வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, May 21, 2015

பயனுள்ள கல்வி எனும் கவனம் தேவை

يُؤْتِي الْحِكْمَةَ مَنْ يَشَاءُ وَمَنْ يُؤْتَ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيرًا وَمَا يَذَّكَّرُ إِلَّا أُوْلُوا الْأَلْبَابِ(2692;

لَكِنْ الرَّاسِخُونَ فِي الْعِلْمِ مِنْهُمْ وَالْمُؤْمِنُونَ يُؤْمِنُونَ بِمَا أُنزِلَ إِلَيْكَ وَمَا أُنزِلَ مِنْ قَبْلِكَ وَالْمُقِيمِينَ الصَّلَاةَ وَالْمُؤْتُونَ الزَّكَاةَ وَالْمُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ أُوْلَئِكَ سَنُؤْتِيهِمْ أَجْرًا عَظِيمًا(162)


10 ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது.
12 ம் வகுப்பு முடிவுகள் இரண்டு வாரத்திற்கு முன் வெளியாகியது,

வெற்றி பெற்ற மாணவக்கண்மணிகளுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

அல்லாஹ் நம் அனைவருக்கும் பயனுள்ள கல்வியை தந்தருள்வானாக!

அடிப்படைக் கல்வியை முடித்து வாழ்க்கையில் நமது அடையாளத்தை தீர்மாணிக்கிற உயர் நிலைக் கலவிக்கு மாணவர்களும் பெற்றோர்களும் தயாராகி வருகிறார்கள்.

அல்லாஹ் அந்த பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் தகுந்த வழிகாட்டுதலை தந்தருள்வானாக!

குடும்பத்தில் யாராவது ஒருவர் அதிகாரியாகவோ, உயர்ந்த பொறுப்பிலோ, நல்ல வேலையிலோ இருந்தால் அவர் மற்றவர்களுக்கு அடுத்து என்ன செய்வது என்று வழி சொல்லிக் கொடுப்பார், அல்லது அவரைப்பார்த்து மற்றவர்கள் தாமே வழியை தீர்மாணித்துக் கொள்வார்கள். 

நமது சமூகத்தில் இன்றுள்ள குடும்பச் சூழலில் கல்விக்கு வழி காட்டும் முன்னுதாரனங்கள் குறைவு.

என்வே பெற்றோர்களும் மாணவர்களும் அடுத்து என்ன படிக்கலாம் என்பதற்கு உடனடியாக தகுந்த ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.

கடந்த ஆண்டு 10 ம் வகுப்புத் தேர்வில் அதிக மதிப்ப்பெண் எடுத்த ஒரு மாணவிக்கு மருத்துவம் படிகக வேண்டும் என்ற ஆசை. ஆனால் பள்ளிக் கூடத்தில் 11 வகுப்பிற்கு அவர் அக்கவுண்டன்ஸீ குரூப்பை. தேர்ந்தெடுத்திருந்தார். பீஸ் வாங்கும் இடத்திலிருந்த ஆசிரியை அந்த மாணவியின் மீது அக்கறை கொண்டு அவர்களுடைய பெற்றோர்களை அழைத்து பேசி இந்த குரூப்பை தேர்ந்தெடுத்தால் மருத்துவராக முடியாது என்று சொல்லி – முதல்வரிடம் சென்று சயின்ஸ் குருப் தருமாறு கேளுங்கள், இந்த மார்க்கிற்கு கட்டாயம் கிடைக்கும் என்று சொல்லி அனுப்பினார்.

இப்போதும் கூட பல முஸ்லிம் பெற்றோர்கள் பொருத்த மற்ற வகுப்பையும் பள்ளிக் கூடத்தையும் தேர்வு செய்கிறார்கள்.

இப்போது கிடைத்திருக்கிற மார்க்கில் நமது திறமை என்ன என்பதை புரிந்து கொண்டு அதற்கேற்ப நாம் என்னவாகலாம் என்பதை முடிவு செய்து விட்டு அடுத்து படிக்கிற துறையை தேர்வு செய்யுங்கள்.

