வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, February 19, 2015

வெற்றியாளர் இரண்டாம் முஹம்மது - தலைமைக்கான பாடம்வரலாறு
إِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُبِينًا(1
இன்று முதல் ஜமாதில் அவ்வல் பிறக்கிறது.
இதே போன்றதொரு ஜமாதுல் அவ்வல் மாத்தின் 29 ம் நாளில் முஸ்லிம்கள் காண்ஸ்டாண்டி நோபிளை வெற்றி கொண்டார்கள்.
உலக வரலாற்றின் போக்கில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்திய அந்த வெற்றியை இன்று நாம் நினைத்துப் பார்க்கிறோம்.
இன்றைய நமது நிலை கவலைக்குரியதாக இருக்கிறது.
சச்சார் அறிக்கை இந்திய முஸ்லிம்களின் கவலைக்குரிய நிலையை பட்டியலிட்டது நமக்கு நினைவிருக்கலாம்.
மஹாராஷ்ட்ராவில் முஸ்லிம் மக்கள் தொகை 10.6  ஆனால் அங்குள்ள சிறைக்கைதிகளில் 40 சதவீதம் பேர் முஸ்லிம்கள்
ராஜஸ்தானில் முஸ்லிம் மக்கள் தொகை 9.6  ஆனால் அங்குள்ள சிறைக்கைதிகளில் 25 சதவீதம் பேர் முஸ்லிம்கள்
மேற்கு வங்கம், பீகார், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் தமது சிறைக் கைதிகளின் மதரீதியிலான பட்டியலை தரமறுக்கின்றன, அந்தப் பட்டியல் கிடைத்தால் இன்னும் அதிர்ச்சிக்ரமான தகவல்களை கிடைக்க கூடும்.
நமது நாட்டில் தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பவர்களில் 80 சதவீதம் பேர் முஸ்லிம்கள்.
இந்திய அளவில் இப்படி என்றால் உலகளாவிய அளவிலும் நமது நிலை இப்படித்தான் இருக்கிறது.
இன்று உலகின் மிக மோசமான போர்நிலைகள், மிக ஏழ்மையான மக்கள் வசிக்கும் பகுதிகள் ,  அடிப்படை அதிகாரங்கள் மறுக்கப்படும் சமுதாயம் என அத்தனை இழப்புகளுக்கும் உள்ளான சமுதாயமாக முஸ்லிம் சமுதாயம் கவலைக்குரிய நிலையில் இருக்கிறது.  
ஆனால் நமது வரலாறே கவலைக்குரியது அல்ல,
நமது வரலாறு கம்பீரமானது, வெளிச்சமானது,
அந்த பிரகாச்மான வரலாற்றை நாம் எண்ணிப்பார்க்கிற போது தான் நமது தலைமுறையின் பெறுமை எத்தகையது என்பது புரியும்,
நாம் எத்தகைய சமுதாயம் என்ற மகிமை தெரியும்.
நாம் எப்படி ஆக வேண்டும் என்ற கனவு பிறக்கும்.
மக்கா என்ற சிறு நகரில் உருவான இஸ்லாம் வெகு சீக்கிரத்தில் அதாவது 50 ஆண்டுகளில் அரபு நாடுகள் முழுவதையும் ஆட்கொண்டது. அப்போதைய அரபு நாடு அல்லாத இராக் இரான் சிரியா எகிப்து மொரோக்கோ என பூமியின் அரை பங்கை தன்பால் ஈர்த்தது,
அன்றைய வல்லரசுகள் இரண்டு ஒன்று பாரசீகம் என்ற இன்றையை ஈரான் நாட்டை மையாமக கொண்ட சாசானிய பேரரசு. மற்றது ரோமை மையமாக கொண்டு அரபு நாடுகள் வரை தனது விரித்திருந்த பைஜாந்திய பேரரசு
உமர் ரலி காலத்தில் முஸ்லிம்களிடம் பாரசீகம் வீழ்ந்தது. மதாயின் நகரம் சாசானிய தலை நகராக இருந்தது. சஃது பின் அபீவக்காஸ் ரலி அதை உமர் ரலி காலத்தில் கைப்பற்றினார்.  சாஸானிய மன்னன் மூன்றாம் யஜ்தஜ்ரித் يزدجرد الثالث   அங்கிருந்து ஓடினான். உஸ்மான் ரலி காலத்தில் அந்த வெற்றி முழுமையடைந்தது,
கிபி 220 ம் ஆண்டில் أردشير الأول. முதலாம் அர்தஸீர் உருவாக்கிய சாஸானிய பேரரசின் கடைசி   சாஸானிய மன்னன் மூன்றாம் யஜ்தஜ்ரித் يزدجرد الثالث  கீபி 651 ல் இறந்து போனான்.
