வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, August 06, 2015

மது ஒரு கிரிமினல் குற்றம்

இஸ்லாம் இந்த உலகிற்கு செய்த நன்மைகளில் முக்கியமான ஒரு நன்மை மதுவையும். அது சார்ந்த போதை தரும் வஸ்த்துக்கள் அனைத்தையும் அறவே தடை செய்த்தாகும்.

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنصَابُ وَالْأَزْلَامُ رِجْسٌ مِنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ(90) إِنَّمَا يُرِيدُ الشَّيْطَانُ أَنْ يُوقِعَ بَيْنَكُمْ الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ فِي الْخَمْرِ وَالْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَنْ ذِكْرِ اللَّهِ وَعَنْ الصَّلَاةِ فَهَلْ أَنْتُمْ مُنتَهُونَ(91)  المائدة

இந்த வசனத்தில் இணைவைப்பதற்கு நிகராக மது கூறப்பட்டது, சஹாபாக்கள் மதுவை தடை செய்த இந்த வசனத்தை கேட்டு அரண்டு போனார்கள்.

மதுவின்  தடை எத்தகையது என்று அதிர்ச்சிகரமாக பேசிக் கொண்டார்கள், அதிலிருந்து விலகி நின்றார்கள்,

தப்ரானியில் ஒரு செய்தி வருகிறது,

قال ابن عباس : لما حرمت الخمر مشى رجال من أصحاب رسول الله صلى الله عليه وسلم بعضهم إلى بعض، وقالوا: حرمت الخمر، وجعلت عدلاً للشرك: (أي معادلة ومساوية للشرك). رواه الطبراني ورجاله رجال الصحيح

அஹ்மதின் ஒரு அறிவிப்பில் இப்படியும் வருகிறது,

قال رسول الله صلى الله عليه وسلم: "مدمن الخمر إن مات لقي الله كعابد وثن" - أحمد 

رِجْسٌ என்ற வார்த்தையை திருக்குர் ஆன் சிலைகள் பன்றி இறைச்சி ஆகியவற்றின் மீதே பயன்படுத்தியுள்ளது,

மதுப்பழக்கத்திற்கு எதிரான மிக கடுமையான எச்சரிக்கை தொனிக்கிற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டன,

 عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَزْنِي الزَّانِي حِينَ يَزْنِي وَهُوَ مُؤْمِنٌ وَلَا يَشْرَبُ الْخَمْرَ حِينَ يَشْرَبُ وَهُوَ مُؤْمِنٌ وَلَا يَسْرِقُ حِينَ يَسْرِقُ وَهُوَ مُؤْمِنٌ وَلَا يَنْتَهِبُ نُهْبَةً يَرْفَعُ النَّاسُ إِلَيْهِ فِيهَا أَبْصَارَهُمْ حِينَ يَنْتَهِبُهَا وَهُوَ مُؤْمِنٌ- متفق عليه

·        عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْخَمْرِ عَشْرَةً عَاصِرَهَا وَمُعْتَصِرَهَا وَشَارِبَهَا وَحَامِلَهَا وَالْمَحْمُولَةُ إِلَيْهِ وَسَاقِيَهَا وَبَائِعَهَا وَآكِلَ ثَمَنِهَا وَالْمُشْتَرِي لَهَا وَالْمُشْتَرَاةُ لَهُ ترمذي


திராட்சையிலிருந்து திரவ வடிவத்தில் எடுக்கிற படுகிற மதுவை மட்டுமல்ல போதை தருகிற அனைத்தையும் இஸ்லாம் தடை செய்தது,

عن ابن عمر أن النبي صلى الله عليه وسلم قال: "كل مسكر خمر، وكل مسكر حرام " . مسلم


அதுமட்டுமல்ல மது அருந்துவதை ஒரு கிரிமினல் குற்றமாக அறிவித்து அதற்கு கடும் தண்டனையையும் வழங்கியது. 

·        إذا شرب المسلم الخمر فعليه الحد أربعون جلدة، وللإمام أن يبلغ به الثمانين تعزيراً إن رأى انهماك الناس في الشراب.
·         مَنْ شرب الخمر في المرة الأولى جُلد حد الخمر، فإن شرب ثانية جُلد، فإن شرب ثالثة جُلد، فإن شرب رابعة فللإمام حبسه أو قتله تعزيراً؛ صيانة للعباد، وردعاً للفساد.

