வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, September 10, 2015

அலன் ஷனூ கரை ஒதுங்க யார் காரணம்?ظهَرَ الْفَسَادُ فِي الْبَرِّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ أَيْدِي النَّاسِ لِيُذِيقَهُمْ بَعْضَ الَّذِي عَمِلُوا لَعَلَّهُمْ يَرْجِعُونَ

சிரியாவில் என்ன பிரச்சனை?  யார் இந்த அகதிகள்?
சிரியா என்ற வார்த்தையை விட  முஸ்லிம்களுக்கு ஷாம் தேசம் என்ற சொல் அதிகம் பரிச்சயமானது.
முஹம்மது நபி ஸல் அவர்கள் 12 வயதில் ஒரு தடவை தனது பெரிய தந்தை அபூதாலிபுடனும் ,  25 வயதில் கதீஜா (ரலி) அவர்களின் வியாபாரக் குழுவுடனும் ஷாம் தேசத்திற்கு பயணம் சென்றுள்ளார்கள்.
அபூதாலிபுடன் பயணம் செய்த போது சிரியாவின் தெற்குப் பகுதியில் புஷ்ரா நகரில் சந்தித்த பாதிரியார் புஹைரா அபூதாலிபுக்கும் குறைஷிகளுக்கும் பெருமானாரை அடையாளம் கண்டு சொன்னார் என்பது இஸ்லாமிய வரலாற்றின் மிகவும் பிரபலமான செய்தி
துர்மிதியில் இது பற்றி வருகிறது.  (3553)  

عَنْ أَبِي مُوسَى  قَالَ خَرَجَ أَبُو طَالِبٍ إِلَى الشَّامِ وَخَرَجَ مَعَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي أَشْيَاخٍ مِنْ قُرَيْشٍ فَلَمَّا أَشْرَفُوا عَلَى الرَّاهِبِ هَبَطُوا فَحَلُّوا رِحَالَهُمْ فَخَرَجَ إِلَيْهِمْ الرَّاهِبُ وَكَانُوا قَبْلَ ذَلِكَ يَمُرُّونَ بِهِ فَلَا يَخْرُجُ إِلَيْهِمْ وَلَا يَلْتَفِتُ قَالَ فَهُمْ يَحُلُّونَ رِحَالَهُمْ فَجَعَلَ يَتَخَلَّلُهُمْ الرَّاهِبُ حَتَّى جَاءَ فَأَخَذَ بِيَدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ هَذَا سَيِّدُ الْعَالَمِينَ هَذَا رَسُولُ رَبِّ الْعَالَمِينَ يَبْعَثُهُ اللَّهُ رَحْمَةً لِلْعَالَمِينَ فَقَالَ لَهُ أَشْيَاخٌ مِنْ قُرَيْشٍ مَا عِلْمُكَ فَقَالَ إِنَّكُمْ حِينَ أَشْرَفْتُمْ مِنْ الْعَقَبَةِ لَمْ يَبْقَ شَجَرٌ وَلَا حَجَرٌ إِلَّا خَرَّ سَاجِدًا وَلَا يَسْجُدَانِ إِلَّا لِنَبِيٍّ وَإِنِّي أَعْرِفُهُ بِخَاتَمِ النُّبُوَّةِ أَسْفَلَ مِنْ غُضْرُوفِ كَتِفِهِ مِثْلَ التُّفَّاحَةِ ثُمَّ رَجَعَ فَصَنَعَ لَهُمْ طَعَامًا,,,,,,,,,,

·         والحديث حسنه الترمذي وإسناده جيد وقد صححه الحاكم 
·         ورد اسم بحيرى الراهب في رواية ابن اسح
·          
இரண்டாவது தடவையாக நபி (ஸல்) தனது 25 வயதில் கதீஜா அம்மாவின் வியாபாரக் குழுவுடன் ஷாம் தேசம் சென்று திரும்பிய போது தான் பணியாளர் மைஸிரா, பெருமானாரின் இயல்புகளைப் பற்றி கதீஜா அம்மாவிடம் எடுத்துச் சொன்னார். அதுவே பெருமானாரின் முதல் திருமணத்திற்கு காரணமானது.