சாசானிய பேரசை முற்றிலுமாக வெற்றி கொண்ட முஸ்லிம்கள் பைஜாந்திய பேரரசிடமிருந்து இன்றை அரபுநாடுகளையும் பைத்துல் முகத்தஸையும் கைப்பற்றியதோடு நின்று விட்டிருந்தனர். பைஜாந்திய பேரரசு இன்றைய துருக்கியை தனது தலைமையகத்தை வைத்து ஆட்சி செய்து கொண்டிருந்தது. முஸ்லிம்கள் அந்தப் பகுதிய கண்டு கொள்ளாமல் இருந்தனர்.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அரசர்களுக்கு அனுப்பிய கடிதத்தை பாரசீக மன்னர் துண்டு துண்டாக கிழித்துப் போட்டான். அவனது அரசு வெகுசீக்கிரம் அவனிடமிருந்து பறிக்கப்பட்டது.
ரோம் மன்னராக இருந்த ஹிர்கல் பெருமானாரின் கடி8த்திற்கு மதிப்பளித்து அதை பத்திரப்படுத்திக் கொண்டான் அந்த பரகத்தினால் சுமார்  800 ஆண்டுகள் அவர்களது பேரரசின் எச்சமாக் கான்ஸ்டாண்டி நோபிளை மைய்மாக கொண்ட பைஜாந்திய அரசு நடந்து கொண்டிருந்தது 
ஹிஜ்ரி  50 க்குள் பாரசீகம் கைப்பற்றப் பட்டது. அதன் பிறகு ரோம் சாமராஜ்யத்தின் பெரும் பகுதியை முஸ்லிம்கள் கைப்பற்றிக் கொண்டார்கள் என்றாலும் அதன் தலைநகரையும் அரபு பிராந்தியத்தில் அதன் ஆதிக்கத்தையும் சகித்துக் கொண்டு வந்தார்கள்.
ஹிஜ்ரி 857 ம் ஆண்டு ரோமின் தலை நகராக இருந்த காண்ஸ்டாண்டி நோபிளை இரண்டாம் முஹம்மது என்று அழைக்கப்படுகிற முஹம்மது அல் பாத்திஹ் வெற்றி கண்டு ரோமப்பேரரசுக்கும் முடிவு கட்டினார்,
இஸ்லாத்தை எதிர்த்த இன்னொரு வல்லரசும் முற்றிலுமாக அழிக்கப்பட்டது.
அந்த வெற்றி இது போன்ற ஒரு ஜமாதில் அவ்வல் மாதத்தில் தான் நடந்தது. ரோமச் சக்ரவர்த்தி காண்ஸ்டாண்டைன் ஞாபகார்த்தமாக பெயர்சூட்டப்பட்ட  காண்ஸ்டாண்டி நோபில் நகரம் இஸ்தான்புல் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இன்று வரை இஸ்தான்பூல் துருக்கியின் தலைநகரமாக மட்டுமல்ல செழிப்பான இஸ்லாமிய கலாச்சாரத்தின் தலை நகராகவும் இருந்து வருகிறது
காண்ஸ்டாண்டி நோபிலை முஸ்லிம்கள் கைப்பற்றியது உலகின் பல முக்கிய மாற்றங்களுக்கு காரணமானது.
ஐரோப்பியர்கள் மாமிச உணவை சாப்பிட வேண்டுமானல அதற்கு தேவையான மிளகு மற்றும் மசாலாப் பொருட்கள் இந்தியாவிலிருந்து வரவேண்டும். ஐரோப்பியர்களும் இந்தியர்களும்  இஸ்தான்பூலில் தான் சரக்குகளை பரிமாறிக் கொள்வார்கள். வியாபார மையமாக இருந்த இஸ்தான்பூல் முஸ்லிம்கள் வசமாகி விட்ட படியால் இந்தியாவுடன் கடல் மார்க்கமாக தொடர்பு கொள்ள ஐரோப்பியர்கள் நினைத்தனர். அதனால் அட்லாண்டிக் கடலில் அது வரை பயணம் செய்ய பயப்பட்ட  அவர்கள் துணிந்து இந்தியாவுக்கு கடல் மார்க்கம் தேடி புறப்பட்டனர். அப்படி புறப்பட்ட ஒரு மாலுமி தான் கொலம்பஸ், அவன் தடம் மாறி அமெரிக்கா என்கிற கண்டத்தை கண்டு பிடித்தான். கொலம்பஸ் கண்டு பிடித்தது இந்தியா அல்ல என்பதை புரிந்து கொண்டு வாஸ்கோடகாமா இந்தியாவிற்கு புதிய கடல்வழியை கண்டு பிடித்தார்
உலக வரலாற்றில் மகத்தான மாற்றங்கள் நிகழ்ந்தன. இஸ்லாம் உலகின் வல்லரசாக உயர்ந்தது, துருக்கியை மையமாக கொண்ட இஸ்லாமின் பேரரசு ஆயிரம் ஆண்டுகளாக முதலாம் உலக யுத்தம் நடைபெறும் வரை  செல்வாக்கோடு ஆட்சி செலுத்தியது.
முஸ்லிம்களிடம் முன் அனுமதி பெற்றுத்தான் உலகின் எந்தக் காரியமும் நடந்தன.
ஐரோப்பாவையும் ஆசியாவை இணைக்கிற மத்தியத் தரைக்கடலை முஸ்லிம்களின் ஏரி என்று வரலாறு வர்ணித்தது.
கான்ஸ்டாண்டிநோபிளின் மகத்தான வெற்றியை முஸ்லிம் உம்மத்திற்கு சாத்தியமாக்கிக் கொடுத்தவர் இரண்டாம் முஹம்மது எனும் முஹம்மது அல்பாத்திஹ் ஆவார். 
1299 லிருந்து இஸ்லாமியப் பேரரசை துருக்கியை தாயமாக கொண்ட உதுமானிய கலீபாக்கள் ஆண்டு வந்தனர்.
ஆசியாமைனர், தென்கிழக்கு ஐரோப்பா, மேற்காசியா, வடக்கு ஆப்ரிக்கா என  மூன்றூ கண்டங்களிலும் பரவியிருந்த விசாலமான் நிலப்பரப்பை உதுமானியர் ஆண்டு வந்தனர்.
முஹம்மது அல்பாத்திஹ் உதுமானிய துருக்கியரில் ஏழாம் அரசர் ஆவார்.
அவர் தான் 11 நூற்றாண்டுகளாக நீடித்த பைஜாந்திய பேரரசிற்கு முடிவு கட்டி காண்ஸ்டாண்டி நோபிளை முஸ்லிம்களுக்குரியதாக ஆக்கினார்.
இரண்டாம் முஹம்மது 1429 ம் ஆண்டு ஏப்ரல் 20 (ஹிஜ்ரி 833 ரஜப் 27 ) அன்று அப்போதைய தலைநகர் அதிரனாவில் பிறந்தார்.
சிறுவயதில் இரண்டாம் முஹம்மது துடிப்பானராகவும் குறும்புக்காரராகவும் இருந்தார்.  
அவருடை தந்தை சுல்தான் இரண்டாம் முராத் அவருடை 11 வயதில் படிப்பதற்காக அமாஸியாவிலிருந்த أحمد بن إسماعيل بن عثمان الكوراني  விடம் அனுப்பி வைத்தார். அப்போது தேவை எனில் குச்சியை பயன்படுத்துமாறு  ஆசிரியரை மன்னர் கேட்டுக் கொண்டார்.
أحمد بن إسماعيل بن عثمان الكوراني  குறும்புக்காரராக இருந்த இரண்டாம் முஹம்மதை தனது கண்டிப்பாலும் தண்டிப்பாலும் வழிக்கு கொண்டு வந்தார். ஆசிரியரின் மீது சுல்தான் முஹம்மதுக்கு பயம் ஏற்பட்டது. மிக சீக்கிரத்தில் திருக்குர் ஆனை ஓதி முடித்தார்.    
அடுத்ததாக ஆக் ஷம்சுத்தீன் என்ற ஆசிரியரிடம் உயர் கல்வி பயின்றார். அந்த சந்தர்ப்பம் தான் இரண்டாம் முஹம்மதின் வாழ்க்கையின் போக்கை தீர்மாணித்தது.
அதுவரை பேரரசை நிறுவிய மன்னர்கள் கான்ஸ்டாண்டி நோபிளை பற்றி யோசிக்காமல் இருந்தனர். சஹாபாக்கள் காலத்தில் நடை பெற்ற சில முயற்சிகள் தோற்றுப் போன நிலையில் அதற்கு மேல் யாரும் சிந்திக்க வில்லை,
உஸ்தாது ஆக் ஷம்சுத்தீன் மாணவர் இரண்டாம் முஹம்மதுக்கு கஸ்தன் தீனிய்யாவின் மீது கவனத்தை திருப்பினார். பெருமானாரின் பொன்மொழியை திரும்பத் திரும்பச் சொல்லிக்காட்டினார் 
காண்ஸ்டாண்டிநோபிளின் வெற்றியை குறித்தும் அதன் வெற்றியாளரை குறித்தும் பெருமானார் (ஸல்) முன்னறிவிப்புச் செய்திருந்தார்கள்.
قد ورد في مسند أحمد بن حنبل
بِشْرٍ الْخَثْعَمِيُّ،، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ: لَتُفْتَحَنَّ الْقُسْطَنْطِينِيَّةُ فَلَنِعْمَ الْأَمِيرُ أَمِيرُهَا وَلَنِعْمَ الْجَيْشُ ذَلِكَ الْجَيْشُ

ஒரு ஆசிரியர் எத்தகைய சமுதாயத்தை உருவாக்க முடியும்? எத்தகைய மாற்றத்திற்கு வித்திட முடியும் என்பதற்கு ஆக் சம்சுத்தீன் உதாரணமாக  திகழ்கிறார்.
கி. பி 1451 ல் அதாவது தனது 22 வது வயதில் இரண்டாம் முஹம்மது அரியணை ஏறினார்.
இவரை வயதை நினைவில் வையுங்கள் இளைஞர்களே! 22 வயது. எத்தகைய மகத்தான வரலாற்றுக் காரியத்திற்கு மன்னர் முஹம்மது தயாராகிறார் பாருங்கள்!
ஆசிரியரின் வார்த்தைகள்பெருமானாரின் வரிகள் அவரில் உள்ளத்தில் ஓடிக் கொண்டே இருந்தன.  அந்த துஆ விற்கு தான் சொந்தக்காரராக வேண்டும் என அவர் முடிவு செய்தார்.   
ஆரம்பத்திலிருந்தே அதற்கான திட்டங்களை  தீட்டினார்
40 இலட்சம் படைவீரர்களை திரட்டினார். அன்றைய உலக நாடுகள் எதனிடமும் இத்தகைய பெரும் படை இருக்க வில்லை
அவர்களுக்கு பெருமானாரின் வார்த்தைகளை ஞாபகப்படுத்திக் கொண்டே இருந்தார். அந்தப் புகழுக்கு சொந்தக்காரர்களாக அவர்கள் ஆக முடியும் என்று ஆர்வமூட்டினார்.
இந்தப் பணியை செய்வதற்காக ஆலிம்கள் பலரை நியமித்து படை வீரர்களுக்கிடையே உலாவ விட்டார்.
பீரங்கி தயாரிப்பிற்கு பெயர் பெற்ற அவ்ருபான் என்ற பொறியாளரை அதிக முக்கியத்துவம் கொடுத்து தன்னிடம் வைத்துக் கொண்டார்.
அந்தப் பணியை தானே நேரில் சென்று ஆய்வு செய்தார்
சுமார் 400 கப்பல்களை இதற்காக தயாரித்தார்.
காண்ஸ்டாண்டிநோபிள் மீது போர் தொடுப்பதற்கு முன்னால்  அக்கம் பக்கத்திலிருந்தவர்களோடு நல்லுறவை ஏற்படுத்திக் கொண்டார்
படைகள் செல்வதற்கு வசதியாக தலை நகர் அதிரனாவிலிருந்து காண்ஸ்டாண்டிநோபில் வரையுண்டான சாலையை சீரமைத்தார்.
1453 ஏப்ரல் 6 – 857 ரபீஉல் அவ்வல் 26 அன்று காண்ஸ்டாண்டி நோபிளை நோக்கி இஸ்லாமிய படை முற்றுகையை தொடங்கியது,
செல்லும் வழியில்முஆவியா (ரலி) காலத்தில் ஹிஜ்ரி 52 ல் காண்ஸ்டாண்டி நோபிளை முற்றுகையிட முயன்ற போது ஷஹீதான அபூஅய்யூபில் அன்சாரி (ரலி) அவர்களின் கப்ரை கண்டறிந்தார்.
கான்ஸ்டாண்டி நோபில் துறைமுகத்தை திடீரென முற்றுகை இட அவர் தீட்டிய திட்டம் வரலாற்றை விக்கித்து நிற்கச் செய்து விட்டது,
மாமனிதர்கள் இப்படித்தான் யோசிக்கிறார்கள். இவ்வாறு தான் செயல்படுகிறார்கள்.
கடல் வழியாக படகுகள் செல்வதை எதிர்கள் அறிந்து கொள்ளவார்கள். அதனால் மலை இடுக்குகளின் வழியாக தரை வழியாக கப்பல்களை கொண்டு போய் தீடீரென கடலில் இறக்க அவர் திட்டமிட்டார்.
ஒரு நீண்ட நிலப்பரப்பு முழுக்க பலகைகளால் தரை அமைத்து அப்பலகைகள் மீது மெழுகை ஏராளமாக தடவி கப்பல்களை அவற்றின் மீது இழுத்துச் சென்று  பைசாந்தியர்கள் அசந்திருக்கும் நேரம் பார்த்து திடீரென  கர்னு தகபீதீபகற்ப கடலில் அவர் இறக்கினார்.
பைசாந்திய வரலாற்றாசிரியர்கள் திகைத்துப் போய் எழுதினார்கள்.
ولقد عبّر أحد المؤرخين البيزنطيين عن عجبهم من هذا العمل فقال: «ما رأينا ولا سمعنا من قبل بمثل هذا الشيء الخارق، محمد الفاتح يحول الأرض إلى بحار وتعبر سفنه فوق قمم الجبال بدلاً من الأمواج، لقد فاق محمد الثاني بهذا العمل الأسكندر الأكبر
இது மாதிரி ஒரு அதிசயத்தை இதற்கு முன் நாங்கள் பார்த்ததும் இல்லை. கேள்விப்பட்டதுமில்லை.  அவரது கப்பல்கள் அலைகலுக்கு மேல் அல்ல. மலைகளுக்கு மேல் மிதந்து வந்தன. இந்த தீரச் செயல் மூலம் இரண்டாம் முஹம்மது மகா அலக்ஸாண்டரை விஞ்சிவிட்டார்
53 நாள் முற்றுகைகுப்பின் ஹிஜ்ரி 857 ஜமாதுல் அவ்வல் மாதத்தில் 1453 மே 29 செவ்வாய்க்கிழமை அதிகாலை காண்ஸாண்டி நோபிள் முஸ்லிம்கள் வசமானது.
அதற்கு இஸ்லாம் பூல் என்று இரண்டாம் முஹம்மது பெயர் சூட்டினார். அது தான் இஸ்தான்பூல் என்று மருவிற்று.
அங்கிருந்த கிருத்துவர்களுக்கு சமய்ச்சுதந்திரம் கொடுத்தார். ஒரு தலைவரை தேர்ந்தெடுத்து தமது உள் விவகாரங்களை கவனித்துக் கொள்ள அனுமதித்தார்
முஸ்லிம்கள் ஜும் தொழுவதற்கேற்ற ஒரு இடம் தேவை பட்ட போது இஸ்தான்பூலில் காலியாக இருந்த அயாசூபியா தேவாலயத்தை விலை கொடுத்து வாங்கி அதை பள்ளிவாசலாக மாற்றினார். அப்போதும் கூட அதிலிருக்கிற சிலைகளை மட்டும் எடுத்து விட்டு அதிலிருந்த கிருத்துவ அடையாளங்களை விட்டு வைத்தார்.
وكان لا يوجد للمسلمين في المدينة "جامع" ليصلوا فيه "الجمعة" التي تلت الفتح، فلم يسعف الوقت من تشييد جامع جديد في هذه المدة الزمنية الضئيلة، فأمر السلطان بتحويل "آيا صوفيا" إلى جامع، ثم بعد ذلك قام بشرائها بالمال، وأمر كذلك بتغطية رسومات الموزائيك الموجودة بداخلها ولم يأمر بإزالتها، حفاظًا على مشاعر المسيحين، وما زالت الرسومات موجودة بداخلها إلى الآن

அந்தப் பள்ளிவாசலில் முதல் ஜும் நடந்த போது இரண்டாம் முஹம்மது தனது ஆசிரியரை மறக்கவில்லை.
உஸ்தாது ஆக் ஷம்சுத்தீனையே முதல் ஜும் நடத்துமாறு அவர் கேட்டுக் கொண்டார். அவரே முதலாவது ஜும் ஆவை நடத்தினார்.
சிறந்த ஆட்சியை மக்களுக்கு வழங்கிய அவர் மக்களின் நிலையை அறிந்து கொள்வதற்காக இரவு நேரங்களில் உலாவருவார்.
 وكان كثيراً ما ينزل بالليل إلى الطرقات والدروب ليتعرف على أحوال الناس بنفسه ويستمع إلى شكاواتهم بنفسه،
இத்தோடு இரண்டாம் முஹம்மதின் பணி நின்று விடவில்லை\
செர்பியா, பெல்கிரேட், அல்போனியா கிரீமியா, ஹங்கேரி ஆஸ்திரியா  ஆகிய பகுதிகளையும் கைப்பற்றினார்.
போஸ்னியாவை வென்ற போது அவ்வூர் மக்களுக்கு அவர் எழுதிக் கொடுத்த உத்தரவாதம் உன்னதமானது,


"بسم الله الرحمن الرحيم
أنا السلطان محمد خان الفاتح،
أعلن للعالم أجمع -  
أن أهل البوسنة الفرنسيسكان قد مُنحوا بموجب هذا الفرمان السلطاني حماية جلالتي. ونحن نأمر بأن:
لا يتعرض أحد لهؤلاء الناس ولا لكنائسهم وصلبهم !
وبأنهم سيعيشون بسلام في دولتي. وبأن أولئك الذين هجروا ديارهم منهم، سيحظون بالأمان والحرية.
وسيُسمح لهم بالعودة إلى أديرتهم الواقعة ضمن حدود دولتنا العليّة.
لا أحد من دولتنا سواء كان نبيلاً، وزيرا، رجل دين، أو من خدمنا سيتعرض لهم في شرفهم وفي أنفسهم !
لا أحد سوف يهدد، أو يتعرض لهؤلاء الناس في أنفسهم، ممتلكاتهم، وكنائسهم !
وسيحظى كل ما أحضروه معهم من متاع من بلادهم بنفس الحماية...
وبإعلان هذا الفرمان،
أقسم بالله العظيم  الذي خلق الأرض في ستة أيام ورفع السماء بلا عمد، وبسيدنا محمد عبده ورسوله، وجميع الأنبياء والصالحين أجمعين، بأنه؛ لن نسمح بأن يُخالف أي من أفراد رعيتنا أمر هذا الفرمان

தான் வெற்றி கொண்ட நாடுகளில் மிகச் சிறந்த நீதியான நிர்வாகத்தை அவர் வழங்கினார். அவர் வெற்றி கொண்ட பகுதிகள் பல தாமாக இஸ்லாமை தழுவின/
முஸ்லிம் உம்மத்தை கல்வியில் சிறந்தவர்களாக ஆக்க பெரும் முயற்சி செய்தார்
وأنشأ بجانب مسجده الذي بناه بالقسطنطينية ثمان مدارس على كل جانب من جوانب المسجد يتوسطها صحن فسيح، وفيها يقضي الطالب المرحلة الأخيرة من دراسته، وألحقت بهذه المدارس مساكن الطلبة ينامون فيها ويأكلون طعامهم ووضعت لهم منحة مالية شهرية، وأنشأ بجانبها مكتبة خاصة وكان يُشترط في الرجل الذي يتولى أمانة هذه المكتبة أن يكون من أهل العلم والتقوى متبحراً في أسماء الكتب والمؤلفين


1481 ல் ஒரு புதிய திட்ட்த்துடன் படை எடுத்துப் புறப்பட்டார். எங்கு போகிறார் என்று அவர் யாரிடமும் சொல்லவில்லை. “என் இரகசியத்தை என் தலைமயிர் ஒன்று அறிந்தாலும் அதை பிடுங்கி எறிந்து விடுவேன்” என்றார். .

இத்தாலியில் உள்ள போப்பின் தலைமையகமான ரோமையும் அவர் கைப்பற்ற நினைத்தார் என்று வரலாற்றாசிரியர்கள் சொல்கிறார்கள்.
ஐரோப்பா அச்சத்தில் உறைந்து போயிருந்தது. .
அல்லாஹ்வின் நாட்டம் அம்மானிதர் அந்தப் படைஎடுப்புக்கு இடையே நோய்வாய்ப்பட்டு இறையடி சேர்ந்தார்.

وتوفى السلطان في يوم 3 مايو عام 1481م، الموافق 4 ربيع الأول سنة 886هـ عن ثلاث وخمسين سنة، ومدة حكمه 31 عاما،

52 வருடங்களே வாழ்ந்த அந்தப் பெருந்தகை நிகழ்த்திய சாதனைகளும் சேவைகளும் மகத்தான வரலாறாக முஸ்லிம்களுக்கு உற்சாகத்தையும் வழி காட்டுதலையும் தருகின்றன.
பெருமானாரின் வார்த்தைகளின் தூண்டுதலும், ஆசிரியரின் உணர்வூட்டுதலும், அதை முன்னெடுத்துச் செல்ல அவர் கொண்ட உறுதிப்பாடும், மேற்கொண்ட திட்டங்களும், வெற்றியடைந்த பிறகு அவர் நடந்து கொண்ட நடைமுறைகளும், மகத்தான ஒரு தலைவருக்கான பாடத்தை முஸ்லிம் சமூகத்திற்கு விட்டுச் செல்கின்றன.
இத்தககய வெளிச்சமிக்க மனிதர்களின் வாழ்வு இன்றைய முஸ்லிம் உம்மத்துக்கு நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளிக்கப் போதுமானது.
அல்லாஹ் முஹம்மது அல்பாதிஹ அவர்களை அங்கீகரித்தருள்வானாக! அவரது ஈமானிய சாதனைகளை நிலைக்கச் செய்வானாக.
இந்த பூமியில் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் இஜ்ஜத்தை நிலைக்கச் செய்வானாக!
உம்மத்தை அந்த இஜ்ஜத்திற்கு வழி நடத்திச் செல்லும் தலைமை தந்தருள்வானாக!
إِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُبِينًا(1
முஸ்லிம்களின் வெற்றி வரலாற்றை குர் ஆன் இப்படி தொடங்கி வைத்தது. அது முதல் இஸ்லாம் தனது வெற்றிப் பயணத்தை உலகம் ஆச்சரியப்படுகிற வகையில் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது, இனி கியாமத் வரை தொடரும். அல்லாஹ் அதற்கு நம்மை கருவிகளாக்குவானாக!

No comments:

Post a Comment