை வைத்துத்தான் இவர் தனது அண்ணி என்று அறிந்து கொண்டார் என்பது இஸ்லாமின் மரபு.
உலகின் பல சமூகங்களும் கற்புக்கு விளக்கம் சொல்வதில் தடுமாறி நிற்கின்றன.
அதே நேரம் கற்பு என்பது முறையற்ற உடல் உறவு என்பது மட்டுமல்ல, பார்வை சிந்தனை பேச்சு முறையற்ற உறவுக்கு தூண்டுகிற அனைத்து விசயங்களை விட்டும் விலகி இருப்பதை கற்பு என்று இஸ்லாம் விளக்கம் கூறியது.
وقال صلى الله عليه وسلم: "اضمنوا لي ستًا من أنفسكم أضمن لكم الجنة: اصدقوا إذا حدثتم، وأوفوا إذا وعدتم، وأدوا إذا اؤتمنتم، واحفظوا فروجكم، وغضوا أبصاركم، وكفوا أيديكم". ( رواه أحمد وابن حبان والحاكم وصححه).
திருக்குர் ஆன் ஒழுக்க கேடு பற்றி சொல்கிற வார்த்தை மிகப் பிரபலமானது.
அநாதைகளின் சொத்துக்ள் விசயத்திலும் ஆபாசமான விவகாரங்களிலும் அதன் பக்கம் கூட  “நெருங்காதீர்” என்கிறது குர் ஆன்
وَلَا تَقْرَبُوا الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ
وَلَا تَقْرَبُوا الزِّنَى إِنَّهُ كَانَ فَاحِشَةً وَسَاءَ سَبِيلًا(32)
மனித இதயங்களை மிக்க அறிந்தவனான அல்லாஹ்வின் இந்த வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டியது முஸ்லிமின் கடமையாகும்.
பார்வை பேச்சு நடைமுறைகள் அனைத்திலும் இந்த எச்சரிக்கையை மறந்து விடக்கூடாது.
சமீபத்தில் ஒரு இளைஞன் என்னைச் சந்தித்தான். என் பாவத்திற்கு என்ன பரிகாரம் என்றான். அவனது பாவம் என்ன தெரியுமா?
ஒரு காலனியின் பொது நல மன்றத்தில் சேவையாற்றிக் கொண்டிருந்த அவன் எதிர் வீட்டிலிருந்த திருமணமான பெண்ணுடன் கொஞ்சம் சகஜமாக பேச அந்தப் பெண்ணும் அதை தொடர கணவன் வீட்டிலில்லாத  நேரங்களில் அந்தப் பேச்சு விபரீதமாகிப் போக ஒரு நாள் இந்தப் பேச்சு வார்த்தை கணவனுக்கு தெரிந்து விட்டது,
ஒரு குழந்தையை வைத்துக் கொண்டிருக்கிற இளம் பெண்ணில் வாழ்க்கையில் இப்படி ஒரு விபரீதத்திற்கு காரணமாகிவிட்ட பாவக்கறையை எப்படி கழுகுவது என்று கேட்டுத்தான் பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்கிற நிலையில் தான் அந்தப் பையன் பிரச்சனை என்ன ஆகுமோ என்று பகீர் என கவலைப்பட வைத்த விசயம் இது,   
மார்க்கம் தடுத்த எந்த ஒன்றும் நமது நன்மைக்கானது, வாழ்வின் அமைதி அதில் அடங்கியிருக்கிறது,
தடுக்கப்பட்ட அந்தக் காரியங்களின் ஓரங்களில் நிற்பது கூட ஆபத்தில் வீழ்த்தி விடும். பிறகு எழுந்திருப்பது சாத்திய்மற்றதாகி விடக் கூடும்.
கற்பொழுக்கம் என்ற வார்த்தைக்கு எந்த அர்த்தமும் இல்லை என்ற இன்றைய நாகரீகப் போக்கிற்கு முஸ்லிம் இளைஞர்களும் இளம் பெண்களும் இடமளித்து விடக்கூடாது.