இந்த தண்டனை முறையை பல ஹதீஸ்களும் அறிவிக்கின்றன,
عَنْ السَّائِبِ بْنِ يَزِيدَ قَالَ كُنَّا نُؤْتَى بِالشَّارِبِ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَإِمْرَةِ أَبِي بَكْرٍ وَصَدْرًا مِنْ خِلَافَةِ عُمَرَ فَنَقُومُ إِلَيْهِ بِأَيْدِينَا وَنِعَالِنَا وَأَرْدِيَتِنَا حَتَّى كَانَ آخِرُ إِمْرَةِ عُمَرَ فَجَلَدَ أَرْبَعِينَ حَتَّى إِذَا عَتَوْا وَفَسَقُوا جَلَدَ ثَمَانِينَ   - البخاري 6281
இவ்வளவு கடுமையாக நடந்து கொள்வதற்கு காரணம். திருக்குர் ஆன் மதுவில் சில நன்மைகள் இருந்தாலும் அதன் தீமை அதிகம் என்று பிரகடணம் படுத்தியது. அந்தி தீமைகளும் மிக கொடூரமானவை, எல்லா தீமைகளையும் வர வழைத்து விடக்கூடியவை என்று பெருமானார் (ஸல்) எச்சரித்தார்கள்.

وقال رسول الله - صلى الله عليه وسلم - : "" الخمر أم الفواحش ، و أكبر الكبائر، من شربها وقع على أمه وخالته وعمته"

மதுவை ஒரு தனிமனிதன் ஒழுக்கக் கேடு என்று மட்டும் பார்க்க கூடாது அது ஒரு சமூக கேடு. கிரிமினல் குற்றமும் ஆகும் என்பது இஸ்லாமின் கருத்து.

பத்ரிகைககளில் வருகிற படுகொலை, கொள்ளை, வழிப்பறிகள், கற்பழிப்புகள் மானபங்கப்படுத்துதல்கள் பற்றிய செய்திகள் ஒவ்வொன்றிலும் மதுக் குடித்து விட்டு என்ற வார்த்தை தவறாமல் இடம் பெறுவதை  காண்லாம்.


புது தில்லியில் இரவு நேரத்தில் பஸ்ஸில் பயணித்த பெண்ணை 5 நண்பர்கள் கொடூரமாக தாக்கி கற்பழித்த நிகழ்வு நாட்டையே உலுக்கியது. பாராளுமன்றத்தை அதிர வைத்த்து. அவர்கள் ஐந்து பேரும் முழு போதையில் இருந்த போதுதான் இந்தக் கொடூர செயலில் ஈடுபட்டார்கள்.

ஒரு பெண் 18 வருடம் கணவனோடி வாழ்ந்த பிறகு பிரிந்து வந்து விட்டார். காரணம் கேட்ட போது கணவன் குடிக்கிறான் என்றாள், இத்தனை நாள் கழித்து ஏன் இந்த முடிவு என்று கேட்டதற்கு அவள் சொன்ன பதில்  பஞ்சாயததாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது, அவளுக்கு ஒரு பெண் 8 வகுப்பு படிக்கிறாள். குடிகாரத் தந்தை தன் மகளை குடிகாரக் கூட்டாளிக்கு 5 ஆயிரம் ரூபாயுக்கு விலை பேசியிருக்கிறான். இதை அந்தக் குடிகார நண்பனே வீட்டுக்கு தெரிவிக்க இனிமேல் இவனுடன் வாழ முடியாது என பிர்ந்து வந்து விட்டேன் என்றால் அந்தப் பெண்மணி.

இது பஞ்சாயத்தார்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்றாலும் உண்மையில் மதுவின் தீமையை உணர்ந்தவர்களுக்கு இது அதிர்ச்சியளிக்காது இதைவிட கொடுமையான தீமைகளையே கூட போதையில் இருப்பவன் செய்யக் கூடும், பெருமானார் (ஸல்) அத்தைத்தான் சுட்டிக் காட்டினார்கள்.

இதன் காரணமாகத்தான் நாகரீகம் சுதந்திரம் என்று என்னதான் உரத்து உலகம் குரல் கொடுத்தாலும் இஸ்லாம் மதுவை ஒரு போதும் அனுமதிக்க வில்லை, இஸ்லாமிய அறிஞர்கள் மிக உறுதியாக இதை எதிர்த்தார்கள் . முஸ்லிம் உம்மத்தும் தன்னை இரும்பு அரணாக தற்காத்துக் கொண்டது.

இந்திய நாட்டில் கூட முஸ்லிம் பகுதிகளில் மதுக்கடைகளுக்கோ குடித்து விட்டு உளறுகிறவர்களுக்கோ சண்டையிடுகிறவர்களுக்கோ இடம் இல்லை. அமெரிக்கா ஐரோப்பா போன்ற நாடுகளிலும் கூட முஸ்லிம்கள் யாருடைய நிர்பந்தமும் இன்றி மது மற்றும் போதைப் பழக்கத்திலிருந்து விலகியே நிற்கிறார்கள். மது அந்த மக்களின் கலாச்சாரத்தில் உணவின் அதிலும் படோபடமான உணவின் ஒரு அங்கமாக இருக்கிற போதிலும் கூட.

நம்முடைய இந்திய நாட்டில் இயற்கையாகவே மதுவிற்கு எதிரான எண்ணம் வலிமையாக இருப்பதால் முஸ்லிம்கள் தங்களை இன்னும் சிறப்பாக தற்காத்து க் கொண்டனர்.