அதே போல் பள்ளிக் கூடத்தை / கல்லூரியை பெருமைக்காக தேர்வு செய்யாதீர்கள். தகுதியான பள்ளிக் கூடத்தை அல்லது கல்லூரியை நம்முடைய சவுகரியம் மற்றும் வசதி ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யுங்கள்.

பணக்காரப் பிள்ளைகள் படிக்கிற ஒரு கல்லூரியை தேர்வு செய்த மாணவன் ஒரு வருடத்தில் பைக் வாங்கித் தரவேண்டும் அதுவும் ட்யூக் பைக் வாங்கித் தரவேண்டும் அப்போது தான் கல்லூரிக்கு செல்வேன் என்று அடம்பிடிப்பதாக ஒருவர் என்னிடம் கூறினார்.

முஸ்லிம் சமூகத்தில் கல்வி முக்கியம் என்கிற உணர்வு மெலோங்கியிருக்கிறது,  பாரட்டப்பட வேண்டிய விசயமே ,

அதே நேரத்தில் அந்தக் கல்வி நமக்கு பயனப்ட வேண்டும் என்ற சிந்தனையும் சம அளவில் – அல்ல ஒரு படி அதிகமக முக்கியத்துவம் பெற வேண்டும்.

பயனளிக்காமல் போய்விடுகிற கல்வியிலிருந்து பெருமானார் பாதுகாப்பு தேடினார்கள்.  

அவ்னுல் மஃபூதில் அபூதாலிபில் மக்கீ கூறுகிறார்.
பெருமானார் (ஸல்) அவர்கள் ஷிர்க் – நிபாக் – சூஊல் குல்கி லிருந்து பாதுகாப்பு கேட்ட வரிசையில் பயனற்ற கல்வியிலிலிருந்து பாதுகாப்பு கேட்டிருக்கிறார்கள்.

وروى الإمام الترمذي في جامعه من حديث عبدالله بن عمرو بن العاص أن النبي صلى الله عليه وسلم كان يتعوذ من أربع،

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ قَلْبٍ لَا يَخْشَعُ وَمِنْ دُعَاءٍ لَا يُسْمَعُ وَمِنْ نَفْسٍ لَا تَشْبَعُ وَمِنْ عِلْمٍ لَا يَنْفَعُ أَعُوذُ بِكَ مِنْ هَؤُلَاءِ الْأَرْبَعِ

எந்தக் கல்வியானாலும் அது நமக்கு பயனளிப்பதாக இருக்க வேண்டும் எனற சிந்தனை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அவசியம்.

யூதர்கள் பெருமானார் (ஸல்) அவர் உண்மையாளர் என்பதை சகல சான்றுகளோடும் அறிந்திருந்தார்கள், ஆனால் பெருமானாரை அவர்களில் பலர் ஏற்கவில்லை,

என்ன பரிதாபம் பாருங்கள் ! அறிவிருந்தும் அது பயனற்றதாகிவிட்டது. ஈருலகிற்கு ம்  அது எவ்வளவு நஷடமாகிவிட்டது பாருங்கள்!

இந்த ஹதீஸ் குறீத்து தீபீ மற்றொரு விளக்கம் தருகிறார்.

وَقَالَ الطِّيبِيُّ: اِعْلَمْ أَنَّ فِي كُلّ مِنْ الْقَرَائِن الْأَرْبَع مَا يُشْعِرُ بِأَنَّ وُجُودَهُ مَبْنِيّ عَلَى غَايَته وَأَنَّ الْغَرَض مِنْهُ تِلْكَ الْغَايَة وَذَلِكَ أَنَّ تَحْصِيل الْعُلُوم إِنَّمَا هُوَ لِلِانْتِفَاعِ بِهَا، فَإِذَا لَمْ يَنْتَفِعْ بِهِ لَمْ يَخْلُص مِنْهُ كَفَافًا بَلْ يَكُونُ وَبَالًا، وَلِذَلِكَ اِسْتَعَاذَ.

