வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, June 23, 2016

ஜகாத் முந்தைய பதிவுகள்

ஜகாத் தொடர்பான முந்தைய பதிவுகள் கீழே தரப்பட்டுள்ளன, 

ரமலானின் இந்தக் கால கட்டத்தில் நிறைவேற்றப்படுகிற முக்கியமான ஒரு கடமை. ஜகாத் .

ஜகாத் அது ஒரு தனி கடமை.

ரமலானில் நிறைவேற்றினால் அதிக நன்மை கிடைக்கும் என் பதால் ரமலானில் நிறைவேற்றுகிறோம். எப்பபோது கடமையாகிறதோ அப்போது ஜகாத்தை நிறைவேற்ற வேண்டும். அதே போல ரமலானில்
கொடுக்காவிட்டால் ரமலான் முடிந்த பிறகு ஜகாத்தை நிறைவேற்றிட வேண்டும். சிலர் இந்த ரமலானில் கொடுக்க இயலாவிட்டால் அடுத்த ரமலானில் தான் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள், அது தவறு. 

அரசாங்கத்திற்கு கணக்கு காட்டாமல் வைக்கப்படுகிற சொத்து எப்படி கருப்பு பணமாகிறதோ அது போல ஜகாத் நிறைவேற்றப்படாத சொத்து நாம் பதுக்க்கப்பட்ட சொத்தாகிவிடும்.
குர் ஆண் எச்சரிக்கிறது.

وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلَا يُنفِقُونَهَا فِي سَبِيلِ اللَّهِ فَبَشِّرْهُمْ بِعَذَابٍ أَلِيمٍ(34) يَوْمَ يُحْمَى عَلَيْهَا فِي نَارِ جَهَنَّمَ فَتُكْوَى بِهَا جِبَاهُهُمْ وَجُنُوبُهُمْ وَظُهُورُهُمْ هَذَا مَا كَنَزْتُمْ لِأَنفُسِكُمْ فَذُوقُوا مَا كُنتُمْ تَكْنِزُونَ(35)
நாம் சேர்த்து வைக்கிற தங்கம் வெள்ளியே நம் மீது காய்ச்சி ஊற்றப்படும் என்கிறது இந்த வசனம்

முப்தீ ஷபீ சாஹிப் மஆரிபில் கூறுகிறார்.

தன்னை தேடி வருகிற ஏழையை பார்த்ததும் கஞ்சனின் நெற்றி வேற்கிறது. அவன் பக்கத்தில் வந்ததும், அங்கே இங்கே என கழுத்தை திருப்பிக் கொள்கிறான். பிறகு அவனிடமிருந்து தப்பித்துக் கொள்ள படுத்துக் கொள்கிறான். அதனால் நெற்றி புஜம் முதுகு என மூன்று அவயவங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன,   உடல் முழுவதும் ஊற்றப்படும் என்பதே இதன் கருத்து.

ஜகாத் நிறைவேற்றப்படும் பொருள் مَا كَنَزْتُمْ ல் சேராது  என்றார்கள்பெருமானார்,

ஜகாத் கொடுத்தாவர்களிடம் கண்டிப்பு.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ آتَاهُ اللَّهُ مَالًا فَلَمْ يُؤَدِّ زَكَاتَهُ مُثِّلَ لَهُ مَالُهُ يَوْمَ الْقِيَامَةِ شُجَاعًا أَقْرَعَ لَهُ زَبِيبَتَانِ يُطَوَّقُهُ يَوْمَ الْقِيَامَةِ ثُمَّ يَأْخُذُ بِلِهْزِمَتَيْهِ يَعْنِي بِشِدْقَيْهِ ثُمَّ يَقُولُ أَنَا مَالُكَ أَنَا كَنْزُكَ ثُمَّ تَلَا لَا يَحْسِبَنَّ الَّذِينَ يَبْخَلُونَ الْآيَةَ   بخاري

ஜகாத் யார் மீது கடமை ? எப்போது கடமை? எப்படி நிறைவேற்றப்பட வேண்டும்? யாருக்கு தரவேண்டும்? எனஜகாத்திற்கு திட்டமிட்ட வரையரைகளை மார்க்கம் விதித்துள்ளது.
  