அப்படி இடமளிப்பார்கள் எனில் அது வாழ்மைக்கையின் அடிப்படையான நிம்மதி நீடித்தம் மகிழ்ச்சி ஆகியவற்றை மட்டுமல்ல ஈமானிய வெளிச்சத்தையும் வாழ்க்கையிலிருந்து எடுத்துவிடும்.
அதே நேரத்தில் தீர்மாணமானமான முடிவோடு இது விசயத்தில் சருகுதலுக்கு இடமளிக்க மாட்டேன் என்று வாழ்கிறவர்கள் உன்னத நிலையை அடைவார்கள்.
யூசுப் அலை தன் வாழ்வில் சுகபோகமான ஒரு வாழ்விற்கான சந்தர்ப்பத்தை இளமைக்காலத்தில் அல்லாஹ்வை அஞ்சி விலகிக் கொண்டதன் காரணமாக அடிமை வாழ்விலிருந்து அரச வாழ்விற்கு உயர்ந்தார்கள். புகழ்மிக்க வாழ்வு வாழ்ந்தார்கள்.
கற்பொழுக்கத்தை மீறி வாழ்வது முதலில் மனதை அழுக்குப்படுத்தி விடுவதோடு  எந்த ஒரு கட்டத்திலாவது மதிப்பு மரியாதையை குழி தோண்டிப் புதைத்து விடும்.
அமெரிக்கா போன்ற நாடுகளில் கற்புக்கு முக்கியத்துவம் இல்லை என்று சொல்வார்கள். உண்மையில் கற்பு எனப்படுவது மானுட நாகரீகரீகதின் ஒரு முக்கியமான அம்சமே என்பதை அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் தனது செகரட்ரியுடன் தவறாக நடந்து கொண்டதற்காக மன்னிப்புக் கேட்டார் என்பதை உலகம் அறியும்.
மிகப்பிரபலமான அவருடைய வாழ்க்கையிலும் அவருடைய குடும்பத்தினருடைய வாழ்க்கையில் அழிக்க முடியாத ஒரு கறையாக அமைந்து விட்டதை நாம் நாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
நாளைய தினத்தை காதலர்தினமாக  மேற்குலகம் கொண்டாட இருக்கிறது.
இளைஞர்கள் மத்தியில் இந்த நாளுக்கு இப்போது ஒரு பெரும் மோகம் ஏற்பட்பட்டிருக்கிறது.
ஒழுக்கமிக்க வாழ்வுக்கு ஆசைப்பட வேண்டிய முஸ்லிம் இளைஞர்களுக்கும் இளம் பெண்களுக்கும் இஸ்லாம் சொல்லிக் கொள்ளும் அறிவுரை இது தான்.
ஒழுக்கம் விசயத்தில் விளையாட்டுத்தனத்திற்கு இடம் கொடுத்து விடாதீர்கள். நீங்கள் திருமணம் செய்ய ஆசைப்பட்ட பெண்ணாக இருந்தாலும் திருமணத்திற்கு முன் அவளுடன் எந்த வகையிலும் தொடர்பு கொள்வது ஹராமானதாகும்.
ஒரு ஆண் ஒரு பெண்ணை விரும்புவதை இஸ்லாம் தடுக்கவில்லை. அந்த விருப்பம் திருமணத்திற்கான அதே போல ஒரு பெண் ஒரு ஆணை விரும்புவதிலும் இஸ்லாம் தடை செல்லவில்லை.
பெண் ஏற்கெனவே திருமணமானவளாக இருந்தால் தனது துணையை தானே தேர்வு செய்வதற்கு அவளுக்கு அதிகாரம் நேரடியாகவே இருக்கிறது.
அன்னை கதீஜா ரலி பெருமானாரை திருமணம் செய்ய விரும்பினார்கள், நேரடியாக சம்பந்தம் பேசினார்கள். உடனடியாக திருமணம் செய்து கொண்டார்கள்.