ஆனால் மதுவிலிருந்து வெகு தூரம் விலகி நிற்கிற முஸ்லிம் சமூகத்தில் சகவாச தோசம் காரணமாகவும் எளிதில் கிடைப்பதனாலும் நண்பர்கள் வட்டத்தில் சகஜமான பழக்கமாக மாறிவிட்டதனாலும் வெளிநாட்டுத் தொடர்புகளாலும் மதுப் போதைக்கு ஒரு சிலர் அடிமையாகியிருக்கிற துரதிஷ்டவசமான செய்திகள் கிடைக்கின்றன. நவூது பில்லாஹ் நவூது பில்லாஹ்

அத்தகைய பழக்கத்திற்கு ஆளானோர் நம்மிடையே யாரும்  இருந்தால் அல்லாஹ் அவர்களுக்கு சீர்திருத்ததை தருவானாக! நம்மையும் நமது சந்ததிகளையும் நம்மைச் சார்ந்தவர்களையும் அல்லாஹ் பாதுகாத்தருள்வானாக!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எச்சரிக்கைகள் சிலதை மீண்டும் நாபகப்படுத்து கிறேன்.

·        فعن عبدالله بن عمرو وابن عباس- رضي الله عنهم جميعاً - قالا: قال رسول الله - صلى الله عليه وسلم -: ((من شرب الخمر وسكر لم تقبل له صلاة أربعين صباحاً، وإن مات دخل النار؛ فإن تاب تاب الله عليه، من شرب الخمر وسكر لم تقبل له صلاة أربعين صباحاً، وإن مات دخل النار، فإن تاب تاب الله عليه، من شرب الخمر وسكر لم تقبل له صلاة أربعين صباحاً، وإن مات دخل النار، فإن تاب تاب الله عليه، وإن عاد كان حقاً على الله أن يسقيه من ردغة الخبال يوم القيامة)) قالوا: يا رسول الله وما ردغة الخبال؟ قال: عصارة أهل النار)) سنن ابن ماجه 

·        عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَشْرَبُ نَاسٌ مِنْ أُمَّتِي الْخَمْرَ يُسَمُّونَهَا بِغَيْرِ اسْمِهَا- نسائ

பாதுகாக்கப்பட்ட சமுதாயத்தில் எப்போதாதாவது யாராவது வழி தவறி இந்தப் பழக்கத்திற்கு ஆளாகி விட்டால் அவர்களை கண்டிக்கவும் தண்டிக்கவும் சமுதாயம் தயங்கவில்லை.

வாகண ஓட்டிகளை காவல் துறை ஊதிக்காட்ட கூறுகிறார்கள், இஸ்லாம் பொதுவாகவே மது வாடை வந்தால் தண்டனை கொடுத்தது, ஒரு நபர் வித்தியாசமாக பேசினாலே ஊதிப்பார்க்க உத்தரவிட்டது,

نهيك بن سنان என்பவர் குர் ஆனை முதன் முறையாக பகிரங்கமாக கஃபாவில் ஓதிய அப்துல்லாஹ் பின் மஸ்வூது ரலி அவர்களிடமே நீர் தப்பாக ஓதுகிறீர் என்றார்புகாரியில் ஒரு செய்தி வருகிறது.

عَنْ عَلْقَمَةَ قَالَ كُنَّا بِحِمْصَ فَقَرَأَ ابْنُ مَسْعُودٍ سُورَةَ يُوسُفَ فَقَالَ رَجُلٌ مَا هَكَذَا أُنْزِلَتْ قَالَ قَرَأْتُ عَلَى رَسُولِ اللَّه صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أَحْسَنْتَ وَوَجَدَ مِنْهُ رِيحَ الْخَمْرِ فَقَالَ أَتَجْمَعُ أَنْ تُكَذِّبَ بِكِتَابِ اللَّهِ وَتَشْرَبَ الْخَمْرَ فَضَرَبَهُ الْحَدَّ – البخاري

மாயிஸ் ரலி தனக்கு மரண தண்டனை தறுமாறு பெருமானாரிம் நேரில் வந்து கேட்ட போது அவர் சுய நினைவில் இருக்கிறாரா என்பதை ஊதிக்காட்டுமாறு பெருமானார் கேட்டார்கள்.

عَنْ ابْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَنْكَهَ مَاعِزًا – ابوداوود


மது அருந்துவதை கிரிமினல் குற்றம் என்றும் .
மது வாடை வர சமூகத்தில் நடமாடுகிறவர்களுக்கு தண்டனை கிடைக்கும் என்று அறிவித்தால் மட்டுமே சமூகத்தில் மதுப்ப் பழக்கத்தை கட்டுப்படுத்த முடியும்.

தற்போது தமிழகத்தில் மது விலக்கு விவகாரம் சூடுபிடித்துள்ளது.

