வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, July 30, 2015

அப்துல் கலாம்! மக்கள் மனதில் வாழும் கலை

وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ فَقَالَ أَنْبِئُونِي بِأَسْمَاءِ هَؤُلَاء إِنْ كُنتُمْ صَادِقِينَ(
டாக்டர் அப்துல் கலாமின் மரணமும், அவரது மறைவுக்கு இந்திய நாடு ஒன்று திரண்டு இறுதி மரியாதை செலுத்திய விதமும் நமது கவனத்திற்குரிய செய்திகளேயாகும்.
டாக்டர் அப்துல் கலாமின் மரணம்  அவரது செல்வாக்கு என் இரண்டு விசயங்களையும் நாம் தனித்தனியாக கவனிக்கிறோம்.
கலாமின் இறுதி நிமிடங்கள் அவரது வாழ்க்கையைப் பற்றிய பெரும் மதிப்பை ஏற்படுத்திவிட்டன்.
நன்றாக கவனித்தால் இந்த உண்மையை உணரலாம்.
திடீர் மரணம் என்பது விரும்பத்தக்கதல்ல
வாழ்க்கையில் இறுதி நிமிடங்கள் தீடீரென ஏற்படக்கூடாது என ஆசைப்பட வேண்டும்.
ஏழுவகை மரணத்திலிருந்து பெருமானார் (ஸல்) பாதுகாப்பு கோரினார்கள்

·        عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِي أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَعَاذَ مِنْ سَبْعِ مَوْتَاتٍ مَوْتِ الْفَجْأَةِ وَمِنْ لَدْغِ الْحَيَّةِ وَمِنْ السَّبُعِ وَمِنْ الْحَرَقِ وَمِنْ الْغَرَقِ وَمِنْ أَنْ يَخِرَّ عَلَى شَيْءٍ أَوْ يَخِرَّ عَلَيْهِ شَيْءٌ وَمِنْ الْقَتْلِ عِنْدَ فِرَارِ الزَّحْفِ  - احمد – 6306
·         திடும் என ஏற்படும் ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்பு பெறவும் பெருமானார் கற்றுக் கொடுத்தார்கள்.

·         حَدَّثَنَا أَبُو مَوْدُودٍ عَمَّنْ سَمِعَ أَبَانَ بْنَ عُثْمَانَ يَقُولُ سَمِعْتُ عُثْمَانَ يَعْنِي ابْنَ عَفَّانَ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ قَالَ بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ ثَلَاثَ مَرَّاتٍ لَمْ تُصِبْهُ فَجْأَةُ بَلَاءٍ حَتَّى يُصْبِحَ وَمَنْ قَالَهَا حِينَ يُصْبِحُ ثَلَاثُ مَرَّاتٍ لَمْ تُصِبْهُ فَجْأَةُ بَلَاءٍ حَتَّى يُمْسِيَ

திடீர் மரணங்களின் போது கலிமாச் சொல்வதற்கான வாய்ப்பு கிடைக்காமல் போவதுடன், செய்து கொண்டிருக்கிற காரியங்களையும் சுற்றத்தாரையும் பரிதவிக்க வைத்துச் செல்கிற சூழ்நிலையும் ஏற்படுகிறது.