ஷாமுடன் இதற்கு அடுத்த தொடர்பு ஹிஜ்ரி 6 ம் ஆண்டு ஏற்பட்டது. ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பின் மன்னர்களுக்கு இஸ்லாமிற்கு அழைப்பு விடுத்து நபி (ஸல்) அவர்கள் கடிதம் எழுதினார்கள். 
ரோமச் சக்ரவர்த்தி மன்னர் ஹிர்கலின் சார்பில் புஷ்ராவின் அதிகாரியாக இருந்த ஹாரிஸ் பின் அபீஷம்ருக்கு பெருமானார் (ஸ்ல) அவர்கள் எழுதிய கடிதத்தை ஹாரிஸ் பின் உமைர் கொண்டு சென்றார். அத்தூதரை சரஹ்பீல் என்பவன் கொன்றான்.
இதற்கு பதில் நடவடிக்கையாகத்தான் முஃதா படையை பெருமானார் (ஸல்) அவர்கள் சிரியாவை நோக்கி அனுப்பினார்கள்.
அந்த யுத்தத்தின் தொடர்ச்சியாகத்தான் நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய மரணப்படுக்கையில் உஸாமா ரலி அவர்களின் தலைமையில் ஒரு படையை தயார் செய்தார்கள்.  அபூபக்கர் ரலி அவர்கள் காலத்தில் அந்தப் படை சென்று சிரியாவின் கட்டுப்பாட்டிலிருந்த அந்தப் பகுதியை வெற்றி வாகை சூடியது. பின்னர் இராக் முஸ்லிம்கள் வசமானது.
உமர் ரலி அவர்கள் காலத்தில் ஹிஜ்ரி 14 ம் வருடத்தில் அபூ உபைதா ரலி அவர்களின் தலைமையிலான முஸ்லிம்களின் படை சண்டையின்றி ஷாம் தேசத்தைக் கைப்பற்றியது. அன்றிலிருந்து இன்று வரை ஷாம் முஸ்லிம்களின் வசமே இருக்கிறது.
ஹிஜாஸின் இடது புறத்தில் - வடக்கில் - இருப்பதால் அந்தப் பகுதி ஷிமால் என்று அழைக்கப்பட்டது அதையே அரபியர்கள்  பிறகு ஷாம் என்று அழைத்தனர்  என வரலாற்றுக் குரிப்புக்கள் தெரிவிக்கின்றன, ஹிஜாஸின்  வலது புறத்தில் இருக்கிற காரணத்தால் யமன்,  யமன் என்று அழைக்கப்பட்டது,  
அசூரியா என்ற மன்னர்கள் ஆட்சி செய்த்தால் ஷாம் தேசத்தை  சிரியா என்று அந்தப்பகுதி மக்கள் அழைத்தனர், யஸார் (இடது ) என்பது தான் பின்னர் சிரியா என்றும் மருவியது எனவும் கூறப்படுகிறது,
எனவே ஒரே பகுதி ஷாம் சிரியா என இரு பெயர்களால் பிரபலமடைந்தது. 
முதலாம் உலக யுத்தம் வரை ஷாம் தேசத்தின் ஒரு அங்கமாக பாலஸ்தீனம் இருந்தது.
வரலாற்றில் பல்வேறு உயரங்களைச் சந்தித்த சிரியா கடந்த நூற்றாண்டில் இஸ்ரேலுடன் மோதியதில் கோலன் குன்று பகுதிகளை இஸ்ரேலிடம் பறி கொடுத்தது, பிறகு மேட்ரியட்டில் இஸ்ரேலுடன் உடன்பாடு கொண்டு அதில் சில பகுதிகளை மீட்டுக் கொண்டது.
கடந்த நூற்றாண்டில் ,பனிப்போர் காலத்தில் சிரியா ரஷ்யாவுடன் நெருங்கிய நட்புறவு கொண்டிருந்ததால் தொடர்ந்து அமெரிக்காவின் எதிர்ப்புக்கு ஆளாகிவந்தது. மட்டுமல்ல சிரியாவில் குடியரசு என்று சொல்லப்பட்டாலும் சர்வாதிகார ஆட்சி முறையே  நிலவியது.
சிரியா மக்களில் 74 சதவீதம் பேர் சுனனீ ஹனபீ மத்ஹபைச் சேர்ந்தவர்கள் .
ஷியாக்களும் கிருத்துவர்களும் சிறுபான்மையிராக வாழ்கின்றன,
2000 வது ஆண்டில் தனது தந்தையின் மரணத்திற்குப் பின் பஷர் அல் அஸத் சிரியாவின் அதிபராக பெறுப்பேற்றார். அவர் ஷியா பிரிவைச் சேர்ந்தவராவார். அவருக்கு ரஷ்யா மற்றும் இராணின் பலமான ஆதரவு இருக்கிறது.
பஷர் அல் அஸதின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக சிரியாவில் சன்னி பிரிவு முஸ்லிம்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்த போராட்டத்தை ஒடுக்குவதற்கு அஸதின் அரசு மிக கொடூரமான அடக்குமுறைகளை கையாண்டு வந்தது, இப்போதும் கையாண்டு வருகிறது. தனது சொந்த நாட்டின் மக்கள் மீதே ரசாயன ஆயுதங்களை அஸது பல முறை பயன்படுத்தி யுள்ளார், மக்கள் கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் ஏராளமாக கிடைக்கின்றன. அந்த வீடியோக்களை இளகிய மனமுள்ள எவரும் பார்க்க முடியாது. அவ்வளவு கொடூரமான படுகொலைகள் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன.
பஷர் அல் அஸதின் அரசை எதிர்த்து சன்னி பிரிவு முஸ்லிம்கள் தொடர்ந்து தீவிரமான போராட்டத்தில் இருந்தனர். அமெரிக்கா சவூதி உள்ளிட்ட நாடுகள் அங்கு போராடிய போராட்டக் காரர்களுக்கு தாரளமான் உதவிகளை செய்து வந்தனர்,
அரபு நாடுகளில் வீசிய அரபு வசந்த்த்தின் எழுச்சியில் ஒரு பஷர் அல் அஸத் வீழ்த்தப்பட்டு உலக நீதியின் முன் நிறுத்தப்படுவார். அந்த நேரம் வெகு தொலைவில் இல்லை என்று கருதப்பட்டது.
இந்தச் சூழலில் தான் சிரியாவை மையமாக கொண்டு இஸ்லாமிய அரசு ஒன்றை அமைத்திருப்பதாக ஐ எஸ் ஐ எஸ் என்ற அமைப்பு கூறியது
சிரியாவின் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக இருந்த சவூதியும் அமெரிக்காவும் திடீரென தமது கருத்தையும் போக்கையும் மாற்றிக் கொண்டன. தீவிர வஹாபிஸக் கோட்பாட்டை ஐ எஸ் ஐ எஸ் அமைப்புக் கடைபிடிப்பதாக வருகிற செய்திகள் காரணமாக உலகளாவிய சுன்னீ அமைப்புக்களும் அதற்கு எதிராக அணி திரண்டுள்ளன,
சமீபத்தில் இந்தியாவில் முஸ்லிம் தலைவர்கள் பலர் ஒன்றினைந்து ஐ எஸ் ஐ எஸ் அமைப்புக்கு எதிராக கூட்டுப் பிரகடனம் ஓன்றை வெளியிட்டுள்ளனர்,
ஐ எஸ் ஐ எஸ் என்ற அமைப்பை பற்றி முழு உண்மைகளும் வெளியே தெரியாத சூழலில் இஸ்லாமிய கிலாபத் என்ற வார்த்தையில் கிலி அடைந்த  அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளும் அல்காயிதாவை விட்டு விட்டு ஐ எஸ் ஐ எஸ் அமைப்பை பயங்கரவாத அமைப்பபாக அறிவித்து அதை தற்போதையை தங்களது எதிரியாக அறிவித்துக் கொண்டு செயல்படுகின்றன.
சிரியாவில் அதிபர் பஸர் அல் அஸதின் மக்கள் விரோதத் தாக்குதல்களின் கொடுமை ஒரு புறமும், ஐ எஸ் ஐ எஸ் அமைப்பை அழிக்கப்ப போவதாக சொல்லிக் கொண்டு அமெரிக்க மற்றும் நட்பு நாடுகள் தொடுத்து வருகிற தாக்குதல் மறுபுறமுமாக சிரியா மற்றும் இராக்கின் மக்கள் வாழ்க்கை பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறது.
இதனால் சிரியா மற்றும் இராக் பகுதியிலிருந்து தங்களது உயிரை கையில் பிடித்துக் கொண்டு மக்கள் அகதிகளாக பல நாடுகளுக்கும் வெளியேறிவருகிறார்கள்.
2011  சிரியாவில் நிலைமை மிகவும் கவலைக் கிடமாக மாறத்தொடங்கியது.
2011 மார்ச் 18 ம் தேதி தொடங்கிய உள்நாட்டுக் கலவரத்தில் இதுவரை 210060 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு இலட்சத்து 973 சாதாரண பொதுமக்களும்.  குழந்தைகள் மட்டும் 10664 பேர், 18 வயதுக்குட் மேற்பட்ட பெண்கள் 6783 பேரும் அடங்குவர், பல்லாயிரம் படையினரும் பலியாகியுள்ளனர்,
கடந்த நான்காண்டுகளாக தொடரும் உள்ளாட்டு போர், சுமார் 90 இலட்சம் சிரிய மக்களை இடம் பெயர செய்துள்ளது. இதில் சுமார் 65% மக்கள் சிரியாவிற்குள்ளாகவே பல்வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். 