ஜகாத் வழங்கும் முஸ்லிம்கள் இந்த விதிமுறைகளை கவனித்து வழங்க வேண்டும்.

ஜகாத் பண வசதி படைத்தவர்கள் மீதே கடமையாகும். ஏழைகள் ஜகாத் கொடுக்கும் நிலையை எட்டாத நடுத்தர வர்க்கத்தினர் மீது ஜகாத் கடமையில்லை

(ஏழைகளும் ஓரளவு தன்னிறைவு பெற்றோரும் முடிந்த அளவு தர்மம் செய்யலாம்.)

யார் மீது கடமை

அடிப்ப்டை தேவைகள், கடன், எல்லாம் போக மேலதிகமாகசுமார் 612 கிராம் வெள்ளிக்கு நிகரான தொகை சுமார் 40 ஆயிரம்ரூபாயை ஓர் ஆண்டு முழுவதும் கையிருப்பில் வைத்திருப்பவர் மீது  ஜகாத் கடமையாகும்.

இந்தக் கையிருப்பு தொகையாக இருந்தாலும் அல்லது வியாபாரபொருளாக இருந்தாலும் ஜகாத் கடமையாகி விடும்.

பிக்செட் டெபாசிட்டுகள், முதலீடுகள், சேமிப்புத் தொகைகள், வாடகை வருமானம் கணக்கில் கொள்ளப்படவேண்டும.

கடனாக கொடுத்த பணம் திரும்பி வரும் என்ற உத்தரவாதமிருப்பின் அதுவும் கணக்கில் கணக்கில் கொள்ளப்படும். ஆயினும் பணம் கைக்கு வந்த பிறகு அதற்குரிய ஜகாத்தை வருடக் கணக்கிட்டு நிறைவேற்றினால் போதுமானது.

வீடு கடைகளுக்கு அட்வான்ஸாக கொடுத்திருக்கிற தொகை கணக்கில் வராது. அட்வான்ஸ் தொகை பிணைத் தொகையாகும். அது முழுமையாக திரும்பி வரும் உத்தரவாதம் இல்லை. வீட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு ஏற்பட பிடித்தம் செய்யப்பட வாய்பு உண்டு. சில நேரங்களில் மொத்த அட்வான்ஸ் தொகையும் பிடித்தம் செய்யப்படுவதுண்டு.

தொழிற்சாலைகளுக்கான இடம் உபகரணங்கள் ஜகாத்திற்கான நிஸாபில் கணக்கில் வராது. அவற்றுக்கு ஜகாத் இல்லை. இவை தவிர உண்டான மூலதனமும் வருவாயும் ஜகாத்தின் நிஸாபில் கணக்கிடப்படும்.

வாடகைக்கு விடப்பட்டுள்ள வீடு, கார் ஆட்டோ போன்ற பொருட்களின் மதிப்பு நிஸாபின் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது.  அதிலிருந்து வரும் வருவாய் கணக்கில் கொள்ளப்படும

வியாபார நோக்க மின்றி வீட்டு மனையாக தரிசு நிலமாக வைத்திருக்கிற சொத்துக்களுக்கு ஜகாத் இல்லை. அதன் சந்தை மதிப்பு அதிகமாக இருந்தாலும் சரி. அவற்றிலிருந்து பார்க்கிங்க்,  விண்ட் மில், பிளக்ஸ் போர்டு  சுவர் விளம்பரம் போன்ற வருமானம் கிடைக்கும் எனில் அவ்வருமானம் நிஸாபில் சேர்க்கப்படும்.


ரியல் எஸ்டேட்  (வியாபார) நோக்கில் வாங்கிப் போட்டிருக்கிற நிலத்தின் மதிப்புக்கு ஜகாத் கொடுக்க வேண்டும்.

சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள்  ஒரு ஆண்டிற்கான பரிமாற்றத்தில் மிக குறைந்த அளவாக ஆண்டு முழுவதும் வைத்திருந்த தொகைக்கு ஜகாத் செலுத்தினால் போதுமானது.

உதராணத்திற்கு தொடக்கத்தில் 5 லட்சமாக இருந்து அது இடையில் 2 லட்சமாக குறைந்து இறுதியில் அது 7லட்சமாக உயர்ந்திருக்குமெனில் 2 லட்சம் தான் வருடம் முழுவதும் இருந்த தொகை என்ற வகையில் அதற்கு மட்டுமே ஜகாத் கொடுத்தால் போதுமானது. மற்ற வியாபார பரிமாற்றத்திலும் இதே போன்ற அளவீட்டை கை கொள்ள வேண்டும்.

பெண்கள் அணிந்திருக்கிற அத்தியவசிய நகைகளில் ஜகாத் கடமையாகாது.

அதிகப்படியான சேமிப்பு நோக்கிலான நகைகளுக்கு ஜகாத் கொடுக்க வேண்டும்.

தங்கம் வெள்ளிக் கட்டிகள் பாத்திரங்களுக்கு ஜகாத் கொடுக்க வேண்டும். வைரக்கற்களுக்கு ஜகாத் இல்லை. 

வங்கிகள் மற்ற நிதி அமைப்புக்க்களில் இருந்து நீண்ட கால தவனை திட்டத்தில் பெறப்படும் கடன் தொகை வருமானக் கணக்கில் சேர்ர்கப்படும். அந்த வருடம் கட்டும் தவனை தொகை மட்டும் கழித்து விட்டு எஞ்சிய தொகைக்கு ஜகாத் வழங்க வேண்டும்

யாருக்கு ஜகாத்
إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاءِ وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَارِمِينَ وَفِي سَبِيلِ اللَّهِ وَاِبْنِ السَّبِيلِ فَرِيضَةً مِنْ اللَّهِ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ

ஜகாத் யாருக்கு கொடுக்கப் பட வேண்டும் என்பதை மார்க்கம் அறுதியிட்டு கூறியுள்ளது. உரிய நபர்களுக்குத்தன் ஜகாத் வழங்க வேண்டும். நமதுஅவசரத்திற்கு அல்லது முகஸ்துதிக்காக தகுதி அற்றவர்களுக்கு கொடுத்தால் ஜகாத் கொடுத்தாகாது.

தாய் தந்தை மனைவி மக்கள் போன்ற உறவுகளை தவிர மற்ற சகோதர சகோதரிகள் பெரியத்தா சின்னதாக்கள் மற்ற நெருங்கிய உறவுக்கார்ர்களுக்கு ஜகாத்தை கொடுக்கலாம். உறவினர்களுக்கு ஜகாத் கொடுத்தால் தர்மம் செய்த நன்மையும் உறவுகளை பேணிய இரட்டை நன்மை கிடைக்குக்ம்

அடுத்ததாக நமக்கு பக்கத்தில்/ நமது ஊரில் இருக்கிற தேவையுடையவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

நமக்கு அருகிலேயே தேவையுடையவர்கள் இருக்கும் போது வெளியூர்களுக்கு தூரத்திலிருப்பவர்களுக்கு ஜகாத்தை எடுத்துச் செல்லக் கூடாது.

அமைப்புக்கள் இயக்கங்களுக்கு ஜகாத் பணத்தை கொடுப்பவர்கள் முதலில் தங்களது உறவினர்களையும் அருகிலிருப்போரையும் கவனித்து விட்டார்களா? என்பதையோசித்துப் பார்க்க வேண்டும்.

பைத்துல் மால் என்ற பெயரில் நமதூர்களில் இயங்குகிறவை அதிகாரப் பூர்வமானவை அல்ல. அதனால் அவற்றிடம் கொடுத்த தொகை உரியவர்களை சென்றடைந்து விட்டது என்பதை உறுதிப்படுத்தினால் மட்டுமே நாம் ஜகாத்தை நிறைவேறியவர்களாக முடியும்.

ஜகாத் கொடுக்கிற போது வாங்கும் நபருக்கு அது முழுஉரிமையானதாக 
ஆக்கி விட வேண்டும், ஜகாத் பணத்தை  கடனாக கொடுக்க கூடாது


ஜகாத் ஒரு பெருந்தன்மை                                                                                                         ஜகாத் பைத்துல்மால்

No comments:

Post a Comment