காதல் என்ற வார்த்தைக்கு இப்படிப் பொருள் கொள்ளப்படுமானால் அது தடை செய்யப்படுதலுக்குரியதல்ல,
பின்னால் திருமணம் செய்து கொள்ளப்போகிறோம் என்ற எண்ணமோ  உறுதியோ. நிச்சயமோ திருமணம் நடந்தது போன்ற அனுமதியை தந்துவிடாது,
அத்தகைய் எத்தனையோ எண்ணங்கள் வெறும் கற்பனையாகி கரைந்து போயிருக்கிறது.
இப்படி நம்பிக்கை அளித்த பல ஆண்கள் பெண்களை கைவிட்டு விட்டு போயிருக்கிறார்கள்,
இவ்வாறு கைவிடப்பட்ட பெண்களை சொந்த வீட்டார் கூட ஆதரிக்காத சூழ்நிலையில் வாயும் வயிறுமாக தவறான வழிகளை தேர்ந்தெடுக்கிற பெண்களின் கதை ஏராளம் உண்டு.
பெரிய குளத்திற்கு பக்கத்தில் இவ்வாறு ஓடிச்சென்ற பெண்களை ஆதரிப்பதற்கென்றே ஒரு ஆலிம் ஒரு நிலையம் வைத்திருக்கிறார். ஒரு முறை அவர் அந்தப் பெண்களின் வரலாறு களைச் சொன்னார், கேட்கச் சகிக்காத வரலாறுகள் அவை.
பெண் பாவம் பொல்லாதது,
இளைஞர்களே! பள்ளிக்கும் கல்லூரிக்கும் பெற்றோர்கள் நம்பிக்கையுடன் அனுப்பி வைக்கிற இளம் பெண்களை குறி வைக்காதீர்கள். உங்களது ஆசைக்கு அவர்களது எதிர்காலத்தை பணையம் வைக்கதீர்கள்
உலகத்தில் இதை விட பெரிய அக்கிரமம் எதுவும் இல்லை.
ஒன்று மறியாத இளம் பெண்களை இளமையின் துடிப்பிலும் நடிப்பிலும் மயக்கிவிட முய்றசிக்காதீர்கள்.
வாழ்க்கையின் பல்வேறு பாக்கியங்களை இழக்க நேரிடும் என்பதை நாபகத்தில் வையுங்கள்.
காதல் புரபோசல் என்பது நேரடியாக அந்தப் பெண்ணிடம் சொல்வதை விட பெற்றோர்களிடம் பேசுவதே ஒழுக்க முள்ள முறையாகும்.
அன்பளிப்புக்கள் பரிமாறுவது, வெளியிடங்களுக்குச் செல்வது தனித்திருப்பது ஆகிய அனைத்தும் ஒழுக்க வரையறைகளை மீறுகிற செயலாகும்.
அத்தகைய செயல்கள் அனைத்தும் அல்லாஹ்விற்கு பொருத்தமற்றதாகும்
பெருமானர் (ஸல்) அவர்களின் இந்த அறிவுரைகளை கவனத்தில் வைய்ங்கள்
فقال: "إذا صلت المرأة خمسها، وصامت شهرها، وحفظت فرجها، وأطاعت زوجها، قيل لها: ادخلي الجنة من أي أبواب الجنة شئت". (رواه أحمد وصححه الألباني).
وقال صلى الله عليه وسلم: "اضمنوا لي ستًا من أنفسكم أضمن لكم الجنة: اصدقوا إذا حدثتم، وأوفوا إذا وعدتم، وأدوا إذا اؤتمنتم، واحفظوا فروجكم، وغضوا أبصاركم، وكفوا أيديكم". ( رواه أحمد وابن حبان والحاكم وصححه).
وعن عبد الله بن عباس رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: "يا شباب قريش لا تزنوا، ألا من حفظ فرجه فله الجنة". (رواه الحاكم وصححه).
أما من لم يحفظ فرجه فإنه يسلك سبيلاً إلى النار، فقد سُئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس النار فقال: "الفم والفرج". (رواه ابن حبان).