காந்திய வாதி சசிபெருமாள் கன்னியாகுமரியில் மது எதிப்புப் போராட்டத்தில் மரணமடைந்தார். அந்த மரணம் தமிழக மக்களை தட்டி எழுப்பியுள்ளது,
அரசியல் கட்சிகள் பொது அமைப்புக்கள் மாணவர்கள் பெண்கள் என பல தரப்பினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இப்போராட்டத்தில் சில இடங்களில் மக்கள் மதுக்கடைகளை அடித்து உடைத்து ஊள்னர், இதில் தவறு ஒன்றும் இல்லை இந்தப் போராட்டம் இன்னும் தீவிர மடைய வேண்டும்.
மது விலக்குப் போராட்டத்தில் ஈடுபடுகிறவர்களிடம் அசிங்கமாக நடந்து கொள்வதும். பலப்பிரயோகம் செய்வதும் காவல் துறையின் இதயம் கல்லாகிப் போய் விட்டதன் அடையாளமாகும்.
சசிபெருமாள் சென்னையில் நடத்திய ஒரு போராட்டைத்தை அருகிலிருந்து கவனித்திருக்கிறேன். அவருக்கு சார்பாக ஒரு சிலர் மிகுந்த அக்கறையோடு பின்னின்றார்கள். பத்ரிகைகளும் ஊடகங்களும் அவரை ஒரளவு தூக்கிப் பிடித்தன.
சசி பெருமாளை தற்போதைய ஆளும் அரசு ஒரு கீழ்த்தரமான பிராணியைப் போலவே நடத்தியது. நியாயமான ஒரு கோரிக்கைக்காக போராடுகிறவனுக்கு ஏகாதிபத்திய ஆங்கில அரசு கொடுத்த மரியாதையில் நூற்றில் ஒரு பங்கை கூட தற்போதைய மாநில அரசு கொடுக்கவில்லைமக்கள் பிரச்சனைகளை ஒரு பொருட்டாகவே  தற்போதைய ஆளும் கட்சியும் அதிலிருக்கிற அமைச்சர்களும் கருதுவதில்லை.
இன்று மதுவிலக்கிற்கு ஆதரவான போராட்டம் பெரிய அளவில் வெடித்திருப்பதற்கான காரணம், தமிழ்ச் சமூகம் மதுவினால் அடைந்திருக்கிற தொல்லைகள் எல்லை மீறீப்போய்விட்டதே காரணமாகும்.
டாஸ்மாக்கில் பலிகிடக்கிற குடும்பத்தலைவர்களால் குடும்பங்கள் நிம்மதியை தொலைத்து விட்டு நிற்கின்றன.
இளம் தலைமுறை போதையில் மிதக்கிறது.
ஆரோக்கியம் குலைந்து மதுவின் வாடை  மூளை முடுக்கெங்கெங்கும் குடலை  பிடுங்கி எடுக்கிறது

பேருந்திலோ பொது இடங்களிலோ நிம்மதியாக பெண்டு பிள்ளைகள் போய்வருகிற நிலமை இல்லை.

மது அருந்துவது தீயவர்களின் பழக்கம் கெட்ட பழக்கம் என்ற நிலை மாறி அது வாழ்க்கையில் ஒரு அங்கம் என்ற கலாச்சார சூழல் ஏற்பட்டு விட்டது.

பள்ளிக்கூட மாணவர்கள் மட்டுமல்ல மாணவிகளும் இந்த கொடூரத்திற்கு ஆட்படுகிறார்கள். கல்லூரி மாணவிகள் ஹாஸ்டல் அறைகளிலும் பொது இடங்களிலும் மது அருந்துகிற புகைப்படங்கள் சமூக வலைத் தளங்களை கலக்கிக் கொண்டிருக்கின்றன.

திருப்பூரில் ஒரு கல்லூரி மாணவி தன்னுடன் படிக்கும் மாற்று மத்த்தை சார்ந்த  வடநாட்டை பூர்வீகமாக கொண்ட மாணவிகள் தங்களது புத்தக் பைகளுடன் ஒயின் எடுத்து வந்து குடிப்பதாகவும் தோழிகளை குடிக்கத் தூண்டுவதாகவும் கூறினார். தமது சகோதர்ர்களே அதை வாங்கிக் கொடுப்பதாக அப்பெண்கள் கூறுவதாகவும் அவர் கூறினார்.

கல்லூரியில் படிக்கும் ஒரு முஸ்லிம் மாணவி  பாடம் நடத்தும் ஆசிரியர் தங்களை கடந்து சென்ற போது வித்தியாசமான வாடை வந்த்ததாகவும் , பக்கத்திலிருந்த மாணவி அது மதுவின் வாடை எனத்தெரிவித்ததாகவும் கூறினார்.

15 ஆண்டுகளுக்கு முன் 30 வயதுக்கு மேறபட்டவர்கள் குடிப்பை பார்க்க
முடிந்த்து இப்போது 13 வயது சிறுவர்கள் குடிக்கிறார்கள்.

3 வயது குழந்தைக்கு குடிக்க கொடுத்து அதை வாட்ஸ் அப்பில் வெளியிட்ட ஒரு கேடு கெட்ட உறவினரை சமீபத்தில் காவல்துறையினர் கைது செய்தனர்.

இப்படி சிறுவர்களிலிருந்து பெரியவர்கள் வரை கல்வியாளர்களிலிருந்து சாமாணியர்கள்  வரை குடிகாரர்களாக மாறிவிட்டனர்.

அதே போல காலை பகல் இரவு என எந்த நேரமும் மதுவில் மயங்கிக் கிடக்கிறது, தமிழ்ச்சமூகம்.

பிளம்பிங்க் வேலைக்கு காலை 9 மணிக்கு வருகிற தொழிலாளி மது வாடையோடு வீட்டிற்குள் நுழைகிறான். பஸ் கண்டக்டர்களும் டிரைவர்களும் கூட மது அருந்த் விட்டு பணிக்குச் செல்வதாக அச்சப்படுத்தும் செய்திகள் கிடைக்கின்றன.

மது விலக்கிற்கு பெயர் பெற்ற தமிழகத்தில் இன்று மதுவிற்கு அரசே ஏஜெண்டாக இருக்கிறது. கடை நடத்துகிறது இப்போது தமிழக காவல் துறை மொத்தமாக மதுக்கடைகளின் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மது விலக்கிற்கு நீண்ட அழுத்தமான வரலாறு உண்டு. சுதந்திரம் பெற்ற இந்தியாவில் மற்ற மாநிலங்கள் தயக்கம் காட்டிய தருணத்தில் துணிந்து மதுவிலக்கை அமுல் படுத்திக் காட்டிய மாநிலம் தமிழகம்.