அதே நேரம் நற்செயல்கள் செய்து கொண்டிருக்கும் நிலையில் மரணம் சம்பவிக்குமானால் அல்லாஹ்விடம் அந்த அமலே சாட்சியாகிவிடும். வாழ்கைகியின் மதிப்பை அது அதிகரிக்கச் செய்து விடும்.
கேரளா பானக்காட்டை சேர்ந்த அப்துல் காதிர் முஸ்லியார் என்பவரை ஆங்கிலேயர்கள் கைது செய்து தூக்கு தண்டனை வழங்குகிறார்கள். அதற்கு முன்னதாக அவர் தனது மனைவிக்கு ஒரு கடிமதம் எழுத அனுமதிக்கிறார்கள். அந்த கடிதத்தில் நாளை நோன்பு திறக்க நான் அல்லாஹ்விடம் செல்லப்போகிறேன் என்று அவர் எழுதினார். அந்தக் கடிதம் இன்றும் அவருடை வீட்டில் பத்திரமாக இருக்கிறது. தூக்கிலிடப்படுகின்ற அன்று அவர் நோன்பு நோற்றுக் கொண்டார். அத்தோடு தூக்கிலப்படுவதற்கு முன் இரண்டு ரக அத் தொழுது கொள்ள அனுமதி கோரினார். அனுமதி வழங்கப்பட்டது , இரண்டாவது ரக அத் தொழுகையில் இருக்கிற போது அவருடைய உயிர் பிரிந்தது.
கலாம் தீடீர் மரணமடைய வில்லை. தான் பணியாற்ற வேண்டிய காலத்தில் புகழ்மிக்க பணிகளை ஆற்றிவிட்டு, தன்னுடைய ஓய்வுக் காலத்தையும் பயனுள்ளதாக கழித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் எதிர்பாராதவிதமாக இறந்தார்.
இன்னும் நீடூழி அவர் வாழ வேண்டும் என மக்கள் ஆசை கொண்டிருந்த காரணத்தினாலே 84 வயதில் மரணமடைந்த அவரது மரணம் தீடீர் மரணமாக தோன்றுகிறது.  
அந்த மரணம் ஏற்பட்ட விதம் டாக்டர் கலாமின் வாழ்வுக்கு பெரும் புகழைச் சேர்த்து விட்டது.
மேகலாயாவில் எம் நிறுவனத்தில் மாணவர்களுக்கு வாழ்த்தகுந்த பூமி என்ற  தலைப்பில் உரையாற்றத் தொடங்கிய இரண்டாவது நிமிடத்தில் மேடையிலேயே சரிந்து கலாம் இறைவனடி சேர்ந்தார்.
ஒரு மரியாதக்குரிய கல்வி நிறுவனத்தின் மேடையில் ஒரு மரணம், அதுவும் அவர் விரும்பிய மாணவர்களின் முன்னிலையில் அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கிற போதே மரணம் என்பது சாதாரண செய்தியல்ல
கலாம் அவர்களே இப்படி ஒரு மரணத்தை விரும்பி இருக்கக் கூடும்.
சில நபித்தோழர்கள் தங்களது மரணம் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்பினார்களோ அப்படி கிடைத்தது.
பெருமானாருக்கும் பெரும் எதிரியாக இருந்த உத்பா வின் மகன் அபூஹுதைபா ஆரம்ப காலத்திலேயே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். பத்ரு யுத்ததில் பெருமானார் (ஸல்) தம்முடைய சிறிய தந்தை அப்பாஸை களத்தில் யாராவது கண்டால் அவரை கொன்று விட வேண்டாம் என்று சொன்ன போது அதை மறுக்கும் வகையில் அபூஹுதைபா உணர்ச்சி வசப்பட்டு பேசிவிட்டார். இதற்கு பதிலாக ஷஹீதாக வேண்டும் என அவர் விரும்பினார்.
ஒரு யுத்தம் விடாமல் அவர் கலந்து கொண்டார்
அபூஹுதைபா ரலி அவர்கள் தாம் ஷஹீதாக வேண்டும் என்றே ஒவ்வொரு யுத்ததிலும் பங்கேற்றார்கள் என வர்லாறு சொல்கிறது. அவர் அப்படி நினைத்தாதால் அவரால் பாதுகாக்கப்பட்ட அவரது பணியாளர் சாலிம் மவ்லா அபூஹுதைபா ரலி அவர்களும் அவ்வாறே நினைத்தார்கள். இறுதியில் இறுவரும் யமாமா யுத்ததில் ஒருவர் காலில் மற்றவர் முகம் கிடக்க ஷஹீதானார்கள். அபூஹுதைபா சிரித்தப்டி ஷஹீதானார்.
وطلب الرسول صلى الله عليه وسلم من أصحابه ، قبل بدء المعركة ، ألا يقتلوا نفرا من بني هاشم وغيرهم لأنهم خرجوا مكرهين ، وسمى منهم أبا البختري بن هشام – الذي كان ممن سعى لنقض صحيفة المقاطعة ولم يؤذ النبي صلى الله عليه وسلم – والعباس بن عبدالمطلب. وعندما سمع أبو حذيفة ذلك قال : {أنقتل آباءنا وأبناءنا وإخوننا وعشيرتنا ونترك العباس ، والله لئن لقيته لألجمنه – بالسيف} 
·         فكان أبو حذيفة يقول : {ما أنا بآمن من تلك الكلمة التي قلت يومئذ ، ولا أزال منها خائفاً إلا أن تكفرها عني الشهادة} ، فقتل يوم اليمامة شهيداً.
·         وحارب مسيلمة الكذاب في يوم اليمامة  واستشهد فيها
·         وقد كان مُبتسماً أثناء ذلك فلُقِب بـ الشهيد ذو الإبتسامة.

சைபுல்லாஹ் காலித் பின் வலீத் ரஹ் அவர் ஒரு மாபெரும் வீரர், போர்க்களத்தில் மரணமடைய வேண்டும் என்று நினைத்தார். அல்லாஹ்வின் நாட்டம் அவர் ஹிஜ்ரி 21 ல் சிரியாவின் ஹிம்மஸ் நகரில் படுக்கையில் மரணித்தார். அப்போது தனக்கு இப்படி ஒரு மரணம் நேர்வது குறித்து கழிவிறக்கத்தில் பாடிய கவிதை இப்போதும் அவரது நினைவிடத்தில் பெரிய கல்லில் செதுக்கி வைக்கப்பட்டுள்ளது.
ஒரு மனிதனின் இறுதி நிமிடங்கள் அவர் விரும்புகிற வண்ணம் சிறப்பாக அமைகிற போது அவரது வாழ்வு நிறைவடைகிறது.
கலாமுக்கு அப்படி ஒரு வாழ்வு கிடைத்தது.
மதிப்பான மரணம் அது.
அமெரிக்க அதிபர் வந்தால் கூட தன் வீட்டு வாசலில் வரவேற்கிற மரபை கொண்டவர் இந்திய ஜனாதிபதி. அவரும் பிரதமரும் புரோட்டாக்ககோலை உடைத்து கலாமின் உடலைப் பெற தில்லி பாலம் விமான நிலையத்திற்கு நேரில்  வந்தார்கள்..
இப்போதாவது அவரை எங்களால் பார்க்க முடிந்ததே என சில எம்பி க்கள் உருகினர்.
டாகடர் கலாமுக்கு கிடைத்த அஞ்சலிகளின் கனத்தை விட அவரது இறுதி நிமிடம் அமைந்த விதம் டாக்டர் கலாமின் வாழ்க்கையை மேலும் மதிப்பானதாக ஆக்குகிறது.
இன்றைய வாழ்வியல் சூழலில் மரணம் எவ்வளவு திடுமெனவும், எவ்வளவு சாதாரணமாகவும் வந்து விடலாம். அதற்கான வாய்ப்புக்களும் அதை அடையாளப்படுத்தும் மருத்துவ வார்த்தைகளும் பெருகி விட்டன்.
நாம் எச்சரிக்கை அடைய வேண்டும். நமக்கான நேரம், பேசிக் கொண்டிருக்கிற போதோ , சாப்பிட்டுக் கொண்டிருக்கிற போதோ, வேலையில் இருக்கிற  போதோ எப்பபோது வேண்டுமானாலும் வரலம். பேசி முடிக்கட்டும். உண்டு முடியட்டும். வேலை  ஆக்டட்டும் என்று மரணம் காத்துக் கொன்டிருக்காது.
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُلْهِكُمْ أَمْوَالُكُمْ وَلَا أَوْلَادُكُمْ عَنْ ذِكْرِ اللَّهِ وَمَنْ يَفْعَلْ ذَلِكَ فَأُوْلَئِكَ هُمْ الْخَاسِرُونَ(9)وَأَنْفِقُوا مِنْ مَا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمْ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُنْ مِنْ الصَّالِحِينَ(10)وَلَنْ يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا وَاللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ(11
அப்படி மரண நேரம் வரும் போது அது சிறப்பானதா அமைய வேண்டும் என எல்லோரும் ஆசைப்பட வேண்டும்.
ஒரு மனிதனின் தூய எண்ணங்களும் தெளிந்த வாழ்க்கையும் அவரது இறுதி நிமிடங்களை அவர் விரும்பும் வண்ணம் அமைத்துக் கொடுக்கும்.
قال النبي صلي الله عليه و سلم: “تحشرون كما تموتون، و تموتون كما تحيون

நாம் எப்படி வாழ்கிறோமோ அப்படி மரணம் அமையும் இன்ஷா அல்லாஹ்.
நல்ல விதமான மரணம் வேண்டும் என அல்லாஹ்விடம் துஆ செய்வோம்.
நன்மைகளை அதிகரித்துக் கொண்டு நல்ல விதமான வாழ்க்கை முயற்சி செய்வோம்.
அப்துல் கலாமின் செல்வாக்கிற்கான காரணம் என்ன என்பதை நாம் ஆய்ந்தாக வேண்டும்.
உலகளாவிய அளவில் முஸ்லிம்கள் அவமதிக்கப்படுகிற போது கலாம் அனைத்து தரப்பினராலும் மதிக்கப்பட்டார்.
இந்தியா ஒரு இரத்தினத்தை இழந்து விட்டது என பிரதமர் சொன்ன வார்த்தை போலித்தனமானது அல்ல.
இந்தியாவின் பல கோடி மக்களின் சோகமும் கவலையும் நடிப்பு அல்ல.
மேகலாயாவில் அவர் இறந்த செய்தி கேட்டு கூடிய மக்கள் வெளிப்படுத்திய உணர்ச்சிப் பெருக்கு அப்துல் கலாம் அமர் ஹோகயே! என்ற அவர்களின் அழுகை அப்பட்டமான அன்பின் வெளிப்பாடு.
கட்சி, அமைப்பு, இயக்கம் இனம் மதம் எதுவும் சாராது மக்கள் ஒன்று கூடிய ஒரு கூட்டத்தை இராமேஸ்வர்த்தில் நேற்று  பார்த்தைதைப் போல சமீபத்தில் இந்தியா சந்தித்ததில்லை. அதே போல பல தரப்பட்ட சமூகத்தினர் அறிவாளிகளிலிருந்து சாமாண்யன் வரை சங்கமித்த ஒரு நிகழ்வு நேற்றைய நிகழ்வைப் போல சமீபத்தில் எங்கும் நடந்த்ததில்லை.
அப்பட்டமாக இது அப்துல் கலாமின் செல்வாக்கை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
இது எதனால் சாத்தியமாயிற்று.
முதல் காரணம் அப்துல் கலாமின் அறிவுத்தேடலும் கல்வித்தரமும் .
மறுக்க வியலாத உண்மை இது ! இன்றைய முஸ்லிம் சமுதயாம் மறக்க கூடாத உண்மை இது.
அறிவியல் ஆராய்ச்சித் துறைகளில் கலாம் காட்டிய அக்கறையும் ஈடுபாடும் தான் அவரது அபார வளர்ச்சிக்கு மூல காரணமாகும்.
ஒரு ரிமோட் வில்லேஜிலிருந்து ராஷ்டிராபதி பவனுக்கு சென்ற கலாமின் வாழ்க்கைப் பாதையில் 1980 ல் நடைபெற்ற பி எஸ் வி ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட ரோகினி வின்கலமும், 1989 ல் நடைபெற்ற  அக்னி ஏவுகனை வெற்றியும் தான் மிக முக்கியமான திருப்பு முனையாகும்.
அவர் மக்களிடம் அறிமுகமான தருணமும் அது தான். இதை நாம் அழுத்தமாக உணர வேண்டும்
அறிவு எங்கும் எப்போதும் வெல்லும் என்பது தான் இந்த சத்தியமாகும்.
ஆதம் அலை முக்கு அல்லாஹ் அறிவை கொடுத்தே மதிப்பைக் காட்டினான்.
وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ فَقَالَ أَنْبِئُونِي بِأَسْمَاءِ هَؤُلَاء إِنْ كُنتُمْ صَادِقِينَ(31)

இஸ்லாம் உலகை வென்ற காலகட்டத்தில் முஸ்லிம்கள் தான் அறிவுலகில் உயர்ந்திருந்தார்கள்

ஐரோப்பியர்கள் குறிப்பாக பிரிட்டன் உலகின் மீது ஆதிக்கம் செலுத்திய காலத்தில் தொழில் துறையிலும் அறிவியலிலுன் அவர்கள் தான் மேலோங்கியிருந்தார்கள்.

இப்போது அமெரிக்கா உலகின் மீது ஆதிக்கம் செலுத்துகிறது என்றால் அதனிடமிருக்கிற அறிவியல் சாதனைகளேயாகும்.

அப்துல் கலாம் தனது அறிவாற்றலாலேயே தன்னுடைய துறைகளில் உயர்ந்து நின்றார்.