பெருமானார் பாதுகாப்புத் தேடிய நான்கும் இந்த நான்கு செயல்களின் இறுதி நோக்கமே அது தான் எனபதை சுட்டுக் காட்டுகின்றன.

அதவது பிரார்த்தனை செய்கிறோம்! எதற்காக?

பிரார்த்தனையின் இறுதி நோக்கமே அது ஏற்கப் பட வேண்டும் என்பது தானே?

ஏற்கப்படாவிட்டால் பிரார்த்தனை எவ்வளவு நீண்டதாக உருக்கமானதாக செலவு பிடித்ததாக இருந்தும் பயன் என்ன?

அதே போல கல்வியின் நோக்கமே அது பயனளிக்க வேண்டும் எனபது தான். அந்த பயன் கிடைக்காவிட்டால் அது மோசம் தானே!

எனவே இந்த துஆ விசயத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்,

துஆ வும் கேளுங்கள், தேர்ந்தெடுக்கிற படிப்பு அல்லது கல்லூரி பயனளிக்குமா என்பதை ஆய்வும் செய்யுங்கள்.

பல பெற்றோர்களும் பிள்ளைகளுக்கு பயனளிக்காத துறையை தேர்வு செய்து விட்டு பிறகு வருத்தப்படுகின்றனர். சிலர் பயனளிக்காத கல்லூரியை அவசரத்திற்கு அல்லது வசதிக்கு தேர்வு செய்து விட்டு பிறகு வருத்தப்படுகின்றனர்.

படிப்பு -  கல்லூரி – வசதிவாய்ப்பு இந்த மூன்று அடிப்படையிலும் எது பயனுள்ளது என்பதில் கவனம் செலுத்துங்கள்.

படித்த  - பணியிலிருக்கிற – அனுபவம் வாய்ந்தவர்கள் முஸ்லிம் பொதுமக்களுக்கு பயனுள்ள மேற்படிப்புக்களுக்கு தங்களுடைய வழிகாட்டுதல்களை வழங்குங்கள்,

கேரளாவில் சில முஸ்லிம் தொண்டு அமைப்புக்கள் இரண்டு நாளைக்கு மாணவர்களை தங்களுடன் தங்கவைத்து அவர்களுடன் தொடர்ந்து கவுன்சிலிங்கில் ஈடுபட்டு அவர்களுடைய திறனை அறிந்து தேவையான கோர்ஸுகளையும் கல்லூரிகளையும் தேர்ந்தெடுக்க வழிகாட்டுகின்றனர்.
இனி வரும் காலங்களில் பள்ளிவாசல்கள் தோறும் அல்லது முக்கிய பள்ளிவாசல்களில்  ரிசல்ட் வெளியாகிற அன்று ரிசல்ட் பார்த்துக் கொடுப்பதோடு  அனுபவ சாலிகள் உட்கார்ந்து பெற்றோர்களுக்கும் மாண்வர்களுக்கும் வழிகாட்டுதல்கள் செய்தால் சமூகத்திற்கு அது பெரிதும் பயனளிக்ககூடும்.

முன்னதாக நடைபெறுகிற கல்வி வழிகாட்டுதல்கள் முகாம்களில் கிடைக்கிற வழிகாட்டுதலை விட, மார்க் இன்னெதென்று தெரிந்த பிறகு கிடைக்கிற வழி காட்டுதல் மிக முக்கியமாக இருக்கிறது.

இந்த முறை 12 ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர் சிலர் உடனடியாக முய்றசியில் இறங்காத்ததால் மதிப்புமிக்க தனியார் கல்லூரிகளில் குறைந்த கட்டணத்தில் சிறந்த கல்வியை பெருகிற வாய்ப்பை தவறவிட்டனர், உரிய நேரத்தில் வழிகாட்டுதல் கிடைக்காத்தே அதற்கு காரணம்.

இனி அடுத்து வரக்கூடிய மருத்துவம் இந்திய மருத்துவம் உபமருத்துவத்துறைகள், பொறியியல் மற்றும் அரசு கலைக்கல்லூரி கவுன்சிலிங்குகள் குறித்து அனுபவசாலிகள் தமது மஹல்லா மக்களுக்கு தகுந்த ஆலோசனைகள் சொல்லித்தர வேண்டும். அதற்கான ஏற்பாட்டை அக்கறையுள்ள ஜமாத்துகள் மேற்கொள்ள வேண்டும்.