 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.
இப்படி வெளியேறுகிற அகதிகள் முதலில் நாடிச் செல்வது இஸ்லாமிய நாடுகளைத்தான், அங்கு அவர்களுக்கான ஏற்பாடுகள் சத்தமின்றி செய்யப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து ஐ.நா. சபையின் அகதிகள் மறுவாழ்வுத் துறைத் தலைவர் அண்டோனியா கட்ரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சிரியாவில் உள்நாட்டுப் போர் காரணமாக 2011 முதல் மக்கள் நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர். இதுவரை 30 லட்சம் பேர் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். கடந்த ஓராண்டில் மட்டும் 10 லட்சம் பேர் அகதிகளாகி உள்ளனர்.
லெபனானில் 10,14,000 பேரும் துருக்கியில் 8,15,000 பேரும் ஜோர்டானில் 6,08,000 பேரும் அகதிகள் முகாம்களில் வாழ்கின்றனர். இவர்கள் தவிர ஈராக், எகிப்து உள்ளிட்ட நாடுகளிலும் லட்சக்கணக்கானோர் உள்ளனர்.
சவூதி அரேபியா இதுவரை நேரடியாக அகதிகளை ஏற்றுக் கொள்ள வில்லை என்று சொல்லப்பட்ட போதும் தற்போது அங்கும், ஒரு மில்லியன் சிரியா அகதிகளுக்காக சகல வசதிகலையும் கொண்ட பிரமாண்ட முகாம் சவூதி அரேபியாவில் தயாராகி வருகின்றது
சிரியா அகதிகளில் 1 மில்லியன் மக்களுக்கு சவுதி அரேபியா குடியமர்வதற்கான அனுமதியையும் 1 இலட்ச்சம் மாணவர்களுக்கு சவுதி பல்கலைக்கழங்கள் மற்றும் அரசபாடசாலைகளில் கல்வியை தொடர்வதற்கான அனுமதியையும் வழங்கியுள்ளது. இதே போல எகிப்து துருக்கி உள்ளிட்ட நாடுகளிலும் தான் அகதிகள் அதிகமாக குடியேறியுள்ளனர்,

இந்த இஸ்லாமிய நாடுகளில்  அதிகப்படியான முகாம்கள் அமைக்கப்பட்டு, தன்னார்வலர்கள், குடிமக்களின் உதவியோடு அகதிகளுக்கான அத்தியாவசிய தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன. பல மசூதிகள்/பள்ளிவாசல்கள் இம்மக்களுக்கான வசிப்பிடங்களாக திகழ்கின்றன.  

130 சதுர கிலோ மீட்டர்கள் மட்டுமே அளவுள்ள காஸா, சில ஆயிரம் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளது. 

அல்ஜீரியா, சுமார் 55,000 அகதிகளுக்கு புகலிடம் தந்துள்ளது. "எங்களால் முடிந்ததை நாங்கள் செய்துள்ளோம். உணவு, மருந்து, வாழ்விடம் போன்றவற்றை அமைத்துக் கொடுத்துள்ளோம். எங்களது பள்ளிகளில் சிரிய குழந்தைகள் படிப்பதற்கு அனுமதி அளித்துள்ளோம்" என்று அல்ஜீரிய செஞ்சிலுவை சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 
கத்தார் இதுவரை, சிரிய மக்களுக்கு இரண்டு பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை உதவி புரிந்துள்து.  

இந்தப் பகுதிகளுக்குச் சென்ற அகதிகளைத் தவிர துருக்கியில் இருக்கிற இலட்சக்கணக்கான அகதிகள் வேறு பக்கத்திலிருக்கிற ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றாவது தமது உயிர் வாழும் உரிமையை உறுதிப் படுத்திக் கொள்ள நினைத்தனர் ,

சிரியா மற்றும் ஈராக்கில் இருந்து இந்த ஆண்டும், அடுத்த ஆண்டும் சுமார் எட்டரை லட்சம் அகதிகள் மத்திய தரைக்கடல் வழியாக பயணித்து ஐரோப்பிய நாடுகளுக்கு அடைக்கலம் தேடி வரக்கூடும் என ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டடது.
அவர்களுக்கு தஞ்சம் அளிக்கும் வகையில் அகதிகளுக்கு அடைக்கலம் அளிப்பது தொடர்பான கொள்கைகளை ஐரோப்பிய நாடுகள் சற்று தளர்த்திக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
ஆனால் ஐரோப்பிய நாடுகளில் பலவும் இரும்பு மனத்துடன் நடந்து கொண்டன. அகதிகளை மத அடையாளத்துடன் பார்த்தன,
ஆஸ்திரேலியா அகதிகளை தொடர்ந்து ஏற்றுக் கொன்ட போதும் கூட குழந்தைகள் பெண்கள் சிறுபான்மையினருக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என அப்பட்டமாக அறிவித்தது. சிறுபான்மையினர் என்று சொல்வது சிரியக் கிருத்துவர்களையே ஆகும்.
மாசிடோனியோ, செர்பியா, ஹங்கேரி ஆகிய நாடுகள் அகதிகள் விவகாரத்தில் கடும் கெடுபிடியை கடைப்பிடித்து வருகின்றன. இந்த நாடுகள் தங்கள் எல்லைகளில் அபாயகரமான வேலியை அமைத்து அகதிகளை விரட்டுகின்றன. ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பன் கூறியபோது, முஸ்லிம்களை அனுமதித்தால் ஐரோப்பிய நாடுகளின் கிறிஸ்தவ கலாச்சாரம் அழிந்துவிடும் என்று பகிரங்கமாக வெறுப்புணர்வை கொட்டினார்.
இந்தச் சூழ்நிலை மாறி தான் கடந்த இரண்டு வாரங்களாக உலக அரங்கில் வியத்தகு மாற்றங்கள் ஏற்பட்டன
கொலை கொள்ளை ஆக்ரமிப்பு தீவிர வாத தாக்குதல் பயங்கரவாத திட்டங்கள் போன்ற செய்திகளால் நிரமபி வழிந்த ஊடகங்களில் சென்ற 10 நாட்களாக  ஏதோ வானத்திலிருந்து ஒரு புதிய கதவு திறந்தது போல திடீரென மனிதாபிமானத்தில் தோய்த்தெடுத்த செய்திகள் வந்து குவிந்த வன்னம் இருக்கின்றன.
ஆண்டுக்கு ஐந்து இலட்ச்ம சிரிய அகதிகளை  ஏற்றுக் கொள்ளத் தயார் என ஜெர்மனி அறிவித்திருக்கிறது.
ஜெர்மனிக்கு சுற்றுலா விசா பெருவதே பெரிய விசயம்? தொழில் வாய்ப்புக்கள் பெருவது குதிரைக் கொம்புதான்.
அந்த ஜெர்மனி ஐந்து இலட்சம் அகதிகளை ஏற்பதாக அறிவித்திருக்கிறது.
20 ஆயிரம் பேருக்கு வெனிசுலா அடைக்கலம் அளிக்க தயாராக இருப்பதாக அந்நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மடுரோ அறிவித்துள்ளார்.
இந்த ஆண்டில் மேலும் 12 ஆயிரம் சிரியா அகதிகளுக்கு அடைக்கலம் அளிக்க தயாராக உள்ளதாக ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் இன்று அறிவித்துள்ளார். அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள சுமார் இரண்டரை லட்சம் அகதிகளின் நல்வாழ்வுக்கான நிதியாக 44 லட்சம் ஆஸ்திரேலிய டாலர்களை வழங்குவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
20 ஆயிரம் பேருக்க அடைக்கலம் தயாராக இருப்பதாக பிரிட்டன் அறிவித்திருக்கிறது.
திடீரென மனிதாபிமானத்தை உரத்து பறையறிவிக்கும் இந்த அறிவிப்புகளுக்கு காரணம்?
ஒரு போட்டோ என்று சொன்னால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள.
ஆம் ஒரு போட்டோ தான்.

கடந்த செபடம்பர் 2 ம் தேதி சிரியாவைச் சேர்ந்த அய்லான் என்ற 3 வயது சிறுவனின் உடல் கோஸ் தீவில் கரைஒதுங்கியதை காட்டிய  புகைப்படம் உலகை புரட்டிப் போட்டது.

ஒரு குழந்தை மெத்தையில் படுத்துறங்குவது போல கடற்கரையில் முகம் குப்புறப் படுத்துக்கிற குழந்தையின்  காட்சி ஒரு அமானுஷ்ய அழகியலாக தெரிந்த அடுத்த  நிமிடம் அந்தக் குழந்தை இறந்து கிடக்கிறது என்று செய்தியை வாசித்தவுடன் இதயத்தில் இடியை போல் வேதனையை இறக்கியது,

செப்டம்பர் 2 ம் தேதி இரவு 2 மணியளவில் சிரியாவின் கோபானி நகரைச் சேர்ந்த அப்துல்லாஹ் குர்தீ.  தனது மனைவி 28 வயது ரிஹானா, மற்றும் 3 வயது மகன் அலான் ஷனு , 5 வயது மகன் காலித் மனைவமாகியோருடன் துருக்கியின் போர்டோம் தீவிலிருந்து மத்தியத் தரைக்கடலில் பயணமாகியிருக்கிறார், அகதிகளை கடத்திக் கொண்டு சேர்க்கிற சிரியாவைச் சேர்ந்த 4 பேர் படகை தயார் செய்திருக்கின்றனர், 30 நிமிடத்தில் அவர்கள் கிரீஸுக்கு சொந்தமான கோஸ் தீவில் கரையிறக்கி விடப்படுவார்கள். போர்டோமுக்கும் கோஸ் தீவுக்கும் இடையே 2.5 கடல் மைல்கள் மட்டுமே இடைவெளி. கோஸ்தீவுக்கு சென்று விட்டால் அங்கிருந்து கனடாவுக்கு எப்படியாவது போய்ச் சேர்ந்து விட வேண்டும் என்பது அப்துல்லாஹ்வின் திட்டம். 8 பேரை மட்டுமே ஏற்றிச் செல்கிற படகில் 16 பேர் பயணித்துள்ளனர், புறப்பட்ட ஐந்து நிமிடத்தில் படகு கவிழ்ந்திருக்கிறது, அப்போதுதான் அவர்களுக்குத் தெரிந்தது, அவர்களுக்கு தரப்பட்ட உயிர்காக்கும் உடை (லைப் ஜாக்கெட்) போலியானது, என்பது. கடலின் அலைகளுக்கு நடுவே தனி ஒருவராக போராட முடியாத நிலையில் அப்துல்லாஹ் இரண்டு குழந்தைகளை கைகளில் முடிந்த வரை ஏந்தியிருக்கிறார். 3 வயது மகண் அலான் கையிலிருந்து பிரிந்து தன் கண் முன்னாலேயே மரணமடைவதை பார்க்கிறார், இன்னொரு மகண் காலித்தை முடிந்தவரை நீரூக்கு மேல அடிக்கடி கொண்டு வந்து மூச்சு விட வைக்கிறார், ஒரு கட்டத்தில் அது வும் சாத்தியப்படாமல் அவரது கையிலேயே அந்த மகன் இறந்து போகிறான், மனைவியும் இறந்து போனார்,

படகு கவிழ்ந்து இறந்த உடல்கள் கரை ஒதுங்குவதாக செய்தி காலை 5 மணிக்கு செய்தி பரவுவுகிறது, அலான் ஷானுவின் உடல் காலை .630  மணியளவில் கரை ஒதுங்குகிறது.  துருக்கி செய்தி நிறுவனமான டி எச் ஏ வில் வேலை பார்க்கிற நிலோபர் தஃமீர் என்ற பெண்மணி செய்தி சேகரிப்பதற்காக கடற்கரைக்கு வருகிறார், தூரத்தில் கடலோரத்தில் ஒரு குழந்தை முகம் குப்புறப் படுத்துக் கிடக்கிற காட்சி தெரிகிறது. அதை அவர் அப்படியே புகைப்படம் எடுத்தார்,

அந்த புகைப்படம் பார்க்கிற அத்தனை இதயங்களையும் உலுக்குப் போட்டது, ஐரோப்பா கண்டு கொள்ளாமல் கடவடைத்து வைத்திருந்த அகதிகளின் துயரத்தை ஒற்றைப் பார்வையில் உலகிற்கு உணர்த்தி விட்டது,

அடுத்த நாள் அலான் ஷானு அவரது சகோதரர் காலித் தாய் ரஹானா ஆகியோரது உடல்கள் சிரியாவின் கொபான்யில் அடக்கம் செய்யப்பட்டனர்.

ஆனால் இதுவரை அடக்கி ஒடுக்கப்பட்டு வந்த அகதிகளின் துயரம் மேலெலும்பி கவனித்தாக வேண்டிய பிரச்சனையாகிவிட்டது, சமூக ஆர்வலர்கள் கொந்தளித்தார்ர்கள்.

அதே நாள் செப்டம்பர் 3 தேதி இன்டிபெண்டன்ஸ் டுடே பத்ரிகையயின் முதல் பக்கத்திலும் கார்டியன் பத்ரிகையின் உள்ளேயும் அந்தப் புகைப்படங்கள் பிரசுரமாயின. ஆயிரமாயிரம் டிவிட்டர்கள், பேஸ்புக பதிவுகள் மூலம் உலகம் முழுவதையும் அந்தப் படம் உலுக்கி எடுத்தது.

உலகத் தலைவர்கள் அத்தனை பேரும் குறிப்பாக அகதிகளுக்கு வாழ்வளிக்க மறுத்த அல்லது தயங்கிய நாடுகளின் தலைவர்கள் அத்தனை பேரும் கருத்துச் சொல்லவும் கருணை காட்டவும் வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது,

அரசுகள் அசைந்து கொடுத்தன, வரிசையாக நாங்கள் அகதிகளை ஏற்கிறோம் ஏற்கிறோம் என்று அறிக்கை வெளியிட்டு வருகிறார்கள்.

இந்தக் கட்டத்தில் ஐரோப்பிய நாடுகளின் அந்த உதவிக்கு மனிதர்களாக நாம் நன்றி செலுத்துகிறோம்.

அதே நேரத்தில் ஐரோப்பாவிற்கு நாம் நாபகப்படுத்துகிறோம். 

ஒரு நேரத்தில் ஐரோப்பியர்கள் அகதிகளாக இருந்தார்கள், பிரிட்டிஷ் காரர்கள் பிரஞ்சுக்காரர்கள் ஜெர்மனியர்கள் ஹங்கேரியர்கள் .ஐரோப்பாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்து சிலுவை யுத்தத்திற்காக பாலஸ்தீனுக்குள் நுழைந்து முஸ்லிம்களின் இரத்தை ஆற்றை ஓட்டியவர்கள்,  பைத்துல் முகத்தஸில் இருக்கிற உமர் பள்ளியின் முற்றத்தை முஸ்லிம்களின் இரத்ததால் நிறைத்தவர்கள், முழங்கால் அளவு மனித இரத்ததை தேக்கிவைத்தவர்கள்,

அவர்களை முஸ்லிம்களின் விடி வெள்ளி எகிப்தைச் சேர்ந்த சலாஹுத்தீன் அய்யூபி வெற்றி கொண்டார்.

வரலாறு இதே போன்ற தொரு காட்சியை அல்ல. இதை விடக் கொடுமையான ஒரு காட்சியை காட்டுகிறது.

ஒரு ஐரோப்பியக் கிருத்துவ பெண்மணி அகதியாக வந்த நேரத்தில் ஐரோப்பிய மன்னர்களின் கதவுகள் திறக்காத போது தனது குழந்தைகு பாலூட்டி வளர்க்க முடியாத பெண்மணி கடலில் வீசீனாள். அவள் திரும்பி வந்த போது முஸ்லிம்கள் ஆதரித்தார்கள்.  


·        لقد ضرب صلاح الدين مثلا عظيما في سماحة الإسلام وقوته وعزته ، فحين تَسَلَّم المسلمون بيت المقدس في يوم الجمعة السابع والعشرين من رجب ، استقر رأي صلاح الدين في مجلس الشورى الذي عقده أن يُؤخذ من الرجل عشرة دنانير يستوى فيه الغني والفقير والطفل من الذكور والبنات دينارين ، والمرأة خمسة دنانير فمن أدى ذلك إلى أربعين يوماً فقد نجا ، ومن انقضّت الأربعون يوماً عنه ولم يؤد ما عليه فقد صار مملوكاً

¨  பாதிரியார்களிடமும் கருணை காட்டினார். 10 தீனார் பெற்றுக் கொண்டு வெளியேற அனுமதியளித்தார்.  
¨  கோட்டைக்குள் இருந்த அறுபதாயிரம் சிலுவைப்போர் வீரர்களுள் பத்தாயிரம் பேருக்கான பிணையத் தொகையைத் தானே தன் சொந்தப் பணத்திலிருந்து கட்டிவிடுவதாக சலாஹுத்தீன் அறிவித்தார்! அத்துடன் இன்னும் ஏழாயிரம் வீரர்களுக்கான தொகையைத் தன் சகோதரர் சைபுத்தீன் என்பவர் அளிப்பார் என்றும் சொல்லிவிட்டார்.

¨  அப்படி வெளியேறுகிறவர்களில் வாகன வசதி இல்லாதவர்களுக்கும் அரசாங்கச்  செலவில் கழுதைகள் வாங்கிக்கொடுக்கவும் உத்தரவிட்டார்!

ஆங்கில வரலாற்றுப் பேராசான் ஸ்டான்லீ லேன் பூல் சொல்கிறார்.
ஒரு நாள் காலை சூரியன் உதித்தலிருந்த் மறையும் வரை சலாஹுத்தான் கோட்டைக் கதவின் வாசலில் நின்று கொண்டு எழைகளையும் இயலாதோரையும் கட்டணமின்றி வெளியேற அனுமதித்தார்,

¨    ويروي (استانلي لين بول ): " إن السلطان قد قضى يوماً من أول بزوغ الشمس إلى غروبها وهو فاتح الباب للعجزة والفقراء تخرج من غير أن تدفع الجزية " .

வரலாற்றாசிரியர் முல் எழுதுகிறார்.

¨      ويقول المؤرخ الإنجليزي (مل): " ذهب عدد من المسيحين الذين غادروا القدس إلى أنطاكية المسيحية فلم يكن نصيبهم من أميرها إلا أن أبى عليهم أن يضيفهم ، فطردهم فساروا على وجوههم في بلاد المسلمين ، فقوبلوا بكل ترحاب " .
¨       
¨  ஜெரூசலத்திலிருந்து வெளியேறிய அகதிகள் அன்தாக்கியாவிற்கு சென்றனர். அது அப்போது கிருத்துவ மன்னர் வசம் இருந்தது, அவர் அந்த அகதிகளை ஆதரிக்கவோ உணவளிக்கவோ மறுத்து விட்டார்.

¨  அப்போது ஒரு தாய அழுகிற தன் குழந்தைக்கு உணவு கொடுக்க முடியாத பரிதபத்தில் வேறு வழியே இல்லாமல் கதறியபடி அக்குழந்தையைக் கடலில் வீசிக் கொன்றாள். பிறகு திரிபோலி நகரின் கோட்டையை நோக்கித் திரும்பி நின்று அந்தத் தாய் சபித்ததை சிலிர்ப்புடன் அத்தனை சரித்திர ஆசிரியர்களும் பதிவு செய்திருக்கிறார்கள்.

¨  கிருத்துவ மன்னரின் திரிபோலியை நோக்கி அகதிகளாக சென்றவர்கள் முஸ்லிம்களிடமே திரும்பி வந்தார்கள். அவர்களை சலாஹுத்தீன் அய்யூபியின் வீரர்கள் வரவேற்று உபசரித்தார்கள். அவர்கள் அத்தனை பேரும் தமது ஆளுகைக்கு உட்பட்ட டைர் (Tyre) நகரில் குடியேறி வசிக்கலாம்  என்று சலாஹுத்தீன் அனுமதியளித்தார்

இந்த வரலாற்றை நாபகப்படுத்துகிற அதே நேரத்தில் இன்னும் சில செய்திகளை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

ஐரோப்பிய நாடுகளின் ஆதரவும் அனுசரிப்பும் மிகவும் பாராட்டப்படுகிற இந்த சந்தர்ப்பத்தில்

அண்டையிலிருக்கிற முஸ்லி நாடுகள் எதுவும் செய்ய வில்லை என்பதைப் போல ஒரு தோற்றத்தை மீடியாக்கள் ஏற்படுத்துகின்றன. அது தவறு.
சுமார் 30 இலட்சம்ம் அகதிகளில் 25 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் அருகிலிருக்கிற முஸ்லிம் நாடுகளில் தான் அரவணைக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஐரோப்பாவிற்கு குடிபெயர விரும்புகிற சுமார் 8 இலட்சம் அகதிகளின் பிரச்சனைதான் இப்போதைக்கு பெரிதாக வெடித்திருக்கிறது.

இந்த அகதிகளை ஆதரிக்க வேண்டிய கடமையும் பெறுப்பும் ஐரோப்பிய நாடுகளுக்கு இருக்கிறது.

காரணம் இந்த நாடுகள் தமது ஆதிக்க எண்ணத்தினாலும் அதிகார பலத்தினாலும்  தான் இவர்களை அகதிகளாக ஆக்கினர்,

சதாம் ஹுசைன் இராக்கியர்களை அகதிகளாக்க வில்லை. சதாம் ஹுசைன் ஐ எஸ் ஐ எஸை உருவாக்க வில்லை, அமெரிக்காவும் அதனடன் கைகோர்த்த நாடுகளும் தான் இராக்கில் அமைதி நிலை நாட்டும் திறனற்றுப் போனதனால் தான் இப்போது அங்கு பதற்றம் பெருகி அகதிகள் உருவாகி வருகின்றனர்,

அதே போல சிரியாவில் தற்போது ஆட்சியிலிருக்கிற பஸர் அல் அஸதை நீக்கி விட்டு வாக்கெடுப்பு நடத்தி புதிய அரசை அமைக்கும் திரணற்ற ஆதிக்க சக்தியான அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் ஐ எஸ் ஐ எசை அழிகக குண்டுபோடுகிறார்கள், மக்கள் தமது வாழ்விடங்களை விட்டு வெளியேற்றிய குற்றம் அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கே உரியது,

ஆஸ்திரேலிய பிரதமரின் அறிக்கை இதை தெளிவாக உணர்த்து கிறது, நாங்கள் இன்னும் 13 ஆயிரம் அகதிகளை ஏற்றுக் கொள்கிறோம். அதே போல சிரியாவில் ஐ எஸ் ஐ எஸுக்கு எதிராக தீவிரவாக போரைத் தொடருவோம் என்கிறார்.

இந்த சமயத்தில் நாம் புரிந்து கொள்வதோடு சர்வதேச சமுதாயத்திற்கு புரிய வைக்க வேண்டிய முக்கியமான சில செய்திகள் ஒருக்கின்றன.

திருக்குர்ஆன் கூறுகிறது.

ظَهَرَ الْفَسَادُ فِي الْبَرِّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ أَيْدِي النَّاسِ لِيُذِيقَهُمْ بَعْضَ الَّذِي عَمِلُوا لَعَلَّهُمْ يَرْجِعُونَ

மனிதர்களின் பாவங்கள் காரண்மாக பூமியில் குழப்பங்கள் தோன்றுகின்றன என இந்த வசனம் சொல்லுகிறது,
அதே நேரத்தில் இந்த வசனத்தின் வாசக அமைப்பு இன்னொரு கருத்தை யும் தருகிறது

மனிதர்களது செயல்கள் காரணமாகவே  பூமியில் குழப்பம் ஏற்படுகிறது.

அகதிகளால் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு காரணம் இந்தச் சூழ்நிலையை உருவாக்கிய அமெரிக்காவையும் அதற்கு சார்பாக இருப்பவர்களையுமே சாரும்.

தங்களது விமானங்களையும் வீரர்களையும்  குண்டு போடுவதற்கு அனுப்புகிறவர்கள் அதற்குரிய விளைவுகளுக்கு பொறுப்பேற்ற தீர வேண்டும்.

எனவே அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் சதாம் ஹுசைன் காலத்தில் இராக் இருந்த நிலைக்கு அந்த நாட்டை கொண்டு வர வேண்டிய பொறுப்பு இருக்கிறது,

ஐ எஸ் ஐ எசை அழிக்க திட்ட மிடுகிறவர்கள் அகதிகளுக்கான மறுவாழ்விற்கும் மீள் குடியேற்றத்திற்கு பெறுப்பேற்க வேண்டிய கடமை இருக்கிறது,

அகதிகளை ஆதரிப்பதை ஏதோ மனமிறங்கிச் செய்கிற உபரியான உதவிமனிதாபிமானம் என்று மட்டும் கருதி விடக் கூடாது,

அலான் ஷனூ வின் புகைப்படத்தை பார்த்து விட்டு ஐரோப்பாவின் மனம் இளகி விட்டதாக பெருமை அடிப்பவர்கள். பன்னூறு அலான் ஷானுக்கள் கண்ணுத் தெரியாமல் வாழ்க்கை கரை ஒதுங்க தாமே காரணம் என்பதை உணர வேண்டும். அல்லது உலகம் அவர்களுக்கு உணர்த்த வேண்டும்,

¨  சிரியாவில் அலான் சனூவை விட மோசமாக இலட்சக்கணக்கில் மக்கள் உயிரிழப்பிற்கு காரணமாக இருக்கிற பஸர் அல் அஸதை நீக்கினால் அங்கு அமைதி திரும்பி விடும் , ஐ எஸ் ஐ எஸுக்கு வேலை இருக்காது.  
¨  ஐ எஸ் ஐ எஸை பயந்தோ, அல்லது ரஷ்யாவையும்  ஈரானையும் சமாளிப்பதற்காகவோ பஷர் அல் அஸைத கண்டு கொள்ளாமல் விட்டால் ஒரு போதும் சிரியாவில் சூழ்நிலை சீராகாது.
¨  அதே போல இராக்கில் கைப்பாவை அரசை வைத்துக் கொண்டிருப்பதை தவிர்த்து விட்டு செல்வாக்குள்ள ஒரு அரசு நிர்வாகத்தை அமெரிக்காவும் நேசநாடுகளும் அமைக்குமானால் அங்கும் அமைதி திரும்பிவிடும்.
¨  எண்ணை வள நாட்டின் குடிமக்கள் வளமாகவே வாழ்வார்கள்
¨  அகதிகளாக எங்கும் அலைய வேண்டிய தேவை அவர்களுக்கு இருக்காது,
¨  செல்வம் கொழிக்கிற நாடுகளுக்குள்ளே புகுந்து கலகத்தை உண்டுபண்ணியவர்களுக்கு அதை நிவர்த்தி செய்யும் பொறுப்பு இருக்கிறது,
அல்லாஹ் இராக்கிலும் சிரியாவிலும் அமைதியை தந்தருள்வானாக! அக்கிரம சக்திகளை அடக்கியருள்வானாக!  மத்தியக்கிழக்கிலும் ஆப்கானிஸ்தான் பர்மா உள்ளிட்ட நாடுகளிலும் அகதிகளாக மிக மோசமான நிலையில் வாடுகிற மக்களுக்கு வெகு சீக்கிரமாக கவுரவமான நிவாரணாத்தை தந்தருள்வானாக!


5 comments:

 1. muhammad6:47 PM

  Arumayana padhivu

  ReplyDelete
 2. இதன் பின்னனி யில் உங்களின் உழைப்பையு ம் கஷ்டத்தையும் உணர்கிறேன். அல்லாஹ் உங்களின் இல்மில் பரகத் செய்வானாக!

  ReplyDelete
 3. அல்ஹம்து லில்லாஹ் அருமை அர்புதம்

  ReplyDelete
 4. காலத்திற்கும் மனதில் நிலைத்து நிற்கும் பதிவு

  ReplyDelete
 5. Allah thangalaiyum thangal paniyaiyum porunthik kolvanaga.... Aamen.

  ReplyDelete