பிரிட்டிஷார் காலத்தில். மதுவை விற்கவோ, அருந்தவோ எந்தத் தடையும் இருக்கவில்லை.
சுதந்திரப் போராட்ட தியாகிகள் பலருடையவும் குறிப்பாக காந்தியின் மனம் மதுவிலக்கின் மீதே நிலைகொண்டிருந்தது. 1937 ல் நாடு சுதந்திரம் அடைவதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்னாள் ஆங்கில அரசின் கீழ் சமஷ்டி அரசு முறையில் மாநிலங்களிலும் மத்தியிலும் இந்திய மக்களின் பிரதிநிதிகள் ஆட்சி நிர்வாகம் செய்யும் சூழ்நிலை வந்தது. 1937- ல் நடைபெற்ற  தேர்தல் வெற்றிகள் காங்கிரஸ் பெரும்பான்மையாக வெற்றி பெற்றது. .
காங்கிரஸ் ஆளும் அனைத்து மாகாணங்களிலும் மூன்றாண்டுகளில் பூரண மதுவிலக்கைக் கொண்டுவர வேண்டும் என்றது காங்கிரஸ்.
சென்னை, பம்பாய், பிஹார், ஐக்கிய மாகாணம் உள்ளிட்ட அரசுகள் சம்மதித்தன.
களத்தில் முன்னணியில் நின்றது சென்னை.
சென்னை மாகானத்தின் முதலமைச்சராக இருந்த ராஜாஜி.சேலம், சித்தூர், கடப்பா, வட ஆற்காடு ஆகிய நான்கு மாவட்டங்களில் மதுவிலக்கை அமுல்படுத்தினார். 
நாடு சுதந்திரம் பெற்ற பிறகு முதலமைச்சர் ஓமந்தூர் ராமசாமியின் உழைப்பால் 1948-ல் சென்னையில் பூரண மதுவிலக்கு அமலுக்கு வந்தது.
சுமார் கால் நூற்றாண்டு காலத்துக்குத் தமிழகத்தில் மதுவிலக்கு அமலில் இருந்தது.
ஆனால், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் மதுவிலக்கைத் தீவிரமாக அமல்படுத்த முடியாமல்  மாநில அரசுகள் தடுமாறின.
மத்தியில் இருந்த நேருவின் தலைமையிலான காங்கிரஸ் அரசு மதுவிலக்கு விஷயத்தில் மனம் தளரவில்லை.
1964 ஏப்ரலில் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தேக் சந்த் தலைமையில் குழு அறிக்கை தாக்கல் செய்தது.
1970 – ஜனவரி 30 காந்தியின் நூற்றாண்டுக் கொண்டாட்டத்தின்போது நாடு முழுக்க மதுவிலக்கு மதுவிலக்கை அமல்படுத்துவதற்கான பரிந்துரைகளைச் அக்குழு செய்திருந்தது.
ஆனால், அந்த இலக்கைப் பெரும்பாலான மாநில அரசுகள் ஏற்கவில்லை. பெரும்பாலான மாநிலங்கள் வருவாயைத்தான் காரணமாகக் காட்டின.
அந்தச் சமயத்தில், காந்தியின் குஜராத்திலும் தமிழகத்திலும் மதுவிலக்கு அமலில் இருந்தது.
அண்ணாவின் உறுதி
தமிழ்நாட்டில் காங்கிரஸுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அண்ணாவும் மதுவிலக்கில் உறுதிகாட்டினார். ஆனால்,
அவருடைய மறைவுக்குப் பிறகு நிதி நெருக்கடியைக் காரணமாகச் சொல்லி, மதுவிலக்கை ரத்து செய்யத் தீர்மானித்தது கருணாநிதி அரசு.
அவர் அவ்வாறு மதுவிலக்கை ரத்து செய்யப் போகிறார் என்பதை தெரிந்து கொண்ட ராஜாஜி இந்தியாவின் ஜனாதிபதி அந்தஸ்தில் கவர்ணர் ஜென்ரலாக இருந்து ஓய்வு பெற்றவர், தன்னுடைய் புரோட்டக்கால் விதிமுறையை மீறி கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து இந்த பாவத்தை செய்ய வேண்டாம் என்று கெஞ்சினார்.
அப்போது ராஜாஜியுடன், காமராஜர், காயிதே மில்லத் போன்றோரும் சேர்ர்த்து மதுவிலக்கை இரத்து செய்வதை எதிர்த்தனர்.
கொழுந்து விட்டெரியும் நெருப்பு வளையத்துக்குள் கொளுத்தப்படாத கற்பூரமாக தமிழ்நாடு எத்தனை நாளைக்குத்தான் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று தன்னுடைய வழக்கப்படி வார்த்தைகளால் சொக்குப் பொடி போட்டு 30 ஆகஸ்ட் 1971 அன்று மதுவிலக்கை இரத்து செய்தார் கருணாநிதி
அவரால் திறந்து விடப்பட்ட மதுக்கூடத்தின் வாசல்கள் அவராலேயே மூடப்பட்டது
 1973 ஜூலை 30 அன்று கள்ளுக் கடைகளும் 1 செப்டம்பர் 1974 முதல் சாராயக் கடைகளும் மூடப்படும் என்று அறிவித்தார். அதன்படி மதுவிலக்கு கருணாநிதி ஆட்சிக் காலத்திலேயே மீண்டும் அமலுக்கு வந்துவிட்டது.
அது எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்திலும் நீடித்தது. இது பலரும் பேச மறப்பது.
எம்.ஜி.ஆர், 1 மே 1981 அன்று மீண்டும் கள்ளுக் கடைகள், சாராயக் கடைகளைத் திறக்க உத்தரவிட்டார்.
1983 ஜூலையில் டாஸ்மாக் நிறுவனத்தைத் எம்.ஜி.ஆர் தொடங்கினார். மதுவை மொத்தமாக விற்பனை செய்யும் பணிகளை அது செய்தது.
1989-ல் கருணாநிதி, மலிவு விலை மதுவை அறிமுகம் செய்தார். அதற்குப் பெண்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு எழவே, பின்னர் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அதனை ரத்து செய்தார்.
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த போது வருவாயை பெருக்கும் திட்டத்தில் மீண்டும் சாராய விற்பனைக்கு அனுமதி வழங்கினார்.
அன்று தொடங்கி, மதுவிலக்கு கோரிக்கை தொடர்ந்து வருகிறது.
வருவாய் காரணத்தை மறைமுகமா கவும், கள்ளச்சாராயச் சாவுகளை நேரடியாகவும் சொல்லி, மதுவிலக்கு விஷயத்தில் இருபெரும் திராவிடக் கட்சிகளும் ஆதரித்து மதுக்கடைகளை அனுமதித்து வந்தன.
இந்தச் சூழலில் அரசு, 2003 முதல் டாஸ்மாக் வழியாக மதுவை நேரடியாக விற்பனை செய்யத் தொடங்கியது.
இப்போது தமிழகத்தில் 6,690 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இதில், 3,128 ஊரக பகுதிகளிலும், 3,562 நகரப் பகுதிகளிலும் அடங்கும்.

இந்த கடைகள் மூலம் 2003&2004ம் ஆண்டில் ஜெயலலிதா ஆட்சியில் வருவாய் 3639.93 கோடியாக இருந்தது. தற்போது, 2010&2011ல் டாஸ்மாக்வருவாய் 14,965.42 கோடியாக உள்ளது. அசுர வேகத்தில் அரசுவருவாய் உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டுடன்ஒப்பிடும்போது 9.81 சதவீதம் வளர்ச்சி ஆகும். இவ்வாறுஅமைச்சர் நத்தம் விஸ்வநாதன் 2011  செப்டம்பர் மாதம் சட்டசபையில்   கூறினார்.

இப்போது தமிழகத்தில் மது விற்பனை மூலம் அரசுக்கு ஆண்டுக்கு சுமார் 23 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது.

அரசே மதுவை விற்கும் செயலை அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்களிடமிருந்து பலத்த எதிர்ப்புக் கணைகள் வந்தன. அரசின் நேரடி விற்பனை தொடங்கிய பிறகு சமூகத்தில் மது பயண்பாட்டின் அளவு மிகப்பெரிய அளவில் அதிகரித்து தமிழ்ச் சமூகம் தன்னுடைய ஆரோக்கியத்தை பணத்தையும் குடும்ப நலத்தை இழந்து நிற்கிறது.
ஒரு காலத்தில் மதுவிலக்கிற்கு எடுத்துக் காட்டாக இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக இருந்த தமிழகம். தற்போது இந்தியாவில் மது விற்பனையில் தமிழகம் இடத்தில் உள்ளது.

அதுவும் எப்படிப்பட்ட காலத்தில் ? இது வரை மது விலக்க் என்பதை பற்றியே யோசித்தறியாத மாநிலமான கேரள மாநிலத்தில் – இந்தியாவிலேயே அதிக மது விற்பனையாகிற மாநிலத்தில் மது பார்களை தடை செய்தும் இனி வருகிற 10 ஆண்டுகளில் படிப்ப்டியாக பூரண மது விலக்குக் கொள்கை அமுல் படுத்தப்படும் என முதல் உம்மண் சாண்டி வரலாற்றுச் சிறபபு மிக்க ஒரு அறிவிப்பை வெளியிட்டார், அதன் படி 2014 செப்டம்பர் 14 ம் தேதி முதல் அரசின் சார்பில் செயல்பட்ட 418 மது பார்களை மூடும் படி உத்தரவிட்டார், இன்னும் இருக்கிற 312 பார்கள் இந்த நிதியாண்டில் மூடப்படும் என்றும்    உத்தர்விட்டுள்ளார், இந்த உத்தரவினால் கேரளத்திற்கு வருடத்திற்கு 8000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்றாலும் அரசு அதை சமாளித்த்துக் கொள்ளும் என்று உம்மண் சாண்டி அறிவித்துள்ளார். இதன் மூலம் கேரளாவின் வரலாற்றில் தனக்கென ஒரு தனி இடத்தை அவர் தேடிக் கொண்டுள்ளார்.

இது பொதுமக்களை பெருமெடுப்பில் பாதிக்கிற விவகாரமாக  குறிப்பாக இளைய தலைமுறை சீரழிக்கிற அம்சமாக உணரப்பட்டுள்ள சூழலில்  மதுவிலக்கு கோரிக்கை மீண்டும் பேருருவம் கொண்டுள்ளது.
அதன் எதிரொலியாக, ‘‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்துவதற்குத் தீவிர நடவடிக்கை கள் எடுக்கப்படும்’’ என்று அறிவிக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகியிருக்கின்ற தமிழக அரசியல் கட்சிகள்
தமிழகத்தில் முஸ்லிம் கட்சிகளும் பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளும்  மதுவிலக்கைத் தங்கள் பிரதான கோஷமாக வைத் துள்ளன.
தமிழ்க அரசின் சர்வ சக்திமிக்க தலைமையை மெத்த பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
மாண்புமிகு முதல்வர் அவர்களே !
தற்போது தமிழ் நாட்டில் பரவி வருகிற மது விலக்குப் பிரச்சாரம் என்பது யாரோ தூண்டி விட்டு எழுந்தது அல்ல.
உண்மையில்  சுதந்திர இந்தியாவில் தமிழ் நாடில் மதுவினால் ஏற்பட்டுள்ள பாதிப்பை பெரும்பான்மையான ஒவ்வொரு குடும்பமும் உணர்ந்துள்ளதன் விளைவாக தங்களது எதிர்காலத்தை கொஞ்ச நஞ்மாவது பாதுகாத்துக் கொள்ள் வேண்டுமே என்ற பரிதவிப்பால் ஏற்பட்டுள்ள போராட்டமாகும்.
இந்தப் போராட்டத்தில் வருமைக்கோட்டை ஒட்டி வாழ்கிற குடும்பங்களைச் சார்ந்த பெண்கள் தெருவில் இறங்கி காவல் துறையினர் முடியை பிடித்து இழுத்தும் அடங்காமல் போராடி வருகிறார்கள் எனில் அதற்கு காரணம் குடித்து விட்டு வருகிற குடும்ப உறுப்பினர்களால் அவர்கள் அனுதினமும் அனுபவிக்கிற துன்பங்களே காரணமாகும்.
அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் இன்று மது விலக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார்கள், இத்தனைக்கு அவர்கள் மது வில் மயங்கிக் கிடக்கிறார்கள், மது விற்பனையில் முன்னணியில் இருக்கிறார்கள், இருந்தும் மது விற்கு எதிராக பேசுகீறார்கள் எனில் அவர்களது கட்சியைச் சார்ந்தஅல்லது அவர்களது குடும்பத்தைச் சார்ந்த இளைய சமூதாயம் மதுவில்  விழுந்து சீரழிந்து கொண்டிருப்பதை நேரடியாகக் காணபதனாலேயே மதுவிற்கு எதிரான இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
எனவே மாண்புமிகு முதல்வர் அவர்களே! அரசின் வருவாயைக் கணக்கில் கொள்ளாமல் எதிர் கால தமிழ் சமுதாயத்தின் வளமான தலைமுறையை கவனத்தில் கொண்டு மதுவிலக்கிறகு ஆதரவான ஒரு உறுதியான சட்டத்தை கொண்டு வாருங்கள்!
இனிமேல் வருகிற எந்த அரசும் மது விலக்கை இரத்து செய்ய முடியாதபடியான ஒரு சட்டத்தை கொண்டுவாருங்கள்.
மது விலக்கு சாத்தியமா ? என ஒன் இண்டியா இணைய தளம் ஒரு ஆய்வை நடத்தியுள்ளது அந்த ஆய்வில்
மது விலக்கு சாத்தியமில்லை என்று 14.65 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்
ஆனால்  அரசு சட்டம் கொண்டு வந்தால் சாத்தியமே என 32.33 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.

மாநில அரசு மக்களின் வேண்டுகோளாக இதை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதுவரை மதுவில் மயங்கிக் கிடந்த கேரள அரசின் தற்போதைய விழிப்புணர்வை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

வரலாற்றில் இடம் பெற மீண்டும் தமிழகத்தில் பூரண மது விலக்கை அமுல் படுத்த   தமிழக முதலமைச்சர் முயல வேண்டும்

தமிழக அரசு தமிழ்க மக்களின் மனோ உணர்வை புரிந்து கொள்ளாவிட்டால் அடுத்த தேர்தலில் வெற்றி வாய்ப்பை அது கனிசமாக பாதிக்கும் என்பதையாவது உணார வேண்டும்.

தமிழகத்தில் மதுவிற்கு எதிராக போராடி வருகிறவர்களுக்கு இஸ்லாம் அற்புதமான வழிகாட்டுதல்களை சொல்லித் தருகிறது, ‘’
மது வை ஒழிக்க வேண்டும் என்ற தீர்மாணம் டாஸ்மார்க் கடைகளை மூடுவதில் மட்டும் இருக்க கூடாது.
மது ஒரு பாவம். அது ஒரு குற்றம் என்ற சிந்தனையை உளமாற ஏற்க வேண்டும்.
மது அருந்திய நிலையில் பொது இடங்களில் தென்படுவதை தண்டனைக் குரிய குற்றமாக அறிவிக்க வேண்டும்
மாணவர்கள் இளைஞர்கள் பலர் மது விலக்கு கோரி போராடுகிறார்கள், அவர்களது போராட்டம் நியாயமானது, ஏனெனில் இன்றைய கல்லூரி வளாகங்களில் மதுவின் பேயாட்டம் நடந்து கொண்டிருக்கிறது, தங்களை பாதுகாக்கும் ஒரு வழி தேடு அவர்கள் போராடுகிறார்கள்.

அத்தகைய மாணவர்களுக்கும் இஸ்லாம் இந்த ஆலோசனையை சொல்லுகிறது,

மது ஒரு பாவம். அது ஒரு குற்றம் என்ற சிந்தனையை உளமாற ஏற்றுக் கொள்ளுங்கள். அது ஒரு ஜாலி அல்ல, அது எல்லா தீமைகளையும் கொண்டு வரக்கூடிய மூலத் தீ என்பதை உணருங்கள்! பரப்புங்கள்.!

மது விலக்கிற்கு ஆதரவான போராட்டங்களுக்கு முஸ்லிம் சமூகத்தின் ஆதரவு எப்போதும் உண்டு. 

இப்போராட்டக்காரர்கள் மீது வழக்கு பதிவு செய்வதையும் பல்பிரயோகம் செய்வதையும் அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். 

ஆங்கிலேயர் காலத்திலே கூட போராட்டக் காரகள் இப்படி அவமதிக்கப்பட்டதில்லை எனும் அளவு போராட்டக்காரகளை அரசு அவமதிக்க கூடாது என்று கேட்டுக் கொள்கிறோம். 

அல்லாஹ் நமது மண்ணையும் மக்களையும் மதுவின் தீமையிலிருந்து பாதுகாப்பானக! ஆட்சியாளர்களுக்கு நல்ல சிந்தனையை தந்தருள்வானாக!

முஹம்மது ரஸூல் (ஸல்) அவர்களின் பரக்கத்தால் மதுவின் கோரப்பிடியிலிருந்து மீண்டுவிட்ட இந்தப் புனிதச் சமூகத்தில் இத்தீய பழக்கம் பட்டுவிடாமலும் பரவி விடாமலும் கியாமத் நாள் வரை அல்லாஹ் பாதுகாப்பானாக!No comments:

Post a Comment