வாழ்க்கைகைத்து தேவையான விசய்ங்களில் வழிகாட்டுதல் பெருமானாரின் சுன்னத்தாகும்.

யாசகம் கேட்டவருக்கு பெருமானார் கோடாரி செய்தி கொடுத்து வழிகாட்டிய வரலாறு நாம் அறிந்ததே!  

படிப்பில் அக்கறை செலுத்த தொடங்கியிருக்கிற சமுதாயத்தை பயனுள்ள படிப்பு என்ற திசையில் செலுத்தி விட வேண்டியது அவசியமான ஒரு பணியாகும்.

பயனுள்ள படிப்பு என்று சொல்லும் போது சம்பாத்தியத்தை மட்டுமே பயன் என்று கருது விடக் கூடாது.

தற்காலத்தில் பணததை மட்டுமே பயன் என்று கருதும் போக்கு வியாபித்திருக்கிறது.

கல்வி என்பது நமது உள்வெளிச்சத்திற்கானது – சிந்தனை விசாலத்திற்கானது, அறிவு வளர்ச்சிக்கானது  என்ற சிந்தனை முதலில் அவசியம்.
கல்வியின் முதல் இலக்கு இது

தன்னிடமிருக்கிற அறியாமையை போக்கிக் கொள்வது, அது போல பிறரின் அறியாமையை போக்குவது,

فالعلم النافع هو العلم الذي يتعلمه صاحبه ليرفع الجهل عن نفسه أولاً، ثم عن غيره
இளைஞர்களிடம் ஆழமாக பதிப்பிக்க வேண்டிய செய்தி இது.

மனிதனுக்கு இறைவன் இதயத்தையும் மூளையையும் கொடுத்திருக்கிறான். இதயத்தில் இறைவனப் பற்றிய பயமும் மூளையில் அறிவும் நிரப்பப்பட வேண்டும்.

இரண்டில் ஒன்று காலியாக இருந்தாலும் வாழ்க்கை வீணாகிவிடும்.

இறையச்சம் மட்டும் இருந்து அறிவு இல்லாவிட்டால் மனிதன் தவறான வழியில் சென்று விடுவான்,

பல வணக்கசாலிகளை அவர்களது அறியாமையை பயன்படுத்தி ஷைத்தான் வழி கெடுத்ததுண்டு.

ஒரு நல்ல வணக்கசாலியை வழி கெடுக்க ஷைத்தான் அவரை விட அதிகம் வணங்குபவனைப் போல பாசாங்கு செய்து என்னைப் போல் வணங்க வேண்டுமெனில் நீ பாவம் செய்ய வேண்டும் என்று சொல்லி அவரை தூண்டி விட்டு மது அருந்தவும் விபச்சாரம் செய்யவும் கொலை செய்யவும் வைத்து கடைசியில் தூக்கு கயிற்றின் வாசலில் இருந்த அவரை தனக்கு சஜ்தா செய்ய வைத்து முஷ்ரிக்காக்கினான் என்ற உருவகக்கதை இஸ்லாமிய மரபு வழிச் செய்திகளில் உண்டு,  
  
அறிவு இருந்து இறையச்சம் இல்லாவிட்டால்  தற்பெருமை சுய நலம் தலை தூக்கி – ஷைத்தானைப் போல அது மனிதனை துரதிஷ்டத்தில் ஆழ்த்திவிடும்.

எனவே மன்து இறையச்சத்தாலும் மூளை அறிவாளும் நிரமபியிருக்க வேண்டும்,
உள்ளம் வெளிச்சம் பெற வேண்டும் என்ற சிந்தனை கல்விக்கு மிகவும் முக்கியமானது.

அடுத்த்தாக கல்விய சுய தேவையை நிறைவேற்றிக் கொள்ளும் வழி என்று கருதாமல் கல்வி சுயமரியாதைக்கான வழி என்ற சிந்தனை இளைஞர்களிடம் படர வேண்டும்.

தேவைய தீர்த்துக் கொள்ளுதல் என்பது பொதுவாக மிருகங்களின் இயல்பு அது வே மனிதனுடைய இறுதித்தீர்வாக இருந்து விடக் கூடாது,

கல்வி நம்கொரு மரியாதையான அடையாளம் என்ற உணர்வு மாணவர்களிடம் வேண்டும்.

தாரமீ யில் ஒரு செய்தி வருகிறது. அலி ரலி கூறினார்கள்

: تعلموا العلم تعرفوا به، واعملوا به تكونوا من أهله)

கற்றுக்கொள்ளுங்கள் அதன் மூலம் நீங்கள் அறியப்படுவீர்கள், செயல்படுங்கள் நீங்கள் அந்த அறிவுக்கு தகுதியுடையவராவீர்கள்.

அலி ரலியின் கூற்று கல்வியின் மற்றொரு திசையையும் சுட்டிக்காட்டு கிறது. கல்வி கற்ற பிறகு அதன்படி செயல் பட்டால் மட்டுமே அதற்கான தகுதி நிலைக்கும்.

கல்வியின் இரண்டாவது இலக்கு கற்றபடி செயல்பட வேண்டும் என்ற சிந்தனை

يعمل به ويعلّمه

படிக்கத் தொடங்கும் போதும். படிக்கிற போதும் படித்து முடித்து விட்ட பிறகும் நினைவில் நிறுத்த வேண்டிய செய்தி இது தான்.

நான் இன்னது படிக்கிறேன். படித்து முடித்த பிறகு அதற்கேற்ப நடக்க வேண்டும்.

மருத்துவக் கல்லூரியிலோ அல்லது பொறியியலிலோ படிக்கிற போது நான் படித்ததற்கேற்ப செயல்பட வேண்டும் என்ற சிந்தனை ஒரு மாணவனிடம் அழுத்தமாக இருக்கும் எனில் அவனது கவனம் எப்படி இருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை.
வள்ளுவன் சொன்னான்.

கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

நிற்க அதற்குத் தக என்பது படித்து முடித்த பிறகு செய்கிற வேலை மட்டுமல்ல. படிக்கத் தொடங்குகிற போதே நான் படித்த படி நடப்பேன் என்ற தீர்மாணம் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு மாணவனும் தனக்குள் இறைவன் ஒரு ஆற்றலை வைத்திருக்கிறான் என்பதை முதலில் நம்பிக்கை கொள்ள வேண்டும். அதே போல் தமது பிள்ளைகளிடம் ஒரு ஆற்றல் இருக்கிறது என்பதை பெற்றோர்களும் உணர வேண்டும்.

பெருமானார் (ஸல்) சொன்னார்கள் மனிதர்கள் சுரங்கம் போன்றவர்களே ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு புதையல் இருக்கிறது,


عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ تَجِدُونَ النَّاسَ مَعَادِنَ فَخِيَارُهُمْ فِي الْجَاهِلِيَّةِ خِيَارُهُمْ فِي الْإِسْلَامِ إِذَا فَقِهُوا - مسلم 

கல்வி கற்கிற காலத்தில் தனக்குள் இருக்கிற ஆற்றல் என்ன என்பதை அடையாளம் கண்டு கொள்ள வேண்டியது மாணவனின் கடமை , அது போல் தமது பிள்ளைகளின் ஆற்றல் என்ன என்பதை அடையாளம் கண்டு கொள்வது பெற்றோர்களின் கடமை,



கல்வி
உள்வெளிச்சத்தை
சுய மரியாதையை
கற்றபடி செயல்படும் உணர்வை
தனக்குள்ளிருக்கும் ஆற்றலை வெளிக்கொண்டுவரும் திறனை தர வேண்டும், அதுவே பயனுள்ள கல்வியாகும்..

பயனுள்ள கல்வி கிடைத்து விட்டது என்பத்ற்கு மார்க்க அறிஞர்கள் இரண்டு அடையாளத்தை சொல்கிறார்கள்
1.   ஒன்று : அல்லாஹ்வை பற்றிய பயம்
2.   இரண்டாவது: மனிதாபிமானம்

قال ابن عطاء اللّه السكندري في الحِكم: " ، خَيرُ العلم ما كانت الخشيةُ مَعَه؛ والعلم إن قارَنَتْهُ الخشيةُ فَلَكَ؛ وإلا؛ فَعَلَيْكَ".

இத்ததகைய கல்வி அவருக்கும் பயனளித்து பிறருக்கும் பயனளிக்கும். இத்தகைய சிந்தனை கொண்ட மாணவர்களுக்கு அல்லாஹ் தன் புறத்திலிருந்து உதவிகளைத் தருவான், இத்தகைய மாணவர்களுக்கு தடாகத்திலிருக்கிற மீன்களும் பிரார்த்திக் கின்றன என நபிகள் நாயாகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்,

இத்தகைய பயனுள்ள கல்வி தனக்கு வேணும் என மாணவர்கள் உறுதி வைக்க வேண்டும்.

இத்தகைய பயனுள்ள கல்வி தம் பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டும் என பெற்றோர்கள் ஆசைப்பட வேண்டும்.

இத்தகைய மாணவ்ர்கள் கேட்கிற பிரார்த்தனைகளை அல்லாஹ் ஏற்பான்,

மஹ்மூது கஜ்னவிக்கு மூன்று சந்தேகங்கள் மனதை குடைந்து கொண்டிருந்தன.

1.   சபுக்தகீன் தான் தன்னுடைய தந்தையா? அவரோ ஒரு படை வீரார். நான் அரசனாக இருக்கிறேனே!
2.   மக்களில் சிறந்தவர்கள் யார்?
3.       பெருமானார் (ஸல்) அவர்களீன் சியாரத் தனக்கு கிடைக்குமா?
ஒரு நாள் மாறு வேடத்தில் வீதி உலா வரும்  போது தெருவின் ஒரு வீட்டின் வெளியே கிடைத்த வெளிச்சத்தில் ஒரு மாணவன் படித்துக் கொண்டிருந்தான். ஏன் பள்ளிவாசலை விட்டு விட்டு இங்கு வந்து படிக்கிறாய் என்று கேட்டார் கஜ்னி, அங்கு விளக்கில்லை என்றான் மாணவன், இப்போதே விளக்கிற்கு ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லி உத்தரவிட்டார். விளக்கு வந்த்து. அரசர் என்பதை அறியாமல் மாணவன் துஆ செய்தான் யா அல்லா ! இந்த மனிதரின் தேவைகளை நீ நிறைவேற்று!

அன்று உறக்கத்தில் பெருமானாரை கனவில் கண்டார் கஜ்னவீ. சபுக்தகீனின் மகனே ! என்னுடைய வாரிசை கண்ணியப்படுத்தி விட்டாய்! அல்லாஹ் உனக்கு உலகிலும் மறுமையிலும் கண்ணியத்தை தருவான் என்று கூறினார்கள்,

கஜ்னி முஹம்மதின் மூன்று தேவைகளும் நிறைவேறியது,

சிறந்த தகுதியுடைய மாணவனின் கல்விக்கு உதவுகிறவர்களுக்கு இத்தகைய நற்பேறுகள் கிடைக்கும்.

கல்வியை தற்பெருமைக்காக, மக்களை ஏமாற்றுவதற்காக , சுயநலத்திற்காக கற்க கூடாது.

பெருமானார் எச்சரித்தார்கள்

 عَنْ  كَعْبِ بْنِ مَالِكٍ ، قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " مَنْ طَلَبَ الْعِلْمَ لِيُجَارِيَ بِهِ الْعُلَمَاءَ ، أَوْ يُمَارِيَ بِهِ السُّفَهَاءَ ، أَوْ يَصْرِفَ بِهِ وُجُوهَ النَّاسِ إِلَيْهِ أَدْخَلَهُ اللَّهُ النَّارَ         

கல்வியின் கவனம் உலகியல் இலாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்டிருக்க கூடாது. தனக்கும் சமுதாயத்திற்கு நன்மைகள் செய்ய இக்கல்வி வாய்ப்பளிக்க வேண்டும் என்ற சிந்தனை அடிப்படையானதாக இருக்க வேண்டும்.

கல்வி கற்கும் பருவத்தில் தவறான காரியங்களில் ஈடுபடுவது மறதியை தரும். அது கல்விக்கு அழிவாகும்.

இமாம் ஷாபி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்
எனது ஆசிரியர் வகீஃ இடம் எனக்கு மனன சக்தியின் குறைபாடு பற்றி முறையிட்டேன், அதற்கவர் எனக்கொரு மருந்து சொன்னார். பாவமான காரியங்களை விட்டு விடு!

இமாம் ஷாபியின் பிரபலமாக கவிதை இது


قال الامام الشافعي
شَكَوْتُ إلَى وَكِيعٍ سُوءَ حِفْظِي - فَأرْشَدَنِي إلَى تَرْكِ المعَاصي
وَأخْبَرَنِي بأَنَّ العِلْمَ نُورٌ -ونورُ الله لا يهدى لعاصي

இமாம் ஷாபி இடம்  ஒரு திறமை இருந்தது, ஒரு நூலின் பக்கத்தை ஒரு முறை பார்த்து விட்டார் என்றால் அது அவரது மனதில் பதிந்து விடும். பிறகு அந்த எழுத்தின் மீது கைவைத்து அதை பார்க்காமலே படித்து விடுவார். ஒரு முறை அவர் செல்லும் பாதையில் முன்னே சென்ற் பெண்ணின் பாதம் அவருடைய கண்ணில் பட்டுவிட்டது. அதன்பிறகு அவர் படித்த நூலின் பகுதி அவரது நாபகத்தில் நிற்கவில்லை, அப்போது தான் உஸ்தாது வகீஃ இடம் அவர் முறையிட்டார் என ஒரு தகவல் கூறுகிறது,

கல்லூரிகளும் ஏன் இப்போது பள்ளிக் கூடாங்களுமே நமது பிள்ளைகளுக்கு தீயவற்றை கற்றுத்தருகிற களமாக இருப்பதை மிகுந்த கவலையோடு கண்காணித்து செயல்பட வேண்டிய கடமை மாணவர்களுக்கும் இருக்கிறது, பெற்றோர்களுக்கும் இருக்கிறது,

ஒரு தீய சேர்க்கையின் சிறு ஆரம்பம் பெரிய நஷ்டத்தின் ஆழிய கறையாக அமைந்து விடக் கூடும் என்ற எச்சரிக்கையை மாணவர்கள் உணர வேண்டும், பெற்றோர்கள் உணர்த்த வேண்டும்.

கணக்கிலடங்காத உதாரணங்கள் நம் கண் முன் கிடக்கின்றன. கோவையில் கேரளாவிலிருந்து வந்து ஒரு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த இரு பணக்கார மாணவர்களுடன் ஒரு மாணவி எதார்த்தமாக பழகினாள். கல்லூரிக்கு வெளியே வீடெடுத்து தங்கிய அவர்கள் அப்பெண்ணை ஒரு நாள் தம் வீட்டுக்கு அழைத்துச் சென்று குளிர்பானத்தில் மயக்கம் மருந்தை கலந்து கெடுத்து விட்டனர். துக்கம் தாளாமல் அவள் தற்கொலை செய்து கொண்டாள்.

கூடா நணபர்கள் தம் தோழிக்கே இந்த கதியை ஏற்படுத்தினர் .

நம்முடைய கல்வி - நம்முடைய பிள்ளைகளின் கல்வி  - தீயதாக – பயனற்றதாக ஆகிவிடக்கூடாது என நாம் அனைவரும் தொடர்ந்து பிரார்த்தித்துக் கொண்டிருப்போம் அல்லாஹ் கிருபை செய்வானாக!










1 comment: