கடந்த
ஜூலை 4 ம் தேதி மதரஸாக்களுக்கான
அங்கீகாரத்தை மறுத்து மஹாராஷ்டிரா மாநில
அரசு உத்தரவிட்டிருக்கிறது.
அரசு அனுமதியை
ரத்து செய்திருப்பது வேதம் மட்டுமே
கற்றுக் கொடுக்கிற மதரஸாக்களுக்குத்தான் என்று அம் மாநில சிறுபான்மை விவகாரத்துறை
அமைச்சர் வினோத் தவுடே கூறுகிறார்.
அது சரியல்ல.
நம்முடைய பள்ளிவாசல்களில்
காலையிலும் மாலையிலும் நடைபெறுகிற குர் ஆன் மதரஸாக்களுக்கு அரசின் ஆதரவு எப்போதும்
இருந்ததில்ல.
ஏராளமான முழு
நேர மதரஸாக்கள் இந்தியாவின் பல மாநிலங்களிலும் நடந்து வந்தன, அங்கு பல திட்டங்களின் அடிப்படையில் மாணவர்களுக்கு
கல்வி போதிக்கப்பட்டு வந்தது. இந்த மதரஸாக்களில் படிக்கும் சுமார்
ஒரு இலட்சம் மாணவர்கள்” பள்ளி
செல்லாக் குழந்தைகளாக” தற்போது
அறிவிக்கப்ப்ட்டிருக்கிறார்கள்.
இதில்
கொடுமை என்னவென்றால் இந்த மதரஸாக்களில் பலவற்றுக்கும்
அரசு தான் சம்பளம் வழங்கி
வந்தது. அது போல் ஆய்வுக்கூடங்கள்
அமைக்கவும் நூலகங்கள் அமைக்கவும் விசேச அனுமதி வழங்கி
வந்தது.
அரசின் இந்த
உத்தரவு மதரஸாவை குறிவைக்கும்
இந்துத்துவாவின் நீண்ட காலத் திட்டத்தின்
ஒரு வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது.
இது முஸ்லிம் சமுதாயத்திற்கு
இடையூறு விளைவிக்கும் அற்பப் புத்தியில் செய்யப்பட்டது
மட்டுமல்ல.. மிகவும் நன்றி கெட்ட செயலுமாகும்.
சுதந்திரம்
பெற்ற இந்தியாவில் கிராமங்களில் புற நகரங்களிலும் பள்ளிக் கூடங்களை உருவாக்குவதில்
பெரும்பாலான எந்த அரசும் அக்கறை செலுத்த வில்லை, குறிப்பாக உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம்,
மஹராஷ்டிரம் போன்ற மாநிலங்களில். கனிசமான இந்தியச் சமூகத்தவர் கல்வி மறுக்கப்பட்ட நிலையிலே
வாழும் நிர்பந்த்ததிற்கு தள்ளப்பட்டனர். அங்கெல்லாம் அடித்தட்டு மக்களுக்கு கல்வி போதிக்கும்
கூடங்களாக மதரஸாக்களே இருந்தன. குர் ஆனிய கல்வி மட்டுமல்லாது உருது மொழி பண்பாடு உள்ளிட்ட
பாடங்கள் போதிக்கப்பட்டன, அதனாலே மதரஸாக்களில் 4 வருடம் ஐந்து வருடம் படித்தால் அதற்கடுத்த
மேல் வகுப்புக்களில் சேர்த்துக் கொள்ளப்படுகிற பழக்கம் இருந்தது. அரசாங்கத்தின் இந்த
சலுகையைத் தான் அரசு இரத்து செய்திருக்கிறது. ஏறி வந்த ஏணியை எட்டி உத்தப்பது போன்ற
செயலாகும்.
அரசு
மதரஸாக்களை புறக்கணித்து உத்தரவிடுகிறதென்றால் அதற்கு ஒரு கெட்ட உள் நோக்கம் இருக்கிறது.
ஆனால்
துரதிஷ்ட வசமாக முஸ்லிம் சமுதாயமே வேதத்தை கற்றுத்தருகிற மதரஸாக்களை இரண்டாம் பட்சமாக்
அல்ல. நான்காம் பட்சமாக கருதும் மன்ப்போக்கு சமூகத்தில் அதிகரித்து வருகிறதே அது மஹாராஷ்டிர
அரசின் அறிவிப்பை விட ஆபத்தானது.
அரசின்
அறிவிப்பினால் மதரஸாக்களை தடுத்து விடலாம் என்று அரசு நினைக்கும் என்றால் அது பகல்
கனவாகவே அமைந்து விடும்.
பள்ளிவாசல்கள்
இருக்கும் வரை மதரஸா இருக்கும். கியாமத் நாள் வரை பள்ளிவாசல்கள் இருக்கும்.
ஆனால்
முஸ்லிம் சமுதாயம் மதரஸாக்களை கவனிக்க தவறும் எனில் அல்லது உரிய முறையில் அக்கறை செலுத்த
மறுக்கும் எனில் தன்னுடையை வெற்றியை அது இழக்கும்.
ஒரு
முஸ்லிம் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தார் என்றாலும் அவருக்கு குர் ஆன் ஓதத்தெரியாது
என்றால் அவர் அரை முஸ்லிம் தான்,
அல்லாஹ்
வழங்கிய மாபெரும் அருட்கொடை குர் ஆன்
عن أبي سعيد الخدري أن رسول الله صلى الله عليه وسلم
قال : ( كتاب الله هو حبل
الله الممدود من السماء إلى الأرض )أخرجه
أحمد
عن جبير بن مطعم عن أبيه رضي الله عنه عن النبي صلى
الله عليه وسلم قال : ( أبشروا ، فإن هذا القرآن طرفه بيد الله ،
وطرفه بأيديكم ، فتمسكوا به ، فإنكم لن تهلكوا ، ولن تضلوا بعده أبدا ).أخرجه ابن حبان في صحيحه والطبراني في الكبير
عن ابن عباس رضي الله عنه : أن رسول الله صلى الله
عليه و سلم خطب الناس في حجة الوداع فقال : (.. يا أيها
الناس إني قد تركت فيكم ما إن اعتصمتم به ، فلن تضلوا أبدا : كتاب الله و سنة نبيه
صلى الله عليه و سلم)أخرجه الحاكم في المستدرك
இத்தகைய மகத்துவம் பெருந்திய வேதத்தோடு ஒரு முஸ்லிமுக்கு தொடர்பில்லை எனில் ?
வேதத்தோடு நம்முடைய முதல் தொடர்பு அதை ஓதுவதாகும். அது நம்முடைய தலையாய முதல்
கடமையாகும்.
إِنَّ الَّذِينَ يَتْلُونَ كِتَابَ
اللَّهِ وَأَقَامُوا الصَّلَاةَ وَأَنفَقُوا مِمَّا رَزَقْنَاهُمْ سِرًّا
وَعَلَانِيَةً يَرْجُونَ تِجَارَةً لَّن تَبُورَ* لِيُوَفِّيَهُمْ أُجُورَهُمْ
وَيَزِيدَهُم مِّن فَضْلِهِ إِنَّهُ غَفُورٌ شَكُورٌ} [فاطر:29-30] .
பெருமானாரின் முதல் பணி குர் ஆனை ஓதிக் கொடுத்ததாகும்.
هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولًا مِنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ
آيَاتِهِ
குர் ஆனை ஓதாமல் அல்லது ஓதப் பழகாமல் தீனின் அங்கமாக இருக்கிறோம் என்று சொல்வது
மிக அபத்தமானதாகும்.
فعن أَبي موسى الأشعري - رضي الله عنه -
، قَالَ : قَالَ رسول الله - صلى الله عليه وسلم - : « مَثَلُ الْمُؤْمِنِ الَّذِي
يَقْرَأُ القُرْآنَ مَثَلُ الأُتْرُجَّةِ : رِيحُهَا طَيِّبٌ وَطَعْمُهَا طَيِّبٌ
، وَمَثَلُ الْمُؤْمِنِ الَّذِي لاَ يَقْرَأُ القُرْآنَ كَمَثَلِ التَّمْرَةِ :
لاَ رِيحَ لَهَا وَطَعْمُهَا حُلْوٌ ، وَمَثلُ المُنَافِقِ الَّذِي يقرأ القرآنَ
كَمَثلِ الرَّيحانَةِ : ريحُهَا طَيِّبٌ وَطَعْمُهَا مُرٌّ ، وَمَثَلُ المُنَافِقِ
الَّذِي لاَ يَقْرَأُ القُرْآنَ كَمَثلِ الحَنْظَلَةِ : لَيْسَ لَهَا رِيحٌ وَطَعْمُهَا
مُرٌّ » متفقٌ عَلَيْهِ
குர் ஆனை ஓதுவது வாழ்க்கைகான ஒளி
فعن أبي ذر رضي الله عنه قال قلت : يا
رسول الله أوصني . قال :«عليك بتقوى الله ؛ فإنه رأس الأمرِ كلِّه» . قلت : يا
رسول الله زدني . قال :«عليك بتلاوة القرآن ؛ فإنه نور لك في الأرض ، وذخر لك في
السماء » رواه ابن حبان.
குடும்பத்தில், வியாபாரத்தில், கல்வியில், தொழிலில் ஒரு வெளிச்சம் வேண்டுமா? கொஞ்சமேனும் குர் ஆனை ஓதி விட்டுச் செல்லுங்கள்
நாளொன்றுக்கு இரண்டு ஆயத்துக்களை ஓதுவது திமிழ் கொழுத்த இரண்டு ஒட்டகைகள் கிடைப்பதை
விடச் சிறந்தது.
. عن عقبة بن عامر رضي الله عنه قال : خرج علينا رسول الله صلى الله عليه
وسلم ونحن في الصفة فقال : «أَيُّكُمْ يُحِبُّ أَنْ يَغْدُوَ كُلَّ يَوْمٍ إِلَى
بُطْحَانَ أَوْ إِلَى الْعَقِيقِ فَيَأْتِيَ مِنْهُ بِنَاقَتَيْنِ كَوْمَاوَيْنِ
فِي غَيْرِ إِثْمٍ وَلَا قَطْعِ رَحِمٍ» ؟ فقلنا : يا رسول الله كلنا نحب ذلك .
قال :«أَفَلَا يَغْدُو أَحَدُكُمْ إِلَى الْمَسْجِدِ فَيَعْلَمُ أَوْ يَقْرَأُ
آيَتَيْنِ مِنْ كِتَابِ اللَّهِ عَزَّ وَجَلَّ خَيْرٌ لَهُ مِنْ نَاقَتَيْنِ ،
وَثَلَاثٌ خَيْرٌ لَهُ مِنْ ثَلَاثٍ ، وَأَرْبَعٌ خَيْرٌ لَهُ مِنْ أَرْبَعٍ
وَمِنْ أَعْدَادِهِنَّ مِنْ الْإِبِلِ» رواه مسلم
والكَوما من الإبل عظيمة السَّنام .
குர் ஆனை ஓதுகிற ஓதப்படிக்கிறவர்களுக்கு கிடைக்கிற நன்மைகள் எத்தனை?
عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله
عليه وسلم قال :«ما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه
فيما بينهم إلا نزلت عليهم السكينة ، وغشيتهم الرحمة ، وحفتهم الملائكة ، وذكرهم
الله فيمن عنده» رواه مسلم
அதிக நன்மைகளை சேர்த்துக் கொடுக்கும் அற்புத வாய்ப்பு
عن ابن مسعودٍ - رضي الله عنه - ، قَالَ
: قَالَ رسولُ اللهِ - صلى الله عليه وسلم - : « مَنْ قَرَأ حَرْفاً مِنْ كِتَابِ
اللهِ فَلَهُ حَسَنَةٌ ، وَالحَسَنَةُ بِعَشْرِ أمْثَالِهَا ، لاَ أقول : {ألم}
حَرفٌ ، وَلكِنْ : ألِفٌ حَرْفٌ ، وَلاَمٌ حَرْفٌ ، وَمِيمٌ حَرْفٌ» رواه الترمذي .
அல்லாஹ்வின் வி ஐ பி ஆகும் வாய்ப்பு
فعن أنس رضي الله عنه قال : قال رسول
الله صلى الله عليه وسلم : «إِنَّ لِلَّهِ أَهْلِينَ مِنْ النَّاسِ» . قَالُوا :
يَا رَسُولَ اللَّهِ مَنْ هُمْ ؟ قَالَ :«هُمْ أَهْلُ الْقُرْآنِ ، أَهْلُ اللَّهِ
وَخَاصَّتُهُ» رواه النسائي وابن ماجه
முதுமையின் தள்ளாமையிலிருந்து தப்பிக்கும் வழி
வயதாகும் போது முதுமையின் தள்ளாமைகள் வந்து சேரும்.
ஒரு மனிதன் தன்னையே அதிகமாக நொந்து கொள்ளும் நேரம் அது, பலம் பெற்றவனாக இருந்த பிறகு
அந்த பலத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழ்ந்து மீண்டும் குழந்தையை போல் தன் தேவையை தானே கவனித்துக்
கொள்ள முடியாதவனாக மனிதன் ஆகிவிடுகிறான். யாசீன் அத்தியாயம் கூறுகிறது,
وَمَنْ نُعَمِّرْهُ نُنَكِّسْهُ فِي الْخَلْقِ أَفَلَا يَعْقِلُونَ(68)
இந்த தள்ளாமையிலிருந்து தப்பிக்கும் வழி
عن ابن عباس رضي الله عنهما قال :
" من قرأ القرآن لم يرد إلى أرذل العمر ؛ وذلك قوله تعالى :«ثم رددناه أسفل
سافلين إلا الذين آمنوا ...} قال : الذين قرؤوا القرآن " رواه الحاكم .
சகராத்தின் வேதனையை குறைக்கும்
வழி
معقل بن يسار: (قال رسول الله صلى الله عليه وسلم اقرؤوها يعني يس
على موتاكم
மறுமையிலும் தப்பிக்கும் வழி
فعن أَبي أُمَامَةَ رضي الله عنه ،
قَالَ : سَمِعْتُ رسولَ اللهِ صلى الله عليه وسلم يقول : «اقْرَؤُوا القُرْآنَ ؛
فَإنَّهُ يَأتِي يَوْمَ القِيَامَةِ شَفِيعاً لأَصْحَابِهِ» رواه مسلم .
சொர்க்கத்தில் தரம் உயர்ந்து கொண்டே
செல்லும்
عن عبد اللهِ بن عمرو بن العاص رضي الله
عنهما ، عن النبيِّ - صلى الله عليه وسلم - ، قَالَ : « يُقَالُ لِصَاحِبِ
الْقُرْآنِ : اقْرَأْ وَارْتَقِ وَرَتِّلْ كَمَا كُنْتَ تُرَتِّلُ في الدُّنْيَا ،
فَإنَّ مَنْزِلَتَكَ عِنْدَ آخِرِ آية تَقْرَؤُهَا » رواه أَبُو داود والترمذي .
மொழி பெயர்ப்பை படிப்பது குர் ஆனை ஓதுவதாகாது.
இத்தகைய பாக்கியங்களை தருகிற திலாவத் எனும் அற்புதமான அமலை நாம்
இழக்கலாமா?
இந்த பாக்கியம் நம்முடைய பிள்ளைச் செல்வங்களுக்கு சரியாக கிடைக்க
வேண்டும் என்று அக்கறை செலுத்த வேண்டியது ஒரு பெற்றோரின் தலையாய கடமையாகும்.
உங்கள் பிள்ளைகளுக்கு உலகத்தையே நீங்கள் சுருட்டி கையில் கொடுத்துவிட்டு குர் ஆனை ஓதக் கற்றுக் கொடுக்க
வில்லை என்றால் அது அத்தனையும் வீணாணதாகவே ஆகிவிடும்.
காரணம் அவர்களின் மறுமைக்கு தேவையானதை நீங்கள் செய்து கொடுக்க வில்லை
என்று அர்த்தமாகிவிடும்.
இன்னொன்று உங்களுக்குச் செய்வதற்காக அந்தப் பிள்ளைகளிடம் தேவையானது
இருக்காது.
அதே நேரம் பிள்ளைகளுக்கு குர் ஆனை கற்றுக் கொடுப்பதில் அக்கறை செலுத்து
வீர்கள் எனில் அது அந்தப் பிள்ளைகளுக்கு உண்மையான சொத்தாகவும் – உங்களுக்கு நன்மை சேர்க்கிற
ஒரு வழியை அவர்களுக்கு கற்றுக் கொடுத்ததாகவு ம் அமைந்துவிடும்.
நமக்காக ஒரு யாசீன் ஓதி துஆச் செய்யாத பிள்ளைகளை எவ்வளவு செல்வத்தோடும்
சுகத்தோடும் விட்டுச் செல்வதால் நமக்கு என்ன பயன் ?
அப்படி பழக்கப்படுத்தாவிட்டால் அதற்காகவும் சேர்த்து நம்மை அந்தப்
பிள்ளைகள் சபிப்பார்கள் அல்லவா ?
நம்முடைய குழந்தைகள் குறைந்தது 10 வயதுக்குள் குர் ஆனை திருத்தமாக
கற்றுக் கொள்ளச் செய்ய வேண்டும் என்பது ஒவ்வொரு பெற்றோரின் இலட்சியமாக இருக்க வேண்டும்.
குழந்தைகள் நன்றாக உச்சரிக்கப்பழகி எழுத்துக்களை அடையாளம் காணும்
பருவத்திலேயே குர் ஆனைப் பழக்கப்படுத்தி விட வேண்டும்
عن عمرو بن شعيب قال: كان الغلام إذا أفصح مِنْ بني عبد المطلب علّمه النَّبيُّ صلى الله عليه وسلم هذه الآية سبعاً: { وَقُلِ الْحَمْدُ لِلَّهِ الَّذِي لَمْ يَتَّخِذْ وَلَدًا وَلَمْ يَكُنْ لَهُ شَرِيكٌ فِي الْمُلْكِ وَلَمْ يَكُنْ لَهُ وَلِيٌّ مِنَ الذُّلِّ وَكَبِّرْهُ تَكْبِيرًا } [ سُورَةُ الإِسْرَاءِ : 111 ]
قال الحسن البصري ـ رحمَه الله ـ: (قدِّموا إلينا أحداثكم, فإنهم أفرغ قلوباً وأحفظ لِمَا سمعوا, فمن أراد الله أن يتمه له أتمه).
இஸ்லாமின் பாரம்பரியம் என்பது சிறு வயதிலேயே குர் ஆனை கற்று விடுவதாகும்.
قال الشافعي : حفظت القرآن وأنا ابن سبع سنين , وحفظت " الموطأ" وأنا ابن عشر
لإمام سفيان بن عُيينة رحمه الله أنه حفظ القرآن وعمره أربع سنوات فقط
قد أورد البخاري في " صحيحه " : باب تعليم الصبيان القرآن ،
وذكر فيه عن ابن عباس رضي الله عنه أنه قال : " توفي رسول الله صلى الله عليه وسلم وأنا ابن عشر سنين وقد قرأت المحكم " ,
، والمراد بالمحكم : السور التي كثرت فصولها وهي من الحجرات إلى آخر القرآن على الصحيح ) .
وصحَّ عن ابن عبـاس رضي الله عنه أنه حفظ القـرآن وهو صغير ؛
عن عمرو بن سلمة رضي الله عنه قال: )لَمَّا كانت وقعة الفتح, بادر كل
قومٍ بإسلامهم, وبادر أبي قومي بإسلامهم, فلَمَّا قدِمَ قال: جئتكم مِنْ عند
النَّبيِّ صلى الله عليه وسلم حقاً. فقال: ( صلُّوا صلاة كذا في حين كذا, وصلاة كذا في حين كذا, فإذا حضرت الصلاة, فليؤذن
أحدكم وليؤمَّكم أكثركم قرآناً ) ، فنظروا فلم يكن أحدٌ أكثر قرآناً مني,
فقدَّموني بين أيديهم, وأنا ابن ستٍّ أو سبعِ سنين...
قال زيد رضي الله عنه : أُتي بي النَّبيَّ صلى الله عليه وسلم مقدمه
المدينة فقالوا: يا رسول الله هذا غلام مِنْ بني النجار, وقد قرأ مما أنزل عليك
سبع عشرةَ سورة. فقرأت على رسول الله صلى الله عليه وسلم فأعجبه ذلك , وقال: )يا
زيد ؛ تعلم لي كتاب يهود فإني والله ما آمنُهم على كتابي(, قال: فتعلمته , فما مضى
لي نصف شهر حتى حذقته , وكنت أكتب
لرسول الله صلى الله عليه وسلم إذا كتب إليهم .
ولَمَّا قدِم وفد ثقيف للمدينة, وأعلنوا إسلامهم, وكتب النَّبيُّ صلى
الله عليه وسلم كتابهم, وأراد أن يُؤمِّر عليهم؛ أشار أبو بكر الصديق رضي الله عنه
بعثمان ابن أبي العاص, وكان أحدثهم سِنَّاً, فقال الصديق: يا رسول الله! إني رأيت
هذا الغلام مِنْ أحرصهم على التفقه في الإسلام وتعلُّم القرآن .
وكان عثمان بن أبي العاص رضي الله عنه كلَّما نام قومه بالهاجرة,
عمد إلى رسول الله صلى الله عليه وسلم فسأله في الدين, واستقرأه القرآن حتى فقه في
الدين وعلم, وكان إذا وجد رسول الله صلى الله عليه وسلم نائماً عمد إلى أبي بكر,
وكان يكتم ذلك عن أصحابه, فأعجب ذلك رسول الله صلى الله عليه وسلم وعجب منه
وأحبَّه .
மார்க்கத்தின்
முன்னோடிகள் பலரும் மார்க்க கல்வி
கற்க விரும்புகிறவரை குர் ஆனை கற்ற
பிறகே அனுமதித்தனர்
فعن الوليد بن مسلم قال: )كنا إذا جالسنا الأوزاعيَّ فرأى فينا
حَدَثاً, قال: ياغلام, قرأت القرآن؟ فإن قال: نعم. قال: اقرأ: { يوصيكم الله في
أولادكم ... } الآية ، وإن قال: لا, قال: اذهب تعلم القرآن قبل أن تطلب العلم ) .
وكان يحيى بن يمان إذا جاءه غلام أمرد استقرأه رأسَ سبعين مِنَ
الأعراف, ورأس سبعين مِنْ يوسف, وأول الحديد؛ فإن قرأها حدَّثه, وإلا لَمْ يحدثه.
وقال الإمام ابن خزيمة محمد بنُ إسحاقَ: ( استأذنتُ أبي في الخروج إلى
قتيبة [لطلب العلم وسماع الحديث] فقال: اقرأ القرآن أولاً حتى آذن لك, قال:
فاستظهرت القرآن, فقال لي: امكث حتى تصَلِّيَ بالختمة , ففعلتُ, فلَمَّا عيَّدنا
أذن لي...).
இன்றைய
காலகட்டத்தில் நம்முடைய பிள்ளைகள் எட்டாவது ஒன்பதாவது வகுப்பில் படிக்கிற போதே நம்முடைய கட்டுப்பாட்டில்
இருந்து விலகி விடுகிறார்கள், அல்லது
அவர்களு படிப்புச் சுமை அவர்களை நம்மை
விட்டு விலக்கி விடுகிறது,
பெண்
குழந்தைகளோ 7 வகுப்பை தாண்டுவதற்குள் பெரிய
மனுஷி ஆகிவிடுகிறார்கள்.
இந்த
சூழ்நிலைகளுக்குப்பிறகு குர் ஆனை கற்றுக்
கொடுப்பது சிரமமாகிவிடுகிறது.
ஆகவே
உங்களது பிள்ளைகளின் சன்மார்க்க வாழ்வில்
உங்களுக்கு அக்கறை இருக்குமானால், உங்களுக்காக துஆ செய்யக் கூடிய பிள்ளைகளாக வரவேண்டும்
என விரும்பினால் பள்ளீவாசல்கள் தோறும் மதரஸாக்கள் ஆரம்பிக்கப்பட இருக்கிற நேரத்தை பயன்படுத்திக்
கொள்ளுங்கள்.
மதரஸாவில் சேர்த்து
விட்டால் மட்டும் போதாது உரிய காலத்திற்குள் சரியாக அவர்கள் குர் ஆனை கற்றுக் கொள்கிறார்களா
என்பதில் அக்கறையும் செலுத்த வேண்டும்.
அதற்கு தேவையான
நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒரு காலம் கடந்த பிறகு அவர்களை ஓத வைப்பது சிரமம்
என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
இன்னொரு முக்கிய
விசய்ம்
சமீபத்தில்
ஒரு நண்பர் மார்க்க சட்டம் கேட்டு வந்தார். உங்களது பிள்ளை எங்கு ஓது கிறான் என்று
கேட்டேன். சுன்னத் ஜமாத்திற்கு மாற்றமான ஒரு அமைப்பின் பெயரைச் சொல்லி அங்கு ஓதுவதாக
சொன்னார். அங்கே ஏன் விட்டீர் என்று கேட்டேன். அங்கு நன்றாக ஓதிக் கொடுக்கிறார்கள்
என்றார்.
இப்படி பலரும்
குர் ஆண் ஓதுவதற்கு தம் பிள்ளைகளை பெருத்தமற்ற இடங்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
இந்த இடத்தில்
ஒரு விசயத்தை அழுத்தமாக நாபகப்படுத்த விரும்புகிறேன்.
குர் ஆன் ஓதக்கற்றுக்
கொள்ளுவதற்கு கெட்டிக் காரர்கள் இடத்தில் அல்ல. நல்லவர்களிடம செல்ல வேண்டும்.
குர் ஆண் ஓதுவது
என்பது அலிப் பே பழகு வது மட்டுமல்ல. அது இதயத்திலிருந்து இதயத்திற்கு இடம் பெயரும்
ஓளியாகும்.
அது உள்ளத்தை
சுத்தப்படுத்தும் வழியாகும்.
அல்லாஹ் பெருமானாரின்
பணீயை பற்றீக் கூறும் போது இப்படிக் கூறுகிறான்.
هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولًا
مِنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ
இதயப்பரிசுத்தம்
என்பது நல்லவர்களிடமிருந்து கிடைப்பதாகும் . குழப்பவாதிகளிடமிருந்து குழப்பம் தான்
கிடைக்கும்.
நிச்சயமாக!
உங்களது பள்ளிவாசலில் ஓதிக்கொடுப்பவர் ஒருவேளை ஹர்பு சுத்தமாக சொல்லிக் கொடுப்பவராக
இல்லை என்றாலும் குழந்தைகளை இதயத்தை கெடுப்பவராக இருக்க மாட்டார்.
இதை நாம் நினைவில
கொள்ள வேண்டும்.
நிறைவாக மீண்டும்
சில செய்திகளை சொல்லி முடிக்கிறேன்.
وقال رسول الله صلى الله عليه وسلم لأبي هريرة : " يا أبا هريرة تعلم القرآن وعلمه الناس ولا تزال كذلك حتى يأتيك الموت
فإنه إن أتاك الموت وأنت كذلك حجت الملائكة إلى قبرك كما تحج المؤمنون إلى بيت
الله الحرام " أخرجه الترمذي والنسائي وابن ماجة
قال خباب رضي الله عنه : (تقرَّبْ إلى الله ما استطعت, فإنك لن تتقرب
إلى الله بشيء أحب إليه مِنْ كلامه).
وقال عثمان بن عفان رضي الله عنه : ( لو طهرت قلوبكم ما شبعت مِنْ
كلام ربكم ).
وقال عبد الله بن مسعود رضي الله عنه : ( مَنْ أحب القرآن فقد أحب
الله, فإنما القرآن كلام الله).
وقال أبو هريرة رضي الله عنه :( إن البيت الذي يُتلى فيه القرآن اتسع
بأهله, وكثر خيره, وحضرته الملائكة, وخرجت منه الشياطين. وإن البيت الذي لا يُتلى
فيه القرآن, ضاق بأهله, وقلَّ خيره, وخرجت منه الملائكة, وحضرته الشياطين ) .
மதரஸாக்கள்
எனும் அற்புதமான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இப்போது
இருக்கிற இந்த வாய்ப்பையும் பறித்து விடுவதற்கு இஸ்லாமின் எதிரிகள் பலத்த திட்டமிட்டுக்
கொண்டிருக்கிறார்கள்! அல்லாஹ் காப்பாற்றுவானாக!
நாமே
அதை கைவிட்டு விடக் கூடாது.
அதை
மதியுங்கள்
அதற்கு
முக்கியத்துவம் தாருங்கள்!
இது
இஸ்லாமின் அடிப்படை இயல்பு,
நாமும்
நமது சந்ததிகளும் முஸ்லிமாக வாழ்வதற்கான தலை வாசல் அது.
No comments:
Post a Comment