தன்னுடைய பள்ளிப்படிப்பை இராம்நாதபுரத்தில் முடித்தபிறகு, திருச்சிராப்பள்ளியிலுள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில்இயற்பியல் பயின்றார். 1954ஆம் ஆண்டு, இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். ஆனால், இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லை என உணர்ந்த இவர், 1955 ஆம் ஆண்டு தன்னுடைய விண்வெளி பொறியில் படிப்பைசென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.
1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல் கலாம், ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார். பின்னர், ISRO இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார்.
1967 முதல் 83 வரை இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். அதனால் அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார்.
1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது. இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான பத்ம பூஷன்விருது வழங்கி கௌரவித்தது.
1999 ஆம் ஆண்டு பொக்ரான் அணு ஆயுத சோதனையில்முக்கிய பங்காற்றியுள்ளார். இதன் மூலம் இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றினார்  ஏ.பி.ஜே அப்துல் கலாம்,
அவர் படித்தார் பணியாற்றினார் என்பதை விட அவரிடமிருந்த இன்னவேட்டிவ் கண்டுபிடிப்பு ஆர்வம் தான் அவரை தனிச்சிறப்பு வாய்ந்தவராக காட்டியது.
இதை நாம் கவனித்தாக வேண்டும்.
இராக்கெட் தொழில் நுட்பத்திற்காக கனம் குறைந்த ஒரு பெருளை விஞ்ஞானிகள் தயாரித்தனர். அதை இராக்கெட்டுக்காக மட்டுமே மற்றவர்கள் யோசித்த போது போலியோவால் பாதிக்கப்பட்டு கால் செயலிழந்தவர்கள் 4 கிலோ கனமுள்ள செயற்கால்களை அணிந்து சிரமப்படுகிறவர்களுக்கான செயற்கை கால்களை இதன் மூலம் தயாரிக்கலாமே என கலாம் ஆலோசனை கூறினார். 400 கிராம் எடை கொண்ட செயற்கை கால்கள் ஹைதராபாத்தில் உறுவாக்கப்பட்டன.
இதயத்தில் அடைப்பு ஏற்பட்டால் இப்போது இரத்த குழாய்களுக்கு ஒரு ஸ்பிரிங்கை வைத்து குழாயை பெரிதாக்குகிறார்கள். அதை ஸ்டென்ட் என்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான இதய நோயாளிகளுக்கு பயனளிக்கும் இந்த ஸ்டென்ட் விலை அதிகமாக இருந்தது.  1998 இல் கலாம் இதயம் சார்ந்த மருத்துவரான டாக்டர் சோம ராஜுவுடன் சேர்ந்து ஒரு குறைந்த செலவு கரோனரி ஸ்டென்ட் உருவாக்கினார். இந்த ஸ்டென்டுக்கு அவர்களை கெளரவப்படுத்தும் வகையில் "கலாம், ராஜூ ஸ்டென்ட்" என பெயரிடப்பட்டது.
இதே போல கால் மூட்டு அறுவை சிகிட்சையின் போது பயன்படுகிற ஸ்டீல் பிளேட்டுக்களுக்கு மாற்றாக சிரமங்கள் குறைந்த புதிய வகை பிளேட் ஒன்றையும் கலாம் கண்டு பிடித்தார்.
செயற்கை கோள்கள், ஏவுகணைகள் மட்டும் கலாமின் சாதனை அல்ல மனித சமூகம் பயன்பெறும் இந்த அற்புதங்களும் கலாமின் சாதனைகளாகும்.
இதன் காரணமாக
அவருக்கு 30 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் டாக்டர் மதிப்புறு முனைவர் பட்டங்களை வழங்கின
1981 ஆம் ஆண்டில், பத்ம பூஷண் விருதையும், 1990 ஆம் ஆண்டில் பத்ம விபூஷன் விருதையும் இந்திய அரசு வழங்கிக் கௌரவித்தது. அதே போல
இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னாவை விஞ்ஞான வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பம் நவீனமயமாக்கலில் அவரின் மகத்தான மற்றும் மதிப்புமிக்க பங்களிப்புக்காக பெற்றார்.
தொழில் நுட்ப அறிவும், ஆராய்ச்சியும் தான் டாக்டர் கலாம் அவர்களின் மகத்தான் வெற்றிக்கு பின்னணியாக அமைந்த முதல் சக்தி என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இரண்டு நாள்களுக்கு முன் பிரணாய் ராயுடன் இந்தியாவின் இளைய தலைமுறை இளைஞர்களை கலாம் சந்தித்த நிகழ்ச்சியை என் டி டிவி மறு ஒளிபரப்புச் செய்தது.

மதிப்பு மிக்க ஒரு நிகழ்ச்சியாக அது அமைந்தது.

எல்லா கேள்விகளையும் கலாம் தனது அறிவாற்றலால் எதிர் கொண்டார். எல்லோரையும் மாணவர்களாக்குகிற அளவுக்கு அவரிடம் வின்வெளித்துறை பொருளாதாரம் அரசியல் -அறிவுத்துறைகள் பல வற்றின் மேதையாகவே அவர் தெரிந்தார்.

கிடுக்கிப் பிடி போடும் பத்ரிகையாளர்களை கூட அவர் தனது அறிவால் கவர்ந்தார்.
அந்தப் பேட்டியில் இந்தியாவின் அணுகுண்டு சோதனை பற்றி பேச்சு வந்தது. பிரணாய் ராய் “கலாம் அணுகுண்டுக்கு ஆதரவாரனவரா என்று இடையோடு கேட்டார். கலாம் சாதுரியமாக மாணவர்களின் கேள்விக்கு நழுவினார். மீண்டும் மீண்டும் பிரணாய் மடக்கிய போது கலாம் தெளிவா சுருக்கமாக ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னார். சம பலம் இருந்தால் தான் சரியான மதிப்புக் கிடைக்கும்.

