வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, May 28, 2015

நீ கொடுத்தற்கே நன்றி சொல்ல முடியவில்லை இன்னும்..

عَنْ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ قَالَ صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى انْتَفَخَتْ قَدَمَاهُ فَقِيلَ لَهُ أَتَتَكَلَّفُ هَذَا وَقَدْ غُفِرَ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ قَالَ أَفَلَا أَكُونُ عَبْدًا شَكُورًا -  قَالَ أَبُو عِيسَى حَدِيثُ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ

திர்மிதியில் இடம் பெற்றுள்ள இந்த ஹதீஸ் மிகவும் பிரபலமானதாகும்.

ஒரு ரமலானுக்காக தயாராகிக் கொண்டிருக்கிற நேரத்தில் இந்த ஹதீஸ் முக்கிய கவனம் பெறுகிறது.

முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அலம்நஷ்ரஹ் அத்தியாயத்தின் இறுதியில் தன்னை வணங்கவென ஒரு தனி நேரத்தை ஒதுக்குமாறு அல்லாஹ் உத்தரவிட்டான்.
فَإِذَا فَرَغْتَ فَانصَبْ(7)وَإِلَى رَبِّكَ فَارْغَبْ(8)

பெருமானாரின் மொத்த வாழ்க்கையுமே தீன் பணியாகத்தான் இருந்தது. ஆயினும் தன்னை வணங்க தனியாக நேரம் ஒதுக்குமாறு அல்லாஹ் உத்தரவிட்டான்.

இந்த பிறகு பெருமானார் (ஸல்) வழக்கத்தை விட அதிகமாக வணக்கத்தில் ஈடுபடத் தொடங்கினார்கள்.

ஆலிம்கள், சன்மார்க்க சேவர்கள், சமுதாயப் பணியாளர்கள் அனைவரும் இந்த உத்தரவை கவனிக்க வேண்டும். நாம் இருப்பதே பொதுப்பணியில் தான என்றாலும் அல்லாஹ்விற்காக ஒரு நேரத்தை தனியாக ஒதுக்க தவறக்கூடாது,

பெருமானார் (ஸல்) கால்கள் வீங்கும் அளவு வணங்கினார்கள்.

யோசித்துப் பார்ப்போம்! கால்கள் வீங்கும் அளவு என்றால் எத்தனை மணி நேரம் நின்றும் உட்கார்ந்தும் இருக்க வேண்டும்?

நாம் ரமலானுக்கு தயாராகிறோம். ஹாபிழ்களை தேடுகிற போதே நேரத்தை சொல்லித்தான் நியமிக்கிறோம்.

என்னுடை நணபர் மர்ஹூம் ரபீஉத்தீன் பாகவி சொன்னார். சிறந்த ஹாபிழான அவர் தராவீஹில் ஓதுவதை கேட்டுக் கொண்டே இருக்கலாம். ஓரிடத்தில் பள்ளிவாசலின் பெறுப்பாளர்கள் அவரிடம் சொன்னார்களாம். ஹஜ்ரத் 50 நிமிடத்தில் தராவீஹை முடித்துவிடவேண்டும்.

இது நம்முடைய நிலை, ரமலானின் இரவு என்றாலும் அதிக நேரம் நிறக நாம் தயாரில்லை. ஒரு ஐந்து பத்து நிமிடம் அதிகரித்து விட்டால நம்முடையை கால்கள் சோர்ந்து விடுகின்றன.

பெருமானாரின் கால்கள் வீங்கின என்றால் குறைந்து பட்சம் மூன்று அல்லது நான்கு மணிநேரம் கால்களை ஒரே மாதிரி வைத்திருந்தால் தான் கால்களில் வீக்கம் தென்படும்.

பெருமானார் அந்த அளவு வணக்கத்தில் ஈடுபட்டார்கள்.

பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தானே தொழுகிறோம். பாவமே அறியாத பெருமானார் ஏன் இப்படி கால கடுக்க வணங்க வேண்டும் என்று நபித்தோழர்கள் கேட்டனர்.

பெருமானார் சஹாபாக்களின் கண்ணோட்டத்தை மாற்றினார்கள்.

அல்லாஹ் எனக்குச் செய்த அருட்கொடைகளுக்கு நான் நன்றி செலுத்த வேண்டாமா?

என்னுடைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விட்டது என்றால் அது எத்தகைய மாபெரும் அருட்கொடை ? அதற்கேற்ப நான் வணங்க வேண்டாமா?

வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு அல்லாஹ் நமக்கு வழங்கியிருக்கிற நிஃமத்துக்களை எண்ணிப்பார்க்க வேணும் என்ற கண்ணோட்டத்தை பெருமானார் உம்மத்துக்கு சொல்லிக் கொடுக்கிறார்கள்.

நிஃமத் எந்த அளவு அதிகமாக கிடைத்திருக்கிறதோ அந்த அளவு இபாதத் அதிகரிக்க வேண்டும்.

அல்லாஹ் நமக்கு எவ்வளவு நிஃமத் செய்திருக்கிறான். இன்றைய இந்த ஜும் ஆவில் அல்லாஹ் நமக்கு செய்திருக்கிற நிஃமத்துக்களை எண்ணிப்பார்க்க பயன்படுத்திக் கொள்வோம்.

நமக்கு காது நன்றாக கேட்கிறது. எத்தகைய மாபெரும் அருட்கொடை இது,

உலகில் பிறக்கிற ஆயிரம் குழந்தைகளில் 5 குழந்தைகள் பிறவியிலேயே செவித்திறன் குறைபாடுடன் பிறக்கின்றன.

பிறவியிலேயா நல்ல செவித்திறனுடன் இருந்தாலும் பின்னர் ஏற்படக்கூடிய நோயகள் நோய்களுக்கு சாப்பிடும் மாத்திரைகளால் செவித்திறன் பாதிக்கப்ப்படக் கூடிய வாய்ப்புண்டு,

குழந்தைகளாக இருக்கிற போது  1 முதல் 3 வயதுக்குள்  பெற்றோர் முறையாக கவனிக்காத காரணத்தால் காலமெல்லாம் செவித்திறன் இல்லாமல் இருப்பவர்கள் உண்டு.


காது கொஞ்சம மந்தமாகிவிட்டது என்றால் அந்த மனிதன் அரை மனிதனாகிவிடுகிறான். எவ்வளவுதான் கவுரமானவனாக இருந்தாலும் இந்தக் குறை சற்று நேரத்தில் எவ்வளவு கம்பீரத்தை குறைத்துவிடுகிறது.

குழல் இனிது யாழினிது என்பர் தம்மக்கள் மழலை மொழி கேளாத மூடர் என்பார் வள்ளுவர். காது கேட்காவிடில் இந்த இனிமைய அனுபவிக்க முடியாது,
மனைவியின் குசுகுசுப்பான வார்த்தைகள் தரும் இன்பம் கிடைக்காது.
ரகசியம் என்பதே பல நேரத்தில் அவர்களுக்கு இருக்க முடியாது.
நல்ல பாடல்களை ரசிக்க முடியாது,
அறிவிப்புக்கள் சொற்பொழிவுகள் கேட்டு பயன் பெற முடியாது.
ஹாரன்சங்கு / விசில் சப்தம் கேட்டு ஆபத்திலிருந்து தப்பிக்க முடியாது.
குர் ஆனின் இனிமையான ஓசையை அனுபவிக்கும் பாக்கியம் கிடைக்காது.

காது கேளாமை பிறவியிலியே இருந்து விடும் என்றால் பேச்சும் வராது! எத்தனை சிரமம் யோசித்துப்பாருங்கள்?

காதுகேளாமையின் இன்னொரு பெரும் தீமையை சமீபத்தில் கேள்விப்பட்டேன். காது கேளாதவர்களுக்கு பல நேரத்திலும் தூக்கம் வராது,

தூக்கம் என்றாலே காது தன்னுடைய செவித்திறனை நிறுத்திக் கொள்வது தான் என முப்தீ முஹம்மது ஷபீ சாஹிப் மஆரிபுல் கூறுகிறார்.

நாம் கண்களை அசதியில் மூடியிடுவோம். அது தூக்கம் அல்ல. உலகின் சப்தங்களை காதுகள் உணராத நிலை தான் தூக்கமாகும். அது போல உறக்கத்திலிருந்து விழிப்பது என்பது காதுகள் சப்தத்தை முதலில் உணர்வதாகும்.

அல்லாஹ்  அஸ்ஹாபுகள் கஹ்புகளை 300 ஆண்டுகள் தூங்க வைத்ததை பற்றி கூறுகிற போது
فَضَرَبْنَا عَلَى آذَانِهِمْ فِي الْكَهْفِ سِنِينَ عَدَدًا(11)

அவர்களின் காதுகளை மூடினோம் என்று கூறுகிறான்.

உறக்கத்தை பற்றி குர் ஆன் வெளிப்படுத்திய ஆழிய அறிவியல் சிந்தனை இது.

காதுகேளாமை குறைபாடுள்ளவர்களுக்கு சில நேரங்களில் மாத்திரை கொடுத்துத்தான் தூங்க வைக்கிறார்கள்.


அல்லாஹ் கொடுத்த கேட்கும் திறன் நமக்கு கிடைத்த எத்தனை மாபெரும் அருட்கொடை என்பதை எண்ணிப்பார்க்கிறோம்

நாம் தொழுவது போதுமா என்பதை சிந்தித்துப் பார்ப்போம்.

செவித்திறனோடு சேர்த்துக் கிடைக்கிற இன்னொரு நிஃமத் பேச்சாகும். அல்லாஹ் நமக்கு நன்றாக பேசும் திறனை வழங்கியிருக்கிறான்.

வெளிநாட்டில் அந்நியர்களின் பாஷை தெரியாவிட்டால் எவ்வளவு சிரமப்படுகிறோம்.

காஜி முஜாஹிதுல் இஸ்லாம் ஒரு கூட்டத்தில் சொன்னார். காலை நாஷ்டா வைக்கப்பட்ட போது உருது தெரியாத ஒருவரிடம் ஸ்பூனை எப்படி கேட்பது என்று நான் படாத பாடுபட்டேன் என்றார்கள்.

சாதாரணமாக கிடைத்து விடுகிற தகவல்கள்/ வசதிகள் கூட பாஷை தெரியாவிட்டால் கிடைப்பதில்லை.

தன்னுடைய பேச்சில் கொன்னல் இருப்பதால் தன் சகோதரரை துணைக்கு அனுப்புமாறு மூஸா அலை அல்லாஹ்விடம் கேட்டார்கள்.

وَأَخِي هَارُونُ هُوَ أَفْصَحُ مِنِّي لِسَانًا فَأَرْسِلْهُ مَعِي رِدْءًا يُصَدِّقُنِي إِنِّي أَخَافُ أَنْ يُكَذِّبُونِي(34)

ஒரு சாதாரண கொன்னலே தடை என்றால் பேச்சே வராவிட்டால் அது எவ்வளவு பெரிய குறை என்பதை என்னிப்பார்க்க வேண்டும்.

மனம் விட்டுப் பேசினால் துக்கம் குறையும் என்பார்கள். வாய்ப்பேசத்தெரியாதவர்களின் துக்கத்தின் கனத்தை எண்ணிப்பாருங்கள்.

இன்றைய மனிதர்களுக்க் வாய் தான் பெரிய சம்பாத்தியமாக இருக்கிறது . அரசியல் வாதிகளையும் வியாபாரிகளையும் அதிகாரிகளையும் எண்ணிப்பாருங்கள்.

வாய்ப்பேச முடியாதவர்கள் எத்தனை வாய்ப்புக்களை இழக்கிறார்கள்.

கண்ணைப் பற்றி என்ன சொல்ல?

உலகில் 3.9 கோடி மக்களுக்கு கண்பார்வை இல்லை. 285 கோடி மக்களுக்கு பார்வைக்குறைவுள்ளதாக கண் அறுவை சிகிச்சை ஆலோசகர், இலங்கையைச் சேர்ந்த கண் மருத்துவர் சிவயோகநாதன் ஒரு கருத்தரங்கில் குறிப்பிட்டுள்ளார். இந்தக் குறையிலிருந்து அல்லாஹ் நம்மை பாதுகாத்துள்ளான.

பார்வையற்ற ஒருவர் மது நாட்டில் குடும்பத்திற்கும் சமுகத்திற்கும் சுமையாகவே
பார்க்கப்படுகின்றார் என மருத்துவர் சிவயோகநாதன் தெரிவித்தார்

பார்வை சற்று மங்கி விட்டாலே எத்தனை இடர்களை சந்திக்க நேருகிறது,

வீட்டு வாசலில் ஒரு விருந்தினர் வந்து நிற்கிறார். கண்ணாடி போடாத்தாதால் அவரை ஏதோ ஒரு மிஸ்கீனைப் போல நினைக்கிற சந்தர்ப்பம் பார்வை குறைவால் ஏற்படுகிறது.

அம்மாவின் முகத்தை பார்க்க முடியாதுமனைவியை குழந்தைகளை நணபர்களை பார்த்து மகிழ முடியாது.

உலகமே இருட்டு மயம் தான்.
சிறிது நேரம் கரண்ட் போய்விட்டால் இருட்டில் நாம் என்ன துன்பப் படுகிறோம்.

உலகின் பெரும்பான்மையான நன்மையை ரசிக்க முடியாது.

கஃபாவை பார்க்க முடியாது, குர் ஆனைப் பார்க்க முடியாது. மனைவியை, பெற்ற குழந்தையை பார்க்க முடியாது.

தன்னுடைய ஆடை சரியாக இருக்கிறதா என்பது தெரியாது.

எதிரில் இருக்கிற பள்ளம் தெரியாது. எத்தனை முறை கீழே விழுந்துஅ எழுந்திருக்கிற சந்தர்ப்பம் ஏற்படும்.

கழிவறைகளைக்கூட சரியாகப் பயன்படுத்திக் கொள்ள முடியாது,

உடலில் உள்ள மற்ற உருப்புக்களை அல்லாஹ் எவ்வளவு ஆரோக்கியமாக கொடுத்திருக்கிறான்.

இந்தியாவில் மட்டும் 7 கோடிக்கும் அதிகமானோர் மாற்றுத் திறனாளிகளாக உள்ளனர் – தி ஹிந்து 2013 டிஸம்பர் 4 ‘
அல்லாஹ் நமக்கு முழு உடல் ஆரோக்கியத்தை கொடுத்திருக்கிறான். கை கால் மற்று உறுப்புக்கள் அதன் செயல்பாடுகள் அனைத்தும் சிறப்பாக இருக்கின்றன.   

இந்த நிஃமத்துக்களை எதை வைத்து மதிப்பிடுவது

வயிறார சாப்பிடுகிறோம். சாப்பிட்டது சக்தியாக வேண்டும். அது அஜீரணமாகிவிடக் கூடாது. சக்தியானது போக மிதமுள்ளது கழிவாக வெளியேற வேண்டும் இல்லை எனில் வாழ்க்கை எத்தனை சிரமத்திற்குள்ளாகிவிடும்.

இந்த உலகிற்கு மாபெரும் கண்டுபிடிப்புக்களை வழங்கிய பெருமக்கள் தமது  ஊனத்திலே எத்தகைய சிரமங்களை அனுபவித்தார்கள்.

அமெரிக்க அதிபராக இருந்த ரூஸ்வெல்ட் இளம்பிள்ளை வாத்தால் பாதிக்கப்பட்டிருந்தார்.

மிகச் சிறந்த ஆங்கில இலக்கியவாதி மில்டன் பார்வையற்றவராவார்

சிறந்த அறிவியல் சாதனையாளராக இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிற ஸ்டெபான் ஹாகிங்  அமையோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்லெரோசிஸ் (myotrophic Lateral Sclerosis,) என்னும் நரம்பு நோயால் தாக்குண்டு குணப்படுத்த முடியாத நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, கை, கால் முதலிய உடலியக்கங்களும் பாதிக்கப்பட்டு, பேச்சையும் இழந்தநிலையில் கணினியூடாகப் பேச்சுத் தொகுப்பி மூலம் மற்றவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளும் கட்டாயத்துக்குள்ளானார். இப்போதும் இவர், இயற்பியல் ஆராய்ச்சிகளிலும், எழுத்துத்துறையிலும், பொதுவாழ்விலும் மிகவும் ஈடுபாடு உள்ளவராகவேயுள்ளார்


உஸ்மான் ரலி அவர்களின் மகன் அபான் பின் உஸ்மான் ரஹ் காதுகேளாதவராகவும் கடும் நோயால் பாதிக்கப்பட்டு பக்க வாததிற்கு ஆளானவராகவும் இருந்தார். இத்தனைக்கும் இடையே தாபிஃகளில் குறிப்பிடத்தகுந்த சட்ட அறிஞராக இருந்தார். அவரை அப்துல் மலிக் பின் மர்வான் மதீனாவின் அதிகாரியாக நியமித்தார்.

·        أبان بن عثمان بن عفان:كان به صمم وحول وبرص ثم أصابه الفالج وكان أبان من فقهاء التابعين وعلمائهم في الحديث والفقه، عينه عبد الملك بن مروان واليا على المدينة عام 76هجري، كما كان رحمه الله يقضي بين الناس وهو حاكم عليهم،

கணவுகளுக்கு விளக்கம் சொல்லும் மாபெரும் அறீஞராக இருந்த முஹம்மது பின் சீரீன் ரஹ் அவர்கள் செவித்திறனற்றவராக இருந்தார்.

ஹிஜ்ரி 279ல் வபாத்தான இமாம் திரிமிதி அவர்களின் கண்பார்வை பறிபோகியிருந்தது.

وصنف عددا من الكتب المفيدة، من أهمها: سنن الترمذي وكتاب الشمائل المحمدية، والعلل المفرد، والزهد، وكتاب أسماء الصحابة،

பல்வேறு உடல்குறைகளுடன் பிறந்த அஹ்னஸ் பின் கைஸ் ரலி எனும் நபித்தோழர்க பெருமானாருடன் பல யுத்தங்களில் கலந்து கொண்டு பெருமானாரின் பாராட்டுதலையும் துஆ வையும் பெற்றார். அவர் தொடை ஒட்டிய நிலையில் பிறந்தார். தொடை பிரிக்கப்பட்ட நிலையில் அவரது கால் நோண்டியாகியது. அவருக்க ஒற்றைக்கண் மட்டுமே இருந்தது. ஒட்டிய கன்னமுடையவராகவும் இருந்தார்.

 الأحنف بن قيس - رضي الله عنه -:اسمه الضحاك بن قيس من بني تميم، والأحنف لقب له، كان في رجليه اعوجاج ولذلك سمي بالأحنف، وكان ملتصق الفخذين فشق ما بينهما، وكان أعرجا أعورا متراكم الأسنان مائل الذقن صغير الرأس بارز الوجه منخفس العينين، ومع هذا كله جمع خصال الشرف والسيادة والمروءة والحكمة - أسلم وحسن إسلامه ودعا له النبي عليه الصلاة والسلام بقوله: (اللهم اغفر للأحنف)
وقد شارك الأحنف رضي الله عنه في عدد من الغزوات والفتوحات فقد شهد فتوح فارس وخراسان في عهد عمر وعثمان رضي الله عنهما،

ஹிஜிரீ 467 ல் பிறந்த – திருக்குர் ஆன் விரிவுரையாளர், பல்துறை வித்தகர் – தப்ஸீர் கஷ்ஷாபின் ஆசிரியர் இமாம் ஜமஹ்ஷரீ கால் ஊனமுற்றவராக இருந்தார். மரத்திலிருந்து கீழே விழுந்ததில் கால் முறிந்து போயிருந்தது. தண்டனையாக கால் முறிக்கப்பட்டவர் என்று அதை மற்றவர்கள் யாவரும் கருதி விடக் கூடாது என்பதற்காக  அதிகாரிகளிடம் ஒரு சான்றை பெற்றுவைத்திருந்தார். அந்த சான்றுடனேயே அவர் வெளிநாடுகளுக்கு செல்வார். அவரது ஊனத்துடனேயே  பல நாடுகளுக்கு பயனம் செய்து அவர் அறிவுநூல்களை திரட்டினார். கற்ற அறிவை பரப்பினார்.

يقول السمعاني في ترجمته: “برع في الآداب، وصنف التصانيف، وَرَدَ العراق وخراسان، ما دخل بلدا إلا واجتمعوا عليه، وتتلمذوا له، وكان علامة نسابة

இத்தனை சாதனையாளர்களும் தமது பணிகளுக்கு இடையூறாக இருந்த ஊனத்தினால் எவ்வளவு சிரமப்பட்டிருக்க கூடும்?  எண்ணிப்பார்ப்போம்.

ஒரு சின்ன தலைவலியை – அல்லது நகச்சுற்றை – அல்லது படபடப்பை – தூக்கமின்மையை தாங்கிக் கொள்ள இயலாதவர்கள் நாம். எத்தனை பேரிடம் புலம்பித்தீர்த்து விடுகிறோம்.

அல்லாஹ் குறைவின்றி கொடுத்திருக்கிற உடல் ரீதியான நிஃமத்துக்களை எண்ணிப்பார்க்க வேண்டும்.

அது போல புத்திசுவாதீனத்தை – சரியான அறிவையும் அல்லாஹ் வழங்கியிருக்கிறான். அதனால் தான் நாம் மரியாதையான மனிதராக நட மாட முடிகிறது.

உலகில் 88 குழந்தைகளுக்கு ஒரு குழந்தை மூளை வளர்ச்சிக் குறைபாட்டுடன் பிறக்கிறது.
வளர்ந்த நாடான அமெரிக்காவில் கிட்டத்தட்ட 3 லட்சம் குழந்தைகள் இந்த வகை குறைபாடுகளில் உள்ளனர்.

இ‌ந்தியாவில் பிறக்கும் 600 குழந்தைகளில் ஒரு குழந்தை டவுன்ஸ் சிண்ட்ரோம் எனப்படும் மனநலம் குன்றிய குழந்தையாக உள்ளது. 

இதனால் ஏற்படும் தீமைகளும் பாதிப்புக்களும் எவ்வளவு? கற்பனை கூட செய்து பார்க்க முடியாதவை.

காலமெல்லாம் பாதுகாப்பற்ற சுய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாத – தான் ஒரு மனிதப் பிறவு என்பதையே உணர முடியாத நிலையை என்னெவென்பது.

அல்லாஹ் எத்தகை பெரும் தீங்கிலிருந்து நம்மை பாதுகாத்தி ருக்கிறான். எண்ணிப்பார்க்க வேண்டும்.

நாம் பாதுகாப்பான வீடுகளில் வாழ்கிறோம்.

உலகம் முழுவதிலும் சுமார் 10 கோடி மக்கள் இரவில் ஒதுங்குவதற்கு ஒரு இடமில்லாமல் பொது இடங்களில் கழிப்பதாக விக்கிபீடியா தெரிவிக்கிறது.

An estimated 100 million people worldwide were homeless in 2005

இந்தியாவில் 23 கோடி மக்கள் வீடற்று பிளாட்பாரங்களில் வாழ்கின்றனர்.
இந்தியாவில் ஐந்து தலைமுறையாக வீடற்றவர்களாக வாழ்வோர் உண்டு என்றும் அது கூறுகிறது.

have an average of five generations being homeless.

அல்லாஹ் நமக்கு எவ்வளவு நிஃமத்துக்களை செய்திருக்கிறான் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

அது போல் வாழ்க்கைகான சவுகரியங்கள் உணவு உடை உள்ளிட்ட வசதிகளிலும் ஓரளவு நாம் தன்னிறைவுடன் வாழ்கிறோம்.

நாம் வாழ்கிற இதே நாட்டில் சுமார் 30 கோடிப்பேர் ஒரு நாளைக்கு 50 ரூபாயுக்கும் குறைவான வருமானமுடையவர்களாக இருக்கின்றனர் அவர்களுக்கெல்லாம் ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே உணவு கிடைக்கிறது.

More than 290 million people in India make less than $1 USD per day, thus setting them below the global poverty threshold.


அல்லாஹ் நமக்கேற்படுத்திக் கொடுத்திருக்கிற உறவுகள் நமக்கு எத்தகைய கொடைகள்?

இந்த உறவுகள் எதுவும் நாமாக உருவாக்கிக் கொண்டவை அல்ல. அல்லாஹ்வாக கொடுத்தவை.

சகோதரகள் தகப்பன் வழி உறவு தாய் வழி உறவு என்று தொடரும் ஒரு கூட்டம் பிறந்த் குழந்தையை சூழ்ந்து கொண்டு சொந்தம் கொண்டாடுகிறது.

கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்! நம் வீட்டில் ஒரு கல்யாணத்திற்கு அழைப்பதற்கு உறவுகளே இல்லை என்றால் , அல்லது உறவுகள் குறைவாக இருப்பார்கள் எனில் நமது சந்தோஷமும் மதிப்பும் எந்த அளவு குறைந்துவிடுகிறது?

இந்த உலகில் கோடிக்கணக்கான சிறுவர் சிறுமிய உறவுகளற்ற அநாதைகளாக இருக்கின்றனர்.

ஆப்ரிக்க மக்கள் தொகை 11 சதவீதத்தினர் அநாதைகள் . ஆசியாவில் 6.5 சதவீதத்தினர் அநாதைகள். சதா போர் நடக்கும் பகுதியான ஆப்கானிஸ்தானில் உலகில் அதிக எண்ணிக்கையில் அநாதைகள் வாழ்கிறார்கள்.

உறவு என்பது எத்தனை பலம்? சகோதரர்களுக்காக / கணவருக்காக/ கிட்னி தானம் செய்தோர் எத்தனை பேர்?

பெருமானார் (ஸல்) அவர்கள் தனது மகள் பாத்திமா (ரலி) யுடன் எத்தகைய உறவு முறைப்பேனலை கை கொண்டார்கள்?  

ஒரே அலுவலகத்தில் வருடக்கணக்கில் ஒன்றாக பணியாற்றுகிறவரோடு நட்புறவை ஏற்படுத்திக் கொள்ளவோ பராமரிக்கவோ இன்று நம்மால் முடிவதில்லை. ஆனால் அல்லாஹ் ஏற்படுத்திய தூரத்து உறவுகள் நமக்கு எத்தகைய நன்மையை தருகின்றன.?

அல்லாஹ் கொடுக்கிற கல்வி, அந்தஸ்த்து, மரியாதை இவற்றின் கனத்தை கணக்கிட்டு விட முடியுமா?

உலகில் பலகோடிப்பேர் கல்வி அறிவற்றவர்களாக அதற்கான வாய்ப்பற்றவர்களாக இருக்கின்றனர்.


இந்தியாவில் எழுத்தறிவு சதவீதம் 1946 லிருந்து 2006 க்குள் 63 சதவீதம் எழுத்தறிவு வளர்ச்சி பெற்றிருக்கிறது என்றாலும் நம்முடைய நாட்டில் சுமார் 28 கோடி மக்கள் எழுத்தறிவற்றவர்களாகவே இருக்கின்றன. அதாவது தமது மொழியில் தம்முடைய பேரை கூட அவர்களுக்கு எழுதத்தெரியாது. உலக அளவில் அதிக அளவில் எழுத்தறிவற்ற மக்கள் வசிக்கும் நாடாக நம்முடைய நாடு இருக்கிறது.

ஒரு பேருந்தின் எண்ணையோ வழித்தடத்தையோ படிக்கத் தெரியாவிட்டால் எத்தனை சிரமம்?

படிப்பறிவு இல்லாத இடங்களில் குற்ற்ச் செயல்கள் அதிகரிக்கும்

2000 மாவது ஆண்டில் அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு கணக்கெடுப்பில் அங்குள்ள சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 60 சதவீத இளைஞர்கள் கலவியறிவற்றவர்களாக இருப்பது கண்டறியப்பட்டது.

படிப்பு இன்றைய நம்முடைய வாழ்க்கையின் வசதிகளை எந்த அளவு உயர்த்தியிருக்கிறது.

படிப்பு எத்தகைய உயர்ந்த அந்தஸ்தை வழங்குகிறது?

வெளியூர்களுக்கு போகிற போது அந்நிய இடத்தில் நம்மை அடையாளம் கண்டு கொண்டு மதிக்கிற உபசரிக்கிற ஒருவர் கிடைத்து விட்டால் நாம் எவ்வளவு ஆனந்தம் அடைகிறோம்.

அல்லாஹ் ஏற்படுத்திய அந்த நட்பின் நிஃமத்தை என்னவென்று சொல்வது

இப்படி அன்றாடம் நம் வாழ்க்கையில் அல்லாஹ் கொடுத்து நாம் அனுபவிக்கிற நிஃமத்துக்களை எண்ணிப்பார்க்கிறோம். நேரடியாக நமக்கு கிடைக்கிற இந்த நிஃமத்துக்களையே  ஒரு கணக்கில் அடைத்து விட முடியாது.

وَإِنْ تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا ۗ إِنَّ اللَّهَ لَغَفُورٌ رَحِيمٌ

இனி மறைமுகமாக கிடைக்கிற நிஃமத்துக்களான இந்த பிரபஞ்சம் அதிலுள்ள சூரியன்  பூமி காற்று தண்ணீர் தாவரங்கள்  மற்ற பிராணிகள் கடல்  அதிலுள்ள மீன்கள் நட்சத்திரங்கள் என தொடரும் அருட்கொடைகளை என்னிப்பார்த்தால் அல்லாஹ்வுக்கு நாம் எந்த அளவு நன்றி செலுத்த கடமைப்பட்டிருக்கிறோம்.

وَاذْكُرُواْ نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ وَمِيثَاقَهُ الَّذِي وَاثَقَكُم بِهِ إِذْ قُلْتُمْ سَمِعْنَا وَأَطَعْنَا وَاتَّقُواْ اللَّهَ إِنَّ اللَّهَ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ ( المائدة 7 )
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ اذْكُرُواْ نِعْمَتَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ هَمَّ قَوْمٌ أَن يَبْسُطُواْ إِلَيْكُمْ أَيْدِيَهُمْ فَكَفَّ أَيْدِيَهُمْ عَنكُمْ وَاتَّقُواْ اللَّهَ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ ( المائدة 11 )
أَلَمْ تَرَوْا أَنَّ اللَّهَ سَخَّرَ لَكُمْ مَا فِي السَّمَوَاتِ وَمَا فِي الأَرْضِ وَأَسْبَغَ عَلَيْكُمْ نِعَمَهُ ظَاهِرَةً وَبَاطِنَةً وَمِنْ النَّاسِ مَنْ يُجَادِلُ فِي اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَلا هُدًى وَلا كِتَابٍ مُنِيرٍ 

எல்லாவற்றிற்கும் மேலாக இந்த இஸ்லாம் என்கிற தீனை தந்த்தற்காக, முஹம்மது நபி (ஸல்) அவர்களை தலைவராக பெற்ற மைக்காக நாம் எத்தனை தலைமுறைக்கு தலை கீழாக நின்று வணங்கினாலும் ஈடாகுமா?

அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தி விட முடியாமா?

நிச்சயம் முடியாது என்பது தான் لَا تُحْصُوهَا  வின் கருத்து.  தப்ரீ இதற்கு விளக்கம் அளிக்கிறார். لَا تُطِيقُوا أَدَاء شُكْرهَا 

என்றாலும்

إِنَّ اللَّه لَغَفُور رَحِيم

} يَقُول جَلَّ ثَنَاؤُهُ : إِنَّ اللَّه لَغَفُور لِمَا كَانَ مِنْكُمْ مِنْ تَقْصِير فِي شُكْر بَعْض ذَلِكَ إِذَا تُبْتُمْ وَأَنَبْتُمْ إِلَى طَاعَته وَاتِّبَاع مَرْضَاته , رَحِيم بِكُمْ أَنْ يُعَذِّبكُمْ عَلَيْهِ بَعْد الْإِنَابَة إِلَيْهِ وَالتَّوْبَة .'
என்றாலும் முடிந்த வரைக்கும் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கோரி அவரை வணங்கி வழி பட வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

அல்லாஹ்வை தொழ வேண்டும் என்ற எண்ணம் வருகிற போது , அவனது சட்டங்களுக்கு கட்டுப்பட வேண்டும் என்ற சிந்தனை வருகிற போது அல்லாஹ் நமக்கு செய்துள்ள அருட்கொடைகளை கொஞ்சம் மதிப்பீடு செய்து பார்த்துக் கொள்ள வேண்டும். நாம் எவ்வவு வணங்க  / கட்டுப்பட கடமைப்பட்டுள்ளோம் என்ற உத்வேகத்தை அது தரும்.

அல்லாஹ் நமக்கு செய்துள்ள நிஃமத்துக்களை அடிக்கடி எண்ணிப்பார்த்துக் கொள்ள வேண்டும், அப்போது இந்த நிஃமத் கிடைக்காத மக்களின் நிலையோடு சேர்ந்த்து அதை ஒப்பீடு செய்து கொள்ள வேண்டும், அப்போது  அல்லாஹ்வை பற்றிய அச்சமும் கால்கள் வீங்குமளவிற்கு இல்லை என்றாலும் கால்கள் வலிக்குமளவிற்காவது நிற்க நம் உள்ளமே நம்மை தூண்டும்.
أن رسول الله - صلى الله عليه وسلم - أتى على أصحابه وهم يتحدثون ، فقالوا
كنا نذكر ما كنا فيه من الجاهلية وما هدانا الله - عز وجل -  ،  وما كنا فيه من الضلالة  فقال رسول الله - صلى الله عليه وسلم - : " أحسنتم " وأعجبه "  كونوا هكذا، وهكذا فافعلوا

புனிதம் மிக்க ரமலானை எதிர்பார்த்துக் காத்திருந்த இந்தப் பருவத்த்தில் அல்லாஹ் நமக்கு கொடுத்த அருட்கொடைகளுக்கு நாம் நன்றியுடைவராக இருக்க வேண்டாமா என்ற பொன்மொழியை நினைவில் வைத்துச் செயல்படுவோம். 

பாவங்களே இல்லாத பெருமானார் அல்லாஹ்வின் அருட்கொடைகளை எண்ணி கால் வீங்க நின்றார்கள் எனில், பாவங்களே வாழ்க்கையாக கொண்ட நாம் அருட்கொடைகளுக்கு நன்றியாக மட்டுமில்லாமல் பாவங்களுக்கு மன்னிப்புக் கோரி எத்தனை கால்களால் நின்று வணங்கனும்? 










அல்லாஹ் இந்த ஷஃபானில் நமக்கு பரக்கத் செய்தருள்வானாக! ரமலானைப் பெற்றுக் கொண்ட பாக்கியசாலிகளாக நம்மை ஆக்கியருள்வானாக!.

4 comments:

  1. Time ku poruthamana seidhi jazakall ah

    ReplyDelete
  2. Jazakallahu khairan kaseeran fiddhaarain

    ReplyDelete
  3. ஜஸாகல்லாஹ்

    ReplyDelete
  4. ஜஸாகல்லாஹ்

    ReplyDelete