இதுவிசயத்தில் ஒழுக்க கேடு என்பது எல்லா தீமைகளுக்கும் காரணமாகிவிடும்

قد أشار إلى شيء منها الإمام العلامة ابن القيم رحمه الله فقال: الزنا يجمع خلال الشر كلها من قلة الدين، وذهاب الورع، وفساد المروءة، وقلة الغيرة، فلا تجد زانيًا معه ورع، ولا وفاء بعهد، ولا صدق في حديث، ولا محافظة على صديق؛ إذ الغدر والكذب والخيانة وقلة الحياء وعدم المراقبة وعدم الأنفة للحرم وذهاب الغيرة من شعبه وموجباته


முஸ்லிம்களின் அடுத்த நிறைவு இயல்பு அவரது வாழ்வு திர்ரால் நிரம்பியிருப்பதாகும்
முஸ்லிமின் ஒவ்வொரு நிலையிலும் சுப்ஹானல்லா அல்ஹம்து லில்லாஹ் அல்லாஹு அக்பர் இன்னாலில்லாஹ் என்ற திக்ருகள் நிறைந்திருக்கிறது,
ஒரு வர் திக்ருகள் மூலம் இஸ்லாமை வெளிப்படுத்துகிறார்,
தும்முகிறவர் அல்ஹம்து லில்லாஹ் சொன்னால் அவர் முஸ்லிம் என்றாகிவிடுகிறது.
திகிரினால் நனைந்திருக்கிற நாவை பெறுவது வாழ்வின் பெரும் பாக்கியம் என பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
عن أبي سعيد الخدري رضي الله عنه قال: إن رسول الله صلى الله عليه وسلم قال إذا أيقظ الرجل امرأته من الليل فصليا ركعتين كانا تلك الليلة من الذاكرين الله كثيرا والذاكرات وقد رواه أبو داود
عن أبي سعيد الخدري رضي الله عنه قال: قلت يا رسول الله أي العباد أفضل درجة عند الله تعالى يوم القيامة؟ قال الذاكرون الله كثيرا والذاكرات قال قلت يا رسول الله ومن الغازي فى سبيل الله تعالى؟ قال لو ضرب بسيفه في الكفار والمشركين حتى ينكسر ويختضب دما لكان الذاكرون الله تعالى أفضل منه அஹ்மது
عن معاذ بن جبل رضي الله عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم ما عمل آدمي عملا قط أنجى له من عذاب الله تعالى من ذكر الله عز وجل وقال معاذ رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم ألا أخبركم بخير أعمالكم وأزكاها عند مليككم وأرفعها في درجاتكم وخير لكم من تعاطي الذهب والفضة ومن أن تلقوا عدوكم غدا فتضربوا أعناقهم ويضربوا أعناقكم؟ قالوا بلى يا رسول الله قال ذكر الله عز
عن سهل بن معاذ بن أنس الجهني عن أبيه رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال إن رجلا سأله فقال أي المجاهدين أعظم أجرا يا رسول الله؟ قال أكثرهم لله تعالى ذكرا قال فأي الصائمين أكثر أجرا؟ قال صلى الله عليه وسلم أكثرهم لله عز وجل ذكرا ثم ذكر الصلاة والزكاة والحج والصدقة كل ذلك يقول رسول الله صلى الله عليه وسلم أكثرهم لله ذكرا
இந்த 10 இயல்புகளும் இமயமலை அளவு சுமையானவை அல்ல, மனது வைத்தால் கடைபிடித்து விட முடியும்.
இதை கடை பிடித்து விட்டோம் என்றால் இந்த உலகில் மரியாதைக்குரிய மனிதர் என்ற சிறப்பும் மனாஅமைதியும் கிடைக்கும்.
நாளை அல்லாஹ்விடம் மன்னிப்பும் சொர்க்கமும் கிடைக்கும். அஜ்ருன் அழீம் என்பது சொர்க்கத்தை குறிக்கிறது முபஸ்ஸிர்கள் கூறுகிறார்கள்

1 comment:

  1. தொடரையும் விட்டுவிடாமல் அதே நேரத்தில் சூல்நிலை கருதி தற்சயத்திற் தோதுவான குறிப்பை கொடுத்தீற்கள் ஹஜரத். ஜஸாகல்லாஹ்

    ReplyDelete