அந்தப் பேட்டியில் உலக அமைதிக்கு மூன்று திட்டங்களை கலாம் சொன்னார்.
1.    வாழ்க்கையின் மதிப்புக்களை உணர்ந்த கல்வி
2.    உண்மையான பக்திக்குப் பயன்படும் மதம்
3.   ஏழ்மை ஒழிக்கும் சரியான செயல் திட்டம்

அதே பேட்டியில் இளைஞர்கள் அரசியலுக்கு வருவதை வரவேற்ற கலாம், அரசியல்வாதிகளுக்கு ஒரு முக்கிய அறிவுரை சொன்னார். 
கட்சி அரசியல் 40 சதவீதமும் நாட்டின் முன்னேற்றத்திற்கான அரசியல் 60 சதவீதமும் இருக்க வேண்டும் என்றார்.
அறிவுச் சமூகமும் எவரையும் மடக்குகிற ஊடகத்துறையினரும் மண்டியிடுவது கலாமின் அறிவாற்றலுக்குத் தான் என்பதை அந்தப் கலந்துரையாடல் புரிய வைத்தது.

நமக்கான் முக்கியப் பாடம் இது, அறிவாற்றலிலும் ஆராய்ச்சித்துறைகளிலும் முஸ்லிம் சமூகத்தில் இளைஞர்களும் மாணவர்களும் இவருடைய இந்த முன்னுதாரனத்தை எடுத்துக் கொள்வார்கள் எனில் நிச்சயமக் முஸ்லிம் சமூகம் மறுக்க முடியாத மரியாதையைப் பெறும்.

கலாமின் செல்வாக்கிற்கு மற்றொரு காரணம் அவரது சமூகச் சிந்தனை.
தான் மட்டுமே அறிவாளியாக விஞ்ஞானியாக இருந்து விடுவதை அவர் விரும்பவில்லை. இந்த நாட்டில் இருக்கிற மாணவச் சமுதாயம் ஆராய்ச்சித் திறனோடும் கனவுகளோடும் வளர்ந்தால் தான் இந்தியா வல்லரசாக முடியும் என்பதை அவர் ஊர் ஊராகச் சென்று உரத்துக் கூறினார்.
தங்கள் மீது அக்கறை கொள்வார் யாருமே இல்லை என்று இந்திய மாணவச் சமுதாயம் தடுமாறிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அப்துல் கலாமின் பங்களிப்பு இந்திய இளைஞர்கள் மத்தியில் அவரை நேசத்திற்குரியவராக ஆக்கியது. இந்தியாவின் எந்த மூளையில் கல்வி கற்கிற ஒரு மாணவனும் மாணவியும் கலாம் அவர்களைச் சந்திப்பதை தம்முடைய வாழ் நாள் இலட்சியமாக கருதினார்கள்.
மாணவர்களின் இலட்சியத் கலாம் தேடலாக இருந்தார். 
வரலாற்றில் வாசிக்க மட்டுமே முடிந்த முன்னுதாரணங்கள் மாணவச் சமுதாயம் கலாமிடம் நேரில் கண்டது.

தன்னை ஜனாதிபதி என்று அழைப்பதை விட புரபஸர் என்று அழைப்பதையே விரும்புகிறேன். என்றார். பிரணாய் ராயுடனான கலந்துரையாடலின் போது கூட உங்களை எப்படி அழைக்கட்டும் என்று கேட்கப்பட்ட போது புரபஸர் என்றே என்றே அழைக்குமாறு அவர் கூறினார். அந்த நிகழ்ச்சி முழுக்க அவர் புரபஸர் என்றே அழைக்கப்பட்டார்ல்

இதனால் மற்றவர்களிடமும் அவர் அதிக மரியாதைக்கும் அன்பிற்கும் உரியவரானார்.
அவர் ஜனாதிபதியானதை விட ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளறாக அவர் அறிவுக்கப்பட்ட போது இந்திய மக்கள் ஒன்று திரண்டு வெளிப்படுத்திய மகிழ்ச்சி அலாதியானது. அதிக மரியாதைக்குரியது.  

அதனால் அவரை மக்களின் ஜனாதிபதி என்று இப்போதைய ஜனாதிபதி குறிப்பிட்ட போது அதை இந்தியச் சமூகம் மனதார ஏற்றுக் கொண்டதை நாம் பார்த்தோம்.

இரங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சர் வெங்கைய்யா நாயுடு சமீப காலத்தில் இந்திய மக்களை ஈர்ந்தத தலைவர் இவரைப் போல யாரும் இல்லை என்று சொன்னதையும் நாம் என்னிப்பார்க்கிறோம்.

இத்தனைக்கும் காரணம் டாக்டர் கலாமின் சமூக அக்கறையாகும்

டாகடர் கலாமின் செல்வாக்கிற்கு மூன்றாவது முக்கியக் காரணம் அவரது குண இயல்பாகும்.

கலீபா உமர் ரலியின் குண இயல்புகள் அவரிடம் மகத்தான் தாக்கத்தை செலுத்தியிருந்தன,

திருச்சி பெறியல் கல்லூரியின் பேராசிரியர் நடத்தும் சமூக அறிவியல் வகுப்பில் போதித்த பல செய்திகள் குறிப்பாக கலீபா உமர் ரலி பற்றிய செய்திகளாக் தான் அதிகம் கவரப்பட்டதாக அவர் கூறியிருக்கிறார்.

அவரது எளிமையைப் படிக்கப் படிக்க ஆச்சரியமாக இருக்கிறது.

அக்னிச் சிறகுகள் என்ற தன்னுடைய சுய சரிதையில் அவர் ஒரு செய்தியை குறிப்பிடுகிறார்.
எஸ் எல் வி 3 இராக்கெட் ஏவும் முயற்சி வெற்றியடைந்த பிறகு மும்பையில் உள்ள நேரு விஞ்ஞான் பவனில் ஒரு நிகழ்ச்சிக்கு கலாமை அழைத்திருக்கிறார்கள். அங்கு அவரை தொடர்பு கொண்ட வின்வெளித்திட்ட தலைமை அதிகாரி பேராசிரியர் தவான் நாளை பிரதமர் இந்திராவைச் சந்திக்க வேண்டும் காலையில் தில்லி வருமாறு அழைத்துள்ளார். எனது தில்லி பயனத்திற்கான விமான டிக்கட்டிற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஏற்பாடு செயதார்கள் என்று நன்றியோடு குறிப்பிடுகிற கலாம் அடுத்ததாக் தனக்கு நேர்ந்த சிரமத்தை சொல்கிறார். சாதாரண் உடையும் காலில் செருப்பு மட்டுமே போட்டுக் கொண்டு எப்படி பிரதமரைச் சந்திப்பது என்று யோசித்தேன். பேராசிரியர் தவானிடம் இதைப் பற்றிச் சொன்னேன். அவர் சொன்னார் “ உடை பற்றி கவலைப் படாதீர்கள் வெற்றி என்ற அழகான ஆடை அணிந்திருக்கிறீர்கள்,
ஒரு அறிவியல் சாதனையாளராக பிரதமரைச் சந்திக்கிற அளவில் இருந்த போது கூட அவரது வாழ்க்கை எவ்வளவு சாமாண்யமாக இருந்திருக்கிறது என்பதை இது காட்டுகிறது.

அவரது ஏராளமான குணச்சிறப்புக்களை இப்போது பத்ரிகைகள் பக்கம் பக்கமாக வெளியிட்டு வருகின்றன.

தமிழகத்தில் புகழ் பெற்ற செளபாக்யா வெட் கிரண்டர் கம்பெணியின் நிறுவனர் ஒரு செய்தியை செல்கிறார்.
ஈரோட்டில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற கலாமுக்கு வெட்கிரைண்டர் பரிசாக வழங்கப்பட்டிருக்கிறது. பரிசாக அதை வேண்டாம் என மறுத்த கலாம் , ஒரு வெட் கிரண்டர் தன்க்கு தேவை இருக்கிறது என்று சொல்லி ஆயிரம் ரூபாயுக்கான ஒரு செக்கை கொடுத்து கிரைண்டரை வாங்கிச் சென்றிருக்கிறார். கிரைண்டர் நிறுவனத்தினர் அந்த செக்கை வங்கியில் செலுத்தாமல் ஞாபகச் சின்னமாக அதை வைத்துள்ளனர். சில நாள் கழித்து கலாமிடமிருந்து ஒரு கடிதம் வந்திருக்கிறது. செக்கை வங்கியில் செலுத்தி பணம் பெற்றுக் கொள்ளாவிட்டால் கிரைண்டரை திருப்பி அனுப்ப நேரிடும் என்று அதில் குறிப்ப்பிட்டிருந்தார் கலாம். அந்த செக்கை ஒரு காப்பி எடுத்து பிரேம் செய்து தங்களுடை அலுவலகத்தில் மாட்டி விட்டு வங்கியில் டெபாசிட் செய்து பணம் பெற்றுக் கொண்டார்களாம் செளபாக்கிய வெட்கிரண்டர் நிறுவனத்தினர். அந்த செக் பற்றிய புகைப்படத்துடன் செய்தி வெளியாகி இருக்கிறது,   

கடந்த வருடம் கவிஞர் வைரமுத்துவுக்கு ஒரு பாராடு விழா கோவை கொடீசியாவில் நடந்தது. கலாம் அதில் கலந்து கொண்டார். வைரமுத்து சொல்கிறார்


"சென்ற ஆண்டு என் மணிவிழாவிற்கு வந்து வாழ்த்திய பெருமகனுக்கு ஒரு மாலை அணிவித்தேன். அந்த மாலைகூடத் தனக்குச் சொந்தமாகிவிடக்கூடாது என்று அதை எனக்கே அணிவித்துவிட்ட புனிதர் அவர்."
நம்முடைய முன்னாள் ஜனாதிபதி ஒருவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற போது அவருடை சாமான்களை சொந்த  ஊருக்கு கொண்டு செல்ல ஒரு இரயிலையே விசேசமாக அனுப்பினார்/
டாக்டர் அப்துல் கலாம் ஜனாதிபதி மாளிகையிலிருந்து இரண்டு சூட்கேஸ்களுடன் வெளியேறினார். 

நேற்று ஒரு செய்தியாளர் கலாமுக்கு தில்லியிலோ சென்னயிலோ சொந்த வீடு எதுவும் இல்லை என்றார்.
ஊரை அடித்து தம் உலையில் போட்டுக் கொள்ளும் அரசியல் வாதிகளும் காசுதான் பிரதானம் என்று ஓடுகிற இன்றைய சமூகமும்  இன்று கலாமுக்கு கிடைக்கும் அன்பையும் மரியாதையையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.

நான் என்றுமே தெய்வ நம்பிக்கை கொண்டவன் எனது பணியில் எப்போதுமே இறைவனை ஒரு பங்குதாராக சேர்த்துக் கொண்டிருக்கிறேன். என அக்னிக் சிறகுகளில் அவர் குறிப்பிடுகிறார்.

அக்னிச் சிறகுகள் நூலை வாசித்தால் எத்தகைய சமயநம்பிக்கையுள்ள குடும்பத்தில் அவர் பிறந்து வளர்ந்திருக்கிறார் என்பது, அவரது இறை நம்பிக்கையின் வீரியமும் பல இடத்திலும் அப்பட்டமாக வெளிப்படுவதை அறியலாம்.

டாக்டர் அப்துல் கலாமிடம் நீங்கள் விரும்புகிற் அத்தனை இயல்புகளும் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் இறைவன் விரும்புகிற பல இயல்புகள் நிச்சயமாக அவரிடம் இருந்திருக்கின்றன.

இன்று அவர் மகத்தான மனிதராக கோடிக்கணக்கான மக்களால் பேற்றப்படுவதற்கு அது ஒரு முக்கியக் காரணமாகும்.

مرت جنازة برسول الله صلى الله عليه وسلم فأثني عليها بخير حتى تتابعت الألسن فقال رسول الله صلى الله عليه وسلم وجبت قال ومرت به جنازة فأثني عليها بشر حتى تتابعت الألسن فقال رسول الله صلى الله عليه وسلم وجبت فقال عمر بن الخطاب يا رسول الله قلت في الجنازة الأولى حيث أثني عليها خيرا وجبت وقلت في الثانية كذلك فقال : هذا أثنيتم عليه خيرا فوجبت له الجنة وهذا أثنيتم شرا فوجبت له النار إنكم شهود الله في الأرض مرتين أو ثلاثا . 

 டாகடர் கலாமின் வாழ்க்கை நமக்குத்தருகிற இன்னொரு முக்கியமான செய்திநமது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு வழிகாட்டிய செய்திநாம் பிற மக்கள் மதிக்கும் படியான ஒரு வாழ்க்கை வாழ வேண்டும். அதற்கு ஆசைப்பட வேண்டும்.

இந்த வகையில் கலாம் இந்திய தேசத்தலைவர்களில் தனிச்சிறப்பு வாய்ந்த ஒரு முஸ்லிமாக உயர்ந்து நிற்கிறார்.

அல்லாஹ் அவரது பிழைகளை பெறுத்து உயர்ந்த சுவனத்தை அவருக்கு வழங்குவானாக!  அவரது முன்னுதாரனங்களில் சிறந்தவற்றை பின் பற்றி நடக்க இறைவன் நமக்கு அருட் செய்வானாக!1 comment: